தவமின்றி கிடைத்த வரமே-36

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Padmini Selvaraj

Author
Author
Joined
Mar 31, 2021
Messages
90
Reaction score
232
Points
33
Location
Bangalore
அத்தியாயம்-36

டுத்து வந்த இரண்டு மாதங்களும் சொர்க்கமாக இருந்தது அந்த புதுமண தம்பதியர்களுக்கு…!

முடிந்த வரை வசி இரவில் சீக்கிரம் வீடு திரும்பி விடுவான்…இரவு உணவை முடித்து தங்கள் அறைக்கு வந்தால் அதன் பிறகு அடுத்த நாள் அவன் கிளம்பி மருத்துவமனைக்கு செல்லும் வரைக்குமே மலருடனே சுற்றி கொண்டிருந்தான்..

மலருக்கும் தன் கணவனின் அன்பை, தன் மேல் பைத்தியமாக இருக்கும் அவன் ஆசையை எண்ணி பூரித்து கொண்டாள்..தன் திருமண வாழ்க்கைக்கு எதிரியாக எண்ணி இருந்த மித்ராவுமே இப்பொழுது அவளிடம் நட்புடன் தினமும் அழைத்து பேச, மலரும் மகிழ்ச்சியாகி போனாள்..

மொத்தத்தில் ஒரு சந்தோஷ உலகில் மிதந்து கொண்டிருந்தாள் பனிமலர்..

இப்பொழுது அவளுடைய MBA ப்ராஜெக்ட் ஐ RJS மருத்துவமனையிலயே பண்ண, அடிக்கடி அதன் விசயமாக RJS க்கும் சென்று வருகிறாள்..அங்கு பாரதியை பார்க்கும் சமயங்களில் அவளுடன் கதை அடித்து பேசி கொண்டிருந்தாலே பயங்கர உற்சாகம் ஆகிவிடுவாள் மலர்..

பாரதியும் மலரையே அந்த ஹாஸ்பிட்டல் மேனேஜ்மென்ட் பொறுப்பை எடுத்து கொள்ள சொல்ல அவளோ இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்.. இன்னும் நிறைய கற்று கொண்டு பொறுப்பை எடுத்து கொள்வதாக சொல்லி மறுத்துவிட்டாள்..

ஆனாலும் அடிக்கடி அங்கு சென்று பாரதிக்கும் சுசிலாவுக்கும் உதவி வந்தாள்..அதுவும் அந்த வயதிலும் சுசிலாவின் சுறுசுறுப்பை கண்டு வியந்து போவாள்..

அவளுக்கு அவரை போலவே சுறுசுறுப்பாக, எனர்ஜெடிக்காக எப்பவும் இருக்க வேண்டும் என்று எண்ணிக் கொள்வாள்..

பத்தாததற்கு வார விடுமுறைகளில் தானா சேர்ந்த கூட்டத்தின் கான்ப்ரன்ஸ் உரையாடலும், சில வாரங்கள் நேரில் சந்தித்து ஒருவரை ஒருவர் கலாய்த்து கலகலப்பாக பேசி சிரிப்பதும் என வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாகவே கழிந்தது இருவருக்கும்..

வசிக்கு மட்டும் ஒரு சின்ன வருத்தம்.. தன் மனைவியை அழைத்துக் கொண்டு ஹனிமூன் சென்று வர முடியவில்லையே என்று ..

அவனுக்கு அடுத்தடுத்து சில சர்ஜரிகள் இருப்பதாலும் மலருக்கும் MBA ப்ராஜெக்ட் சப்மிட் பண்ணி அதற்கான வைவா இருப்பதாலும் இருவருக்குமே வெளியில் பயணம் செய்ய நேரம் இல்லாமல் போனது..

ஆனாலும் தங்கள் வீட்டையே ஹனிமூன் ஸ்பாட் ஆக்கி தங்கள் அறையிலயே தினமும் தேனிலவை கொண்டாடினர். இங்கு இருப்பதால் ஒரே ஒரு தொல்லை..

இரவு நேரங்களில் தன் மனைவியுடன் மகிழ்ச்சியாக இருக்கும் நேரங்களில் திடீரென்று சில எமெர்ஜென்சி கேஸ் வந்து விடும்... அதனால் பாதியிலயே தன் மனைவியை பிரிய நேரும்.. சில நேரம் வீட்டிற்கே தாமதமாக வருவான்..

ஆனால் மலர் அதையெல்லாம் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை.. அவனுக்கே அது கில்ட்டியாக இருந்தாலும் மலர் அவனை கன்வின்ஸ் பண்ணுவாள்..

அவளுக்குமே அவன் பணியின் முக்கியத்துவம் தெரியும். அவன் தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் அந்த உயிரை காப்பாற்ற முடியாமல் போய்விட்டால் என்று எண்ணுகையிலயே தங்கள் சந்தோஷத்தை விட அந்த உயிரை இந்த உலகில் பிடித்து வைப்பதுதான் ரொம்ப சந்தோஷம் என்று சொல்லி அவனை தேற்றுவாள்..

இந்த மாதிரி மனைவி எத்தனை பேருக்கு கிடைக்கும் என்று பூரித்து போனான் வசி..

அவன் உடன் பணிபுரியும் அவன் வயது பல மருத்துவர்கள் இந்த மாதிரி எமர்ஜென்சி சிச்சுவேசனில் வேலை வரும் பொழுது வீட்டில் அவர்கள் மனைவிகள் அவர்களை புரிந்து கொள்ளாமல் சண்டை பிடிக்க, சில சமயம் அவர்கள் நினைத்த இடைத்திற்கு செல்ல முடியாமல் திடீர் வேலை வர, அந்த ஏமாற்றத்தில் அவர்கள் கோபத்தை தங்கள் கணவன்களிடம் காட்டி இருக்கிறார்கள்..

சில பேர் திருமணம் நடந்து சில நாட்களிலயே இருவருக்கும் ஒத்து போகாமல் பிரிந்தும் விட்டனர்..

ஆனால் அவனுக்கு அவனை புரிந்து கொண்ட அதுவும் அவன் கொள்கையே அவளுடையதாகவும் அவன் மதிக்கும் அந்த உயிரின் மதிப்பை அவளும் புரிந்து கொண்டு அவனுக்கு உதவுகிறாள் என அறிந்து கொண்டவனுக்கு ரொம்பவும் பெருமையாக இருந்தது..

“தனக்கு ஏற்றவளைத்தான் அந்த ஈஸ்வரன் காட்டி இருக்கிறான். நான் தவமின்றி கிடைத்த வரம் அவள்.. “ என்று கர்வபட்டு கொள்வான்.. அதனாலயும் அவள் மீது இன்னும் காதல் பெருகியது அவனுக்கு..

மலருக்கும் அதே போலத்தான்.. இப்படி ஒரு கணவன் கிடைக்க கொடுத்து வச்சிருக்கணும் என்று கர்வ பட்டுக் கொண்டாள்.

ஆனால் இருவருமே ஒன்றை மட்டும் மறந்து விட்டனர்... இருவருமே தங்கள் காதலை மனம் திறந்து சொல்லவில்லை. அவர்கள் கண்கள் பேசி கொண்டாலும் இதயம் சிக்னல் காட்டினாலும் வாய் திறந்து மனம் திறந்து இருவருமே தங்கள் காதலை சொல்லவில்லை..

மாறாக கணவன் மனைவியாக அதற்கான கடமையாக கூடி கழித்தனர்..

இருவரின் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியும் பூரிப்பும் இரு வீட்டு பெரியவர்களுக்கும் மகிழ்ச்சியை கொடுத்தது..

திடீர் கல்யாணம் என்றாலும் அதை ஏற்று கொண்டு எப்படியோ நல்ல படியாக இருவரும் வாழ்கிறார்களே என்று நிம்மதியாக இருந்தது..

புது ஜோடி இருவரின் மீதும் கவனத்தை செலுத்தி வந்த மீனாட்சிக்கு தன் மகளிடம் தெரிந்த மாற்றத்தை கவனிக்க தவறி விட்டார்..

அன்று ஞாயிற்று கிழமை.. காலை உணவை முடித்து விட்டு தன் கணவருடன் தோட்டத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார் மீனாட்சி..

நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் தன் கணவருடன் பல கதைகளை பேசுவது மீனாட்சி சுந்தர் இருவருக்குமே பிடிக்கும். அதனால் வார விடுமுறைகளில் தங்களுக்கான நேரத்தை ஒதுக்கி இருவரும் மனம் விட்டு அந்த வார நிகழ்ச்சிகள், தங்கள் குடும்பம் என்று அனைத்தையும் மனம் விட்டு பேசி கொள்வர்..

வசிக்கு அவர்களை பார்க்கும் பொழுதெல்லாம் பொறாமையாக இருக்கும்.. அவனுக்குமே அதே போல தன் மனைவியுடன் எப்பவும் இதே காதலுடன் மனம் விட்டு பேச வேண்டும் என்று தோன்றும்..

ஆனால் நேரம் இல்லாததால் சாவகாசமாக அமர்ந்து பேச முடியவில்லை.. அதே போல கிடைக்கும் கொஞ்ச நேர தனிமையிலும் அவளை பார்த்தாலெ அடுத்த நொடி பேச்சு மறந்து வெறும் ஆக்சன் மட்டும்தான்....

ஆனாலும் சீக்கிரம் தனக்கான நேரத்தை ஒதுக்கி மலரிடம் மனம் விட்டு பேச வேண்டும் என்று எண்ணி கொண்டான்...

இன்று வழக்கம் போல மீனாட்சி தோட்டத்தில் அமர்ந்து சுந்தருடன் பேசி கொண்டிருக்க, அப்பொழுது சமையல் அறையில் வைத்திருந்த அவருடைய அலைபேசி ஒலித்தது..

அந்த பக்கமாக வந்த மலர் அந்த அலைபேசியை எடுத்து திரையை பார்க்க அது வசுந்தரா படிக்கும் பயிற்சி மையத்தில் இருந்து வந்திருந்ததால் அதை அட்டென்ட் பண்ணி பேசினாள்..

அதில் சொன்ன செய்தியை கேட்டதும் அதிர்ச்சியானாள்...

சிறிது நேரம் கவனமாக மறுமுனையில் பேசுவதை கேட்டவள்

“ஓ.. கண்டிப்பா சார்.. நான் நேர்லயே வர்றேன்... “

“ஸ்யூர்..வி வில் டேக் கேர்.. தேங்க்ஸ் பார் நோட்டிபைங் அஸ்.. “ என்று அணைத்தவள் அதில் சொன்ன செய்தியை மீண்டும் ஒரு முறை மனதில் ஓட்டி பார்த்தாள்..

“இதை அத்தையிடம் இப்ப சொல்லணுமா?” என்று யோசிக்க,

“இல்ல.. இப்பதான் வசுந்தரா பற்றி கவலை இல்லாமல் அவங்க கொஞ்சம் சந்தோஷமா இருக்காங்க.. இப்ப போய் வசுந்தராவின் இன்னொரு பிரச்சனையை பற்றி சொல்லி அவர்களை கஷ்ட படுத்த வேண்டாம்..

நாமளே இதை ஹேண்டில் பண்ணலாம்..“ என்று முடிவு செய்தாள்..

மலர் முடிவால் வசுந்தராவின் பிரச்சனைக்கு முடிவு வந்து விடும். ஆனால் அவள் வாழ்க்கையில் சூறாவளி வீசப் போவதையும் அவள் வாழ்வே கேள்வி குறியாக நிற்க போவதையும் அறிந்திருக்க வில்லை அந்த பேதை பெண்..

மலர் முன்பு அந்த ஈசனிடம் சொல்லியதை போல, அவளுக்கும் அவள் கணவனுக்கும் வரத்தை கொடுத்து இப்பொழுது இருவரையும் சோதிக்க போகிறான் அந்த ஈசன்.. அவர்கள் அவன் சோதனையில் வென்று மீண்டு வருவார்களா? பொறுத்திருந்து பார்க்கலாம்..

தன் அறைக்கு சென்று வெளியில் செல்லும் வகையில் ஒரு சல்வாரை அணிந்து கொண்டு தன் ஸ்கூட்டி சாவியையும் எடுத்து கொண்டு கிளம்பி வந்தாள் மலர்..

தோட்டத்திற்கு சென்று தன் மாமியார் மாமனார் இருவரிடம் வெளியில் கொஞ்சம் வேலை இருப்பதாக சொல்லி கிளம்பி சென்றாள்..

அந்த புகழ்பெற்ற பயிற்சி மையத்தின் பெயரிட்டிருந்த அந்த கட்டிடத்தில் தன் வண்டியை நிறுத்தினாள் மலர்.. பின் அந்த மையம் இருந்த தளத்திற்கு சென்றவள் அதன் ரிசப்சனில் தன் மாமியாரை அழைத்தவர் பெயர் சொல்லி அவரை சந்திக்க வேண்டும் என சொல்ல, அவர்களும் ஒரு அறைக்கு அழைத்து சென்றனர்..

உள்ளே சென்றவள் அங்கு அமர்ந்திருந்த ஒரு நடுத்தர வயது உடைய நபரிடம் கை குலுக்கி தன்னை அறிமுக படுத்தி கொண்டாள்..

அவனும் சிநேகமாக புன்னகைத்து

“மை நேம் இஸ் ஜெகன்.. நான் தான் இங்கு பயிலும் மாணவர்களுக்கு கேர் டேக்கர் அன்ட் கவுன்சிலர்.. “ என்று தன்னை அறிமுக படுத்தி கொண்டான்..

மலரும் அவனை பார்த்து புன்னகைத்தவள்

“சார்.. நான் வசுந்தரா உடைய அண்ணி.. அவள் பிரெண்ட் ம் கூடத்தான்.. அதான் நீங்க போன் பண்ணியதும் பெரியவங்ககிட்ட கூட சொல்லாம நானே கிளம்பி வந்தேன். வாட் ஹேப்பன்ட் சார் ? “ என்றாள் கொஞ்சம் கவலையாக பதற்றத்துடன்..

அவள் அண்ணி என்று சொன்னதுமே புருவங்களை சுழித்தவன் யோசனையாக பார்க்க, மலரோ

“நான் வெறும் அண்ணி மட்டும் இல்ல சார். அவ பிரெண்ட் ம் கூடத்தான். என்கிட்ட அவ பிரியா பேசுவா.. அதனால் நீங்க என்கிட்டயே பேசலாம். “ என்று தெளிவு படுத்தினாள்..

கொஞ்சம் சமாதானம் ஆனவன்

“வெல் மிஸஸ் பனிமலர்..வசுந்தரா நல்லா படிக்க கூடிய ஸ்டூடண்ட்.. ஆனால் இப்ப கொஞ்ச நாளாகவே அவளுடைய மதிப்பெண் குறைந்து வருகிறது..விசாரித்தால் பதில் எதுவும் சொல்ல மாட்டேங்கிறா.. அதான் உங்களிடம் இன்பார்ம் பண்ணினேன்..

அவளுக்கு படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் வீட்டில் ஏதாவது பிரச்சனையா? ஐ மின் எப்ப பார் அம்மா அப்பா சண்டை போட்டுக்கறது, இல்லை சிப்ளிங்ஸ் கூடவோ ஏன் இந்த மாதிரி மாமியார் மருமகள் சண்டை, அண்ணி நாத்தனர பிரச்சனை.. என்று ஏதாவது ப்ராப்ளம் இருக்கா? “

“அச்சோ.. அப்படி எல்லாம் எதுவும் இல்லை சார்.. எங்க வீடு எப்பவுமே அமைதியா இருக்கும்.. அதுவும் வசு எங்க கூட எல்லாம் எப்பவும் கலகலப்பா பேசுவா.. அப்படி எல்லாம் எதுவும் இல்லை.. “

“ஹ்ம்ம்ம் அப்படினா வேற ஏதாவது பிரச்சனை ? அவளுக்கு நண்பர்கள் , அவர்களோடு வெளில சுத்துவது? இப்படி எதுவும் இருக்கா? “

“அப்படியும் யாரும் இல்லை சார். அவள் பள்ளி முடிந்ததும் , இங்கு வந்து விடுவாள்.. இங்க க்ளாஸ் முடிந்ததும் நேரா வீட்டிற்கு வந்து விடுவாள்..”

“செல்போனில் மணிகணக்கா பேசுவது, சேட் பண்ணுவது இப்படி? “

“ஹ்ம்ம் அப்படியும் தெரியலை சார்.. சேட் பண்ண அவள் போனில் வசதியில்லை.. அவள் ஒரு சாதாரண போன் தான் வைத்திருக்கிறாள்.. பன்னிரண்டாம் வகுப்பு மிகவும் முக்கியம் என்பதால் அவளுக்கு ஸ்மார்ட் போன் எதுவும் வாங்கி கொடுக்கலை..

அவளே வேண்டாம் என்று சொல்லி விட்டாள்.. ஒரு நார்மல் போன்தான் வைத்திருக்கிறாள். அதுலயும் மணி கணக்கா பேசுவதெல்லாம் இல்லை..நான் அவள் அந்த போனில் பேசியே பார்த்ததில்லை.. கண்டிப்பா அப்படி எதுவும் இருக்காது.. “ என்று மறுத்தாள்..

“ஹ்ம்ம் அப்படீனா இந்த வயசுல வர்ற மாதிரி காதல் கீதல் னு ஏதாவது ? ஏன் கேட்கறனா இது அவர்களுக்கு இரண்டும் கெட்டான் வயது. கொஞ்சம் தடம் மாறினாலும் அவங்க வாழ்க்கையே மாறிடும்..

நல்லா படிக்கிற பசங்க கூட இந்த மாதிரி காதல் என்ற சூழலில் மாட்டி கொண்டால் அதில் இருந்து வெளி வருவது ரொம்ப கஷ்டம்.. அவர்கள தங்கள் உணர்வுகளை சரியாக கையாண்டால் மட்டுமே அதிலிருந்து வெளி வர முடியும்..

எனக்கு என்னவோ வசுந்தரா அந்த மாதிரிதான் ஏதோ ஒரு சிக்கலில் இருக்கிறா னு தோணுது..வீட்ல எதுவும் மனதை பாதிக்கிற மாதிரி பிரச்சனை இல்லை என்றால் கண்டிப்பா இந்த மாதிரி தான் எதுவும் இருக்கும்..

ஆமா நீங்க அவ படிக்கிறப்ப மானிட்டர் பண்றீங்களா?”

“இல்ல சார்.. அவளே ரொம்ப பொறுப்பானவ.. அவ ரூம் லயே எல்லாம் வசதியும் இருப்பதால் அவளை யாரும் கண்கானிப்பதில்லை.. அதுக்கு அவசியமும் இல்லை. ஏனா அவளுக்கே டாப் ஐஐடி ல சேரணும்னு ரொம்ப ஆசை, கனவு.. அதுக்காக ரொம்பவுமே ஹார்ட் வொர்க் பண்றா..”

“ஹ்ம்ம்ம் ஐ நோ.. வசு ரொம்பவும் சின்சியர் ஸ்டூடண்ட் தான்.. ஆனாலும் முன்பு சொன்ன மாதிர் எவ்வளவு சின்சியர் ஆனாலும் ஒரு சிறு புள்ளி அவர்களை டிஸ்டர்ப் பண்ணினாலும் அவர்கள் தடம் புரண்டு விடுவார்கள்..

அதனால்தான் இந்த மாதிரி தனி அறை கொடுத்து அவர்கள் பொறுப்பாக படிக்கிறார்கள் என்று மேம்போக்காக விட்டு விடாமல் அடிக்கடி அவர்கள் படிக்கும் அறைக்கு சென்று என்ன படிக்கிறார்கள் என்று மேற்பார்வை இடுவது அவசியம்..

சில பேர் படிக்கிறேன் என்று புத்தகத்தை திறந்து வைத்து கொண்டு மணி கணக்காக அமர்ந்து இருந்தாலும் அவர்கள் கவனம் புத்தகத்தில் இல்லாமல் வேற பக்கம் இருந்தால் அவர்களால் அதிலிருது மிண்டு வர முடியாது..

ஆனால் யாராவது அடிக்கடி அவர்கள் அறைக்கு விஜயம் செய்து ஒரு பார்வை பார்த்து வந்தால் இந்த மாதிரி எதுவாக இருந்தாலும் உடனே அவர்கள் வெளி வந்து விடுவார்கள்..

அதனால் நீங்க வசுந்தரா கிட்ட பிரியா பேசுங்க.. அவ மனசுல ஏதோ ஒன்னு இருக்கு.. இல்லைனா இந்த மாதிரி மார்க் குறைய சான்சே இல்லை.. பாடங்கள் எல்லாம் ஏற்கனவே அவள் படித்ததுதான்..

இப்பொழுது ரிவிசன் தான் போய்கிட்டிருக்கு. அதனால் கடினமான பாடம் என்றும் சொல்ல முடியாது. இதே பாடத்தில் முன்பு நல்ல மார்க் வாங்கி இருக்கிறாள்.. ஆனால் இப்பொழுது தான் குறைந்து விட்டது..

அதனால் மிஸஸ் பனிமலர்.. நீங்க அவகிட்ட பேசுங்க.. அதோடு எக்சாம் வேற பக்கத்துல வருகிறது... சீக்கிரம் அவளோட ப்ராப்ளத்தை கண்டு புடிச்சு சால்வ் பண்ணுங்க.. என்ன உதவினாலும் என் கிட்ட கேளூங்க.. “ என்று முடித்தான்..

மலரும் அவரிடம் பேசிய பிறகு கிளம்பி தன் வண்டியை எடுத்து கொண்டு RJS மருத்துவமனைக்கு சென்று கொஞ்ச நேரம் சுசிலாவிடம் ம் பாரதியிடம் ம் உதவி செய்து விட்டு மாலை வீடு திரும்பினாள்..

மீனாட்சியிடம் சென்று சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தவள் வசு எங்க என்று கேட்க அவள் படித்து கொண்டிருப்பதாக சொன்னார்..

“சரி.. இரவு பார்த்து கொள்ளலாம் என்று விட்டு விட்டவள் தன் அறைக்கு சென்று வசுந்தராவை பற்றி யோசிக்க ஆரம்பித்தாள்..

அந்த ஜெகன் சொன்ன மாதிரி வசு காதல் மாதிரி எதுலயும் மாட்டி இருப்பாளா? அவளை பார்த்தால் அப்படி எதுவும் தெரிய வில்லையே . எப்பவும் போலத்தான் இருக்கிறாள்.. யாரிடமும் மணிகணக்காக போனில் பேசுவதும் இல்லை.. அவள் அறை கதவு மூடி இருந்தாலும் உள்ளே பேசுவது வெளியில் கேட்கும்..

அப்படி ஒளித்து மறைத்து பேசுபவளும் அல்ல.. அத்தை அவளை அப்படி வளர்க்கவும் இல்லை.. வேற என்னவாக இருக்கும்? “ என்று யோசித்தவாறே தன் அலைபேசியை நோண்டி கொண்டிருந்தாள் மலர்..

கை தானாக வாட்ஸ்அப்பிற்கு செல்ல, அங்கு ஒவ்வொருவரின் டிபி யை பார்த்து வந்தவள் கை தானாக அவளுடைய டிபிக்கு சென்றது..

அதை பெரிது பண்ணி பார்த்தவள் அதில் அவளுடைய ரிசப்சன் பொழுது கடைசியாக எடுத்திருந்த குடும்ப புகைபடத்தை வைத்திருந்தாள்.. இருவர் குடும்பமும் ஒன்றாக இணைந்து நிற்க, அனைவரும் சிரித்த வண்ணம் அதில் நின்று கொண்டிருந்தனர்..

அவள் பார்வை எதேச்சையாக வசுந்தராவிடம் செல்ல அவள் முகத்தை அவளை மட்டும் சற்று பெரிதாக்கி பார்த்தாள்.. அவள் முகத்தில் சிறு வெட்கமும், முகத்தில் ஒரு பூரிப்பும் தெரிந்தது.. அதை உற்று பார்த்தால் ஏதோ வித்தியாசமாக இருந்தது..

ஒரு வேளை போட்டோக்கு போஸ் கொடுப்பதற்காக அப்படி சிரித்திருந்தாளா ? என்று யோசித்தாலும் எங்கயோ இடித்தது.. உடனே இன்னும் கொஞ்சம் பெரிதாக்க, அவள் கண்ணில் ஓரப் பார்வையில் அருகில் நின்றிருந்தவரை பார்ப்பது தெரிந்தது..

உடனே அவள் அருகில் யார் இருக்கிறார் என்று பார்க்க, அங்கு இனியவன் நின்று கொண்டிருந்தான்.. அவன் முகத்திலும் புன்னகை பெரிதாக இருந்தது..

அதை கண்டதும்

“ஓ மை காட்.. “ என்று திடுக்கிட்டவள் வேகமாக எழுந்து அங்கு அலமாரியில் இருந்த அவர்களுடைய ரிசப்சன் ஆல்பத்தை எடுத்து வந்து பார்த்தாள்..

வசுந்தரா இருந்த புகைப்படங்களை மட்டும் உற்று பார்க்க, எல்லா புகைப்படங்களிலும் அவள் இனியவனுடன் அருகில் நின்றிருந்தாள்.. அதுவும் சில புகைப்படங்களில் நெருக்கமாக நின்றும் சிலதில் அவன் கையை பிடித்த படியும் இருந்தாள்..

சாதாரணமாக பார்த்தால் எதுவும் வித்தியாசமாக தெரியாது.. ஆனால் அதையே வேற கண்ணோட்டத்தில் பார்க்க அவளுக்கு ஏதோ புரிவதை போல இருந்தது..

அதோடு மலர் தன் தம்பியிடம் போனில் பேசும்பொழுது வசுந்தரா அருகில் இருந்தால் இனியவன் பெயரை கேட்டதுமே அவள் முகம் மலரும். கண்கள் படபடக்கும். போனில் மட்டும் அல்ல அவனை பற்றி எப்பொழுது பேசினாலும் அவள் முகத்தில் ஒரு ஆர்வம் வந்து போனது இப்பொழுது புரிந்தது..

மேலும் அவர்கள் இருவரும் அறிமுகமான நாளை நினைத்து பார்க்க, அதன் பின் வசுந்தராவின் விழாவில் அவன் அவளுக்கு செயின் போட்டது எல்லாம் நினைவு வர, அவளுக்கு உண்மை புரிந்தது..

அதை உணர்ந்ததும் ஒரு பக்கம் மகிழ்ச்சியாக இருந்தாலும் மறுபக்கம் கவலையாக இருந்தது.. இதை அந்த வீட்டில் எப்படி எடுத்து கொள்வார்களோ என்று..

இருந்தாலும் தன் சந்தேகத்தை தெளிவு படுத்த தன் தம்பிக்கு அழைத்தாள் மலர்..

அவள் அழைப்பை ஏற்றவன்

“ஹாய் மலர்.. எப்படி இருக்க? வீட்ல எல்லாரும் நலமா? என்ன இந்த நேரத்துல போன் பண்ணி இருக்க ? “ என்று கேள்விகளை வரிசையாக அடுக்கினான் இனியவன்..

“டேய்.. கேள்விக்கு பொறந்தவனே.. கொஞ்சம் நிறுத்தி ஒவ்வொன்னா கேளேன்டா.. ஏன் எடுத்த உடனே எல்லாத்தையும் கொட்டிடற? “ என்று முறைத்தாள்..

“ஹீ ஹீ ஹீ.. இப்பயே கேட்டுகிட்டா தான்.. நீ பேச ஆரம்பிச்சா அப்புறம் தான் நீ என்னை பேசவே விட மாட்டியே.. “ என்று மடக்கினான்..

“சரி சரி.. எல்லாரும் இங்க நல்லா இருக்கோம்... நீ எப்படி இருக்க ? .. “ என்று விசாரித்து சிறிது நேரம் அவனுடன் வம்பு இழுத்து பேசி கொண்டிருந்தவள் ஏதோ யோசித்து

“டேய்.. இனி. நீ வசுகிட்ட போன்ல பேசுனியா? “ என்றாள் தயங்கியவாறு..

“இல்லையே மலர்.. அவளை நான் உன் ரிசப்சன் அப்ப பார்த்ததும் பேசியதும் தான்.. அதுக்கு பிறகு நான் அவகிட்ட பேசலையே.. ஏன் என்னாச்சு அவளுக்கு ? “ என்றான் பதட்டமாக

அவன் குரலில் தெரிந்த பதட்டமே அவள் சந்தேகத்தை ஊர்ஜித படுத்துவதாக இருந்தது....

“அவளுக்கும் ஒன்னும் இல்லை. நல்லாதான் இருக்கா.. “ என்று தயங்கினாள்.

மலர் திடீர்னு வசு பற்றி கேட்டதும் பின் தயங்கி நிற்பதையும் கண்ட இனியவனுக்கு ஏதோ ஒன்று சரியில்லை என தோன்ற

"மலர்.. என்னாச்சு வசுக்கு ? நீ ஏன் இப்படி தயங்கி பேசுற. என்கிட்ட ஏதோ கேட்க வந்திட்டு..நான் உன் தம்பிங்கிறதை விட உனக்கு ஒரு நல்ல பிரண்ட் ஆ தான் இருந்திருக்கேன்..

அதனால எது கேட்கறதனாலும் தயங்காம கேள். " என்று ஊக்குவித்தான்...

"ஹ்ம்ம்ம் சரி இனியா... நேரடியாகவே கேட்கறேன்.. நீ வசு வ லவ் பண்றியா? " என்றாள்

அதை கேட்டு மறுமுனையில் அமைதியாக இருந்தான் இனியவன்.. அவன் மலர் வேற ஏதோ கேட்க தயங்கி நிற்கிறாள் என எதிர்பார்த்தவன் நேரடியாக இந்த கேள்வியை கேட்கவும் தடுமாறி போனான்..

அவனுக்கே விடை தெரியாத கேள்வி அல்லவா? வசுவை சந்தித்ததில் இருந்தே அவன் உள்ளே ஒரு சலனம் வந்திருப்பது உண்மையே.. அவளை பார்க்கும் பொழுதெல்லாம் அவன் இதயம் எகிறி குதிப்பதும் உடல் எல்லாம் ஒரு வித பரவசம் படர்வதும் உண்மைதான்.. ஆனால் அதுதான் காதலா என்றால் விடை தெரியவில்லை அவனுக்கு..

அவன் அமைதியாக இருக்கவும் மறுமுனையில் இருந்த மலர்

“டேய் இனி.. உண்மையை மறைக்காமல் சொல்.. நீ சொன்ன மாதிரி நானும் நீயும் பிரண்ட் ஆ தான பழகறோம்.. அப்ப என்கிட்ட சொல்ல உனக்கு என்ன தயக்கம்.. “ என்று அவன் வரிகளையே திருப்பினாள்..

“ஹ்ம்ம் தெரியல மலர்... ஆனால் அவளை பார்க்கும் பொழுதெல்லாம் ஒரு மாதிரி படபடப்பா இருக்கு.. அவளை பார்த்துக் கொண்டே இருக்கணும்.. அவள் குரலை கேட்டு கொண்டே இருக்கணும்.. குறிப்பா அவ முகத்துல இருக்கிற சிரிப்பு மறையாம அப்படியே கண்ணுக்குள்ள வச்சு பார்த்துக்கணும் போல இருக்கு... “

“ஹ்ம்ம்ம் அப்புறம் எங்க பார்த்தாலும் அவள் முகமே தெரியுமே.. புத்தகத்தை திறந்தால் வசு முகமே வந்து கண் சிமிட்டுமே.. சரியா பசிக்காது.. நைட் தூக்கம் வராது.. கனவுலயும் அவள் முகமே வருமே... “ என்று சொல்லி சிரித்தாள் மலர்

“வாவ்... அதே அதே அதே தான்.. சூப்பர் மலர்.. அப்படியே சொல்ற.. எப்படி ? “ என்றான் ஆச்சர்யமாக..

“போடாங்.. இதைத்தான் எத்தனை காதல் படத்துல பார்த்திருக்கேன்.. அதுக்குத்தான் நம்ம தமிழ் படத்தையும் அப்பப்ப பார்க்கணும் ங்கிறது.. எப்ப பார் அந்த இங்கிலீஸ் படத்தையே பார்த்தால் நம்மல சுத்தி நடக்கறது தெரியாது தம்பி.. “ என்று சிரித்தாள்..

“ஹ்ம்ம்ம் அப்ப எனக்கு வந்திருப்பது நிஜமாகவே காதல் தானா?? இதை எப்படி கன்பார்ம் பண்ணுவது? “ என்றான் சந்தேகமாக..

“அடிங்க.. டேய்.. நீ ஒரு ஐஐடி என்ஜினியரிங் ஸ்டூடன்ட் னு ஒத்துக்கறேன்.. அதுக்குனு எல்லாத்தையும் பரிசோதித்து கன்பார்ம் பண்ண முடியாது டா ஒட்டடகுச்சி.. சிலது பெரியவங்க சொல்ற தியரியை பாலோ பண்ணனும்..”

“ஹ்ம்ம்ம் ஒருவேளை இது காதல் இல்லாமல் வெறும் ஹார்மோன்களின் தாக்கமா இருந்தால்? வசுவை பார்க்கிறப்போ ஒரு மாதிரிதான் இருக்கு.. சில நேரம் அவள் நினைவாகவே இருக்குதான்.. ஆனால் இது காதல்தான் னு எப்படி கண்டுபுடிக்கிறது? “

“டேய்..என்கிட்ட நல்லா வாங்கி கட்டிக்க போற.. உன் நல்ல நேரம் நீ நேர்ல இல்லை.. இப்படியே பேசின, இந்த நிமிசமே பறந்து வந்தாவது பாம்பே வந்தே அடிப்பேன்.. “ என்று முறைத்தவள்

“நீ சொல்ற மாதிரி உன் இதயத்துல இருக்கறதையெல்லாம் என்னனு கண்டு புடிச்சு சொல்ல இன்னும் எந்த மெடிக்கல் எக்யூப்மென்ட் ம் வரலை.. நான் வேணா என் புருசன் கிட்ட சொல்லி இந்த ஹார்ட் க்குள்ள என்ன இருக்குனு கண்டு புடிச்சு சொல்ற மாதிரி ஆராய்ச்சி பண்ண சொல்றேன்..” என்று நக்கல் அடித்தாள்..

“ஹா ஹா ஹா .. அது ஹார்ட் இல்லை டீ.. ப்ரெய்ன்.. ஏன்னா நம்ம நினைவுகள் எல்லாம் ப்ரெய்ன் ல தான் ஸ்டோர் ஆகும்..ஹார்ட் ல இல்ல.. நீ பார்க்கிற அந்த மொக்க படத்துல தான் லவ் ன உடனே ஹார்ட் ஐ போட்டிடறாங்க.. “ என சிரித்தான்..

“டேய் அறிவாளி.. இல்ல விஞ்ஞானி.. நான் மக்காவே இருந்திட்டு போறேன்.. நீ ட்ராக் ஐ மாத்தாத.. உண்மையை சொல். நீ வசுவை லவ் பண்றியா ? “ என்று மீண்டும் பழைய கேள்விக்கு வந்து நின்றாள் மலர்.

அவனும் கொஞ்சம் சீரியஸ் மோட் க்கு வந்தவன் சிறிது நேரம் யோசித்தவன்

“ஐ திங் சோ மலர்.. “ என்றான் சிறு வெட்கத்துடன்

“என்னது திங் ஆ? டேய்.. வெட்டு ஒன்னு துண்டு இரண்டு னு ஆமா, இல்லைனு சொல்லுடா.. வழவழனு இழுத்து கிட்டு இருக்க.. “ என்றாள் பொறுமை இழந்து..

“ஹ்ம்ம்ம் மலர்... அவளை பார்க்கிறப்பவும் நினைக்கிறப்பவும் ஒரு மாதிரி பீல் தான்.. ஆனால் இதுதான் காதல் என்றால், இது காதலிப்பதற்கான வயதா? எனக்கு இப்பதான் 23 வயது.. அவளுக்கு 19..

எனக்குள்ள இருக்கிற இந்த பீல் எப்படி காதல் னு சொல்றது? தெரியலை.. ஆனால் வசுக்கும் அது மாதிரி என்னால என்னை பார்த்தால் ஒரு பீல் இருக்கானு தெரியலையே..

அவ என்கிட்ட சாதரணமா உரிமையோடு பேசியிருந்தால் பழகி இருந்தால் அதை நான் தப்பா எடுத்து கிட்டு அவ கிட்ட ஏதாவது உளறி, சொதப்பிட கூடாது..

ஏனா இதுல உன் வாழ்க்கையும் அடங்கி இருக்கு.. நான் ஏதாவது செய்ய போய் அது உன் வாழ்க்கையை பாதிக்க கூடாது..உன் வீட்டு பெரியவங்களும் என்னை ஏத்துக்கணும்.. “ என்றான் பொறுப்பான தம்பியாக...!
 
Advertisements

Latest Episodes

Advertisements