• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

தாழையாம் பூமுடித்து🌺14

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

S.M.Eshwari.

அமைச்சர்
SM Exclusive
Joined
Jun 7, 2021
Messages
2,256
Reaction score
6,280
Location
India
Hi friends ❣
இதோ கதையின் அடுத்த பதிவோடு தங்களின் அன்பான ஆதரவை எதிர்பார்த்து என்றென்றும் அன்புடன் 🙏🏻🙏🏻🙏🏻
S M ஈஸ்வரி 🥰🥰🥰🥰🥰
IMG-20221105-WA0003.jpg

14

"எப்ப வந்தீங்க?"

"…..……"

"இன்னைக்கி காலையிலயா?"

"………….."

"பஸ்லயா? ட்ரெயின்லயா?"

"………….."
"
சாப்ட்டாச்சா?"

"…………."

"நீ வர்றீயா? இல்ல… நான் வரவா?"

"………."

"ரெண்டு பேரும், குளிக்க கெணத்துக்கு போலாமா?"

"………."

இதுவரை குழப்பமாக பார்த்துக் கொண்டிருந்த முத்துவேல் இறுதிக் கேள்வியில் விக்கித்து நின்றான். ஆறடி ஆண்மகனுக்கும் அதிர்ச்சியில் மூச்சடைத்தது. சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டான்.

ஒரு செவ்வந்திப்பூ தன்னைப் பார்த்து நலம் விசாரித்ததோடு நில்லாமல், குளிக்கவும் அழைத்ததில் மிரண்டு தான் போனான். (கொசுவத்தி சுருள் சுத்தி முடிக்கிற வரை இரண்டாம் தலைமுறையை ஒருமையிலேயே விளிக்கலாம் மக்களே! சீக்கிரம் சுத்தி முடிச்சுர்றே.)

இவன் மாடியில் நின்றிருக்க, எதிர் புறமாக இருந்த மாடிவீட்டின் பால்கனியில் இருந்து தான் இந்த உரையாடல் சைகையில் நடந்து கொண்டிருந்தது. குறுக்கே ஒரு தெருவை அடுத்து, அந்த மாடி வீடு. இரண்டு மாடி வீட்டிற்கும் இடையிலும் இருந்தவை உயரம் குறைந்த ஓட்டு வீடுகள் என்பதால், அந்த வீட்டு மாடியில் நின்று சைகையில் கேட்பது நன்றாகத் தெரிந்தது. சைகையிலும், வாயசைவிலுமே இந்த உரையாடல் நடந்து கொண்டிருந்தது. சத்தமாக பேச முடியாது என்கிற காரணத்தால்.‌

அவளைத் தெரியும். சுதாவின் பள்ளித் தோழி சாந்திமீனா என்பதோடு, அவளது தந்தையும், முத்துவேலின் தந்தை சுப்பையாவுமே நெருங்கிய பால்ய நண்பர்கள். அவளுக்கு அம்மா இல்லை. அப்பாவின் இரண்டாம் தாரமான சித்தி தான்.‌ சித்திக்குப் பிறந்த ஒரு தம்பி.

ஊருக்கு வரப்போக தங்கை சுதாவுடன் அவளைப் பார்த்தது உண்டு. தாயில்லாப் பிள்ளை என்பதால் இங்கு அன்னபூரணியிடம் சற்று கரிசனம் அதிகம்.

வெள்ளிக் கிழமை எனில் ஒலியும் ஒளியும் பார்க்கவும், ஞாயிறு என்றால் டி.வியில் படம் பார்க்கவும் சின்னவர் வீட்டிற்கு வருவாள்.

அந்த ஊருக்கே இரண்டே டி.வி தான். ஒன்று பஞ்சாயத்து டிவி. இன்னொன்று‌ சின்னவர் வீட்டு டி.வி. கதவு, பூட்டு,‌ சாவியோடு கூடிய பொக்கிஷ டி.வி.

அவளது இனம் வேறாக இருந்தாலும், இரு குடும்பங்களுக்கு இடையிலும் மாமன் மச்சான் என்றே முறை சொல்லி‌ அழைத்துப் பழக்கம். அவர்களது இனத்தில் அவர்கள் குடும்பமும் பெரிய தலைக்கட்டு தான். என்ன… தற்சமயம் சற்று நொடித்துப் போன குடும்பம். பழம் பெருமையை பேசும் மாடிவீடும், வானம் பார்த்த பூமியும், வெள்ளாடுகளுமே ஜீவன ஆதாரம். ஆஹா ஓஹோன்னு இல்லைனாலும், அச்சச்சோங்கற நிலையிலும் இல்லாத சராசரியான... ஆனால் ஊருக்குள் மதிப்பான குடும்பம்.

இத்தனை நாட்களாக, நேருக்கு நேராக நின்று பார்த்தது கூட கிடையாது. அப்படிப்பட்டவள் இப்பொழுது, நலம் விசாரிப்பதும்,‌ அதோடு நில்லாமல் குளிக்க அழைக்கவும் ஒரு கணம் மிரண்டு தான் போனான். நம்மிடம் விளையாடுகிறாளா என இவன் குழம்பி நிற்க,

"நீ இங்கே வா… நம்ம ரெண்டு பேரும் சேந்து போகலாம்." என பக்கத்தில் குரல் கேட்க, அப்பொழுது தான் தூணைத் தாண்டி தலை நீட்டிப் பார்த்தான்.

இரட்டைவீடு என்று அழைக்கப்படும் பெரிய வீட்டின் நடுவில், பொதுவாக பெரிய தூண் இருக்க, அந்தப்பக்கம் சுதா நின்றிருந்தாள். இவ்வளவு நேரமாக அவள், சுதாவிடம் தான்‌ சைகையில் பேசி இருக்கிறாள் என புரிய, நின்ற மூச்சு இப்பொழுது தான் வந்தது முத்துவேலிற்கு. மூச்சை இழுத்து விட்டு ஆசுவாசப்பட்டவன், எட்டிப் பார்த்து, அசடு வழிய நின்றிருந்தது, எதிர் மாடியில் இருந்தவளுக்கு நன்றாகத் தெரிய, வாய்விட்டு கலகலவென சிரித்தாள்.

"எதுக்கு லூசு மாதிரி சிரிக்கிறா?" என சுதா இங்கே தனக்குத்தானே கேட்டுக் கொண்டிருந்தாள். அவளும் இந்தப்பக்கமாக நின்றிருந்த அண்ணனைப் பார்க்கவில்லை. தூண் நடுவில் இருக்க, ஆளுக்கொரு பக்கமாக நின்றிருந்தது எதிர்‌மாடியில் இருந்த சாந்திக்கு நன்றாகவே தெரிந்தது. அவள்‌ முதல் கேள்வி கேட்கும் பொழுதே முத்துவேல் அதிர்ந்து பார்த்ததும், முன்னே பின்னே திரும்பிப் பார்த்துக் கொண்டதும், இவள் விசாரிப்பது தன்னை என‌ நினைத்துக் கொண்டு,‌ முத்துவேல் திருதிருவென முழிப்பதும் புரிந்தது. காலையில் தான் சென்னையில் இருந்து விடுமுறைக்கு வந்த சுதாவை அழைத்து கொண்டு வந்திருந்தான்.

மாடிக்கு வந்த தோழியைப் பார்த்து விட்டு சாந்தி நலம் விசாரிக்க, இங்கே முத்துவேல் இடையில் மாட்டிக்கொண்டான்.

அவள் சிரித்து விட்டு உள்ளே ஓடிவிட்டாள். முத்துவேலும் தலையில் தட்டிக் கொண்டு தனக்கு தானே சிரித்துக் கொண்டான். அதற்குள் அவனது சித்தி அழைக்கும் குரல் கேட்டது. கீழே இறங்கி சித்தப்பா வீட்டிற்கு சென்றான்.

ஆண்பிள்ளை இல்லாத இவனது சித்திக்கும், சித்தப்பாவிற்கும் முத்துவேல் என்றால் சற்று அலாதி பிரியம் தான்.

எழுபது, எண்பதுகள் வரைக்குமே ஆண்வாரிசு மோகம் உச்சத்தில் இருந்த காலகட்டங்கள் அவை. இப்பவும் குறைந்து விடவில்லை. எத்தனை பெண் குழந்தை பிறந்தாலும் ஆண் குழந்தைக்காக தவமிருந்து காத்திருந்த காலம். அப்பொழுது தான் ஸ்கேனிங் என்ற ஒன்று பரவலாக புழக்கத்திற்கு வந்தது. ஆணா? பெண்ணா? என அறிவது சட்டப்படி குற்றம் என்று இருக்க, அதையெல்லாம் நாம் எப்பொழுது கடைபிடித்தோம். காசை வாங்கிக் கொண்டு கமுக்கமாக, எல்லாம் நடந்தது. பல பெண் குழந்தைகளின் உயிர்கள் கருவரையிலேயே சமாதி வைக்கப்பட்டன.

ஆனால், கிராமங்களில் அதற்கு வழி இல்லாததால், பிறக்கும் வரை பெண் குழந்தைகளுக்கு தயவு காட்டப்பட்டது. வரிசையாக பெண்‌குழந்தை எனில் மூன்றாவது குழந்தைக்கு கள்ளிப்பால் நிச்சயம். பெண்குழந்தை என்றாலே பிறந்ததில் இருந்து செலவாகவும், சுமையாகவும் கருதப்பட்ட காலகட்டம். குடும்பத்தின் பேர் சொல்லும் பிள்ளை என்றால் அது ஆண்பிள்ளை மட்டும் தான்.

இங்கும் சின்னவருக்கு மூன்றாவதும் பெண்‌குழந்தையாக பிறக்க,‌

"ஏம்ப்பா சுப்பு! கள்ளிப்பாலா, நெல்லா?" என சொந்தங்களால் சின்னவரிடமும் கேட்கப் பட்டது. கள்ளிப்பால் என்றால், பால் எடுக்க காட்டுக்குப் போக வேண்டும். நெல்மணி என்றால் வீட்டிலேயே இருக்கும். அந்த சௌகர்யம் தான்.‌ நெல்மணிகளை பிறந்த குழந்தையின் வாயில் போட்டு விடுவர். பச்சைக் குழந்தை எவ்வளவு‌ நேரம் தாங்கும். கருப்பையை விட்டு வெளி வந்த ஈரம் காயும் முன், வந்த சுவடு தெரியாமல் எல்லாம் முடிந்துவிடும்.‌ (அதிர்ச்சி ஆகாதீங்க மக்களே! எண்பதுகளில் எங்கள் ஊரிலேயே இதெல்லாம் வெளிய தெரியாம நடந்த, ஊரறிந்த ரகசியம். முதல் நாள் குழந்தை பிறந்திருக்கும். மறுநாள் கேட்டோம்னா, செத்துப் போச்சுன்னு அசால்ட்டா சொல்லுவாங்க.)

இங்கோ... சின்னவர் பார்த்த பார்வையிலேயே பிரசவம் பார்த்த மருத்துவச்சி, மறு‌ வார்த்தை பேசாமல் இடத்தைக் காலி செய்தார்.

"பிள்ள பெத்துக்க தெம்பு இருக்குறவனுக்கு, கட்டிக்கொடுத்து சீர் கொடுக்கவும் தெம்பு இருக்கு. எத்தனை பொட்டப் பிள்ளைனாலும்‌ என்னால சீர்செஞ்சு கட்டிக் கொடுக்க முடியும்." என சொந்தங்களுக்கு பதிலடி கொடுத்தார்.

மனைவியை குடும்ப கட்டுப்பாட்டிற்கு அழைக்க, அன்னபூரணிக்கு செல்லவே மனமில்லை. அடுத்த குழந்தையைப் பார்க்கலாம் என்ற எண்ணம் தான்.

"கொள்ளி வைக்க பையன் வேண்டாமா? நம்ம பேரப்பிள்ளைகளுக்கு நாளைக்கு சபையில தாய்மாமன்னு நிக்க ஒருத்தன் வேணுமே?" எனத் தயங்கி நின்றார்.‌ தாய்மாமன் உறவு அவ்வளவு முக்கியம் செங்காத்து பூமிக்கு. இப்ப புரியுதுங்களா எதுக்கு கள்ளிப்பால்னு. தொட்டதுக்கெல்லாம் சீர் செய்யணும்ங்க. பெண்பிள்ளைகள் பிறந்தது முதல் காதுகுத்து, சடங்கு, கல்யாணம், நல்லது கெட்டது, பேரு காலம், இது போதாதது என தாவணி போடும் விழா, கிடா வெட்டும் விழா என, அனைத்தும் இப்பொழுதெல்லாம் பத்திரிகை அடித்து நடத்தப் படுகிறது. அனைத்திற்கும் பிறந்தவீடு சீர்செய்ய வேண்டும். ஐநூறு, ஆயிரமெல்லாம் பிசாத்து மொய். ஒரு‌ விசேஷம் எனில் லட்சங்களில் மொய் சேரும். கந்து வட்டிக்கு கடன் வாங்கியாவது சபை மெச்ச மொய் வைக்க வேண்டும்.

தாய்மாமனாக ஒரு குழந்தைக்கு சேனை தொட்டு வைப்பதில் தொடங்கி, சகோதரனாக பிறந்த வீட்டு கோடி போட்டு இறுதி யாத்திரைக்கு வழி அனுப்பும் வரைக்குமே சீர் செய்தே அலுத்துப் போகும் கூட்டம்.

"பிறந்த வீட்டு சீர் செய்யத்தான் அண்ணே பையனுக இருக்காங்களே. அவிங்க பாத்துப்பானுக." என குடும்ப கட்டுப்பாட்டிற்கு தயங்கி நின்ற மனைவியை ஒரே வரியில் அடக்கி விட்டார்.

சின்னவருக்கு அண்ணன் என்றால் அம்பூட்டு மரியாதை. லட்சுமணன் கிழித்த கோட்டை சீதை வேண்டுமானல் தாண்டியிருக்கலாம். ஆனால், இவரோ அண்ணன் கிழித்த கோட்டை தாண்டாத நவீனயுக லட்சுமணனாக இருந்தார். அண்ணனும் இராமராகத்தான் இருப்பார் என்ற நம்பிக்கை அவருக்கு.

நாலாவதும் பெண் குழந்தை எனில் என்ன செய்வதாக உத்தேசம் என்ற கேள்விக்கு அன்னபூரணியிடம் பதில் இல்லாமல் போக, சின்னவரே மனைவியிடம் சொல்லாமல் குடும்பக் கட்டுப்பாடு செய்து வந்து நின்றார். அவருக்கு மனைவி பிள்ளைகள் என்றால் அதீத பாசம். என்ன ஒன்று... அதை வாய் ஜாலத்தில் காட்டத் தெரியாது. வெளியில் எந்த அளவிற்கு கறார் பேர்வழியோ வீட்டிலும் அப்படியே. பெண்‌பிள்ளைகள் என்பதால் கண்டிப்பு கொஞ்சம் அதிகம் தான். தன் பெண் பிள்ளைகள் மீது ஒரு சொல் விழுந்து விடக்கூடாது என்பதாலேயே இந்த கண்டிப்பும்.

எனவே தான் ஆண் பிள்ளையான முத்துவேல் என்றாலே இருவரும் உருகிவிடுவர்.

சின்னவர் எதிர்பார்த்த மாதிரியே, அண்ணன் மகன்களான சக்திவேலிற்கும், முத்துவேலிற்கும் தங்கைகள் என்றால் தனிப் பிரியம் தான். பெண்களுக்கு அண்ணன்‌ முறையில் எல்லாவற்றிலும் முன்னுக்கு நின்றனர்.

மூத்தவள் சிவகாமிக்கும் திருமணம் முடித்து, தவசி வீட்டோட மாப்பிள்ளையாக வந்திருக்க, இளங்குறுத்துகளாக ஈஸ்வரனும், தீபிகாவும் வீட்டின் உயிர்ப்புகளாக உலாவ, இரண்டாவது பெண் கீதாவிற்கும் திருமணம் முடிந்திருந்தது. சுதா முதாலாமாண்டு கல்லூரி சென்று கொண்டு இருந்தாள்.

பெண்கள் வயசுக்கு வந்ததும் கல்யாணம் செய்து கொடுத்து விடும் பழக்கம் தான். ஆனால் சின்னவர் தான் தன்‌ பிள்ளைகள் பள்ளிப் படிப்பையாவது முடிக்க வேண்டும் என பள்ளி இறுதி வரை படிக்க வைத்தார். சுதா மட்டும் சற்று அடம்‌பண்ணி, கடைசிப் பெண் என்ற சலுகையோடும், சின்ன அண்ணனின் சப்போர்ட்டோடும் கல்லூரி வரை சென்றுவிட்டாள். ஆனால், அதே அண்ணனால் தான் கல்லூரிப் படிப்பும் பாதியிலேயே தடைபட்டது.

முத்துவேல் இறங்கி கீழே வர, சித்தப்பா சுப்ரமணி வாசலில் சேர்போட்டு அமர்ந்திருந்தார். அவரைச் சுற்றி உள்ளூர்‌ ஆட்கள் சிலர் நின்றிருந்தனர்‌.

தாசில்தாராராக வேலை பார்ப்பவரிடம், விபரங்கள் தெரிந்து கொள்வதற்கும், நிலபுலன்கள் பங்கு பிரிப்பது என்றால் சந்தேகம் கேட்கவும், முதியோர் ஓய்வூதியத்திற்கு எழுதிப் போடுவதற்கும், ஊர் விவகாரங்கள் பேசவும் என இவர் வீட்டில் இருக்கும் நேரம் எப்பொழுதும் அவரை தேடி ஆட்கள் வந்த வண்ணம் இருப்பர். ஊரில் ஒரு நல்லது கெட்டது என்றால் முன்னுக்கு நிற்பார்.

"என்ன முத்து? இன்னும் சாப்புடலியா? சித்தி கூப்புட்டா பாரு!" என்றார்.

"இந்தா, போறேன் சித்தப்பா." என பவ்யமாக வந்தது பதில்.‌ ஊருக்குள் அவருக்கு இருக்கும் மரியாதையைப் பார்த்து தன்னால் வந்த, பயம் கலந்த மரியாதை எப்பொழுதும் சித்தப்பாவின் மீது முத்துவேலிற்கு உண்டு. தனது அப்பாவிடம் கூட எதிர்த்துப் பேசுவான். சித்தப்பாவிடம் தலையாட்டல் மட்டுமே.

"வா முத்து! எங்க போன? வந்து உக்காரு!'' என கணவன் பக்கத்தில் தம்பிக்கும் ஒரு தட்டை வைத்தாள் சிவகாமி. தரையில் அமர்ந்து சாப்பிடும் பழக்கம் தான். சாப்பாட்டு மேஜையும் உண்டு. ஆனால் அது அண்ணன் குடும்பத்தார் வந்தால் மட்டுமே உயயோகப்படும்.

முத்துவேல் சாப்பிட அமர, ஈஸ்வரனும், தீபிகாவும் ஓடிவந்து மாமனுக்கு ஆளுக்கொரு பக்கமாக அமர்ந்து கொண்டனர். தனக்கு பரிமாற, பிள்ளைகளுக்கும் ஆளுக்கொரு வாயாக ஊட்டி விட்டுக் கொண்டே சாப்பிட ஆரம்பித்தான்.

"என்ன முத்து? தொழில் எல்லாம் எப்படி போகுது?" என தவசியும் பிள்ளைகளுக்கு ஊட்டிக் கொண்டே விசாரிக்க,

"ரியல் எஸ்டேட் நல்லா போகுது மாமா. இப்போதைக்கி ஸ்கூல் ஆரம்பிக்கிற வேல தான் போய்க்கிட்டு இருக்கு. இடம் எல்லாம் ரெடியா இருக்கு. அப்ரூவல் வந்ததும் வேலைய ஆரம்பிக்கனும். அங்கங்க ஆளுகள சரிக்கட்டனும்னு அப்பா சொல்லிட்டு இருந்தாரு. பூஜைக்கு எல்லோரும் வரனும். அப்பாவும் சொல்லிட்டு வரச் சொன்னாரு."

"மாமாவும், அத்தையும் கண்டிப்பா வருவாங்க முத்து. எல்லாரும் வந்துட்டா, இங்க பாக்க ஆளு வேண்டாமா? எங்களுக்கு எப்படி தோதுன்னு பாத்துட்டு வர்றோம்." என்றான் மேம்போக்காக.

"இந்த வேலையே வேண்டாம். எல்லாரும் கண்டிப்பா வரணும். அக்கா எங்க போகுது வருது. இந்த மாதிரி வெளில வந்தா தான் உண்டு. கீதாவுக்கும் அழைப்பு சொல்லனும்."

"பாக்கலாம் முத்து." என தவசியின் பேச்சு உறுதி சொல்லாமல் இருக்க,

"அதெல்லாம் வருவாங்க முத்து. நீ சாப்புடு." என அன்னபூரணியும் வந்து அக்கறையாக மகனுக்கும், மருமகனுக்கும் பரிமாறினார்.

தவசி சாக்கு போக்கு சொல்வதற்கான காரணம், பிள்ளைகளைப் பார்க்க என சம்மந்தி வீட்டில் சொகுசு கண்டிருக்கும் ரெங்கநாயகி தான். இங்கு வரும் பொழுதெல்லாம், தவசியை ஒரு நூல், தரம் தாழ்த்தி தான் பார்ப்பார். தவசியின் மதிப்பு தெரியவில்லை. வீட்டோடு மாப்பிள்ளை என்ற இளக்காரம்.

இவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்க,

"அன்னம்!" என அழைப்பு, வாசலில் இருந்து கேட்டது. அதற்கு அர்த்தம், இன்னும் வந்தவர்களுக்கு காஃபி வரவில்லை என்பது.

"சுதா! சீக்கிரம் காஃபி போட்டு எடுத்துட்டு போ!' என அதட்டல் வந்தது அன்னபூரணியிடம் இருந்து.

"போட்டாச்சும்மா… நீங்க உடனே பதறாதீங்க!" என பதில் கூறிவிட்டு, வெளியே காஃபியை எடுத்து சென்றாள்.

அன்று வெள்ளிக் கிழமை. வழக்கம்போல் சாந்தியும் தம்பியோடு ஒளியும் ஒலியும் பார்க்க வந்தாள்.‌ சிறியவர், பெரியவர் என வாசல் முழுதும் ஆட்கள் அமர்ந்து இருந்தனர். வெள்ளி, ஞாயிறு என்றால் டி.வி வாசலுக்கு வந்துவிடும். வீட்டிற்குள் வைத்து சமாளிக்க முடியாது. அதுவும்‌ சின்னவர் டி.வியில் செய்தி கேட்கும் நேரம் எனில் வீட்டில் யாரும் பெருமூச்சுக்கூட விடமுடியாது.

ஒலியும் ஒளியும் பார்க்க தவசியோடு, முத்துவேலும் சேரைப் போட்டு வாசலில் அமர்ந்து இருந்தான்.

சுதாவின் அருகில் சென்று அமர்ந்து கொண்டவள் முகத்தில்... முத்துவேலைப் பார்க்கையில் நமட்டுச் சிரிப்பொன்று கணநேரம் ஓடியதாகப் பட்டது. காலையில் நடந்ததை நினைத்து சிரிப்பதாக நினைத்துக் கொண்டான். விளம்பரங்கள் முடிந்து ஒலியும் ஒளியும் தொடங்கியது.

தேடும் கண்

பார்வை தவிக்க துடிக்க

தேடும் கண் பார்வை

தவிக்க துடிக்க… என டி.வியில் பாடல் ஒளிற, அனைவரது கவனமும் கொழுக் மொழுக் அமலா மீது படிய,

தன்னை யாரோ கவனிக்கும் குறுகுறுப்பில் திரும்பிய முத்துவேலின் பார்வை ஏதேச்சையாக சாந்தி மீது விழ, சடாரென அவள் பார்வையை டி.வியின் புறம் திருப்பிக் கொண்டாள்.

இவ்வளவு நேரமாக தன்மீது தான் பார்வையைப் பதித்திருந்தாள் எனப் புரிய, சட்டென உச்சியில் சுளீர் என்றது முத்துவேலிற்கும். கை கொண்டு கன்னம் தாங்கி அமர்ந்திருந்தவன் நன்றாக நிமிர்ந்து அமர்ந்தான்.

அதன்பிறகு சாந்தி அவன் பக்கமே திரும்பவில்லை. ஆனால் முத்துவேலின் பார்வை அடிக்கடி அவளை ஆராய்ந்தது.

அவள் பார்க்கவில்லையே ஒழிய, மூளைக்குள் குறுகுறுத்தது. அவனது ஆராய்ச்சிப் பார்வையின் தீண்டலில், அவளுக்கோ, உள்ளங்கை சில்லிட்டு வியர்க்க ஆரம்பிக்க, அவசரமாக அங்கிருந்து எழுந்து செல்ல முயன்றவளிடம்,

"இன்னும் ஒலியும் ஒளியும் முடியல. அதுக்குள்ள ஏன்டி போற?" என்ற சுதாவின் கேள்விக்கு,

"வீட்ல சோலி கெடக்கு சுதா. சித்தி வையும். நாங் கெளம்புறே.'' என கூறியவள் வார்த்தைகள் படபடத்தது.

ஏதோ ஒரு ஆர்வத்தில் பார்த்துவிட்டாளே ஒழிய, பார்வைகள் நேருக்கு நேராக சந்திக்கவும் பயம் வந்துவிட்டது. இன்று தானா பார்க்கிறாள்… தாவணி போட்ட நாள் முதலாகப்
பார்க்கிறாள். அவன் வருவதோ வருடத்திற்கு இரண்டு முறையோ மூன்று‌ முறையோ தான். சூரியன் எட்டத்தில் இருந்தாலும் தாமரை மலராமல் போகுமா என்ன?

ஆனால் அவள் பார்ப்பதை இன்று தான் இவன் பார்க்க... வேகமாக எழுந்து சென்றுவிட்டாள்.

"இன்னைக்கி இவ ஒன்னும் சரியில்ல. பேய் புடுச்சவ மாதிரியே திரியுறா." என சுதா தனக்குள் பேசிக் கொண்டது முத்துவேலின் கவனத்தில் விழுந்தது.

பதட்டத்தை மறைக்க தாவணி முனையை இறுக்கிப் பிடித்து அவள் வெளியேறிய வேகத்தில், இதய தாளம் தப்பியது இருபத்தைந்து வயது இளந்தாரிக்கும்.

இதுவரை அவள் கருப்பா, சிவப்பா, உயரமா, குள்ளமா எனத் தோன்றாத ஆராய்ச்சி எல்லாம் இப்பொழுது தோன்றியது.

ஊருக்கு வரும் பொழுது சுதாவின் தோழியாக, மூன்று பெண்களின் சகோதரனாக... அவளை தள்ளி நின்று தான் பார்த்திருக்கிறான். ஆனால் இன்று அவளது பார்வையில் ஏதோ கள்ளத்தனம் ஒழிந்திருப்பதாகப் பட்டது.

வீட்டிற்கு வந்தவளுக்கு இன்னும் படபடப்பு அடங்கவில்லை. அறைக்குள் சென்று கதவை சாத்திக் கொண்டாள்.

'அடியேய்... கேனச்சிரிக்கி! உனக்கு கிருக்குதான் புடிச்சிருக்கு. கட்டழகன் தான். பட்டணத்து படிப்பாளி தான். இல்லைங்கல.... ஆனா அவுகளுக்கும் உனக்கும் ஏணி வச்சாலும் எட்டுமா? ஊர் இருக்குற இருப்புக்கு இது எல்லாம் வெளிய தெரிஞ்சுது… சந்தி சிரிச்சுறும். அதுவும் இல்லாம அவங்க வசதி என்ன? படிப்பு என்ன? ரெண்டு பேரோட சாதி என்ன? ஏதோ சின்னப்பிள்ள அச்சுவெல்லத்துக்கு ஆசப்பட்ட மாதிரி ஆசப்பட்டு நிக்கிறியே? உங்க அப்பாவுக்கு தெரிஞ்சுது… தாயில்லா பிள்ளைனு கூட பாக்க மாட்டாரு. மானம் போச்சுன்னு… உன்னைய ராவோட ராவா கழுத்துல கயித்தக்கட்டி விட்டத்துல தூக்கி விட்டுறுவாரு…' என நெறிஞ்சு முள்ளாய் நாலா பக்கமும் குத்தியது மனசாட்சி.

புத்திக்கு உரைப்பது ஆசைப்பட்ட மனதிற்கு உரைக்கவில்லையே! சாதி, மதம், சகுணம், சாங்கியம், பஞ்சாங்கம் பார்த்து வந்தால் அதுக்குப் பெயர் காதல் இல்லையே!!

ஆனாலும் பாதகத்தி மனம் பாடாய்ப் படுத்தி எடுக்க... இயலாமையில் கண்களில் கண்ணீர் பெருக, சித்தியின் கத்தலைத் கூட இன்று பொருட்படுத்தாமல், சாப்பிடாமல் படுத்து விட்டாள். இங்கு தான் பாவிமக மனசு பாறாங்கல்லாய் கனத்துக் கெடக்குதே. துக்கம் அடைத்த தொண்டைக் குழிக்குள் சாப்பாடு எங்கிட்டு இறங்கும்.

மறுநாள் முத்துவேல் சென்னைக்கு கிளம்பி விட்டான். கிளம்பும் முன் ஏதோ ஒரு உந்துதலில் மாடிக்கு வந்தான். தான் பார்க்க நினைத்தவளின் தரிசனம் கிடைக்கவில்லை.‌ தனது கணிப்பு தான் தவறோ என்ற எண்ணம் எழ கீழே இறங்க முற்பட்டவனை, இல்லை என அடித்துச் சொல்லியது, தூணின் மறைவில் காற்றில் ஆடிய தாவணி முந்தானை.

பள்ளி ஆரம்பிக்கும் ஆரம்ப கட்ட வேலைகள் என முத்துவேலும் அண்ணனோடு சென்னையில் பிசியாகிவிட, பள்ளி அடிக்கல் நாட்டு விழாவிற்கு சின்னவர் குடும்பமும் சென்னை சென்று வந்தது. ஆளுங்கட்சி அரசியல்வாதியைக் கொண்டு அடிக்கல் நாட்டு விழா சிறப்பாக நடந்தேறியது. இடையில் ஒன்றிரண்டு மாதங்கள் கடந்திருக்க, இவர்களது குலசாமி கும்பிடும் வந்தது.

இவர்கள் தானே முதன்மை தலைக்கட்டு. எல்லாம் எடுத்துச் செய்வது சின்னவர் தான். வரி வசூலில் இருந்து மேலதாளம், மைக்செட்டு, பந்தல் என அணைத்து ஏற்பாடுகளும் அட்வான்ஸ் கொடுப்பதும், கணக்கு முடிப்பதும் என அத்தனையும் இவர் தான் பார்க்க வேண்டும். அதற்கு தான் இம்முறை முத்துவேலை முன்னமே ஊருக்கு அழைத்து இருந்தார். தனக்கு பின் இவர்கள் தானே இதை எல்லாம் எடுத்து செய்ய வேண்டும். எனவே அங்காளி பங்காளிகளை இளைய தலைமுறையும் பழகிக் கொள்ளட்டும் என்ற எண்ணம் அவருக்கு.

பெரியவர் வீடு சுத்தம் செய்து வைக்கப்பட்டது. வந்து இறங்கியவர்கள் தங்குவது மட்டும் தான் அங்கே. மற்றபடி சமையல், சாப்பாடு எல்லாம் சின்னவர் வீட்டில் தான். வீடு சொந்த பந்தங்களாலும், நண்டுசிண்டுகளாலும் கலகலத்தது.

அன்னபூரணிக்கு அடுக்களையே கெதி, திருவிழா முடியும் வரைக்கும். பேச்சியும் அண்ணிக்கு ஒத்தாசைக்கு வந்துவிடுவார். திலகவதிக்கு இது கைவராது. பேரப் பிள்ளைகள் மேற்பார்வையோடு சரி.

மேலதாளக்காரர்களில் இருந்து பந்தல், ஆட்டக்காரர்கள், மைக்செட்காரர்கள் என அனைவருக்கும் சாப்பாடு இங்கு தான்.

மூச்சுக்கு முன்னூறு தடவை, "சின்னாயி!" என அன்னபூரணியை அழைத்துக் கொண்டு யாராவது வந்து நிற்பார்கள்.

திலகவதி என்ன வேண்டும் என அவர்களிடம் கேட்டாலும், "உங்களுக்கு தெரியாது பெரியம்மா. சின்னாயிக்கு தான் வெவரம் தெரியும்." என கூறி விடுவர். அடுப்படி வேலையை விட்டுவிட்டு அன்னபூரணி தான் வந்தாக வேண்டும்.

"என்னப்பா வேணும்?" என கேட்க,

"சின்னய்யா காசு வாங்கிட்டு வரச் சொன்னாரு. ஏதோ பூஜை சாமான் வாங்கணுமாம்.''

"இதோ வர்றே.‌" என உள்ளே செல்பவர் கணக்கு எழுதிக் கொண்டு, கொடுத்து விடுவார்.

வரிப்பணம் மொத்தமும் வரவு செலவு பார்ப்பது சின்னவர் என்றாலும், பணம் இருப்பது என்னவோ அன்னபூரணியின் பொறுப்பில் தான் இருக்கும்.

இதற்கிடையில் உட்கார்ந்த இடத்திற்கே அனைத்தும் பெரியவருக்கு வரவேண்டும். இது சின்னவர் உத்தரவு.

"உங்களுக்கு உங்க ஊர்ல இவ்வளவு தான் மரியாதையா அண்ணி?" என கேட்டுக் கொண்டே ரெங்கநாயகி, திலகவதியின் அருகே அமர்ந்தார்.

"அன்னத்துக்கு தானே உள்ளூர் வெவரம் தெரியும். என்னைக்கோ ஒரு நாளைக்கி வர்ற‌ நமக்கு என்ன தெரியும் அண்ணி " என திலகவதியும் விட்டுக் கொடுக்காமல் கேட்க,

"அதுக்குன்னு, நீங்க தானே மூத்தவுக. முதல் மரியாதை உங்களுக்கு தானே. ஒரு பேச்சுக்கு கூட உங்கள, ஒரு வார்த்தை யாரும் கலந்துக்கறது இல்ல. எல்லாமே சின்னவுக பொறுப்புல தான் இருக்கும் போலயே? நீங்களும் அண்ணனும் சும்மா ஒப்புக்கு சப்பாணி தானா?" என வில்லங்கத்தை விளைவித்தார் ரெங்கநாயகி.

ஐந்து வயது வரைக்கும் தான் அண்ணன் தம்பி. பத்து வயதில் பங்காளி தான். நீ பெரியவனா நான் பெரியவனா என்ற ஈகோ தான் பல குடும்பங்கள் வருடக் கணக்கில் பகைமை பாராட்ட காரணமாக இருந்திருக்கிறது. ரெங்கநாயகி கேட்டது அருகில் சேரில் அமர்ந்து பேப்பர் பார்த்துக் கொண்டு இருந்த பெரியவர் சுப்பையா காதிலும் விழுந்தது.‌ இது கடந்த சில வருடங்களாகவே அவருக்குள்ளும் எழும் எண்ணம் தான்.‌

பாண்டவர், கௌரவர்களின் பங்காளிச் சண்டைக்கு காரணமே முதல் மரியாதை யாருக்கு என்பது தானே.

ஊருக்குள் தம்பிக்கு இருக்கும்‌ மரியாதை அவரை உறுத்தியது. கப்பல் மாதிரி காரில் வந்து இவர்‌ இறங்கினாலும், வரவேற்போடு சரி.‌

பெரியவர் என்ற‌ முறையில் தன்னிடம் எதுவும் கலந்து கொள்வதில்லை...‌ என்ற‌ எண்ணம் மனதினுள்‌ ஓடும். குலசாமி கும்பிடும் போதும், மாலை போடும் போது மட்டுமே பெரியவர் என்கிற முறையில் இவரை முன்னுக்கு அழைப்பர். அதுவரை அங்கு சின்னவரின் குரல்‌தான் ஓங்கி ஒலித்துக் கொண்டு இருக்கும். ஊருக்குள் தம்பியின் பேச்சிற்கு நாலு பேர் தலை ஆட்டும் பொழுது, எத்தனை கோடி சம்பாதித்தாலும் இந்த விஷயத்தில் தம்பி முன் குறைந்து விட்டதாகவே தோன்றும்.

அதையே ரெங்கநாயகியும் சற்று விசிறிவிட, பொறாமைத் தீ மெதுவாக புகைய ஆரம்பித்தது.

இதெல்லாம் பெரிய விஷயமா எனத் தோன்றலாம்.‌ மானம், மரியாதை, கௌரவம் என விறைப்பாகத் திரிந்த காலகட்டங்கள். அன்று… அக்கா, தங்கைகள் காதலித்தால் அருவா தூக்கிய சகோதரர்கள் எல்லாம், இன்று… "பிள்ளை ஆசப்பட்டுட்டான் என்ன பண்றது." என நயந்து பேசும் காலமாற்றத்தை பார்க்க முடிகிறது.

உப்புக்கல்லு பெறாத விஷயம் தான் பெரிதாகி குடும்பத்தையே பிரிக்கும் என்பது கூட்டுக்குடும்பவாசிகளுக்கு நன்றாகவே தெரியும். அதுவும் பிள்ளைச் சண்டைதான் பெருசாகும். பிள்ளச் சண்டைக்கி பெரியவங்க போக்கூடாதுனு ஒரு பேச்சுவழக்கே இருக்கு. சண்டை போட்டதுக செத்த நேரத்துல சேர்ந்து விளையாடப் போயிரும். அதைவச்சு வந்த பெரியவுக சண்டை தான் பூதாகரமாகி குடும்பமே பிரியும்.

திரௌபதியின் சிரிப்பு தான், துரியோதனனை வஞ்சம் வைக்க தூண்டியது.

அது போலத்தான், ஊரார் முன் தனக்கு ஏற்பட்ட சிறு அவமானம் தான் ரெங்கநாயகி மனதில் வஞ்சம் வைக்க காரணமாகியது.

சென்ற திருவிழாவின் போது, சக்திவேல் குழந்தைகளுக்கு நடந்த காதுகுத்து விழாவில் ரெங்கநாயகி குடும்பத்திற்கு நிகழ்ந்த அவமானமே, ரெங்கநாயகியை சின்னவர் குடும்பத்து மீது துவேசம் கொள்ளச் செய்தது. அதுவே இன்றும் தொட்டுத் தொடர்கிறது.

தீ! பெரியவர்களுக்கு இடையே பொறாமைத் தீயும், சிறியவர்களுக்கு இடையே காதல் தீயும் பற்றி எரிய ஆரம்பித்திருந்தது.

தொடர்ச்சி கீழே👇👇👇
 
Last edited:

S.M.Eshwari.

அமைச்சர்
SM Exclusive
Joined
Jun 7, 2021
Messages
2,256
Reaction score
6,280
Location
India
13+
சென்ற பதிவில் பிரசவமான பெண்களுக்கு பிரசவ லேகியமும், நல்லெண்ணெயும், பூண்டும் வலுவூட்டுபவைனு சொல்லி இருந்தது. அந்த எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்கோட இன்னொரு ஜாயின்ட் இது. பொதுவாகவே பெண் பிள்ளைகள் வயதிற்கு வந்தவுடனே அவர்களுக்கு உளுந்தங்களி, உளுந்தவடை, வெந்தயக்களி, மாதுளம்பழம், பேரீச்சம்பழம் என அவங்கள கவனிக்க ஆரம்பிச்சுர்றோம்.

அப்ப… வயசுப் பையனுகளுக்கு?

உழவு காட்டுக்குப் போற ஆம்பிளைகளுக்கு, முளைகட்டிய கம்பு, துணியில முடிஞ்சு (ஸ்நாக்ஸ்) கொடுத்து விடுவாங்க. இதை நீங்க சிங்கிள் மீனிங்ல எடுத்துக்கிட்டாலும் சரி. டபுள் மீனிங்ல எடுத்துக்கிட்டாலும் சரி. அதுதான் உண்மையும் கூட. ஒரு இனத்தில், புதுமாப்பிள்ளைக்கு கொடுக்கும் மறுவீட்டு பலகாரச்சீரில் கம்பு உருண்டை இன்றும் தவறாமல் இடம்பெறுகிறது.
அதாகப்பட்டது என்னான்னா... முளைகட்டிய தானியங்கள் எல்லாமே ஆண் பிள்ளைகளுக்கு கொடுக்கலாம். அதில் கம்பு முக்கியமான ஒன்று.
விதை அதிகமுள்ள மாதுளை, சீதாப்பழம் போன்றவை பெண்களுக்கும், முளைகட்டிய தானியங்கள் ஆண்களுக்கும் ஏற்றது.‌ அதுக்குதாங்க படம் போட்டு பாகம் குறிச்சுருக்கு. கதைக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லைங்கோ. சென்ற பதிவோட தொடர்ச்சி இது. ஞாபகப்படுத்தனும்னு தோணிச்சு. சாப்பிடும் பொருளின் வடிவத்தை வைத்தே, அது நமக்கு எந்த உறுப்பிற்கு பயன்படும்னு கண்டு பிடிக்கலாம்னு சொல்றாங்க. அப்படினா... படம் பார்த்தாலே புரிஞ்சுருக்கும். முளைகட்டிய கம்பு ஏன் முக்கியம் என்று. உயிரணுக்கள் உற்பத்திக்கு உதவும். முளைகட்டிய கம்பின் வாசனை உணர்த்தும் அதன் சூட்சமத்தை, பெண் வாசம் அறிந்தவர்களுக்கு மட்டும்.
அவ்ளோதான் மக்களே 🥰 இனி எக்ஸ்ட்ரா ஃபிட்டிங் போட்டு ரம்பம் போட மாட்டேன். பையனுகளுக்கும் சொல்லனும்னு தோனுச்சு.😊

பெண் கருமுட்டை
83059888.jpg

மாதுளை

fruits-pomegranate-free-images-wallpaper-preview_compressed.jpg

உயிரணுக்கள்
_102397262_94b00a10-53df-4467-8c6f-846d72771876.jpg

முளைகட்டிய கம்பு
IMG_20230121_130826.jpg
 
Last edited:

SarojaGopalakrishnan

முதலமைச்சர்
Joined
Jul 20, 2018
Messages
5,558
Reaction score
7,772
Location
Coimbatore
கதையும் அருமையா இருக்கு
படம் போட்டு விளங்குவனதும்
அருமை
 
Nirmala senthilkumar

அமைச்சர்
Joined
Jan 25, 2022
Messages
2,551
Reaction score
6,770
Location
Salem
Hi friends ❣
இதோ கதையின் அடுத்த பதிவோடு தங்களின் அன்பான ஆதரவை எதிர்பார்த்து என்றென்றும் அன்புடன் 🙏🏻🙏🏻🙏🏻
S M ஈஸ்வரி 🥰🥰🥰🥰🥰
View attachment 38220

14

"எப்ப வந்தீங்க?"

"…..……"

"இன்னைக்கி காலையிலயா?"

"………….."

"பஸ்லயா? ட்ரெயின்லயா?"

"………….."
"
சாப்ட்டாச்சா?"

"…………."

"நீ வர்றீயா? இல்ல… நான் வரவா?"

"………."

"ரெண்டு பேரும், குளிக்க கெணத்துக்கு போலாமா?"

"………."

இதுவரை குழப்பமாக பார்த்துக் கொண்டிருந்த முத்துவேல் இறுதிக் கேள்வியில் விக்கித்து நின்றான். ஆறடி ஆண்மகனுக்கும் அதிர்ச்சியில் மூச்சடைத்தது. சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டான்.

ஒரு செவ்வந்திப்பூ தன்னைப் பார்த்து நலம் விசாரித்ததோடு நில்லாமல், குளிக்கவும் அழைத்ததில் மிரண்டு தான் போனான். (கொசுவத்தி சுருள் சுத்தி முடிக்கிற வரை இரண்டாம் தலைமுறையை ஒருமையிலேயே விளிக்கலாம் மக்களே! சீக்கிரம் சுத்தி முடிச்சுர்றே.)

இவன் மாடியில் நின்றிருக்க, எதிர் புறமாக இருந்த மாடிவீட்டின் பால்கனியில் இருந்து தான் இந்த உரையாடல் சைகையில் நடந்து கொண்டிருந்தது. குறுக்கே ஒரு தெருவை அடுத்து, அந்த மாடி வீடு. இரண்டு மாடி வீட்டிற்கும் இடையிலும் இருந்தவை உயரம் குறைந்த ஓட்டு வீடுகள் என்பதால், அந்த வீட்டு மாடியில் நின்று சைகையில் கேட்பது நன்றாகத் தெரிந்தது. சைகையிலும், வாயசைவிலுமே இந்த உரையாடல் நடந்து கொண்டிருந்தது. சத்தமாக பேச முடியாது என்கிற காரணத்தால்.‌

அவளைத் தெரியும். சுதாவின் பள்ளித் தோழி சாந்திமீனா என்பதோடு, அவளது தந்தையும், முத்துவேலின் தந்தை சுப்பையாவுமே நெருங்கிய பால்ய நண்பர்கள். அவளுக்கு அம்மா இல்லை. அப்பாவின் இரண்டாம் தாரமான சித்தி தான்.‌ சித்திக்குப் பிறந்த ஒரு தம்பி.

ஊருக்கு வரப்போக தங்கை சுதாவுடன் அவளைப் பார்த்தது உண்டு. தாயில்லாப் பிள்ளை என்பதால் இங்கு அன்னபூரணியிடம் சற்று கரிசனம் அதிகம்.

வெள்ளிக் கிழமை எனில் ஒலியும் ஒளியும் பார்க்கவும், ஞாயிறு என்றால் டி.வியில் படம் பார்க்கவும் சின்னவர் வீட்டிற்கு வருவாள்.

அந்த ஊருக்கே இரண்டே டி.வி தான். ஒன்று பஞ்சாயத்து டிவி. இன்னொன்று‌ சின்னவர் வீட்டு டி.வி. கதவு, பூட்டு,‌ சாவியோடு கூடிய பொக்கிஷ டி.வி.

அவளது இனம் வேறாக இருந்தாலும், இரு குடும்பங்களுக்கு இடையிலும் மாமன் மச்சான் என்றே முறை சொல்லி‌ அழைத்துப் பழக்கம். அவர்களது இனத்தில் அவர்கள் குடும்பமும் பெரிய தலைக்கட்டு தான். என்ன… தற்சமயம் சற்று நொடித்துப் போன குடும்பம். பழம் பெருமையை பேசும் மாடிவீடும், வானம் பார்த்த பூமியும், வெள்ளாடுகளுமே ஜீவன ஆதாரம். ஆஹா ஓஹோன்னு இல்லைனாலும், அச்சச்சோங்கற நிலையிலும் இல்லாத சராசரியான... ஆனால் ஊருக்குள் மதிப்பான குடும்பம்.

இத்தனை நாட்களாக, நேருக்கு நேராக நின்று பார்த்தது கூட கிடையாது. அப்படிப்பட்டவள் இப்பொழுது, நலம் விசாரிப்பதும்,‌ அதோடு நில்லாமல் குளிக்க அழைக்கவும் ஒரு கணம் மிரண்டு தான் போனான். நம்மிடம் விளையாடுகிறாளா என இவன் குழம்பி நிற்க,

"நீ இங்கே வா… நம்ம ரெண்டு பேரும் சேந்து போகலாம்." என பக்கத்தில் குரல் கேட்க, அப்பொழுது தான் தூணைத் தாண்டி தலை நீட்டிப் பார்த்தான். இரட்டைவீடு என்று அழைக்கப்படும் பெரிய வீட்டின் நடுவில், பொதுவாக பெரிய தூண் இருக்க, அந்தப்பக்கம் சுதா நின்றிருந்தாள். இவ்வளவு நேரமாக அவள், சுதாவிடம் தான்‌ சைகையில் பேசி இருக்கிறாள் என புரிய, நின்ற மூச்சு இப்பொழுது தான் வந்தது முத்துவேலிற்கு. மூச்சை இழுத்து விட்டு ஆசுவாசப்பட்டவன்,
எட்டிப் பார்த்து, அசடு வழிய நின்றிருந்தது, எதிர் மாடியில் இருந்தவளுக்கு நன்றாகத் தெரிய, வாய்விட்டு கலகலவென சிரித்தாள்.

"எதுக்கு லூசு மாதிரி சிரிக்கிறா?" என சுதா இங்கே தனக்குத்தானே கேட்டுக் கொண்டிருந்தாள். அவளும் இந்தப்பக்கமாக நின்றிருந்த அண்ணனைப் பார்க்கவில்லை. தூண் நடுவில் இருக்க, ஆளுக்கொரு பக்கமாக நின்றிருந்தது எதிர்‌மாடியில் இருந்த சாந்திக்கு நன்றாகவே தெரிந்தது. அவள்‌ முதல் கேள்வி கேட்கும் பொழுதே முத்துவேல் அதிர்ந்து பார்த்ததும், முன்னே பின்னே திரும்பிப் பார்த்துக் கொண்டதும், இவள் விசாரிப்பது தன்னை என‌ நினைத்துக் கொண்டு,‌ முத்துவேல் திருதிருவென முழிப்பதும் புரிந்தது. காலையில் தான் சென்னையில் இருந்து விடுமுறைக்கு வந்த சுதாவை அழைத்து கொண்டு வந்திருந்தான்.

மாடிக்கு வந்த தோழியைப் பார்த்து விட்டு சாந்தி நலம் விசாரிக்க, இங்கே முத்துவேல் இடையில் மாட்டிக்கொண்டான்.

அவள் சிரித்து விட்டு உள்ளே ஓடிவிட்டாள். முத்துவேலும் தலையில் தட்டிக் கொண்டு தனக்கு தானே சிரித்துக் கொண்டான். அதற்குள் அவனது சித்தி அழைக்கும் குரல் கேட்டது. கீழே இறங்கி சித்தப்பா வீட்டிற்கு சென்றான்.

ஆண்பிள்ளை இல்லாத இவனது சித்திக்கும், சித்தப்பாவிற்கும் முத்துவேல் என்றால் சற்று அலாதி பிரியம் தான்.

எழுபது, எண்பதுகள் வரைக்குமே ஆண்வாரிசு மோகம் உச்சத்தில் இருந்த காலகட்டங்கள் அவை. இப்பவும் குறைந்து விடவில்லை. எத்தனை பெண் குழந்தை பிறந்தாலும் ஆண் குழந்தைக்காக தவமிருந்து காத்திருந்த காலம். அப்பொழுது தான் ஸ்கேனிங் என்ற ஒன்று பரவலாக புழக்கத்திற்கு வந்தது. ஆணா? பெண்ணா? என அறிவது சட்டப்படி குற்றம் என்று இருக்க, அதையெல்லாம் நாம் எப்பொழுது கடைபிடித்தோம். காசை வாங்கிக் கொண்டு கமுக்கமாக, எல்லாம் நடந்தது. பல பெண் குழந்தைகளின் உயிர்கள் கருவரையிலேயே சமாதி வைக்கப்பட்டன.

ஆனால், கிராமங்களில் அதற்கு வழி இல்லாததால், பிறக்கும் வரை பெண் குழந்தைகளுக்கு தயவு காட்டப்பட்டது. வரிசையாக பெண்‌குழந்தை எனில் மூன்றாவது குழந்தைக்கு கள்ளிப்பால் நிச்சயம். பெண்குழந்தை என்றாலே பிறந்ததில் இருந்து செலவாகவும், சுமையாகவும் கருதப்பட்ட காலகட்டம். குடும்பத்தின் பேர் சொல்லும் பிள்ளை என்றால் அது ஆண்பிள்ளை மட்டும் தான்.

இங்கும் சின்னவருக்கு மூன்றாவதும் பெண்‌குழந்தையாக பிறக்க,‌

"ஏம்ப்பா சுப்பு! கள்ளிப்பாலா, நெல்லா?" என சொந்தங்களால் சின்னவரிடமும் கேட்கப் பட்டது. கள்ளிப்பால் என்றால், பால் எடுக்க காட்டுக்குப் போக வேண்டும். நெல்மணி என்றால் வீட்டிலேயே இருக்கும். அந்த சௌகர்யம் தான்.‌ நெல்மணிகளை பிறந்த குழந்தையின் வாயில் போட்டு விடுவர். பச்சைக் குழந்தை எவ்வளவு‌ நேரம் தாங்கும். கருப்பையை விட்டு வெளி வந்த ஈரம் காயும் முன், வந்த சுவடு தெரியாமல் எல்லாம் முடிந்துவிடும்.‌ (அதிர்ச்சி ஆகாதீங்க மக்களே! எண்பதுகளில் எங்கள் ஊரிலேயே இதெல்லாம் வெளிய தெரியாம நடந்த, ஊரறிந்த ரகசியம். முதல் நாள் குழந்தை பிறந்திருக்கும். மறுநாள் கேட்டோம்னா, செத்துப் போச்சுன்னு அசால்ட்டா சொல்லுவாங்க.)

இங்கோ... சின்னவர் பார்த்த பார்வையிலேயே பிரசவம் பார்த்த மருத்துவச்சி, மறு‌ வார்த்தை பேசாமல் இடத்தைக் காலி செய்தார்.

"பிள்ள பெத்துக்க தெம்பு இருக்குறவனுக்கு, கட்டிக்கொடுத்து சீர் கொடுக்கவும் தெம்பு இருக்கு. எத்தனை பொட்டப் பிள்ளைனாலும்‌ என்னால சீர்செஞ்சு கட்டிக் கொடுக்க முடியும்." என சொந்தங்களுக்கு பதிலடி கொடுத்தார்.

மனைவியை குடும்ப கட்டுப்பாட்டிற்கு அழைக்க, அன்னபூரணிக்கு செல்லவே மனமில்லை. அடுத்த குழந்தையைப் பார்க்கலாம் என்ற எண்ணம் தான்.

"கொள்ளி வைக்க பையன் வேண்டாமா? நம்ம பேரப்பிள்ளைகளுக்கு நாளைக்கு சபையில தாய்மாமன்னு நிக்க ஒருத்தன் வேணுமே?" எனத் தயங்கி நின்றார்.‌ தாய்மாமன் உறவு அவ்வளவு முக்கியம் செங்காத்து பூமிக்கு. இப்ப புரியுதுங்களா எதுக்கு கள்ளிப்பால்னு. தொட்டதுக்கெல்லாம் சீர் செய்யணும்ங்க. பெண்பிள்ளைகள் பிறந்தது முதல் காதுகுத்து, சடங்கு, கல்யாணம், நல்லது கெட்டது, பேரு காலம், இது போதாதது என தாவணி போடும் விழா, கிடா வெட்டும் விழா என, அனைத்தும் இப்பொழுதெல்லாம் பத்திரிகை அடித்து நடத்தப் படுகிறது. அனைத்திற்கும் பிறந்தவீடு சீர்செய்ய வேண்டும். ஐநூறு, ஆயிரமெல்லாம் பிசாத்து மொய். ஒரு‌ விசேஷம் எனில் லட்சங்களில் மொய் சேரும். கந்து வட்டிக்கு கடன் வாங்கியாவது சபை மெச்ச மொய் வைக்க வேண்டும்.

தாய்மாமனாக ஒரு குழந்தைக்கு சேனை தொட்டு வைப்பதில் தொடங்கி, சகோதரனாக பிறந்த வீட்டு கோடி போட்டு இறுதி யாத்திரைக்கு வழி அனுப்பும் வரைக்குமே சீர் செய்தே அலுத்துப் போகும் கூட்டம்.

"பிறந்த வீட்டு சீர் செய்யத்தான் அண்ணே பையனுக இருக்காங்களே. அவிங்க பாத்துப்பானுக." என குடும்ப கட்டுப்பாட்டிற்கு தயங்கி நின்ற மனைவியை ஒரே வரியில் அடக்கி விட்டார்.

சின்னவருக்கு அண்ணன் என்றால் அம்பூட்டு மரியாதை. லட்சுமணன் கிழித்த கோட்டை சீதை வேண்டுமானல் தாண்டியிருக்கலாம். ஆனால், இவரோ அண்ணன் கிழித்த கோட்டை தாண்டாத நவீனயுக லட்சுமணனாக இருந்தார். அண்ணனும் இராமராகத்தான் இருப்பார் என்ற நம்பிக்கை அவருக்கு.

நாலாவதும் பெண் குழந்தை எனில் என்ன செய்வதாக உத்தேசம் என்ற கேள்விக்கு அன்னபூரணியிடம் பதில் இல்லாமல் போக, சின்னவரே மனைவியிடம் சொல்லாமல் குடும்பக் கட்டுப்பாடு செய்து வந்து நின்றார். அவருக்கு மனைவி பிள்ளைகள் என்றால் அதீத பாசம். என்ன ஒன்று... அதை வாய் ஜாலத்தில் காட்டத் தெரியாது. வெளியில் எந்த அளவிற்கு கறார் பேர்வழியோ வீட்டிலும் அப்படியே. பெண்‌பிள்ளைகள் என்பதால் கண்டிப்பு கொஞ்சம் அதிகம் தான். தன் பெண் பிள்ளைகள் மீது ஒரு சொல் விழுந்து விடக்கூடாது என்பதாலேயே இந்த கண்டிப்பும்.

எனவே தான் ஆண் பிள்ளையான முத்துவேல் என்றாலே இருவரும் உருகிவிடுவர்.

சின்னவர் எதிர்பார்த்த மாதிரியே, அண்ணன் மகன்களான சக்திவேலிற்கும், முத்துவேலிற்கும் தங்கைகள் என்றால் தனிப் பிரியம் தான். பெண்களுக்கு அண்ணன்‌ முறையில் எல்லாவற்றிலும் முன்னுக்கு நின்றனர்.

மூத்தவள் சிவகாமிக்கும் திருமணம் முடித்து, தவசி வீட்டோட மாப்பிள்ளையாக வந்திருக்க, இளங்குறுத்துகளாக ஈஸ்வரனும், தீபிகாவும் வீட்டின் உயிர்ப்புகளாக உலாவ, இரண்டாவது பெண் கீதாவிற்கும் திருமணம் முடிந்திருந்தது. சுதா முதாலாமாண்டு கல்லூரி சென்று கொண்டு இருந்தாள்.

பெண்கள் வயசுக்கு வந்ததும் கல்யாணம் செய்து கொடுத்து விடும் பழக்கம் தான். ஆனால் சின்னவர் தான் தன்‌ பிள்ளைகள் பள்ளிப் படிப்பையாவது முடிக்க வேண்டும் என பள்ளி இறுதி வரை படிக்க வைத்தார். சுதா மட்டும் சற்று அடம்‌பண்ணி, கடைசிப் பெண் என்ற சலுகையோடும், சின்ன அண்ணனின் சப்போர்ட்டோடும் கல்லூரி வரை சென்றுவிட்டாள். ஆனால், அதே அண்ணனால் தான் கல்லூரிப் படிப்பும் பாதியிலேயே தடைபட்டது.

முத்துவேல் இறங்கி கீழே வர, சித்தப்பா சுப்ரமணி வாசலில் சேர்போட்டு அமர்ந்திருந்தார். அவரைச் சுற்றி உள்ளூர்‌ ஆட்கள் சிலர் நின்றிருந்தனர்‌.

தாசில்தாராராக வேலை பார்ப்பவரிடம், விபரங்கள் தெரிந்து கொள்வதற்கும், நிலபுலன்கள் பங்கு பிரிப்பது என்றால் சந்தேகம் கேட்கவும், முதியோர் ஓய்வூதியத்திற்கு எழுதிப் போடுவதற்கும், ஊர் விவகாரங்கள் பேசவும் என இவர் வீட்டில் இருக்கும் நேரம் எப்பொழுதும் அவரை தேடி ஆட்கள் வந்த வண்ணம் இருப்பர். ஊரில் ஒரு நல்லது கெட்டது என்றால் முன்னுக்கு நிற்பார்.

"என்ன முத்து? இன்னும் சாப்புடலியா? சித்தி கூப்புட்டா பாரு!" என்றார்.

"இந்தா, போறேன் சித்தப்பா." என பவ்யமாக வந்தது பதில்.‌ ஊருக்குள் அவருக்கு இருக்கும் மரியாதையைப் பார்த்து தன்னால் வந்த, பயம் கலந்த மரியாதை எப்பொழுதும் சித்தப்பாவின் மீது முத்துவேலிற்கு உண்டு. தனது அப்பாவிடம் கூட எதிர்த்துப் பேசுவான். சித்தப்பாவிடம் தலையாட்டல் மட்டுமே.

"வா முத்து! எங்க போன? வந்து உக்காரு!'' என கணவன் பக்கத்தில் தப்பிக்கும் ஒரு தட்டை வைத்தாள் சிவகாமி. தரையில் அமர்ந்து சாப்பிடும் பழக்கம் தான். சாப்பாட்டு மேஜையும் உண்டு. ஆனால் அது அண்ணன் குடும்பத்தார் வந்தால் மட்டுமே உயயோகப்படும்.

முத்துவேல் சாப்பிட அமர, ஈஸ்வரனும், தீபிகாவும் ஓடிவந்து மாமனுக்கு ஆளுக்கொரு பக்கமாக அமர்ந்து கொண்டனர். தனக்கு பரிமாற, பிள்ளைகளுக்கும் ஆளுக்கொரு வாயாக ஊட்டி விட்டுக் கொண்டே சாப்பிட ஆரம்பித்தான்.

"என்ன முத்து? தொழில் எல்லாம் எப்படி போகுது?" என தவசியும் பிள்ளைகளுக்கு ஊட்டிக் கொண்டே விசாரிக்க,

"ரியல் எஸ்டேட் நல்லா போகுது மாமா. இப்போதைக்கி ஸ்கூல் ஆரம்பிக்கிற வேல தான் போய்க்கிட்டு இருக்கு. இடம் எல்லாம் ரெடியா இருக்கு. அப்ரூவல் வந்ததும் வேலைய ஆரம்பிக்கனும். அங்கங்க ஆளுகள சரிக்கட்டனும்னு அப்பா சொல்லிட்டு இருந்தாரு. பூஜைக்கு எல்லோரும் வரனும். அப்பாவும் சொல்லிட்டு வரச் சொன்னாரு."

"மாமாவும், அத்தையும் கண்டிப்பா வருவாங்க முத்து. எல்லாரும் வந்துட்டா, இங்க பாக்க ஆளு வேண்டாமா? எங்களுக்கு எப்படி தோதுன்னு பாத்துட்டு வர்றோம்." என்றான் மேம்போக்காக.

"இந்த வேலையே வேண்டாம். எல்லாரும் கண்டிப்பா வரணும். அக்கா எங்க போகுது வருது. இந்த மாதிரி வெளில வந்தா தான் உண்டு. கீதாவுக்கும் அழைப்பு சொல்லனும்."

"பாக்கலாம் முத்து." என தவசியின் பேச்சு உறுதி சொல்லாமல் இருக்க,

"அதெல்லாம் வருவாங்க முத்து. நீ சாப்புடு." என அன்னபூரணியும் வந்து அக்கறையாக மகனுக்கும், மருமகனுக்கும் பரிமாறினார்.

தவசி சாக்கு போக்கு சொல்வதற்கான காரணம், பிள்ளைகளைப் பார்க்க என சம்மந்தி வீட்டில் சொகுசு கண்டிருக்கும் ரெங்கநாயகி தான். இங்கு வரும் பொழுதெல்லாம், தவசியை ஒரு நூல், தரம் தாழ்த்தி தான் பார்ப்பார். தவசியின் மதிப்பு தெரியவில்லை. வீட்டோடு மாப்பிள்ளை என்ற இளக்காரம்.

இவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்க,

"அன்னம்!" என அழைப்பு, வாசலில் இருந்து கேட்டது. அதற்கு அர்த்தம், இன்னும் வந்தவர்களுக்கு காஃபி வரவில்லை என்பது.

"சுதா! சீக்கிரம் காஃபி போட்டு எடுத்துட்டு போ!' என அதட்டல் வந்தது அன்னபூரணியிடம் இருந்து.

"போட்டாச்சும்மா… நீங்க உடனே பதறாதீங்க!" என பதில் கூறிவிட்டு, வெளியே காஃபியை எடுத்து சென்றாள்.

அன்று வெள்ளிக் கிழமை. வழக்கம்போல் சாந்தியும் தம்பியோடு ஒளியும் ஒலியும் பார்க்க வந்தாள்.‌ சிறியவர், பெரியவர் என வாசல் முழுதும் ஆட்கள் அமர்ந்து இருந்தனர். வெள்ளி, ஞாயிறு என்றால் டி.வி வாசலுக்கு வந்துவிடும். வீட்டிற்குள் வைத்து சமாளிக்க முடியாது. அதுவும்‌ சின்னவர் டி.வியில் செய்தி கேட்கும் நேரம் எனில் வீட்டில் யாரும் பெருமூச்சுக்கூட விடமுடியாது.

ஒலியும் ஒளியும் பார்க்க தவசியோடு, முத்துவேலும் சேரைப் போட்டு வாசலில் அமர்ந்து இருந்தான்.

சுதாவின் அருகில் சென்று அமர்ந்து கொண்டவள் முகத்தில்... முத்துவேலைப் பார்க்கையில் நமட்டுச் சிரிப்பொன்று கணநேரம் ஓடியதாகப் பட்டது. காலையில் நடந்ததை நினைத்து சிரிப்பதாக நினைத்துக் கொண்டான். விளம்பரங்கள் முடிந்து ஒலியும் ஒளியும் தொடங்கியது.

தேடும் கண்

பார்வை தவிக்க துடிக்க

தேடும் கண் பார்வை

தவிக்க துடிக்க… என டி.வியில் பாடல் ஒளிற, அனைவரது கவனமும் கொழுக் மொழுக் அமலா மீது படிய,

தன்னை யாரோ கவனிக்கும் குறுகுறுப்பில் திரும்பிய முத்துவேலின் பார்வை ஏதேச்சையாக சாந்தி மீது விழ, சடாரென அவள் பார்வையை டி.வியின் புறம் திருப்பிக் கொண்டாள்.

இவ்வளவு நேரமாக தன்மீது தான் பார்வையைப் பதித்திருந்தாள் எனப் புரிய, சட்டென உச்சியில் சுளீர் என்றது முத்துவேலிற்கும். கை கொண்டு கன்னம் தாங்கி அமர்ந்திருந்தவன் நன்றாக நிமிர்ந்து அமர்ந்தான்.

அதன்பிறகு சாந்தி அவன் பக்கமே திரும்பவில்லை. ஆனால் முத்துவேலின் பார்வை அடிக்கடி அவளை ஆராய்ந்தது.

அவள் பார்க்கவில்லையே ஒழிய, மூளைக்குள் குறுகுறுத்தது. அவனது ஆராய்ச்சிப் பார்வையின் தீண்டலில், அவளுக்கோ, உள்ளங்கை சில்லிட்டு வியர்க்க ஆரம்பிக்க, அவசரமாக அங்கிருந்து எழுந்து செல்ல முயன்றவளிடம்,

"இன்னும் ஒலியும் ஒளியும் முடியல. அதுக்குள்ள ஏன்டி போற?" என்ற சுதாவின் கேள்விக்கு,

"வீட்ல சோலி கெடக்கு சுதா. சித்தி வையும். நாங் கெளம்புறே.'' என கூறியவள் வார்த்தைகள் படபடத்தது.

ஏதோ ஒரு ஆர்வத்தில் பார்த்துவிட்டாளே ஒழிய, பார்வைகள் நேருக்கு நேராக சந்திக்கவும் பயம் வந்துவிட்டது. இன்று தானா பார்க்கிறாள்… தாவணி போட்ட நாள் முதலாகப்
பார்க்கிறாள். அவன் வருவதோ வருடத்திற்கு இரண்டு முறையோ மூன்று‌ முறையோ தான். சூரியன் எட்டத்தில் இருந்தாலும் தாமரை மலராமல் போகுமா என்ன?

ஆனால் அவள் பார்ப்பதை இன்று தான் இவன் பார்க்க... வேகமாக எழுந்து சென்றுவிட்டாள்.

"இன்னைக்கி இவ ஒன்னும் சரியில்ல. பேய் புடுச்சவ மாதிரியே திரியுறா." என சுதா தனக்குள் பேசிக் கொண்டது முத்துவேலின் கவனத்தில் விழுந்தது.

பதட்டத்தை மறைக்க தாவணி முனையை இறுக்கிப் பிடித்து அவள் வெளியேறிய வேகத்தில், இதய தாளம் தப்பியது இருபத்தைந்து வயது இளந்தாரிக்கும்.

இதுவரை அவள் கருப்பா, சிவப்பா, உயரமா, குள்ளமா எனத் தோன்றாத ஆராய்ச்சி எல்லாம் இப்பொழுது தோன்றியது.

ஊருக்கு வரும் பொழுது சுதாவின் தோழியாக, மூன்று பெண்களின் சகோதரனாக... அவளை தள்ளி நின்று தான் பார்த்திருக்கிறான். ஆனால் இன்று அவளது பார்வையில் ஏதோ கள்ளத்தனம் ஒழிந்திருப்பதாகப் பட்டது.

வீட்டிற்கு வந்தவளுக்கு இன்னும் படபடப்பு அடங்கவில்லை. அறைக்குள் சென்று கதவை சாத்திக் கொண்டாள்.

'அடியேய்... கேனச்சிரிக்கி! உனக்கு கிருக்குதான் புடிச்சிருக்கு. கட்டழகன் தான். பட்டணத்து படிப்பாளி தான். இல்லைங்கல.... ஆனா அவுகளுக்கும் உனக்கும் ஏணி வச்சாலும் எட்டுமா? ஊர் இருக்குற இருப்புக்கு இது எல்லாம் வெளிய தெரிஞ்சுது… சந்தி சிரிச்சுறும். அதுவும் இல்லாம அவங்க வசதி என்ன? படிப்பு என்ன? ரெண்டு பேரோட சாதி என்ன? ஏதோ சின்னப்பிள்ள அச்சுவெல்லத்துக்கு ஆசப்பட்ட மாதிரி ஆசப்பட்டு நிக்கிறியே? உங்க அப்பாவுக்கு தெரிஞ்சுது… தாயில்லா பிள்ளைனு கூட பாக்க மாட்டாரு. மானம் போச்சுன்னு… உன்னைய ராவோட ராவா கழுத்துல கயித்தக்கட்டி விட்டத்துல தூக்கி விட்டுறுவாரு…' என நெறிஞ்சு முள்ளாய் நாலா பக்கமும் குத்தியது மனசாட்சி.

புத்திக்கு உரைப்பது ஆசைப்பட்ட மனதிற்கு உரைக்கவில்லையே! சாதி, மதம், சகுணம், சாங்கியம், பஞ்சாங்கம் பார்த்து வந்தால் அதுக்குப் பெயர் காதல் இல்லையே!!

ஆனாலும் பாதகத்தி மனம் பாடாய்ப் படுத்தி எடுக்க... இயலாமையில் கண்களில் கண்ணீர் பெருக, சித்தியின் கத்தலைத் கூட இன்று பொருட்படுத்தாமல், சாப்பிடாமல் படுத்து விட்டாள். இங்கு தான் பாவிமக மனசு பாறாங்கல்லாய் கனத்துக் கெடக்குதே. துக்கம் அடைத்த தொண்டைக் குழிக்குள் சாப்பாடு எங்கிட்டு இறங்கும்.

மறுநாள் முத்துவேல் சென்னைக்கு கிளம்பி விட்டான். கிளம்பும் முன் ஏதோ ஒரு உந்துதலில் மாடிக்கு வந்தான். தான் பார்க்க நினைத்தவளின் தரிசனம் கிடைக்கவில்லை.‌ தனது கணிப்பு தான் தவறோ என்ற எண்ணம் எழ கீழே இறங்க முற்பட்டவனை, இல்லை என அடித்துச் சொல்லியது, தூணின் மறைவில் காற்றில் ஆடிய தாவணி முந்தானை.

பள்ளி ஆரம்பிக்கும் ஆரம்ப கட்ட வேலைகள் என முத்துவேலும் அண்ணனோடு சென்னையில் பிசியாகிவிட, பள்ளி அடிக்கல் நாட்டு விழாவிற்கு சின்னவர் குடும்பமும் சென்னை சென்று வந்தது. ஆளுங்கட்சி அரசியல்வாதியைக் கொண்டு அடிக்கல் நாட்டு விழா சிறப்பாக நடந்தேறியது. இடையில் ஒன்றிரண்டு மாதங்கள் கடந்திருக்க, இவர்களது குலசாமி கும்பிடும் வந்தது.

இவர்கள் தானே முதன்மை தலைக்கட்டு. எல்லாம் எடுத்துச் செய்வது சின்னவர் தான். வரி வசூலில் இருந்து மேலதாளம், மைக்செட்டு, பந்தல் என அணைத்து ஏற்பாடுகளும் அட்வான்ஸ் கொடுப்பதும், கணக்கு முடிப்பதும் என அத்தனையும் இவர் தான் பார்க்க வேண்டும். அதற்கு தான் இம்முறை முத்துவேலை முன்னமே ஊருக்கு அழைத்து இருந்தார். தனக்கு பின் இவர்கள் தானே இதை எல்லாம் எடுத்து செய்ய வேண்டும். எனவே அங்காளி பங்காளிகளை இளைய தலைமுறையும் பழகிக் கொள்ளட்டும் என்ற எண்ணம் அவருக்கு.

பெரியவர் வீடு சுத்தம் செய்து வைக்கப்பட்டது. வந்து இறங்கியவர்கள் தங்குவது மட்டும் தான் அங்கே. மற்றபடி சமையல், சாப்பாடு எல்லாம் சின்னவர் வீட்டில் தான். வீடு சொந்த பந்தங்களாலும், நண்டுசிண்டுகளாலும் கலகலத்தது.

அன்னபூரணிக்கு அடுக்களையே கெதி, திருவிழா முடியும் வரைக்கும். பேச்சியும் அண்ணிக்கு ஒத்தாசைக்கு வந்துவிடுவார். திலகவதிக்கு இது கைவராது. பேரப் பிள்ளைகள் மேற்பார்வையோடு சரி.

மேலதாளக்காரர்களில் இருந்து பந்தல், ஆட்டக்காரர்கள், மைக்செட்காரர்கள் என அனைவருக்கும் சாப்பாடு இங்கு தான்.

மூச்சுக்கு முன்னூறு தடவை, "சின்னாயி!" என அன்னபூரணியை அழைத்துக் கொண்டு யாராவது வந்து நிற்பார்கள்.

திலகவதி என்ன வேண்டும் என அவர்களிடம் கேட்டாலும், "உங்களுக்கு தெரியாது பெரியம்மா. சின்னாயிக்கு தான் வெவரம் தெரியும்." என கூறி விடுவர். அடுப்படி வேலையை விட்டுவிட்டு அன்னபூரணி தான் வந்தாக வேண்டும்.

"என்னப்பா வேணும்?" என கேட்க,

"சின்னய்யா காசு வாங்கிட்டு வரச் சொன்னாரு. ஏதோ பூஜை சாமான் வாங்கணுமாம்.''

"இதோ வர்றே.‌" என உள்ளே செல்பவர் கணக்கு எழுதிக் கொண்டு, கொடுத்து விடுவார்.

வரிப்பணம் மொத்தமும் வரவு செலவு பார்ப்பது சின்னவர் என்றாலும், பணம் இருப்பது என்னவோ அன்னபூரணியின் பொறுப்பில் தான் இருக்கும்.

இதற்கிடையில் உட்கார்ந்த இடத்திற்கே அனைத்தும் பெரியவருக்கு வரவேண்டும். இது சின்னவர் உத்தரவு.

"உங்களுக்கு உங்க ஊர்ல இவ்வளவு தான் மரியாதையா அண்ணி?" என கேட்டுக் கொண்டே ரெங்கநாயகி, திலகவதியின் அருகே அமர்ந்தார்.

"அன்னத்துக்கு தானே உள்ளூர் வெவரம் தெரியும். என்னைக்கோ ஒரு நாளைக்கி வர்ற‌ நமக்கு என்ன தெரியும் அண்ணி " என திலகவதியும் விட்டுக் கொடுக்காமல் கேட்க,

"அதுக்குன்னு, நீங்க தானே மூத்தவுக. முதல் மரியாதை உங்களுக்கு தானே. ஒரு பேச்சுக்கு கூட உங்கள, ஒரு வார்த்தை யாரும் கலந்துக்கறது இல்ல. எல்லாமே சின்னவுக பொறுப்புல தான் இருக்கும் போலயே? நீங்களும் அண்ணனும் சும்மா ஒப்புக்கு சப்பாணி தானா?" என வில்லங்கத்தை விளைவித்தார் ரெங்கநாயகி.

ஐந்து வயது வரைக்கும் தான் அண்ணன் தம்பி. பத்து வயதில் பங்காளி தான். நீ பெரியவனா நான் பெரியவனா என்ற ஈகோ தான் பல குடும்பங்கள் வருடக் கணக்கில் பகைமை பாராட்ட காரணமாக இருந்திருக்கிறது. ரெங்கநாயகி கேட்டது அருகில் சேரில் அமர்ந்து பேப்பர் பார்த்துக் கொண்டு இருந்த பெரியவர் சுப்பையா காதிலும் விழுந்தது.‌ இது கடந்த சில வருடங்களாகவே அவருக்குள்ளும் எழும் எண்ணம் தான்.‌

பாண்டவர், கௌரவர்களின் பங்காளிச் சண்டைக்கு காரணமே முதல் மரியாதை யாருக்கு என்பது தானே.

ஊருக்குள் தம்பிக்கு இருக்கும்‌ மரியாதை அவரை உறுத்தியது. கப்பல் மாதிரி காரில் வந்து இவர்‌ இறங்கினாலும், வரவேற்போடு சரி.‌

பெரியவர் என்ற‌ முறையில் தன்னிடம் எதுவும் கலந்து கொள்வதில்லை...‌ என்ற‌ எண்ணம் மனதினுள்‌ ஓடும். குலசாமி கும்பிடும் போதும், மாலை போடும் போது மட்டுமே பெரியவர் என்கிற முறையில் இவரை முன்னுக்கு அழைப்பர். அதுவரை அங்கு சின்னவரின் குரல்‌தான் ஓங்கி ஒலித்துக் கொண்டு இருக்கும். ஊருக்குள் தம்பியின் பேச்சிற்கு நாலு பேர் தலை ஆட்டும் பொழுது, எத்தனை கோடி சம்பாதித்தாலும் இந்த விஷயத்தில் தம்பி முன் குறைந்து விட்டதாகவே தோன்றும்.

அதையே ரெங்கநாயகியும் சற்று விசிறிவிட, பொறாமைத் தீ மெதுவாக புகைய ஆரம்பித்தது.

இதெல்லாம் பெரிய விஷயமா எனத் தோன்றலாம்.‌ மானம், மரியாதை, கௌரவம் என விறைப்பாகத் திரிந்த காலகட்டங்கள். அன்று… அக்கா, தங்கைகள் காதலித்தால் அருவா தூக்கிய சகோதரர்கள் எல்லாம், இன்று… "பிள்ளை ஆசப்பட்டுட்டான் என்ன பண்றது." என நயந்து பேசும் காலமாற்றத்தை பார்க்க முடிகிறது.

உப்புக்கல்லு பெறாத விஷயம் தான் பெரிதாகி குடும்பத்தையே பிரிக்கும் என்பது கூட்டுக்குடும்பவாசிகளுக்கு நன்றாகவே தெரியும். அதுவும் பிள்ளைச் சண்டைதான் பெருசாகும். பிள்ளச் சண்டைக்கி பெரியவங்க போக்கூடாதுனு ஒரு பேச்சுவழக்கே இருக்கு. சண்டை போட்டதுக செத்த நேரத்துல சேர்ந்து விளையாடப் போயிரும். அதைவச்சு வந்த பெரியவுக சண்டை தான் பூதாகரமாகி குடும்பமே பிரியும்.

திரௌபதியின் சிரிப்பு தான், துரியோதனனை வஞ்சம் வைக்க தூண்டியது.

அது போலத்தான், ஊரார் முன் தனக்கு ஏற்பட்ட சிறு அவமானம் தான் ரெங்கநாயகி மனதில் வஞ்சம் வைக்க காரணமாகியது.

சென்ற திருவிழாவின் போது, சக்திவேல் குழந்தைகளுக்கு நடந்த காதுகுத்து விழாவில் ரெங்கநாயகி குடும்பத்திற்கு நிகழ்ந்த அவமானமே, ரெங்கநாயகியை சின்னவர் குடும்பத்து மீது துவேசம் கொள்ளச் செய்தது. அதுவே இன்றும் தொட்டுத் தொடர்கிறது.

தீ! பெரியவர்களுக்கு இடையே பொறாமைத் தீயும், சிறியவர்களுக்கு இடையே காதல் தீயும் பற்றி எரிய ஆரம்பித்திருந்தது.

தொடர்ச்சி கீழே👇👇👇
Nirmala vandhachu 😍😍😍
 
Nirmala senthilkumar

அமைச்சர்
Joined
Jan 25, 2022
Messages
2,551
Reaction score
6,770
Location
Salem
13+
சென்ற பதிவில் பிரசவமான பெண்களுக்கு பிரசவ லேகியமும், நல்லெண்ணெயும், பூண்டும் வலுவூட்டுபவைனு சொல்லி இருந்தது. அந்த எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்கோட இன்னொரு ஜாயின்ட் இது. பொதுவாகவே பெண் பிள்ளைகள் வயதிற்கு வந்தவுடனே அவர்களுக்கு உளுந்தங்களி, உளுந்தவடை, வெந்தயக்களி, மாதுளம்பழம், பேரீச்சம்பழம் என அவங்கள கவனிக்க ஆரம்பிச்சுர்றோம்.
அப்ப… வயசுப் பையனுகளுக்கு? உழவு காட்டுக்குப் போற ஆம்பிளைகளுக்கு, முளைகட்டிய கம்பு, துணியில முடிஞ்சு (ஸ்நாக்ஸ்) கொடுத்து விடுவாங்க. இதை நீங்க சிங்கிள் மீனிங்ல எடுத்துக்கிட்டாலும் சரி. டபுள் மீனிங்ல எடுத்துக்கிட்டாலும் சரி. அதுதான் உண்மையும் கூட. ஒரு இனத்தில், புதுமாப்பிள்ளைக்கு கொடுக்கும் மறுவீட்டு பலகாரச்சீரில் கம்பு உருண்டை இன்றும் தவறாமல் இடம்பெறுகிறது.
அதாகப்பட்டது என்னான்னா... முளைகட்டிய தானியங்கள் எல்லாமே ஆண் பிள்ளைகளுக்கு கொடுக்கலாம். அதில் கம்பு முக்கியமான ஒன்று.
விதை அதிகமுள்ள மாதுளை, சீதாப்பழம் போன்றவை பெண்களுக்கும், முளைகட்டிய தானியங்கள் ஆண்களுக்கும் ஏற்றது.‌ அதுக்குதாங்க படம் போட்டு பாகம் குறிச்சுருக்கு. கதைக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லைங்கோ. சென்ற பதிவோட தொடர்ச்சி இது. ஞாபகப்படுத்தனும்னு தோணிச்சு. சாப்பிடும் பொருளின் வடிவத்தை வைத்தே, அது நமக்கு எந்த உறுப்பிற்கு பயன்படும்னு கண்டு பிடிக்கலாம்னு சொல்றாங்க. அப்படினா... படம் பார்த்தாலே புரிஞ்சுருக்கும். முளைகட்டிய கம்பு ஏன் முக்கியம் என்று. உயிரணுக்கள் உற்பத்திக்கு உதவும். முளைகட்டிய கம்பின் வாசனை உணர்த்தும் அதன் சூட்சமத்தை, பெண் வாசம் அறிந்தவர்களுக்கு மட்டும்.
அவ்ளோதான் மக்களே 🥰 இனி எக்ஸ்ட்ரா ஃபிட்டிங் போட்டு ரம்பம் போட மாட்டேன். பையனுகளுக்கும் சொல்லனும்னு தோனுச்சு.😊

பெண் கருமுட்டை
View attachment 38221

மாதுளை

View attachment 38224

உயிரணுக்கள்
View attachment 38222

முளைகட்டிய கம்பு
View attachment 38223
Idam sutti porul vzhakkam pola
Padam pottu 💐💐💐
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top