• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

திருமதி லக்ஷ்மி அகர்வால் -என் motivation

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
ஹை நட்பூஸ்

எல்லோருக்கும் வணக்கம்.:love::love::love:


உங்களிடம் பகிர்ந்து கொள்ள மிக மகிழ்ச்சியான விஷயம் ஒன்று உள்ளது.என் எல்லா கதைகளுக்கும் சில நிஜ மனிதர்களின் வாழ்வு அடிப்படையாக இருக்கும்.அதே போல் "சமர்ப்பணம்" என்ற போட்டி கதையும்,திருமதி லக்ஷ்மி அகர்வால் என்ற ஆசிட் அட்டாக் வன்கொடுமைக்கு ஆளான ஒரு பெண்ணின் கதையை அடிப்படையாக கொண்டதே.

1576121369703.png

இவர் போராட்டமே ஆசிட் விற்பனை தடைக்கு இந்திய அளவில் ஒரு வரைமுறையை கொண்டு வந்தது

லட்சுமி அகர்வால் அவர்களின் வாழ்க்கை வரலாறு அடிப்படையாக "chapak " என்ற படம் பல தடைகளை கடந்து, தீபிகா படுகோன் நடிப்பில் ட்ரைலர் வெளியாகி உள்ளது.படம் 2020 வெளியாகும்.மிகவும் சந்தோசமான விஷயம்.



இத்துடன் தொடர்புடைய மெடிக்கல் மாபியா,ஆசிட் அட்டாக்,stalking என்று பெண்களை பின் தொடர்தல்,காதல் என்று எண்ணி ஏமாறும் பல விட்டில் பூச்சிகளின் நிலைமை,காதல் தோல்வியால் பெண்களுக்கு ஏற்படும் டிப்ரெஸ்ஸின்,பாலியல் வன்கொடுமை,sexual slavery,இதை எல்லாம் எப்படி கடந்து வருவது என்பதையும் என் பாணியில் கொடுத்து உள்ளேன்.எதோ என்னால் முடிந்த வரை பெண்களை துரத்தி வேட்டையாடும் பல பிரச்சனைகளுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்து இருக்கிறேன் என்று நம்புகிறேன்.

படித்து விட்டு நீங்கள் தான் சொல்ல வேண்டும்.கதைக்களம் எழுதுவது எளிதாக தான் இருந்தது.ஆனால் இதற்கான ஆதாரங்களை,நிஜ மக்களின் வழக்கை வரலாற்றினை படிக்கும் போது,அவர்கள் அனுபவித்த கொடூரங்கள் நெஞ்சை உலுக்கி விட்டது.

ஆசிட் அட்டாக் இலக்கான லஷ்மி முழுதாய் ரெண்டு ஆண்டுகள் உடை அணியமுடியாத நிலையில்,மாத விலக்கு கொடுமைகளை தாங்கி கதறி துடித்து உள்ளார்.அதற்கு துணை புரிந்த ஒருவன் விடுதலையாகி திருமணமே செய்து கொண்டான்.இன்னொரு விரைவில் சிறை தண்டனை முடிந்து வெளியே வர போகிறான்.ஆனால் சமுதாயம் தன்னை தான் கேவலமாக பேசியதாய் பலமுறை சொல்லி இருக்கிறார். இன்னொரு உயிரை இவ்வளவு சுலபமாய் வதைக்க எப்படி மனம் வருகிறது? எவனோ ஒரு xxxx செய்ததற்க்கு இவர் வளர்ப்பு முதல் அனைத்தையும் கேவலமாக பேசி இருக்கிறார்கள்.

எந்த தவறு நடந்தாலும் முதல் கை நீட்டல் பெண்களின் பக்கம் வருவது வருத்தத்திற்குரியதே.அவள் ஆடை,நேரம் எல்லாம் கேள்வி எழுப்பும் சமூகம் உள்ளுக்குள் துடிக்கும் அந்த பெண்மையின் வலிகளை புரிந்து கொள்வதே இல்லை.

மனதளவில் எந்த பிரச்சனை என்றாலும் பெண்கள் தைரியமாய் அதை counselling மூலம் எதிர் கொண்டு வாழ்வில் மீண்டு வர எதோ என்னால் முடிந்த சிறு முயற்சி இது.


இவை ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய குற்றங்கள்.பிரித்து பார்க்கமுடியாது.

thank you all for your love and support
yours
honey
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top