• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

தீண்டாதே 11?

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Shehazaki

அமைச்சர்
SM Exclusive
Joined
Aug 26, 2020
Messages
1,480
Reaction score
3,823
Age
24
Location
Srilanka
created_image_1599733471310.png


(1)



மித்ராவுக்கோ அவர்கள் தன்னை காட்டி ஏதோ சொல்லி தன்னை நோக்கி வருவதில் பதட்டம் மனதை கவ்விக் கொள்ள ஹர்ஷாவின் சட்டை கோலரை இறுகப் பிடித்தவாறு அவள் நிற்க அந்த நபரோ ஹர்ஷாவை பொருட்டாகவே நினைக்காமல் மித்ராவை தொட வந்தான்.



அவளோ, "மித்து மித்து போலாம் மித்து.. பயமா இருக்கு.." என பதட்டத்தில் கூறியவாறு அவனை இழுக்க ஹர்ஷாவோ சற்றும் அசைந்த பாடில்லை.



அருகே வந்த அந்த வெளிநாட்டவன் ஹர்ஷாவை தள்ளிவிடுவதற்கு அவன் தோள் மேல் கை வைக்க போன அடுத்த நொடி "ஆஆ.." என்ற கத்தலுடன் தூர சென்று விழுந்திருந்தான் அவன்.



ஹர்ஷா அவன் நெஞ்சில் உதைத்த உதையில் அவன் தூர சென்று விழுந்திருக்க மித்ராவோ விழுந்தவனை பார்த்து விட்டு அதே மிரட்சியுடன் ஹர்ஷாவை நிமிர்ந்து பார்க்க அவனோ கண்கள் சிவக்க தாடை இறுகிப் போய் கை நரம்புகள் புடைக்க இருந்த கோலம் அவளுக்கே மனதில் கிளியை ஏற்படுத்தியது.



மதுவிடமிருந்து விலகியவன் அவர்களை நோக்கி வர விழுந்தவனை தவிர அவனுடன் வந்த மற்றவர்களோ ஹர்ஷா ரௌத்திரமான முகத்துடன் முன்னோக்கி வருவதில் இரண்டு அடி பின்னாலே அன்னிச்சையாக நகர்ந்தனர். இருந்தும் தங்களுக்கு கொடுத்த வேலையை செய்யாவிடின் அவர்களின் தலைவன் அவர்களை தொலைத்து விடுவான் என்ற பயத்தில் மித்ராவை நோக்கி வர அவர்கள் தன்னை எதிர்க்க வருவதில் வெறியானவன் அவர்களை புரட்டி எடுக்க அவனின் ஒவ்வொரு அடியிலும் அலறி விட்டனர் அவர்கள்.



ஹர்ஷாவை விழி விரித்து மித்ரா பார்த்துக் கொண்டிருக்க வந்தவர்களில் ஒருவன் அவள் எதிர்பாராத சமயம் அவள் வாயை பொத்தி அவள் ஓட விடாமல் பிடித்து இழுத்து கொண்டு செல்ல மித்ராவின் "ம்ம்.. ம்ம்.." என்ற முணங்கலில் சட்டென திரும்பி பார்த்த ஹர்ஷாவுக்கு அந்த அடியாளின் மேல் கோபம் ஏகத்துக்கும் எகிறியது. வலது கையில் இருந்த தன் காப்பை ஏற்றி விட்டவாறு அவனை நோக்கி வேக எட்டுக்களுடன் வந்தான் ஹர்ஷா.



அவர்களை மின்னல் வேகத்தில் நெருங்கி மித்ராவின் கையை பிடித்து அவன் புறம் இழுத்தவன் அந்த அடியாளின் நெஞ்சில் கை வைத்து தள்ளி,
"என் மதுவை தொட்டுட்டல்ல.. " என கேட்டவாறு அவனை நோக்கி வந்தவன் மித்ராவை அந்த அடியாளின் முன் நோக்கி தள்ளி, "இப்போ தொடு டா.." என கூறியவாறு நெருங்க அவனோ ஹர்ஷாவின் அடியின் பயத்திலே ஓட ஆரம்பித்து விட்டான்.



ஹர்ஷாவோ துரத்திச் செல்ல அதற்குள் வண்டியில் ஏறி இருந்த மற்றவர்கள் அந்த அடியாளையும் ஏற்றி வண்டியை மின்னல் வேகத்தில் செலுத்த துரத்தி வந்தவன் "ச்சே.." என்று அவர்களை பிடிக்க முடியவில்லை என்ற கோபத்தில் தரையில் காலை உதைத்து தன்னை ஆசுவாசப்படுத்த முயல அப்போது தான் மித்ரா நியாபகம் வந்து அவளை திரும்பி பார்த்தான்.



அவளோ , "மமா.. மமா.." என்று பயத்தில் பிதற்றிக் கொண்டு தரையையே வெறித்தவாறு நின்றுக் கொண்டிப்பதை கண்டவன் அவள் அருகில் வேகமாக ஓடி வந்து மித்ராவை இழுத்து இறுக்கமாக அணைத்து,
"ரிலாக்ஸ் மது.. ரிலாக்ஸ்.." என முதுகை நீவி விட்டவாறு ஆறுதல்படுத்த அவளோ அவன் நெஞ்சில் புதைந்து கொண்டு அழுக ஆரம்பித்து விட்டாள். அவனும் அவளை இறுக அணைத்துக் கொள்ள சிறிது நேரத்தில் அவன் அணைப்பே அவள் பதட்டத்தை குறைக்க எதுவுமே பேசாது அவனை ஒட்டிக் கொண்டு மௌனியாக இருந்தவளை அவனும் எதுவும் கேட்காது அவள் வீட்டு முகவரியை மட்டும் கேட்டுக் கொண்டவன் தன் வண்டிலே அழைத்துச் சென்று அவள் தங்கியிருக்கும் ஃப்ளேட்டின் முன் வண்டியை நிறுத்த இறங்கியவள் அவனை திரும்பி பார்த்து, "தேங்க்ஸ்.." என்று மட்டும் சொல்லி விட்டு திரும்பி பார்க்காது சென்று விட்டாள்.



அவனோ அவளை பெருமூச்சு விட்டவாறு பார்த்து வண்டியை தன் வீட்டை நோக்கி விட போகும் வழியெங்கும் அவனுக்கு ஒரே யோசனை தான் 'யார் அவர்கள்..' என்று..



அடுத்த மூன்று நாட்கள் மித்ரா கல்லூரிக்கு வராது இருக்க ஹர்ஷா தான் மித்ராவை காணாது தவித்துப் போனான்.. வீட்டிற்கு சென்று பார்ப்போமா என்று பல தடவை யோசித்து அவளுக்கு என்ன பிரச்சினை என்று தெரியாது குழம்பிப் போனவன் அவள் மேல் தனக்கு இருக்கும் காதலையும் அப்போதே புரிந்து கொண்டிருந்தான்.



அடுத்த நாள் காலை,



தன் காரில் முன் பக்க சீட்டில் அமர்ந்தவாறு தன் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தவன் எதேர்ச்சையாக திரும்ப மித்ரா ஃபோனை நோண்டியவாறு வருவதை பார்த்தவனுக்கோ சந்தோஷம் தாளவில்லை. காரிலிருந்து தாவி குதித்தவன் அவளை நோக்கி ஓடி வந்து அவள் முன் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க நிற்க அவளோ கண்களை அகல விரித்து "வாட் ஹேப்பன்ட்.." என்று கேட்டவாறு ஹர்ஷாவையே புரியாமல் பார்த்தாள்.



அவனோ இடுப்பில் கை வைத்து மூச்சு வாங்கியவாறு சட்டென்று "ஐ மிஸ் யு மது.." என்று சொல்லி அவளை தாவி கட்டியணைக்க அவளுக்கு தான் அதற்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை.



அவனிடமிருந்து தன்னை பிரித்து "அது.. அது வந்து.." என திக்கித் திணறியவள் கண்களுக்கு அப்போது தான் அவனின் முழங்கையில் போடப்பட்டிருந்த கட்டு தென்பட உள்ளுக்குள் பதறியவள் வெளியிலும்,
"என்னாச்சு மித்து.. எப்பிடி அடிபட்டிச்சு.." என பதட்டமாக கேட்க,



அவள் பதட்டத்தை ரசித்தவன் , "ஒன்னுஇல்லை மது.. சின்ன அடி தான்.." என சமாளிக்க,



"இப்போ சொல்ல போறியா இல்லையா மித்து.." என மித்ரா உரிமையாக கடிந்து கொள்ள அவளின் தனக்கான அழைப்பில் மனம் குளிர்ந்தவன் அவளை நெருங்கி அவள் முந்நெற்றி முடியை காதோரம் ஒதுக்கி விட்டவாறு,
"ஒன்னு இல்ல டா.. அன்னைக்கு உனக்காக சண்டை போடும் போது சின்னதா கைல அடி பட்டிருச்சி அவ்வளவு தான்.." என மென்மையாக சொல்ல மித்ராவோ மொத்தமாக அவன் மதுவாவே மாறியிருந்தாள்.



தன்னை காப்பாற்ற போய் அவனுக்கு காயம் ஏற்பட்டதில் கலங்கியவள் அவனை அதே கலங்கிய கண்களோடு ஏறிட்டு பார்க்க அவனோ பக்கென்று சிரித்து விட்டான். அவன் சிரித்ததில் காண்டானவள் அவனை நெருங்கி அவன் நெஞ்சில் இரண்டு மூன்று அடி அடித்து வாய்க்குள் அவனை அர்ச்சித்து முணுமுணுத்தவாறு முகத்தை திருப்பிக் கொண்டு கோபத்தில் செல்ல, ஹர்ஷாவோ "அச்சோ பேபி.. வெயிட் .." என கத்தியவாறு அவள் பின்னாலே ஓடினான்.



வகுப்பில் அவள் பக்கத்தில் உட்கார்ந்தவன் அவள் கையை தன் அழுத்தி பிடிக்க அவனோ அவனை நோக்கி திரும்பி,
"சோரி மித்து.. என்னால தான்.." என்று ஏதோ சொல்ல வர அவள் உதட்டின் மேல் விரல் வைத்து தடுத்தவன்,
"நா உனக்காக பன்றதுக்கு சோரி, தாங்க்ஸ் சொல்லிக்கிட்டு திரிஞ்ச கொன்னுறுவேன் பாத்துக்க.." என செல்லமாக மிரட்ட அவளோ அதே கலக்கத்துடன் அவன் காயம் ஏற்பட்ட கையையே பார்த்துக் கொண்டிருந்தாள்.



அவள் மனநிலையை மாற்ற எண்ணி,
"அவங்கள உனக்கு முன்னாடியே தெரியுமா மது.." என ஹர்ஷா கேட்டதற்கு மித்ராவோ 'இல்லை' என்ற ரீதியில் இருபக்கமும் தலையாட்ட யோசனையில் புருவத்தை சுருக்கியவன்,
"அவங்கள பார்த்தா எனக்கு சரியா படல மது.. ஏதோ ப்ளான் பன்னி உன்னை நெருங்கினது போல இருந்துச்சி.. ப்ளீஸ் பீ கெயார் ஃபுல் டா.." என அக்கறையாக சொல்ல அவனின் ஒவ்வொரு வார்த்தைக்கும் வசியம் செய்யப்பட்டவள் போல் 'சரி.. சரி.." என தலையாட்டிக் கொண்டிருந்தாள் மித்ரா.



அவன் மெலிதாக சிரிக்க அவனை நிமிர்ந்து பார்த்தவள்,
"ஏன் எனக்காக நீ அவங்க கூட சண்டை போட்ட மித்து.. அதனால தானே உனக்கு அடிபட்டிருச்சி.." என சொன்னவளின் கன்னத்தை தாங்கியவன் அவளை மேலும் நெருங்கி,
"என் பேபிய அவ்வளவு சீக்கிரம் இன்னொருத்தன தொட விட்டுறுவேனா.. என் மது டி நீ.." என சொன்ன ஹர்ஷாவின் கண்களில் தெரிந்த தீவிரத்தில் மித்ரா தான் ஆடிப் போய் விட்டாள். 'என்ன இவன் இப்பிடி எல்லாம் பேசுறான்..' என நினைத்தவளுக்கு அவளது திட்டம் வேறு திசையில் செல்வதில் அய்யோ என்றாகிவிட்டது.



அவன் பார்வை வீச்சை தாங்காது மித்ரா முகத்தை வேறுபுறம் திருப்பிக் கொள்ள ஹர்ஷாவும் குறும்புப் புன்னகையுடன் அவளையே தான் கன்னத்தில் கை வைத்து ரசித்துக் கொண்டிருந்தான்.



அதன் பிறகு வந்த நாட்கள் வேகமாக நகர ஹர்ஷாவும் மித்ராவும் நன்றாகவே ஒன்றி விட்டனர். ஒன்றி விட்டார்கள் என்று சொல்வதை விட கல்லூரியில் அவளை தனித்து விடாது அவள் கூடவே சுற்றி கொண்டு அவளை ஒட்டிக் கொண்டு திரிந்தான் ஹர்ஷா என்று தான் சொல்ல வேண்டும்.. அவள் கூடவே சேர்ந்து சாப்பிடுவது எங்கு சென்றாலும் "மது.. மது.." என்று அவளை கூட்டு சேர்ப்பது என ஹர்ஷா இருக்க ஆரம்பத்தில் அவனை முடிந்த மட்டும் தவிர்த்தவள் பின் தடுக்க முடியாது அவனை பல்லைக் கடித்துக் கொண்டு பொறுத்துக் கொள்ள ஆரம்பித்து விட்டாள் மித்ரா.



சில நேரம் அவன் மதுவாக அவனிடம் நெருங்குபவள் அடுத்த நோடி சில நினைவுகள் கண்முன் தோன்றி மித்ராவாக மாறி அவன் பக்கம் சாயும் தன்னை நினைத்து தனக்கு தானே கடிந்து கொள்வாள். ஹர்ஷாவுக்கும் இது தெரியாமல் இல்லை.. தன்னிடம் நெருங்குவதும் திடீரென தன்னை விட்டு ஒதுங்கி இருப்பதுமாக மித்ரா தவிப்பது அவனுக்கு புரியத் தான் செய்தது.



இவ்வாறு ஹர்ஷாவும் மதுவும் பழகி ஆறு மாதங்களுக்கு மேல் ஆகியிருக்க,



அன்று,



அந்த பெரிய க்ரௌன்டில் யுனிவெர்ஸிடி லெவல் ஃபுட்போல் டோர்னமென்ட் (football tournament) நடக்க இருக்க ஸ்டேடியத்தை சுற்றி உள்ள இருக்கையில் மாணவர்கள் தத்தமது யுனிவெர்ஸிடி ஃபுட்போல் டீமிற்கு ஆதரவை தெரிவிக்கும் வண்ணம் துள்ளிக் குதித்து கத்திக் கொண்டு கரகோஷம் எழுப்பிக்கொண்டு இருந்தனர்.



இரு யுனிவெர்ஸ்ஸிடி அணிகளும் ஸ்டேடியத்துக்குள் நுழைய அணித் தலைவனாக முதலில் வந்த ஹர்ஷாவை பார்த்த மாணவர்கள் "ஹர்ஷா.. ஹர்ஷா.." என்று கத்தி கரகோஷம் எழுப்ப ஒருபக்கம் இவர்களின் கத்தலில் ஸ்டேடியமே அதிர்ந்து விட்டது.



அவன் நிறத்திற்கு ஏற்ற அந்த சிகப்பு நிற ஜேர்சியில் ஆணழகனாக இருந்தவனை அங்கிருந்த அத்தனை பெண்களும் வாயில் வோட்டர் ஃபோல்ஸ் வழிய பாத்திருக்க அவனோ அவர்கள் புறம் திரும்பி ஸ்டைலாக இரு விரல்களை தன் உதட்டில் வைத்து பறக்கும் முத்தத்தை வழங்க அவர்களோ கத்தி கூச்சலிட்டனர்.



இதில் எதுவும் ஈடுபாடு இல்லாது ஹர்ஷாவின் வற்புறுத்தலில் வந்திருந்த மித்ராவும் அவன் அசத்தும் அழகில் சைட் அடிக்க அவன் பெண்களின் புறம் முத்தம் அனுப்பியதில் 'ரொம்ப தான் இவன்..' என நினைத்து அவனை ஏகத்துக்கும் முறைத்து தள்ளினாள். ஏனோ இனம் புரியாத கோபம் அவளுள் உருவாவதை அவள் உணரத் தான் செய்தாள்.



மேட்ச் ஆரம்பமாக குறித்த நேரத்திற்குள் அதிக கோல்களை போட்டு ஹர்ஷாவின் அணியே வெற்றி பெற மித்ரா கூட வியர்வை சொட்ட சொட்ட அவன் ஆடிய வெறித்தனமான ஆட்டத்தில் தன்னை மறந்து அவனை ரசித்துக் கொண்டிருந்தாள். ஹர்ஷாவின் அணி வெற்றிக் கோப்பையை தூக்க திடீரென மைக்கில் இதையெல்லாம் அறிவித்துக் கொண்டிருந்தவரின் கையிலிருந்து ஹர்ஷா மைக்கை வாங்கியதில் எல்லாருமே அவனை புரியாமல் பார்த்து வைத்தனர்.
 




Shehazaki

அமைச்சர்
SM Exclusive
Joined
Aug 26, 2020
Messages
1,480
Reaction score
3,823
Age
24
Location
Srilanka
(2)


மித்ராவும் 'என்ன பன்றான் இவன்..' என்ற ரீதியில் புருவம் சுருக்கி யோசனையாக பார்க்க மைக்கை வாங்கியவன் நடு ஸ்டேடியத்தில் நின்று அங்கு பெண்களுக்கு நடுவே தன்னையே பார்த்துக் கொண்டிருந்த மித்ராவை பார்த்தவாறு,
"என் வாழ்க்கையில நிறைய பொண்ணுங்க க்ரோஸ் பன்னி போயிருக்காங்க.. ஆனா அந்த ஃபீல் என்ட் லவ் உன்கிட்ட மட்டும் தான் நா உணர்ந்திருக்கேன் மது.. நீ எப்பவும் என் கூடவே இருக்கனும்.. என்னை லவ் பன்னிக்கிட்டே என்னை குழந்தை மாதிரி பாத்துக்க நீ வேணும் டி.. அம்மாகிட்ட உணராத பாசத்தை நீ எனக்காக பதறும் போது உன்கிட்ட உணருரேன் டி..



உன்னை நா நிறைய லவ் பன்னனும்.. என் மொத்த லவ்வையும் உன்கிட்ட கொட்டனும்.. உனக்கு இதுவரைக்கும் கிடைக்காத சந்தோஷத்தை நா உனக்கு கொடுக்கனும்.. உன்னை நல்லா பாத்துப்பேன்.. அடி திட்டு எல்லாமே வாங்கிப்பேன்.. உனக்காக என்ன வேணாலும் பன்ன தயாரா இருக்கேன்.. உன் மித்துவ ஏத்துப்பியா மது.. ஐ லவ் யு பேபி.. ஐ லவ் யு அ லொட்.." என எல்லாருக்கும் மத்தியில் அவன் ப்ரோபோஸ் செய்ய மொத்த மாணவர்களும் 'ஹூஹூஹூ...' என கத்தி ஹர்ஷாவையே வெட்கப்பட வைத்து விட்டனர்.



இதைக் கேட்ட மித்ராவோ இவன் இப்பிடி திடீரென செய்வான் என எதிர்ப்பார்க்காதளாய் ஆடிப்போய் என்ன சொல்வதென தெரியாயல் திருதிருவென விழித்துக் கொண்டு நிற்க மித்ரா இருக்கும் இருக்கையை நோக்கி ஓடி வந்தவன் அவள் அருகில் சென்று ஒற்றை காலை மடக்கி ப்ரோபோஸ் செய்வது போல் அமர்ந்தவன்,
"ஐ லவ் யு மது.. வில் யு மேரி மீ.." என கையை நீட்டியவாறு கேட்க, சுற்றி இருந்தவர்களோ மதுவை சரி என சொல்ல சொல்லி அவள் காதருகில் கத்தி கூச்சலிட்டுக் கொண்டிருந்தனர்.



அவனோ அண்ணார்ந்து அவளையே பார்த்தவாறு இருக்க அவனை குனிந்து பார்த்தவளுக்கோ அவள் கண்களில் புரண்டோடும் அளவு கடந்த காதலில் திக்கு முக்காடி போனது... அவளுக்கு 'இல்லை' என்று சொல்லவே மனமில்லாது அவனுக்கு கட்டுப்பட்டவள் போல் அவன் கண்களையே பார்த்துக் கொண்டு தானாகவே 'சரி..' என தலையாட்டியவாறு அவன் கையுடன் தன் கைகளை கோர்க்க உச்சகட்ட சந்தோஷத்தில் எழுந்து நின்றவன் தன் நண்பனை பார்த்தான்.



அவனும் ஹர்ஷா ஏற்கனவே கொடுத்திருந்த செயினை அவன் கையில் கொடுக்க அவனும் மித்ராவின் கண்களையே பார்த்தவாறு அவள் கழுத்தில் அணிவித்துக் கொண்டே,
"இனி உனக்கு புடிச்சிருக்கோ இல்லையோ இந்த ஹர்ஷமித்ரனை விட்டு நீ எங்கேயும் போக முடியாது மதுமித்ரா.. நீ எனக்கு மட்டும் தான் சொந்தம் பேபி.." என்று தீர்க்கமாக கூறியவன் கண்களில் இனி ஒருபோதும் யாருக்காகவும் அவளை விட்டுக் கொடுக்க போவதில்லை என்ற தீவிரம் அப்பட்டமாகவே தெரிந்தது.



இதை உணர்ந்த மித்ராவுக்கு கூட அவன் காதலின் ஆழம் புரியத் தான் செய்தது. அவள் இரு கன்னங்களை தன் கைகளால் தாங்கியவன் அவள் எதிர்பாராத சமயம்,
"ஐ லவ் யு மது.." என்று கூறியவாறு அவளின் செவ்விதழை தன் வன்மையான இதழ்களால் சிறைபிடிக்க மித்ராவின் விழிகளோ தெரித்து விடும் என்பது போல் அதிர்ச்சியில் விரிந்துக் கொண்டது.



சுற்றி இருந்தவர்கள் கத்தி கூச்சலிட ஹர்ஷாவோ அவளின் இதழில் மூழ்கி விட மித்ராவோ நடந்ததை ஊகிக்கவே முடியாத நிலையில் இருந்தாள். அன்றைய நாள் மித்ராவை இழுத்துக் கொண்டு முழு சிட்டியையும் அவன் சுத்த ஹர்ஷாவுக்கு சந்தோஷமாக அந்த நாள் கழிந்தது என்றால் மித்ராவுக்கு தான் 'தான் எப்பிடி அவன் காதலையும் முத்தத்தையும் எந்த எதிர்ப்புமின்றி ஏற்றேன்' என்று குழப்பமே மிஞ்சியது.



அடுத்து வந்த நாட்கள் ஹர்ஷா மித்ராவை விட்டு விலகாது அவள் பின்னாடியே வால் போல் சுற்றிக் கொண்டு இருப்பதுமாக முழு நேர வேலையாக அதையே பார்த்துக் கொண்டிருக்க மித்ராவுக்கு ஒருபுறம் அவன் காதல் தந்த இதத்தை மனம் வேண்டினாலும் மறுபுறம் ஏற்க முடியாமல் தவித்து தான் போனாள்.



இவ்வாறு தன்னுள் மித்ராவை புதைத்து விட்டு ஹர்ஷாவின் மதுவாவே சிலசமயம் மாறுபவள் பார்க்குக் காதல் பார்வையில் அந்த காதலனும் தொலைந்து தான் போவான். அவள் அருகில் இருக்கும் போது தன்னிலை தொலைப்பவன் அவளை சிறு சிறு முத்தங்களால் மூழ்கடிக்க அவள் அவன் முத்தத்திற்கு இசைந்து கொடுக்காவிடினும் அவன் முத்தங்களை எந்த எதிர்ப்புமின்றி ஏற்றுக் கொள்வாள்.



இந்த ஒரு வருடத்தில் அவளை விட்டு சற்றும் பிரியாது அவளுக்கு வரும் ஆபத்தை கூட தூசு போல் தட்டிவிட்டு அவளுக்கு அரணாக ஹர்ஷா இருக்க அங்கு மித்ராவை கடத்த திட்டம் போட்டவர்களுக்கோ ஹர்ஷாவை மீறி எதுவுமே செய்ய முடியாத நிலை.



இவ்வாறு ஒரு வருடம் கழிந்து அவர்களுக்கான கடைசி பரீட்சையும் முடிய, மித்ராவின் படிப்பு முடிந்ததில் பல வருடங்கள் கழித்து சித்து அவளை இந்தியாவுக்கு அழைக்க ஹர்ஷாவின் காதலை விட்டு போக மனம் இடம் கொடுக்காது ஏதேதோ சாட்டு சொல்லி அவள் நிவ்யோர்க்கிலே இருந்தாள் என்றால் அவளை சாக்காக வைத்து அங்கேயே டேரா போட்டான் ஹர்ஷா.



அன்று,



தேவ் இவளை பார்க்க அமெரிக்கா வர மித்ரா இருந்த நிலையை பார்த்து அவன் இதயமே நின்று துடித்து விட்டது. அப்போது தான் அவன் வந்த நாள் எத்தகைய நாள் என்பது புரிய அவளை ஒருவாறு சமாளித்து மூன்று நாட்கள் மித்ராவுடன் இருந்து விட்டே இந்தியாவுக்கு திரும்பினான். இந்த மூன்று நாட்களில் ஒருவருடமாக ஹர்ஷாவின் காதலினால் உள்ளுள் புதைந்து இருந்த மொத்த காயங்களும் மீண்டும் மனதை ஆக்கிரமிக்க இறுகிய முகத்தோடு இருந்த மித்ராவுக்கு தான் இத்தனை நாட்கள் காதல் மயக்கத்தில் இருந்ததை நினைத்து தன் மேலே வெறுப்பு சூடிக் கொண்டது.



ஆத்திரம் அதிகரிக்க அறையிலிருந்த மொத்த பொருட்களையும் ஆக்ரோஷமாக உடைத்தவள்,
"எவ்வளவு தைரியம் இருந்தா உன்கிட்ட என்னை மயக்க பார்ப்ப டா.. அவன் புள்ள தானே டா நீ.. எப்பிடி டா.. எப்பிடி நா என்னை மறந்து நா பன்ன வேண்டியதை மறந்து முட்டாள்மாதிரி உன் மயக்கத்துல இருந்திருக்கேன்..ச்சே.." என பொருட்களை தூக்கி எறிந்து ஆவேசமாக கத்தினாள்.



"தப்பு பன்னிட்ட மித்து.. ஆரம்பத்துல உன் கூட பழகி எனக்கு தேவையானதை தெரிஞ்சிக்கிட்டா போதும்னு இருந்தேன்.. இந்த லவ் ட்ராமா இதை நா ஆரம்பிக்கல.. அவன் மகனா இருந்துகிட்டு என்னை உன்னை காதலிக்க வச்சி ரொம்ப பெரிய தப்பு பன்னிட்ட உன் அப்பா பன்னதுக்கு நா தண்டனை கொடுத்தே ஆகனும்.. இதுல நீ தவிக்க போறதை நினைச்சா தான் எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு மித்து.. ஐ அம் சோ சொரி பேபி.." என தான் அவன் பக்கம் சாய்ந்ததுக்கு அவனையே குற்றம் சாட்டியவள் தான் செய்ய போவதற்கு அவனிடமே மன்னிப்பு கேட்டுக் கொண்டு கண்கள் சிவக்க தலைமுடி கலைந்து பைத்தியம் போல் பிதற்றிக் கொண்டிருந்தவள் எண்ணிற்கு அழைப்பு வர அதில் மித்து என்று ஒளிர்ந்ததை பார்த்தவள் இதழ்களோ வன்மமாக முறுவலித்துக் கொண்டது.



அதை ஏற்று மித்ரா காதில் வைக்க ஹர்ஷாவோ,
"மது பேபி.. என்னை ரொம்ப மிஸ் பன்னியா டா.. நா ரொம்ப உன்ன மிஸ் பன்னேன் டா.. சோ சொரி டா.. முக்கியமான ப்ரோஜெக்ட் மா அதான் பேசவே முடியல.. உனக்கு தான் தெரியும்ல நா எங்க அப்பாவோட சொஃப்ட்வெயார் கம்பனிய இங்க இருந்துக்கிட்டே பார்த்துக்குறேன்னு.. எனக்கு உன்ன பார்க்கனும் போலவே இருக்கு டா.. மீட் பன்னலாமா.." என ஹர்ஷா கேட்க,



"என் அப்பா முதல்ல ஸ்டார்ட் பன்ன கம்பனியே எங்க சொஃப்ட்வெயார் கம்பனி தான் மது.. அது அவருக்கு ரொம்ப முக்கியம் அதுக்காக அவர் எவ்வளவு உழைச்சிருக்காரு தெரியுமா. அதனால தான் எங்க கம்பனி சென்னையிலே நம்பர் வன் ஆ இருக்கு.." என ஹர்ஷா இதற்கு முன் ஒருநாள் அவன் தந்தை பற்றி பேசியது மித்ராவுக்கு நினைவு வர அவள் மூளையில் திடீரென ஒரு மின்னல் வெட்டியது.



வெற்றிப்புன்னகையை சிந்தியவள்,
"மீட் பன்னலாம் மித்து.. அதுவும் உன் ஃப்ளேட்ல.." என கொஞ்சும் குரலில் சொல்ல மறுமுனையில் இருந்த ஹர்ஷாவுக்கோ தன் மதுவா இப்படி சொன்னது என நம்ப முடியாமல் "கம் அகைன்.." என ஆச்சரியமாக கேட்டு வைத்தான்.



"மீட் பன்னலாம் அதுவும் உன் வீட்டுலன்னு சொன்னேன்.. எப்போ வர மித்து.." என கேட்க ஹர்ஷாவுக்கோ அது சுத்தமாக சரியாக தோணவில்லை.



"இல்லை மது வேணாம்.. வெளில எங்கயாச்சும் போகலாம்.." என ஹர்ஷா அவள் கூறியதை மறுக்க,



அதில் எரிச்சலடைந்தவள்,
"நோ மித்து என் லேப்டொப்ல ஒரு சின்ன பிரச்சினை.. உன் லேப்ல தான் அதை பன்னனும்.. ஒரு முக்கியமான வேலை இருக்கு அதான்.. உன் வீட்ல வச்சி அதை பன்னிட்டு அப்பிடியே வெளில போகலாமே.. " என மித்ரா கேட்க,



"அது.. அது வந்து சரி மது.. உனக்கு எப்ப தோணுதோ அப்போ வீட்டுக்கு வா.." என சற்றும் உடன்பாடில்லாமலே கூறினான் ஹர்ஷா. அவனுக்கு தான் தெரியுமே அவனைப் பற்றி.. அவள் பக்கத்தில் இருந்தாலே தன்னை தொலைப்பவன் தனிமையில் இருந்தால் ஏடாகூடமாக ஏதாவது ஆகிவிடும் என்ற பயத்திலே அவன் மறுக்க மித்ராவோ தன் திட்டத்தை நிறைவேற்ற அந்த சந்தர்ப்பத்தையே எதிர்ப்பார்த்தாள்.



"ஓகே மித்து இன்னும் த்ரீ டேய்ஸ்ல வீட்டுக்கு வரேன்.. ஐ லவ் யு பேபி.. " என்று கூறியவாறு அழைப்பை துண்டித்தவள் தனக்கு தெரிந்த ஒருவர் மூலமாக இந்தியாவுக்கு இன்னும் மூன்று நாட்களில் செல்வதற்கு ஏற்பாடுகளை செய்து விட்டு ஒரு எண்ணிற்கு அழைத்து தனக்கு தேவையானதை சொல்லி,
"இன்னும் இரண்டே நாள்ல நா சொன்னது என் கைக்கு வந்தாகனும்.." என்று சொல்லிவிட்டு அழைப்பு துண்டித்தவளுக்கு ஒரு புறம் கோபம் கொழுந்து விட்டு எரிந்தாலும் மறு புறம் ஒருவித தவிப்பு இருக்கத் தான் செய்தது.



தொடரும்..?
--------------------------------------------------------------



Thank u so much for ur love and support guys..??
Keep motivating me with ur comments..❤



-ZAKI?
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top