• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

தீண்டாதே 12?

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Shehazaki

அமைச்சர்
SM Exclusive
Joined
Aug 26, 2020
Messages
1,480
Reaction score
3,823
Age
24
Location
Srilanka
created_image_1599733471310.png

(1)

மூன்று நாட்கள் கழித்து,

காலை,

கோலிங் பெல் சத்தத்தில் லேப்டொப்பில் வேலை செய்துக் கொண்டிருந்த ஹர்ஷா எழுந்து சென்று சோம்பலை முறுக்கியவாறு கதவை திறக்க எதிரே நின்றிருந்தவளை பார்த்து இதழ்கள் தானாகவே மென்னகை புரிந்தது ஹர்ஷாவுக்கு..



"மது பேபி.." எனக் கூறியவாறு அவளை இறுக்கி அணைத்தவன் "ஐ லவ் யு டி.. ரொம்ப மிஸ் பன்னேன்.." என்று புலம்ப மித்ராவுக்கு தான் அவன் இறுகிய அணைப்பில் இடுப்பு எலும்பே முறிந்து விடும் போல் இருந்தது. அவன் அணைப்பில் திணறி மெதுவாக அவனிடமிருந்து விலக முயற்சித்தவாறு,
"உள்ள கூப்பிட மாட்டியா மித்து.." என சிரிப்புடன் கேட்க,



"அச்சோ உள்ள வா பேபி.. என்ட், பெரியவங்க சொல்வாங்க புருஷன் வீட்டுக்குள்ள வரும் போது வலது காலை எடுத்து வைச்சு வரனும்னு.. நீயும் அப்பிடியே வா மது.." என்று ஹர்ஷா ஆர்வமாக சொல்ல,



'க்கும்.. ரொம்ப முக்கியம்..' என மனதில் அவனை வறுத்தெடுத்தவள் வெளியே,
"ஹிஹிஹி சரி மித்து..." என இழித்தவாறு அவனுடன் வலது காலை எடுத்து வைத்தே உள்ளே சென்றாள் மித்ரா.



மித்ரா வீட்டை சுற்றி பார்த்தவாறு சோஃபாவில் அமர அவள் அருகில் அமர்ந்தவன் பக்கவாட்டாக திரும்பி அவளையே கண் இமைக்காது பார்த்துக் கொண்டிருந்தான். ரோயல் ப்ளூ டீஷர்ட், ப்ளூ ஜீன்ஸ் சகிதம் இருந்தவள் எப்போதும் போல தலைமுடியை ஒருபுறம் விரித்து போட்டு தன் ஃபோனை மும்முரமாக நோண்டிக் கொண்டிருக்க ஏதோ ஒரு உணர்வில் திடீரென ஹர்ஷாவின் புறம் திரும்பியவள் அவன் பார்வையை பார்த்து கொஞ்சம் பதட்டமாகத் தான் செய்தாள்.



'என்ன இவன் இப்பிடி நம்மள வெறிக்க வெறிக்க பார்த்துகிட்டு இருக்கான்.. வேலை முடியுற வரைக்கும் இவன்கிட்ட கொஞ்சம் அலெர்ட்டாவே இரு மித்ரா..' என தனக்குத் தானே கூறிக் கொண்ட மித்ரா,
"மித்து உன் லேப் அ கொஞ்சம் கொடுக்குறியா.." என்று கேட்க அவனோ தன் லேப்டாப்பை எடுத்து அவளிடம் நீட்ட அவளோ அவன் பார்ப்பதை உணர்ந்தே அவன் புறம் பார்வையை திருப்பாது வேலை செய்வது போல் பாவனை செய்துக் கொண்டிருந்தாள்.



ஹர்ஷாவோ வழக்கம் போல முட்டியில் கையை ஊன்றி கன்னத்தில் கை வைத்து ரசித்துக் கொண்டிருக்க அவனை இங்கிருந்து விரட்ட என அவன் புறம் திரும்பாமலே திரையில் பார்வையை பதித்தவாறு,
"மித்து வீட்டுக்கு வந்தவங்களுக்கு சாப்பிட எதுவும் கொடுக்க மாட்டியா.." என கேட்க,



"ஹோ கோட்.. டூ மினிட்ஸ் மது.. எப்படியும் ப்ரேக்ஃபாஸ்ட் சாப்பிட்டிருக்க மாட்ட கொஞ்சம் வெயிட் பன்னு தோசை பன்னி தரேன்.." என கூறியவாறு அவன் எழுந்து சமையலறைக்குள் செல்ல அவன் கிட்ச்சனிள் நுழைவதை கவனித்தவள் அவன் சென்று மறைந்த அடுத்த நொடி அவன் லேப்டொப்பை அலச ஆரம்பித்து விட்டாள்..

அதில் ஒரு ஃபோல்டரை திறக்க அதில் பாஸ்வார்ட் போடப்பட்டிருப்பதை பார்த்தவள்,
"இதுக்குள்ள என்ன இருக்கும்.. ஒருவேள இவன் கம்பனி பத்தின சீக்ரெட் டீடெய்ல்ல் எல்லாம் இதுக்குள்ள தான் வச்சிருப்பானோ.. இருக்கலாம் இருக்கலாம்.. பட் பாஸ்வார்ட் போட்டிருக்கானே.. என்னவா இருக்கும்.." என அவள் சில நொடிகள் கூட யோசிக்கவில்லை அடுத்த நொடியே,
"அப்பிடி என்ன பெருசா பாஸ்வார்ட் வைச்சிருக்க போறான்.." என ஏளனமாக சிரித்தவாறு 'மதுமித்து' என அவள் டைப் செய்ய அந்த ஃபோல்டர் திறந்தது.



"ஹோ பேபி.. உனக்கு உன் மது பேபி மேல எம்புட்டு லவ்வு. அச்சோ.. அச்சோ.." என வெளியில் ஏளனமாக சிரித்துக் கொண்டாலும் உள்ளுக்குள் ஏதோ அவன் காதலை நினைத்து கர்வமாக தான் இருந்தது மித்ராவுக்கு.



தன் நினைப்பை விட்டவாறு அவள் பார்க்க அதில் அவர்கள் கம்பனியின் சில ப்ரோஜெக்ட் பற்றிய தகவல்களிலிருந்து அவர்கள் கம்பனி பற்றிய பல தகவல்கள் அதில் இருந்தது. அதைப் பார்த்தவள் இதழ்களோ வெற்றிப் புன்னகை சூடிக் கொள்ள அதே நேரம் ஹர்ஷாவும் கிட்ச்சனிலிருந்து,



"பேபி இங்க கொஞ்சம் வா.." என்று அழைக்க,



அதில் எரிச்சலடைந்தவள், 'இவன் ஒருத்தன் நேரம் காலம் தெரியாம..' என மனதில் புலம்பியவாறு கிட்ச்சனுக்கு சென்று அவன் சமைக்கும் விதத்தை ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருக்க,



"பேபி நீ அதிக காரம் சாப்பிடுவல்ல.. சட்னி ரொம்ப ஸ்பைஸியா தான் பன்னியிருக்கேன்.." என ஹர்ஷா சொல்ல,



பூம்பூம் மாடு போல் எல்லா பக்கமும் தலையாட்டியவள்,
"உனக்கு இதெல்லாம் பன்ன தெரியுமா மித்து.." என ஆச்சரியமாக அவன் செய்வதையே பார்த்தவாறு மித்ரா கேட்க,



"எனக்கு வெளில சாப்பிடுறது ஒத்துக்காது பேபி.. அதான் சில டிஷெஷ் மட்டும் வீட்லயே சமைக்க கத்துக்கிட்டேன்..." என சொன்ன ஹர்ஷா பின் அவனே தொடர்ந்து,
"பட் நா ரொம்ப பாவம் மது.." என பாவம் போல் சொன்னவனை கேள்வியாக பார்த்தாள் மித்ரா.



"என் பொண்டாட்டிக்கு தான் சுத்தமா சமைக்க தெரியாதே.." என்று ஹர்ஷா நமட்டு சிரிப்புடன் கேலியாக சொல்ல,
"அதெல்லாம் சீக்கிரம் கத்துக்குவாங்க மித்து.." என சாதாரணமாக சொன்னவளுக்கு அவன் தன்னை தான் சொல்கிறான் என சுத்தமாக தெரியவில்லை.



சட்டென செய்த வேலையை நிறுத்தி அவளை திரும்பி புருவம் சுருக்கி பார்த்தவன்,
"பேபி நா உன்னை தான் சொல்றேன்.." என சிரித்தவாறு சொல்ல,



'எது நானா.. அய்யோ மித்ரா சொதப்புறியே டி.. சரி சமாளி..' என நினைத்தவாறு,
"மித்து நானும் என்னை தான் சொன்னேன்.. பட் டங்க் ஸ்லிப் ஆகி கத்துக்குவேன்னு சொல்றதுக்கு பதிலா கத்துக்குவாங்கன்னு சொல்லிப்புட்டேன் ஹிஹிஹி.." என இழித்து சமாளிக்க,



எட்டி அவள் சிரிக்கும் போது தெரிந்த கன்னக்குழியில் தன் விரல் வைத்து அழுத்தியவன்,
"ரொம்ப அழகா இருக்க டி சிரிக்கும் போது.. என்னால என்னையே கன்ட்ரோல் பன்ன முடியல.." என கூறியவாறு தன் வேலையை ஹர்ஷா தொடர ஏனோ மித்ராவுக்கு தான் கன்னங்கள் சிவந்து ஒரே வெட்கமாகி போனது.



அடுத்த ஐந்து நிமிடத்தில் இருவருக்கும் சேர்த்து தோசை சுட்டிருந்தவன் உணவுத் தட்டில் வைத்து டைனிங் டேபிளில் அமர்ந்திருந்த மித்ராவின் அருகில் அமர்ந்து அவனே தோசையை பிய்த்து சட்னியில் தொட்டு உட்டி விட போக, அவளுக்கோ அவளையும் மீறி கண்கள் கரித்துக் கொண்டு வந்தது.



கண்ணீரை உள்ளிழுத்துக் கொண்டு தன்னை கட்டுப்படுத்தியவள்,
"அது.. அதெல்லால் வே.. வேணாம் மித்து.. நானே சாப்பிடுறேன்.." என மறுக்க,



"நீ என் குழந்தை மாதிரி டி செல்லக்குட்டி.. எனக்கு ஊட்டனும்னு ஆசையா இருக்கு.. ப்ளீஸ் வேணாம்னு சொல்லாத.." என கண்களால் கெஞ்சியவாறு அவள் வாயருகே சாப்பாட்டை கொண்டு செல்ல மறுக்க முடியாது அவன் ஊட்டி விட்டதை வாங்கி கொண்டவளுக்கு தன் முன்னே தன் அம்மா அப்பாவே இருப்பது போல் இருந்தது.



தனக்கு அம்மா அப்பாவின் பாசத்தை இத்தனை வருடங்கள் கழித்து காட்டுபவனுக்கு தான் துரோகம் செய்கிறோமே என்று அவள் மனதில் யோசித்துக் கொண்டிருக்க அதே நேரம் ஹர்ஷாவும்,
"மது எனக்கும் ஊட்டி விடு டி.. என்னோட அம்மாவும் நீ தானே.." என சொன்னவனை பார்த்தவளுக்கு தன்னையும் மீறி கண்களில் ஒரு சொட்டு கண்ணீர் வெளியே வந்து விட்டது.



மனதிற்குள்ளேயே மித்ராவுக்கும் மதுவுக்குமிடையே காதல் , பழி வெறி எனும் உணர்வுகளை வைத்து யுத்தமே நடைந்துக் கொண்டிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். முடிந்த மட்டும் தன் நோக்கத்தை நிறைவேற்ற மதுவை தனக்குள்ளே புதைத்து கொண்டவள் மித்ராவாக அவனுக்கு ஊட்டி விட ஹர்ஷாவுக்கோ பல வருடங்கள் கழித்து ஊட்டி விட்டு சாப்பிடுதில் ஒரே குஷி தான்.



இவ்வாறு இருவரும் ஒருவருக்கொருவர் ஊட்டி விட்டே சாப்பிட்டு முடிக்க சோஃபாவில் ஃபோனை நோண்டியவாறு இருந்தவளின் அருகில் அமர்ந்தவன் தனிமையில் அவளை பார்க்க பார்க்க அவள் அருகாமையில் தன்னுள் எழும் உணர்ச்சிகளை அடக்க பெரும்பாடுபட்டு தான் போனான்.



'அய்யோ இதுக்கு தான் வேணாம்னு சொன்னேன்.. என்னை படுத்துறாளே..' என மானசீகமாக புலம்பியவன் தன் எண்ணம் போகும் போக்கை உணர்ந்து தன்னை கட்டுப்படுத்தியவாறு,
"லேப்ல ஏதோ வேலை பார்க்கனும்னு சொன்னியே.. முடிச்சிட்டியா மது.. வெளில போலாமா.." என கேட்க,



"யாஹ் ஐ அம் டன் பேபி.. பட் வீட்லயே இருக்கலாமே.." என கொஞ்சும் குரலில் மித்ரா கேட்க, அவனுக்கு தான் 'அய்யோ.. அய்யோ..' என்று எங்கேயாவது முட்டிக் கொள்ளலாம் போல் இருந்தது.



'நம்ம ஃபீலிங்க்ஸ்ஸ புரிஞ்சிக்காம கண்ணு முன்னாடி இப்பிடி செதுக்கி வைச்ச தங்க சிலையாட்டம் இருக்காளே..' என மனதில் நினைத்தவன் இதற்கு மேல் முடியாது என அவளை நெருங்கி அமர்ந்து,
"மது பேபி.." என்று ஒரு மார்கமான குரலில் அழைக்க,



"ம்ம்.." என்று சொன்னவள் சற்றும் அவன் புறம் பார்வையை திருப்பவில்லை. அவள் பார்வை ஃபோன் திரையில் இருந்தாலும் அவள் சிந்தனை மொத்தமும் எப்பிடி அவனுக்கு தெரியாமல் வேலையை முடிப்பது என்பதிலே இருந்தது. ஆனால் நம் நாயகனோ இத்தருணத்தை ரொமேன்டிக் சீனாக மாற்ற அல்லவா முயற்சி செய்துக் கொண்டிருக்கிறான்.



அவள் திரும்பாமல் இருந்ததில் உதட்டை பிதுக்கியவன் அவள் தாடையை பிடித்து தன் புறம் திருப்பி அவள் கண்களோடு தன் கண்களை கலக்க விட மித்ராவோ புரியாமல் அவனை மேலும் உசுப்பேத்தும் விதமாக புருவத்தை உயர்த்தி கண்களாலே 'என்ன' என்று கேட்டாள்.



அதில் இன்னும் தன்னை தொலைத்தவன் அவள் இதழை வருடி தன் இதழை அவள் இதழ் நோக்கி கொண்டு சென்றவாறு அவளை நெருங்க,
'அடி ஆத்தீதீதீ...' என விழிவிரித்தவள் சட்டென தன் தலையை குனிந்துக் கொண்டாள்.
 




Shehazaki

அமைச்சர்
SM Exclusive
Joined
Aug 26, 2020
Messages
1,480
Reaction score
3,823
Age
24
Location
Srilanka
(2)

அவளின் செய்கையில் அது வெட்கம் என்று நினைத்தவன் மெல்லியதாக புன்னகைத்தவாறு அவள் முகத்தை தன் முகம் நோக்கி நிமிர்த்தி,
"ப்ளீஸ் மது.. ஒன்னே ஒன்னு.." என கிறக்கமான குரலில் கேட்க,



அவனை மிரட்சியுடன் பார்த்தவாறு எச்சிலை விழுங்கிக் கொண்டவள், மனதிலோ,
'அய்யோ. இவனுக்கு மொதல்லயே நாம கொண்டு வந்ததை கலந்து கொடுத்திருக்கனும்.. குசும்பு புடிச்சவன்..'
என்று நினைத்தவாறே,
"மித்.. மித்து நா வேணா உனக்கு ஜூஸ் போட்டு எடுத்துட்டு வரட்டா.." என்று எஸ்கேப் ஆக எண்ணி மித்ரா திக்கித்திணறி கேட்க,



"இப்போ தானே மது சாப்பிட்டிருக்கோம்.. என்ட், அப்பிடியே எனக்கு ஜூஸ் வேணும்னாலும் அது தான் என் மதுக்கிட்ட இருக்கே.." என ஹர்ஷா அவள் இதழ்களை பார்த்தவாறே கூற,



'இவன் அடங்க மாட்டான் போலயே..' என மனதில் பொறுமியவள்,
"நோ மித்து எனக்கு இப்போ ஜூஸ் குடிச்சே ஆகனும்.. நீ இங்கேயே இரு.. ஒரு ஃபைவ் மினிட்ஸ்ல கொண்டு வரேன்.." என அவனிடமிருந்து கஷ்டப்பட்டு விலகியவள் கிட்ச்சனுக்குள் ஓடி சென்று 'ஹப்பாடா.. இவன் அலப்பறை தாங்க முடியல ஆண்டவா..' என வாய்விட்டே புலம்பியவாறு அவன் வருகிறானா என கிட்ச்சன் வாயிலில் பார்த்தவள் ஜூஸை தயார் செய்து தன் ஜீன்ஸ் பாக்கெட்டிலிருந்த மயக்க மருந்தை அவன் ஜூஸில் கலந்தாள்.



மயக்க மருந்து கலந்திருந்த ஜூஸ் க்ளாசை அவனிடம் கொடுத்தவள் அவன் குடித்து முடிக்கும் வரை ஓரக் கண்ணால் பார்த்தவாறே இருக்க, அவன் முழுவதும் குடித்து விட்டு,
"சூப்பரா இருக்கு மது.." என்று கூறியவாறு க்ளாசை டீபாயில் வைத்து விட்டு அவளை மையலுடன் நோக்க, மித்ரா தான் 'அய்யோ ஈஸ்வரா என்னை காப்பாத்து..' என கடவுளையே வணங்கிராதவள் ஹர்ஷாவிடமிருந்து தப்பிக்க முதன் முதலில் மனதில் வேண்டுதல் வைத்தாள்.



ஹர்ஷாவோ குறும்புப் புன்னகையுடன் அவளை மெல்ல மெல்ல நெருங்க, அவனை விழிவிரித்து பார்த்தவாறே சோஃபாவிலிருந்து எழுந்தவள்,
"மித்து இது.. இதெல்லாம் வேணாமே.." என திக்கித்திணறி சொல்லியவாறு பின்னோக்கி நடக்க அவனோ அதை எல்லாம் காதில் கூட வாங்கவில்லை.



அடுத்த இரு நொடியில் அவளை நோக்கி வந்தவனுக்கு தலை சுற்ற அவனில் மாற்றத்தை பார்த்தவளோ பின்னோக்கி நகர்ந்து தான் எதிர்ப்பார்த்தது போல் நடப்பதில் கைகளை மார்புக்கு குறுக்கே கட்டிக் கொண்டு குறும்புப் புன்னகையுடன் சுவற்றில் முட்டி சாய்ந்தவாறு நின்றுக் கொண்டிருந்தாள் மித்ரா.



அவன் கால்கள் தானாகவே தடுமாற தலையை சிலிப்பி விட்டவாறு அவளை நெருங்கியவன் தன்னை சிரிப்புடன் அசால்ட்டாக பார்த்துக் கொண்டிருந்தவளின் தாடையை இறுகப் பற்றி,
"என்னை மயக்குற மோகினி டி நீ.." என்று கூறியவாறு அவள் இதழை நெருங்க கண்கள் சொருகி அவள் மேலே சரிந்து விட்டான் ஹர்ஷா.



அவனை தாங்கிக் கொண்டவள் அந்த முரட்டு ஆண்மகனின் பாரம் தாங்காது கஷ்டப்பட்டு தாங்கி சென்று அவனை பக்கத்திலிருந்த சோஃபாவில் படுக்க வைத்தவள் சிறிது நேரம் அவனையே கண்வெட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.



அடுத்த நொடி தாமதிக்காமல் ஹர்ஷாவின் ஃபோனையும், லேப்டொப்பையும் எடுத்தவள் தன் திட்டத்தை செயல்படுத்த ஆயத்தமானாள். அவனது லேப்டாப்பிலிருந்து தனது பென்ட்ரைவிற்கு ஹர்ஷாவின் கம்பனி தொடர்பாக மொத்த தகவல்களையும் மாற்றம் செய்து எடுத்தவள் ஹர்ஷாவின் லெப்டாப்பின் பின்புற பார்ட்டை கழட்டி அதில் தான் கொண்டு வந்திருந்த ஹேக்கிங் ச்சிப்பை பொருத்தி ஹர்ஷாவின் தொலைப்பேசியின் மொத்த கட்டுப்பாடையும் தன் தொலைப்பேசியின் கட்டுப்பாடிற்கு கொண்டு வந்திருந்தவள் இதழ்கள் வெற்றிப் புன்னகை புரிந்தது.



தான் வந்த வேலை முடிந்ததில் ஹர்ஷாவுக்கு எதிரே வந்தவள் முகத்தில் எந்த சலனமுமின்றி மயக்க நிலையில் இருந்தவனை பார்த்து,
"ஐ அம் சோரி பேபி.. எனக்கு தேவையான எல்லாமே நீயே காட்டி கொடுத்துட்ட.. உன் அப்பாவுக்கு அவன் தொழில்னா ரொம்ப உயிர்ல.. முதல் அடியா அதுல என் விளையாட்ட ஆரம்பிக்குறேன்.. அதுக்கப்றம் உன் பாசமான தந்தையை துடிக்க வைச்சு கொல்றேன் டா.. அவன மட்டும் இல்ல அந்த மினிஸ்டர் என்ட் அந்த திலகன் எல்லாருமே பன்ன தப்புக்கு தண்டனையை அனுபவிக்க போறாங்க.. ஆனா என்ன, இதுல ஒரு சின்ன எலியாட்டம் என் பொறில நீ மாட்டிக்கிட்ட பட் பரவாயில்லை ஆனா ஊனா கிஸ் பன்னி கடுப்பேத்தினல்ல அனுபவி.. அவன் மகனா பொறந்திட்டு நீயும் சந்தோஷத்தை அனுபவிக்க கூடாதே பேபி.. பாய்ய் மித்து ஐ வில் மிஸ் யு.. பட் சீக்கிரம் உன்னை சந்திக்கிறேன்.." என கொஞ்சலாக கூறிய மித்ரா தன் பேக்கை தோளில் மாட்டியவாறு கதவு வரை செல்ல அவள் மனதோ ஏதோ நெருடலாகவே இருந்தது.



ஏனோ அவள் கால்கள் செல்ல மறுக்க இத்தனை நேரம் மித்ராவாக இருந்தவளிடமிருந்து அவன் மது உடைப்பெடுத்து வெளியில் வர மித்ராவுக்கு தன் மேலேயே கோபம் ஏகத்துக்கும் எகிறியது. ஹர்ஷாவை திரும்பி பார்த்தவளுக்கு இதற்குமேல் முடியாமல் போக அவனருகில் ஓடியவள் முட்டி போட்டு அமர்ந்து அவன் தலையை கோதி அவன் நெற்றியில் அழுத்தமாக முத்தமிட்டாள் அவனின் மதுவாக..



தான் ஏன் இவ்வாறு மதில் மேல் பூனை போல் தவிக்கிறேன் என்று அவளுக்கும் தெரியவில்லை. அவன் முகத்தை நெருங்கி சிறிது நேரம் விழி அகலாது பார்த்தவள் கண்களை இறுக மூடிக் கொண்டு ஒருபெருமூச்சு விட்டவாறு தன்னை நிலைப்படுத்தி இறுகிய முகத்துடன் அங்கிருந்து விறுவிறுவென வெளியேறினாள்.



அந்த நாள் நிவ்யோர்க் நேரம் படி பகல் மித்ரா இந்தியா சென்றிருக்க நடந்தது அனைத்தையும் நினைத்து பார்த்தவளுக்கு கண்கள் கலங்கி இருக்க கஷ்டப்பட்டு கண்ணீரை உள்ளிழுத்துக் கொண்டு ஹர்ஷா காதலை சொல்லும் போது அணிந்திருந்த செயினை வருடியவாறு சிறிது நேரம் இருந்தவள் எப்போதும் போல் தூக்க மாத்திரையை போட்டு தனக்கு நேராக இருந்த தன் தாய் தந்தை தான் பிறந்தவுடன் தன்னை கையில் ஏந்தியவாறு தன் கன்னத்தில் முத்தமிடுவது போல் இருந்த ஆளுயர புகைப்படத்தை பார்த்தவாறே உறங்கிப் போனாள்.



ஆனால் இங்கு பால்கெனியில் பேன்ட்பாக்கெட்டுக்குள் கையை விட்டவாறு நிலாவை வெறித்துக் கொண்டிருந்த ஹர்ஷாவுக்கோ அவன் மதுவை நினைத்து கண்களில் கண்ணீரே வந்து விட்டது. அங்கு இந்திய மணி நேரம் படி காலை மித்ரா இந்தியாவை அடைந்திருக்க இது எதுவும் அறியாத ஹர்ஷா நிவ்யோர்க் நேரம் படி அவள் இந்தியாவுக்கு பறந்துக் கொண்டிருந்த சமயமே மயக்கத்திலிருந்து விழித்திருந்தான். தலை பயங்கரமாக வலிக்க என்ன நடந்ததென்று கூட அவனால் உணர முடியவில்லை.



தன் முன் டீபாயில் க்ளாசுக்கு கீழ் காற்றுக்கு அங்கும் இங்கும் பறந்துக் கொண்டு இருந்த பேப்பர் தெரிய அதை எடுத்தவன் அதில் 'குட் பை மித்து..' என எழுதியிருப்பதை பார்த்து விரலால் நெற்றியை நீவி விட்டவன்,
"என்னாச்சு எனக்கு.. ஏன் தலை பயங்கரமா வலிக்குது.. மது.. மது எங்க போனா... " என தனக்குத் தானே பேசிக் கொண்டு "மது.. மது.." என்று அழைக்க அவனை சுற்றி குண்டூசி விழுந்தால் கூட சத்தம் வரும் அளவிற்கு அவ்வளவு அமைதியாக இருந்தது.



எழுந்து தன் முன் சுவற்றில் இருந்த மணிக்கூட்டில் அவன் நேரத்தை பார்த்தவன் கண்களோ அதிர்ச்சியில் விரிந்து கொண்டது. மித்ரா காலை எட்டு மணிக்கே வந்திருக்க ஆனால் இப்போது நேரம் எட்டு என்று காட்டுவதில் குழம்பிய அவனுக்கு ஏதோ தன்னை சுற்றி தவறாக நடக்கிறது என்பது தெளிவாக புரிந்தது.



அப்பிடியே சோஃபாவில் தொப்பென அமர்ந்து,
"என்ன நடக்குது இங்க.. நா எப்போ தூங்கினேன் என் கூட மதுவும் இருந்தாளே.. அவ இருக்கும் போது நா தூங்கினதா எனக்கு நியாபகமே இல்லையே.. காலைல தூங்கி ராத்திரி எழுந்திருக்கோம் பேசாம மதுகிட்டயே கேட்டுறலாம்.. " என இடது கையால் தலைமுடியை பிடித்தவாறு வலது கையால் மித்ராவின் எண்ணிற்கு அழைக்க அந்த எண்ணை அடைய முடிந்தால் தானே..



உடனே தன்னை சுத்தப்படுத்தி உடை மாற்றிக் கொண்டு மித்ராவின் தங்கியிருக்கும் அபார்ட்மென்ட்டை நொக்கி சென்றான். அங்கு அவள் தங்கியிருந்த ஃப்ளேட் பூட்டப்பட்டிருக்க உள்ளே யாரும் இருப்பதற்கான அடையாளமும் இல்லை. ஹர்ஷா கதவின் முன் கலக்கமான முகத்துடன் நின்றிருக்க அச்சயம் மித்ரா தங்கியிருந்த ஃப்ளேட்டின் எதிர் ஃப்ளேட்டில் தங்கியிருந்த பெரியவர் வெளியில் வர ஹர்ஷாவை கண்டவர்,
"யாருப்பா நீ.. இங்க இருந்த பொண்ணு உனக்கு ரொம்ப வேண்டப்பட்டளா.. மதியம் தான் அந்த பொண்ணு வீட்டை பூட்டிட்டு லக்கேஜ்ஜோடு போறதை பார்த்தேன்.." என்று சொல்ல ஹர்ஷாவுக்கோ ஒன்றுமே புரியவில்லை.



"தேங்க்ஸ்.." என்று மட்டும் கூறியவன் தன் காரில் அமர்ந்து கண்ணை மூட்டி சீட்டில் சாய்ந்தவாறு, "மது எங்க டி போன.." என்று புலம்பியவனுக்கு தானே தெரியும் அவள் அவனை விலகி சென்ற இந்த கொஞ்ச நேரத்திலே அவன் துடித்த துடிப்பு.



அப்போதே தனக்கு தெரிந்த நண்பன் ஒருவனிடம் விஷயத்தை கூறியவன் அவனின் பதில் அழைப்புக்காக காத்திருக்க என்ன நடந்தது ஏன் மது சொல்லாமல் கொல்லாமல் விட்டுச் சென்றாள் என்று யோசனையே அவனை பைத்தியம் பிடிக்க வைத்தது. ஒரு கட்டத்திற்கு மேல் அவனின் மதுவின் நினைவு அவனை வாட்ட மூக்கு முட்ட குடித்து கொண்டு மதுவின் புகைப்படத்தை பார்த்தவாறே புலம்பிக் கொண்டிருந்தவனுக்கு சரியாக அவன் நண்பனிடமிருந்து மித்ரா மதியம் இந்தியா சென்றது தெரிய வர இத்தனை நாள் தன் அப்பா அழைத்தும் மித்ராவை விட்டு போக மனமில்லாது இருந்தவன் தன்னவளை தேடி தன்னவளுக்காகவே இந்தியா வந்து சேர்ந்தான்.



ஆனால் இதில் அவனே எதிர்ப்பார்க்காத ஒன்று அவன் மதுவே அவனுக்கு எதிரியாக அவனுக்கு எதிரே அவனை எதிர்த்து நிற்பாள் என்று.. அதுவும் தன் அப்பாவை பழிவாங்க அவள் காதலித்ததாக கூறியதில் மொத்தமாக குழம்பிப் போனான் என்று சொல்வதை விட தன்னவள் தன் காதலை ஏமாற்றி விட்டாள் தன் நம்பிக்கையிலே விளையாடிவிட்டாள் என்று நினைக்கையில் மொத்தமாக நொறுங்கிப் போனான் ஹர்ஷா.



நிலாவையே வெறித்தவாறு,
"உனக்கு என்னாச்சு டி.. என் மது எங்க டி.. நீ என் மது இல்லை.. நீ அவ இல்லை.. எனக்கு என் மது வேணும்.." என மானசீகமாக புலம்பிய அந்த ஆண்மகனின் கன்னங்களிலும் நிற்காது ஓடுகின்றது கண்ணீர் கோடுகள்..



தொடரும்..?
---------------------------------------------------------------



Thank u so much for ur love and support friends..??
Don't forget to comments ?



-ZAKI?
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top