• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

??திருப்புகழைப் பாடப் பாட??

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,040
Reaction score
49,883
Location
madurai
சந்தனத்தில் நிறமெடுத்ததால் அழகன் ஆனவன்
சரவணத்தில் உருவெடுத்ததால் வேதமானவன்
கந்தன் என்னும் பேரெடுத்ததால் கருணை ஆனவன்
அந்த கருணையினால் தொண்டருக்கும் தொண்டனானவன்


திரைப்படப் பாடல்களில் பி. சுசிலாம்மாவும் சூலமங்கலம் ராஜலட்சுமி அம்மாவும் இணைந்து பாடிய ஒரு சில பாடல்கள் தேன்பாகில் பலாச்சுளையை தோய்த்தெடுத்து சுவைப்பது போல் ஒரு தித்திப்பினை தருகிறது.

இவர்கள் இணைந்து பாடிய சில பாடல்கள்

"திருப்புகழைப் பாடப் பாட வாய் மணக்கும் ",

"திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்"

"துள்ளித் துள்ளி விளையாட",

"ஆணிமுத்து வாங்கி வந்தேன்""

"பிள்ளைக்கலி தீர"

இதில் முதல் பாடலான "திருப்புகழைப் பாடப் பாட "என்ற பாடல் பூவை செங்குட்டுவன் எழுதிய அற்புதமான பாடல் வரிகள் இவை. கௌரி கல்யாணம் என்ற திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல் இது.

திருப்புகழின் திருப்புகழை இதை விட எளிமையாகச் சொல்ல முடியுமா என்று நம்மையும் சிந்திக்க வைக்கும் வரிகள் இவை.

தமிழில் சந்தக் கவிக்குப் புகழ் பெற்றது திருப்புகழ். முருகப் பெருமானின் புகழை பரப்பும் பாடல் என்பதால் திருப்புகழ் எனப்பட்டது.

திருமுருக கிருபானந்த வாரியார் அவர்கள் இளமைப் பருவத்திலிருந்து திருப்புகழ் பஜனைகள் செய்துதான் புகழ் பெற்றார்.

தமிழில் திருப்புகழைப் போன்ற சந்தக் கவி வேறு அதிகம் கிடையாது. சரளமாகப் பேச முடியாதவர்கள் தொடர்ந்து திருப்புகழை வாய்விட்டுப் படித்து வந்தால் தடையின்றி பேச முடியும்.

திருப்புகழுக்கு அப்படி என்ன பெருமை? அதைப் புரிந்து கொள்ள சிலபல தகவல்களை நாமும் தெரிந்து கொள்ள வேண்டும்.

தமிழுக்குக் கிடைத்த அற்புத மாமணி அருணகிரிநாதர். முருகன் திருவருளால் அருணகிரியின் வாக்கில் வந்த பாடல்கள்தான் திருப்புகழ் என்று தொகுக்கப்பட்டன.

திருப்புகழ் என்ற பெயரைப் பின்னால் யாரும் வைக்கவில்லை. அருணகிரியே ஒரு பாடலில் திருப்புகழ் என்று குறிப்பிடுகிறார்.

பக்கரை விசித்ரமணி பொற்கலனை இட்ட நடை
பட்சியெனும் உக்ர துரகமும் நீபப்
பக்குவ மலர்த்தொடையும் அக்குவடு பட்டொழிய
பட்டுருவ விட்டருள்கை வடிவேலும்
திக்கது மதிக்கவரு குக்குடமும் ரட்சைதரு
சிற்றடியு முற்றிய பனிருதோளும்
செய்ப்பதியும் வைத்துயர் திருப்புகழ் விருப்பமொடு
செப்பென எனக்கருள்கை மறவேனே

குற்றமற்ற மணிகள் பொருந்திய பொன்னணிகளை அணிந்து கொண்டு அழகு நடை போடும் மாமயிலையும்,
கடம்ப மலர் மாலையையும்,
கிரவுஞ்ச மலையானது மறைந்து போகும் படி திருக்கையால் ஏவித் துளைத்த வேலையும்,

எட்டுத் திசையும் கிடுகிடுக்க வரும் சேவலையும்,
அருள் தருகின்ற சிற்றடிகளையும்,
பன்னிரண்டு தோள்களையும்,
இருந்து அருள் செய்யும் ஒவ்வொரு திருப்பதிகளையும் வைத்து உயர்ந்த வகையில்திருப்புகழை உள்ளம் விரும்பிப் பாடு என்று அருள் சொன்ன கருணையை நான் என்றும் மறவேனே!

ஆக.. இந்தப் பாட்டில் இருந்து தெரிவது என்ன? திருப்புகழ் என்ற பெயரை அருணகிரிநாதர் வைக்கவில்லை. முத்தமிழ்த் தெய்வமான முருகப் பெருமானின் திருவாயால் பெயரிடப்பட்ட நூல் திருப்புகழ் என்ற சிறப்பை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

முருகப் பெருமானின் மேல் அருணகிரிநாதர் பக்தி கொண்டு பாடிய இசைப்பாடல்கள் அடங்கியது திருப்புகழ்.
மண்ணுலகில் மனிதமனங்களில் இருக்கும் ஆலகால விஷத்தைத் தான் எடுத்துக் கொண்டு மனிதர்கள் நன்னெறியுடன் வாழப் பக்தி நெறியைக் குழைத்துத் திருப்புகழ் என்னும் அமிர்தத்தை அளித்தாராம் அருணகிரிநாதர்.

இவ்வளவு சிறப்புடைய திருப்புகழின் பெருமையை பி. சுசீலாவும், சூலமங்கலம் ராஜலட்சுமியும் இணைந்து பாடும் இந்தப் பாடலைக் கேட்கும் போது , அதுவும் கலைச்செல்வி ஜெயலலிதாவும், ஷீலாவும் பாடலுக்கு உயிர் கொடுத்துள்ளனர்.

பாடலைக் கேட்கும் போது காதில் தேனாமிர்தம் பாய்வது போன்ற ஒரு இன்ப உணர்ச்சி தோன்றுவது உண்மை. இசை மெல்லிசை மன்னர்.

திருப்புகழை பாடப் பாட வாய் மணக்கும்
எதிர்ப்புகளை முருகா
உன் வேல் தடுக்கும்.....

படித்ததில் பிடித்தது....
 




shiyamala sothy

இணை அமைச்சர்
Joined
May 4, 2018
Messages
990
Reaction score
2,953
Age
51
Location
canada
மிகவும் அற்புத தெய்வீகப் பாடல்கள். எளிய தமிழில் அருமையான பாடல்கள் தான் எம் முருகப்பெருமானின் பாடல்கள். சிலசமயம் நான் திருப்புகழைப் படிக்கும் போது மெய்சிலிர்த்து அழுதிருக்கின்றேன். மனக்கஸ்ரம் எல்லாம் பறந்தோடி விடும். திருவாசகத்துக்கு மட்டுமல்ல திருப்புகழுக்கும் உருகாதவர் யாரும் இருக்க முடியாது.
1561990753323.png1561990887832.png1561991101108.png1561991154109.png
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,040
Reaction score
49,883
Location
madurai
மிகவும் அற்புத தெய்வீகப் பாடல்கள். எளிய தமிழில் அருமையான பாடல்கள் தான் எம் முருகப்பெருமானின் பாடல்கள். சிலசமயம் நான் திருப்புகழைப் படிக்கும் போது மெய்சிலிர்த்து அழுதிருக்கின்றேன். மனக்கஸ்ரம் எல்லாம் பறந்தோடி விடும். திருவாசகத்துக்கு மட்டுமல்ல திருப்புகழுக்கும் உருகாதவர் யாரும் இருக்க முடியாது.
View attachment 13265View attachment 13266View attachment 13268View attachment 13269
எல்லா போட்டோசும் அருமையா இருக்கு டியர்....
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top