• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

தவமின்றி கிடைத்த வரமே-15

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Padmini Selvaraj

மண்டலாதிபதி
Author
Joined
Mar 31, 2021
Messages
220
Reaction score
1,159
Location
Bangalore
அத்தியாயம்-15

ன்னவள் தன்னிடம் வந்த தருணத்தை நினைத்து பூரித்து மெய் சிலிர்த்தாலும் அதற்காக அவள் அனுபவித்த வலி வேதனையை நினைக்கும் பொழுது அவனால் தன் மகிழ்ச்சியை முழுமையாக அனுபவிக்க முடியவில்லை....

அவளின் வேதனையான முகம் பார்த்து தன் மகிழ்சியை வெளிகாட்டாமல் உள்ளுக்குள் அழுத்தி கொண்டான்...

அப்பவும் அவனையும் மீறி சில நேரம் அவன் உதட்டில் புன்னகை வந்து விடும்.. உடனேயே கீழ குனிந்து தன்னை சாமாளித்து கொள்வான்....

என்னவள் எனக்கே எனக்காகி விட்டாள் என்றவன் உடனே


எனக்கே எனக்கா....மை ஜில்லு...

நீ எனக்கே எனக்கா....!!!


ஹைர ஹைர ஹைரப்பா ஹைர ஹைர ஹைரப்பா
பிப்டி கேஜி தாஜ் மஹால் எனக்கே எனக்கா..!!! .
பைக்கில் வந்த நந்தவனம் எனக்கே எனக்கா... !!!
பக்கெட் சைசில் வெண்ணிலவு எனக்கே எனக்கா...!!!
முத்தமழையில் நனஞ்சுக்கலாமா...!! கூந்தல் கொண்டு துவட்டிக்கலாமா..!!
உன்னை எடுத்து உடுத்திக்கலாமா...!! உதட்டின் மேலே படுத்துக்கலாமா..!!

பட்டுப் பூவே !!! குட்டித் தீவே !!! விரல் இடைதொட வாரம் கொடம்மா...!!!

என்று உல்லாசமாக பாடினான்...

பாடி முடித்து சிறு பையனாக மனதினில் ஆர்பரித்தவன் மனம் மீண்டும் அன்றைய நிகழ்வுகளை, தன் ஜில்லு தனக்கு சொந்தமான அந்த இனிய தருணத்தை மனதினில் ஓட்டி பார்த்தான் வசீகரன்.....

திருமணத்திற்கு இன்னும் இரண்டு நாட்களே இருக்க, பனிமலர் வீட்டில் இன்று பந்தக்கால் நடும் விழா...நாளை நலுங்கு வைக்கும் விழா என்று ஏற்பாடு செய்திருந்தனர்

அந்த வீட்டில் அப்பொழுதே கல்யாண கலை வந்திருந்தது...

அதிகாலையிலயே மலரின் அன்னை ஜோதியும் அவள் தந்தை சிவசங்கரனும் எழுந்து பரபரப்பாக இங்கும் அங்கும் ஓடி கொண்டிருந்தனர்...

அவள் தம்பி அவன் காலேஜ் ல் கேம்பஸ் செலக்சனுக்காக தேர்வுகள் இருப்பதால் நாளை இரவு வருவதாக சொல்லி இருந்தான்...அதனால் சிவசங்கரனே தன் நண்பன் சோமுவிடம் இணைந்து கல்யாண வேலையை கவனித்து கொண்டிருந்தார்....

அவர் முகத்தில் அப்படி ஒரு பூரிப்பு.. இத்தனை நாள் திருமணம் தள்ளிப் போய் இப்பதான் தன் மகளுக்கு திருமணம் நடக்க கோகிறது...அதுவும் தனக்கு கிடைக்காத கவர்ன்மென்ட் ஜாப் தன் மாப்பிள்ளைக்கு இருக்கே.... என் பொண்ணு சந்தோசமா இருப்பா... “ என்ற பூரிப்புடன் இங்கும் அங்கும் ஓடி கொண்டிருந்தார்....

அதே போல ஜோதியும் வீட்டில் இதுதான் முதல் கல்யாணம்.. அதனால் பெரியவர்கள் இல்லாத வீட்டில் எதை எப்படி செய்வது என்று தவிப்புடன் பரபரப்புடன் வளைய வந்தார்....

அவர்கள் இருவரும் பரபரப்பாக இருக்க, அந்த விழாவின் நாயகியோ தன் அறையில் இன்னும் இழுத்து போர்த்தி உறங்கி கொண்டிருந்தாள்....

மணி 6.30 ஆகியும் அவள் எழுந்து வராததால் அவள் அறைக்குள் வந்தார் ஜோதி... அவள் இன்னும் இழுத்து போர்த்தி உறங்கி கொண்டிப்பதை கண்டு கடுப்பானவர்,

“ஏய்... மலர்.. எழுந்திருடி.... மணி ஆகுது பார்.. சொந்தக்காரங்க எல்லாம் வர ஆரம்பிச்சிடுவாங்க.. நீ இன்னும் இப்படி இழுத்து போர்த்தி தூங்கி கிட்டிருக்க.. சீக்கிரம் எழுந்து போய் குளிச்சிட்டு வா... “ என்று கத்தினார்...

அவளோ அதை காதில் வாங்காமல் மீண்டும் புரண்டு படுத்தாள்...

“ஏய்.. எழுந்திருடி.... ஒரு மனுசி தொண்டை தண்ணி வறண்டு போக கத்திகிட்டு இருக்கேன்.. நீ பாட்டுக்கு எருமை மாட்டுல மழை பேய்ஞ்ச மாதிரி அப்படியே கிடக்கற?? “ என்று அவள் முதுகில் ஓங்கி ஒரு அடி வைத்தார்....

“ஆ.... “ என்று அலறியவள்

“என்ன ஜோ... உன் புருசன் மேல இருக்கிற ஆத்திரத்தை யெல்லாம் என் கிட்ட காட்டறியே.. அவர அடிக்க முடியாத பாட்டுக்கு என்னை அடிக்கறியே.. இதெல்லாம் நியாயமா?? “ என்றாள் முகத்தை சுழித்து....

“என் புருசனை நான் ஏன் அடிக்க போறனாம்... என் கண்ணு இல்ல இல்ல என் மனசை பார்த்தே நான் நினைக்கிறத செஞ்சுடுவார்... அவர் பெத்த வாரிசு உன்னை தான் டி என்னால அடக்க முடியலை.. “ என்றார் சிரித்து கொண்டே .....

“ஹீ ஹீ ஹீ... உன் புருசனை பத்தி சொன்ன உடனே தானா உன முகத்துல 1000 வாட்ஸ் பல்ப் எரியுதே... சூப்பர் ஜோ...

நம்ம சூர்யா ஜோ வை விட உங்க பேர் ( pair) தான் செம ஹிட்...என்ன ஒரு ரொமான்ஸ் ...!!! மனசை பார்த்தே எல்லாம் செய்வாராம்.. வர்றே வா...!! “ என்று கண் சிமிட்டி சிரித்தாள் மலர் இன்னும் போர்வையை விலக்காமல்....

“போதும் டி....உன்கிட்ட பேசி என்னால ஜெயிக்க முடியாது... நீ பேச்சை மாத்தாத.. இப்ப போய் எழுந்து குளிக்க போறீயா இல்லையா?? “ என்றார் சீரியஸ் மோட் ல் தன்னை வலு கட்டாயமாக மாற்றி கொண்டு...

“ப்ளீஸ்.. ஜோ... நீயும் உன் புருசனும் நான் நல்லா இருக்கணும்.... சுகமா இருக்கணும் னு தான எனக்கு இந்த கல்யாணத்தை பண்ணி வைக்கிறீங்க..

அந்த கல்யாண சுகத்தை விட இப்படி காலங்காத்தால அதுவும் அதிகாலை பனி குளிருல இப்படி இழுத்து போர்த்தி தூங்கினா எவ்வளவு சுகமா இருக்கும் தெரியுமா....!!.

ப்ளீஸ்.. ஒரு அஞ்சே அஞ்சே நிமிசம் மட்டும் அந்த சுகத்தை அனுபவிச்சிட்டு வந்திடறேன்... “ என்று கொஞ்சினால் தன் உதட்டை குவித்து சிறு பிள்ளையாக....

அதை கண்டு ஜோதிக்கும் சிரிப்பு வந்தாலும் அதை அடக்கி கொண்டவர் கண்டிக்கும் அன்னையாக

“ஏன் டி... கொஞ்சமாவது கல்யாண பொண்ணு மாதிரியா இருக்க?? நாளை ஒரு நாள் தான்... அடுத்த நாள் இருந்து அடுத்த வீட்டுக்கு போகப்போற..

அங்க போய் இப்படி இழுத்து போர்த்தி தூங்கினா உன் மாமியார் விளக்குமாத்தாலயே அடிக்க போறாங்க பார்.... பத்தாதுக்கு என்ன பொண்ணை வளர்த்தி வச்சிருக்காங்கனு எனக்கு சேர்த்து பாட்டு விழும்... “ என்றார் அவளை முறைத்தவாறு.....

“ஹீ ஹீ ஹீ.. அதனாலதான் ஜோ.. இன்னைக்கு கிடைக்கிற இந்த 5 நிமிச தூக்கத்தை என்ஜாய் பண்ணிக்கணும்.... நாளைக்கு வரப் போறதை நாளைக்கு பார்த்துக்கலாம்....

ப்ளீஸ்..ப்ளீஸ் என் செல்ல அம்மா இல்லை.. என் தங்க அம்மா இல்லை... இன்னும் இரண்டே நாள் ல உன்னை விட்டு போகப் போறேன் இல்ல.. அதனால் கொஞ்ச்ம கருணை காட்டி இன்னும் ஒரு 5 நிமிசம் என்னை தூங்க விடேன்... “ என்று கெஞ்சி கொஞ்சினாள் மலர்...

அதில் இலகியவர்,

“சரி டி... ஒன்லீ 5 மினிட்ஸ் தான்.. அதுக்கு மேல ஒரு நொடி கூட கிடையாது... “ என்று விரல் நீட்டி எச்சரித்து அவள் அறைகதவை சாத்திவிட்டு வெளியேறி சென்றார்...

மலர் ம் அப்பாடா என்று நிம்மதி மூச்சு விட்டு மீண்டும் தன் தூக்கத்தை தொடர்ந்தாள்....

அடுத்த 5 நிமிடத்தில் அலார்ம் வைத்த மாதிரி மீண்டும் அறைக்குள் வந்தார் ஜோதி.....

“மலர்.... டைம் ஓவர்.... “ என்றார் கறார் குரலில்...

அவள் மீண்டும்

“மா .. இன்னும் ஒரு 5 நிமி...” என்று முடிக்கு முன்னே

“ம்ஹூம்ம் நீ அடங்க மாட்ட.. இரு.. சொல்ற இடத்துல சொல்றேன்.. அப்பதான் நீ எழுந்திருப்ப... “ என்று வெளியேற முயல, அவர் அடுத்து எங்க போய் நிப்பார் என்று நினைவு வரவும் அடுத்த நொடி வாரி சுருட்டி எழுந்தாள் மலர்....

அதை கண்டு சிரித்தவர்,

“ஹ்ம்ம்ம் அது... உன் அப்பா னா அந்த பயம் இருக்கில்லை... நான் இவ்வளவு நேரம் தொண்டை தண்ணி வறண்டு போக கத்திகிட்டிருக்கேன்.. கண்டுக்காம இருந்தவ பார் இப்ப எப்படி பதறி அடிச்சு எழுந்திருக்கிறத .. “ என்று அவள் காதை பிடித்து திருகினார் ஜோதி....

“ஹீ ஹீ ஹீ ... பயம் எல்லாம் இல்ல ஜோ.. ஒரு மரியாதை..... ஸ்கூல் ல வாத்தியார் வர்ரார் ன உடனே எங்க இருந்தாலும் ஓடி வந்து சீட்ல உட்கார்ந்து கிட்டு அவர் வந்ததும் எழுந்து சல்யூட் வச்சு வச்சு வச்சு அதே பழக்கம் ஆய்டுச்சு....

வீட்லயும் வாத்தியார் வர்ரார் னா உடனே எழுந்து நின்னுக்கறேன்... மத்தபடி எனக்கு ஒன்னும் உன் புருசனை பார்த்து பயம் இல்லை... “ என்று அசட்டு சிரிப்பை சிரித்தாள்....

“ஹ்ம்ம் நம்பிட்டேன்.. சரி சரி.. நீ போய் சீக்கிரம் தலைக்கு குளிச்சிட்டு இந்த புது புடவையை கட்டிகிட்டு வா... எல்லாரும் வந்திடுவாங்க... “ என்று மீண்டும் ஒருமுறை அவளுக்கு ஞாபகம் படுத்தி விட்டு சென்றார்....

மலரும் வேற வழியில்லாமல் குளியலறைக்குள் சென்று குளித்து முடித்து தன் அன்னை எடுத்து வைத்திருந்த புடவையை கட்டி கொண்டு வெளியில் வந்தாள்....

அதன் பிறகு எல்லா வேலைகளும் வேகமாக நகர, வந்திருந்த சொந்தக்காரர்கள் மலருக்கு தலை பிண்ணி தலை நிறைய பூ வைத்து அவளுக்கு திருஷ்டி கழித்தனர்....

காலையில் பந்தக்கால் நட்டு முடித்ததும் அனைவரும் சாப்பிட்டு கொண்டிக்க, அவள் தோழி கயல் வந்துவிட்டாள்...

அவளை கண்டதும் மலர் கட்டி அணைத்து கொண்டவள் பின் அவளை தன் அறைக்கு அழைத்து சென்றுவிட்டாள்..

மலர் அவள் ப்ராஜெக்ட் ல் பிசியாக இருந்ததால் கடந்த ஒரு வாரமாகவே கயல் இடம் பேசவில்லை.. அந்த ஒருவாரம் பேசாமல் விட்டிருந்த தங்கள் கதையை பேசி முடிக்க, ஜோதி வந்து இருவரையும் மெகந்தி வைக்க என்று வெளியில் வர சொல்லி அழைத்தார்.......

வடக்கில் திருமண விழாக்களில் ஒன்றாக இருக்கும் மெகந்தி பங்சன் இப்பொழுது தெற்கேயும் பரவி விட, எல்லா திருமணங்களில் இந்த கொண்டாட்டமும் சேர்ந்து கொண்டது....

அங்கு இருக்கிற மாதிரி பெரிதாக கொண்டாட விட்டாலும் நம்ம பக்கமும் அவர் அவருக்கு தகுந்த மாதிரி மாற்றி கொண்டனர்....

அங்கு வந்திருந்த குட்டீஸ் களுக்கு மலரும் கயலும் மெகந்தி வைத்து விட, அந்த குழந்தைகளின் முகத்தில் அப்படி ஒரு மகிழ்ச்சி...

பின் கயல் மலருக்கு வைத்து விட்டாள்..

கயல் இந்த மாதிரி மருதாணி வைப்பதில் எக்ஸ்பர்ட் என்பதால் விரைவிலயே அழகிய டிசைனை ஒரு கையில் வைத்து முடித்து அடுத்த கையில் வைத்து கொண்டிருந்தாள்...

ஜோதியும் அந்த டிசைனை பார்த்து கயலை பாராட்டி பின் மற்ற வேலைகளை கவனிக்க சென்றார்..

மற்ற கையிலும் முக்கால் வாசி வேலை முடிந்திருக்க, அந்த நேரம் மலரின் அலைபேசி ஒலித்தது..

கயல் சென்று அவள் அலைபேசியை எடுத்து வந்து கொடுக்க, அதில் திரையில் தெரிந்த ஹிட்லர்.. என்ற பெயரை கண்டதும்

“ஐயோ... இவர் எதுக்கு இப்ப கால் பண்றார்...?? “ என்று அந்த காலை அட்டென்ட் பண்ணாமல் விட்டாள்... ஆனால் மீண்டும் அலறவும் வேறு வழியில்லாமல் அதை ஏற்று காதில் வைக்க

“ஹலோ... மலர்...ஆபிஸ்க்கு உடனே கிளம்பி வா... ஒரு அர்ஜென்ட் இஸ்யூ...” என்றான் அவள் மேனேஜர் பாஸ்கர்.....

அதை கேட்டு கடுப்பானவள் அதுவும் அவன் அதிகாரமாக சொல்லவும் இன்னும் கடுப்பானவள்

“ஹலோ... பாஸ்... எங்க வீட்ல பங்சன் இன்னைக்கு...” என்றாள் முறைத்தவாறு

“ஆங்.. என்ன பங்சன்?? “

“ஹ்ம்ம்... நாசாமா போச்சு... எனக்கு நாளன்னைக்கு கல்யாணம்..னு உங்களை எல்லாம் அழைத்து பத்திரிக்கை வச்சேனே... அதுக்குள்ள மறந்துட்டீங்களா?? வீட்ல பங்சன் பாஸ் ... அதனால நான் பிசி... என்னால வரமுடியாது....” என்றாள் அவளும் அதிகாரமாக ...

“ஹீ ஹீ ஹீ சாரி மலர்... ஆபிஸ் டென்சன் ல உனக்கு கல்யாணம் ங்கிறதே மறந்து போச்சு...

சரி... நாளன்னைக்கு தான கல்யாணம்.. அவனவன் கல்யாணத்தன்னைக்கே கூட இஸ்யூ வந்திருச்சுனா அதை பிக்ஸ் பண்ணிட்டு போய் தான் தாலி கட்டறான்.. உனக்கு இன்னும் கல்யாணத்துக்கு இரண்டு நாள் இருக்கு மா... அதனால உடனே வா... “ என்றான் நக்கலாக சிர்த்தவாறு...

அதில் இன்னும் கடுப்பானவள்

“ஹலோ பாஸ்... நீங்க கூப்பிட நேரத்துக்கெல்லாம் நான் வர முடியாது.. நான் இப்ப லீவ் ல இருக்கேன்.. அதோடு ஏற்கனவே பேப்பர் போட்டுட்டேன்...நீங்க ஒன்னும் என்னை அதிகாரம் பண்ண முடியாது.. " என்றாள் மிடுக்காக.....

அவளை தன் அதிகாரத்தால் வழிக்கு கொண்டு வர முடியாது என்று தெரிந்து கொண்ட பாஸ்கர் தன் குரலை மாற்றி தாழ்த்தி கொண்டு

"தெரியும் மலர்... ஆனால் இது கிரிட்டிகலான புரடக்சன் இஸ்யூ...இன்னைக்கு deploy பண்ணின கோடால(code) மொத்த அப்ளிகேசனும் அடி வாங்குது....

இவனுங்களும் நைட் ல இருந்து உருட்டிகிட்டிருக்கானுங்க.. ஒன்னும் கண்டு பிடிக்க முடியலை... மீறி திட்டினா, இது உன்னோட கோட் ங்கிறதால உனக்குத்தான் தெரியும் னு கைய விரிச்சிட்டானுங்க...

அதனால ப்ளீஸ்.. கொஞ்சம் வந்து இத பிக்ஸ் பண்ணிட்டு போய்டேன்... " என்றான் கெஞ்சலாக...

"பாஸ்.. அது என் கோட் ஆ இருந்தாலும் நான் இரண்டு நாள் புல்லா உட்கார்ந்து லைன் பை லைன் ஆ டீம்க்கு KT (Knowledge Transfer) கொடுத்துட்டு தான் வந்திருக்கேன்...

எல்லாருக்குமே அந்த கோட் நல்லா தெரியும்.. அப்புறம் என்ன?? அதுவும் அந்த விக்கி அத்தனை சந்தேகம் கேட்டான் என்கிட்ட.. அவனுக்கு எல்லாம் பக்கா வா தெரியும் பாஸ் அவனை புடிங்க...அவன் உடனே பிக்ஸ் பண்ணிடுவான்... " என்றாள்...

"கிழிச்சான்... வாயில நல்லா வருது... அவன பத்தி நீ பேசாத..அவன் தான் நைட் ல இருந்து சிஸ்டத்திலயே உட்கார்ந்திருக்கான்...

வேளா வேளைக்கு பீட்சா, பர்கர் னு என் காசுல வாங்கி மொக்கிட்டு இதோ கண்டு புடிச்சிட்டேன் னு சொல்லி சொல்லி பாதி நேரத்தை ஓட்டிட்டான்.. இன்னும் ஒன்னத்தையும் கண்டு புடிக்கலை....

அவனை நம்பி புரயோஜனமில்லை மலர்... இப்ப கோட் Rollback ம் பண்ணவும் முடியாது.. உனக்கே தெரியும்... இன்னைக்கு லைவ் போறது கிரிட்டிகள் ஆன feature. கிளைண்ட் கிட்ட டெலிவரி பண்றோம்னு கமிட் பண்ணியாச்சு...

அதனால US ல இருக்கிறவனுங்க எழுந்திருக்கறதுக்கு முன்னாடி இந்த அப்ளிகேசனை எழுப்பி நிக்க வைக்கணும்.. உன்னாலதான் முடியும் மலர்.. கொஞ்சம் சீக்கிரம் வா... “ என்றான் காலில் விழாத குறையாக.....

அதை கண்டு கொஞ்சம் இலகியவள் அடுத்து என்ன செய்ய என்று யோசித்தாள்..

அவளுக்கும் தெரியும்.. அப்ளிகேசன் டவுன் ஆகி இருந்தால் அந்த க்ளையன்ட்க்கு எவ்வளவு நஷ்டம்.. அதோடு அவள் ப்ராஜெக்ட் டீம்க்கும் பயங்கர escalation ஆகும்...

என்னதான் பேப்பர் போட்டாலும் எப்படியோ போங்க என்று அவளால் விட முடியவில்லை.... என்ன செய்வது என்று அவசரமாக யோசித்தவள்

“பாஸ்.... கையில மருதாணி வச்சுகிட்டிருக்கேன்..பாதியில இருக்கு.. அதைவிட வீட்ல விட மாட்டாங்க.. வேற எதுவும் ஆப்சன் இருந்தா பாருங்களேன்.. “ என்றாள் இறங்கிய குரலில்....

“மருதாணி தான.. நான் கேப் புக் பண்ணிடறேன்... நீ கார் ல வர்றப்பயே வச்சுகிட்டே வந்திடு... அதோடு உன் வீட்ல சொல்லி சமாளிக்கிறது எல்லாம் உனக்கு ஜுஜுபினு எனக்கு தெரியும் மலர்..

எத்தனை தரம் உங்க வீட்ல அல்வா கொடுத்திட்டு டீம் அவுட்டிங் க்கு வந்திருக்க.. அதனால ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி சமாளிச்சிட்டு சீக்கிரம் ஓடி வா... வீ ஆர் ரன்னிங் அவுட் ஆப் டைம்.... சீக்கிரம் வநதிடு மலர்... உன்னை எதிர்பார்த்துகிட்டு இருப்பேன்.. பை... “ என்றவாறு போனை வைத்தான் பாஸ்கர்

“அடப்பாவி.... இதுக்குத்தான் நம்ம ரகசியத்தை எல்லாம் வெளில சொல்லக் கூடாதுங்கிறது... பார்.. நான் எப்பவோ பண்ணின தில்லு முல்லு வேலையை காமிச்சு இப்பயும் அதே மாதிரி பண்ணு னு சொல்றான் இந்த ஹிட்லர்.... ஹ்ம்ம்ம் இப்ப ..என்ன செய்ய?? “ என்று அவசரமாக யோசித்தாள் மலர்....

அதுவரை மலர் பேசுவதையே கேட்டு கொண்டிருந்த கயல் என்னாச்சு என்று கேட்க, மலர் போனில் பேசியதை சொன்னாள்...

அதை கேட்டு கலவரமான கயல்

“அடியே.. பந்தக் கால் நட்ட பிறகு கல்யாண பொண்ணை வெளில போகக் கூடாதுனு சொல்வாங்க..உங்கப்பா வேற ஸ்ட்ரிக் வாத்தியார்...எதுக்கு தேவையில்லாமல் பிரச்சனையில் மாட்டிக்காத... உன் போனை ஸ்விட்ச் ஆப் பண்ணி வச்சுட்டு கம்முனு இருந்துக்க... “ என்றாள்

“ம்ச்.. அப்படி விட முடியாது கயல்.. பாவம் டீம் ல இருக்கிறவங்க.. இவ்வளவு நேரம் ட்ரை பண்ணியும் கண்டுபிடிக்க முடியலைனா எதுவும் பெரிய இஸ்யூ ஆ தான் இருக்கும்..

நான் போனாதான் முடியும்... ஆனால் இப்ப இங்க இருந்து எப்படி எஸ் ஆவது?? “ என்று சுற்றிலும் கண்களை சுழற்றி தன் தந்தையை தேட அவர் எங்கும் கண்ணில் படவில்லை....

அப்பாடா என்று நிம்மதி மூச்சு விட்டவள் கயலை கையை பிடித்து இழுத்து கொண்டு சமையல் அறையில் பிசியாக இருந்த தன் அனனையிடம் சென்றவள்

“மா... நாளைக்கு அலங்காரத்துக்கு கொஞ்சம் திங்க்ஸ் எல்லாம் வாங்கணும்.. கயல் இப்பதான் ஞாபகம் படுத்தினா.. நானும் அவளும் போய் வாங்கிட்டு வந்திடறோம்... “ என்றாள் பாவமான முகத்துடன்...

அதை கண்டு திடுக்கிட்ட கயல்

“அடிப்பாவி... என்னை எதுக்கு இதுல கோத்து விடற?? “ என்று மெதுவாக முனக, மலரோ கண் சிமிட்டி சிரித்தாள்......

தன் மகள் சொன்னதை கேட்டு அவளை எரித்து விட்டும் பார்வை பார்த்தார் ஜோதி..

“மலர்... இதையெல்லாம் நேற்றே வாங்க சொல்லி இருந்தேன் இல்ல.. இப்படி எதுக்கும் நீ வெளில போகக் கூடாதுனு...அதோடு சொந்தக்காரங்க வந்து கிட்டிருக்காங்க.... நீ இப்ப போய் வெளில சுத்திகிட்டிருந்தா நல்லா இருக்காது.... போகவும் கூடாது... ” என்றார் அவளை முறைத்தவாறு.....

“ஹீ ஹீ ஹீ எல்லாமே வாங்கிட்டோம் மா... கொஞ்சம் மட்டும் மறந்திடுச்சு.. போன உடனே வந்திடறேன்.... ப்ளீஸ் மா... அப்பா வர்றதுக்குள்ள வந்திடுவேன்..” என்று கெஞ்சி கொஞ்சி தாயிடம் சம்மதம் வாங்க, அப்பொழுது வாயிலில் கார் வந்து நின்றது....

அங்கு இருந்த அனைவரும் வேற ஏதோ மும்முரமாக பேசி கொண்டிருக்க, யாருக்கும் தெரியாமல் கயலை இழுத்து கொண்டு காருக்கு ஓடினாள் மலர்...

கார் கதவை திறந்து இருவரும் பின் இருக்கையில் அமர்ந்ததும்

“ஏன் டீ. இது உனக்கே நியாயமா இருக்கா?? .... என்னமோ கல்யாணத்துல இருந்து தப்பிச்சு ஓடற மாதிரி இப்படி தெரியாம மறஞ்சு ஓடற இந்த வேலை தேவையா உனக்கு.. பத்தாதற்கு என்னையும் வேற உன் திருட்டு தனத்துல கூட்டு சேர்த்து கிட்ட... “ என்று முறைத்தாள் கயல்...

“ஹீ ஹீ ஹீ நோ டென்ஸன் கயல் டார்லிங்... நான் மாட்டுனா உன்னை கை காட்டி விடத்தான்... “ என்று கண் சிமிட்டி சிரித்தாள் மலர்..

கார் அதற்குள் கிளம்பி இருக்க, மலர் மீதி இருந்த டிசைனையும் முடிக்க சொல்லி கயல் இடம் கை நீட்டினாள்...

கயல் அவளை முறைத்து கொண்டே அடுத்த கையில் மீதி இருந்த டிசைனையும் வைத்து விட்டாள்..

முழுவதும் முடிந்ததும் இரண்டு கைகளையும் சேர்த்து வைத்து பார்த்தவள்

“வாவ்... சூப்பரா இருக்கு கயல்.... நான் கூட உன்னை என்னமோனு நினைச்சேன்.. பிண்ணிட்ட... சரி இரு.. இத போட்டோ எடுத்துக்கலாம்..” என்றவள் தன் அலைபேசியை எடுத்து கயல் இடம் கொடுத்து தன் இரண்டு கைகளையும் சேர்த்து வைத்து போட்டோ எடுத்து கொண்டாள்...

பின் அதை மறு கையால் வாங்கி அந்த போட்டொவில் வந்திருந்த டிசைனை பார்த்தவள்

“ஹ்ம்ம் சூப்பரா இருக்கு.. இதை யாருக்காவது அனுப்பி வைத்து லைக் இல்லனா கமென்ட் கேட்டே ஆகணுமே.... வழக்கமா கயல்தான் மாட்டுவா. அவளும் இன்னைக்கு இங்க இருக்கா.. யார்கிட்ட அனுப்பலாம்..” என்று தன் Contact லிஸ்ட் ஐ scroll பண்ணியபடியே வந்தவள் அதில் Mechanic என்ற பெயர் வரவும் கண்கள் பளிச்சிட்டன...

உதட்டில் தானாக புன்னகை மலர, அவள் கை டிசைனை அந்த எண்ணிற்கு அனுப்பி வைத்தாள்...

அப்பொழுது மீண்டும் பாஸ்கரிடம் இருந்து கால் வர, ஆபிஸ் வந்து கொண்டிருப்பதாக சொன்னவள் போனை விக்கியிடம் கொடுக்க சொல்லி என்ன இஸ்யூ என்று விவரம் கேட்டாள்..

அவனும் விளக்க, மீண்டும் சில instrcutions கொடுத்து அதன் படி ட்ரை பண்ண சொன்னாள்...

ஆனால் அதுவும் வொர்க் அவுட் ஆகலை என்றான்.. பின் என்னவாக இருக்கும் என்று யோசித்து கொண்டெ வர, கார் அவள் அலுவலகத்தை அடைந்தது...

அலுவலகத்தின் வரவேற்பறையில் கயலை அமர வைத்து தான் கொண்டு வந்திருந்த ஐடி கார்டை கழுத்தில் மாட்டி கொண்டு தன் ப்ராஜெக்ட் இருக்கும் ப்ளோருக்கு சென்றாள்..

லிப்டில் இருந்தவர்கள் அவளையே ஒரு மாதிரியாக பார்க்க அவள் கண்டு கொள்ளவில்லை...

லிப்ட் இல் இருந்து வெளி வந்தவள் நேராக அவள் ப்ராஜெக்ட் இருக்கும் அந்த பகுதிக்கு சென்றாள்... வரும் வழியில் தெரிந்தவர்கள் எல்லாம் இவளையே வித்தியாசமாக பார்க்க

“ஏன் எல்லாரும் இப்படி பட்டிகாட்டான் முட்டாய் கடையை பார்க்கிற மாதிரி வாயை பொழந்து பார்க்கறானுங்க?? “ என்று யோசித்தவள் குனிந்து தன்னை பார்க்க அதிர்ந்து போனாள்...

வரும் அவசரத்துல காலையில் கட்டியிருந்த அந்த பட்டு புடவையும் தலை நிறைய வைத்திருந்த மல்லிகை பூவும் கழுத்தில் அவள் வேண்டாம் என்று மறுத்தும் ஜோ கட்டாயபடுத்தி போட்டு விட்ட நெக்லசும் காசு மாலையும் ஜொலித்தது....

இரண்டு கையிலும் மருதாணி வைத்து கொண்டு கழுத்தில் ஐடி கார்டை மாட்டி கொண்டு டக் டக் என்று அவள் நடந்து வர, அவளின் கல்யாண பெண் கோலம் கண்டுதான் எல்லாரும் வித்தியாசமாக பார்த்தார்க்ள என்று புரிந்தது...

“சே.. இப்படி அசிங்க பட்டுட்டியே மலர்... அவசரத்துல இந்த வேசத்தையெல்லாம் கலைக்காம வந்திட்டியே...ஹ்ம்ம் சரி சமாளிப்போம்.. “என்றவாறு அவள் ப்ராஜெக்ட் இருந்த அறைக்கு வெளியில் அவள் ஐடி கார்டை ஸ்வைப் பண்ணி விட்டு உள்ளே சென்றாள்...
 




Padmini Selvaraj

மண்டலாதிபதி
Author
Joined
Mar 31, 2021
Messages
220
Reaction score
1,159
Location
Bangalore
து ஒரு முக்கியமான கிளைன்ட் ன் Banking ப்ராஜெக்ட்.. அந்த ப்ராஜெக்ட் க்கு என்று தனி பகுதியும் அந்த ப்ராஜெக்ட் ல் வேலை செய்பவர்க்ள் மட்டுமே அந்த பகுதிக்குள் செல்ல முடியும்..

அதோடு அவர்களுடைய source code ஐ அந்த க்ளைன்ட் உடைய server ல் மட்டுமே வைத்திருந்தனர்... வெளியில் அதை எடுத்து செல்லவும் காபி பண்ணவும் முடியாது.. அதனாலயே அவர்கள் வீட்டில் இருந்து வேலை செய்யும்(work from home) வசதியும் இல்லை இந்த ப்ராஜெக்ட் ல்..

எதுவானாலு அலுவலகம் வந்துதான் செய்ய வேண்டும்... அது பெரிய இலாபம் ஈட்டி தரும் ப்ராஜெக்ட் என்பதால் க்ளைன்ட் கேட்ட படியே security system ஐ ஏற்பாடு செய்திருந்தனர்...

அதனால் இன்று மலர் அலுவலகம் வர வேண்டியதாகிவிட்டது....

கிட்டதட்ட பாதி மணப்பெண் கோலத்தில் வந்தவளை கண்டதும் அவள் டீமில் இருந்த அனைவரும் தங்களையும் மறந்து சிரித்து விட்டனர்....

அவர்களை கண்டு முறைத்தவள் நேராக தன் டெஸ்க்கிற்கு சென்று அவள் கம்ப்யூட்டரை ஆன் பண்ணி ரிமோட் டெஸ்க்டாப் வழியாக கிளைன்ட் ன் செர்வரை கனெக்ட் பண்ணினாள்...

அதற்குள் அனைவரும் அவளை சூழ்ந்து கொள்ள,

“ஹலோ.... நான் என்ன ஷோ வா காமிக்கிறேன்... கொஞ்சம் என்னை தனியா விடுங்க.. விக்கி... நீ மட்டும் இங்க இரு.. இதுவரைக்கும் என்ன Debug பண்ணினனு எக்ஸ்ப்ளைன் பண்ணு... “ என்றாள் அனவரையும் முறைத்தவாறு..

மற்றவர்களும் விலகி தங்கள் இடத்திற்கு சென்றனர்....

அவள் கையில் வைத்திருந்த மருதாணி காஞ்சிருக்க, அதை கழுவ கூட நேரம் இல்லாமல் அந்த கை யிலயே கீபோர்டை எடுத்து தட்டி கொண்டிருந்தாள்....

மணப்பெண் அலங்காரத்தில் சின்சியராக வேலை பார்த்தவளை அவள் டீமில் இருந்த ஒருத்தன் போட்டோ எடுக்க, அதை கண்டவள் கடுப்பாகி அவனிடம் திரும்பி

“டேய்.... இந்த ரணகளத்திலும் உனக்கு குதூகலமா?? இப்படி ஒரு கெட்டப் ஓட நான் வேலை செய்யறதை போட்டோ எடுத்து அதை வாட்ஸ்அப்பில் போட்டு உலகம் பூரா சுத்த விடணுமா??.... கொன்னுடுவேன்.. ஒழுங்கா நீ எடுத்த போட்டோவை டெலிட் பண்ணு...

அவ அவ உயிரை கையில புடிச்சுகிட்டு எங்க வீட்ல இருந்து எஸ் ஆகி பாவம் பசங்களுக்கு ஹெல்ப் பண்ணலாம்னு வந்தா என்னைய வே போட்டோ எடுக்கறான் போட்டோ.. இந்த ஆர்வத்தை இஸ்யூ வை சால்வ் பண்றதுல காட்ட வேண்டியதுதான... “ என்று படபடவென்று பொரிந்தாள் அவனை முறைத்தவாறு....

“ஹீ ஹீ ஹீ ... சாரி ஸ்நோ... இந்த கெட்டப் ல நீ சூப்பரா இருந்தியா… அதான்..... இதோ இப்பயே டெலிட் பண்ணிடறேன்... நீ வேலையை பாரு மா..நோ டென்சன்... பீ கூல்...நம்ம டீம் ஓட எதிர்காலமே இப்ப உன் கையிலதான் இருக்கு.... “ என்று அசட்டு சிரிப்பை சிரித்தான்....

“ஹ்ம்ம்ம் அது... “ என்று கை நீட்டி மிரட்டியவள் அவள் அருகில் அமர்ந்து இருந்த விக்கியிடம் டீடெய்ல்ஸ் ஐ கேட்டு விட்டு மீண்டும் கண்ணுல விளக்கெண்ணை விட்டு தேடுற மாதிரி லைன் பை லைன் ஆக debug பண்ண அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் இஸ்யூ வை கண்டுபிடித்திருந்தாள்....

ஒரு variable name பயன்படுத்தியதில் டைபோ(Typo).. ஸ்பெல்லிங் தவறாக கொடுத்திருந்தான் விக்கி...

DecisionDate என்பதற்கு பதிலாக DesicionDate என்று தவறாக அடித்திருக்க, ஒரு சினாரியோ (scenario) க்கு மட்டும் அந்த அந்த variable பயன்படுத்தியிருக்க, கரெக்ட் ஆக அந்த சினாரியோதா ன் புரடக்சன் ல் அதிகம் பயனபடுத்துவதாக இருந்ததால் அடி வாங்கியது.....

அவள் இஸ்யூ வை கண்டுபிடித்ததை கண்டவுடன், விக்கி

“யெஸ்.... “ என்று தன் கையை பின்னால் மடக்கி குதித்தவன்

“பாஸ்... வி காட் தி இஸ்யூ...” என்று பாஸ்கரை பார்த்து கத்தினான்.. என்னவோ அவனே கண்டு பிடித்த மாதிரி பில்டப் காட்டி...

அதை கண்டு கடுப்பானவள்

“ஏன்டா பக்கி... நான் வந்த 5 நிமிசத்துலயே கண்டுபிடிச்சுட்டேனே... இத்தனை மணி நேரமா நீ என்னடா பண்ணுன?? “ என்றாள் அவனை முறைத்தவாறு..

“ஹீ ஹீ ஹீ.. இதெல்லாம் இந்த Snow கண்ணுக்கு மட்டும்தான் தெரியுமாம் Snow.. பார்.. நான் இதே லைன் ஐ ஒரு 100 தடவையாவது பார்த்தேன்.. ஆனால் எனக்கு சரியா ஸ்பெல்லிங் மிஸ்டேக் னு தெரியலை..

ஆனா நீ வந்த உடனே கண்டு புடிச்சிட்ட...தலைவா..... இல்ல தலைவி.... யூ ஆர் கிரேட்.... “ என்று நண்பன் படத்தில் வருவதை போல தன் கைகளை மார்புக்கு குறுக்காக மடக்கி அவள் முன்னால் தலை வணங்கி அசடு வழிந்தான் விக்கி...

“போதும் வழிஞ்சது... இஸ்யூ கண்டுபிடிக்கணும்னா நீ உன் நொல்ல கண்ணை இங்க வச்சு பார்த்திருக்கணும்.. பக்கத்து சீட் ஃபிரஸ்ஸரா வந்திருக்கிற அந்த புது பொண்ணு.. அவ பேர் என்ன... ?? “ என்று மலர் யோசிக்க

“நித்தி..... நித்தியா... “ என்று எடுத்து கொடுத்தவன் நாக்கை கடித்து கொண்டான் வெட்க பட்டு சிரித்தவாறு...

“ஆங்.. அந்த நித்தியாவையே சைட் அடிச்சுகிட்டு நானும் டீபக் பண்றேனு சோ காமிக்க கூடாது... “ என்று நக்கலாக சிரித்தாள் மலர்....

“ஹீ ஹீ ஹீ தெரிஞ்சுடுச்ச்ச்ச்ச்சா....?? “ என்றான் விக்கி காஞ்சனா ராகவன் ஸ்டைல் ல்...

“ஆமா.. இது பெரிய இமயமலை ரகசியம்.. நீதான் அந்த பொண்ணு வர்றப்ப எல்லாம் ஜொல்லு விட்டு பார்க்கறியே...அது இந்த உலகத்துக்கே தெரியும் டா பக்கி....

“சரி... நீ நல்லா போகஸ் பண்ணி டீபக் பண்ணி இருந்தால் ஈசியா கண்டு புடிச்சிருக்கலாம்.. இப்படி என்னை அலைய விட்டுட்டியேடா…. “ என்றாள் முறைத்தவாறு...

“ஹீ ஹீ ஹீ. சாரி snow...ஜஸ்ட் ஒரு இரண்டு எழுத்து மாறிப் போனதால இவ்வளவு பெரிய பிரச்சனை ஆய்டுச்சு பார்....” என்றான் அசடு வழிந்தவாறு....

“ஹ்ம்ம்ம்ம் நீ மாசா மாசம் வாங்கறயே 5 இலக்க சம்பளம்... அதுல முதல் டிஜிட் ல 5 க்கு பதிலா 1 போட்டு தப்பாய்டுச்சுனா விட்டுடுவியா....” என்றாள் சிரித்தவாறு...

“ஐயோ... அத நம்பிதான் மா என்னோட எல்லா EMI ம் ஓடிகிட்டிருக்கு... “ என்று சிரித்தான்... மலரும் இணைந்து சிரித்தவள்

“சரி... உன் இஸ்யூ வை நான் கண்டு புடிச்சிட்டேன் இல்ல.. எனக்கு என்ன தருவ?? “ என்றாள் புருவம் உயர்த்தி...

“வந்த 5 நிமிசத்துலயே இஸ்யூ வை கண்டுபிடிச்சு சரி செஞ்சு என்னை இந்த ஹிட்லர் கிட்ட இருந்து காப்பாற்றியதற்காக என்ன வேணும்னாலும் வாங்கி தரலாம் Snow.. உனக்கு என்ன வேணும் கேள்...

நீ அந்த காஷ்மீர் ஏ வேணும்னாலும் கேள் வாங்கி தர்ரேன்... இப்பதான் காஷ்மீர் நமக்கு சொந்தமாகிடுச்சே.. “ என்று சிரித்தான் விக்கி....

“கிழிச்ச... ஒரு 10 ரூபா போட்டு நம்ம கேன்டின் ல ஒரு சமோசா வாங்கி கொடுக்க யோசிக்கறவன் நீ எனக்கு காஷ்மீரை வாங்கி தர்ரியா?? போதும் டா நீ புளுகுனது.. “ என்று சிரித்தாள்..

அதற்குள் மற்றவர்கள் அவர்களிடம் வர

“பப்ளிக்..பப்ளிக்... என் இமேஜை இப்படி டேமேஜ் பண்ணாத மா... என் டார்லிங் வேற இங்க வந்து கிட்டிருக்கா.... “ என்றான் ரகசியமாக...

“அடப்பாவி.. அதுக்குள்ள டார்லிங் வரைக்கும் போய்ட்டியா.. நீ சரி வர மாட்ட.. இரு பாஸ்கிட்டயே போட்டு கொடுக்கறேன்..” என்றாள் குறும்பாக சிரித்தவாறு...

“ஐயயோ.. தெய்வமே.. அந்த ஆள் காதுக்கு மட்டும் இது போச்சு அப்புறம் என்னை தண்ணி இல்லாத காட்டுக்கு மாத்திற மாதிரி பொண்ணுங்க இல்லாத ப்ராஜெக்ட்க்கு தூக்கிடுவான் அந்த ஹிட்லர்...

பொண்ணுங்களே இல்லாமல் வறண்ட பாலைவனமா இருக்குனு தான் என் பழைய கம்பெனியில இருந்து ரிசைன் பண்ணிட்டு இங்க வந்தேன்...

HR கிட்ட நான் போட்ட முதல் கன்டிசனே பொண்ணுங்க இருக்கிற ப்ராஜெக்ட் ல தான் நான் வேலை செய்வேன் னு.... அந்த ப்யூட்டி குயின் ம் சிரிச்சுகேட்டே இந்த ப்ராஜெக்ட் ல போட்டுடுச்சு...

இப்பதான் என் மனசு குளுகுளுனு நம்ம காஷ்மீர் ஏ சென்னைக்கு வந்திட்ட மாதிரி இருக்கு...

அத மறுபடியும் கெடுத்துடாத.... “ என்று சொல்லி கலவரமானான் விக்கி...

அதை கேட்டு வாய் விட்டு சிரித்தாள் மலர்....

அதற்குள் மற்றவர்கள் அருகில் வந்திருக்க அவள் கண்டுபிடித்த இஸ்யூ வை விளக்கி, உடனே அதை டெஸ்ட் என்விரான்ட்மென்ட் ல் மூவ் பண்ணி டெஸ்ட் பண்ண சொன்னாள்...

அதை கண்டு பாஸ்கர் சந்தோசமாகி

“வெல் டன் மலர்....எக்சலன்ட் ஜாப்.. வந்த உடனேயே கண்டு புடிச்சிட்டியே...இந்த பக்கி கிட்ட தட்ட 12 மணி நேரமா தடவினான்... “ என்றவர் விக்கியை முறைத்தவாறு பார்க்க, அவனோ அதற்கெல்லாம் அசராமல் ஓர கண்ணால் நித்தியை சைட் அடித்து கொண்டிருந்தான்...

“ஒகே பாஸ்.. அப்ப நான் கிளம்பறேன்..வீட்ல தேடுவாங்க... “ என்று மலர் எழவும் விக்கி பதறி

“Snow… Snow… Snow… வந்தது வந்துட்ட. இன்னும் ஒரு 5 நிமிசம் வெயிட் பண்ணு மா.. இந்த கோட் ஐ புரடக்சன்ல போட்டு டெஸ்ட் பண்ணிட்டு போய்டலாம்...

இன்னும் வேற ஏதாவது பிரச்சனை வந்தால் அப்புறம் மறுபடியும் நம்ம பாஸ் உன்னைத் தான் டிஸ்டர்ப் பண்ணுவார்... “ என்றான் அவசரமாக....

அதை கேட்டு முறைத்தனர் பாஸ்கர் ம் மலரும்...

“ஆமாம் மலர்.. இவனை நம்ப முடியாது.. வேற எதாவது பிரச்சனை வந்தாலும் கையை பிசைவான்.. நீ இருந்தே முடிச்சுட்டு போய்டு.. “ என்க, மலர் பல்லை கடித்தாள் விக்கியை பார்த்து முறைத்தவாறு....

பின் வேகமாக அதை புரடக்சன்ல டெப்ளாய் பண்ணி டெஸ்ட் பண்ண, எல்லாம் நன்றாக வேலை செய்தது...

அனைவரும் கை தட்டி அவளை புகழ்ந்து பாராட்ட, பாஸ்கர் மீண்டும் ஒரு முறை அவளை அப்ரிசியேட் பண்ணினான்...

“பாஸ்.... காரியம் ஆன உடனே கழட்டி விட்டுடாதிங்க.. என்னை எப்படி கூட்டி வந்திங்களோ அப்படியே கொண்டு போய் விட சொல்லுங்க...

அப்புறம் உங்க பாராட்டை எல்லாம் வெறும் வாயால் சொன்னதோட நிறுத்திக்காம என் கல்யாணத்துக்கு வர்றப்ப பெரிய கிப்ட் ஆ வாங்கிட்டு வாங்க... சொல்லிட்டேன்.. " என்று சிரித்தாள்....

“கண்டிப்பா மலர்.. உனக்கு இல்லாததா... கலக்கிடறோம்... " என்றான் பாஸ்கர்...

"ஆமா Snow... உனக்கு என் சார்பா ஸ்பெஷல் கிப்ட்.. அந்த காஷ்மீர் உனக்குத்தான்... " என்று கண் சிமிட்டி சிரித்தான் விக்கி...

அவளும் அவனை குறும்பாக முறைத்து பின் வாய் விட்டு சிரித்தாள்....

பின் அவர்களிடம் விடை பெற்று வெளியில் வர,

"ஹ்ம்ம்ம் இப்படி சிரிச்சு எத்தனை நாளாச்சு.. !! இந்த கல்யாண வேலை ஆரம்பிச்சதுல இருந்தே சிரிக்கவே மறந்துட்டேனே... ஏன் கல்யாணம் என்றதும் எனக்குள்ளே எந்த ஒரு பீல் ம் வரலை.. மாறாக எதையோ இழக்கிற மாதிரி பீல் ஆகுது...

ஒரு வேளை அம்மா அப்பாவை விட்டு பிரியற பீல் ஆ ??.. இல்லையே... இது வேற மாதிரி இல்லை இருக்கு.. ஒரு மாதிரி மனசுக்குள்ள நிம்மதி இல்லாமல்..... இந்த கல்யாணமே பிடிக்காத மாதிரி இருக்கு .....

இப்படி மனசுக்கு பிடிக்காத இந்த கல்யாணம் தேவையா?? “ என்று யோசிக்க அடுத்த நொடி அவள் அலைபேசி அலறியது...

அதை எடுத்து காதில் வைத்தவள் அதில் சொன்ன செய்தியை கேட்டு அதிர்ந்தவள்

"அப்பா.........................." என்று தன்னையும் மீறி அலறினாள் பனிமலர்......
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top