• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode தஞ்சம் மன்னவன் நெஞ்சம் 8

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Priya kumar

SM Exclusive
Joined
Mar 6, 2019
Messages
350
Reaction score
2,215
Location
Madurai
View attachment 9982




அத்தியாயம் 8

தேவனூரில் மையம் கொண்டிருந்த ஷாலினி எனும் புயல் கரையைக் கடந்து ஒரு வாரம் ஆகி விட்டது.கயலுக்கு தான் ஷாலினியின் வருகையால் அதிக சேதாரமாகி விட்டது... முன்பாவது கதிர் பேசாவிட்டாலும் கயல் பேசுவதையாவது நின்று கேட்பான்..

இப்போதோ கயல் இருக்கும் இடத்திலேயே அவன் நிற்பதில்லை... எதேச்சையாக எதிரெதிரே பார்த்துவிட நேர்ந்து விட்டால் கூட முகத்தைக் ‘ கடுகடு’வென்று வைத்துக்கொண்டு திருப்பிக் கொள்கிறான்.

அன்று அவன் ஷாலினியை பிடித்து நிறுத்தி வைத்த போது ஷாலினியை கன்னம் கன்னமாக அறைந்து விடலாமா என்று வெறி வந்தது கயலுக்கு... ஆனாலும் அவள் வீட்டிற்கு வந்த விருந்தாளி என்பதாலும்... மேலும் அவள் தன் காதலைப் பற்றி அறிய மாட்டாள் என்பதாலும் அந்த எண்ணத்தைக் கைவிட்டாள்.

ஷாலினிக்கு தான் தன் மனம் பற்றி தெரியாது…. கதிருக்கு தெரியுமே...எனவே இங்கு நன்கு கவனிக்கப்படவேண்டியது
ஷாலினியல்ல…. கதிர்தான் என்று எண்ணியவளின் அத்தனை கோபமும் கதிர் புறம் திரும்பியது….

‘ கதிர் மாமா…. இன்னைக்கு நான் உன்னைய கவனிக்கிற கவனிப்புல வேற பெண்களைக் கண்டாலே நீ தெறித்து ஓட வேண்டும்’ என்று குரோதமாக எண்ணியவள் அவன் அறைக்குள் சென்று அமர்ந்துவிட்டாள்..

ஆனால் அந்தோ பரிதாபம்…. விதி அவளுக்கு எதிராய் சதி செய்து விட்டது.கதிர் அறைக்குள் அவள் ஆவேசத்துடன் சென்ற வேகம் என்ன…. பின்பு அவனிடம் வாங்கி கட்டிக்கொண்டு தளர்வாய் திரும்பி வந்த சோகம் தான் என்ன…. நடந்தது இதுதான் ….

கதிர் தன் வேலைகளை முடித்துக்கொண்டு அறைக்குள் நுழைந்து விளக்கினை போட்டவன் அங்கே தலை கலைந்து அழுது சிவந்து வீங்கியிருந்த முகத்தொடு அமர்ந்திருந்த கயலை கண்டவன் உச்சபட்ச அதிர்ச்சிக்கு ஆளானான்…

“ ஏய் நீங்க இங்க என்ன பண்ற….”

“ அதுசரி….. நீங்க என்னய வா இங்க எதிர் பார்த்து இருப்பீங்க…..நீங்க எதிர் பாக்குற ஆளே வேற இல்ல….”

“எதிர்பார்த்தேனா... நான் யாரை எதிர்பாத்தேன்…..”

“நடிக்காதீங்க…. ஆத்திர ஆத்திரமா வருது…”

“ம்ப்ச்...எதுனாலும் காலைல பேசிக்கலாம் இப்ப கிளம்பு….”

“ இல்ல எனக்கு இன்னைக்கே….. இப்பவே…..பேசியாகணும்..”

“ ஏய்…. உனக்கு பைத்தியம் பிடிச்சிருக்கா…. நேரங்கெட்ட நேரத்தில் இங்கே வந்து உட்கார்ந்துக்கிட்டு...பேசணுமாம்... எழுந்திரிச்சு...முதல்ல வீட்டுக்கு போ….”

“ ஆமாய்யா... விவரம் தெரிஞ்ச நாள்ல இருந்து ஒன்னையே மனசுல சுமந்துகிட்டு இருக்கேன்ல நான் பைத்தியம் தான்….. ஆனா நீ தெளிவாத்தான் இருக்க…. நல்ல நிறமா ….அழகாக…. தஸுபுஸுன்னு இங்கிலீஷ்ல பெனாத்திகிட்டு ஒருத்தி வந்ததும் அவகிட்ட பல்ல காட்டிட்டல்ல… உனக்காக தவிக்கிற நான் பைத்தியம் தான்…

“ ஏய் என்ன உளர்றே…”

“ நான் உளருறேனா... யோவ் கதிரு உண்மைய சொன்னா உளருற மாதிரி தெரியுதா உனக்கு ….அவளைப் போல ஒட்டி உரசிக்கிட்டு பழகுனாத்தான் உனக்கு பிடிக்கும்னு எனக்கு நீ நல்லா புரிய வச்சிட்ட...அதனால ….”

“அதனால….”

“நாமளும் அப்படி பழகலாம் வாங்க…”

“!!!!....????”

“அப்படின்னு சொல்லுவேன்னு பாத்தியா… மவனே... இனிமே எவகிட்டயாவது இது மாதிரி பல்ல காட்டிகிட்டு நின்ன...தூங்கும்போது உன் மண்டைல கல்லை தூக்கி போட்டு கொன்னுட்டு நானும் என்னைய கொன்னுக்குவேன்…”

“ ஏய்... என்ன ஏதுன்னு புரியாம…” ஏதோ சொல்ல வாயெடுத்த கதிரை
“கதிர்...கதிர்…” என்ற வெற்றிவேலின் அழைப்பு கதிரையும் கயலையும் ஒருசேர ஒருசேர அச்சத்தித்தில் உறைய வைத்தது..

ஒரு ஆள் மட்டுமே பயன்படுத்தக்கூடிய அறை என்பதால் கயலை மறைத்து வைப்பதும் சாத்தியம் இல்லை... ஆதலால் வெற்றிவேல் அறைக்குள் நுழையும் முன்பே கதிர் வெளிப்பட்டு வெற்றிவேலை முன்னேறவிடாமல் வாயிலை அடைத்துக் கொண்டு நின்று விட்டான்….


“எ...என்ன வெற்றி…. எ...என்ன விஷயம்….”

புருவம் சுருக்கி கதிரைப் பார்த்தவன்…

“நீ ஏன்டா... இவ்வளவு பதட்டமா இருக்க...என்ன ஆச்சு... இப்படி வேர்த்துக் கொட்டுது….உடம்பு கிடம்பு சரியில்லையா….”என்றான் வெற்றிவேல்.

வழிந்த வியர்வையைத் துடைத்தவாறே...“அ...அதெல்லாம் ஒன்னும் இல்ல வெற்றி … நான் நல்லாத்தான் இருக்கேன்…. என்ன இந்த நேரத்தில…”

“வேற ஒண்ணுமில்லடா...இன்னைக்கு உன் கூடத் தூங்ஙலாம்னு வந்தேன்…”

“எ...என்னா…..து…”

“அடப் போடா….தொட்டதுக் கெல்லாம் அதிர்ச்சியாகிட்டு….சரி அதவிடு... அந்த ஸ்டிரைக் விஷயம் என்னாச்சு ….யூனியன் லீடர் என்ன சொல்றாரு….”

“ அதுவா... அது அந்த நூறு ஒப்பந்தப் பணியாளர்களை பெர்மனன்ட் பண்ணனும் னு சொல்றாங்க... அதோட சம்பள உயர்வும் வேணுமாம்…”

“இன்கிரிமென்ட் நாமளே போடலாம்னு இருந்ததுதான்... ஆனா இந்த பெர்மனன்ட் விஷயம் தான் யோசிக்கணும்... இதை பேசிதயே தீர்த்துருக்கலாமேடா …..எதுக்கு ஸ்டிரைக் வரைக்கும் கொண்டு போகணும்…”

“ அது…. அந்த பொறாமை புடிச்ச ரத்னம் தான் யுனியன் லீடர தூண்டி விட்டிருக்கான் வெற்றி....அதுதான் ஸ்டிரைக் வரைக்கும் போய் இருக்காங்க…”

“ அந்த ரத்னம் ஆரம்பத்திலிருந்தே நமக்குக் குடைச்சல் கொடுத்துக்கிட்டு இருக்கான்... அவனை என்னன்னு கவனிக்கணும்… சரி நாளைக்கு மீட்டிங்க் ரெடி பண்ணு... பேசி முடிச்சுடலாம்....”என்று விட்டு வீடு நோக்கி நடந்தவன் நின்று திரும்பினான்...

அப்போதுதான் ஆசுவாசமாய் பெருமூச்சுவிட்ட கதிருக்கு மீண்டும் தூக்கிவாரிப்போட்டது…

“எ... என்ன வெற்றி….”

“ நீ ஏன்டா போனை சுவிட்ச் ஆப் பண்ணி வச்சிருக்க ..மதியத்திலிருந்து ட்ரை பண்ணிட்டு இருக்கேன்….”

“ அது சார்ஜில்லாம போயிருக்கும்….”

“ அது சரி... அதுக்கு எதுக்கு உனக்கு இப்பிடி உதறது..என்னமோ போடா... இன்னைக்கு ஒரு மார்க்கமாத்தான் இருக்க…எதுவும் மோகினிப் பிசாச பாத்து பயந்து கியந்து தொலைச்சுட்டியா….”

அது மோகினியில்லை... சந்திரமுகி என்பது வெற்றிவேல் அறிய வாய்ப்பில்லை…

வெற்றிவேலிடம் “ஈஈஈ” யென்ற இளித்து வைத்தான் கதிர்…

”பயந்திட்டியான்னு நான் உன்னையக் கேட்டா அதுக்கு இப்பிடி சிரிச்சு வச்சு என்னய ஏன்டா பயமுறுத்துற”

என்று விட்டு வீட்டிற்கு சென்று விட்டான் வெற்றிவேல்...அவன் உள்ளே சென்று விட்டதை உறுதி செய்து கொண்டபின் ருத்ர மூர்த்தியாக அறைக்குள் பிரவேசித்து அவன் கதவை இறுக பூட்டினான் கதிர்...


“அறிவு இருக்காடி…. உனக்கு சின்னபிள்ளை தனத்துக்கும் ஒரு அளவில்லை... இந்த நேரத்திலே உன்னையும் என்னையும் சேர்த்து வச்சு வெற்றி பார்த்திருந்த என்னவாயிருக்கும்….எது நடக்கக்கூடாது நான் இத்தன நாளா பயந்துகிட்டிருந்தேனோ அதை உன் கிறுக்குத்தனத்தால இன்னைக்கு நடத்தி வச்சிருப்ப…

நல்ல காலம் ….வெற்றி உள்ளுக்கு வரலை...அவன் கூட பேசி முடிக்கிற வரை என் உடம்புல உயிரே இல்லடி...இனிமே ஒரு தடவை இப்படி ஏதாவது உளறிக் கொண்டு வந்து நின்ன... நான் மனுஷனாவே இருக்க மாட்டேன் ….போ இங்க இருந்து…”

ஏற்கனவே வெற்றியின் வருகையில் சர்வமும் நடுங்கிப் போய் இருந்த கயல்... கதிரின் இந்த கர்ஐனையில் அரண்டு தான் போனாள். பின்னே ...எப்போதும் சாது பூனையாக இருப்பவன் சிங்கமாய் உறுமினால் அவள் என்னதான் செய்வாள்...

வெற்றி அங்கு அந்த நேரத்தில் வருவான் என்று அவள் கனவா கண்டாள்…. இவை எல்லாவற்றையும் விட அவளது ஆதங்கத்தை அவன் சிறுபிள்ளைத்தனம் , உளறல்,கிறுக்குத்தனம் என்று வகைப்படுத்தியதைத்தான் அவளால் ஜீரணித்துக்கொள்ளவே முடியவில்லை …

கண்ணீரில் முகம் நனைய தளர்ந்து போய் வீட்டிற்குள் நுழைந்துவளை ,
” எங்க போய்ட்டு வர கயல் …?”
என்ற வெற்றியின் குரல் தடுத்து நிறுத்தியது ….

ஐயோ வெற்றி அண்ணன வேற சமாளிக்கணுமா... என்று ஆயாசமாக இருந்தது கயிலுக்கு…
“ தோட்டத்தில இருந்தேண்ணே…”

“இந்த நேரத்தில தோட்டத்தில் என்ன பண்ணின ….போ... போய் தூங்கு... “என்ற வெற்றியின் வார்த்தைக்கு மண்டையை உருட்டி விட்டு தன் அறைக்குள் ஓடி மறைந்தாள் கயல்…

அறைக்குள் ஓடிய கயலையே பார்த்திருந்தாள் மதுமதி...மதுமதி கயலின் கதிர் மேலான அளவற்ற காதலலை அறிந்து கொண்டாள்...ஏற்கனவே பெணகளுக்கே உரிய சூட்சும குணம் கயலின் மனதை அறிய வைத்திருந்தாலும்….ஷாலினியின் வரவு அதனை உறுதி செய்துவிட்டது.இந்தக் காதல் எப்படி சாத்தியமாகும் என்று அஞ்சினாள் மதுமதி..கயலாக மனம் திறக்காமல் மதுமதியால் கயலுடைய காதலைப் பற்றி அவளிடம் பேசிவிட முடியாது.எனினும் நாத்தனார் என்ற உறவை விட கயல் தனக்கு ஒரு நல்ல தோழி ஆவாள்...அவளுடைய காதலுக்கு அவளுக்கு துணையாக இருக்க வேண்டும் என்று உறுதி பூண்டாள்...

அடைத்த அறைக்குள் மௌனமாய்க் கண்ணீர் உதிர்த்தாள் கயல்…’ஏன் கதிர் மாமா என்னய புரிஞசுக்கவே மாட்டேங்கிறீங்க…’

இங்கே கதிரின் நிலமையோ கயலை விட மோசமாக இருந்தது...கயலை அலட்சியப் படுத்துவதைப் போல் நடந்து கொள்வானே தவிர… இன்று போல ஒரு நாளும் அவளைக் கடிந்து கொண்டதில்லை..அவளைத் திட்டி அனுப்பி விட்டு இவன் கண்ணீர் சிந்தினான்..இரவெல்லாம் தூங்க முடியாமல் அவன் பட்ட வேதனையை பாவம் கயல் அறியமாட்டாள்….ஆனால் கதிர் கயலிடம் தன் மனதினைத் திறந்து காட்டியிருந்தால் பிற்காலத்தில் வரப் போகும் துயரங்களைத் தடுத்திருக்கலாமோ….



----தொடரும்..


சென்ற அத்தியாயத்திற்கு லைக்ஸ் மற்றும் கமண்ட்ஸிட்ட அனைத்து நட்புக்களுக்கும் பற்பல நன்றிகள்...படித்து விட்டு தங்கள் மேலான கருத்துக்களை சொல்லுங்கப்பா....தங்கள் கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்கும் பிரியா குமார்

 




Attachments

Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top