• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

திக்.. திக்... நிமிடங்கள் 4

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Soundarya Krish

முதலமைச்சர்
Joined
Sep 17, 2018
Messages
10,587
Reaction score
27,628
Location
Home Town
யாமினியும் மித்ரனும் தங்கள் கொசுவர்த்திச் சுருளை சுற்றினர்.

அந்த தனியார் மருந்து தொழிற்சாலையில் நேற்று இறந்த அந்த பங்குதாரர் இருவரும் பேசிக்கொண்டிருந்தனர்.

"யோவ் பார்ட்னர்.. என்னயா???? முன்னாடி எல்லாம் லட்சக்கணக்கில் லாபம் காட்டுரதுக்கே நாய் படாத பாடு படுவ.... இப்போ எப்புடியா கோடிக்கணக்குள லாபம் வருது??" என்றார் மாணிக்கம்.

"என்னையா?? இவ்வளவு ஷாக் உனக்கு. நாலு மாசத்துக்கு முன்னாடி ஒரு அக்ரீமன்ட்ல சைன் பன்னோம்ல.. அதனால் வந்த லாபம் தான்யா.." என்று சொல்லிச்சிரித்தார் மணிக்கத்தின் பார்ட்னர் சதாசிவம்.

"அதுல அப்படி என்னயா இருந்தது??" என்று படபடத்தார் மாணிக்கம்.

"யோவ் சொல்லுறேன் கேட்டுக்கோ... அது வெளிநாட்டுகரங்களோட ஒப்பந்தம்யா.. அதன்படி நாம நம்ம தொழிற்சாலை மற்றும் மருந்து களிவுகளை சரியா சுத்திகரிச்சு பராமரிக்காமல் போடனும் யா.."

"யோவ் சதா... இதுனால அவங்களுக்கு என்ன லாபம்??"

" பார்டனர்.. இதுல அவங்களுக்கு மட்டும் லாபமில்லை.. நமக்கும் தான்.."

"என்னையா சொல்லுற??"

"குப்பை கிடங்க சுத்திகரிக்காம இருந்தா.... நிறைய பூச்சிகள் முக்கியமா நோய்கிருமிகளை பரப்பும் பூச்சிகள் வரும். காற்றும் மாசுப்படும். நிலத்தடி நீர் மாசுப்படும். நிறைய புதுசு புதுசா நோய் பரவும். நம்ம மருந்தெல்லாம் நல்லா விற்பனையாகும். அந்த வெளிநாட்டுக்காரனுக்கும் அவனோட கொசு மருந்து, பூச்சி விரட்டி(repellent), தெளிப்பு(spray) மருந்து... இப்படி பல வியாபரம் செளிக்கும்... இப்பவாவது புரியுதா லாபம் எப்படி வருதென்று??"

"யோவ்.. சதா... நீ சாதாரணமான ஆளே இல்லைய்யா.. ஆனால் நம்ம மக்கள் நிறைய பாதிக்கப்படுவாங்களேயா.. பாவமில்லையா??"

"பார்ட்னர்.. நாம நல்லா இருக்கனும்னா.. நாடு நாசமானாதான் உண்டுனா.. நாம என்ன பன்றது??"

"ஆமாயா... நீ சொல்றதும் சரிதான்..." என்று சிரித்தார் மாணிக்கம்.
ஏதேச்சையாக அந்த வழி வந்த மித்ரனும் யாமினியும் இதை கேட்டுவிட்டனர்.

ஆத்திரத்தின் உச்சிக்குச் சென்ற மித்ரன்.. இவர்களை பழிவாங்குவதற்காக அந்த குப்பை கிருமிகளையே ஊசியில் ஏற்றிக்கொண்டு.. இவர்களை தேடி சென்றான்.
அவனை கண்டுகொண்ட இருவரும் அவனை அடித்தே கொன்றனர்.

யாமினி அழுதுகொண்டே வீட்டிற்குச் சென்றாள். பின்னர் அவளுடைய அண்ணனிடம் நடந்தவற்றை கூறி அழுதாள்.

"அண்ணா அந்த இராட்சசனா நான் கொல்லனுண்ணா... " என்றாள் யாமினி.

"வேண்டாம்மா எதுக்கு பிரச்சன விட்ரலாம்.." என்றான் அவள் அண்ணன்.

"முடியாதுண்ணா.. என் காதல கொன்னவன நான் சும்மாவிட்டா அவர் ஆத்மா சாந்தியடையாது... அதுக்காகவாது நான் அந்த மனித மிருகத்த பழிவாங்கனும்."

"உன்னோட தவிப்பு எனக்கு புரியுதுமா.. ஆனால் அவன எதிர்த்து நம்மால என்ன செய்யமுடியும்னு நினைக்கிற??"

"புரியுதுண்ணா... ஆனா ஏதாவது பண்ணி அவன பழிவாங்கனும்... இப்படி பண்ணினா என்னண்ணா??" என்று தன்திட்டத்தை விளக்கினாள் யாமினி.
பின்குறிப்பு:
யாரென்று தெரிகிறதா???
????
தொடரும்???
 




Last edited:

srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,884
Location
madurai
Oru kosu tenguekosuva Mari pazhi vangudhu chellam ????situation song Inge podanum nee maranthute singam ondru purappatathe?????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top