• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

தருப்பைப் புல்லின் சிறப்புகள்....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Eswari kasirajan

முதலமைச்சர்
Joined
Apr 14, 2018
Messages
10,671
Reaction score
27,027
Location
Tamilnadu
IMG-20181001-WA0016.jpg
தருப்பையை திருப்புல் என்றும் கூறுவார்கள்.

திருப்புல் என்னும் சொல்லும், தூப்புல் என்னும் சொல்லும் நாணல் இனத்தைச் சேர்ந்த ஒருவகைப் புல்லைக் குறிக்கும் சொல்லாகும்.

தூப்புல் என்பதற்கு தூயபுல் என்று பொருளாகும்.

இத்தகைய சிறந்த புல்லிற்கு,

நம் முன்னோர்கள், மங்கலம் , அமங்கலம் ஆகிய இரு வகைப்பட்ட வைதீகச் சடங்குகளிலும் தருப்பை என்ற புல்லைச் சிறப்பாகப் பயன்படுத்தி இருக்கின்றனர்.

தருப்பை புல்லின் அடிப்பாகம் பிரம்மனும், மத்தியில் விஷ்ணுவும் , நுனியில் ருத்ரனும் இருப்பதால் பரம பவித்ரமாகிய சுத்தசக்தி என்று அறிக.

இது அக்னி போன்றது, உஷ்ண வீரியம் உடையது, அதிவேகமுடையது , நீரை சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது, உலோகங்களின் அழுக்கைப் போக்கக் கூடியது.

தேவர்களுக்கும், பித்ருக்களுக்கும் உகந்ததாயும் அமைந்தது.

புண்ய பூமியில் மட்டுமே முளைக்கக்கூடியது.

அக்னி கர்பம் என்னும் வட நூல் ஒன்றில் தருப்பையின் பெயர் குறிப்பிடப் படுகிறது.

கோயில் கும்பாபிஷேகங்களில் அதிகமாகப் பயன்படுத்தப் படும் தருப்பை, வைதீகச் சடங்குகள் செய்யும் பொழுது பவித்ரம் என்ற பெயரில் தருப்பையை வலது கை மோதிர விரலில் , மோதிரம் போல அணிவார்கள்.

அந்த விரலில் கபநாடி ஓடுவதால் , தருப்பையை அணியும் போது, கப நாடி சுத்தி பெரும்.

இந்த புல்லில்
காரமும், புளிப்பும் இருப்பதனால் தான் செப்பு முதலிய உலோகத்தினால் ஆன விக்கிரகங்களை இந்த தருப்பைப் புல்லின் சாம்பலால் தேய்க்க வேண்டும் எனக் கூறுகின்றனர்.

அதனால் அவ்விக்கிரகங்கள் பல நாள் கெடாமல் பளபளப்பாய் இருக்குமாம்.

அவ்விக்கிரகங்களின் மந்திர ஆற்றலும் குறையாதாம்.

இந்தப் புல் தண்ணீர் இல்லாவிட்டாலும் பல நாட்கள் வாடாது.

நீர் நிலையில் தோய்ந்தே இருந்தாலும் அழுகாது.

இதனை அம்ருத வீரியம் என்றும் சொல்வார்கள்.

இந்தப் புல் உலர்ந்து போனாலும் இதன் வீரியம் குறையாது.

சூரிய கிரகணத்தின் போது இதன் வீரியம் அதிகமாகும்.

இப்புல் பட்ட நீரைத் தெளித்த இடத்தில் தொற்று நோய்கள் தொற்றுவதில்லை.

நீர்க்கரையில் உள்ள தருப்பைப் புல்லில் பட்டு, வீசும் காற்றினால் உடலின் நலன் பெருகும்.

கிரகண காலத்தில், அமாவாசையிலும் தர்பைக்கு வீரியம் அதிகமாகும், ஆகவே தான் கிரகண காலத்தில், உணவு பண்டங்களில் கிரகண சக்தி தாக்காமல் இருக்க தருப்பையை போடுவது வழக்கம்.

மேலும் சூரிய கிரகணத்தின் போது தருப்பையைக் கொண்டு உணவுப் பண்டங்களை மூடும் போது, சூரியனிடம் இருந்து கிளம்பும் வேண்டாத கிரகண ஒளிகள் அந்த உணவுப் பண்டங்களை பாதிக்காது என்றும் சொல்லப்படுகிறது.

தருப்பைப் புல்
புனிதத் தன்மையை தருவது, எல்லா பாவங்களையும் போக்க வல்லது.

இந்த புல்லில் அதிகமான தாமிர சத்து உள்ளது.

நமது உடலில் வெளியில் இருந்து உள்ளே புகும் தீமையைத் தடுக்கிறது.

அதனால் இதற்கு அக்னிகற்பம் என்றும் பெயர்.

அக்கிர ஸ்தூலமுடையது பெண் தர்பை.

மூலஸ்தூலம் உடையது அலி தர்பை.

அடி முதல் நுனி வரை ஒரே சமமாக இருப்பது ஆண் தர்பை.

ஹோம குண்டங்களில், யாக சாலையில் இருந்து பிம்பத்திற்கும், கலசங்களுகும் மந்திர ஒலிகளை கடத்தி சக்தியை அளிக்கும்.

நான்கு பக்கமும் தர்பை புல்லை வைப்பது, அந்த குண்டங்களை பாதுகாக்கும் அரணாக இருக்கும் என்பதால் தான்.

இறைவழிபாடு ஜெபம், ஹோமம், தியானம், பித்ரு தர்ப்பணம், பிராணயாமம் முதலிய காரியங்களில் கையில் பவித்ரம் அணிந்து கொள்ளாமல் செய்வது பலனை தராது.

விஷேட காரியங்கள் நடத்தும் போது வலது கை மோதிர விரலில் பவித்திரம் என தரப்பை புல்லை போடுவார்கள்.

மோதிர விரல் மூளையுடன் சம்பந்தப்பட்டது
ஆகவே தர்பை பவித்ரம் போடும் போது பிரபஞ்ச சக்தி விரல் மூலம் மூளைக்கு சென்று உடலில் பரவும்.

தர்பையை தேவ காரியங்களுக்கு கிழக்கு நுனியாகவும், பித்ரு காரியங்களுக்கு தெற்கு நுனியாகவும் பயன்படுத்த வேண்டும்,

தர்பை உஷ்ண விரீயமும், அதிக வேகமும் உடையது. பஞ்சலேங்களில், தாமிரத்தில் மின்சார சக்தியை கடத்தும் சக்தியை போல் தர்பையிலும் உண்டு.

தங்கம், வெள்ளி கம்பிகளின் இடத்தில் பிரபஞ்சத்திலுள்ள சக்திகளை ஆகர்ணம் செய்யும்.

எல்லா ஆசனங்களை காட்டிலும், தர்பாசனத்தில் அமர்ந்து பூஜை செய்வது மிகவும் உயர்ந்த பலனை தரும்.

அசுப காரியங்கள் ஒரு தர்பையாலும்,
சுப காரியங்களுக் இரண்டு தர்பைகளாலும்,
பித்ரு காரியங்களிலும், தேவ காரியங்களுக்கு ஐந்து தர்பைகளாலும், சாந்தி கர்ம காரியங்களுக்கு ஏழு தர்பைகளாலும் பவித்ரம் எனும் தர்பை மோதிரம் முடிய வேண்டும்.

தட்சிணாமூர்த்தி நான்கு கைகளுடன் ஆலமரத்தின் கீழ் தென்திசையை நோக்கி அமர்ந்திருப்பார் .

அவருடைய வலதுகால் 'அபஸ்மரா' என்ற அரக்கனை மிதித்த நிலையில் இருக்கும்.

அது அறியாமையை குறிக்கின்றது.

அவரது ஒரு மேல் கையில் ஒரு ருத்திராட்ச மாலையையும், பாம்பையும் பிடித்திருப்பார்.

அவரது மற்றொரு மேல் கையில் நெருப்பும் கீழ் இடது கையில் தர்பைப் புல்லையும் ஓலைச்சுவடியையும் வைத்து இருப்பார்.

கொடி மரத்தின் முன்னே சாஷ்டாங்க நமஸ்காரம் செய்கிற போது கொடி மரத்தில் சுற்றி இருக்கும் தரப்பை புல் பிரபஞ்ச சக்தி ஈர்த்து வைத்திருக்கும் அது வீழ்ந்து வாங்கும் பக்தர்களின் முதுகெலும்புவ வழியாக உடலில் பரவும்.
 




Chitrasaraswathi

முதலமைச்சர்
Joined
Jan 23, 2018
Messages
11,488
Reaction score
29,223
Age
59
Location
Coimbatore
அருமை ? தர்ப்பை சாம்பல் நெய்யுடன் கலந்து ரக்‌ஷை என்று யாகம் முடிந்த உடன் கொடுப்பார்கள் அதை அணிவதனால் அது நம்மை காக்கும் உண்மையாகவே
 




Eswari kasirajan

முதலமைச்சர்
Joined
Apr 14, 2018
Messages
10,671
Reaction score
27,027
Location
Tamilnadu
அருமை ? தர்ப்பை சாம்பல் நெய்யுடன் கலந்து ரக்‌ஷை என்று யாகம் முடிந்த உடன் கொடுப்பார்கள் அதை அணிவதனால் அது நம்மை காக்கும் உண்மையாகவே
Nandri arumaiyan thagavalukku
 




Eswari kasirajan

முதலமைச்சர்
Joined
Apr 14, 2018
Messages
10,671
Reaction score
27,027
Location
Tamilnadu
Where it is available Pl give a address
யாகம் செய்கின்ற ஐயர் or கோவில் அர்ச்சகர் அவங்க கிட்ட கேட்டாக் எங்கு கிடைக்கும் சொல்வாங்க.
மத்தப்படி வேற எங்கு கிடைக்கும் எனக்கு தெரிய வில்லை
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top