• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

தமிழ் குறுக்கெழுத்துப் புதிர் - 001

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
Oh my god.. ennaiku naan mudipen nu teriyalaye
No problem, காவ்யா டியர்
எப்படியாச்சும் கஷ்டப்பட்டு ஒரு மாசத்துக்குள்ள நாம்ப ரெண்டு
பேரும் எழுதி முடிச்சிடலாம்ப்பா
 
Soundarya Krish

முதலமைச்சர்
Joined
Sep 17, 2018
Messages
10,587
Reaction score
27,628
Location
Home Town
நான் பதிந்துவிட்டேன் பதில்களை...
மிக்க நன்றி அண்ணா அண்ணி...
தொடர்ந்து நடத்துங்கள்☺☺☺இதுபோல் அறிவு விளையாட்டுகளை
 
Mithumiya

நாட்டாமை
Joined
May 8, 2018
Messages
36
Reaction score
56
Location
Salem
வணக்கம் மக்காஸ்...

இலக்கணத்தில் கலக்கணும்’-க்கு உங்கள் வரவேற்பையும் ஆதரவையும், அதைத் தொடர்ந்து அதே போல மேலும் போட்டிகள் நடத்தக் கோரியதையும் தொடர்ந்து இதோ உங்களுக்காக ஒரு தமிழ் இலக்கணக் குறுக்கெழுத்துப் புதிரை உருவாக்கியுள்ளோம்...

உங்கள் பள்ளி இலக்கணப் பாடங்களை ஒருமுறைப் படித்துவிட்டு ஓடி வருக... :giggle::p:devilish:

கவனிக்க: விடைகளைக் கீழே கொடுக்கப்பட்டுள்ள "கூகுள் படிவம்" மூலம் சமர்ப்பிக்கவும். சமர்ப்பித்தவுடன் உங்கள் மதிப்பெண்ணை அதுவே காட்டிவிடும். முழுமையான சரியான விடைகளை நான் வரும் ஞாயிறு அன்று வெளியிடுவேன்...

(விடைகளைச் சமர்ப்பிக்கும் முன் ஒன்றிற்கு இரண்டு முறை எழுத்தைச் சரிபார்த்துக்கொள்க, சிறிய பிழை இருந்தாலும் அது தவறான விடையாகக் கொள்ளப்படும். குறுக்கெழுத்தைப் படியெடுத்து நிரப்பிச் சரி பார்த்துக்கொண்டு பின்னர் படிவத்தில் நிரப்புக!)

தமிழ் இலக்கணக் குறுக்கெழுத்துப் புதிர் - 001

இடமிருந்து வலம்:

1 – தனித்து இயங்க இயலாத எழுத்து வகை

2 – நீண்டு ஒலிப்பது...

3 – தமிழெழுத்துக்களின் பெரும்பகுதி இதுதான்

4 – பெயர்ச்சொல்லுக்குக் காத்திருக்கும் வினைச்சொல்

5 – இதற்குப் புகழ்பெற்றவர் கவி காளமேகம்

6 – போகிற போக்கில் வைத்த பெயர்

7 – அவன், அவள், அது...

8 – உயிர் வந்தால் உக்குறள்...

9 – இது ஏனோதானோ என வைத்த பெயர் அல்ல!

10 – ஐ ஆல் கு இன் அது கண்

11 - தனிநிலை

12 – எழுத்தின் அளவு

13 – கண்ணிமைக்கும் நேரத்தில் சொல்லக்கூடியது!

மேலிருந்து கீழ்:

1 – சொல்லின் பொருள் இல்லாத பகுதி

14 – நிலைமொழி + வருமொழி

15 – இதனைச் ‘சந்தி இடம்பெறுதல்’ எனவும் கூறுவர்

16 – உயிரின் நீட்சி இது

17 – ஆ, ஈ, ஊ, ஏ, ஓ, கா, தா, தீ, பா, மா, வா...

18 – நிரைநேர்?

19 – மக்கள், தேவர், நரகர்...

20 – உயிர்களை ஒட்டும் பசை

21 – எழுத்து உருமாறுதல்

வலமிருந்து இடம்:

15 – பலவாக இல்லாதது!

22 – உடைக்க முடியாத சொல் (உடைந்திருக்கிறது!)

23 – மூக்கில் ஒலிப்பது

கீழிருந்து மேல்:

7 – நிறைய இருப்பது

23 – மெய்யொடு மெய் இயைதல்

24 – வினையின் கருத்தா

25 – வெண்பா உரிச்சீர்

26 – எழுத்து, அசை, சீர், தளை, ___, தொடை!

27 – செய்யப்பட்ட கவிதை

28 – பொதுவாக பாவின் அடிகளைக் கோக்கும் தொடை

29 – தேமா, புளிமா, கருவிளம், கூவிளம்...

**********

விடைகளை இடுவதற்கான கூகுள் படிவம்: https://forms.gle/jeEfX2xfNAPnjJSX7

(யூனிகோடு எழுத்துருவைப் பயன்படுத்துதல் நலம்! பொதுவாகக் கூகுள் தமிழ் உள்ளீடு யூனிகோடுதான்!)

************
கவனிக்க-2: இப்பதிவின் மறுமொழியிலோ அல்லது வேறிடத்திலோ விடைகளைப் பொதுவில் பகிர வேண்டா... அவரவர் மூளையைக் கசக்க அவரவருக்கு வாய்ப்பளிப்போம்...
**************

இப்புதிரை நீங்கள் மகிழ்வுடன் செய்வீர்கள் என்ற நம்பிக்கையுடன்...

-தா & வி :)(y):coffee:
naanum answer paniruken ?????
 
Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
மக்களே...

ஒன்றைக் கவனத்தில் கொள்க...

அந்தக் கூகுள் படிவத்தில் நான் விடைகளை இணைத்திருக்கிறேன்... ஒரு கேள்விக்கு ஒரு சொல் மட்டுமே சரியான விடை...

அதை சரியான எழுத்துக்கோவையில் (spelling) போட்டால் மட்டுமே விடை சரியென்று எடுத்துக்கொள்ளும்...

(சரியான இருந்தால்தானே குறுக்கெழுத்துப் புதிரிலும் பிற சொற்களோடு எழுத்துகள் கச்சிதமாகப் பொருந்தி வரும்?!)

எடுத்துக்காட்டாய், ‘மாவிலை’ என்பதுதான் சரியான விடை என்றால், அதை அப்படியே இட்டால்தான் விடை சரி என்று எடுத்துக்கொள்ளும்... மாறாய் ‘மாஇலை’ என்றோ, ‘மாவின் இலை’ என்றோ, ‘மாயிலை’ என்றோ இட்டால் விடை தவறு என்றே எடுத்துக்கொள்ளும்...

உங்களில் பலர் சரியான விடையைக் கண்டறிந்துள்ளீர்கள், ஆனால், சில சொற்களைச் சரியான எழுத்துக்கோவையில் இடவில்லை... (எழுத்து மாறுகையில் பிற சொற்களோடு அது இணைதலும் இயலாமல் போகும்!)

எனவேதான், முதலில் குறுக்கெழுத்துக் கட்டங்களில் சொற்களை இட்டு அவை கச்சிதமாகப் பொருந்துகின்றனவா என்று சரி பார்த்துக்கொண்டு பின் சொற்களை கூகுள் படிவத்தில் இடுக...

(ஒருவர் பலமுறை கூட விடை அளிக்கலாம்... எனவே, பிழையாக இட்டவர்கள் மீண்டும் முயன்று பார்க்கவும்...)

---

கொசுறு: இதுவரை ஒரே ஒருவர்தான் அனைத்து விடைகளையும் சரியாக இட்டு 33-க்கு 33 மதிப்பெண் பெற்றுள்ளார்...

அவர் யார் என்று நான் சொல்லித்தான் உங்களுக்குத் தெரிய வேண்டுமா என்ன?

நமது இலக்கணச் சூறாவளிதான் அவர் :):)(y)(y)(y)
 
Selva ganesh

புதிய முகம்
Joined
Apr 11, 2019
Messages
2
Reaction score
7
Location
Neyveli

:D:D:D

ஏன் அண்ணா இப்படி... ????????

நீங்கள் திருத்துவதாக நினைத்து நான் விளக்கங்களையும் அடைப்புக்குறிக்குள் கொடுத்திருந்தேன்... அது மூன்று நான்கு விடைகளை முதலில் தவறு என்று சொல்லிவிட்டது... பிறகு மீண்டும் முயற்சித்தேன்... மிக்க நன்றி அண்ணா...
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top