• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

தடம் மாறும் பயணம் 7

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Krisha

அமைச்சர்
SM Exclusive
Joined
Sep 27, 2021
Messages
1,371
Reaction score
1,812
Location
UAE
ஹாய் பட்டூஸ்

ஹெரோயின் பெயர் தெரிந்து கொள்ளலாமா??? இப்ப வர போவது ஹீரோ வா? வில்லனா? தங்களது யூகத்தை comment box சொல்லவும்...

happy reading

eiGHGDK83688.jpg

பயணம் 7

'டொக் டொக்' கதவு தட்டும் சத்தம் கேட்டு, கணினியில் வேலை செய்து கொண்டிருந்தவன் நிமிராமல், "எஸ் கம் மின்" கம்பீரமாக குரல் கொடுத்தான்.

அனுமதி கிடைத்ததும் அந்த அறைக்குள் நுழைந்த பெண்கள் இருவரும், "குட் மார்…" என்ற வாழ்த்தை முடிக்காமல், அங்கு எம்டி சீட்டில் அமர்ந்திருந்தவனை பார்த்து திகைத்தனர். வாழ்த்து பாதியில் நின்றதும் நிமிர்ந்தவன் பார்த்தது திகைத்து நின்ற பெண்களை. அவர்களது நிலை உணர்ந்து மனதிற்குள் சிரித்துக்கொண்டான்.

"மிஸ் அருந்ததி அண்ட் மிஸ் அனன்யா! வெல்கம் பேக் டு விவி சாஃப்ட்வேர் சொல்யூஷன்! சென்னை பிரான்ச்!" என புன்னகையுடன் அவர்களை வரவேற்ற அவனது குரல், பெண்களின் செவியை தீண்டினாலும் அதை உணராமல் சிலையாக நின்றனர்.

ஃபேமிலியர் ஃபேஸாக இருக்கிறது என முதல்முறை அவனை சந்தித்தபோது அருந்ததி உணர்ந்தது ஏனென்று இப்போது புரிந்தது. அவனது புகைப்படங்களை எம்டி அறையில் பார்த்திருக்கிறாள்.

விவி சாஃப்ட்வேர் சொல்யூஷனின் எம்டி விஜயவர்மாவின் உடல்நிலை காரணமாக, தங்கள் நிறுவனத்தின் பொறுப்பு அவரது மகனிடம் சென்றுவிட்டது என அவர்களுக்கு தெரியும். அந்த மகன் யாரென்று இப்போதுதான் தெரிந்து கொண்டார்கள்.

ஒரு சில நொடிகளில் அருந்ததியின் கண்கள் திகைப்பிலிருந்து கோபத்திற்கு மாறியது. அவளது கோபத்தை அவன் சிறிதும் பொருட்படுத்தவில்லை. ஆணின் அலட்சியம் பெண்ணின் கோபத்தை அதிகரித்தது. பார்வையாலேயே அவனை சுட்டுப் பொசிக்கினால்.

தங்களுக்கான அடுத்த ப்ராஜெக்ட்டை அமேரிக்காவில் கொடுக்காமல், இந்தியா வரவைத்ததின் நோக்கம் இப்போது புரிந்தது. பொதுவாக பிராஜெக்ட்டுக்காக வெளிநாடு செல்பவர்கள் மீண்டும் இந்தியா திருப்புவது அரிது. அவர்களது அடுத்தடுத்த பிராஜெக்ட்கள் வெளிநாட்டிலேயே இருக்கும்.

அவனை பார்த்ததும் அதிர்ந்த அனன்யாவின் கண்கள் விரிந்தது, 'இது அவன்ல!' மூளை எடுத்துரைக்க, உடனே தலையை திருப்பி அருகிலிருந்த தோழியின் முகத்தை பார்த்தால். அங்கு வீசிய கோபக்கனலை பார்க்கவும், 'ஆத்தாடி! பயங்கர ஹாட்டா இருக்கே!' என மானசிகமாக தலையில் கை வைத்தாள்.

அவர்களது திகைப்பையும் பார்வையையும் கண்டு வெற்றி புன்னகையுடன், தன் எதிரே இருந்த இருக்கைகளை காட்டி அவர்களை அமர சொன்னான். சுட்டெரிக்கும் பார்வையோடு அருந்ததியும், குழப்பமான பார்வையுடன் அனன்யாவும் அமர்ந்தனர்.

அமெரிக்கா ப்ராஜெக்ட்டை வெற்றிகரமாக முடித்ததை பாராட்டியவன், ஒரு பைலை அனன்யாவிடம் நீட்டி, "இது உங்களுக்கான அடுத்த ப்ராஜெக்ட். இந்த ப்ராஜெக்டை நீங்க லீட் பண்ண போறீங்க. உங்களுக்கான டீம் உங்க ரூமில் வெயிட் பண்றாங்க. யு மே லீவ் நவ்."

பைலை அவனிடமிருந்து வாங்கிக்கொண்ட அனன்யா, தயக்கமாக தோழியை பார்க்க, "ஐ செட் யூ கேன் கோ" என்றான் அழுத்தமாக.

"சா…ரி சார், தேங்…க்யூ சா…ர்" என திக்கி திணறிய அனன்யா, ஒரே ஓட்டமாக அந்த அறையை விட்டு ஓடினாள்.

இப்போது அவனது பார்வை அருந்ததியை முற்றுகையிட்டது. "வெல் மிஸ் நதி! என்கிட்டயிருந்து சுலபமா தப்பிச்சிடலாம்ன்னு நினைச்சீங்களா. அது நடக்கும் காரியமா?"

அவன் தன்னை பரிகாசம் செய்ததை காற்றில் விட்டவள், "மை நேம் இஸ் அருந்ததி. கால் மீ அருந்ததி ஆர் அரு."

"அரு…ந்த…தி எவ்வளவு பெரிய பேர். நீட்டி முழக்கி கூப்பிடுறதுக்குள்ள ஒரு நாளே முடிஞ்சிடும். என்னோட கண்வினியன்ட்க்கு ஷார்ட் அண்ட் ஸ்வீட்டா நதி. அதுல உங்களுக்கு எதுவும் பிராப்ளம் இருக்கா?" என்றான் கேலி குரலில்.

அவனை வெட்டும் பார்வை பார்த்தவள், "எஸ் சார். பிராப்ளம் இருக்கு. நீங்க அப்படி கூப்பிடறது எனக்கு பிடிக்கல."

"ஐ டோன்ட் கேர் இட்! எனக்கு பிடிச்சிருக்கு நான் கூப்பிடுறேன்? தட்ஸ் ஆல். அப்படி இந்த பேரை சொல்லக்கூடாதுனா இன்னொரு பேர் சொல்லி, உன்னை கூப்பிட எனக்கு ரொம்ப பிடிக்கும். இங்க ஆபீஸ்ல அதை சொல்லி கூப்பிடவா?" புருவம் உயர்த்தினான்.

பல்லை கடித்தவள், "வாரத்துல ஒரு தடவையோ, ரெண்டு தடவையோ ஏதாவது மீட்டிங்கில் என்னை பார்க்க போறீங்க, சோ அருந்ததினே கூப்பிடுங்க. நீங்க பயப்படற அளவு அது ரொம்ப பெரிய பேர் இல்லை."

"ஒரு தடவையோ பத்து தடவையோ என் இஷ்டப்படி கூப்பிடுவேன். அதுவுமில்லாமல் டெய்லி பத்து மணி நேரம், என் கூடவே இருக்க போற உன்னை எத்தனை தடவை கூப்பிட வேண்டியிருக்கும் தெரியுமா?"

பதுமை குழப்பமாக அவனை பார்க்க, நிதானமாக அவன் இருக்கையிலிருந்து எழுந்து வந்து, அவள் முன்னிருந்த டேபிளில் சாய்ந்து நின்றவன், "என்னோட பிஏ என் கூடவே தானே இருக்கணும்" என்றான் கூலாக.

அவனை நிமிர்ந்து பார்த்தவள், "அது உங்க பிஏ கிட்ட சொல்லுங்க, எதுக்கு என்கிட்ட சொல்றீங்க?"

"என் பிஏ கிட்ட தான் சொல்றேன்."

"ஓஓ" உதடு குவித்தவளுக்கு, அவன் சொன்னதின் சாராம்சம் புரிய திக்கென்றானது. வெற்றிகரமாக அதை மறைத்து, "நீங்க மறந்துட்டீங்கன்னு நினைக்கிறேன் சார். ஐ எம் எ சாப்ட்வேர் ப்ரோக்ராமர்."

"சோ வாட்? இன்னையிலிருந்து என்னோட பிஏ நீதான்." என்றான் அலட்சியமாக.

"இதுக்கு நான் ஒத்துக்குவேன்னு அவ்வளவு நம்பிக்கையா?"

"ஒத்துக்காம உன்னை விட மாட்டேன்னு என் மேல உள்ள நம்பிக்கை"

"அப்படி ஒரு கட்டாயம் வந்தால் வேலையை ரிசைன் பண்ணவும் தயங்க மாட்டேன்."

"சில்லி கேர்ள்! என் கேரக்டரையே புரிஞ்சுக்கலையே…" என அவளது கன்னத்தை தட்டியவன், ஒரு பேப்பரை அவள் முன் நீட்டினான்.

அலட்சியமாக அதை வாங்கி படித்தவள், தூக்கி வாரி போட எழுந்து நின்றாள். அவனை மிகவும் நெருங்கி நிற்பதை உணராமல், "இது பொய்! இப்படி ஒரு அக்ரீமெண்ட்ல நான் கையெழுத்து போடவே இல்லை."

"எஸ் நதி செல்லம், உனக்குத் தெரிஞ்சு நீ போடவே இல்ல. அமெரிக்காவில் ப்ராசஸ் கிளியர் பண்ணி, நீங்க இந்தியா வரதுக்காக சைன் பண்ணிய அக்ரீமெண்ட்ல இதுவும் ஒன்னு."

"இது சீட்டிங். நான் கோர்ட்ல கேஸ் போடுவேன்"

"தாராளமா போடு, ஆனா கேஸ் நிக்காது. அதுல இருக்கறது உன்னோட கையெழுத்து."

"எனக்கு தெரியாம, என்னை ஏமாத்தி வாங்குனதுனு சொல்லுவேன்"

"அதை உன்னால ப்ரூப் பண்ண முடியுமா? பட் இந்த கையெழுத்து உன்னோடதுன்னு என்னால ப்ரூப் பண்ண முடியும்."

அன்றிருந்த குழப்பத்தில் படித்துப் பார்க்காமல் கையெழுத்திட்டது, எவ்வளவு பெரிய மடத்தனம் என இப்போது புரிந்தது. இந்த சிக்கலில் இருந்து எப்படி தப்பிப்பது என தெரியாமல் திகைத்தாள்.

"எதுக்கு இப்படி என்னை கார்னர் பண்றீங்க?"

"பதில் உனக்கே தெரியும்!"

"அது இந்த ஜென்மத்தில் நடக்காது"

"அதையும் பார்க்கலாம்?" என்ற அவனின் சவாலை கேட்ட பெண் சோர்ந்து அமர்ந்தாள்.

அந்த அக்ரீமெண்டில் இருந்தது, 'இரண்டு வருடங்கள் அவனின் கீழ் வேலை செய்ய வேண்டும் அல்லது ஒரு கோடி ரூபாய் அபராதமாக நிர்வாகத்துக்கு செலுத்த வேண்டும்.'

அவள் வசதி படைத்த குடும்பத்தை சேர்ந்தவள் என்றாலும் ஒரு கோடி என்பது மிகப்பெரிய தொகை. அவளுக்காக தலையை விற்றாவது தருவார்கள் என்றாலும், இந்த சில்லி விஷயத்துக்காக அவர்களிடம் போய் நிற்க வேண்டுமா? இதுவரை அவர்களை வருத்தியது போதாதா? இவனை தன்னால் சமாளிக்க முடியாதா???

அவள் நன்றாக அலசி ஆராய்ந்து, அவனுக்கு பிஏவாக வேலை பார்ப்பது என முடிவு செய்தாள். அதில் அவளது உள்ளம் தடும் மாறுமா??? பயணம் தடம் மாறுமா???

🌺🌺🌺

"எங்க கிளம்பிட்ட?" அறையை விட்டு வெளியே செல்ல முயன்றவளை தடுத்தது பிரகாஷின் குரல்.

'இது என்ன கேள்வி?' என பெண் அவனை பார்க்க, அவள் பார்வையை புரிந்து கொண்டவன், "உன்னோட சீட் அது"

எம்டி அறையிலேயே அவளுக்கு ஒரு இருக்கையை ஏற்பாடு செய்திருந்தான். அதை பார்க்கவும் அருந்ததியின் முகம் சுண்டிவிட்டது. "நான் எப்பவும் போல் வெளிய என் பிளேசில் உட்கார்ந்துகிறேன்."

"நான் சொல்றதை செய்யறது தான் பிஏவோட வேலை. ஒவ்வொரு தடவையும் உன்னை கூப்பிட்டிருக்க முடியாது. அதனால் நீ இங்க இருக்கிறது தான் எனக்கு வசதி."

'எதுக்கு வசதி?' வாய்க்குள் முணுமுணுத்தாள். அவளது உதட்டசைவை புரிந்து கொண்டவன், சீட்டில் நன்றாக சாய்ந்தமர்ந்து, கல்மிஷப் புன்னகையுடன், "எல்லாத்துக்கும்" திடுக்கிட்டு அவனைப் பார்த்த பெண்ணின் கண்களில் இயலாமையின் தவிப்பு.

பிரகாஷின் பிஏவாக இருந்த ராஜா அருந்ததிக்கு வேலைகளை கற்றுக்கொடுத்தான். அவன் சொல்லித் தருவதை கண்ணும் கருத்துமாக கேட்டு, புரிந்து கொண்டாலும் தப்பும் தவறுமாகவே அனைத்தையும் செய்தாள்.

அவளுக்குப் புரியவில்லை என நினைத்த ராஜா அவளை பரிதாபமாக பார்த்தான். ஆனால் வேண்டுமென்று செய்கிற அவளது கள்ளத்தனத்தை புரிந்து கொண்ட பிரகாஷ் மனதுக்குள் சிரித்துக் கொண்டான்.

"ராஜா இது டீ டைம். நீங்க போய் ரெஃப்ரெஷ் ஆகிட்டு வாங்க" என்ற பிரகாஷின் சொல்லுக்கு கட்டுப்பட்டவன், "வாங்க அருந்ததி" அவளையும் உடன் அழைத்தான்.

"நான் உங்களை மட்டும் போகச் சொன்னேன்" பிரகாஷின் குரலில் இருந்த கடுமையில் நடுங்கியவன், "ஓகே சார்" விட்டால் போதும் என ஓடிமறைந்தான்.

"அப்புறம் நதி செல்லம்! முதல் நாள் வேலையெல்லாம் எப்படி போகுது?"

"வெரி போரிங் சார். ஒண்ணுமே புரியல. எனக்கு சொல்லித் தரவே நீங்க ஒரு ஆளுக்கு அடிஷ்னல் சம்பளம் தர வேண்டி இருக்கும். சாப்ட்வேர் ப்ரோக்ராமிங் படிச்ச பொண்ணை கொண்டு வந்து பிஏ வேலை பார்க்க வச்சா அப்படித்தான்." என்றால் எல்லல்லாக.

"அப்படிங்கற?" தாடையை தடவியவன், "சரி விடு, அந்த ராஜாவுக்கு சொல்லித் தர தெரியல. என்னோட ஸ்டைல்ல எல்லாத்தையும் நான் உனக்கு சொல்லித் தரேன் செல்லம்." என்றவரே தன் இருக்கையிலிருந்து எழுந்தவன் கையை தூக்கி சோம்பல் முறித்தான்.

அவனது உடல் மொழியில் மிரண்டவள், "இல்ல சார், ராஜா நல்லாவே சொல்லித் தரார். சாயங்காலத்துக்குள் நான் எல்லாத்தையும் கத்துக்குவேன்." என்றால் அவசரமாக.

"ஆர் யூ ஸ்யூர் நதி"

ஆம் தலையசைவு பதுமையிடம்.

"தட்ஸ் குட் செல்லம். சப்போஸ் நீ சீக்கிரம் கத்துக்கலைனா, நான் உனக்கு சொல்லித் தருவேன். அதுவும் என்
னோட ஸ்டைலில்." அவள் மனதில் பீதியை கிளப்பினான். வேண்டா வெறுப்பாக தலையசைத்தால் அருந்ததி.

வெறுப்பு விருப்பமாக மாறுமா???
 
Last edited:

Krisha

அமைச்சர்
SM Exclusive
Joined
Sep 27, 2021
Messages
1,371
Reaction score
1,812
Location
UAE
அருந்ததி லஞ்ச் பிரேக்கில் கேண்டீன் சென்றாள். அவளுக்காகவே காத்திருந்த அனன்யா, ஓடி வந்து அவள் கரத்தை பற்றிக்கொண்டு, "டார்லு! ஒரு ப்ராப்ளமும் இல்லையே, அந்த எம்டி அவர்தானா?" சந்தேகத்தை தெளிவு படுத்திக் கொள்ள கேட்டாள்.

"அவனேதான்! பிர…கா…ஷ்" அவன் பெயரை கடித்துத் துப்பினாள். "வேடிக்கையை பார்த்தியா, அவனுக்கு நான் பிஏவாம். இடியட் எல்லாம் பிளான் பண்ணி பண்றான். ஒரு நாள் வசமா சிக்குவான் அப்ப கவனிச்சிக்கிறேன் அவனை…"

அவள் கோபத்தைக் கண்ட அனன்யா, "காம் டவுன் டார்லு" என கரத்தில் அழுத்தம் கொடுத்தாள்.

"என் லைஃப்ல எதையெல்லாம் கடந்து வரணும்னு நினைக்கிறேனோ, அது திரும்பத் திரும்ப என்னை தொடருது." என விரக்தியாக சொன்ன அருந்ததி, ஒரு பெருமூச்சை உள்ளிழுத்து, தன்னை இயல்பாக்கி கொண்டவள், "எவ்வளவோ பார்த்தாச்சு இதை பார்க்க மாட்டேனா! டோன்ட் வெரி அனு. ஐ கேன் மேனேஜ்."

அவளது தன்னம்பிக்கையை பார்த்த அனன்யாவுக்கு நிம்மதியாக இருந்தது.

சரியாக அந்த நேரம், "ஹொவ் ஆர் யு அரு. ஹவ் இஸ் யுவர் அமெரிக்கா டிரிப்." என கேட்டுக்கொண்டே, அவளுடன் ஒரே டீமில் வேலை பார்த்த மூன்று பேர் அவளை சூழ்ந்து கொண்டனர்.

ஆம்! அருந்ததி இங்கு பணி புரியும் போது, அவர்கள் டீமில் மொத்தம் எட்டு பேர். அனன்யா அருந்ததி உட்பட ஐந்து பெண்கள், மூன்று ஆண்கள். இப்போது அவர்களுடன் இணைந்தது இரு பெண்களும் ஒரு ஆணும். ஒருவன் இன்று விடுமுறை. இவர்களுக்கு ஒரு டீம் லீடர்.

நல விசாரிப்புகள் முடிந்து, அனைவரும் ஒரு டேபிளில் அமர்ந்து பேசிக்கொண்டே உணவை உண்டனர். கிரிஜா சுற்றும் முற்றும் பார்த்து, யாரும் தங்களை கவனிக்கவில்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு, "ஏய் அனு அரு, உங்களுக்கு விஷயம் தெரியுமா, நம்ம டீம்ல இருந்தாலே அந்த மாயா, அவ டைவர்ஸ்க்கு அப்ளை பண்ணியிருக்கா." என்றால் ரகசியமாக.

அதை கேட்டு திடுக்கிட்ட அனன்யா, "என்ன கிரி சொல்ற அவங்களுக்கு மேரேஜாகி ஒன் இயர் த்ரீ மன்த்ஸ் தானே ஆகுது?" அவள் பார்வை அவசரமாக அருந்ததியை தொட்டது. அவளோ சாப்பிடுவது மட்டுமே என் கடமை என்பது போல் உணவில் கவனத்தை செலுத்தினாள்.

அசோக் பேச்சை தொடர்ந்தான், "நீ வேற மேரேஜாகி ஆறு மாசத்துல டைவர்ஸ்க்கு அப்ளை பண்ணிட்டா." இப்போது அனன்யாவின் கவனம் பேசுபவரிடம் சென்றது.

"அவ நம்ம டீம் லீடர தான மேரேஜ் பண்ணா?" அனன்யா.

"ஆமா அந்த கொடுமையை ஏன் கேக்குற, ஏதோ பிளான் பண்ணி அவரை வளச்சு போட்டுட்டா. நல்ல மனுஷன். மேரேஜ் ஆனதிலிருந்து எதையோ பறிகொடுத்த மாதிரி இருந்தார். அவ டைவர்ஸ்க்கு அப்ளை பண்ணவும் வாழ்க்கையே வெறுத்து தாடி வச்சு சுத்திக்கிட்டு இருந்தார். ஏதோ இன்னைக்கு கொஞ்சம் நீட்டா வந்திருக்கார்." பரிதாப பட்டாள் கிரிஜா.

"திறமையான மனுஷன். நல்ல சம்பளம். பார்க்கவும் ஹாண்ட்சம்மா இருக்கார். அப்புறம் ஏன் அவரை டைவர்ஸ் பண்ணுறா?" குழப்பமாக கேட்டால் அனன்யா.

இப்போது அருந்ததியின் பார்வை உயர்ந்து, 'உனக்கு இது தேவையா?' என அனன்யாவை கேட்டது. அவளோ பேச்சில் மும்மரமாக இவளை கவனிக்கவில்லை. அலட்சியமாக தோளை குலுக்கிக் கொண்டு தன் சாப்பிடும் வேலையை தொடர்ந்தால் அருந்ததி.

"நம்ம விபி சார் எம்டியா வரவும் அவரை பார்த்து மயங்கிட்டா. தாலி கட்டின ஹரி சார் கசந்துட்டார். இப்ப நம்ம எம்டிக்கு ரூட் விட்டிருக்கா!" இகழ்ச்சியாக சொன்னால் வானதி.

அவர்கள் பேசுவதை கேட்க விருப்பமில்லை என்றாலும், அவர்கள் பேசியது அருந்ததியின் காதில் துல்லியமாக விழுந்தது. இவ்வளவு நேரம் கண்டும் காணாமலும் உண்டு கொண்டிருந்த அருந்ததியின் கைகள், இப்போது வாய்க்கு கொண்டு சென்ற உணவுடன் அந்தரத்தில் நின்றது.

"அதுக்குள்ள இன்னொருத்தரா?" அருந்ததிக்கு கேட்கவே அருவருப்பாக இருந்தது.

"ஆமா! அவ உன்னோட பிரண்டு தானே அரு. உனக்கு தெரியாதா?" அசோக்.

தெரியாது என தலையசைத்தவள், பாதி உணவுடன் எழுந்து சென்றாள். செல்லும் அவளை தடுக்க முடியாமல் தவித்த அனன்யா, "இனி அந்த மாயா பத்தி நாங்க இருக்கும்போது பேசாதீங்க" என மற்றவர்களிடம் சொல்லிவிட்டு, அவளும் பாதி உணவுடன் தோழியை பின் தொடர்ந்தாள். ஒன்றும் புரியாத தோழமைக் கூட்டம் திருதிருவென முழித்தனர்.

🌺🌺🌺
பிரகாஷின் அறைக்கு சென்று கொண்டிருந்த பெண்ணின் நடை, "எப்படி இருக்க அருந்ததி" என்ற ஹரியின் கேள்வியால் தடை பெற்றது.

"ரொம்ப நிம்மதியா, சந்தோஷமா இருக்கேன் சார்."

அவளை அடிபட்ட பார்வை பார்த்தவன், "நீ வரப்போறனு கேள்விப்பட்டேன். ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு."

உணர்ச்சி துடைத்த முகத்துடன் அவனை ஏறிட்டவள், "ரொம்ப தேங்க்ஸ் சார். வேலை இருக்கு நான் கிளம்பவா?"

முகம் ஏமாற்றத்தில் சுருங்கினாலும், சரி என தலையசைத்து அவன் கிளம்பவும், அருந்ததியை தொடர்ந்த அனன்யா அங்கு வரவும் சரியாக இருந்தது. அவளிடமும் நலம் விசாரித்து சென்றான் ஹரி.

செல்லும் அவனை தொடர்ந்தது பெண்களின் கண்கள். அவர்களுக்கு அவனது நிலையை பார்க்க பரிதாபமாக இருந்தது. இது அவனாக தேடிக்கொண்ட வினை தாங்கள் ஒன்றும் செய்ய முடியாது என நினைத்தனர்.

அனன்யா அருந்ததியிடம் ஏதோ சொல்ல வாய் திறக்க அதே நேரம், "இனி எப்பவும் நீ இங்க திரும்பி வர மாட்டேன்னு நினைச்சேன். தைரியமா வந்துட்ட." முதுகுக்கு பின்னாலிருந்து இகழ்ச்சியாக வந்தது மாயாவின் குரல்.

சில காலம் இவர்களுடன் தோழியாக இருந்தவள். தோழி என்ற சொல்லுக்கு கலங்கமானவள்.

"தப்பு செஞ்ச நீயே தைரியமா இங்க இருக்கும்போது, நான் வரமாட்டேனா?" அதைவிட இகழ்ச்சியாக பதிலளித்தால் அருந்ததி.

மாயாவின் முகம் கருத்தாலும், "அது ஊரை விட்டு ஓடும் போது தெரியலையா?"

இப்போது முகம் கருப்பது அருந்ததியின் முறை. அதை தாங்க முடியாத அனன்யா, "அவ போனது ப்ராஜெக்ட்டுக்காக. நேர்மையான வழில போனா. உன்ன மாதிரி எந்த ஏமாத்து வேலையும் செய்யல; ஃப்ரெண்டுன்னு கூட இருந்து குழி பறிக்கல; நம்பினவங்களுக்கு துரோகம் செய்யல; அடுத்தவங்க பொருளுக்கும் பதவிக்கும் ஆசைப்படல; அதனால் உரைவிட்டு ஓடிப்போக வேண்டிய அவசியம் அவளுக்கு இல்லை." மாயாவிற்கு பதிலடி கொடுத்து விட்டு, "இந்த அல்டாப்பு காண்டாமிருகத்துக் கிட்ட உனக்கு என்ன வெட்டி பேச்சு?" என அருந்ததியை திட்டுவது போல் மாயாவை இன்னும் இகழ்ந்து விட்டு அருந்ததியை அங்கிருந்து இழுத்துச் சென்றாள்.

செல்லும் அவர்களையே வெறித்திருந்தது மாயாவின் கண்கள். "இருங்கடி இன்னும் ஆறு மாசத்தில் விபியை கரெக்ட் பண்ணி, கல்யாணம் செஞ்சு இந்த விவி சாம்ராஜ்யத்துக்கு ராணி ஆகிட்டு, உங்க ரெண்டு பேத்தையும் ஒரு வழி பண்றேன்." என நடக்கப்போவது தெரியாமல் சூளுரைத்தாள்.

ஆம்! விவி என்பது உலக அளவில் பறந்து விரிந்திருக்கும் பெரிய சாம்ராஜ்யம். சென்னையில் உள்ள இந்த மென்பொருள் நிறுவனத்தை போல், பல பெரும் நகரங்களில் அவர்களது நிறுவனங்கள் உள்ளது. மென்பொருள் மட்டுமின்றி பட்டு ஜவுளி உலகிலும் பெயர் செல்லக்கூடிய அளவில் வளர்ந்து நிற்கும் நிறுவனம்.

விஜய்வர்மாவின் குடும்பம் பாரம்பரியமிக்க குடும்பம். பரம்பரை பணக்காரர்கள். விஜயவர்மாவின் தந்தை பட்டு உற்பத்தியில் கொடி கட்டி பறந்தவர். சில காலம் தந்தையுடன் தொழில் செய்த விஜயவர்மாவிற்கு அதில் இருந்த நாட்டம் குறைந்தது. கணினியின் மேல் ஈர்ப்பு தோன்ற, விவி கம்ப்யூட்டர்ஸ் என்ற பெயரில் சின்ன நிறுவனத்தை தொடங்கினார். தனது கடின உழைப்பால் தற்போது உலக அளவில் விவி சாஃப்ட்வேர் சொல்யூஷனாக உயர்த்தியுள்ளார். கடந்த இருபத்தி ஐந்து ஆண்டுகளில் இது இமாலய வெற்றி.

தனக்கு பிறகு சாப்ட்வேர் உலகின் முடி சூடா மன்னனாக தன் மகன் இருப்பான் என நம்பியவருக்கு ஏமாற்றம் அளித்தான் அவரது மகன் பிரகாஷ். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தவன், தன் மேற்படிப்பையும் அதே துறையில் முடித்தான். தன் நண்பர்களுடன் இணைந்து அமெரிக்காவில் அட்வர்டைசிங் ஏஜென்சியை தொடங்கினான். விஜயவர்மாவின் மனதில் சிறு வருத்தம் இருந்தாலும் அவனது விருப்பத்தை ஆதரித்தார்.

பிரகாஷூம் அந்த துறையில் நல்லபடியாக முன்னேறிக் கொண்டிருந்தான். அவனது போதாத நேரம் விஜயவர்மாவிற்கு மாரடைப்பு ஏற்பட, விவி சாம்ராஜ்யத்தை கையில் எடுத்தான் பிரகாஷ். கடந்த ஒன்பது மாதங்களில் ஒவ்வொன்றாக கற்றுத் தேர்ந்து கொண்டிருக்கிறான்.

மூன்று மாதங்களுக்கு முன் அவன் அமெரிக்கா சென்றிருந்தபோது, வந்த அவனது பிறந்தநாளை நண்பர்களுடன் இணைந்து ஐந்து நட்சத்திர பப்பில் கொண்டாடினான். அங்கு அருந்ததியை சந்தித்தான்.

செதுக்கி வைத்த சிலை போலிருந்த அந்தப் பதுமையால் வசிகரிக்கப்பட்டான். நொடிக்கு ஒரு முறை அவன் பார்வை அவளை தொட்டு மீண்டது. அவள் கேட்கவும் அவளுடன் இணைந்து நடனம் ஆடினான். அன்றைய இரவு தன்னுடன் தங்கச் சொல்லி அவளை வற்புறுத்தினான். கழுவும் மீனில் நழுவும் மீனாக இருந்தால் அந்த பதுமை. பிரகாஷுக்கு ஏனோ எந்த பெண்ணிடமும் தோன்றாத ஈர்ப்பு, இவளிடம் தோன்றியது. அவளுடன் இருந்தால் (பழகினால்) மயக்கம் தெளியும் என அவளிடம் ஒரு டீல் வைத்தான். அதை இந்த நிமிடம் வரை அவள் நிறைவேற்றவில்லை. அவள் மீதான அவனது மயக்கமும் நாளுக்கு நாள் அதிகரித்து, அவளை தனக்கு சொந்தமாக்கிக்கொள்ள எதையும் செய்யும் நிலையில் இருக்கிறான்.

பெண்களுடன் ஒரு எல்லைக்கோட்டில் பழகும் பிரகாஷ், அந்த பதுமையுடன் நெருக்கமாக ஆடியதை கண்ட நண்பர்கள் வியந்தனர். அவன் பார்வையையும் உடல் மொழியையும் வைத்து அவன் விருப்பத்தை புரிந்து கொண்டார்கள். அவளை பற்றிய செய்திகளை அடுத்த இரண்டு நாட்களில் சேகரித்து அவனுக்கு கொடுத்தனர்.

அவள் தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் பெண் எனத் தெரியவும் மகிழ்ச்சியில் துள்ளி குதித்தான். அமெரிக்காவில் அவர்களது ப்ராஜெக்ட் முடியும் தருவாயில் இருந்ததால் அவளை தன்னருகில் கொண்டு வந்து விட்டான். தன் தேவையையும் அவளிடம் கோடிட்டு காட்டிவிட்டான். அதை அவள் நிறைவேற்றும் நாளுக்காக காத்திருக்கிறான். அந்த நாள் வருமா??? வரும் ஆனால் வராது…

உள்ளம் தடுமாறுமா???
 
Last edited:

KalaiVishwa

இளவரசர்
Joined
Jul 3, 2018
Messages
18,532
Reaction score
43,669
Age
38
Location
Tirunelveli
ஒரு ரூட்க்கு ஒரே டைம் ல 2 பஸ்ஸான்னு நினைச்சா,

அல்ரெடி ஒருத்தன் ஆட்டோ ஓட்டிட்டு போயிருக்கான் போலயே🧐🧐🧐🧐🧐

நல்ல இருக்கு அப்டேட் 👍 👍 👍
 
vijirsn1965

இணை அமைச்சர்
Joined
Dec 10, 2018
Messages
850
Reaction score
652
Location
chennai
Story super going thirumba muthalil irunthu padiththean Prakash Arunthathi udan enna deal peasinaan one year before Aru ku inthe company yil virumbathakaatha nigazhvu etho nadanthirukkirathu athu Mayavaal irunthirukkum polum Hari Aru eruvarum love seithaarkalo Maya etho kuzhappi irukkiraal Vishnu ippothu Arunthathiyai love seikiraan Prakash America vil irunthu Aruvai pinthodarkiraan Prakash or Vishnu yaar hero poruththirunthu paarkalaam superb arumai mam
 
Krisha

அமைச்சர்
SM Exclusive
Joined
Sep 27, 2021
Messages
1,371
Reaction score
1,812
Location
UAE
ஒரு ரூட்க்கு ஒரே டைம் ல 2 பஸ்ஸான்னு நினைச்சா,

அல்ரெடி ஒருத்தன் ஆட்டோ ஓட்டிட்டு போயிருக்கான் போலயே🧐🧐🧐🧐🧐

நல்ல இருக்கு அப்டேட் 👍 👍 👍
அதே அதே
 
Krisha

அமைச்சர்
SM Exclusive
Joined
Sep 27, 2021
Messages
1,371
Reaction score
1,812
Location
UAE
Story super going thirumba muthalil irunthu padiththean Prakash Arunthathi udan enna deal peasinaan one year before Aru ku inthe company yil virumbathakaatha nigazhvu etho nadanthirukkirathu athu Mayavaal irunthirukkum polum Hari Aru eruvarum love seithaarkalo Maya etho kuzhappi irukkiraal Vishnu ippothu Arunthathiyai love seikiraan Prakash America vil irunthu Aruvai pinthodarkiraan Prakash or Vishnu yaar hero poruththirunthu paarkalaam superb arumai mam
அந்த deal என்னன்னு இன்னும் சொல்லல😁😁

Nice guessing 🤩🤩

Guessing correct ah விரைவில் 😜😜
 
Advertisements

Latest Episodes

Advertisements

Top