• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

தவமின்றி கிடைத்த வரமே-22

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Padmini Selvaraj

மண்டலாதிபதி
Author
Joined
Mar 31, 2021
Messages
220
Reaction score
1,159
Location
Bangalore
அத்தியாயம்-22

ப்பொழுது இரவு உணவு நேரம் என்பதால் மற்ற மூவரும் உணவு மேசையில் இருந்தனர்...மீனாட்சி சமையல் அறையில் ஏதோ உருட்டி கொண்டிருந்தார்.... தன் மகன் வந்ததை கண்டதும்

"வசி கண்ணா.. சரியான நேரத்துக்கு வந்திட்ட.. சீக்கிரம் போய் ரெப்ரெஸ் ஆகிட்டு வா.. எல்லாரும் சேர்ந்து சாப்பிடலாம்.. " என்றார் மீனாட்சி மலர்ந்த புன்னகையுடன்..

வசியும் சிரித்து கொண்டே மாடிக்கு சென்று ரெப்ரெஸ் ஆகி கீழ வந்தான்...

தன் தங்கையுடன் வம்பு இழுத்து கொண்டே அமர்ந்தவன், மீனாட்சி சமையல் அறையில் இருந்து சமைத்த பாத்திரங்களை எல்லாம் கொண்டு வந்து வைத்தார்....

கடைசியாக கொண்டு வந்ததை மேஜையில் வைத்து விட்டு கொஞ்சம் மூச்சு வாங்க அமர்ந்து பின் நால்வருக்கும் தட்டை எடுத்து வைத்து உணவை பரிமாற, அவர் முகம் லேசாக களைத்திருக்க அதை கண்டவன்

"ஏம்மா... இன்னும் ஸ்ட்ரெயின் பண்ணிக்கறீங்க..?? அதான் மருமக வந்திட்டா இல்ல.. பேசாம அவள போய் கூட்டிகிட்டு வந்து உங்களுக்கு உதவ வச்சுக்கலாம் இல்ல.... " என்றான் வசி...

அதை கேட்டு மற்ற மூவரும் நமட்டு சிரிப்பை சிரித்து கொண்டனர் வசிக்கு தெரியாமல்....

"ஹீ ஹீ ஹீ அண்ணா.... ஆடு நனைகிறதேனு ஓநாய் அழுததாம்.... அந்த கதையா இல்ல இருக்கு நீ சொல்றது.. " என்று சிரித்தாள் வசுந்தரா....

“ஆங்.... அது என்ன கதை?? எனக்கு தெரியாதே .. " என்றான் வசியும் சிரித்தவாறு....

“ஹ்ம்ம்ம் சொல்றேன் கேளுங்க....

ஒரு ஊர்ல ஒரு ஆடும் ஓநாயும் இருந்ததாம்.. அந்த ஓநாய்க்கு அந்த ஆட்டு மேல கண்ணாம்... அதை எப்படியாவது அடித்து சாப்பிட சந்தர்ப்பம் பார்த்துகிட்டே இருந்துச்சாம்....

ஒருநாள் திடீர்னு மழை பேய்ஞ்சுதாம்.. ஓநாய் ஒரு புதர்க்குள் ஓடிப்போய் நின்னுகிச்சாம்.. ஆடு மட்டும் எங்கயும் போக வழி இல்லாமல் மழையிலயே நனைஞ்சு கிட்டு இருந்துச்ச்சாம்....

அதை கண்ட அந்த ஓநாய் ரொம்ப வருத்தபட்டு அழுதவாறு,

“ஆடே ஆடே ஏன் மழையில நனையற.... இந்த புதர்குள்ள வந்துடு.. "என்று அக்கறையாக பேசிச்சாம்...

உடனே அந்த ஆடும் அந்த ஓநாய் ன் தந்திரம் புரியாமல் அந்த புதர்க்குள்ள போச்சாம்.. உடனே அந்த ஓநாய் அந்த ஆட்டை புடிச்சு சாப்டுச்சாம்.... அப்புறம் கதை முடிஞ்சு போச்சாம்....” என்று கையை விரித்து நடித்து காட்டி சிரித்தாள் வசுந்தரா....

“அது மாதிரி அண்ணா... உனக்கு அண்ணியை பார்க்கணும், கூட்டி வந்து வச்சுக்கணும்னா நீ நேரடியாகவே சொல்ல வேண்டியது தான.. அதை விட்டு அம்மா களைப்பா இருக்காங்க.. அம்மாவுக்கு உதவி செய்யணும் னு ஏன் இப்படி சுத்தி வளைச்சு வர்ற?? " என்று கண் சிமிட்டி சிரித்தாள்...

அவள் சொன்ன கதை பொருத்தமாக இல்லை என்றாலும் அவள் கதை சொன்ன விதமும் அவள் முகத்தில் தெரிந்த அந்த மலர்ந்த சிரிப்பும் காண மற்ற மூவருக்கும் மகிழ்ச்சியாக இருந்தது....

வசியும் தன் செல்ல தங்கையின் சிரிப்பை ரசித்தவன் பின் அவள் தன்னை கண்டு கொண்டதை கண்டு லேசாக வெட்க பட்டு அசட்டு சிரிப்பை சிரித்தவன்

"வர வர உனக்கு வாய் ரொம்ப ஜாஸ்தியாயிடுச்சு டி.... " என்று அவள் காதை பிடித்து செல்லமாக திருகினான் வசி....

"ஹீ ஹீ ஹீ ஹலோ டாக்டர்... நானாவது பரவாயில்லை.. உங்க பொண்டாட்டி இருக்காங்களே... சரியான வாயாடி தெரியுமா?? கோவில்ல அம்மா கூட அரட்டை அடிக்க ஆரம்பிச்சாங்க னா , காது கொடுத்து கேட்க முடியாது.... படபட னு பொரிஞ்சு கிட்டே இருப்பாங்க....

பாவம் உங்க காதை.. நல்லா ஸ்ட்ராங் ஆ ரெடி பண்ணி வச்சுக்கங்க....

ஆனா என்ன கொடுமைனா வாயே திறக்காத உனக்கு போய் வாயே மூடாத பொண்டாட்டி கிடைச்சிருக்காங்களே... என்னே அந்த ஈசனின் சித்தம்...!! “ என்று மேல கையை காட்டி சிரித்தாள் வசு...

“ஏய் வசு.. சும்மா இரு... அண்ணிய பத்தி அப்படி எல்லாம் பேசக்கூடாது..” என்று தன் மகளை கண்டித்தவர் ,

“என் மருமக பேச்சை நாள் முழுவதும் கேட்டுகிட்டே இருக்கலாம்.. அவ கூட பேச ஆரம்பிச்சா பொழுது போவதே தெரியாது....

எது எப்படியோ.. எனக்கு புடிச்ச மலரையே மருமகளா அனுப்பி வச்சுட்டான் அந்த ஈஸ்வரன்.. “ என்று சிரித்தார் மீனாட்சி...

அதை கேட்டு வசிக்கும் அதே எண்ணம் தான்.... அவள் வாய் ஓயாத பேச்சை கேட்க அவன் செவிகள் தவித்தன....

அவள் தன் திருமண அழைப்பிதழை கொடுத்த அன்று அவளிடம் பேசியது தான்.. அதன் பிறகு அவள் தன் மனைவியான பிறகும் இது வரைக்குமே அவளுடன் பழைய மாதிரி பேச முடியவில்லை...

“அவளும் வேதனையில் இருப்பதால் தன் இயல்பை தொலைத்து தன்னுள் அடங்கி விட்டாள் என புரிந்தது.... சீக்கிரம் அவளை பழைய படி கொண்டு வரணும்.... “ என்று யோசித்து கொண்டிருந்தான்....

“ஹலோ டாக்டர்... .என்ன உங்க பொண்டாட்டிய பத்தி சொன்ன உடனே கனவுலயே டூயட் பாட போய்ட்டீங்களா...?? தட்டை பார்த்து சாப்பிடுங்க ப்ரதர்... “ என்று அவன் கையை கிள்ளினாள் வசு...

அவனும் ஒரு அசட்டு சிரிப்பை சிரித்தவன் பின் மற்ற கதைகளை பேச ஆரம்பித்தான்...

சிரிப்புடனே இரவு உணவை முடித்து தன் அறைக்கு திரும்பினான் வசி...

தன் மெத்தையில் விழுந்தவனுக்கு மீண்டும் தன் மனைவியின் முகம் கண் முன்னே வந்தது...

இன்றோடு ஏழு நாட்கள் முடிந்து விட்டன அவள் முகம் பார்த்து.. ஏனோ அவளை பார்த்து பல வருடங்கள் ஆன மாதிரி இருந்தது அவனுக்கு...

அவன் அலைபேசியை எடுத்தவன் அதில் பாரதி அனுப்பி இருந்த அவனுடைய திருமண புகைபடங்களை பார்த்தான்...

மலர் அப்பா கண் விழித்த பிறகு எல்லாரும் சந்தோச மன நிலையில் இருக்கும் பொழுது இருவரையும் ஒன்றாக நிக்க வைத்து மணக்கோலத்தில் இருவரையும் புன்னகைக்க வைத்து அழகாக அந்த போட்டோவை எடுத்திருந்தாள் பாரதி...

பாரதி மலரை ஏதோ சொல்லி கிண்டல் பண்ணியதில் லேசான வெட்கத்துடன் கன்னம் சிவக்க அழகாக புன்னகைத்திருந்தாள் மலர் அந்த புகைபடத்தில்..

வசியுமே உதட்டில் குறும்பு புன்னகையுடன் தன் மனம் கவர்ந்தவளை தனக்கு சொந்த மாக்கி கொண்ட கர்வத்தில் மகிழ்ச்சியுடன் சிரிக்க, அந்த புகைபடம் அவ்வளவு அழகாக வந்திருந்தது.....

அதையே இமைக்க மறந்து பார்த்திருந்தான்.... அவளின் குண்டு கன்னங்களையும் சிரிக்கும் பொழுது திரண்டிருந்த அவள் இதழ்களையும் கன்னத்து குழியையும் ஆசையாக வருடினான் அந்த அலைபேசியில்...

அந்த நிழல்படத்தில் அவளை பார்க்கையிலயே அவனுள் புயல் அடித்தது...

“அதுவே அவள் நேராக என் அருகில் இருந்தால் எப்படி இருக்கும்?? “ என்று எண்ணியவனுக்கு இப்பயே அவளை பார்க்க வேண்டும் அவள் முகத்தை கையில் ஏந்தி கொஞ்ச வேண்டும் போல ஆசையாக இருந்தது....

“சே... இந்த ஆடி மாதம் மட்டும் குறுக்க வராமல் இருந்திருக்கலாம்... இதையெல்லாம் யார் கண்டு புடிச்சாங்களோ?? “ என்று திட்டியவாறே மீண்டும் புகைபடத்தில் இருந்தவளை ரசித்தவன்

“சரி.. போன் பண்ணி அவள் குரலையாவது கேட்கலாமா?? “ என்று ஆசையாக இருந்தது....

தன் அலைபேசியில் அவள் எண்ணை செலக்ட் பண்ணி கால் பட்டனை அழுத்த போக, இன்னொரு மனமோ

“என்ன பேச போகிறாய்?? ஒருவேளை அவள் இன்னும் தன் கல்யாணம் நின்னு போன வேதனையில் இருந்து மீளாமல் இருந்தால் நீ பேசுவது அவளுக்கு கஷ்டமாக இருக்கும்.. எப்படியும் அவளுக்கு நிச்சயித்தவனை அவள் மனம் விரும்பி இருக்கும்..

அதை மறக்க அவளுக்கு கொஞ்சம் டைம் கொடு... “ என்று அறிவுறுத்த உடனே அலைபேசியில் இருந்து தன் கையை விலக்கி கொண்டான்....

“ஹ்ம்ம்ம் இன்னும் 20 நாள் தானே.... சீக்கிரம் ஓடிடும்...

அவளை தன் அருகில் கொண்டு வந்து வைத்து கொண்டுதான் அவள் மனதை மாற்ற வேண்டும்.... அதுவரை பொறுமையாகத்தான் இருக்க வேண்டும்.... “ என்று பெருமூச்சு விட்டவன் அந்த அலைபேசியில் இருந்த புகைபடத்தை நெஞ்சோடு அணைத்தவாறு உறங்கி போனான்.....
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top