• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

தவமின்றி கிடைத்த வரமே-3

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Padmini Selvaraj

மண்டலாதிபதி
Author
Joined
Mar 31, 2021
Messages
220
Reaction score
1,159
Location
Bangalore
அத்தியாயம்-3

தோழியர் இருவரும் அறை எண் 8 ஐ அடைந்ததும் அதன் வெளியில் கதவில் Dr Shyam MBBS(Gen) என்று எழுதியிருக்க, அதை இருவரும் பார்த்து பின் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர்...

பின்னால் திரும்பி பேசன்ட்ஸ் வந்தால் அமரும் வெயிட்டிங் இருக்கையில் பார்க்க, யாரும் அங்கு இல்லை.. பார்வையை சுழற்ற பக்கத்து அறையில் நோயாளிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது..

“என்னடி இது?? இந்த டாக்டர் கிட்ட யாருமே பேசன்ட்ஸ் ஏ இல்ல... காத்து வாங்கிகிட்டு இருக்கு... அப்ப இவர் ஒரு டுபாக்கூர் டாக்டர் போல அதான் யாரும் இவர் கிட்ட வரல..” என்றாள் மலர் தன் தோழியிடம் குனிந்து.

“ அப்ப நமக்கும் இவர் வேண்டாம் டி... இப்படியே போய்டலம்... “என்று மெல்ல முனகினாள் கயல்...

“அடிப் போடி... இப்படி பட்ட டாக்டர் தான் நம்ம திட்டத்துக்கு லாயக்கு.. நீ கொஞ்ச நேரம் சும்மா இரு.. “ என்று தன் தோழியை அடக்கியவள் சுற்றிலும் பார்க்க, அங்கு யாரையும் காணவில்லை...

“எங்கடி?? ஒரு அட்டென்டர் லேடிய கூட காணோம்?? “ என்று மேலும் புலம்பினாள் கயல்...

“சே.. புலம்பாத டி.. இப்ப அட்டென்டர் இல்லைனா என்ன?? நாமளே நேரடியா உள்ள போகலாம்... சரி வா... “ என்றவள் அந்த அறைக்கதவை மெல்ல திறந்து தலையை உள்ளே நீட்டி எட்டி பார்த்தாள் மலர்....

அங்கு இருந்த மருத்துவர் அமரும் இருக்கையில் ஒரு நெடியவன் அமர்ந்து கொண்டு கையில் ஒரு புத்தகத்தை வைத்து கொண்டு அதற்குள் தன் தலையை நுழைத்துக் கொண்டிருந்தான்...

அவனை கண்டதும் தலையை வெளியில் இழுத்துக் கொண்டவள் தன் தோழியை பார்த்து

“டாக்டர் உள்ள இருக்கார் டீ... ஆனா யாருமே இல்லாத கடையில யாருக்கோ டீ ஆத்துற மாதிரி, பேசன்ட்ஸ் யாருமே இல்லதப்போ இவர் மட்டும் என்ன பண்றாராம்.. சரி வா... அவர் டீயை நாமளாவது போய் குடிக்கலாம்... “ என்று சிரித்தவாறு தன் தோழியை இழுத்து கொண்டு

“ Execuse me டாக்டர்” என்றவாறு ஒரு அடி முன்னே வைத்து உள்ளே சென்று கதவருகில் நின்று கொண்டாள்...

திடீரென்று கேட்ட குரலும் அந்த குரல் அவன் உள்ளே ஏதோ ஒரு மாயாஜாலத்தை பண்ண, திடுக்கிட்டு தன் தலையை நிமிர்ந்து பார்த்தான் அந்த நெடியவன்....

கண்ணில் மின்னும் குறும்புடனும் குண்டு கன்னமும், உதட்டில் உறைந்த புன்னகையும் இலேசாக சிரித்ததால் விரிந்த அவளின் கன்னத்துக் குழி இன்னும் இலேசாக திறந்திருக்க, மலர்ந்த முகத்துடன் தன் எதிரே நின்றவளை கண்டதும் திடீரென்று அவன் இதயம் வேகமாக எகிறி குதிக்க ஆரம்பித்தது..

என்றும் இல்லாமல் அவன் இதயம் படபடவென்று வேகமாக துடித்தது.. அவளையே இமைக்க மறந்து பார்த்துக் கொண்டிருந்தான்....

அதை கண்ட கயல், மீண்டும் மலரின் கையை கிள்ளி,

“என்ன டி?? இந்த டாக்டர் பட்டிக்காட்டான் மிட்டாய் கடையை பார்த்த மாதிரி இப்படி உன்னையே பார்க்கிறார்?? இவர் பார்வையே சரியில்ல டீ .. நமக்கு வேண்டாம் இந்த விச பரிட்சை.. இப்படியே திரும்பிடலாம்... “ என்று தன் புலம்பலை ஆரம்பித்தாள் கயல்...

அதற்குள் சுதாரித்து கொண்ட அந்த நெடியவன்

“ Yes.. come in… “ என்றான் தன் கம்பீரமான + வசீகரக் குரலில்...

அதை கேட்டு மலரும் கயலும் முன்னே வந்து நின்றனர்..

பின் அவர்களை நேராக பார்த்தவன்

“ப்ளீஸ் பி சீட்டட்... “ என்றான் தன் வசீகர புன்னகையுடன்....

அவன் புன்னகையை ரசித்தபடி இருந்தனர் இரு பெண்களும்...

“ஹ்ம்ம் சொல்லுங்க... என்ன பிரச்சனை?? “என்றான் தன் ஆளுமையான குரலில் இலகிய முகத்துடன்...

அதற்குள் தன்னை சுதாரித்து கொண்ட மலர்

“சே.. அவனை பட்டிக்காட்டன் மிட்டாய் கடைனு சொல்லிட்டு இப்ப நாமளே அந்த மாதிரி பார்த்து கிட்டிருந்தோமே.. ஷேம்... ஷேம்.. “ என்று மானசீகமாக தன் தலையில் கொட்டி கொண்டு அந்த நெடியவனை நேராக பார்த்து

“பிரச்சனை எல்லாம் ஒன்னுமில்லை டாக்டர்... “ என்று சிரித்தாள்...

அவள் சிரிக்கும் பொழுது விரிந்த இதழ்களில் அவன் பார்வை பட்டு தொக்கி நின்றது அவன் பார்வை சில நொடிகள்.. தன் தலையை உலுக்கி கொண்டவன்

“ஐ மீன் உங்களுக்கு என்ன வேணும்?? உடம்புக்கு என்ன செய்யுது?? “ என்றான் சிறிது தடுமாற்றத்துடன்...

அப்பொழுதுதான் இரு பெண்களுக்கும் அவர்கள் எதற்காக வந்திருக்கிறார்கள் எனபது நினைவு வர, அவசரமாக யோசித்த மலர்

“ஹீ ஹீ ஹீ எனக்கு உடம்பு சரியில்லை டாக்டர்.. அதான் உங்களை பார்த்துட்டு போகலாம்னு வந்தோம்... “ என்றாள் அசட்டு சிரிப்புடன்...

அதை கேட்டதும் அப்பொழுதுதான் நினைவு வந்தது அவனுக்கு தான் யாரென்று...

அதை உணர்ந்ததும்

“சாரி.... நான் டாக்டர் இல்... “ என்று ஏதோ சொல்ல வந்தவன் அவன் இதயம் மீண்டும் வேகமாக துடிக்க ஆரம்பிக்க, தான் சொல்ல வந்ததை பாதியிலயே விழுங்கி கொண்டான்...

பின் அருகில் இருந்த லெட்டர் ஹெட்ஐ (letter head) எடுத்தவன்

“ஸ்யூர்.. சரி உங்க பெயர் சொல்லுங்க ..” என்றான் ஆர்வமாக...

“மலர்... “ என்றாள் அதே புன்னகையுடன்...

“முழுப்பெயர் பனிமலர் டாக்டர்... “ என்றாள் அருகில் அமர்ந்திருந்த அவள் தோழி கயல்விழி...

அதை கேட்டு மலர் திரும்பிஅவளை முறைத்தாள்.. கண்ணால் ஏதோ ஜாடை காட்டி

“இப்ப முழு பெயர் சொல்றது முக்கியமா?? “ என்று திட்டியவாறு...

அப்பொழுது தான் கயலுக்கும் உறைத்தது தாங்கள் எதுக்கு வந்திருக்கோம் என்று..

“சே.. இப்படி அவசரபட்டு உளறிட்டோமே... “ என்று மானசீகமாக தலையில் கொட்டி கொண்டாள் கயல்...

அந்த இரு பெண்களும் தங்களுக்குள் பேசி கொள்ள, எதிரில் அமர்ந்திருப்பவனோ அவள் பெயரை கேட்டதும்

“ப னி ம ல ர் ... “ என்று ஒவ்வொரு எழுத்தாக மெல்ல மனதுக்குள் உச்சரித்து பார்க்க, அவன் உள்ளே சில்லென்று பனிமழை பொழிந்தது...அந்த பெயரை சொல்லும் பொழுதே அவன் உதடுகள் சில்லிட்டன....

எதிரில் அமர்ந்திருந்த பெண்களும் தங்கள் சண்டையை முடித்து மீண்டும் அவனை நேராக பார்க்க, அதற்குள் மீண்டும் தன் தலையை உலுக்கிக் கொண்டவன்

“மிஸ் ஆர் மிஸஸ் ?? “ என்றான் படபடக்கும் இதயத்துடன் அவள் என்ன சொல்லப் போகிறாளோ என்று...

அவள் மிஸ் ஆகத்தான் இருக்க வேண்டும் என்று தன் அன்னை வணங்கும் அந்த ஈசனை அவசரமாக வேண்டிக் கொண்டே அவள் பதிலுக்காக காத்திருந்தான்...

அவளும் அவனை ஏமாற்றாமல் “மிஸ் தான் டாக்டர்... “ என்றாள் மெல்ல சிரித்தவாறு..

அதை கேட்டதும் பெரும் நிம்மதி வந்து சேர்ந்தது அவன் இதயத்துக்குள்....

“வயது?? “ என்று அடுத்த கேள்வியைக் கேட்டான்...

“டாக்டர்... உடம்பு சரியில்லாததற்கு பெயர், வயது எல்லாம் எதுக்கு கேட்கறீங்க?? “என்றாள் மலர் சிறு கடுப்புடன்...

“ ஹா ஹா ஹா டாக்டர் கிட்டயும் வக்கீல் கிட்டயும் உண்மையை மறைக்காம அப்படியே சொல்லணும் னு கேள்வி பட்டிருப்பீங்க இல்ல... அதான்..

நீங்க வயசு சொன்னாதான் அந்த வயசுக்கு தகுந்த மாதிரி நாங்க ட்ரீட்மென்ட் கொடுக்க முடியும் மிஸ் பனிமலர்... “ என்று சிரித்தான்...

அவள் பெயரை அவன் வாயால் கேட்கும் பொழுது ஏதோ வித்தியாசமாக இருந்தது மலருக்கு... ஆனால் என்னவென்று சரியாக புரியவில்லை அப்பொழுது..

அவளும் இலேசாக முறைத்துக் கொண்டே

“24 டாக்டர்.. “ என்றாள்..அதற்குள் அருகில் இருந்தவள்

“24 முடிஞ்சு 25 நடக்குது டாக்டர்... வயசு சரியா கரெக்டா சொன்னாதான நீங்க அதுக்கு தகுந்த மாதிரி மருந்து கொடுக்க முடியும்... அப்பதான் கொடுக்கிற மருந்து வேலை செய்யும்ம்ம்.. அதான்.. “என்று கயல் சிரிக்க மலரோ அவளை பார்த்து முறைத்தாள்...

அந்த டாக்டரும் சிரித்து கொண்டே அவள் வயதை அந்த தாளில் எழுதி கொண்டான்.. அப்புறம் மருத்துவனுக்கே உரிய இன்னும் சில கேள்விகளை கேட்டு அதை எல்லாம் அந்த தாளில் குறித்து கொண்டான்... பின்

“சரி.. உடம்புக்கு என்ன பண்ணுது?? “ என்றான் மலரை பார்த்து...

“அடப்பாவி.. இத முதல்ல கேட்காம மற்ற எல்லா டீடெய்ல்ஸ் ம் கலெக்ட் பண்ணிட்டியே டா... கன்பார்ம் ஆ நீ ஒரு டுபாக்கூர் டாக்டர் தான்.. “என்று உள்ளுக்குள் சிரித்துக் கொண்டாள் மலர்...

அவன் அவள் பதிலுக்காக அவள் முகம் பார்த்து இருக்க,

“ஐயோ.. நல்லா இருக்கிற உடம்புக்கு என்ன வியாதினு சொல்றது?? இதை யோசிக்காம வந்திட்டமே?? “ என்று மீண்டும் அவசரமாக யோசித்தவள்

“ஆங் வயிற்று வலி டாக்டர்.. “ என்றாள் பின்னால் வரும் ஆபத்தை அறியாமல்...

“ஓ... எத்தனை நாளா இருக்கு?? “ என்றான் அவளை ஆராய்ச்சியுடன் பார்த்தவாறு..

“இப்பதான் டாக்டர்.. “ என்றவள் நாக்கை கடித்துக் கொண்டு மதியத்தில் இருந்து டாக்டர்... ரொம்ப வலிக்குது.. “ என்றாள் தன் வயிற்றை பிடித்தவாறு முகத்தை சுழித்து வலிப்பதை போல ஆக்சன் பண்ணினாள் அதுவரை சிரித்துக் கொண்டிருந்தவள்....

“ஓ.. சாரி... கொஞம் பொறுத்துக்கங்க.. சீக்கிரம் சரி பண்ணிடலாம்.. “என்று வருந்தியவன்

“சரி.... அந்த கட்டில்ல ஏறி படுங்க... செக் பண்ணலாம்... “ என்றான் அந்த மருத்துவன்..

அதை கேட்டதும் திக் என்றது மலருக்கு...

“ஐயோ.. இதை யோசிக்கலையே.. இப்ப என்ன செய்யறது?? “ என்று தன் தோழியை பார்க்க அவளோ

“ நான் அப்பவே சொன்னேன் இல்ல.. கேட்டியா?? “ என்றவாறு மலரை முறைத்தாள்...

“டாக்டர்... செக் பண்ணாம என்ன வியாதினு சொல்ல முடியாதா?? “ என்றாள் மலர் தயங்கியவாறு...

“ஹா ஹா ஹா... நான் என்ன சாமியாரா?? ஒருத்தரை பார்த்த உடனே அவங்களுக்கு என்ன வியாதினு கண்டு பிடிச்சு எல்லாத்துக்கும் ஒரே விபூதி கொடுத்து சரி பண்ண?? ,,,

டாக்டர் மா... டாக்டர்.. ஒரு உடம்பை செக் பண்ணிதான் என்ன பிரச்சனைனு கண்டு பிடிக்க முடியும்...பயந்துக்காம வாங்க.. ஊசி எல்லாம் போட மாட்டேன்... “ என்று சிரித்தான்...

மலரும் வேற வழியில்லாமல் எழுந்து திரைச்சீலை மூடியிருந்த அந்த சின்ன அறைக்குள் சென்றவள் அங்கு இருந்த அந்த சின்ன படுக்கையில் ஏறி படுத்தாள்...

அந்த நெடியவனும் எழுந்து அருகில் இருந்த ஸ்டெதஸ் ஐ எடுத்து கொண்டு உள்ளே செல்ல, அதுவரை அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்ததால் தெரியாத அவன் உயரம் இப்பொழுது தன் அருகில் நிற்கும் பொழுது தெரிந்தது...

பனைமரம் போன்ற அவன் உயரத்தையும் அடர்ந்த கேசமும் அடர்த்தியாக நேர்த்தியாக கத்தரித்திருந்த மீசையையும், கனிவான முகம் ஆனால் கம்பீரமான தோற்றத்தையும் கண்டு மலைத்து போனாள் மலர்...

அதற்குள் அவன் காதில் அந்த ஸ்டெதஸை மாட்டிக் கொண்டு அவள் அருகில் வர, மலருக்கோ இதயம் வேகமாக அடித்துக் கொண்டது...

அதை விட பல மடங்கு வேகமாக துடித்தது அந்த மருத்துவனுக்கு...

“சே... என்ன இது?? இப்படி இருக்கு..எந்த பேசன்ட் ஐயும் ஆண் பெண் என்ற வேறுபாடில்லாமல் வெறும் உடலாக மட்டும் தான் பார்க்க வேண்டும்.. “என்று தான் கற்ற ஆரம்ப படத்தை கஷ்ட பட்டு நினைவு படுத்தி கொண்டு மெல்ல அவள் கையை எடுத்து நாடி பார்க்க ஆரம்பித்தான்...

சில்லிட்டிருந்த அவள் கையை தொட்டதும் அவன் தினமும் காலையில் கொஞ்சி விளையாடும் தன் காதலியின் ஸ்பரிசம் நினைவு வந்து அவன் இதயத்தை சில்லிட வைத்தது....

அந்த கையை எப்பவும் விடாமல் பற்றி கொள்ள துடித்த தன் இதயத்தை அடக்கி அவள் கையை விட்டவன் அடுத்து அந்த ஸ்டெதஸை அவள் இதயத்தின் அருகில் கொண்டு வந்தான்...

அதை வைக்கும் முன்னே இவன் இதயம் இன்னும் வேகமாக துடிக்க, மலரோ தன் கண்ணை இறுக்க மூடிக் கொண்டாள் அவன் முகத்தை வெகு அருகில் பார்க்க இயலாமல்...

அந்த மருத்துவனுக்குமே அவள் முகத்தை வெகு அருகில் பார்க்க உள்ளுக்குள் வீசிய பனிமழை இப்பொழுது பனிபுயலாக சுழற்றி அடித்தது....

முயன்று தன்னை கட்டுபடுத்தியவன் அவள் இதயத்தில் அந்த ஸ்டெதஸை வைத்து இதய துடிப்பை ஆராய, அவள் இதயம் எகிறியது இவனுக்கு தெரிந்தது....

“என்னாச்சு?? இப்படி துடிக்கிறதே இவள் இதயம்?? ஒரு வேளை நான் துடிப்பது தான் எனக்கு மாறி கேட்கிறதா?? “ என்றவன் சில நொடிகள் கண்கானித்து விட்டு அந்த ஸ்டெதஸை எடுத்துக் கொண்டான்...

அதுவரை கண்ணை இறுக்கி மூடியிருந்தவள் அவன் நிமிர்ந்து தள்ளி நிற்பதை உணர்ந்து கண்ணை திறக்க, அவனோ அவள் முகம் பார்க்க முடியாமல் வேறுபக்கம் பார்த்திருந்தான்....

“எல்லாம் நார்மலாதான் இருக்கு... சரி இருங்க வயிற்றை செக் பண்ணலாம் ஏன் வலி இருக்குனு?? “ என்றவன் பார்வை அவள் வயிற்று பகுதிக்கு சென்றது...

அன்னைக்கென்று பார்த்து அவள் சேலை அணிந்து வந்திருந்தாள்... அவள் மேல ஏறிப் படுத்ததில் சேலை கொஞ்சம் விலகி இருக்க, அவளின் சதை பிடிப்பில்லாத ஒல்லியான இடைக்கு தாவியது அவன் பார்வை...

சற்றுமுன் சன்னல் வழியாக அவன் ரசித்த அந்த அந்தி மாலையின் இளமஞ்சள் நிறத்தை போலவும், அதற்கும் மேல் எழுமிச்சை நிறத்தை ஒட்டி வழுவழு வென்றிருந்த அவள் இடையில் அவன் பார்வை சொக்கி நின்றது....

அந்த இடையை தொட அவன் கைகள் இலேசாக நடுங்கின... ஒரு மருத்துவனாக எத்தனையோ நோயாளிகளை சந்தித்திருக்கிறான்.. யாரிடமும் இந்த மாதிரி தடுமாறியதில்லை அவன்...

“சே.. என்னாச்சு எனக்கு?? ஏன் இப்படி என் கைகள் நடுங்குகின்றன.. ஏன் என் இதயம் கட்டுக்கடங்காமல் தறிகெட்டு குதிக்கிறது??? “ என்று அவனுக்குள் அவசரமாக ஆராய்ந்தான்...

அங்கு மலரோ இன்னும் அதிர்ச்சியாகி இருந்தாள்..

“ஐயோ.. நான் பாட்டுக்கு வயிற்று வலினு பொய் சொல்ல இந்த டாக்டர் இப்ப வயிற்றை பிடிச்சு பார்க்க போறானே... அப்பவே கயல் சொன்னா இந்த விச பரிட்சை வேண்டாம் என்றாள்..

அட்லீஸ்ட் ஒரு லேடி டாக்டர் கிட்டயாவது போயிருக்கலாம்.. நான் பாட்டுக்கு அலட்டலா இருக்க, இப்படி இவன்கிட்ட வந்து மாட்டிகிட்டனே... இப்ப எப்படி இதிலிருந்து தப்பிப்பது?? “ என்று அவசரமாக யோசித்தாள்...

அந்த மருத்துவனும் சில நொடிகள் தயங்கி நிற்க,வேறு வழியில்லாமல் அவள் வயிற்றை தொட்டு பார்க்க தன் கையை முயன்று இழுத்து அவள் வயிற்றின் அருகில் வர,

டக்கென்று தன் சேலையை இழுத்து விட்டுக் கொண்டு எழுந்து அமர்ந்தாள் மலர்....

அதில் திடுக்கிட்டவன் தன் உணர்ச்சிகளை மறைத்து கொண்டு அவள் முகம் பார்த்து

“என்னாச்சு பனிமலர்?? “ என்றான் ஆராயும் பார்வையுடன்..

அவன் பார்வை வீச்சை தாங்க முடியாதவள்

“ஹீ ஹீ ஹீ... இப்ப வலி சரியாயிடுச்சு டாக்டர்.. போயே போச்சு.. போயிந்தே.. இட்ஸ் கான்... “ என்று அசட்டு சிரிப்பை சிரித்தாள்...

அதற்குள் தன்னை சுதாரித்து கொண்டவன்

“ஈஸ்வரா... என்னை எப்படியோ நல்ல நேரத்துல காப்பாத்திட்ட... நான் மட்டும் தொட்டிருந்தால், கண்டிப்பா ஒரு மருத்துவனாக என்னால் இருந்திருக்க முடியாது....

என் கை கண்டிப்பாக எல்லை மீறியிருக்கும்...அது என் தொழில் தர்மத்துக்கு நேரும் மிகப் பெரிய அவப்பெயராகும்.. நல்ல வேளை நீ காப்பாத்திட்ட..”

என்று மனதுக்குள் நிம்மதியுற்றாலும் ஒரு மூலையில் சிறு ஏமாற்றமும் சேர்ந்து கொண்டதை அவன் அறியவில்லை..

அவள் வலி சரியாகிடுச்சு என்று கூறியதை கேட்டவன்

“எப்படி பனிமலர்?? அதுக்குள்ள சரியாயிடுச்சு.?? நான் இன்னும் செக் பண்ணவே இல்லையே.. வாங்க எதுக்கும் ஒரு முறை செக் பண்ணி பாத்திடலாம்... “என்றான் உள்ளுக்குள் குறும்பாக சிரித்தவாறு...

“ஹீ ஹீ ஹீ.. இல்லை டாக்டர்... வலி சரியாயிடுச்சு.. ஒரு வேளை டாக்டரை பார்த்த உடனே அது பயந்து ஓடிடுச்சோ என்னவோ?? “என்றாள் அவளும் குறும்பாக சிரித்தவாறு...

“ஹா ஹா ஹா ... இது புது மாதிரியான வியாதியா இருக்கும் போல.. எதுக்கும் இன்னொரு முறை... “ என்று அவன் இழுக்க,

“அதெல்லாம் வேண்டாம் டாக்டர்.. எல்லாம் சரியாயிடுச்சு.. “என்றவாறு குதித்து இறங்கியவள் தன் சேலையை சரி செய்தபடியே அந்த அறையை விட்டு அவசரமாக வெளியில் வந்தாள்...

அந்த மருத்துவனும் சிரித்து கொண்டே வெளியில் வந்து தன் இருக்கையில் சென்று அமர்ந்தான்..

மலரும் தன் இருக்கையில் அமர, கயல் அவளிடம் என்னாச்சு?? என்று ஜாடையில் கேட்டாள்..

மலர் பதில் எதுவும் சொல்லாமல் அசட்டு சிரிப்பை சிரித்து இன்னும் பொறு என்பது போல ஜாடை காட்டினாள்..

இவர்களின் பார்வை பரிமாற்றத்தை கண்டு கொண்டவன் உள்ளுக்குள் ஏதோ யோசித்து கொண்டிருக்க, மலர்

“அப்புறம் டாக்டர்.. வேற எதுவும் டெஸ்ட் எடுக்கணுமா?? “ என்றாள் தன் தோழியை ஓரக் கண்ணால் பார்த்தவாறு....

“ஓ யெஸ்... டாக்டரை பார்த்த உடனே ஓடிப்போகிற வியாதி உங்களுது.. அதனால இது ஒரு புது வியாதியா கூட இருக்கலாம்.. அதனால எதுக்கும் ஒரு ப்ளட் டெஸ்ட்,யூரின் டெஸ்ட், அப்புறம் வயித்துல ஒரு எக்ஸ்ரே...” என்று அடுக்கி கொண்டே போனான்..

அதை கேட்டு மலர் தன் தோழியை பார்த்து வெற்றி சிரிப்பை சிரிக்க, கயல் விழியோ அவனை முறைத்து பார்த்தாள் அவன் அறியாமல்...

அவன் சொல்லி முடித்ததும்

“ஓகே பனிமலர்.. இதையெல்லாம் எடுத்துட்டு என்னை வந்து பாருங்க.. “என்றான் அடக்கப்பட்ட சிரிப்புடன்...

அதை கேட்டு மலரின் முகம் ஏளனமாக வளைந்தது... பின் அதுவே அருவெறுப்பாக சுருங்கியது... நொடியில் வந்து போன அவள் முக மாற்றத்தை கண்டு கொண்டான் அந்த ம்ருத்துவன்...

பின் இரு பெண்களும் எழுந்து

“ஓகே டாக்டர்.. அப்ப நாங்க இந்த டெஸ்ட் எல்லாம் எடுத்துட்டு வர்ரோம்... இப்ப உங்களுக்கு ஃபீஸ் எவ்வளவு?? “ என்றாள் மலர் அதே வெற்று வெறித்த புன்னகையில்....

“என்னாச்சு இவங்களுக்கு?? இதுவரைக்கும் நல்லாதான பேசி கிட்டிருந்தாங்க.. இப்ப ஏன் இருவருமே ஏதோ மாதிரி பேசறாங்களே??” என்று யோசித்தவாறு தன் கட்டணமாக ஒரு தொகையை சொல்ல, மலரும் தன் பர்சை திறந்து காசை எடுத்து அந்த மேஜையின் மேல் பொத்தென்று வைத்தாள் அவனை இலேசாக முறைத்தவாறு...

பின் இரு பெண்களும் விடை பெற்று நடக்க,

“ஒரு நிமிசம்... “ என்று அவர்களை நிறுத்தினான் அந்த நெடியவன்..

இரு பெண்களும் நின்று திரும்பி அவனை பார்க்க,

“உங்க ப்ரண்ட்ஸ் சர்க்கில் ல உங்கள மாதிரி இன்னும் நிறைய பேர் இருந்தா என்கிட்ட அனுப்பி வைங்க.. “என்றான் குறும்பாக சிரித்தவாறு..

அதை கேட்டு இரு பெண்களும் புரியாமல் பார்க்க

மலர்தான் “எதுக்கு டாக்டர்?? “ என்றாள் குழப்பமாக

“ஹா ஹா ஹா ... இப்படி இல்லாத வியாதிக்கு, பார்க்காத வைத்தியத்துக்கு இவ்வளவு பணம் கொடுத்துட்டு போற வள்ளல்கள் நிறைய பேர் உங்க குரூப்ல இருப்பாங்க இல்ல... அதான்...

அவங்களும் வந்தா எங்க ஹாஸ்பிட்டலுக்கு இன்னும் கொஞ்சம் வருவாய் அதிகமாகும் இல்ல...எங்க MD யும் ரொம்ப சந்தோச படுவார்... அதுக்குத்தான்..” என்றான் சிரித்தவாறு...

அதை கேட்டு இரு பெண்களும் திருதிரு வென்று முழிக்க,

“ஹ்ம்ம்ம்ம்ம் சொல்லுங்க.. எதுக்காக இந்த நாடகம்? “என்றான் இடுங்கிய கண்களுடன்....அதுவரை இலகுவாக, உல்லாசமாக சிரித்துகொண்டிருந்தவன் இப்பொழுது முகம் கடுகடுக்க, அவர்களை ஆழ்ந்து பார்த்தான்.

அதற்குள் சுதாரித்து கொண்ட மலர்

“நா.. நா.. நா ட க மா?? என்ன நாடகம்?? எதுக்கு நாடகம்?? “ என்றாள் தயங்கியவாறு...

“ஹ்ம்ம்ம்ம் அதை நீங்க தான் சொல்லணும் ?? எதுக்கு இந்த நாடகம் னு.. “ என்றான் நக்கலாக குறும்பாக சிரித்தவாறு...ஆனால் பார்வையில் அதே கூர்மையுடன்

அதெல்லாம் ஒன்னுமில்... “ என்று மலர் சொல்ல வர, அவள் தோழியோ

“வாவ்... சூப்பர் டாக்டர் சார்... யூ ஆர் கிரேட்.... “என்று சிரித்தவாறு முன்னே வர, மலர் அவளை தடுக்க முயன்று முடியாமல் அவளை முறைத்தாள்..

“சும்மா இருடி.. அதான் முழுக்க நனைஞ்சாச்சு இல்ல.. இனிமேல் முக்காடு எதுக்கு?? “ என்று சிரித்தவாறு

“டாக்டர்... மலருக்கு ஒன்னும் இல்லனு கண்டு பிடிச்சிட்டீங்களா?? அப்புறம் எதுக்கு ஃபீஸ் வாங்கினீங்க?? “என்றாள் குழப்பமாக...

“ஹ்ம்ம்ம் .. “என்றான் மலரை பார்த்தவாறு

“எப்படி டாக்டர்?? “ என்றாள் கயல் இன்னும் ஆச்சர்யமாக

“ஹா ஹா ஹா ஒரு பேசன்ட் ஐ பார்க்கும் பொழுதே அவர் உண்மையிலயே நோயாளிதானா இல்லையானு தெரிஞ்சுடும்... உங்கள மாதிரி இல்லாத வியாதி இருக்கறதா வந்தாலும் அது டாக்டருக்கு தெரிஞ்சுடும்....அது எங்களோட மேஜிக்... “ என்று சிரித்தான்...

அவன் சிரிக்கும் பொழுது வசீகரமாக இருந்தது... அதுவும் ஓரத்தில் இருந்த அந்த தெத்து பல் இன்னும் அவன் சிரிப்புக்கு அழகு சேர்க்க அவனையே ரசித்து பார்த்தாள் மலர் அவளையும் அறியாமல்..

பின் தன்னை சமாளித்துக் கொண்டு

“அப்புறம் எதுக்கு டாக்டர் இந்த டிராமா?? “ என்றாள் மலர் சற்று கோபமாக

“ஹா ஹா ஹா ஏன் உங்களுக்கு மட்டும் தான் நடிக்க தெரியுமா?? எனக்கும் கொஞ்ச நடிக்க தெரியும் மா.. எங்க காலேஜ்லயும் கல்ச்சுரல்ஸ் எல்லாம் உண்டு.. எல்லா நாடகத்திலும் நான் இருப்பேனாக்கும்.. “என்று தன் காலரை தூக்கி விட்டு கொண்டான் ....

“ஹ்ம்ம் சரி சொல்லுங்க.. எதுக்கு இந்த நாடகம்?? “என்றான் மீண்டும் இடுங்கிய கண்களுடன் ஆராய்ச்சி பார்வையுடன்...

“சொல்ல வேண்டாம்.. “என்று மலர் ஜாடை காட்ட, கயல்விழியோ அவள் ஜாடையை கண்டு கொள்ளாமல்

“அது வந்து டாக்டர் சார்....நாங்க இரண்டு பேரும் MBA Hospital Management final year students. இன்று மதியல் சும்மா ஹாஸ்பிட்டல் ஸ் பற்றி பேசி கிட்டிருந்தப்போ

“எல்லா தனியார் மருத்துவமனையும் பணம் தான் குறிக்கோளா இருக்காங்க.. ரமணன் படத்துல வர்ற மாதிரி டெட்பாடிக்கு கூட வைத்தியம் பார்ப்பாங்க.. காசு தான் முக்கியம்.. வியாதியே இல்லாமல் போனாக்கூட எல்லா டெஸ்ட் ம் எடுக்க சொல்லி ஒரு தொகையை நம்ம மேல தீட்டிடுவாங்க.. “என்றாள் மலர்..

“நான் அதை ஒத்து கொள்ளவில்லை.. சில நல்ல டாக்டர்ஸ் ம் இருக்காங்க..எல்லாரும் அந்த மாதிரி இல்லைனு சொன்னா இவ ஒத்துக்கலை... இப்படியே நாங்க இரண்டு பேரும் ஆர்க்யூ பண்ண, கடைசியில் இவ

பெட் வச்சுக்கலாமா?? என்றாள்..

“பெட் ஆ?? அப்படீனா?? “என்றான் புரியாதவனாக...

“ஹீ ஹீ ஹீ அதான் போட்டி டாக்டர்....எங்களுக்குள்ள போட்டி வச்சு யார் ஜெய்ப்பாங்கனு பார்க்கறது.. “ என்று சிரித்தாள் கயல்.

”ஓ.. இதெல்லாம் கூட பண்ணுவீங்களா?? “என்றான் சிரித்தவாறு

“பண்ணுவீங்களா வா?? பெட் கட்டறதுனா இவளுக்கு அல்வா சாப்பிடறது மாதிரி டாக்டர்.. ஆனால் எப்படி தான் நடக்குமோ எல்லா பெட் லயும் இவதான் ஜெயிப்பா... “ என்று சிரிக்க, மலர் அவள் கையில் நறுக்கென்று கிள்ளினாள்...

ஆ வென்று அலறிய கயல்,

“டாக்டர்,, அடிக்கடி இவ என்னை கிள்ளறா.. இதுக்கு ஏதாவது வைத்தியம் இருந்தா சொல்லுங்களேன்.. “ என்று சிரித்தவள்

“கதையை எங்க விட்டேன்??... ஆங் பெட் கட்டியதுல விட்டேன்... “எ ன்று தன் தலையை தட்டியவள்

“அதான் டாக்டர் சார்... இவளை ப்ரூவ் பண்ண சொன்னேன்.. இது மாதிரி இல்லாத வியாதிக்கு டாக்டர் ஃபீஸ் வாங்கிட்டா அவ ஜெயிச்சா.. இல்லை னா நான் ஜெயிச்சேன்..

பக்கத்துல இந்த ஹாஸ்பிட்டல் இருந்து தா.. அதான் இங்க புகுந்துட்டோம்... “

“எப்படியோ கடைசியில நீங்க நல்ல டாக்டர்னு நிரூபிச்சிட்டீங்க.. நான் தான் இந்த பெட்ல ஜெயிச்சேன்.. என் வாழ்க்கையிலயே முதல் முதலா இவகிட்ட ஜெயிச்சிருக்கேன்..

உங்களுக்கு நன்றி சொல்லனும் டாக்டர் சார்.. ஆனாலும் முதல்ல நீங்க ஃபீஸ் வாங்கினதும் ரொம்ப வருத்தமாயிடுச்சு..

பார்த்தா நல்லவர் மாதிரி தெரிஞ்சீங்க.. கடைசியில இப்படி கவுத்திடீங்களே னு இருந்துச்சு.. ஆனா கடைசியா நீங்க ஒரு நல்லவ்ர், வல்லவர்னு நிருபிச்சீட்டீங்க..” என்று குதித்தாள் கயல்..




 




Padmini Selvaraj

மண்டலாதிபதி
Author
Joined
Mar 31, 2021
Messages
220
Reaction score
1,159
Location
Bangalore
மலரோ அவளை பார்த்து இன்னும் முறைக்க, அந்த மருத்துவன் வாய் விட்டு சிரித்தான்..

“ சரி என்ன பெட் உங்களுக்குள்ள ??”என்றான் ஆர்வமாக...

மலர் இன்னும் தன் தோழியை முறைத்துக் கொண்டு நிக்க, அவளோ தான் பேசுவதையும் கேட்க ஒரு ஜீவன் கிடைத்த குசியில் தன் கதையை தொடர்ந்தாள்...

“அதாவது டாக்டர் சார்.. அவ ஜெயிச்சா இரண்டு வாரத்துக்கு அவ எங்க கூப்பிட்டாலும் நான் போகணும்.. ஐ மீன் அவ கூட சுத்தணும்... நான் ஜெயிச்சா இரண்டு வாரத்துக்கு என்ன எங்கயும் அவ கூப்பிடக் கூடாது... அப்புறம் அடாவடி சண்டைக்கு போகக் கூடாது... “ என்று சிரித்தாள்...

“அடாவடி சண்டையா?? அப்படீனா?? “ என்றான் புரியாமல்..

“அடாவடி சண்டைனா தெரியாது?? ஹ்ம்ம்ம் வம்பு சண்டை டாக்டர்.. வேணும்னே தினமும் யார்கிட்டயாவது போய் வம்பு சண்டை இழுப்பா.. இவளே ஸ்டார்ட் பண்ணலைனாலும் அதுவா தேடி வரும் இவளை...

அதான் இரண்டு வாரத்துக்கு அவ கை காலை வச்சுகிட்டு சும்மா இருக்க சொல்லி கட்டிப் போடணும்னு ரொம்ப நாளா ஆசை.. அதான் பெட் கட்டினேன்... எப்படியோ ஜெயிச்சிட்டேன்..

என்னை இவகிட்ட இருந்து காப்பாத்திட்டிங்க.. இன்னும் இரண்டு வாரத்துக்கு நான் இவ தொல்லை இல்லாம பிரியா சுத்தலாம்... “ என்றாள் கயல் சிரித்தவாறு....

“அடியே... அதுக்கப்புறம் என்கிட்ட தான வருவ.. அப்ப இருக்கு உனக்கு.. “ என்று முறைத்தாள் மலர்..

“ஆனாலும் நீங்க ரொம்ப மோசம் டாக்டர்.. “ என்றாள் மலர் அந்த மருத்துவனை பார்த்து..

“என்னாச்சு பனிமலர்?? நான் என்ன பண்ணேன்?? “ என்றான் குழப்பமாக...

“உங்களால தான் இந்த புள்ள பூச்சிகிட்ட எல்லாம் நான் தோத்து போய்ட்டேன்... பாருங்க என்ன வாய் அடிக்கிறானு.. “ என்று முகத்தை நொடித்தாள்...

“அட டா ..நீங்க உங்களுக்குள்ள இருக்கிற பெட் பற்றிச் சொல்லியிருந்தால் நானும் அதுக்கு தகுந்த மாதிரி மாற்றி நடிச்சிருப்பேன்.. எனக்கெப்படி தெரியுமாம்?? “ என்று தன் தன் புருவங்களை உயர்த்தி சிரித்தான்....

“ஆங்... டாக்டர் சார்... என்ன இது?? அவ பொய் சொல்ல சொன்னா நீங்க அப்படியே நடிப்பீங்களா?? நோ... எப்பவும் யாருக்கும் அஞ்சாமல் நேர்மையா இருக்கணும் டாக்டர்.. இது என் ஆருயிர் தோழி பனிமலர் சொன்னது தான்.. “ என்று சிரித்தாள் கயல்..

அந்த மருத்துவனும் இணைந்து வாய் விட்டு சிரித்தான்... பின் இரு பெண்களும் அவனிடம் விடை பெற்று கிளம்ப முன்னால் நடந்த மலர் நின்று மீண்டும் திரும்பி அவன் அருகில் வந்தவள்

“டாக்டர்... எனக்கு ஒரு சந்தேகம்.. கேட்கவா?? “ என்றாள் தலையை சரித்து...

அவளின் அந்த ஆக்சனையும் ரசித்தவன்

“என்ன.. என் பெயர் வெறும் தாசா?? இல்ல லாட் லபக்கு தாசா னா?? “ என்றான் குறும்பாக சிரித்தவாறு....

“ஹா ஹா ஹா.. அந்த சந்தேகம் எல்லாம் நம்ம விவேக் சார்க்குத்தான் வரும் டாக்டர்.. எனக்கு வேற ஒரு சந்தேகம் ..” என்று இழுத்தாள்...

“ஹ்ம்ம்ம் கேளுங்க பனிமலர் ..” என்றான் அவனும் ஆர்வமாக....

“வந்து... பக்கத்து அறையில் இருக்கிற டாக்டர்ஸ் கிட்ட நிறைய பேசன்ட்ஸ் இருக்காங்களே... உங்களுக்கு மட்டும் யாரும் வராம ஈ ஓட்டிகிட்டு இருக்கீங்களே?? ஏன்?? “ என்றாள் குறும்பாக சிரித்தவாறு..

அதை கேட்டு செல்லமாக முறைத்தவன்

“அது வந்து... இந்த ரூம் டாக்டர்க்கு ட்யூட்டி காலை 9 மணியில் இருந்து மாலை 5 மணி வரைக்கும்... பக்கத்து அறை டாக்டர்ஸ் எல்லாம் ஈவ்னிங் ஷிப்ட்.. சோ பேசன்ட்ஸ் களை ஈவ்னிங் ஷிப்ட் டாக்டர்ஸ் கிட்ட மட்டும்தான் அனுப்புவாங்க.. “ என்று சிரித்தான்...

“ஹ்ம்ம்ம் அப்ப அந்த தக்காளி ஏன் எங்களை இங்க அனுப்பி வச்சுது?? “ என்று மனதுக்குள் யோசிப்பதாக எண்ணி கொஞ்சம் சத்தமாக யோசிக்க,அது அவன் காதில் விழ

“என்னது தக்காளியா?? அப்படீனா?? “என்றான் புரியாதவாறு

“ஐயோ... மலர்... இப்படி சத்தமா உளறி மாட்டிகிட்டியே...ஹ்ம்ம்ம் எதையாவது சொல்லி சமாளிப்போம்... “ என்று தன்னைத் தானே திட்டி கொண்டவள் அவள் சமாளிக்கு முன்னே அவள் ஆருயிர் தோழி முந்திக் கொண்டு

“அது வந்து டாக்டர் சார்... அந்த ரிசப்னிஷ்ட் பொண்ணு இருக்காங்களே... அவங்களுக்குத்தான் இவ தக்காளி னு பேர் வச்சிருக்கா... “ என்று சிரிக்க, மலரோ கண்ணால் ஜாடை காட்டி சொல்லாத என்று கெஞ்ச தன் தோழி தன்னைக் கண்டு கொள்ளாமல் விட அவளை பார்த்து முறைத்தாள் மலர்...

அதை கேட்டு மீண்டும் வாய் விட்டு சிரித்தான் அந்த மருத்துவன்....

சிரித்து முடித்ததும்

“ஹ்ம்ம்ம் அவங்களும் ஈவ்னிங் ஷிப்ட் க்கு புதுசா வந்திருப்பாங்க... டாக்டர்ஸ் லிஸ்ட் ஐ சரியா பார்க்காம உங்களை இங்க அனுப்பி வச்சிருப்பாங்க... என்ன பனிமலர் போதுமா விளக்கம்?? “என்றான் சிரித்தவாறு...

அவளும் ”ஓ... “ வென்று ஒத்துக்கொள்ள, அவளின் ஓ வில் குவிந்த இதழ்களை கண்டு இன்னும் சொக்கி நின்றான் அவன்...

“ஓகே டாக்டர்... எனிவே நைஸ் மீட்டிங் யூ... ஹேவ் அ வொன்டர்புல் ஈவ்னிங் அன்ட் குட் நைட்... “ என்று கன்னம் குழிய சிரித்து விடை பெற்றாள் பனிமலர்....

வெளியில் வந்தவர்கள் வாயிலை நோக்கி நடக்க, அதை நெருங்கிய மலர் தன் தோழியின் கையை விட்டு வேகமாக ரிசப்சனிஷ்ட் இடம் வந்து..

“எக்ஸ்க்யூஸ் மீ சிஸ்டர்.... நீங்க செமயா இருக்கீங்க... அதுவும் உங்க குண்டு முழி... சான்சே இல்ல...சூப்பர்... “ என்று சிரித்தாள்...

அதை கேட்டு அந்த ரிசப்சனிஷ்ட் மீண்டும் ஙே.. என்று தன் கண்களை அகல விரித்து விழிக்க

“ஹாங்... இதே... இதே... இதே லுக் தான்... செம க்யூட் ஆ...இருக்கு... டேக் கேர்.. பை.. “ என்று சிரித்தவாறு அங்கு நிக்காமல் ஓடி விட்டாள்...

அதை கேட்டு அருகில் நின்றிருந்த மற்றொரு பெரியவரும் சிரித்துகொண்டே

“அந்த பொண்ணு சொல்றது கரெக்ட் தான் மா... நீ பார்க்க சூப்பரா இருக்க.. “ என்று அவர் மனதில் பட்டதை சொல்ல,

அந்த ரிசப்சனிஷ்ட் தன் வழக்கமான புன்னகையை சிந்தி உள்ளுக்குள்

“சரியான வாயாடி... “ என்று சிரித்து கொண்டாள்...

அந்த இரு பெண்களும் அந்த மருத்துவன் அறையை விட்டு சென்றதும் அந்த நெடியவன் தன் இருக்கையில் சென்று அமர்ந்து தன் கைகளை எடுத்து பின்னால் வைத்துக் கொண்டு இருக்கையில் சாய்ந்து அமர்ந்து கொண்டு அந்த அறையை மீண்டும் பார்வையிட்டான்....

அலை அடித்து ஓய்ந்த மாதிரி இருந்தது... சலசலவென்ற பேச்சும் அவளின் வாசமும் அந்த அறையை இன்னும் நிறைத்து இருந்தது...

எப்படி அலை திரும்ப திரும்ப அடிக்கும் பொழுது அது பார்க்க சலிப்பதில்லையோ அதே போல அவளின் வாய் மூடாத பேச்சும் கேட்க கேட்க திகட்ட வில்லை அவனுக்கு...

மெல்ல “பனிமலர்... “ என்று அவள் பெயரை மீண்டும் ஒரு முறை உச்சரித்து பார்த்தான்...

பனிமழை பொழிந்தது அவன் உள்ளே மீண்டும்... அவன் இதயம் மீண்டும் வித்தியாசமாக துடிக்க

“அப்படீனா ?? இவள் தான் நான் தேடும் தேவதை யா?? எனக்காக பிறந்து எனக்காக வளர்ந்து என்னை தேடி வந்த என்னவள் இவள் தானா?? சந்தேகமே இல்லை... இவள்தான் என்னவள்... “ என்று குதூகலித்தவன்

“கண்டு கொண்டேன்... கண்டுகொண்டேன்...
காதல் முகம் கண்டு கொண்டேன்...
விரல் தொடும் தூரத்திலே
வெண்ணிலவு கண்டுகொண்டேன்…
கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்... “

என்னவளை கண்டுகொண்டேன்... “

என்று தனக்கு மிகவும் பிடித்த, நீண்ட நாட்களாக பாடவேண்டும் என்று காத்திருந்த அந்த பாடலை உ ல்லாசமாக பாடி விசில் அடித்தபடி இருக்கையின் பின்னால் நன்றாக சாய்ந்து அந்த நொடிகளை மீண்டும் அனுபவித்தான் வசீகரன்...

சில நிமிடங்கள் கண்மூடி தன்னவளுடனான அந்த 10 நிடங்களை மீண்டும் அசை போட்ட வசீகரன் பின் கண் விழித்து

“டேய்... ஷ்யாம்... வாழ்க்கையிலயே இன்னைக்குத்தான் ஒரு நல்ல காரியம் பண்ணியிருக்க... உன்னால தான் என்னவளை கண்டு பிடிக்க முடிந்தது... உனக்கு ஆயிரம் இல்ல... கோடி முறை நன்றி.. “ என சிரித்துக் கொண்டான்....

டாக்டர் ஷ்யாம் வசீகரனின் கல்லூரித் தோழன்.. இருவரும் MBBS முடித்தபிறகு வசிதான் அவனையும் இந்த மருத்துவமனையில் சேர்த்து விட்டிருந்தான்.. ஷ்யாம்க்கு மேல படிக்க முடியாமல் போக ஜெனரல் பிரிவிலயே மருத்துவனாக நின்று விட்டான்...

வசீகரன் வேலை செய்து கொண்டே மேல் படிப்பையும் தொடர்ந்து இன்று புகழ்பெற்ற Cardiologist ஆக திகழ்கிறான்...

ஆனாலும் அவர்கள் நட்பு இன்னும் அப்படியே தான் தொடர்ந்து கொண்டிருக்கிறது....ஆதி, நிகிலனுக்கு பிறகு வசி மனம் விட்டு பழகுவது ஷ்யாமிடம் மட்டுமே..

இன்று சனிக்கிழமை என்பதால் ஷ்யாமுக்கு பேசன்ட்ஸ் சீக்கிரம் முடிந்து விட, வசியும் பிரியாக இருக்க, ஷ்யாம் வசியை தன் அறைக்கு அழைத்து இருந்தான் ஏதோ பேச வேண்டும் என்று...

அதற்குள் ஷ்யாமுக்கு அவசர சிகிச்சை பிரிவில் இருந்து ஒரு எமர்ஜென்சி கேஸ்க்காக அழைப்பு வர, வசியை அங்கயே இருக்கசொல்லி அவன் கிளம்பி சென்றிருந்தான்....

வசியும் அவன் இருக்கையில் அமர்ந்து அங்கு இருந்த ஒரு மருத்துவம் சம்மந்தமான புத்தகத்தை எடுத்து ஆழ்ந்து புரட்டிக் கொண்டிருந்தான்.. அப்பொழுதுதான் அந்த இரண்டு பெண்களும் உள்ளே வந்தது...

தான் ஜெனரல் மருத்துவன் இல்லை என்று சொல்ல வந்தவன் மலரின் முகத்தில் இருந்த ஏதோ ஒன்று அவனை கட்டிப்போட தன்னை மறைத்து அவர்களிடம் நாடகம் ஆடினான்....

அதுவும் நல்லதுக்குத்தான்.. அதனால் தான் தன்னவளை பற்றி, அவள் குரலை குறும்பை, ரசிக்க முடிந்தது.. அதோடு அவள் இருந்த அந்த 10 நிமிடங்களில் சிரிப்பு, முறைப்பு, அசட்டு சிரிப்பு, அவன் பணம் வாங்க ஒத்து கொண்டதும் அவள் முகத்தில் தோன்றிய அறுவெறுப்பு, கசப்பு, அதோடு மெல்லிய கோபம் என்று அவளின் அத்தனை பாவங்களையும் கண்டிருந்தான்...

ஒவ்வொரு பாவத்திலும் அவள் முகம் எப்படி இருந்தது என்று நினைக்க அவனுள் சிலிர்த்தது....

“ஈஸ்வரா... நான் கண்டு கொண்ட என்னவளை சீக்கிரம் என்னிடம் சேர்த்து விடு... “ என்று மனதுக்குள் வேண்டிக் கொண்டான்....

தன்னவளை கண்டதும் அவன் இதயம் துடித்ததை போல அவள் இதயமும் தனக்காக துடித்ததா?? அவள் இதயத்தில் என்ன இருக்கிறது ?? என்று அறியாமல், அறிய முயலாமல் போனான்...

அதனால் பெரும் வலி வேதனையை அணுபவிக்க போகிறான்.. என்றும் அறியாமல் போனான் மற்றவர்களின் இதயத்தை சரி செய்யும் அந்த மருத்துவன்...

அப்படி என்ன வலி வேதனையை இந்த வசீகர மருத்துவன் அனுபவிக்கப் போகிறான்?? நம் நாயகியின் இதயத்தில் அப்படி என்ன இருக்கிறது?? இனி வரும் அத்தியாயங்களில் பார்க்கலாம்...
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
பத்மினி செல்வராஜ் டியர்

வசீகரனுக்கு பனிமலர் அப்படி என்னம்மா கொடுமை பண்ணப் போறாள்?
ஊரில் இருப்பவர்களின் இதயத்தை சரிசெய்பவனுக்கு தன் இதயத்தைக் காப்பாற்றிக் கொள்ள தெரியவில்லையா?
 




Shaniff

முதலமைச்சர்
Joined
May 13, 2018
Messages
11,609
Reaction score
36,883
Location
Srilanka
Going very interesting dear....really romba nallaa irukku.👌👌👌👍👍👍
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top