?தாமரை விதை பாயசம்?

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

ப்ரியசகி

Author
Author
Joined
May 11, 2020
Messages
11,702
Reaction score
26,889
Points
113
Location
India
தேவையான பொருட்கள்:

பால் - 3 கப்

தாமரை விதை - 1 கப்

சர்க்கரை - 1 1/2 கப்

குங்குமப்பூ - 1 சிட்டிகை

நெய் - 1 டீஸ்பூன்

ஜாதிக்காய் பொடி - 1 சிட்டிகை

பாதாம் - 6 சின்ன சின்ன ஸ்லைஸா வெட்டிக்கோங்கோ..

முந்திரி - 6 சின்ன சின்ன ஸ்லைஸா வெட்டிக்கோங்கோ..

செய்முறை:

ஒரு வாணலிய அடுப்பில் வச்சு, நெய் ஊற்றி காய்ந்ததும், தாமரை விதையை போட்டு ஒரு நாலு இல்ல ஐந்து நிமிடம் மிதமான தீயில வறுத்து எடுத்து, நன்னா ஆற வச்சுடுங்க... ஆறினதும் பொடி பண்ணிடுங்கோ....

ஒரு கப் பாலில் கொஞ்சமா குங்குமப்பூ கலந்து ஊற விடுங்கோ...

மிச்சம் இருக்க பாலை அடுப்பில் வச்சு நன்னா கொதிக்க விடுங்கோ, பால் சுண்டி கெட்டியா வர்றச்சே நாம பொடி பண்ணி வச்சிருக்கிற தாமரை பொடிய போட்டு ஒரு ஏழு நிமிஷத்துக்கு கிளறி விடுங்கோ. அடுத்து சர்க்கரை போடுங்கோ அது கரைஞ்சதும், குங்குமப்பூ கலந்து வச்சிருக்கிற பாலை இதுகூட ஊற்றி கிளறி விட்டு இறக்கிடுங்கோ.... இறக்கின பிறகு முந்திரி பாதாம் பொடி பண்ணி போட்டாலும் சரி இல்லை ஸ்லைசா கட் பண்ணி போட்டாலும் சரி, போட்ட பிறகு ஜாதிக்காய் பொடி தூவினா பாயசம் ரெடி ஆயிடுத்து......

(நான் சில தாமரை விதைகளை மட்டும் பொடி பண்ணாம அப்படியேவும் சேர்த்திருக்கேன்)
20200815_152308.jpg
கொஞ்சம் அலங்காரத்துக்கு வேணும்னா பாதாம் முந்திரி பிஸ்தா னு கட் பண்ணி போட்டுக்கோங்கோ
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top