திவலைகள் 17

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Anamika 9

Author
Author
Joined
Oct 29, 2021
Messages
553
Reaction score
677
Points
93
Location
Tamilnadu, Theni
அதிகாலை நேரம் வரை தூக்கம் வராமல் முழித்துக் கிடந்த ஆதித் அதன் பின்பு சற்று நேரம் தூங்கி எழுந்தான். அவன் எழும் போது மணி எட்டைத் தொட்டு இருந்தது.

குளித்து இன்று அலுவலகம் செல்ல வேண்டும் என்று கிளம்பினான்.

அவனை பார்த்துக் கொண்டே வந்த ரியா "குட் மார்னிங்.. மை ஹஸ்பண்ட்" என்றாள்.

சட்டென எழுந்த கோபத்தில் கையிலிருந்த சீப்பை தூக்கி எறிந்து விட்டு திரும்பினான்.

"லிமிட்ட தாண்டி போயிட்டு இருக்க ஷியா"

"நானா? என்ன லிமிட் பத்தி ஜீ..?"

(பத்தி - கணவன்)

"திரும்ப இந்த வார்த்தைய சொல்லாத"

"என்ன பத்தி ஜீ.. எல்லாத்துக்கு கோச்சுக்குற... இவ்வளவு அழகான பத்னிய பார்த்தப்புறம் கோபம் வரலாமா?"

ரியா கேள்வியை கொஞ்சும் குரலில் கேட்டுக் கொண்டு அருகில் சென்றாள். ஆதித்திற்கு அவள் நேற்று செய்த காரியம் நினைவு வர வேகமாக நகர்ந்து நின்றான்.

"பக்கத்துல வராத.. கொன்னுடுவேன்"

"பத்தி ஜீ கொன்னாலும் தப்பு இல்ல" என்று கண்ணடித்து கூறி விட்டு மேலும் அருகில் சென்றாள்.

ஆதித் அவளை பிடித்து தள்ளப்போக கையை பிடித்துக் கொண்டாள்.

வேகமாக உதறியவன் "உன்ன..." என்று பல்லைக் கடித்தான்.

"என்ன என்ன பண்ணுவீங்க பத்தி ஜீ?" என்று கேட்டவள் "ஹக் பண்ணுவீங்களா? இப்படியா?" என்று கேட்டு பின்னால் திரும்பி அவனது கையை எடுத்து தன்னை அணைத்தபடி பிடித்துக் கொண்டாள்.

இப்போது ஆதித்தின் மொத்த கோபமும் எல்லையை கடந்து விட வேகமாக அவளை உதறினான். உடனே நகர்ந்து நின்றவள் "ஆண்ட்டி" என்றாள்.

திட்ட வாய் திறந்து ஆதித் ரியாவின் பார்வையை பார்த்து திரும்பினான். அங்கு கோப்பெருந்தேவி அவர்களை புன்னகையோடு பார்த்துக் கொண்டிருந்தார்.

"கிளம்பலாம்பா.. நேரமாச்சுனு கூப்பிட வந்தேன்" என்றார்.

"ம்ம் போகலாம்மா" என்றவன் ரியாவை திரும்பி முறைத்து விட்டுச் சென்றான்.

ரியா அவன் முதுகுக்குப்பின்னால் சிரித்து வைக்க கோப்பெருந்தேவியின் கண்களுக்கு அது ஊடலாக தெரிந்தது.

ரியாவும் கோப்பெருந்தேவியும் பின்னால் அமர்ந்து கொள்ள ஆதித் காரை ஓட்டினான்.

அடிக்கடி அவனது பார்வை ரியாவை கோபமாக தொட்டு மீண்டதில் ரியா மர்மமாக புன்னகைத்துக் கொண்டாள்.

இதை எல்லாப் கவனித்தும் கவனிக்காகதது போல் அமர்ந்து இருந்தார் கோப்பெருந்தேவி.

அவரை விமானத்தில் ஏற்றி விடும் வரை ஆதித் கோபமாக தான் இருந்தான். இடையில் அவர்களுக்கு தனிமை கொடுத்து விட்டு கோப்பெருந்தேவிக்கு வேண்டியதை வாங்கச் சென்றாள் ரியா. அந்த இடைவேளையில் தாய் மகனிடம் பேசினார்.

"ஏன்டா ஒரு மாதிரி இருக்க?"

"ஒன்னும் இல்லமா"

"சரி.. அந்த பொண்ணு ரொம்ப நல்ல பொண்ணா இருக்கா.. ஒழுங்கா பார்த்துக்க சரியா?"

"ம்ம்" என்றவன் 'இவ ஒரு ராட்சசிமா.. இவ கிட்ட இருந்து என்ன தான் காப்பாத்திக்கனும்' என்று நினைத்துக் கொண்டான்.

"அடிக்கடி அவங்க அம்மா வீட்டுக்கு கூட்டிட்டு போ.. நேரம் கிடைச்சா நம்ம ஊருக்கும் கூட்டிட்டு வா"

"ம்ம்.."

"நீ ஒன்னும் சின்ன பையன் இல்ல.. கல்யாணத்த பத்தி நான் சொல்ல தேவை இல்ல.. ஆனா உன் பொண்டாட்டிய புரிஞ்சு நடந்துக்க வேண்டியது உன் பொறுப்பு"

'அவ பொண்டாட்டியே இல்லங்குறேன்' என்று நினைத்தவன் "சரிமா பார்த்துக்குறேன். நீங்க தனியா போறீங்க. அங்க போனதும் கால் பண்ணுங்க. உங்களையும் பார்த்துக்கோங்க" என்று கூறினான்.

கோப்பெருந்தேவி தலையசைக்க ரியா வந்து விட்டாள். அவரை அங்கிருந்து அனுப்பியதும் ரியாவிற்கு முழு திருப்தி வந்தது. பழைய பிரச்சனையை அவர் கிளறக்கூடாது என்பதற்காக காலையில் சண்டை போடுவது போல் நடித்தாள்.

பின்னால் கோப்பெருந்தேவி வருவது தெரிந்தே எல்லாவற்றையும் செய்து விட்டு நல்ல பிள்ளையாக நடித்து முடித்தாள்.

அங்கிருந்து கிளம்பிய பின் ரியா கைபேசியில் ஆழ்ந்து இருக்க ஆதித் பேசவே இல்லை. கார் வீட்டை நோக்கி செல்வதை பார்த்தவள் "என் வீட்டுக்கு போ" என்று கட்டளையிட்டாள்.

"எதுக்கு?"

"சொன்னத செய்"

ஆதித் காரை நிறுத்தி விட்டான்.

"என்ன?"

"என்னால எங்கயும் போக முடியாது. உனக்கு வேணும்னா இறங்கி நடந்து போ"

"வாட்?"

"காதுல விழல? இறங்கு.. எனக்கு வேலை இருக்கு"

ரியா சலிப்போடு இறங்கி விட்டாள். அவள் இறங்குவாள் என்று எதிர் பார்க்காததால் ஆதித் ஆச்சரியப்பட்டான். இறங்கி நின்றவள் அவன் பக்கம் வந்தாள்.

"நான் போயிக்கிறேன். ஆனா நீ நேரா போய் மிஸ்ரிய தேடாம உன் வேலைய பாரு.. தேடுறனு தெரிஞ்சது... அவ்வளவு தான்"

அவளை முறைத்தவன் வேகமாக காரை கிளப்பிக் கொண்டு சென்று விட்டான். ஐந்து நிமிடம் அதே இடத்தில் நின்ற ரியா அவளுக்காக வந்த காரில் ஏறிக் கிளம்பி விட்டாள்.

ஆதித் அலுவலகத்தில் நுழைய எல்லோருமே அவனது திருமணத்திற்கு வாழ்த்து தெரிவித்தனர். வேலை செய்பவர்களை எல்லாம் அழைக்கவில்லை என்றாலும் விசயத்தை சொல்லி இனிப்பு கொடுக்க ஏற்பாடு செய்து இருந்தான். அதனால் எல்லோரும் வாழ்த்து தெரிவிக்க போலிப்புன்னகையுடன் ஏற்றுக் கொண்டான்.

அதோடு அந்த விசயம் முடிந்தது. அடுத்த நிமிடத்திலிருந்து தன் வேலையில் மூழ்கிப்போனான். திருமண வேலை என்று அவன் அலுவலகம் ஒரு வாரமாக வரவில்லை. ஊருக்கு திருமண வேலை என்று சொல்லி விட்டு அவன் மிஸ்ரியை அல்லவா தேடி அலைந்தான்.

இப்போது வேலைகள் எல்லாம் வரிசையாக நின்று இருந்தது. அவனது தொழில் கடல் சார்ந்த பொருட்களை எல்லாம் விற்பது மற்றும் வாங்குவது. கடலில் இருந்து வரும் பொருட்கள் எதுவாக இருந்தாலும் காசாக மாற்றி விடுவதில் ஆதித் கெட்டிக்காரன்.

கடலில் எடுக்கப்படும் எல்லாப் பொருட்களுக்கும் அரசாங்கத்திடம் கணக்கு காட்டப்படுவதில்லை. பாதிக்கும் மேல் தனிபட்ட முறையில் விற்கப்படுகிறது.

இது தவறு தான் என்றாலும் அதை மீற அவனுக்கு அனுமதி இல்லை. அதனால் கண்டு கொள்ளாமல் அவர்கள் சொன்னதை செய்துவிடுவான்.

அந்த அழகிய அரபிக்கடலில் கிடைக்கும் சில பொருட்களை விற்கவும் வாங்கவும் இவர்களை பல தீவிலிருந்து அணுகுவார்கள். அதை எல்லாம் சரியான விலைக்கு வாங்கி லாபத்தோடு விற்பதில் ஆதித் கெட்டிக்காரன் தான்.

அருகிலிருக்கும் அத்தனை தீவிலிருந்தும் வரும் வியாபாரிகளை வளைத்துப் பிடிக்க வேண்டும். வேலைகளில் மூழ்கி இருந்தவனுக்கு அப்போது தான் புரிந்தது.

அவன் குறித்து வைத்திருந்த மூன்று வியாபாரங்களில் ஒன்று மட்டுமே வெற்றிகரமாக முடிந்திருந்தது. மற்ற இரண்டும் கை நழுவிப்போயிருந்தது.

அந்த இரண்டும் யாருக்கு போயிருக்கிறது என்று கேட்டால் சர்மாவிற்கு சொந்தமான நிறுவனத்திற்கு தான் சென்றது என்று கூறினர். ஆதித் ஏமாற்றமடைந்தாலும் ஆச்சரியமும் அடைந்தான்.

சர்மா குழுவிற்கு இந்த கடல் சார் பொருட்கள் விற்பதும் வாங்குவதும் பல தொழிகளில் இதுவும் ஒன்று. ஆனால் ராத்தோட் கூட்டத்திற்கு இது தான் முதல் வருவாய். மற்ற எல்லாமே இதற்கு பிறகு தான்.

சர்மாவின் முதன்மை வருவாய் அவர்களது துப்பாக்கி தொழிற்சாலை தான். இருந்தாலும் அத்தனை தொழிலையும் ஒரே கண்ணோட்டத்தில் பார்க்கின்றனர்.

குணால் அரோராவின் மறைவுக்கு முன்பு வரை இதே தான் நடந்து கொண்டிருந்தது. ஆதித் எப்போதும் மூன்றில் ஒரு பங்கு வெற்றியை தான் பெருவான். மற்றதை அவர்கள் சுலபமாக தட்டிச் சென்று விடுவார்கள்.

அவர் மறைந்த பின் இரண்டு மாதங்கள் ஒரு பிரச்சனையும் வரவில்லை. ஆதித் எதிர் பார்த்த எல்லாமே சுலபமாக நிறைவேறியது. அவனுக்கு வேண்டியவை எல்லாம் தானாக அவன் கையில் வந்து விழுந்தது.

ஆனால் அது இரண்டு மாதத்திற்கு மேல் நீடிக்கவில்லை. மீண்டும் சர்மா தலை தூக்க ஆதித்திற்கு மீண்டும் தொல்லை தான். அந்த கூட்டத்தில் இருக்கும் பன்கஜ் தான் இதை செய்திருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.

மீண்டும் போட்டி போட ஆரம்பித்தான். ஆனால் வழக்கமாக எது பதிலாக கிடைக்குமோ அது தான் இப்போதும் கிடைத்தது. அவனது ஒரே ஆசை சர்மா குழுவை ஒரு முறையாவது வெற்றி பெற வேண்டும் என்பதே.

முதலில் தான் அது வெறும் போட்டி நிறுவனம். இப்போது வீட்டில் வந்து அமர்ந்திருக்கும் ஷியாவின் நிறுவனம். அதுவே அவனுக்கு வெறியேற்ற போதுமானதாக இருந்தது.

ஷியா அந்த குழுவில் யார் என்று அவனுக்கு தெரியாது. அவள் அதை சொல்லவும் இல்லை. ஆனால் குணாலை கொன்றதற்காக தானே தன் வீட்டில் மனைவியாக வந்து சேர்ந்து இருக்கிறாள்.

அவர்களது கூட்டத்தை வெற்றி பெறுவதை தவிர அவனுக்கு வேறு எதிலும் வெற்றி கிடைக்காது என்று தோன்றது.

உடனே வெவ்வேறு நிறுவனங்கள் நான்கை தேர்வு செய்தான். அவர்கள் கடல் பொருட்களை விற்பதில் முதல் பத்து இடத்திற்குள் வருபவர்கள். அவர்களை பற்றிய விவரங்களை சேகரிக்கும் படி கட்டளை இட்டு விட்டு அடுத்த வேலைகளை பார்த்தான்.

அதே நான்கு பேரையும் தபஸ்வி சந்திக்க ஏற்பாடு செய்து முடித்து இருந்தாள்.‌ அதில் இருவரிடம் இன்று பேசி முடித்து ஒப்பந்தத்தை பற்றிய அடுத்த கட்ட பேச்சு வரை போயிருந்தது.

எல்லாம் முடித்து விட்டு தபஸ்வி வீட்டுக்கு வந்து கொண்டிருக்க சித்தாந்த் ஒரு சிறிய நகைக் கடைக்குள் நுழைவதை பார்த்து விட்டாள்.

"ஆயுஷ் ஸ்டாப்"

உடனே ஆயுஷ் ஓரமாக காரை நிறுத்தி விட்டான்.

"அது ஜோஸி தான?" என்றவள் கைபேசியை எடுத்து சித்தாந்த்தை ரகசியமாக பின் தொடர்பவனை அழைத்தாள்.

"ஹலோ மேம்"

"ஜோஸி இங்க என்ன பண்ணுறான்?"

"பிரதாப் கிட்ட கோல்ட் வாங்கிட்டு காசு கொடுக்கலையாம். அத வாங்கிட்டு வானு அனுப்பி இருக்கார்"

"எப்போ இருந்து பிரதாப் ஜோஸிய நம்ப ஆரம்பிச்சான்?"

"நமன் விசயத்துல ஜோஸி சாப் நேராவே கேள்வி கேட்டு பேசிட்டாரு. அது மட்டுமில்ல காலையில நமன் கிட்ட பேசனும்னு பிரதாப் கிட்டயே கேட்ருக்கார். அத சமாளிக்க தான் பிரதாப் வேற வேலைய கொடுத்தது"

"அந்த நமன் இப்போ எங்க இருக்கான்?"

"பிரதாப் கண்ட்ரோல்ல தான். அவன வெளியெடுத்து அவன வச்சு பிரதாப் எதோ ப்ளான் போட்டுட்டு இருக்கார்"

"அப்போ நமன லாக் பண்ணு"

"ஓகே மேம்"

"சித்தாந்த் ஜோஸிய திரும்ப நான் பார்க்கனும். ஏற்பாடு பண்ணிடு" என்று அழைப்பு துண்டித்தாள்.

"திரும்ப ஏன்?" என்று ஆயுஷ் கேட்க "பிரதாப் அவன நம்பினா நம்ம காரியம் கெட்டுப்போகும். கிளம்பு" என்று கூறி முடித்துக் கொண்டாள்.

ஆயுஷ் காரை எடுத்து விட சித்தாந்த் சென்ற கடையை பார்த்துக் கொண்டே சென்றாள்.

_______

இரண்டு நாட்கள் கடந்து இருந்தது.

ஆதித் அலுவலகம் செல்லும் வரை ரியா அவனை பேசியே ஒரு வழி செய்து அனுப்பி வைத்துக் கொண்டிருந்தாள்.

சில நேரம் உணவு பரிமாறுகிறேன் என்று உரசிக் கொண்டு நின்று கடுப்பேற்றுவாள். சில நேரம் எல்லோர் முன்பும் கொஞ்சுவது போல் நடித்து வைப்பாள்.

பார்ப்பவர்களுக்கு தான் அது கொஞ்சல் போன்று இருக்கும். அவர்களுக்குள் பேசிக் கொள்ளும் வார்த்தைகளில் அனல் பறக்கும் விசயம் அவர்களுக்கு மட்டுமே தெரியும்.

இது எல்லாம் அறைக்கு வெளியே மட்டுமே. அறையில் கதவை அடைத்தப்பின்பு ரியா அவனை ஒரு பொருட்டாகவே மதிக்க மாட்டாள். அவன் இருந்தாலும் இல்லையென்றாலும் கண்டு கொள்ளாமல் மடிக்கணியில் அமர்ந்து விடுவாள்.

ஆதித் இந்த மட்டும் தொல்லை விட்டது என்று நினைத்துக் கொண்டு தன் வேலையை பார்ப்பான்.

அடுத்த நாள் பிரதாப்பின் மனைவி புதுமண தம்பதிகளை விருந்துக்கு அழைத்து இருந்தார். இரவு விருந்து. ஆதித் வேலையை முடித்துக் கொண்டு வந்து கிளம்பினான். ரியாவும் கிளம்பி விட்டாள்.

காரில் அமர்ந்து ரியாவிற்காக காத்துக் கொண்டிருந்தவன் அவள் வரவும் திரும்பிப் பார்த்தான். புடவையே கட்டாதவள் இன்று புடவை கட்டிக் கொண்டு வந்து கொண்டிருந்தாள்.

அந்த புடவையிலும் க்ளாமர் குறையாமல் தலை முடியை விரித்து விட்டு வர ஒரே ஒரு நொடி 'இவள் இவ்வளவு அழகா?' என்று ஆதித்தின் மனம் நினைத்தது.

அடுத்த நொடியே 'ச்சே' என்று தன்னைத்தானே திட்டிக் கொள்ள ஆரம்பித்து இருந்தான்.

காரில் அமர்ந்த ரியா அவன் முகத்தை பாரத்து விட்டு "ரொம்ப கஷ்டப்படுற போல இருக்கே.. என் கூட விருந்து சாப்பிட போறது கூட கஷ்டமா?" என்று கேட்டாள்.

"ஆமா.. என்ன பண்ணுவ? இறங்கி போயிடுவியா?"

"நோ சான்ஸ் பத்தி ஜீ.. நான் ஒரு நல்ல பத்னியா நடிக்கனும். அதுவும் இன்னைக்கு ரொம்ப ரொம்ப நல்லவளா நடிக்கனும். ஏன் தெரியுமா? பிரதாப் மெஹ்ரா வீட்டுக்கு போறோம். அங்க எனக்கு தேவையான எவ்வளவோ கிடைக்கலாம். அதெல்லாம் எப்படி மிஸ் பண்ணுவேன்?"

ஆதித் கடுப்பாக காரை எடுத்தான். சில நிமிடங்கள் அமைதியாக கடக்க "குணால் அரோரா உனக்கு யாரு?" என்று கேட்டான்.

"ஏன் திடீர்னு கேட்குற?"

"தெரிஞ்சுக்க தான் சொல்லு"

"சித்தப்பா"

"ஓ.. உன் கூட இருந்தாளே அந்த பொண்ணு குணால்க்கு மகளா?"

"ஆமா"

"நீ அக்காவா தங்கச்சியா?"

"அக்கா"

"ரெண்டு பேரும் சேர்ந்துட்டு .ஆள் கடத்தல் வேலை பார்த்துட்டு இருக்கீங்க.. இல்ல இல்ல கொலையும் சேர்த்து பண்ணுறீங்க"

"நாங்க கொலை பண்ணோமா? எப்போ?"

"விதார்த்த கொல்லல?"

"அவன் துரோகி.. அவன கொல்லுறதுல தப்பு இல்ல.. "

"அவன் என்ன துரோகம் பண்ணான்? உன்ன மாதிரி ஒருத்தன் வாழ்க்கையில விளையாடி காதல பிரிச்சு கல்யாணம் பண்ணி டார்ச்சர் பண்ணானா?"

'கிட்டத்தட்ட..' என்று நினைத்தவள் "அது தெரிஞ்சு என்ன பண்ண போற?" என்று கேட்டாள்.

"ஆமா.. என்ன பண்ண? மிஸ்ரிய கடத்திட்டு என் வொய்ஃபா இருபத்தி நாலு மணி நேரமும் கூட இருக்க உன்னையே என்னால ஒன்னும் பண்ண முடியல.. மத்தத தெரிஞ்சு என்ன செய்ய?"

"தெரிஞ்சா சரி"

"ஆனா ஒரு டவுட்டு"

"என்ன?"

"உன்ன பெத்தவங்களுக்கு இந்த கொலை மேட்டர் எல்லாம் தெரியுமா? தெரிஞ்சுமா சும்மா இருக்காங்க?"

"வாய மூடிட்டு கார ஓட்டுற வேலைய பாரு"

"பதில் சொல்ல மாட்ட? சரி இதுக்கு பதில் சொல்லு.. நீ ஃபாரின் ரிட்டன் தான? எந்த நாட்டுல இருந்து வந்த?"

"பேரு வைக்காத ஒரு நாட்டுல இருந்து வந்தேன். இப்ப கேள்வி கேட்குறத நிறுத்திட்டு ரோட்ட பார்த்து ஓட்ட போறியா இல்லையா?"

ரியா பல்லை கடித்துக் கொண்டு கூற ஆதித் அவளை முறைத்து விட்டு திரும்பிக் கொண்டான்.

விதார்த் இறந்த நிகழ்வு ரியாவின் நினைவில் வந்தது. அவன் மும்பையிலிருந்து ஆந்திரா ஓடி விட்ட செய்தி கிடைத்து ஆயுஷும் அவனோடு இருவரும் சென்று அவனை தேடிப் பிடித்தனர்.

அடித்து உதைத்து பார்த்திபனை பற்றி ஆயிரம் முறை கேட்டும் கூட அவன் வாயை திறக்கவே இல்லை. கடைசியாக ஆயுஷ் அவனது தம்பியை கடத்தப்போவதாக மிரட்டினான்.

அதற்கு பிறகே வாயை திறந்தான். பார்த்திபன் மும்பையில் ஒளிந்து இருப்பதாகவும் அவனை காப்பாற்றும் இடம் பெரிய இடம் என்று சொல்லி விட்டான். இதற்கு மேல் அவனை உயிரோடு விட வேண்டாம் என்று தபஸ்வி கூறி விட ஆயுஷ் அங்கேயே அவனை கொன்று விட்டான்.

அவனது உடலை அவனது குடும்பத்திடமே கொடுத்து விட்டு இதை பற்றி வெளியே சொல்லக்கூடாது என்று மிரட்டினர். விதார்த் ஒரு மாஃபியா கூட்டத்தை சேர்ந்தவன் என்பதால் அவனும் அவ்வளவு நல்லவன் எல்லாம் இல்லை. அவனை கொலை செய்த செய்தி வெளியே பரவினால் அவனது பழைய விசயங்களை கிளறி வைப்போம் என்று கூறினர்.

அதற்கு பயந்து அவனது குடும்பம் சத்தமில்லாமல் அவனது கடைசி காரியத்தை முடித்து விட்டனர். ஆயுஷும் அங்கிருந்து மும்பை வந்து சேர்ந்து விட்டான்.

மும்பையில் விசாரிக்கும் போது தான் பார்த்தீபன் இறந்து விட்டதாக செர்தி கிடைத்தது. அதை எல்லாம் நம்ப தபஸ்வி தயாராக இல்லை. விதார்த் அவன் ஒளிந்து இருப்பதாக சொன்னப்பிறகு அவன் நிச்சயமாக உயிரோடு தான் இருப்பான். ஷியா பாயலும் கூட அப்படியே தான் நினைத்தனர்.

அதனால் தான் இந்த தேடுதல் வேட்டை. அவனை பாதுகாப்பது பிரதாப் என்பது ஷியாவின் நம்பிக்கை. அதனால் தான் பிரதாப்பை கண்காணிக்க தன் வாழ்வை பணயம் வைத்து துணிந்து எதிரியின் குகைக்குள் நுழைந்து இருக்கிறாள். இதிலிருந்து உயிரோடு போகவில்லை என்றாலும் நிச்சயமாக எதாவது ஒன்றை கண்டு பிடித்தே ஆக வேண்டும் என்ற முடிவில் இருந்தாள்.

தொடரும்.

(இப்போ கெஸ் பண்ணி இருப்பீங்களே... இன்னும் புரியலனா.. முதல் அத்தியாத்துல செத்தவன் பேரு தான் விதார்த்.)
 
Vithurshi

Well-known member
Joined
Mar 12, 2019
Messages
756
Reaction score
1,240
Points
93
Location
Sri Lanka
இந்தா .. அடுத்து மாட்டிட்டான்ல நம்ம ஆட்டோக்கார தம்பி சித்தாந்த் 😂😂😂 நீங்காமல் நானே நிழல் போல தானேனு தபஸ்வி உன் பின்னுக்கே வர்றா ...

வாய் ஷியா செம்ம போ ட்ராப்னு தெரிஞ்சும் அவங்க இடத்துக்குள்ளயே போய்ட்டியே கெத்து கேர்ள் நீ!! 😍😘FB_IMG_1638757016320.jpg
 
Last edited:

Resh

Well-known member
Joined
Dec 1, 2019
Messages
483
Reaction score
661
Points
93
Location
Karur
சூப்பர் பதிவு ✨😍💖செம்ம interesting ஆ போகுது 🤩🤩🤩
ஆதித்...ரியாவ சைட் அடிச்சுட்டான்😂🤭🤣
ரெண்டு ஹீரோயின்க்கும் தில்லு தான்🔥🔥🔥🔥
அடுத்த பதிவுக்காக வெயிட்டிங் ✨✨✨
 
நாள்காட்டி

தமிழ் நாள்காட்டி
ஞாதி்செவிவெகா
           
௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫
௰௬ ௰௭ ௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨
௨௩ ௨௪ ௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯
௩௰ ௩௧          

Advertisements

Latest Discussions

Latest Episodes

Advertisements