• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

திகில் சிறுகதை - 2 | ‘ஆசை’

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

இக்கதை திகிலூட்டுவதாக இருந்ததா?

  • திகிலா, இந்தக் கதையிலா?

    Votes: 2 66.7%
  • இலேசா பயந்துட்டேன்...

    Votes: 0 0.0%
  • ஆத்தீ... நா கேரளா போய் மந்திரிச்சுட்டு வரணும்!

    Votes: 1 33.3%

  • Total voters
    3

Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
வணக்கம், இதோ இரண்டாவது ’திகில்’ கதை. ஒன்றைத் தெளிவுபடுத்த விழைகிறேன். ‘திகில்’ என்பதை ஒரு ஜான்ரே (genre / கதையின் வகை) என்பதாகவே கையாள்கிறேன் நான். மற்றபடி, படிக்கும்போதே உங்கள் மூளையில் அட்ரெனலின் வெள்ளத்தை ஏற்படுத்தும் கதைகள் அல்ல இவை. ஒரு மெல்லிய (subtle) இழையோடிச் செல்லும் (undercurrent) திகிலைத் தருவதே என் நோக்கம்... அமானுஷ்ய சந்திப்புகள் (paranormal encounters) என்றால் பொருத்தமாக இருக்கும்! (ஆனால், ‘திகில்’ உங்கள் கவனத்தைக் கவர்வதைப் போல இத்தலைப்பு கவருமா என்பது ஐயமே!) சென்ற கதைக்குப் போல இதற்கும் உங்கள் விமர்சனங்களைத் தயங்காமல் தவறாமல் சொல்லுங்கள்... நன்றி!
============================

***ஆசை***

”யாரோட டா பேசிக்கிட்டு இருக்க?”

”தாத்தாவோடத்தான்!”

விமல் சொன்னதைக் கேட்டுச் சந்துரு மெல்லியதாய் அதிர்ந்தான்.

அவனது முதுகுத் தண்டில் பனிக்கட்டி நழுவியதைப் போல ஒரு சில்லிப்பு ஓடியது.

“எந்தத் தாத்தாடா?” என்று கேட்டான் சற்றே சினத்துடன்.

“நம்ம தாத்தாதான்!” என்று குழந்தை விமல் தனக்கு முன்பாகச் சுட்டிக் காட்டினான்.

அவ்வறைக்குள் விமலைத் தவிர யாரும் இல்லை. சந்துரு அறைக்குள் சென்று சுற்றும் முற்றும் நோட்டம் விட்டான்.

“இங்க யாருடா இருக்கா?”

“இப்ப யாரும் இல்ல!”

விமல் சந்துருவின் பதிலுக்குக் காத்திருக்காமல் தனது கற்பனை மகிழுந்தைக் கிளப்பிக்கொண்டு அறையை விட்டு வெளியே ஓடினான்,

டுர்ர்... டுர்ர்... டுர்ர்ர்ர்ர்....

***

“என்னங்க தட்டப் பார்த்துச் சாப்பிடாம ஏதோ தீவிர யோசனைல இருக்கீங்க?”

சந்துருவின் தட்டில் பொரியலைப் பரிமாறியபடியே கேட்டாள் புவனா.

ஒரு நொடி அவளிடம் சொல்லலாமா வேண்டாவா என்று தயங்கிவிட்டுப் பின் சொன்னான்,

“இல்ல புவனா, விமல் பெட்ரூம்ல தனியா நின்னுப் பேசிட்டு இருந்தான், யார் கூடடா பேசுறனு கேட்டா ‘தாத்தா கூட’னு சொன்னான்...”

”இதுக்குத்தான் இவ்ளோ யோசனையா? அவனுக்குக் கற்பனை கொஞ்சம் ஜாஸ்திங்க... அவனாவே எதையாச்சு கற்பனை பண்ணிக்கிட்டு விளையாடிட்டு இருப்பான், முந்தாநாள் கூட டிரெயின்ல அமெரிக்கா போறேன்னு அவனா விளையாடிட்டு இருந்தான்! ஆனா...”

புவனா எதையோ சொல்லத் தயங்கினாள்,

“என்ன? சொல்லு...”

மாமியாரின் அறையை ஓரக்கண்ணால் ஒருமுறை எட்டிப்பார்த்துவிட்டுக் கிசுகிசு குரலில் சொன்னாள்,

“உங்க அம்மாவும் சும்மா இருக்குறதில்ல, உங்க அப்பாவோட புராணத்தை விமல்கிட்ட எப்பப் பாரு சொல்லிக்கிட்டு இருக்காங்க, தாத்தா அப்படி இருப்பாரு, தாத்தா இப்படிப் பண்ணுவாருனு எதாச்சு கதை சொல்லிட்டு இருப்பாங்க அவனுக்கு!”

சற்றே அங்கலாய்ப்புடன் சொன்னாள்.

”அதுல என்ன தப்பு? பேரன பாக்காமலே எங்க அப்பா போய்ச் சேர்ந்துட்டாரேனு அவங்களுக்கு வருத்தம், அத இப்படித் தணிச்சுக்குறாங்க! விமலுக்கும் தன்னோட தாத்தாவப் பத்தித் தெரிஞ்சுக்குறது நல்லதுதான? வரலாறு மிக முக்கியம் அமைச்சரே!”

”ஆமாமா... பெரிய சுதந்திரப் போராட்ட வரலாறு!”

புவனா காலி பாத்திரங்களைச் சேகரித்துக்கொண்டு சமையலறைக்குள் சென்றாள்.

சந்துரு சாப்பிட்டு முடித்துவிட்டுத் தன் அம்மாவின் அறைக்குள் சென்றான்.

விமல் பாட்டிக்கு அருகில் அமர்ந்து தன் பிஞ்சுக் கைகளால் அவர்களின் ஓடி ஆடி ஓய்ந்த கால்களைப் பிடித்துவிட்டுக் கொண்டிருந்தான். பாட்டியும் பாதி சாய்ந்து பாதி படுத்தபடிக் கண்களை மூடி அவனுக்கு மகாபாரதத்தில் வரும் துணைக்கதை ஒன்றைச் சொல்லிக்கொண்டிருந்தார்.

பாட்டி பேரன் இருவருமே சந்துரு வந்ததைக் கவனிக்கவில்லை.

“அத்தத்தாமன் த்தாகவே இல்லையா பாட்டி?”

விமலுக்கு இன்னும் ’ஷ்’, ‘ஸ்’ சரியாக வரவில்லை.

”ஆமாண்டா கண்ணா!”

“இப்ப எங்க இருக்காரு? அவர நாம போய் பாக்கலாமா?”

“இந்த உலகத்துல எங்கயாவது சுத்திக்கிட்டு இருப்பாரு, மத்தவங்களால அவரப் பார்க்க முடியாது...”

“தாத்தா மாதிரியா?”

பாட்டி சட்டென மௌனமானார். விமல் அமைதியாக அவரது பதிலுக்குக் காத்திருந்தான்.

”நெஜம்மாவே தாத்தா உன் கண்ணுக்குத் தெரியறாரா டா கண்ணா?”

அவரது குரலில் இலேசான விம்மல் தொனித்தது.

“நெஜம்மா பாட்டி... உன் கண்ணுக்குத் தெர்லயா?”

விமல் நம்பிக்கையில்லாமல் கேட்டான்.

”இல்லடா கண்ணா... உசுரோட இருக்கும்போதே அந்த மனுஷன் நின்னு ஒரு வார்த்த பேசினதில்ல என்கிட்ட!”

“உக்காந்துட்டேதான் பேசுவாரா பாட்டி?”

பாட்டி சொன்னதன் பொருளை முழுதாகப் புரிந்துகொள்ளாமல் விமல் புதிராகக் கேட்டான்.

பாட்டி பதில் சொல்லாமல் அவனது தலையை வாஞ்சையுடன் தடவிக் கொடுத்தார்.

“தாத்தா என்ன டா கண்ணா பேசினாரு உன்கிட்ட?”

பாட்டியின் குரலில் இப்போது ஆர்வம்.

”என் பேரத் துந்தரேத்தன்னு மாத்திக்கச் சொன்னாரு பாட்டி!”

விமல் சொன்னது பாட்டி சந்துரு இருவரையுமே சற்று அதிர வைத்தது.

’சுந்தரேசன்’ என்பது சந்துருவின் தாத்தா பெயர். சந்துருவிற்கே அந்தப் பெயரை வைக்க அவனது அப்பா ஆசைப்பட்டாராம், ஆனால் பாட்டி (சந்துருவின் அம்மா) ஒத்துக்கொள்ளவில்லையாம்.

’இந்தப் பெயர் விமலுக்கு எப்படித் தெரிந்தது? நிச்சயம் அம்மா சொல்லியிருக்க வாய்ப்பில்லை, விமல் சொன்னதைக் கேட்டு அவரும் அதிர்ச்சியில் மௌனமாக இருக்கிறார்...’

சந்துருவின் சிந்தனையில் கேள்விகள் புழுக்களாய் நெளிந்தன.

“என்னங்க நீங்க இங்கதான் இருக்கீங்களா? கொஞ்சம் கடைக்குப் போகனுங்க... அம்மா உங்களுக்கு ராத்திரிக்குக் கஞ்சி வேணுமா? ரசம் வெக்கவா?”

புவனாவின் குரல் கேட்டு மூவரின் கவனமும் அவள் பக்கம் திரும்பின.

விமல் எழுந்து ஓடி வந்து சந்துருவின் காலைக் கட்டிக்கொண்டான்,

“நானும் கடைக்கு வரேன் ப்பா...”

“கஞ்சியே போதும்மா... வாடா சந்துரு, எப்ப வந்த நீ?”

சந்துரு சிறிது நேரமாகவே அறை வாயிலில் நின்றுகொண்டிருந்திருக்கிறான் என்பதை உணர்ந்து கேட்டார் பாட்டி.

”இப்பதாம்மா...” அவருக்குப் பதில் சொல்லிவிட்டு புவனாவை நோக்கினான் சந்துரு, “என்னென்ன வாங்கனும்னு எழுதிவை புவனா, கொஞ்ச நேரத்துல வரேன்...”

புவனா புரிந்துகொண்டவளாய் தலையாட்டிவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள். வாங்க வேண்டியவைப் பட்டியலில் தனக்கு வேண்டியதையும் சேர்க்கச் சொல்ல விமலும் அவளைப் பின் தொடர்ந்தான்.

சந்துரு சென்று தன் அம்மாவின் அருகில் அமர்ந்துகொண்டான்.

”வாடா சந்துரு... நல்லா இருக்கியா? ஒரே வீட்ல இருக்கோம்னுதான் பேரு, என்கூட பேச உனக்கு நேரமே கெடைக்குறது இல்ல...”

அம்மா சோர்வாகச் சொன்னாள்.

”அப்படிலாம் இல்லம்மா...”

சந்துரு சற்று நேரம் அம்மாவிற்கு ஆறுதலாய் பேச்சுக்கொடுத்துவிட்டு மெள்ள தான் பேச வந்த விஷயத்தைத் தொடங்கினான்,

“அம்மா... நான் சொல்றேன்னு கோச்சுக்காத, விமல்கிட்ட அப்பா பத்தி நெறைய சொல்லாதம்மா... அவன் ரொம்ப துடிப்பான பையன், நெறைய கற்பனை அவனுக்கு... என்னென்னவோ பேசுறான்...”

சந்துரு தயங்கித் தயங்கிப் பேசினான்.

அம்மா மௌனமாக இருந்தார்.

சந்துரு தலைநிமிர்ந்து அவரது முகத்தைப் பார்த்தான், அவரது கன்னங்களில் கண்ணீர் ஓடைகள்!

”அம்மா... என்னம்மா... நான் சொன்னதை நீ சரியா புரிஞ்சுக்கலை மா... எனக்கு விமலை நெனச்சுக் கவலையா இருக்கு, சில நேரங்கள்ல பயமா கூட இருக்கு...”

சந்துரு அம்மாவின் கைகளைப் பிடித்துக்கொண்டான்.

”நான் விமல்கிட்ட உங்க அப்பா பத்தி எதுவும் சொல்றதில்லடா சந்துரு... நீ நம்புறயோ இல்லையோ, அவன்தான் அந்த மனுஷனப் பத்தி என்கிட்ட சொல்றான்...”

அவரின் குரலில் ஒரு நடுக்கம்.

”என்னம்மா நம்பிக்கை அது இதுன்னுட்டு... கொஞ்சம் நேரம் முன்னாடி கூட நீங்க ரெண்டு பேரும் பேசிட்டு இருந்ததைலாம் நான் கேட்டேன்... அவனாத்தான் தாத்தாவைப் பார்த்தேன்னு சொன்னான், பேரச் சுந்தரேசன்னு மாத்திக்கனும்னான்... எல்லாம் நான் கேட்டேன்ம்மா... என் கவலை உனக்கும் புரியுதுல!”

சந்துரு ஆயாசமாகச் சொன்னான்.

“ஆமாண்டா சந்துரு, விமல் தம்பி சுந்தரேசன்ற பேரச் சொன்னப்ப எனக்கும் கொஞ்சம் அதிர்ச்சியா இருந்துச்சு... அந்தப் பேர உனக்கு வெக்கனும்னு அவரு எவ்ளோ பிடிவாதம் பிடிச்சாரு தெரியுமா? நானும் பிடிவாதமா மாட்டேன்னுட்டேன்... அந்தப் பேரக் கேட்டாலே எனக்குக் கொல நடுங்கும்... அவ்ளோ கொடும அனுபவிச்சிருக்கேன்...”

மேற்கொண்டு பேச இயலாமல் அவர் நிறுத்தினார். அவர் மூச்சுவிடும் ஓசை தெளிவாகக் கேட்டது அவ்வறையில்.

சந்துரு என்ன சொல்வது என்று தெரியாமல் அமைதியாக இருந்தான். மீண்டும் அம்மாவே பேசினார்,

“உனக்கு ஞாபகம் இருக்காடா சந்துரு, அந்த மனுஷனுக்கு ரெண்டாவது வருஷ திதி பண்ணும்போது விமல் கொழந்த ஒரு மாதிரி பிடிவாதமா அழுதுட்டே இருந்தானே?”

“ம்ம்... ஆமா...”

சந்துரு யோசனையுடன் சொன்னான். விமலுக்கு அப்போது ஒன்றரை வயதுதான் என்பது நினைவிற்கு வந்தது அவனுக்கு.

”அன்னிக்கு நாம முழுக்க முழுக்க மல்லிப்பூ வெச்சிருந்தோம், அந்த மனுஷனுக்கு மல்லிப்பூனாலே ஆகாது... அந்த வாசனை ஒத்துக்காது அவருக்கு!”

அவர் ஆழ்ந்த யோசனையோடு சொன்னார்.

அவர் என்ன சொல்ல வருகிறார் என்று புரியாமல் சந்துரு அவரையே பார்த்துக்கொண்டிருந்தான். அவர் மேற்கொண்டு எதுவும் சொல்லவில்லை.

சில நொடிகள் கழித்துதான் அவர் உறங்கிவிட்டார் என்பதைச் சந்துரு உணர்ந்துகொண்டான். ஓசைபடுத்தாமல் அறையைவிட்டு வெளியேறினான்.

***

சந்துருவின் தந்தையின் நான்காம் ஆண்டு திதி வந்தது. சந்துரு வேண்டுமென்றே மல்லிகையை மட்டுமே வாங்கியிருந்தான்.

தன் தந்தையின் படத்திற்குப் பெரிய மல்லிகை மாலை போட்டுப் படையல் வைத்தான். வீட்டிலிருந்த அனைத்து சாமிப் படங்களிலும் மல்லிகைச் சரம் மணந்தது.

விமல் வெறி வந்தவன் போல வீட்டை அதகளப்படுத்தினான். தாத்தா படத்தில் இருந்த மல்லிகை மாலையைப் பிய்த்து வெளியில் ஓடிப்போய் போட்டான்.

”ஏண்டா தாத்தா ஃபோட்டோல இருந்த மாலையப் பிச்சுப் போட்ட?”

புவனா அதட்டினாள்.

“தாத்தாக்கு மல்லிகைப்பூ பிடிக்காது... ரோஜா மாலை போடுங்க!”

வீட்டில் இருந்த மல்லிகை மாலைகளை நீக்கிவிட்டு ரோசாப்பூ மாலைகள் போடும்வரை விமலின் அடம் நிற்கவில்லை.

எல்லாம் முடிந்து வீடு அமைதியானது. சந்துரு விமலை அழைத்துவைத்துக்கொண்டு பேச்சுக்கொடுத்தான்,

“விமல் கண்ணா... தாத்தா உன் கண்ணுக்குத் தெரிறாரா?”

விமல் பதில் சொல்லாமல் சந்துருவின் முதுகுக்குப் பின்னால் பார்த்துக்கொண்டு இருந்தான்.

சந்துரு மீண்டும் அதே கேள்வியைக் கேட்டான்.

விமல் அதே இடத்தில் பார்த்தபடி ‘சரி’ என்பதைப் போலத் தலையாட்டிவிட்டுப் பதில் சொன்னான்,

“... ஆமா!”

“உன்கிட்ட என்ன சொல்றாரு தாத்தா?”

”... அவரோட ஆத்தய நெறவேத்தனுமாம்!”

விமலின் பார்வை சந்துருவின் முதுகுக்குப் பின்னாலேயே இருந்தது. ஒவ்வொரு முறையும் சந்துரு கேள்வி கேட்டவுடன் சில நொடிகள் கவனித்துவிட்டுச் ‘சரி’ என்பதைப் போலத் தலையை ஆட்டிய பின்பே பதில் சொன்னான்.

”என்ன ஆச?”

”... அவரு ஒரு கலை- (தலையை ‘இல்லை’ என்று ஆட்டிக்கொண்டான்) ... கதை (அழுத்திச் சொன்னான்) எழுதி வெச்சிருக்காராம்... அதை புக்கா போடனுமாம்!”

“கதையா?”

“ஆமா!”

“அத புக்கா போட்டுட்டா அவரு ஆசை நெறவேறிடுமா?”

“... ஆமா!”

”அப்புறம் அவர் வந்து உன்னைப் பார்க்க மாட்டாரா?”

விமலின் மௌனம் சில நொடிகள் கூடுதலாய் நீண்டன.

”... மாட்டாராம்!”

”சரி அந்தக் கதை எங்க இருக்கு?”

விமல் சில நொடிகள் கவனித்துவிட்டு ‘ம்’ என்றபடி தலையாட்டினான்.

“வாங்கக் காட்றேன்...”

விமல் ஓட சந்துரு அவனைத் தொடர்ந்து சென்றான்.

”என்னங்க?”

குறுக்கிட்டுக் கேட்ட புவனாவிற்குப் பதில் சொல்லாமல் ’இரு’ என்று செய்கை காட்டிவிட்டு விமலைத் தொடர்ந்தான் சந்துரு.

இருவரும் பாட்டியின் அறையை அடைந்தார்கள்.

”அதோ அந்த அத்தப்பெத்திக்குள்ள இருக்கு...”

என்று பரணில் பின்னாடி ஒட்டடைகளால் நிறைந்திருந்த அட்டைப்பெட்டியைக் காட்டினான்.

”என்னடா சந்துரு?”

என்று அம்மா படுக்கையிலிருந்து எழுந்து சாய்ந்து அமர்ந்துகொண்டபடி கேட்டார்.

”சொல்றேன்மா... கொஞ்சம் இரு!”

சந்துரு ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டு ஏறி முன்னால் இருந்த பொருள்களை நகர்த்திவிட்டு அந்த அட்டைப்பெட்டியை எடுத்தான்.

“அதலாம் எதுக்குங்க எடுக்குறீங்க இப்ப? வீடே தூசியாகும்!”

”என்னடா சந்துரு தேட்ற?”

சந்துரு யாருக்கும் பதில் சொல்லாமல் அட்டைப்பெட்டியில் படிந்திருந்த தூசியைக் கலைக்காமல் அதை இறக்குவதில் கவனமாக இருந்தான்.

அதே கவனத்துடன் அவன் அந்தப் பெட்டியை கொல்லைப்புறத்திற்குக் கொண்டு சென்று தூசி தட்டினான்.

புவனாவும் விமலும் அவன் பின்னால் சென்றனர்.

”இப்ப எதுக்குங்க திடீர்னு இதைலாம் கிளர்றீங்க?”

சந்துரு அவளுக்குப் பதில் சொல்லாமல் விமலைப் பார்த்தான்.

“தாத்தாவோட கதைய புக்கா போடப் போறோம்!”

அந்தப் பதில் புவனாவிற்கு மேலும் பல கேள்விகளையே கொடுத்தது. ‘என்னவோ செய்யுங்கள்’ என்று அவள் தன் வேலையைக் கவனிக்கச் சென்றுவிட்டாள்.

சந்துரு அந்த அட்டைப்பெட்டியையும் அதற்குள் நெகிழிப் பைகளில் பொட்டலம் கட்டப்பட்டிருந்த ஏடுகளையும் (நோட்டு புத்தகங்கள்) தூசியில்லாமல் தூய்மைப்படுத்தி மீண்டும் வீட்டிற்குள் கொண்டு வந்து கூடத்தில் வைத்துக்கொண்டு அமர்ந்தான். விமலும் ஆர்வத்துடன் அவனுக்கு உதவினான்.

“என்னத்தடா இவ்ளோ அவசரமா எடுத்துட்டு வந்த?”

பாட்டியும் தள்ளாடிச் சிரமப்பட்டுக் கூடத்திற்கு வந்திருந்தார். சந்துரு பரப்பி வைத்திருந்த ஏடுகளைப் பார்த்தவுடன் அவர் சில நொடிகள் யோசனையில் ஆழ்ந்தார்.

“சந்துரு... இதெல்லாம் அந்த மனுஷன் கணக்கெழுதி வெச்ச நோட்டுப் பொத்தகம்தான? இத எதுக்கு வெளில எடுத்திருக்க இப்ப? காலம்போன காலத்துல உக்காந்து அந்த மனுஷன் தெனோம் கணக்கு எழுதி வெச்சார்...”

கடைசி வரியை அவர் தனக்குத்தானே சொல்வதைப் போலச் சொல்லிக்கொண்டார்.

“இதெல்லாம் என்னத்துக்குடா இப்ப? காய்லாங்கடைல போட்டா கூட வாங்கிக்கமாட்டான், காயிதம்லாம் பழுப்பேறி இத்துப் போய்ருக்கும்! தூக்கிக் குப்பைல போடு எல்லாத்தையும்!”

சற்றே சினத்துடன் சொல்லிவிட்டு அவர் மீண்டும் தள்ளாடித் தன் அறைக்குச் சென்றார்.

சந்துருவும் விமலும் அவர் சொன்னது எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் அந்த ஏடுகளைப் புரட்டினர்.

***

”என் அப்பாவ எப்பவுமே ஒரு கடுமையான மனுஷனாத்தான் நான் பார்த்திருக்கேன், புவனா! அவர்கிட்ட போய்ப் பேசனும்னா கூட பயமா இருக்கும், நான் தலையெடுத்து நமக்குக் கல்யாணம்லாம் ஆன அப்புறம் கூட எனக்கு அவர்கிட்ட இருந்த அந்தப் பயம் போகல... ஆனா...”

சந்துருவின் கையில் அந்தப் புதிய அச்சுப்பிரதி இருந்தது. அவன் சில நொடிகள் அதையே அமைதியாகப் பார்த்தான். புவனாவும் எதுவும் சொல்லாமல் அவனே மேற்கொண்டு பேசக் காத்திருந்தாள்.

“அவருக்குள்ள இப்படி ஒருத்தர் இருந்திருப்பார்னு நான் எதிர்பார்க்கல... ஏன் அவரால தன்னோட இந்த முகத்தை வெளில காட்டிக்க முடியல? பக்கம் பக்கமா இவ்ளோ எழுதின மனுஷனால ஏன் ஒரு நிமிஷம் என்கிட்டயோ அம்மாகிட்டயோ உக்காந்து இதப் பேச முடியல?”

சந்துருவின் கண்களில் நீர் திரண்டது. புவனா ஆறுதலாக அவன் கையைப் பற்றிக்கொண்டாள்.

புவனா இன்னொரு கையால் அந்தப் புதிய நூல்களின் கட்டிலிருந்து இன்னொரு படியை எடுத்துப் பார்த்தாள், ‘ஆசை’ என்று தலைப்பு முகப்பட்டையின் மேற்புறம் பெரியதாகப் பளிச்சென்று அச்சாகியிருந்தது, கீழே சற்றே சிறியதாகச் சந்துருவின் தந்தை பெயர்.

”அம்மாகிட்ட காட்டுங்க...”

“ஆமா... அவங்கதான் படிக்கனும் இத... அவங்க எப்படி எடுத்துக்குறாங்களோ... ஆனா, அவங்க கண்டிப்பா படிக்கனும்... அவங்களால படிக்க முடியலனா நானே படிச்சுக் காட்டுறேன்!”

சந்துரு துள்ளி எழுந்தான், கையில் நூல்படிகள் இரண்டை எடுத்துக்கொண்டு அம்மாவின் அறைக்குச் சென்றான்.

அவர் விழித்துக்கொண்டுதான் இருந்தார். ஒரு நூலை அவர் கையில் கொடுத்தான். அவர் வாங்கிக் கண்ணாடியைச் சரி செய்துகொண்டு உற்றுப் பார்த்தார்,

“என்னடா இது? கதப் பொத்தகமா?”

சந்துரு பதில் சொல்லவில்லை, அவரே நூலின் ஆசிரியர் பெயரைப் பார்த்ததும் சற்று அமைதியானார். நூலைப் பிரித்து முதல் சில பக்கங்களைப் படித்தார், சந்துரு அமைதியாக அவருக்கு அருகில் காத்திருந்தான். சில பக்கங்களைப் படித்துவிட்டுத் தலைநிமிர்ந்தார். கண்களில் நீர்...

”என்னடா சந்துரு இது?”

அவரது குரல் தழுதழுத்தது... சந்துரு என்ன சொல்வது என்று தெரியாமல் சில நொடிகள் விழித்தான்.

“ஒரு நிமிஷம் உன் காலைப் பிடிச்சுச் சொல்லிருக்க வேண்டியத எரநூறு பக்கத்துக்குக் கதையா எழுதி வெச்சிருக்காரு ம்மா அந்த மனுஷன்!”

சந்துருவின் குரலும் குழைந்தது.

மேற்கொண்டு அவர்கள் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. அம்மா நூலைப் படிப்பதில் ஆழ்ந்தார். சந்துரு அறையைவிட்டு வந்தான்.

முற்றத்தில் விமல் விளையாடிக்கொண்டிருந்தான். சந்துரு மெள்ள அவன் அருகில் சென்று அமர்ந்தான்.

”தாத்தா இருக்காராடா?”

“... இல்ல!”

விமல் மீண்டும் விளையாட்டில் ஆழ்ந்தான். சந்துருவின் மனத்தில் ஏதேதோ எண்ணங்கள் அலைபாய்ந்தன. தனது கடைசி காலத்தில் தான் ஒரு கதை எழுதித் தன் மனைவியிடமும் மகனிடமும் மன்னிப்பு கேட்கும் ஒரு வாழ்க்கையை வாழ்ந்துவிடக் கூடாது என்று எண்ணிக்கொண்டான்.

***

நாள்கள் நகர்ந்தன. விமல் தாத்தாவைப் பற்றிப் பேசுவதில்லை. நல்ல துறுதுறுப்பான பையனாய் வளர்ந்தான்.

எதேச்சையாக ஒரு நாள் சந்துரு எழுதுகோல் தேடி விமலின் பையைக் குடைய அவனது ஏடுகளின் முகப்பில் அவன் ‘சுந்தரேசன்’ என்று தன் பெயரை எழுதி வைத்திருப்பதைக் கண்டான்.

சற்றே சினந்தவனாக விமலிடம் இதை விசாரிக்க வேண்டும் என்று அவனது அறைக்குச் சென்றவன் உள்ளே பேச்சுக்குரல் கேட்க அறை வாயிலிலேயே நின்றான்.

உள்ளே விமல் ஒரு வயதானவருடன் பேசும் குரல்கள் கேட்டன.

“உன் அப்பா கிட்ட சொல்லாத!”

“சொல்லமாட்-”

சந்துரு அறைக்குள் நுழைய விமல் சட்டெனப் பேச்சை நிறுத்தினான். அறைக்குள் அவர்கள் இருவரைத் தவிர வேறு யாருமில்லை.

*****முற்றும்*****
 
Vijayasanthi

இணை அமைச்சர்
Joined
Jan 29, 2018
Messages
872
Reaction score
1,284
Location
Sivakasi
திகில் னு சொல்றதை விட அமானுஷ்யம் ன்றது பொருத்தமா இருக்கும்னு தோனுது...

தேங்க் யூ ஃபார் யுவர் டிஸ்கிளைமர்???????

சூப்பராஇருக்கு......
 
banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725

:D :p :D
மிகவும் அருமையான சிறுகதை,
விஜய நரசிம்மன் தம்பி
 
Guhapriya

அமைச்சர்
Joined
Apr 5, 2019
Messages
4,175
Reaction score
12,257
Location
Trichy
கதை........ அருமை......

திகில் னு என்னமோ சொன்னிங்களே????அதை காணோம்.......
திகில் சந்துருக்கு தான் உங்களுக்கு இல்ல பேபி ?
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top