• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

தீராத் தீஞ்சுவையே...5

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

யாழ் மொழி

நாட்டாமை
Joined
May 10, 2020
Messages
30
Reaction score
85
Location
Chennai
மீண்டும் நெற்றியில் முத்தமிட்ட விலகிடுகையில் அந்த உதடு நேத்ராவின் உடதடுகளின் மீது ஒட்டி ஒட்டாமல் இரகசியம் பேசிப் புன்னகை வாங்கிக் கொண்டு விடை பெற்றது.

நேத்ரா கண்களை மூடிக்கொண்டு அமைதியாக படுத்துக்கொண்டாள்..
ஆனால் மித்ரன் மெல்ல வடிந்த புன்னகையோடு உள்ளுக்குள் தவிப்பு சற்று குறைய வெளியேறினார்...

ஆனால் குற்றவுணர்வு கொல்லாமல் கொன்றது...


நேத்ராவை ஓய்வெடுக்க பணித்துவிட்டு மித்ரன் வெளியே வந்தார்..

முகில் நான் பொறுமையாக பிறகு பார்த்துக் கொள்கிறேன் எனக் கூறி ,தன் இரு தாத்தா பாட்டிகளையும் அனுப்பி வைத்தான்.

வெளியே வந்த மித்ரன் செல்வத்தை பார்த்து ஒருகணம் தயங்கி பின் நகர்ந்துவிட்டான்.

ஆனால் செல்வத்தின் கோவக் கணைகள் மௌனமாக மித்ரனை ஏவிக்கொண்டே இருந்தன...

மனதிற்குள்...... இந்த எல்லாத் தவறும் உன்னால் தான்.. உன் மீது நேத்ரா வைத்த பைத்தியக்காரத் தனமானக் காதல் தான். நீ என்ன சொன்னாலும் என்ன செய்தாலும் அதை மறுத்துக் கேள்வி கேட்காமல் நம்பியவளை இப்படி படுக்கையில் வீழ்த்தியதும் உன் மீதான தகுதியற்ற அன்பு தான்

அவளுடைய தூய்மையான காதலுக்கும் ஆத்மாத்மமான அன்பிற்கும் பொருத்தமற்றவன் நீ...
உன்னை இத்தனை தூரம் காதலிப்பவளிடம் இத்தனை வருடங்கள் முகமூடி அணிந்து வாழும் துரோகி டா நீ..
பாவம் இந்த பைத்தியக்காரப் பெண்... இதையெல்லாம் தெரிந்து மறந்து விட்டாளா... ??அல்லது தெரியாமல் மன்னித்துவிட்டாளா...? என்பது தான் தெரியவில்லை.
அவளுக்கோ அவளது உயிருக்கோ ஏதேனும் நேர்ந்தால் அன்று தெரியும் உனக்கு அவளுடைய அன்பு எத்தகையது...என்று…

அதை எப்படி வாட்டி வதக்கி துரோகம் இழைத்து அவளைக் கொன்றோமே என ஒரு நாள் நீயேப் புலம்பிப் புலம்பி சுயம் இழந்து நொந்து போக வேண்டும்...
அல்லது நான் அப்படி உன்னை மாற்றி உனக்கு தண்டனை தருவேன்... அதுதான் உன் முடிவு எனக் கண்கள் கலங்கிச் சிவந்து முறைத்துக்கொண்டு நின்றார்... (செல்வம் மனதில்)

செல்வம் நேத்ராவின் உடன்பிறந்த அண்ணன் இல்லை ... பெரியப்பாவின் மகன்.. ஆனாலும் நேத்ரா என்றால் சொந்த இரத்த உறவைக் காட்டிலும் பல படிகள் அன்பு அதிகம் தான்.

மித்ரன் செல்வத்தைக் கடந்து நடந்துவிட்டாலும் அவன் உள்ளுணர்வு உறுதியாக கூறியது.. செல்வத்தின் பார்வையிலும் மனதிலும் நாம் தான் அடித்து துவைக்கப்பட்டுக் கொண்டு இருக்கிறோம் என்று...

இருந்தாலும் மனதில் இவனெல்லாம் யார் .....???? எனக்கு நீயெல்லாம் ஒரு ஆளா… என்ற ஏற்றம் இருந்தது மித்ரனிடம்..

என்னை நீயெல்லாம் ஏன்டா முறைக்கனும் என் அம்மு என்னைப் புரிந்துகொள்வாள்.. என்னை மன்னித்து விடுவாள் .
எனக்கு நான் நல்லவன் தான் போங்கடா….
அவள் ஒருத்திக்கு தான் நான் பயப்பட வேண்டும் ஆனாலும் அதற்கு அவசியம் இல்லை அவளே அதேக் காதலையும் அன்பையும் கொட்டிக் கொட்டி மீண்டும் அன்பு காட்டுவாள்.... என் மீது… என்ற இருமாப்பு இருந்தது….

இவனெல்லாம் என்ன பெரியப் புடலங்காய். .

என் பொண்டாட்டிய எப்படி கரெக்ட் பன்னும் எப்படி சமாதானம் பன்னனும்னு எனக்கு தெரியும் போங்கடா..

அவளாவது என்ன விட்டு போறதாவது..

ஹம்ம்...என்னை கூடவே இருந்து ஒரு வழிப்பன்னாம அவ்வளவு சீக்கிரத்துல அவளா என்ன விட்டு போய்டுவா.......?? இராட்க்ஷி

அந்தக் கடவுளுக்கே தெரியும் என் உயிர் அவ பக்கத்துல தான் இருக்கு... அவப் போனாலும் அடுத்த ஒன் ஹவர் எமன் கிட்டயே சண்டை போட்டாச்சும் சர்ட் காலரைப் புடிச்சி வாடானு என்னையும் கூப்டு போவாளேத் தவிர என்ன விட்டுட்டு போய்டுவாளா அவ....? போக விட்டுருவேனா நா.....????

ஹா...ஹா...ஹா....பக்கத்துல இருக்க கோவிலுக்கும் கடை தெருவுக்கும் கூட தனியாப் போகத் தெரியாதவடா...... என் பொண்டாட்டி... என ஒரு கணம் சிரித்தான் (மித்ரன்)..
அவனுடைய மெத்தனத்திற்கு காரணமும் இது தான்…. அவளுக்கு ஒவ்வொன்றிற்கும் மித்ரன் வேண்டும்… கோவத்தைக் காட்டவும் காதலை கொட்டவும் சண்டை போடவும் சமாதானம் தேடவும் அனைத்திற்கும் மித்ரனே வேண்டும்…
இப்போது நினைத்தாலும் சிரிப்பு வந்தது கூடவே கொஞ்சம் அழுகையும் தான்….
ஆம்…..
அடுத்த கணமே கண்கலங்க புலம்பினான் நீ ஏன்டி பொண்டாட்டி இவ்ளோ பயந்தாகோலியா இருந்த...??? அன்னைக்கு நீ போக நினைச்சு எல்லாம் பன்னப்போ உனக்கு விட்டுட்டேனே.... சாரி டி. என மனதோடு மன்றாடினார். ஒரு வேலை வயது அதற்கான முதுமையைக் கொடுத்த ஞானமாக இருக்கலாம்…..

நீ தைரியமா என்னை சண்டை போட்ருந்தா... கோவமா என் தப்ப கண்டிச்சி என்ன விட்டுட்டு போய்ருந்தா நான் மாறி இருப்பேன் ல...

பரவால்ல டி இப்போ மட்டும் என்ன இப்பயும் நான் நல்லவன் தான் அம்மு..... உன் அன்பு என்னை மாத்திடுச்சி அம்மு....
எவ்ளோ சண்டை போட்டாலும் என் கூட ஒரே தட்ல சாப்டு ஒன்னா தூங்கி கூடவே தான அம்மு. இருந்த.....அப்பயே நீ என்ன விட்டு போகல.... இப்போ மட்டும் என்ன விட்டுடுவியா நீ ....

என்ன விட்டு இந்த செல்ல உருளைக்கு எங்கையும் போகவும் தெரியாது... போகவும் முடியாது... ..போக கூடாது நீ...
ஆனால் அதெல்லாம் இவங்களுக்கு புரியாது டி....

அவ என் உயிர்... அவ சாகனும் நா அதுக்கு இந்த மித்ரனோட பர்மிஷன் வேணும் டா..மடையானு உன் நொன்னன் அந்து வளர்ந்து கெட்டவனுக்கு சொல்லனும் டி
அவ என் நித்து... என் அம்மு... என்ன விட்டு அவள போக விடமாட்டேன் ... போகவிட மாட்டேன்... போக விடவே மாட்டேன். என தன்னைமீறி கார் பார்க்கிங்கில் நிருத்திருந்த காரினுள்ளே இருந்து அலறனார். இது ஆப்ரேஷன் குறித்த பயமாகவும் இருக்கலாம்...

ஒரு சில நாழிகைகள் கடந்த பின்பு தான் அவர் செய்த காரியத்தின் வீரியம் புரிந்தது... அவருக்கு
யாராவது கவணித்தார்களோ என எட்டிப் பார்த்தார்...
ஒரு நிம்மதியானது. மூச்சுக்காற்று ஆசுவாசப்படுத்தியது மித்ரனை....மெல்ல அமைதியனார்...

மனம் தெளிவாக இருந்தது.. அவருக்கே சின்ன புன்னகைக் கூட வந்தது நானா அப்படி கத்தினேன்..??? உண்மையில் எனக்கு நேத்ராவை அவ்வளவு பிடிக்குமா அல்லது அவளுடையக் காதல் என்னை அப்படி மாற்றிவிட்டதா..?..

இருக்கும்... இருக்கும்.... எல்லாம் இந்த முட்டக்கண்ணி பன்னின காதலோட வேலை தான்.. இல்லைனா ஆனானப்பட்ட மித்ரனையே அழவைக்க முடியுமா...???கடைசில இப்படி தனியா புலம்ப வைக்க தான் முடியுமா...???ராட்சக்ஷி...

அடியே.....

அம்மு....அம்மூ... அம்மூ....மை...லவ்... உன்னை நான் விட்டுக்கொடுக்க மாட்டேன் டீ... உன்ன இனி என்னால முடிஞ்ச வரைக்கும் எவ்வளவு சந்தோஷமா முடியுமோ அப்படி பாத்துப்பேன் டி உருள....


உன்கிட்ட நா பேசனும் டி.. ...மனசுவிட்டு பேசனும் .... மானம் பாக்காம மன்னிப்பு கேக்கனும் டி... மனசுல பத்து வயசு கொறைஞ்சா மாதிரி இருக்கு டி..

இது வரைக்கும் நீ மிஸ் பன்னது எல்லாம் இனி உனக்கு பார்த்து பார்த்து மாமா செய்வேன் செல்லம்...
அதுக்கான முதல் ஸ்டெப் இப்போவே... இன்னைக்க்கே எடுக்கப்போறேன் டி ...
நான் பன்ன எல்லா தப்பையும் நானே சரி பன்றேன்…
நீ வீட்டுக்கு வா உனக்கு காலைல பெரிய சர்ப்ரைஸ் காத்துகிட்டு இருக்கும் பாரு. நீ கண்டிப்பா என்ன கட்டிப்புடிச்சி முத்தமே குடுத்தாலும் ஆச்சரியப் படுறதுக்கு இல்ல...

மனதிற்குள் எடுத்த சபதத்தோடு மீண்டும் மருத்துவமனை வளாகத்திற்குள் நுழைந்த மித்ரனின் விழிகளில் மகிழ்ச்சிப் புன்னகை..

வேகமாக முகிலனைத் தேடினான். முகலனிடம் சில பலக் கட்டளைகளைப் பிறப்பித்தான். முகிலனுக்கும் மகிழ்ச்சி தொற்றிக் கொண்டது...

ஆனால் முடியுமா அப்பா முடியாவிட்டால் அம்மா வருத்தப்படக்கூடாது இல்லையா...???

தெரியும் டா முகில் எல்லாத்தையும் அப்பா பாத்துக்குறேன்... எனக்கு உங்க அம்மாவ விட வேற ஒன்னும் இனி பெரிசு இல்லடா ..

அவ கூட இருக்குறது தான் என் பலம்... அவ சந்தோஷத்துக்காக நான் எதையும் இழக்க தயாரா இருக்கேன்.
என்னால அவ நிறைய பட்டுட்டா டா... போதும் டா ... எல்லாம்.... போதும்...

முகிலின் மனதில் தாய் தந்தையரின் மீதான அன்பும் மரியாதையும் உயர்ந்தது... முகிலனுக்கு....அவனையும் மீறி லைட்டா பொறாமைக் கூட வந்தது ... அதையும் வாய்விட்டேக் கூறிவிட்டான்...

மித்ரன் சிரித்தார் ... இதெல்லாம் உங்க அம்மாவோட அன்புக்கு முன்னாடி ஒன்னுமே இல்லடா...
சரி நீ போ நான் சொன்த மறக்காத. நாளைக்கு எல்லாம் தயாரா இருக்கனும் யாழ பத்திரமா பார்த்துக்கோ... அவளை சமைக்க வேண்டாம்னு நான் சொன்னதா சொல்லு...

அவளுக்கு நைட் டின்னர் பிடிச்ச மாதிரி ஏதாவது வாங்கிக் கொடுத்து நீயும் சாப்டு பத்திரமா கதவை பூட்டிட்டு இருங்க...

நான் நாளைக்கு உங்க அம்மாவோட வரும்போது அவ 100% எக்ஸைட் ஆகனும் டா... நீ வீட்டுக்கு கிளம்பு...

தாத்தா பாட்டியெல்லாம் ரொம்ப வயசானவங்க இங்க ஸ்டே பன்னவோ ரொம்ப நேரம் இருக்கவோ முடியாது . அவங்களையும் பத்திரமா வீட்டுக்கு கூட்டிட்டு போய்டு...

கார் சாவி எடுத்துக்கோ ... நாளைக்கு எனக்கு ஒரு டிரஸ் மட்டும் ரெடி பன்னிட்டு காரோட வா நாம சேர்ந்தே வீட்டுக்கு போலாம்.(மித்ரன்)
ஓகே பா.... டன்...டன்...

பின்பு நேத்ராவின் நலன் கருதி செவிலியர் யாரையும் அதிக நேரம் பேச அனுமதிக்கவில்லை. செல்வம் மட்டும் சில நிமிடங்கள் கூடுதலாக உரையாடிவிட்டு வெளியே விரைந்தார்


அத்துடன் பார்வையாளர் நேரம் முடிந்து நேத்ரா ஓய்வாக கண்ணயர்ந்தாள்...

மருத்துவர் இரவு ஒருமுறை அனைத்து பதிவுகளையும் பார்த்துவிட்டு ஓய்வவெடுக்கும்படி பணித்துவிட்டு நகர்ந்தார்.

இரவு ஒருவர் மட்டுமே மருத்துவ மனையில் தங்க அனுமதி என்பதால் மித்ரன் தங்கினார்.

இரவு செவிலிப் பெண்ணிடம் தானே அவளை கவனித்துக் கொள்வதாக வேண்டி அவளது அறையிலையே அமர்ந்துவிட்டார்.

நேத்ராவின் அருகில் நாற்காலியை சத்தமில்லாமல் நகர்த்தி அமைதியாக அவளுடைய விரல்களைக் கோர்த்துக் கொண்டு தலை முடியை நெற்றியோடு வருடினார் .

முன்னெற்றி வகுட்டில் குங்குமம்... நேற்றியில் குட்டி ஸ்டிக்கர் போட்டு எந்த நகைகளும் இன்றி அமைதியாக மருந்தின் தாக்கத்தில் மழலையாக அயர்ந்து உறங்கும் மனைவியை பார்த்துக் கொண்டே இருந்தார்...

எப்போது உறக்கம் அவரையும் தழுவியது என்பதை நானே அறியவில்லை என்றால் பாருங்களேன்.

இடையே ஒரு முறை நேத்ரா புறண்டு படுக்க எத்தனிக்கையில் தான் மித்ரனைப் பார்த்தார்... ஓய்...மித்த…. டேய்... டேய் மைதாமாவு என தட்டினாள்….

மித்ரன் அதிர்ச்சியோடு தூக்கிவாரிப்போட என்ன அம்மு என்னடி பன்னுது என அலறினார்.

நேத்ராவே அந்த பதட்டத்தில் பயந்துவிட்டார் ..ஒன்னும் இல்லைங்க... ஏன் இப்போ ஊரையே ஒன்னாக்கப் போர மாதிரி கத்துரீங்க...???

எனக்கு ஒன்னும் இல்ல இங்க ஏன் இப்படி தூங்குறீங்க ???வீட்ல பசங்க தனியா இருப்பாங்களே போகலாம் ல...

அதெல்லாம் முகில் யாழ பாத்துப்பான் அம்மு. எனக்கு தூக்கம் வருது என தூங்க முயன்றிட ...நேத்ரா புன்னகைத்தார்.

இப்போது தலை வருடி உறங்க வைப்பது அவருடைய முறையானது..

திடீரென எழுந்த நேத்ரன் அம்மு உனக்கு நாளைக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு டி ....என கூற வந்தவர் அடுத்த கணமே மௌனமானார்.

நேத்ரா பதட்டமாக என்னங்க என்க. . இல்ல அம்மு குட்நைட் சொல்லலாம்னு எழுந்தேன்.... என்க நேத்ரா சிரித்தாள்.

சிரிடி பொண்டாட்டி இப்போவே சர்ப்ரைஸ் னு சொன்னா நீ தூங்கவே மாட்ட மாமா காலைல சொல்றேன்... என மனதில் நினைத்துக் கொண்டார்.
நேத்ரா அவரை உற்று பார்த்துவிட்டு கொஞ்சம் தண்ணீர் கேட்டாள். எடுத்துக் கொடுத்தவுடன் குடித்துவிட்டு அமைதியாக படுத்துக் கொண்டாள்.
மித்ரன் நேத்ராவின் குணமறிந்து அவளுக்கு போர்த்திவிட்டு குட்நைட் கூறி நெற்றியில் முத்தமிட்டுவிட்டு. தானும் அவளருகே அமர்ந்து நிம்மதியாக உறங்கிவிட்டார்.

காலைப்பொழுது இதமாக விடிந்தது. நேத்ராவின் சர்ப்ரைஸ் தயாராக உள்ளது என முகிலிடமிருந்து மித்ரனுக்கு ஃபோன் வந்தது.

மித்ரன் புன்னகையோடு நேத்ராவிடம் அம்மு உனக்கு வீட்டுக்குப் போனதும் ஒரு சர்ப்ரைஸ் காத்திருக்கிறது என்றார்.

நேத்ரா கண்கள் விரிய என்ன டா ... என்றார்.. .

மறியாதையாக் கேளு டி அப்போதா சொல்வேன்.
சரி என்னங்க டா... சர்ப்ரைஸ்...
ம்ம்ம்ஹூம். ...ம்ம்ம்.ஹூம் . போடி உனக்கு சொல்ல மாட்டேன் வீட்டுக்கு வந்து நீயே பார்த்து தெரிஞ்சிக்கோ எனக் கூறிச் சிரித்தார்.



தொடரும்…
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top