• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

தமிழ் மொழி

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Imaiyi

அமைச்சர்
SM Exclusive
Joined
May 24, 2018
Messages
1,264
Reaction score
3,194
Age
33
Location
Sri lanka
தமிழ்! என்றே கூறிட நிமிர்ந்திடும் பார் அங்கே உன் குரலும்...

சொல்லுக்கே அத்தனைத் திமிர்...
தமிழ் தாய்க்கு எத்தனை இருந்திடும் மிகைத் திமிர் ...

வீழ்வேன் என்றே நினைத்தாயோ!

கேட்டே எமை வளர்த்தாயே எங்கள் தமிழின் அமுதே...

'அ' வென்றே சொல்லிட ஆயிரம் சொல்லாடல் பிறந்திட...

பல்லாயிரம் கடந்திங்கே தமிழுக்குண்டே சிகரத்தில் ஓர் இடமங்கே ...

உடலோடு மெய்க் காதல் கொண்டே உயிரின்மெய்யங்கே கால் பதித்ததுவே...

சூரியன் நம் ஒளிமுதலாம் தமிழ் நம் மொழி முதலாம்...

திராவிடக் குடும்பம் தலை வணங்கட்டும்...
தமிழுக்கு அங்கே முடி சூடட்டும்...

ஓரெழுத்தோடு பழமொழியும்...

பல சொல்லோடு நிறை மொழியும்...

மொழிந்தே தரும் அங்கே இலக்கணமாம்...

செருக்கோடு, உரை சேர்த்து, உலகையும் தன் அகத்துள் அடக்கிடும்...

இலக்கியத்தோடு ஓர் கலைநயம் படைத்திடும்...

சங்கம் தொட்டு சங்கமருவியே...
பல்லவன் முதல் சோழன் பொன்னாய்ப் போற்றிட தமிழ் நீ வளர்ந்தாயே...

காவியம் என்றாய் காப்பியம் படைத்தாய்...

செய்யுளங்கே வன்னாய் தொடங்கியே...

மிதமாய் இன்றும் இதமாய் நமை வந்தடைந்திடக் கண்டீர்....
அங்கே பாரதியின் வழி வடிவிலே...

போற்றிடவும் உன்னிலே தேடினேன் மொழிக்கு உவமையாம்...

அங்கில்லை உனக்குமே ஏதும் நிகராய்...

மானிடா விழித்திடு... தமிழிலே உயிர்த்திடு...
அச்சமின்றி உரைத்திடு... தமிழச்சி நானே என் எழுத்தெல்லாம் நீயே...

என்னோடும் என் எழுத்தோடும் மொழி முதலாம் என் தாய்த் தமிழே....

இமையிeiB2E0C3458.jpg
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top