• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

தீண்டாதே 14?

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Shehazaki

அமைச்சர்
SM Exclusive
Joined
Aug 26, 2020
Messages
1,480
Reaction score
3,823
Age
24
Location
Srilanka
created_image_1599733471310.png

மியூசிக் கொலேஜில்,

மதியம் உணவு இடைவேளையின் போது தியா, அனா, அனிருத் கேன்டீனில் ஒரு டேபிளில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தனர். இப்போதெல்லாம் அனிருத் தியாவை அப்பட்டமாக சைட் அடித்தாலும் அதை அவளோ கண்டும் காணாதது போல் இருக்க அனா தான் அனிருத்தின் அப்பட்டமான வழிசலில் தலையிலே வெளிப்படையாக அடித்து கொள்வாள்.

சாப்பிட்டு முடித்த தியா,
"வெயிட் வோஷ்ரூம் போயிட்டு வரேன்.. " என்று சொல்லி விட்டு செல்ல அந்த வழியாக சென்றுக் கொண்டிருந்தவனை ஒரு வலிய கரம் அங்கிருந்த ஒரு அறைக்குள் இழுத்துக் கொண்டதில் அந்த திடீர் செய்கையில் மிரட்சியுடன் எதிரில் இருப்பவனை பார்த்தாள் தியா.

அவனோ அவள் முழங்கையை இறுக்கமாக பிடித்த வண்ணண் அவளை நெருங்கி நிற்க அவன் கையிலிருந்து தன் கையை விடுவிக்க முயற்சித்தவாறே,
"என்ன பன்ற கார்த்தி என்னை விடு.. ஏன் இப்பிடி பிஹேவ் பன்ற.." என்று கத்த அவள் கத்தலை எல்லாம் அவன் பொருட்டாகவே எடுக்கவில்லை.

"என்ன டி நினைச்சிகிட்டு இருக்க.. நானும் எவ்வளவு நாள் தான் உன் பின்னாடியே சுத்திகிட்டு இருக்க.. இப்போ சொல்லு டி.." என அவன் அவள் கையை மேலும் அழுத்தியவாறு சீற,

அவளுக்கு அவன் பிடித்திருந்த பிடியில் அழுகையே வந்துவிட்டது.
"ப்ளீஸ் என்னை விடு.. எனக்கு தான் அப்போவே பிடிக்கலைன்னு சொல்லிட்டேனே.. விடு என்னை.." தியா கண்கலங்க சொல்ல அவனுக்கோ அவள் பதிலில் கோபம் ஏகத்துக்கும் எகிறியது.

அவளை தன் பக்கம் இழுத்து நெருங்கி நிற்க வைத்தவன்,
"ஏய் என்ன டி.. நீ இப்பிடி சொன்னா உன்ன விட்டுறுவேனா.. உன்ன எப்பிடி எனக்கு சொந்தமாக்கனும்னு எனக்கு தெரியும் டி.." என சொன்னவன் அவள் இதழ் நோக்கி குனிய அவளுக்கோ அவன் பிடியிலிருந்து விலக கூட முடியவில்லை.

அவனை கண்கலங்க கண்ணீரோடு பார்த்தவாறு, "ப்ளீஸ் என்னை விடு.." என அவள் கத்த, அவனோ தியாவை இன்று முத்தம் கொடுத்தே ஆக வேண்டும் என்ற ரீதியில் அவளை நெருங்க தியாவோ முகத்தை திருப்பிக் கொண்டு,
"ஹெல்ப் ப்ளீஸ்.. அனா.." என்று கத்த அவள் தாடையை இறுகப் பற்றி தன்னை நோக்கி நிமிர்த்தி அவளை முத்தமிட சென்ற அடுத்த நிமிடமே தரையில் சுருண்டு விழுந்து கிடந்தான் கார்த்தி.

தியாவோ விழுந்து கிடந்த கார்த்திக்கை ஒரு பார்வை பார்த்து விட்டு திரும்ப சரியாக அதே நேரம் அனிருத்தோ கோபத்தின் உச்சியில் அவளை தாண்டி மின்னல் வேகத்தில் சென்று அவனை வெளு வெளு என வெளுத்துக் கொண்டிருந்தான்.

"அப்பிடி தான் டா லண்டன்.. அவன் வாயிலேயே குத்து.." என அனாவோ பின்னாலிருந்து அவனுக்கு இன்ஸ்ட்ரக்ஷன் கொடுத்தவாறு உசுப்பேத்தி விட தியா தான் பயத்தில் உறைந்தே விட்டாள். எப்போதும் அதிர்ந்து கூட பேசாத அந்த மென் பாவைக்கு இவனின் திடீர் அதிரடியில் அசைய கூட முடியவில்லை.

அவளருகில் சென்று அவளை அணைத்துக் கொண்ட அனா,
"அச்சோ தியா ஏன் இப்பிடி இருக்க.. அவன் செவிட்டுலயே ஒன்னு விட்டிருக்க வேணாம்.. சரி விடு அதான் நாங்க வந்துட்டோம்ல.." என்று அவளை சமாதானப்படுத்த,

"என.. எனக்கு ரொம்ப பயமா.. பயமா இருந்துச்சி.." என்று அழுதவாறே அனாவை இறுகி அணைத்துக் கொண்டாள் தியா.

திரும்பி தியாவை பார்த்த அனிருத்திற்கு அவள் அழுகையை பார்க்க மேலும் மேலும் கோபம் எகிற அவன் அடித்த அடியில்,
"தெரியாம பன்னிட்டேன் மா.. என்னை விட சொல்லு.." என்று தியாவிடமே கெஞ்ச ஆரம்பித்து விட்டான் கார்த்தி.

"அய்யய்ய்யோ.." என்று ஓடி சென்று அனா,
"டேய் போதும் டா அவன விடு.. செத்துற போறான்.." என்று அனிருத்தை பிடித்து இழுக்க,

அனாவை தள்ளி விட்டவன்,
"இவன இன்னைக்கு சும்மா விடக் கூடாது அனா.. எவ்வளவு தைரியம் இருந்தா கூடப் படிக்கிற பொண்ணுகிட்டேயே இப்பிடி நடந்துப்பான்.." என கத்தியவாறு அவனை மேலும் அடிக்க சென்றவனை தியாவின் குரலே தடுத்தது.

"போதும் ரித்து அவனை விடு.. ப்ளீஸ்.." என தியா சொல்ல, அவளை ஒரு பார்வை பார்த்தவன் தன்னிடம் அடிபட்டு "ஆஆ.. அம்மா.." என்று கீழே சுருண்டு கத்திக் கொண்டிருந்தவனிடம் ஒற்றை விரலை நீட்டி எச்சரித்து தியாவை தரதரவென இழுத்துக் கொண்டு வெளியே சென்றான் அனிருத்.

அவளோ அவனை விழி விரித்து பார்க்க,
"அறிவில்லை உனக்கு.. உன்கிட்ட தப்பா நடந்துக்க ட்ரை பன்றான்னா செருப்ப கழட்டி அடிக்காம ஹெல்ப் ஹெல்ப்னு கூவிகிட்டு இருக்க.. இதே நாங்க வராம இருந்திருந்தா என்ன நடந்திருக்கும்.. முட்டாள்.. முட்டாள்.. " என அவன் திட்ட தொடங்க தியாவுக்கோ அவன் தன்னை திட்டுவதில் கண்கள் கரித்துக் கொண்டு வந்தது.

உதட்டை பிதுக்கிக் கொண்டு விம்மி விம்மி அழுதவளை பார்க்க அனிருத்திற்கே பாவமாக இருக்க அவள் கையை தன் இரு கைகளிலும் பொத்திக் கொண்டு அதில் அழுத்தம் கொடுத்து,
"சரி சோரி அழாத.. இதுக்கப்றம் இப்பிடி எதாச்சும் நடந்தா போல்ட்டா ஃபேஸ் பன்னு ஏன்ஜல் ஓகேவா.." என மென்மையாக சொல்ல,

தியாவும் "தேங்க்ஸ் ரித்து." என திக்கித்திணறி சொல்லி முடித்ததில் அவளுடைய செல்ல அழைப்பில் அனிருத்திற்கோ குதூகலமாகிப் போனது.

"செம்ம டா நீ.. பேருக்கும் ஆளுக்கும் சம்மந்தமே இல்லை போ.. என்ன மா அடி வெளுக்குற.. சான்ஸ்ஸே இல்லை.." என அனா அனிருத்தை புகழ்ந்து தள்ள,

தன் சட்டை கோலரை பெருமையாக தூக்கி விட்டவன்,
"ஹே யு நோ வட்.. நா லண்டன்ல கிக் போக்ஸிங் ட்ரைனிங் போனேன்.." என்று சொல்லியதில்,

அனாவோ, "வாவ்வ்.. அனிருத்துன்னு பேர வச்சிகிட்டு அர்னால்ட் மாதிரி இருக்க டா.. அசத்துற லண்டன்.." என வாயைப் பிளந்துக் கொண்டு சொல்ல அப்போது தான் தியாவும் அனிருத்தை முதன் முதலாக மேலிருந்து கீழாக அளவிட்டாள்.

ஆறடி உயரத்தில் லண்டனிலே பிறந்து வளர்ந்தாலும் அந்நாட்டு நிறத்தில் இல்லாமல் நம் நாட்டு இளைஞர்கள் போல் மஞ்சள் நிறத்தில் புன்னகையை தாங்கி நிற்கும் கண்கள், புன்னகை தவழும் உதடு, ஆங்காங்கே ப்ரௌன் நிற ஹெயார் கலர் செய்திருந்த சுருள் கேசம், தேக்கு மரம் போன்ற வாட்டசாட்டமான கட்டுக்கோப்பான உடல், அவன் ஜிம்போடியை இறுக்கி அவனின் உடல் படிக்கட்டுக்களை வெளிச்சம் போட்டு காட்டுவது போல் ஷார்ட் அணிந்திருந்தவனை தியாவோ அப்போது தான் முதல் தடவை பார்ப்பது போல் ரசனையாக பார்த்துக் கொண்டிருக்க அவள் பார்வையை கண்டு கொண்ட அனிருத்தின் இதழ்களோ பெரிதாகவே விரிந்து கொண்டது.

"என்ன ஏன்ஜல் என்னையே வச்ச கண்ணு வாங்காம பார்க்குற.. சைட் அடிக்கிறியா.." என அனிருத் குறும்பாக கேட்க, தியாவுக்கு தான் ஒரே வெட்கமாகிப் போனது.

"அப்.. அப்பிடி எல்லாம் இல்லையே.." என்ன தடுமாற்றத்துடன் கூறிவிட்டு தியா தலை குனிந்து கொள்ள, அனாமோ "க்கும்.. க்ளாசுக்கு போவோமா ஏன்ஜல்.." என கிண்டல் தொனியில் தியாவிடம் கேட்க அவளும் அனா கேட்ட விதத்தில் மெல்லிய புன்னகையை சிந்தி அனிருத்தை ஒரு பார்வை பார்த்து விட்டு முன்னே செல்ல அவனும் குறும்பாக சிரித்துக் கொண்டு அவளை ஓரக்கண்ணால் பார்த்தவாறு அவள் பின்னாலே சென்றான்.
----------------------------------------------------------------

அதே சமயம்,

அந்த ரெஸ்டோரென்ட்டில்,

"ஹெலோ மிஸ்டர் தேவ்.. " என தன் முன்னால் இருந்தவனிடம் கை குலுக்க கை நீட்ட அவன் எதிரில் இருந்த தேவ்வும் புன்னகை முகமாக கை குலுக்கி,
"சோரி மிஸ்டர் ஹர்ஷமித்ரன்.. உங்கள ரொம்ப நேரம் வெயிட் பன்ன வச்சிட்டேனோ.." என்று தேவ் கேட்க,

"தட்ஸ் ஓகே தேவ்.. என்ட் நீங்க என்னை ஹர்ஷான்னே கூப்பிடலாம்.." என்று சொன்னவன் அவள் முன் ஒரு கவரை வைத்தான்.

தேவ் புரியாமல் பார்க்க அவன் புறம் தள்ளிய ஹர்ஷா,
"அதுல இரண்டு பேரோட ஃபோட்டோஸ் இருக்கு.. எனக்கு அவங்களை பத்தி டீடெய்ல்ஸ் தெரிஞ்சாகனும்.." என சொல்ல,

கவரை பிரித்து அதிலிருந்த ஃபோட்டோவை பார்த்தவனுக்கு அதிர்ச்சியில் கண்கள் விரிந்து கொண்டது. அவன் கண் சிமிட்டாது அதையே பார்த்துக் கொண்டிருக்க அவனை சொடக்கி நிகழ்காலத்திற்கு கொண்டு வந்தான் ஹர்ஷா.

'இவனுக்கு எதுக்கு மித்ரா பத்தி தெரிஞ்சிக்கனும்.. அப்றம் இந்த ஃபோட்டோ.." என்று தேவ் மனதில் நினைத்து யோசனையில் நெறித்த புருவத்துடன் ஹர்ஷாவை பார்க்க, ஒரு ஃபோட்டோவை காட்டிய ஹர்ஷா,
"தேவ் இது எங்க அத்தை.. பட் இவங்க எங்க கூட இல்லை.." என அவன் அத்தை பற்றி அவன் தாத்தா சொன்ன சில தகவல்களை கூறியவன் அடுத்து மித்ராவின் ஃபோட்டோவை காட்டி,
"இவ பேரு மதுமித்ரா.. ஆரா சொஃப்ட்வெயார் சொல்யூஷன்ஸோட எம்.டி.. இவ எனக்கு ரொம்ப முக்கியம் தேவ்.. மது வாழ்க்கையில ஏதோ நடந்திருக்கு அதுக்கும் என் அப்பா ராஜ்தீப்க்கும் ஏதோ சம்மந்தம் இருக்கு.. அதை பத்தி தெரிஞ்சாகனும்.." என சொல்ல அவன் அப்பா தான் ராஜ்தீப் என்று தெரிஞ்சதில் ஆடிப் போய்விட்டான் தேவ்.

'இவனை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே' என ஹர்ஷாவை பார்த்ததிலிருந்து யோசித்துக் கொண்டிருந்தவனுக்கு இப்போது தான் ராஜ்தீப் பற்றிய விவரம் சேகரிக்கும் போது ஹர்ஷாவின் டீன் ஏஜ் வயது புகைப்படத்தை பார்த்தது நினைவிற்கு வந்தது.

"எவ்வளவு பணம் செலவானாலும் பரவாயில்லை.. எனக்கு சீக்கிரம் மது பத்தி டீடெய்ல்ஸ் தெரிஞ்சாகனும்.. எத்தனை நாளைக்குள்ள உங்களால டீடெய்ல்ஸ் கண்டுபிடிக்க முடியும்.." என்று கேட்க, இப்போது தன் மனநிலையை இவனிடம் காட்டுவது நல்லதிற்கில்லை என்பதை புரிந்து கொண்ட தேவ் அந்த இரு ஃபோட்டோக்களையும் கவரில் போட்டவாறே,
"சீக்கிரம் டீடெய்ல்ஸ் கலெக்ட் பன்னிட்டு உங்களுக்கு இன்ஃபோர்ம் பன்றேன் ஹர்ஷா.." என்று தேவ் சொல்ல,

தன் உயரத்திற்கு எழுந்து நின்ற ஹர்ஷா
"தேங்க்ஸ் தேவ்.. சீக்கிரம் வேலைய முடிச்சிட்டு இன்ஃபோர்ம் பன்னுங்க.. வில் சீ.." என்று சொல்ல தேவ் எழுந்து அவனுடன் கைகுலுக்கி விட்டு ஹர்ஷா அங்கிருந்து நகர்ந்த அடுத்த நொடி அந்த கதிரையிலேயே தொப்பென்று அமர்ந்து விட்டான்.

'என்ன டா நடக்குது இங்க.. இவங்க இரண்டு பேரையும் இவனுக்கு எப்பிடி தெரியும்.. அதுவும் உறவுமுறை வேற சொல்லி கூப்பிடுறான்.. அதுவும் ராஜ்தீப்போட பையனுக்கும் மித்ராவுக்கும் என்ன சம்மந்தம்.. அந்த சண்டி ராணி என்கிட்ட ஏதோ மறைக்குறா அது மட்டும் தெளிவா தெரியுது.. சீக்கிரம் எல்லாத்தையும் கண்டுபிடிக்குறேன்.." என தலையை கைகளால் தாங்கியவாறு புலம்பிக் கொண்டிருந்தான் தேவ்.

வெளியே வந்த ஹர்ஷா தன் காரை திறக்க போக, அப்போது ஆறடிக்கும் மேல் உயரத்தில் ஆஜானுபாகுவான ஒருவன் அவன் தோளை தொட அவனை பக்கவாட்டாக திரும்பி மேலிருந்து கீழ் அளவிட்டவாறு ஹர்ஷா நோக்க அந்த புதியவனோ ஹர்ஷாவின் தோளை அழுத்தமாக பிடித்தவாறு திருப்பி,
"டேய் எவ்வளவு தைரியம் இருந்தா எங்க வீட்டு பொண்ணுகிட்டேயே வம்பிழுப்ப.. உனக்கெல்லாம் உள்ள வைச்சு முட்டிக்கு முட்டி தட்டினா தான் புரியும்.." என எகிற,

அவன் கையை தன் தோளிலிருந்து தட்டி விட்டவன்,
"ஹெலோ யாரு நீ மொதல்ல அதை சொல்லு.. என்னை பார்த்தா உனக்கு பைத்தியக்காரன் மாதிரி தெரியுதா.. ஆமா எவ அவ.. உன் வீட்டு பொண்ணு.." என்று கேட்ட ஹர்ஷாவுக்கு 'இவனை எங்கேயோ பார்த்திருக்கேனே' என்ற வசனம் இந்த புதியவனை நோக்கி மனதில் தோன்றாமலுமில்லை..

"என்ன டா ஏதும் தெரியாத மாதிரி கேக்குற.. மித்ராவ தெரியாதா உனக்கு.. அவ மாமா CBI னு தெரியாம வாலாட்டுற.. " என அவன் சொல்ல,

'மித்ரா' என்ற பெயரை அவன் சொன்னதும் தான் தாமதம் 'உஃப்ப்ப்..' என பெருமூச்சு விட்ட ஹர்ஷா தன் வலது புருவத்தை விரலால் நீவி விட்டவாறு அவனை வில்லத்தனமான ஒரு புன்னகையுடன் பார்க்க,

'அச்சோ நம்மள கண்டுபிடிச்சிட்டானோ..' என உள்ளுக்குள் அந்த புதியவன் பதறினாலும் அதை வெளியில் காட்டாமல்,
"பேசிக்கிட்டு இருக்கேன் உன் பாட்டுக்கு சிரிக்கிற.." என ஓவர் பெஃபோமன்ஸ் காட்டியவாறு ஹர்ஷாவை அடிக்க கையை ஓங்க இடது கையால் அவன் கையை பிடித்த ஹர்ஷா "ச்சு.. ச்சு.. ச்சு.." என உச்சு கொட்டியவாறு வலது கையை மடக்கி அவன் மூக்கிலே ஒரு குத்து விட்டேன்.

"அய்யோ.. அம்மா.." என கத்தியவாறு மூக்கை பிடித்து தன் கையை பார்த்த அந்த புதியவனோ விழிவிரித்து, "அய்யோ.. ப்ளட்டூடூ.." என அலற, ஒற்றை புருவத்தை தூக்கி முறைப்புடன் தனது வலது கை காப்பை மேலே உயர்த்தியவாறு அவனை நெருங்கினான் ஹர்ஷா.

மித்ரா ஓஃபீஸில்,

ஒரு முக்கியமான ப்ரோஜெக்ட் பற்றி மீட்டில் ஹோலில் தன் முன் இருந்தவர்களிடம் விளக்கிக் கொண்டிருந்தாள் மித்ரா.

திடீரென 'டமார்' என்ற கதவு திறக்கும் சத்தத்தில் ஒருசேர எல்லாரும் அத்திசையை நோக்க புயல் போல் உள்ளே வந்த ஹர்ஷாவை பார்த்த மித்ராவுக்கோ இதயம் படபடவென அடித்துக் கொண்டது. என்ன தான் மற்றவர்கள் முன் தைரியமாக கெத்தாக இருந்தாலும் தன்னவனிடத்தில் மாத்திரம் தன் ஒட்டு மொத்த தைரியம் செயலிழப்பதை அவள் உணரத்தான் செய்தாள்.

விறுவிறுவென மித்ராவிடம் வந்தவன் அங்கு இருந்தவர்களிடம் வெளியே போகும் படி ஒற்றை விரலை வாசல் புறம் நீட்டி கண்களால் சைகை காட்ட மித்தாவுக்கு வந்ததே ஒரு கோபம்,
"டேய் என் ஓஃபீஸ்க்கே வந்து என் ஸ்டாஃப்ஸ்ஸையே ரூல் பன்ற.. உனக்கு எவ்வளவு தைரியம் இருக்கனும்.. மரியாதையா இங்க இருந்து போயிரு.." என மித்ரா ஒற்றை விரலை நீட்டி எச்சரிக்க,
அவள் நீட்டிய விரலை பிடித்து ஹர்ஷா மடக்க, "ஆஆ.. விடு டா.." என்று கத்தியவாறு தன் மற்ற கையால் அவனை அடித்தாள் மித்ரா.

இந்த கூத்தை மிரட்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தவர்களின் பக்கம் திரும்பியவன்
"வெளில போங்கன்னு சொன்னேன்.. புரியலையா.." என பல்லை கடித்துக் கொண்டு கர்ஜிக்க அதன் பிறகு அவர்கள் அங்கு இருந்தால் தானே..

அவர்கள் சென்ற அடுத்த நொடி அவள் விரலை விட்டவன் சற்றும் அவள் எதிர்ப்பார்க்காத சமயம் அவளை இழுத்து அவள் இதழை தன் இதழால் சிறை செய்திருந்தான் ஹர்ஷா. மித்ராவோ அவன் மார்பிலே அடித்து விலக முயற்சிக்க அதையெல்லாம் தூசி போல் தட்டியவன் அவள் திமிற திமிற அவளின் இதழ் தேனை குடித்து விட்டே மெதுவாக விலகினான்.

அவன் விலகிய அடுத்த நொடி மித்ராவுக்கோ அவன் தன்னை முத்தமிட்டதில் கோபம் தலைக்கு ஏறியதில் அவனை அடிக்க கையை ஓங்க அவள் ஓங்கிய கையை பிடித்து அவள் முதுகுக்கு பின்னே முறுக்கி ஹர்ஷா சிரிக்க,

"என்னை விடு ஹர்ஷா.. இதுக்கெல்லாம் சேர்த்து வைச்சு நீ அனுபவிக்க போற டா.." என மித்ரா பல்லை கடித்துக் கொண்டு கத்துவதை பொருட்படுத்தாமல் அவளை பின்னாலிருந்து அணைத்தவாறு நின்றுக் கொண்ட ஹர்ஷா அவள் காது மடலில் தன் இதழ் உரச,
"என்கிட்ட உன் திமிற காட்டாத பேபி.. இப்போ உன் எதிர்ல இருக்குறது உன்கிட்ட மயங்கி கிடந்த உன் மித்து இல்லை.. ஹர்ஷா.. ஹர்ஷமித்ரன்.. என்கிட்டயே கை ஓங்குறல்ல.. இதுக்கப்றம் என் முன்னாடி உன் விரலயாச்சும் உயர்த்தி பாரு தொலைச்சிருவேன் உன்ன.." என்று கோபத்துடன் அடக்கப்பட்ட சிரிப்புடனே மிரட்ட மித்ராவுக்கு கூட அவன் மிரட்டும் தொனியில் அடி வயிற்றில் பயபந்து உருளத் தான் செய்தது.

அவன் பிடி வலியை கொடுக்க வலியில் முகம் சுருக்கியவளை கண்டு அவன் முறுக்கியிருந்த கையை விட வலியில் தன் முழங்கையை பரபரவென தேய்த்துக் கொண்டவள் அவனை அனல் தெறிக்கும் விழிகளுடன் ஏறிட்டு பார்க்க ஹர்ஷாவோ ஒற்றை கண்ணை சிமிட்டி குறும்பாக சிரித்தவாறு,
"என்ன பேபி.. நீயும் பெரிய வில்லி ரேன்ஜ்க்கு பேசின பேச்சை பார்த்து நா கூட கொஞ்சம் பதறிட்டேன்.. ஆனா சீரியல் வில்லிங்க மாதிரி சின்னபுள்ள தனமா ஒரு ஸ்கெட்ச் போட்டு அதுவும் இந்த ஹர்ஷாகிட்ட.. அய்யோ.. அய்யோ.. " என கேலியாக சொல்லியவாறு அவன் வாய்விட்டு சிரிக்க மித்ராவுக்கு தான் முகம் கருத்து விட்டது.

ஏதும் பேசாது அவனையே அழுத்தமாக பார்த்தவாறு அவள் நிற்க அவளை மேலும் நெருங்கியவன் அவள் மூச்சு காற்று படும் தூரத்தில் நின்றுக் கொண்டு,
"இனிமே ப்ளான் பன்றேன்னா என் ரேன்ஜ்க்கு பன்னு பேபி.. இப்பிடி எல்லாம் கோமெடி பன்னிகிட்டு இருக்காத.. முடியல என்னால.." என்று குறும்பாக சொன்னவன்,

பின் முகத்தை தீவிரமாக்கி அவள் தாடையை பிடித்து தன்னை நோக்கி நிமிர்த்தியவன்,
"உனக்கு புடிச்சிருக்கோ இல்லையோ நீ என் கூட தான் இருந்தாகனும்.. இதை நா அன்னைக்கே சொல்லிட்டேன்.. இதுக்கப்றம் இப்பிடி எல்லாம் லூசு தனமா ப்ளான் போட்டு என்னை எதாவது பன்னுறேன்னு பேருல கிறுக்குத்தனம் பன்னிகிட்டு இருந்த இப்பிடி எல்லா உன்னை விட்டு வைக்க மாட்டேன்.. புரியுதா.." என சொல்ல அவனவளோ அவனை தான் உக்கிரமாக முறைத்துக் கொண்டிருந்தாள்.

நம்ம ஹீரோவோ தன்னவள் முறைப்பதிலும் கூட தன்னை ரசிப்பதாக நினைத்து வசீகரமான புன்னகையை சிந்தி அவள் நெற்றியில் அழுந்த முத்தமிட்டு,
"லவ் யு மோகினி.." என்று சொல்லி அவள் கன்னத்தை தட்டி விட்டு சென்றான்.

வெளியே வந்த ஹர்ஷா வாசலில் கையை கட்டிய வண்ணம் பவ்யமாக நின்றிருந்த தன்னை மிரட்ட வந்தவனை பார்த்து இடுப்பில் கையை குற்றி முறைக்க,

"சார் என்னை மன்னிருச்சிருங்க.. இப்பிடி நடிச்சா பணம் தரேன்னு சொன்னாங்க அதான்.." என்று தயங்கியவன் பின் ஆச்சரியமாக, "ஆனா, என்னை எப்படி சார் கண்டுபிடிச்சிங்க.." என தன் சந்தேகத்தை கேட்க,

"என் ஃப்ரென்ட் கிஷோர் வீட்டு ட்ரைவர் தானே டா நீனு.." என்று மார்புக்கு குறுக்கே கையை கட்டிய வண்ணம் ஹர்ஷா கேட்ட விதத்தில்,
"ஹிஹிஹி.." என்று அசடுவழிந்தவன்,
" தயவு செஞ்சு இதை பத்தி ஐயாக்கிட்ட சொல்லிராதீங்க சார்.." என்று அவன் கெஞ்ச, அவன் கெஞ்சும் தோரணையில் ஹர்ஷாவிற்கு சிரிப்பு வந்ததில் தன் முத்துப்பற்கள் தெரிய சிரித்தவாறே நகர, இந்த புதியவனோ மனதில்,
'ஹப்பாடா.. ஆனாலும் இந்த ஆளு என்னா அடி அடிக்கிறாரு.. நமக்கே இப்பிடின்னா இதை பன்ன சொன்ன மேடம்க்கு என்ன சேதாரமோ..' என அவன் புலம்பிக் கொண்டிருக்க மீடிங் ஹோலில் மித்ராவோ உச்ச கட்ட கோபத்தில் குறுக்கும் நெடுக்குமாக நடந்துக் கொண்டிருந்தாள்.

அவளுக்கோ ஹர்ஷாவின் பேச்சில் பிபி ஏகத்துக்கும் எகிற மேசையிலிருந்த மொத்த பொருட்களையும் தட்டி விட்டவள் அவன் முத்தமிட்ட இடத்தை அழுந்த துடைத்து "மோன்ஸ்ட்டெர்.. மோன்ஸ்ட்டெர்.." என்று ஹர்ஷாவை வறுத்தெடுத்துக் கொண்டிருந்தாள்.

தொடரும்..?
---------------------------------------------------

Thanks for ur love and support friends..?
Story epidinnu marakama unga comments a solluga illanna நா அழுதுருவேன்??

-ZAKI?
 
Nandhini@mariammal

நாட்டாமை
Joined
Aug 29, 2020
Messages
26
Reaction score
26
Location
Coimbatore
View attachment 27631

Zaki மா மித்து பாவம் ஹர்ஷாவிடம் கடுமையாக நடந்து கொள்ள வேண்டாம் என சொல்லவும். தேவ் மித்து பேபிக்கு உதவி செய்வானா
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top