• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

தவமின்றி கிடைத்த வரமே-4

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Padmini Selvaraj

மண்டலாதிபதி
Author
Joined
Mar 31, 2021
Messages
220
Reaction score
1,159
Location
Bangalore
அத்தியாயம்-4

ரு வாரம் ஓடியிருந்தது..

அன்று அதிகாலை எழும்பொழுதே மிகவும் உற்சாகமாக இருந்தான் வசீகரன்...

இன்று மட்டுமல்ல எப்பொழுதுமே காலையில் எழும்பொழுது உற்சாகமாக இதயத்தை வைத்து கொள்ளவேண்டும்.. தேவையில்லாத கவலைகளையும் குப்பைகளையும் இதயத்தில் தேக்கி வைத்து அதற்குள் உழன்று கொண்டிருக்ககூடாது...

“முடிந்தவரை நேற்றைய கசப்பான, இதயத்தை வருத்தும் எல்லாவற்றையும் தூக்கி தூர போட்டு மறுநாள் காலையில் எழும் பொழுது இதயத்தை எப்பவும் பிரஸ்ஸாக வைத்து கொள்ள வேண்டும் அன்றைய நாளின் புது அனுபவங்களை சேகரிக்க ..” என்று ஒரு இதயநல மருத்துவனாய் மற்றவர்களுக்கு அறிவுறுத்துவதால் அவனுமே அதை எப்பவும் பின் பற்றுவான்...

அதனால் காலை எழும்பொழுது ஐயோ எழனுமே என்று முகத்தை சுழிக்காமல் உற்சாகமாக எழுவது அவன் வழக்கம்...

அதிலும் இப்பொழுது கூடுதலாக அந்த குறும்புக்காரியும் அவன் இதயத்தில் குடியேறியிருக்க அவன் உற்சாகத்துக்கு கேட்கவா வேண்டும்??

எவ்வளவு களைப்பாக இருந்தாலும் அவளின் அந்த மலர்ந்த முகத்தை அதில் இருக்கும் குறும்பு சிரிப்பை நினைத்தாலே அவன் அசதி எல்லாம் பறந்து உற்சாகம் ஓடிவந்து அவனை ஒட்டிகொள்ளும்...

இன்றும் அதே போல மனதில் புத்துணர்ச்சியுடன் எழுந்தவன் குளியலறைக்குள் சென்று ரெப்ரெஸ் ஆகி தான் அணியும் ட்ராக் பேன்ட்க்கு மாறியவன் தன் காலை ஓட்டத்தை ஆரம்பித்தான்...

வழக்கம் போல உல்லாசமாக விசில் அடித்த படி அங்கு இருந்த மக்களை, மரம் செடி கொடிகளை ரசித்துக் கொண்டே ஓடியவன் அந்த பூங்காவில் இருந்த ஒரு ரோஜா செடியை கண்டு அதிசயித்து நின்றான்....

அந்த செடி அங்கு வைத்ததில் இருந்தே தினமும் அதை கவனித்துக் கொண்டே இருக்கிறான்.. அந்த செடி மெல்ல வளர்ந்து ஒரு வாரம் முன்புதான் மொட்டு விட்டிருந்தது...

வீட்டில் ஒரு செடி வைத்தால் அதை அந்த வீட்டு குழந்தைகள் தினமும் சென்று பார்த்துவருவர்... ஒவ்வொரு நாளும் எவ்வளவு வளர்ந்து இருக்கிறது என்று ஆர்வமாக கவனித்து ஆர்பரிப்பதில் ஒரு சுகம்..

அதையும் பள்ளியில் தன் வகுப்பு தோழர்களிடம் பெருமையாக சொல்லி கொள்வர் அவர்கள் வீட்டு புதுசெடி எவ்வளவு வளர்ந்து இருக்கிறது என்று ...

அதே போல வசியும் அந்த ரோஜா செடியை தினமும் கவனித்து வருவான்.. சென்ற வாரம் அரும்பியிருந்த அந்த ரோஜா மொட்டு கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து வந்ததை தினவும் கவனித்து வந்தான்தான்....

இன்று அதிசயமாக அந்த மொட்டு விரிந்து அழகிய பெரிய ரோஜாவாக மலர்ந்திருந்தது....அதுவும் அவனுக்கு பிடித்த இளமஞ்சள் நிறத்தில்...

அதிலும் அதன் மேல் பனித்துளிகள் பட்டு ஆங்காங்கே திரண்டு நிக்க, அந்த பனியில் நனைந்த புது ரோஜா இன்னும் அழகாக சிரித்தது அவனை பார்த்து....

அந்த ரோஜாவையே இமைக்க மறந்து ரசித்திருந்தான்.... அந்த பனிமலரின் சிரிப்பை பார்க்கையில் தானாக அவனுக்கு தன் பனிமலரின் நினைவு வந்தது...

அவளும் இதே போலத்தான் மலர்ந்து சிரித்திருந்தாள் அன்று... சிறிது நேரம் கண் குளிர அந்த மலரை ரசித்தவன் சுற்றிலும் பார்த்து யாரும் அருகில் இல்லை என்று பார்த்து கொண்டு குனிந்து அந்த பனிமலரின் இதழில் தன் இதழை வைத்து அதற்கு வலிக்காமல் மெல்ல முத்தமிட்டான்....

அப்படியே அது தன்னவளின் திரண்டு சிவந்திருந்த இதழை தீண்டிய சுகத்தை தர அப்படியே உள்ளுக்குள் சிலிர்த்து கிறங்கி நின்றான்....

தன்னவளுக்கே தன் முதல் காதல் பரிசை கொடுத்ததை போல இருந்தது அவனுள்...

தான் கொடுத்த பரிசிற்கு அந்த சண்டக்காரி அவனை செல்லமாக முறைத்து பார்ப்பதை போல அந்த பட்டு ரோஜாவும் அவனை பார்த்து செல்லமாக முறைக்க, அதன் இதழை மனமே இல்லாமல் விடுத்து அதன் முறைப்பை ரசித்தவாறு கண் சிமிட்டி குறும்பாக சிரித்தான்....

பின் “Have a nice a day டார்லிங்... மீண்டும் நாளை சந்திக்கலாம்... பை... “ என்றவாறு அந்த பனிமலருக்கு கை அசைத்து விடை பெற்று தன் ஓட்டத்தை தொடர்ந்தான்....

நம் நாயகனுக்கு எதிரான அவன் பனிமலரோ காலையில் சீக்கிரம் எழும் பழக்கமே கிடையாது...எப்பவும் 8 மணிக்கு மேல் தன் அன்னையின் வழக்கமான திட்டை காது குளிர கேட்டு போனால் போகட்டும் என்று மனமே இல்லாமல் எழுபவள்...

பின் அவசர அவசரமாக கிளம்பி, தன் அன்னை திட்டிக் கொண்டே அவளுக்கு ஊட்டி விட, காலை உணவை அவசரமாக வாயிற்றில் திணித்து கொண்டு அவசரமாக அலுவலகத்திற்கு ஓடுபவள்...

அதுவும் இன்று சனிக்கிழமை என்பதால் வழக்கமாக 9 அல்லது 10 மணிக்குத்தான்... உறங்குவது போரடிக்க, போனால் போகுது என்று எழுவாள்...

இன்றும் அதே போல போர்வையை இழுத்து போர்த்தி கொண்டு நன்றாக உறங்கி கொண்டிருக்க, திடீரென்று தன் இதழில் யாரோ முத்தமிட்டதை போல இருக்க, திடுக்கிட்டு விழித்தாள்...

தன் கண்ணை கசக்கி விட்டு சுற்றிலும் பார்க்க, யாரும் இல்லை அங்கு...

“சே.. என்னது இது??... யாரோ முத்தமிட்டதை போல, அதும் நேரில் அனுபவித்த மாதிரியே இருந்ததே... “ என்று மெல்ல தன் இதழை வருடியவள்

“ஒரு வேளை கனவோ?? கனவில் கூட யார் இப்படி செய்ய முடியும்.?? ஒரு வேளை என் வருங்கால புருசனோ?? “ என்று தன் தலையை தட்டி யோசித்தவள்

“ஹ்ம்ம்ம்ம் யாரா இருந்தால் என்ன.. இன்னொரு தரம் இப்படி பண்ணினான் இந்த மலர்கிட்ட நல்ல வாங்கி கட்டிக்குவான்... இப்ப நம்ம தூக்கத்தை கண்டினுயூ பண்ணலாம் .. “ என்று மீண்டும் படுத்து தன் தூக்கத்தை தொடர்ந்தாள்...

தன் காலை ஓட்டத்தை முடித்து வீட்டிற்கு திரும்பியவன் டைனிங் டேபிலில் அமர்ந்திருந்த தன் அன்னை மற்றும் தங்கையை கண்டு அங்கு சென்றவன் தன் தாயின் கழுத்தை கட்டிக் கொண்டு காலை வணக்கத்தை சொல்லி, பின் தங்கையின் தலையை செல்லமாக பிடித்து ஆட்டி அவள் கன்னத்தை கிள்ளியவன் உல்லாசமாக விசில் அடித்தபடி துள்ளலுடன் மாடிப்படியில் தாவி ஏறினான் தன் அறைக்கு செல்ல....

அவனின் செயலை கண்டு அதிசயித்தனர் தாயும் மகளும்...

“ஹ்ம்ம்ம் என்னாச்சு மம்மி?? “ என்று வசு கண்ணால் ஜாடை காட்டி தன் அன்னையை கேட்க அவரோ எனக்கு தெரியாது… என்று உதட்டை பிதுக்கி சிரித்தார்...

“ஹ்ம்ம்ம் சம்திங் ராங் மம்மி.. எதுக்கும் உன் புள்ளைய குளோசா வாட்ச் பண்ணுங்க... “ என்று கண்சிமிட்டி சிரித்தவாறு பள்ளிக்கு கிளம்பி சென்றாள்...

துள்ளலுடன் தன் அறைக்கு சென்றவன் மேலும் தன் உடற்பயிற்சியை முடித்து பின் குளித்து முடித்து மருத்துவமனை செல்ல தயாராகி கீழ வந்தான்....

தோட்டத்தில் உலாவிக் கொண்டிருந்த மீனாட்சி தன் மகன் வருவதை கண்டதும் அவரும் உள்ளே வந்து அவனுக்கு காலை உணவை எடுத்து வைக்க, அவனும் அவருடன் மற்ற விசயங்களை பேசிக் கொண்டே அவருக்கு எதுவும் பேச, கேட்க வாய்ப்பு கொடுக்காமல் அவசரமாக உணவை முடித்து கை கழுவி நழுவி சென்றான்...

அவனின் செய்கையிலயே ஏதோ விசயம் இருக்கிறது என்று புரிந்து கொண்ட அந்த தாய் அவசரமாக பூஜை அறைக்கு சென்று அந்த ஈசனின் முன் நின்று தன் வழக்கமான கோரிக்கையை வைத்தார்.....

தன் அன்னையின் பார்வையில் இருந்து தப்பித்த சந்தோசத்தில் தன் காரை எடுத்து கிளம்பியவன் சிறிது தூரம் சென்றதும் காரில் இருந்த பாடலை ஒலிக்க விட அதில் ஒலித்த பாடலை கண்டு இன்னும் சிலிர்த்து போனான்...

பனிவிழும் மலர்வனம்
உன் பார்வை ஒரு வரம்
இனி வரும் முனிவரும்
தடுமாறும் கனிமரம்…

சேலை மூடும் இளஞ்சோலை..
மாலை சூடும் மலர்மாலை
இருபது நிலவுகள்
நகமெங்கும் ஒளிவிடும்
இளமையின் கனவுகள்
விழியோரம் துளிர்விடும்
கைகள் இடைதனில் நெளிகையில்
இடைவெளி குறைகையில்
எரியும் விளக்கு சிரித்து கண்கள் மூடும்……


என்று எஸ்.பி.பி சார் உருகி அனுபவித்து பாட, அவனும் தன் வசீகர குரலில் அவருடன் இணைந்து அனுபவித்து பாடினான் உல்லாசமாக...

அதில் ஒலித்த ஒவ்வொரு வரிகளும் அவனுக்கு அவன் பனிமலரை நினைவு படுத்த மெல்ல சிரித்து கொண்டான்...

இன்றோடு அவளை பார்த்து ஒரு வாரம் ஆகிவிட்டது... அவளை பார்த்து பழகியது என்னவோ 10 நிமிடங்கள் தான்... ஆனால் அதுவே அவனுக்கு பல நூறு வருசம் அவளுடன் பழகிய உணர்வை கொடுத்தது..

அவளின் ஒவ்வொரு செயலும் வார்த்தையும் அவன் இதயத்தில் கல்வெட்டாக பதிந்து போயின இந்த ஏழு நாட்களில்..

பின்ன அவள் பேசிய அதே டயலாக்கை தினமும் 1000 முறையாவது சொல்லி பார்த்தால் அது மனதில் பதியாமல் என்ன செய்யுமாம்??

அவளை மீண்டும் பார்க்க அவன் இதயம் ஏங்கினாலும்

“என்னவள் எங்கிருந்தாலும் என்னை தேடி வருவாள்....நீ ரொம்ப அலட்டிக்காத... “ என்று தன் இதயத்தை அடக்கிவிடுவான்.... அவன் இதயமும் அந்த இதய நல மருத்துவனின் பேச்சை கேட்டு அடங்கினாலும் ,அவன் கண்கள் அவனுக்கு அடங்க மறுத்தன...

அவைகள் தன்னவளை தேடி எல்லா திசையிலும் பார்வையை சுழல விட்டவாறே தான் இருந்தன இந்த ஏழு நாட்களில்.. ஆனால் பாவம் அவைகளுக்கு ஏமாற்றமே.. அவளின் தரிசனம் கிடைக்கவேயில்லை...

இன்றும் அவன் உதடுகள் பாடலை பாடினாலும் கண்கள் சுற்றிலும் அவளை தேடிக் கொண்டிருக்க, ஒரு சிக்னலில் அவன் காரை நிறுத்தி பச்சை விளக்குக்காக காத்திருந்தான்....

அப்பொழுது திடீரென்று அவன் இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்தது... அவன் உள்ளே பனிமழை பொழிய ஆரம்பிக்க, என்னது இது?? என்று முழித்தவனுக்கு புரிந்து விட்டது அவன் தேவதை இங்குதான் இருக்கிறாள் என்று..

உடனே அவசரமக அந்த இடத்தை ஆராய, அவனை ஏமாற்றாமல் அவளும் அவனுக்கு தரிசனம் கொடுத்தாள்...
 




Padmini Selvaraj

மண்டலாதிபதி
Author
Joined
Mar 31, 2021
Messages
220
Reaction score
1,159
Location
Bangalore
ன் முன்னே நின்றிருந்த காரில் திறந்திருந்த சன்னல் வழியே குனிந்து உள்ளே இருந்தவரிடம் உரையாடியவள் சிறு ஏமாற்றத்துடன் தலையை நிமிர்த்த, கண்டு கொண்டான் அவளை....

மீண்டும் உள்ளே சில்லென்று தென்றல் வீச,அவளை பார்த்தவாறே

“என்னை பார்த்து விடு... என்னை பார்த்து விடு... “ என்று சொல்ல அவன் இதயம் அவளிடம் தூது செல்ல, என்ன தோன்றியதோ உடனே அவளும் திரும்பி இவனை பார்த்தாள்...

சில நொடிகள் இருவர் பார்வையும் ஒன்றை ஒன்று சந்தித்து கொள்ள, அதற்குள் சமாளித்து கொண்ட வசி கை அசைத்தான் அவளை பார்த்து புன்னகைத்தவாறு..

அவளும் அவனை கண்டு கொண்டு வேகமாக அவன் கார் அருகில் வந்தாள்...

“என்ன டாக்டர் சார்... எப்படியிருக்கீங்க?? பரவாயில்லையே.. உங்கள பார்க்க எத்தனை பேசன்ட்ஸ் வந்து போயிருந்தாலும் என்னை மறக்காமல் ஞாபகம் வச்சிருக்கீங்க?? “ என்று கன்னம் குழிய சிரித்தாள் பனிமலர்....

அவளின் மலர்ந்த சிரிப்பு, காலையில் அவன் பார்த்த அந்த மஞ்சள் ரோஜாவை நினைவு படுத்த

“மறக்க கூடியவளா நீ?? மறக்க முடியுமா உன்னை பேபி.... நீதான் என் இதய ராணியாக அசைக்க முடியாத இடத்தில் குடியேறி விட்டாயே... ! “ என்று மெல்ல சிரித்து கொண்டவன்

அதையே வாய்விட்டு சொன்னான்..

“ஹா ஹா ஹா மறக்க கூடிய முகமா நீ .. “என்றவன் அவள் முகத்தை யோசனையாக சுளிக்க, தன் நாக்கை கடித்து கொண்டவன்

“ஐ மீன் நீயும் உன் தோழியும் அடித்த லூட்டி மறக்க முடியுமா பனிமலர்...” என்று சிரித்தான்....

“ஹீ ஹீ ஹீ..”என்று அசட்டு சிரிப்பை சிரித்தாலும் அவனின் அந்த வசீகர சிரிப்பை அவசரமாக ரசித்தாள் அவள்....

“அப்புறம் இங்க என்ன பண்ணிகிட்டிருக்கீங்க?? “என்றான் ஏதாவது பேச வேண்டுமே என்று...

“ஆங்.. டொனேசன் கலெக்ட் பண்றேன்.. டாக்டர்... “ என்றாள் மலர்..

அவள் டொனேசன் என்றதும் அவன் முகத்தை சுளித்தான்.... எத்தனை பேர் ஏமாற்றுவதற்காக டொனேசன் என்ற பெயரில் பணம் வசூலித்து மோசடி செய்கின்றனர்...

காஷ்மீர் குண்டு வெடிப்பில் உயிர் இழந்த இராணுவ வீரர்களுக்கு நிதி திரட்டுவதாக சொல்லி போலியான வங்கி கணக்கை பகிர்ந்து பணம் வசூலித்ததாக வந்த செய்தியை படித்தது நினைவு வர, ஒரு நொடி அவன் முகம் சுறுங்கியது...

அதை கண்டு கொண்ட மலர்,

“டாக்டர்... நீங்க நினைக்கிற மாதிரி இது சீட்டிங் இல்ல.. நிஜமாகவே ஒரு சின்ன பொண்ணோட ஹார்ட் ஆபரேசனுக்குத்தான் பன்ட் கலெக்ட் பண்ணிகிட்டிருக்கேன்... நீங்களும் உங்களால முடிந்த உதவியை செய்ங்க டாக்டர்... “ என்று அவசரமாக விளக்கினாள்...

ஹார்ட் ஆபரேசன் என்றதும் விழித்து கொண்டவன் அதற்குள் சிவப்பு விளக்கு மறைந்து வண்டிகள் தயாராக இருக்க அடையாளமாக மஞ்சள் விளக்கு ஒளிர,

“சே.. ஒவ்வொரு நாளும் இந்த கிரீன் சிக்னல் வருவதற்கு எவ்வளவு நேரம் காத்திருக்கனும்.. இன்னைக்கு னு பார்த்து சீக்கிரம் வந்திடுச்சே... இன்னும் கொஞ்ச நேரம் கழித்து வந்திருக்க கூடாதா ?? “ என்று அந்த டிராபிச் சிக்னலை மனதுக்குள் சபித்தவன்

“ஓகே பனிமலர்.. நான் கண்டிப்பா ஹெல்ப் பண்றேன்... என் நம்பரை குறித்து கொள்ளுங்க.. எனக்கு போன் பண்ணுங்க... “என்றவன் அவசரமாக தன் அலைபேசி எண்ணை இரண்டு முறை சொன்னான்...

அவளும் அதை ஒரு முறை சொல்லி பார்க்க

“சீக்கிரம் ரோடை கிராஸ் பண்ணி போய்டுங்க.. கிரீன் சிக்னல் வந்திருச்சு.. மறக்காம போன் பண்ணுங்க.. “ என்று அவசரமாக சொல்ல, அதற்குள் பின்னால் இருந்த கார் அவன் அவசரத்தை புரிந்து கொள்ளாமல் அவர் அவசரமாக போக வேண்டும் என்ற கடுப்பில் தன் காரின் ஹார்னை வேகமாக ஒலிக்க விட்டார்....

வசியும் வேற வழியில்லாமல் தன் காரை ஸ்டார்ட் பண்ணி மெதுவாக செலுத்தினான் அவள் பத்திரமாக சாலையை கடந்து விட்டாள் என்று தெரிந்துகொள்ள...

அவளும் வேகமாக ஓடி சாலையின் ஓரமாக நின்று கொண்டு அவனை பார்த்து கை அசைக்க , வசியும் கை அசைத்து விடை பெற்று பின் வேகமாக காரை செலுத்திச் சென்றான்...

அன்று நாள் முழுவதுமே பரபரப்பாக இருந்தான் அந்த மருத்துவன்.... அன்று பல புதிய நோயாளிகள் அவர்கள் இதயத்தை சரி பார்க்க என்றும், சில பேர் பாலோ அப் செக்கப்க்காகவும் வந்திருக்க அவன் நேரம் இறக்கை கட்டி பறந்தது...

அவன் வழக்கமாக பணியில் இருக்கும் பொழுது அவன் பெர்சனல் அலைபேசியை அனைத்து விடுவான்.. அவன் வீட்டில் இருந்தே யாராவது அவசரமாக தொடர்பு கொள்ள வேண்டுமென்றால் மருத்துவமனையின் ரிசப்சனுக்குத்தான் அழைப்பர்...

அதே போல இன்றும் தன் அலைபேசியை அனைத்து வைத்தவனுக்கோ நினைவு எல்லாம் அவன் அலைபேசியிலயே இருந்தது..

ஒரு வேளை அவள் அழைத்திருப்பாளோ?? என்று.. பலமுறை முயன்று தன் கவனத்தை திரும்ப கொண்டு வந்து வேலையை தொடர்ந்தான்..

நல்ல வேளை.. அன்று அறுவை சிகிச்சை எதுவும் இல்லை.. இருந்திருந்தால் அவனால் அதை சரியாக செய்திருக்க முடியுமா என்பது சந்தேகம்தான்....

அவனை நினைத்து அவனுக்கே ஆச்சர்யமாக இருந்தது... இந்த தொழிலை எவ்வளவு புனிதமாக மதிக்கிறான் என்று அவனுக்கு தெரியும்...அப்படி பட்ட அந்த தொழிலையும் மீறி, மறந்து அவளை மட்டுமே நினைக்குமாறு செய்து விட்டாளே... இந்த ராட்சசி..!! . “ என்று உள்ளுக்குள் சிரித்துக் கொண்டான்...

மதிய வேளையில் அவசரமாக தன் அறைக்கு வந்து அவன் அலைபேசியை எடுத்து உயிர்பித்து ஆராய அவன் எதிர்பார்த்தபடியே மிஸ்ட் கால்கள் இரண்டு வந்திருந்தன பெயர் தெரியாத எண்ணில் இருந்து...

அதை கண்டதும் அவன் முகம் மலர, இதயம் எகிறி குதிக்க, அந்த எண்ணிற்கு அழைத்தான்...

முதல் எண் யாருக்கோ சென்றது... எரிச்சலுடன் மேலும் ஆர்வத்துடன் இரண்டாம் எண்ணிற்கு அழைக்க அதுவும் வேற எங்கயோ சென்றது....

“அப்படீனா அவள் அழைக்க வில்லையா?? நான் அவ்வளவு தூரம் சொல்லியும் அவள் அழைக்க வில்லையே.. “என்று மனம் வாடியது சில நொடிகள்..

“சே.. பேசாம அவள் நம்பர் நான் வாங்கி வந்திருக்கலாம்.. “ என்று தலையை தட்டி கொண்டான்..

மதிய உணவை முடித்தவன் கிடைத்த இடைவேளையில் அவன் ஆராய்ச்சி சம்மந்தமாக அவன் புத்தகத்தை எடுத்து புரட்ட, ஒவ்வொரு பக்கத்திலும் எழுத்துகளுக்கு பதிலாக அவள் முகம் வந்து நின்றது...

“சே... என்ன இது?? “என்று மூடி வைத்து விட்டு சிறிது நேரம் அந்த மருத்துவமனையை சுற்றி வந்தான்...

ஷ்யாம் பிசியாக இருக்க, அதோடு அவனிடம் சென்றால் தன் மாற்றத்தை கண்டு கொள்வான் என்று உணர்ந்து அவன் இருக்கும் பகுதியை தவிர்த்து மற்ற இடங்களுக்கு சென்று வந்தான்...

பின் மீண்டும் தன் அறைக்கு திரும்பியவன் அவன் நாற்காலியில் அமர்ந்து கைகளை பின்னால் வைத்துக் கொண்டு கண் மூடி அவள் அழைக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டான்...

அவள் அழைப்பாளா?? அவள் அழைப்பாளா??
என் உடைந்து போன நெஞ்சை ஒட்டவைக்க அவள் அழைப்பாளா??
என் பள்ளமான உள்ளம் வெள்ளமாக அவள் அழைப்பாளா??


என்று உல்லாசமாக சிரித்து கொண்டே பாடலை மற்றி பாட, அதே நேரம் அவன் அலைபேசி சிணுங்கியது....

கண்டிப்பா அவளாக இருக்காது என்று எண்ணி அந்த அலைபேசியை எடுத்து

“ஹலோ... வசி கியர்... “ என்று தன் வசீகரக் குரலில் மென்மையாக ஆரம்பிக்க மறுபக்கம் சில நொடிகள் அமைதியாக இருந்தது...

“ஹலோ... “ என்று மீண்டும் அவன் அழைக்க, அதற்குள் மறுமுனையில் இருந்து

“ஹலோ டாக்டர் நான் மலர் பேசறேன்... “ என்றாள் இனிமையான குரலில்....

அவள் குரலை கேட்டதும் மீண்டும் பனிஅடிக்க உள்ளுக்குள் துள்ளி குதித்தான்...

“யெஸ்... “ என்று தன் கையை மடக்கி இழுத்து சின்ன பையனாக ஆர்பரித்தான்....

அவன் அமைதியாக இருப்பதை கண்டு மலர்

“டாக்டர்... லைன்ல இருக்கீங்களா?? “ என்றாள் சந்தேகமாக

“இருக்கேன் பெண்ணே.. உனக்காக, உன் குரலுக்காகத்தான் காத்து கொண்டிருக்கிறேன் அன்பே... “ என்று சொல்லிக் கொண்டவன்

“ஆங்க்.....சொல்லுங்க பனிமலர்... “என்றான் தன் துள்ளலை மறைத்துக் கொண்டு..

“ஹ்ம்ம்ம் நீங்க தான் டாக்டர் சொல்லனும்.. நீங்க தான் போன் பண்ண சொன்னீங்க... “ என்று குறும்பாக சிரித்தாள் மலர்...

அதற்குள் அவளை எதற்காக அழைக்க சொன்னான் என்பது நினைவு வர,

“யெஸ்.. நீ... நீங்க ஒரு குழந்தைக்கு ஹார்ட் ஆபரேசன் னு சொன்னீங்க இல்லையா.. அதை பற்றி டீடெய்ல்ஸ் சொல்ல முடியுமா?? என்னால் முடிஞ்ச உதவியை செய்யறேன்... “ என்றான்...

அதை கேட்டதும் மலர் துள்ளி குதித்தாள்...

“வாவ்... நிஜமாகவா சொல்றீங்க டாக்டர்... நீங்க ஹெல்ப் பண்ணுவீங்களா?? “என்றாள் சந்தோசத்தில்...

“கண்டிப்பா... என்னால் முடிஞ்ச உதவியை செய்யறேன்.. சரி எனக்கு அந்த குழந்தையை பற்றி இன்னும் டீடெய்ல்ஸ் வேணும்.. நீங்க பிரியா இருந்தா இன்னைக்கு ஈவ்னிங் மீட் பண்ணலாமா?? “ என்றான் ஆர்வமாக...

அவள் மறுத்துவிடக்கூடாதே என்று மனதுக்குள் வேண்டிக் கொண்டிருந்தான்...

சிறிது நேரம் அமைதியாக இருந்தாள் மலர்..

“என்ன பனிமலர்.?? நீங்க பிரியா இல்லையா?? “ என்றான் கொஞ்சம் ஏமாற்றமாக

"ஹீ ஹீ ஹீ அதெல்லாம் ஒன்னுமில்லை டாக்டர்.. நான் வெட்டியாதான் இருக்கேன்... இன்னைக்கு பிரதோஷம் னு இந்த ஜோ கோவிலுக்கு போகணும்னு சொல்லுச்சு... அதான் யோசிச்சுகிட்டிருக்கேன்... "

"எனிவே.. அந்த ஈஸ்வரனுக்கு நான் நாளைக்கு கூட போய் அட்டென்டன்ஸ் போட்டுக்கலாம்.. கீர்த்தியோட லைப் தான் முக்கியம்.. அதனால நான் வர்றேன் டாக்டர்... ஈவ்னிங் சந்திக்கலாம்... ஆமா எங்க வர்றது?? " என்றாள் சிரித்துக் கொண்டே

அவள் அவனை சந்திக்க ஒத்து கொள்ளவும் மீண்டும் துள்ளி குதித்தான் வசி .. பின் ஒரு காபி சாப் பெயரை சொல்லி 6 மணிக்கு அங்கு சந்திக்கலாம்.. “ என்று முடிவு பண்ணி அலைபேசியை வைத்தான்....

அன்று மட்டும் ஏனோ கடிகாரம் மிகவும் மெதுவாக நகர்ந்தது வசிக்கு... ஒரு நிமிடத்திற்கு இத்தனை நொடிகளா?? என்று 1000 முறையாவது சலித்துக் கொண்டான்...

அவன் கைகள் அதன் வேலையை செய்தாலும் அவன் இதயம் என்னவோ அந்த கடிகாரத்தையே பார்த்து கொண்டு தவம் இருந்தது...

மாலை 5.30 ஆனதும் அவசரமாக தனது அறைக்கு வந்து ரெப்ரெஸ் ஆகி, அங்கு குளியலறையில் இருந்த முகம் பார்க்கும் கண்ணாடியில் தன் உருவத்தை ஒரு முறை சரி பார்த்து கொண்டான்....

அடங்காமல் முன்னால் வந்திருந்த முடியை பல முறை வாரி அதை தன் கைகளால் தடவி விட்டு கொண்டு மீண்டும் கண்ணடியை பார்த்தான்.. அவன் செயல் அவனுக்கே சிரிப்பாக வந்தது...

“சே.. என்ன இது?? இப்படி மாறிட்டேன்?? “என்று இலேசாக வெட்க பட்டு கொண்டே தன் கடிகாரத்தை பார்த்து நேரம் ஆக, பின் கிளம்பி சென்றான் உல்லாசமாக விசில் அடித்தவாறு...

சரியாக 6 மணிக்கு அவன் சொல்லியிருந்த காபி சாபை அடைந்து காரை பார்க்கிங் ல் நிறுத்தி விட்டு இறங்கி உள்ளே நடந்தான்.. பனிமலர் அவனுக்கு முன்னதாகவே வந்து அங்கு ஒரு மூலையில் இருந்த டேபிலில் அமர்ந்து இருந்தாள்...

இவன் உள்ளே வந்ததை கண்டதும் கை அசைத்து அழைக்க, அந்த மாலை நேரத்திலும் அவளின் சிரித்த மலர்ந்த முகத்தை காண, அவன் உள்ளே மீண்டும் சில்லென்ற பனிமழை பொழிந்தது....

அதில் நனைந்து கொண்டே அவனும் சிரித்தவாறு அவளை நோக்கி சென்றான்....அருகில் சென்றதும்

“ஹாய் பனிமலர்... என்ன முன்னாடியே வந்திட்ட போல இருக்கு... “ என்று சிரித்தவாறு ஒரு நாற்காலியை நகர்த்தி அவளுக்கு எதிர்புறமாக அமர்ந்தான்...

“ஹாய் டாக்டர்.... ஹீ ஹீ ஹீ... எனக்கு பன்சுவாலிட்டி ரொம்ப முக்கியம் டாக்டர்... நம்ம ஊர் டிராபிக் நம்ப முடியாது... அதனால எங்கயும் கொஞ்சம் சீக்கிரம் போய்டுவேன்... தென் ஹௌ வாஸ் யுவர் டே... “ என்றாள் சிரித்தவாறு...

அவளின் அந்த சிரிப்பை அதில் விரிந்த கன்னத்துக் குழியை மனதுக்குள் ரசித்தவாறு

“வொன்டர்புல் டே... “ என்றவன் “என் தேவதையை மீண்டும் கண்டு கொண்டு இதோ அவளுடன் அமர்ந்து உரையாடி கொண்டிருக்கும் இந்த நாள் எப்பவும் என் வாழ்நாளில் மறக்க முடியாத நாளாகும்...” என்று உள்ளுக்குள் சொல்லி சிரித்து கொண்டான் வசீகரன்…!
 




Padmini Selvaraj

மண்டலாதிபதி
Author
Joined
Mar 31, 2021
Messages
220
Reaction score
1,159
Location
Bangalore

Padmini Selvaraj

மண்டலாதிபதி
Author
Joined
Mar 31, 2021
Messages
220
Reaction score
1,159
Location
Bangalore

Shaniff

முதலமைச்சர்
Joined
May 13, 2018
Messages
11,600
Reaction score
36,873
Location
Srilanka
நம்ம doctor ai இப்படி disturb பண்ணிட்டாளே இந்த மலர்...சின்ன பையன் மாதிரி துள்ளி குதிக்கிறார் doctor...ஆதர்ஜீ சொல்றத பார்த்து எனக்கு என்னாகுமோ ஏதாகுமோனு பக்கு பக்குங்குது.
 




AkilaMathan

முதலமைச்சர்
Joined
Feb 27, 2018
Messages
9,377
Reaction score
8,779
Location
Chennai
வசிய வசியம் பண்ணிட்டாளே 🤩🤩😍😍🤩🌹
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top