• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

தீராத் தீஞ்சுவையே...11

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

யாழ் மொழி

நாட்டாமை
Joined
May 10, 2020
Messages
30
Reaction score
85
Location
Chennai
தீராத் தீ____11

கிலின் மனசாட்சி மெல்ல எம்பிக்குதித்து மிரட்டியது... முகில் இவ அதுக்கு சரி பட்டு வரமாட்டா டா ... ஆளப்பாத்து ஏமாந்துட்டியே... இப்படி கிழி கிழின்னு கிழிக்கிறாளே..... இவ வேணான்டா....

நைனி மெல்ல திரும்பி நடந்தவள் நின்று மீண்டும் வந்தாள்...

ஆ... அப்பறம் சொல்ல மறந்துட்டேன் பாரேன்... அவன் யாரு அது உன் கேங்ல நல்லா..சுருட்டை முடில காரக் கொழம்போட...??? அவனுக்கு என்ன மனசுல மலிங்கா னு நெனப்பா..??? அவனும் அவன் தலையும் அவன் சொன்ன பனிஷ்மென்ட் ஆ நீயே முடிச்சி நாளைக்கு காலைல ஏழு மணிக்கு என்ட ககுடுக்குற...
நம்ம விஷயம் லா உன் பிரண்ட்ஸ் கு தெரிய வேண்டாம்... சரியா.. தெரிஞ்சா எனக்கு ஒன்னும் இல்ல... உனக்கு தா .. பப்பி ஷேம்...

இதோட எல்லாதையும் ஏரகட்டிட்டு ஒழுங்க அம்மா புள்ளையா சமத்தா இரு...இல்லனு வை... சிறப்பான தரமான சம்பவங்கள நீ இனிமேல் தா பாப்ப... புரிதா...

இவ இங்க இன்னும் நாளு நாள் தானே இருப்பா அப்பறம் காலேஜ் ல பார்த்துகலாம் னு லா தப்பு கணக்கு போடதப்பா...
ஒரு சொட்டு கண்ணீரோட திக்கி... திக்கி.. அத்த......னு அழுதேனு வை....
உங்க அம்மாவே டின்னு கட்டிடுவாங்க புரிதா...
ரொம்ப வருஷம் கழிச்சு ஒட்டு மொத்த பெருசுங்களும் மாயாண்டி குடும்பத்தார் மாதிரி ஒன்னு சேரந்து இருக்கு..

ஏதாவது எடுக்கு பன்னேனு வையேன் உங்க அம்மாவே உன்னைய ரேகிங் பன்றாமாறி பன்னிடுவா இந்த நைனி… புரிஞ்சிதா...
இனிமேல் சீனியர் அது இதுனு என்ட வாலாட்ர வேலையெல்லாம் வேணா... போனமா படிச்சமானு இரு அதா உனக்கு நல்லது .. புரிச்சிருக்கும்னு நெனைக்கிறேன்...

வர்ட்டாடாடாடா....... பேபி...
முகில் உறைந்து நின்றுவிட்டான்….
நைனா… நீங்க இந்த குடும்பத்த பத்தி சொன்ன அப்போ நான் நம்பல… இப்போ நம்புறேன்….

உனக்கு இந்த பொட்டுவெடியே தான் வேணுமாடா முகிலா….
எதுக்கும் போயி சாப்பிட்டு திரும்ப யோசிப்போம்…

நைனியின் வார்த்தைகளின் தாக்கம் அவள் சென்ற பின்பும் அவன் செவியையும் சிந்தையையும் ரீங்கரித்துக் கொண்டே இருந்தது....

தன் அறைக்குள் நுழைந்தவன் மெத்தையில் புறண்டு புறண்டு சிரித்தான்...

அவள் கராத்தேவில் பிளாக் பெல்ட் என்றதில் கட்டாயம் உண்மை இல்லை...

பேசும்போது விழிகளில் வழிந்த பதட்டமும்.... குரலில் தெரிந்த தொனியுமே சொல்லாமல் சொல்லியது....

வாயாடி... வாயாடி... நல்லா சமாளிக்கிறா...
என்னம்மா மெரட்ரா.... ஏதோ சின்னப்புள்ள ஆசைக்கு ஏதோ பேசுதேனு விட்டா...

என்னையே சின்னப்புள்ளங்கறா... மைதாமாவுங்குறா.... அடியே பொட்டுவெடி…
என்ன…. அதுவும் இந்த முகிலன நீ…நீயெல்லாம்
தட்டி தாளிச்சிடுவியா டீ... நான் அம்மா புள்ளையா....???
மாமாப் பொண்ண டீ போட்டு பேசாமா… செத்து போன உங்க ஆயாவையாடி டீ போட்டு கூப்பிட முடியும் ..
நான் பேபியா.... என்னமோ அதிகாரமா டீ போடாத காஃபி போடாதனு என்கிட்டயே வாயாடுறியா ...
என்ன தைரியம் டி உனக்கு... என்னையேவே மைதாமாவுனு சொல்லிட்டல...

காலேஜ் முதல் நாள் பட்டையும் பொட்டுமா... தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை மாதிரி வந்துட்டு...

என் வீட்ல என்னையே மெரட்டி விளையாடுரியா..... உன்னை நீ பேசுனத வெச்சே என்ட கெஞ்ச வைக்கிறேன் இரு....

அப்போ தெரியும் டி யாரு மைதாமாவுனு...
நீ பேசினதெல்லாம் என் தாய்குலத்துக்கு தெரிஞ்சா உன்ன.....தான்டி டின்னு கட்டிடுவாங்க ....

ஏதோ பாத்ததும் மனசுக்குள்ள நுழைஞ்சிட்டியேனு உன்ன இப்போ சும்மா அனுபிட்டேன்...

உனக்கு இங்க இருந்து போறதுக்குள்ள என்ட வசமா இருக்கு டி.... உனக்கு
மாட்டாமலா போய்டுவ....

யோசனையோடு சாய்ந்தவனை அன்னையின் குரல் நினைவிற்கு பிடித்து இழுத்துக்கொண்டு வந்தது....

முகில் இப்போதா வந்தியா .... ஏதாவது சாப்பிடக் கொண்டு வரவா...

வேண்டாமா...
அப்பறம் இனைக்கு கிளாஸ் எப்படி போச்சு முகில்...

நாலு நாள் லீவ் போட்டதுல சில நோட்ஸ் கொஞ்சம பிக்கப் பன்ன சிரமமாயிருந்துது ஒரு டைம் கம்ப்ளீட் ஆ படிச்சா தெளிவா இருக்கும் ம்மா..

யாழ் எங்க ம்மா... அவ கிட்ட பேசவே முடியல... ஆளையேக் காணும்...

அவ டியூஷன் போய்டா முகில் உங்க அப்பா கூட்டிட்டு போய்ருக்காங்க...
வந்ததும் வீட்ல இருக்க குட்டீஸ் கூட சேர்ந்து அரட்டை தான்....
எனக்கு தான் ஸ்கூல் போகாம ரொம்ப தனியா இருக்கா மாதிரி இருக்கு முகில்...
அன்னிங்களும் விஜியும் ஏதோ படுத்த படுக்கைல இருக்கா மாதிரி ரெஸ்ட் எடு ரெஸ்ட் எடுனு படுத்துராங்க முகில்..

கிட்சன் உள்ள விட மாட்ராங்க...
செம்ம போர் டா... அம்மாவ எங்கையாவது கூட்டிட்டு போடா முகில்...

சரிமா ... இன்னும் இரண்டு நாள் பொருத்துக்கோங்க... பீச் இல்லைனா ஏதாவது தீம் பார்க் அப்படி போகலாம்...

தீம்பார்க் அல்லது பீச்... தண்ணீர்.... விளையாட்டு என்ற இரண்டு வார்த்தைகளும் நேத்ராவை குழந்தையாக கனவுகான வைத்தது...

ஆசையாக சரிடா முகில் நான் எல்லாரையும் வரச் சொல்லி சொல்லிடுறேன் என வேகமாக நகர்ந்தவரை
முகில் நிருத்தினான்...
ம்மா இன்னைக்கே. நாம போகல... இன்னும் இரண்டு நாள் இருக்கு ம்மா....
அதுக்கு என்னடா... எல்லாரும் தெரிஞ்சா ஜாலியா இருப்பாங்கல...
ம்மா... சின்ன குழந்தைங்க மாதிரி எக்ஸைட் ஆகாதீங்க சஸ்பென்ஸ் ஆ இருக்கட்டும்
சனிக்கிழமை இராத்திரி எல்லாரும் சாப்பிடும் போது சொல்லலாம் ம்மா... பிளீஸ்...
ம்ம்ம்... ம்ம்ம்.. சரி முகில்...
ம்மா...
என்னடா..
நேத்து விட்டுட்டுப் போன கதைய கண்டினியூ பன்னுங்க ம்மா...
நைட் சொல்றேன் முகில்...

ம்மா பிளீஸ்... நைட்லா நா படிக்கனும்.. தூங்கனும்.. நிறைய கமிட்மென்ட்ஸ் இருக்கு ம்மா... பிளீஸ்....
நேத்ரா சில நொடிகள் முகிலனை உற்று பார்த்தார்... புன்னகை அரும்பியது...

எனக்கு கோசுபத்தி ஆகாது நீங்களே வாங்கிட்டு பிளாஷ் பேக் வந்திடுங்க...

அந்த பிரச்சினை முடிந்த பிறகு.. சில நாட்களுக்கு பிறகு என்கு ஒரு கால் வந்தது...நித்யா என்ற நமரை கேட்டு ஒரு ஆண் குரல் பேசவும்....

ஏன் ஒட்டுமொத்த கோவத்தையும் கொட்டித் தீர்த்து ... வாய்க்கு வந்தபடி வீர தீரமாக பேசி மூச்சு வாங்க அமர்ந்தேன்...

இவங்க சொல்ல சொல்ல லேட் ஆகும் மக்களே... நாமா நேரா.... டைம் மெஷின் இல்லாம அங்ககையே போய் என்னதா நடந்துதுனு பார்த்துட்டு வரலாம்...வாங்க

தெரியாத அழைப்புகள் மெசேஜ்களின் தொல்லைக்கு பயந்து தன் ஃபோனை அப்படியே பீரோவில் .பூட்டியிருந்தாள் . உண்மை தெரிந்த அன்னையின் வசவு அப்படி...

நீண்ட இடைவெளிக்கு பிறகு இனி எந்த தொல்லையும் இருக்காது என்ற நம்பிக்கை வந்ததும் மீண்டும் கைக்குள் செலபேசி நுழைந்திருந்தது...

அன்று நேத்ராவின் பழைய குட்டி பிளாக் அண்ட் ஒயிட்... நோக்கியா விற்குள் ஒரு செய்தி வந்தது... சாரி.... என்று...

நேத்ரா பார்த்ததும் யார் எனத் தெரியாததால் மீண்டும் சளிப்பாக அதை தவிர்த்துவிட்டு வேலைக்கு சென்றுவிட...

தொடர்ந்து மூன்று நாட்களாக அடிக்கடி சாரி சாரி என்ற குறுஞ்செய்தி வந்த நிலை மாறவில்லை...

நேத்ரா யார் எனக் கேட்போமா என யோசித்தார்... நெருங்கிய நட்பு வட்டத்தை தவிர்த்து நேத்ரா யாருடனும் செய்திகளைப் பரிமாறிக் கொள்வதில்லை...

ஆனால் புதிய எண்ணாக இருக்கவும் யார் என தெரிந்து கோள்ள.. யார் நீங்கள் என கேட்டு விட்டு காத்திருந்தாள்...
பெயர் வரவில்லை மன்னிப்பு வந்த வண்ணமிருந்தது...
நேத்ரா ஒரு கட்டத்தில் மீண்டும் திட்டவும் மித்ரா என வந்தது..

மித்ரா என்றவுடன் பெண்ணாக இருக்குமென நினைத்து அடுத்து பேசியவளுக்கு ஏதோ மனதை உருத்த...
நீங்கள் பெண் தானே என்றே கேட்டுவிட்டு நகத்தை கடித்துக் கோண்டிருந்தார்...
செய்தி வந்தது... என்னங்க நீங்க இப்படி அசிங்க படுத்துரீங்க அன்னைக்கு கால் பன்னி உங்க கிட்ட வாங்கி கட்டிகிட்ட நல்லவன் நான் தாங்க ... ஏதோ தெரியாம ஒரு நம்பர் மார்த்தி போட்டதுல உங்களுக்கு கால் போய்டுச்சிங்க...

அதான் சாரி கேட்டேன்... நீங்க மறந்துடீங்களா...
நேத்ராவிற்கு இப்போது தான் நினைவு வந்தது... ஓ ... இவன் என்ன லூசா ஒரு சாரிய மூனுமாசமா வெயிட் பன்னி கேட்டு மன்னிப்பு வாங்குற அளவுக்கு இவன் நல்லவனா இல்லை அதை நம்புற நான் முட்டாளா…. எதுக்கு வம்பு…
கழுதைய மன்னிச்சு விடுவோம்...
சரி இனிமேல் எனக்கு செய்தி அனுப்ப வேண்டாங்க. இத்தனை நாளா நீங்க மித்ரானு சொன்னதும் நான் கூட ஏதோ பொண்ணா இருக்கும் னு தான் பார்த்தேன்...
எனக்கு இனி மெசேஜ் பன்னாதீங்க நாம பேசுரது இதுவே கடைசியா இருக்கட்டும்...
மித்ரனின் மனம் ஏனோ வாடிவிட்டது... வீட்டில் செல்லமிக வளரந்தவன்... கேட்டதெல்லாம் செய்யும் தாய் தந்தை.. ஒரு சகோதரி... நித்யா தேவி.
ஏனோ மித்ரனால் நேத்ராவிடம் பேசாமல் இருக்க முடியவில்லை...
ஆனால் அவளது வார்த்தைகளை யோசித்து அமைதி காத்திருந்தான்...
நேத்ராவை மித்தரனுக்கு முன்பே முகநூல் மூலம் தெரியும்...
அவளுடைய பெயரும் தன் பெயரும் ஒன்றாய் பொருந்தியதே அவனை அவளின் பால் ஈர்த்தது...

பின்பு ஏதோ ஒரு குருட்டு தைரியத்தில் அவளின் தொலைபேசி என்னை அவளுடைய முகநூல் கணக்கில் இருந்து கண்டுபிடித்து
யாரோ போல கால் செய்து அவளிடம் பேச முயன்று நல்ல படியாக வாங்கிக் கட்டிக் கொண்டான்...
அவனுடைய வயதும் அன்றைய அழகும் அவனுக்குள் ஒரு தேவையற்ற கர்வத்தை கூடவே வளர்த்திருந்தது. எதிலேயும் ஒரு சவாலை ஏற்படுத்தியது...
எப்படி இவ நம்மகிட்ட மாட்டாம போய்டுவா...
எத்தனை பொண்ணுங்க தானா வந்து நம்ம கிட்ட பேசுராங்க ஏதோ நம்மல மாதிரியே இவளுக்கும் நேம் இருக்கேனு கடலை போட ட்ரை பன்னா...ஓவரா பன்றாளே...
இவளே என்ட பேசனும்... என்னையே சுத்தி வரனும் அப்படி அவள மாத்தல நா மித்ரனே இல்லடா...
அவனுடைய திட்டப்படி அவளாக வந்து பேசுவாள் என காத்திருந்த மித்ரனுக்கு ஏமாற்றமாக இருந்தது
நேத்ரா ஒரு வாரம் கடந்தும் பேசவே இல்லை..
மித்ரனின் சவாலும் அவனை துளைத்துக் கொண்டே இருந்தது...
ஏன் பேச மாட்ரா....???
ஒருவேல வேர யாரையும் விருப்புகிறாளா....????
அந்த எண்ணமே அவனுக்கு ஏனோ கசந்தது....
இருந்தா என்ன… என்ன அன்னைக்கு எப்படி திட்டினா அதுக்காகவாவது அவளை பழிவாங்கியே ஆகனுமே….
இவளை எப்படி பேச வைக்கிறது... யோசித்தான்…
அடுத்த குறுக்குவழிகள் தானே வந்தது முகம் தெரியவாப் போகிறது.. குறுஞ்செய்தி தானே வரது வரட்டும் பாத்துக்கலாம் என்ன பன்னிடுவா இவனு முடிவே செய்துவிட்டான்...
நேத்ராவிற்கு ஒருவாரம் கடந்த நிலையில் அடுத்த குறுஞ்செய்தி வந்தது ...

சாரிங்க.... உங்களுக்கு கடைசியா பேசிட்டு மெசேஜ் டைப் பன்னிட்டே நடந்து போகும் போது எதிர் ல வந்த பைக் ல ஒரு ஆக்சிடென்ட்...
அதான் இத்தனை நாள் பேசாம இருந்தேன்...
என்னவோ தெரியல உங்க கிட்ட பேசும் போது மனசு லேசா இருக்கு வலிகூட தெரியல...
கோவப்படாதீங்க .... உங்களுக்கு பிடிக்கலனா...
இனிமே பேச மாட்டேன்...

சிம்பதி கிரியேட் பன்னா தானா வந்துவிடுவாள் என அவன் தப்புக் கணக்கு போட்டு காத்திருந்தான்

வரிசையாக அனுப்பிவிட்டு பதிலுக்காக அவனுடைய அலுவலக வேலைக்கு நடுவே ஒரு பத்து முறையாவது ஃபோனை பார்த்திருப்பான்...
பதில் வந்தது....

ஆனால் அவன் எதிர் பார்த்த பதில் வரவில்லை....
அவனுடைய விளையாட்டு ... வினையாக மாறும் விதம் அறியாமல் மேலும் மேலும் ஆதங்கம் வளர்ந்தது... நேத்ராவை காணாமலே மனதில் அதற்குள் என்னை எப்படி மறக்கலாம் என ஏமாற்றம் பரவியது....... கூடவே ஒரு பழி உணர்வும்...

அப்படி என்ன தான் நேத்ரா அனுபினாள் என்று தானே யோசிக்கிறீங்க....
ஜஸ்ட்... ஹூ ஆர் யூ ... தான்...
அப்போ கோவம் வரத்தானே செய்யும்...
இவனுக்கோ இங்கே எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றிய நிலை…
ஒரு விளையாட்டு வன்மம் வளர்த்து விதியோடு சடை பின்னத் துவங்கியது...

-- தொடரும்…
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top