• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கு ஆக்சிஜன் அனுப்பப்பட்ட விவகாரம் - தாமாக முன்வந்து சென்னை உயர்நீதிமன்றம் விசாரணை

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

SM Support Team

Moderator
Staff member
Joined
Apr 7, 2019
Messages
154
Reaction score
950
1619076309204.png
தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கு ஆக்சிஜன் மற்றும் ரெம்டெசிவர் மருந்து பிற மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது.
சென்னை,

மத்திய அரசின் உத்தரவின் பேரில் ஸ்ரீபெரும்புதூரில் இருந்து 45 ஆயிரம் கிலோ ஆக்சிஜன் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதேபோல், ரெம்டெசிவிர் மருந்துகளும் தமிழகத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
தமிழகத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு ஆக்சிஜனை அனுப்பும்போது தமிழக அரசு நிர்வாகத்திடம் எந்த வித கலந்தாலோசனையிலும் ஈடுபடாமல் மத்திய அரசு தன்னிச்சையாக முடிவு எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திமுக, அமமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், தமிழகத்தில் இருந்து ஆக்சிஜன் மற்றும் ரெம்டெசிவிர் மருந்து பிற மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட விவகாரம தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் இன்று தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது.

கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்து வருவதையடுத்து தமிழகத்தில் மருத்துவமனைகளில் ரெம்டெசிவிர் மருந்துகள் கொரோனா நோயாளிகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த மருந்துகள் தனியாருக்கு அனுப்பப்படுவதாகவும், அதேபோல் ஆக்சிஜன் பற்றாக்குறை இருப்பதாகவும், தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜன் வெளிமாநிலங்களுக்கு அனுப்பப்படுவதாகவும் இவை தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் அனுப்பப்படுவதாகவும், அதேபோல் வெண்டிலேட்டர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி தலைமையிலான அமர்வு இன்று வழக்குகளை விசாரிக்க துவங்கியதும் தமிழக அரசு தரப்பில் வழக்கறிஞரை அழைத்து தலைமை வழக்கறிஞரை ஆஜராகும்படி அறிவுறுத்தினர். அதன் அடிப்படையில், தமிழக தலைமை வழக்கறிஞர் ஆஜரான பிறகு இந்த விவகாரம் தொடர்பாக ஊடகங்களில் வெளியான செய்தியின் அடிப்படையில் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ள உள்ளது.

இதனால், இது தொடர்பாக அரசின் விளக்கங்களை பெற்று என்ன நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என்பது குறித்து இன்று பிற்பகல் 2.15 மணிக்கு தெரிவிக்க வேண்டும் என்று அரசு தலைமை வழக்கறிஞருக்கு தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.

மேலும், தமிழகத்தை பொறுத்தவரை ஆக்சிஜன் உற்பத்தி செய்ய பொதுமான தொழிற்சாலைகள் இருப்பதாகவும், இந்த ஆக்சிஜன் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் சிக்கிச்சைக்கு அடிப்படையான விஷயம் என்பதனால் இந்த விவகாரத்தை நீதிமன்றம் கையில் எடுத்துள்ளதாகவும், தற்போதைய சூழ்நிலையில் மேலும் ஒரு குழப்பத்தை ஏற்படுத்த நீதிமன்றம் விரும்பவில்லை ஆனால், அதேசமயம் மற்ற மாநிலங்களில் ஏற்பட்டிருக்கக்கூடிய நிலைமை தமிழகத்திற்கு ஏற்பட்டுவிடக்கூடாது என்ற அச்சத்தின் அடிப்படையிலேயே இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளதாக தலைமை நீதிபதி தெரிவித்தார்.

இதையடுத்து, தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கு ஆக்சிஜன் மற்றும் ரெம்டெசிவர் மருந்து பிற மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக தமிழக அரசின் நிலைப்பாட்டை பிற்பகல் 2.15 மணிக்கு தெரிவிக்கும்படி தமிழக அரசின் தலைமை வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு வழக்கை 2.15 மணிக்கு ஒத்திவைத்துள்ளார்.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top