• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

தீராத் தீஞ்சுவையே...9

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

யாழ் மொழி

நாட்டாமை
Joined
May 10, 2020
Messages
30
Reaction score
85
Location
Chennai
தீராத் தீ_____9


நைனிகா விடம் தப்பித்த முகிலன் மாடிக்கு சென்று தங்கையின் அன்பு மழையில் நனைந்தான்… மனம் குதூகலித்தது ஏனோ...

அம்மாவும் பெண்ணும் இன்னும் கட்டிப்புடி வைத்தியத்த முடிக்கலையா என சிரித்தவன் தந்தையோடு ஐஃபை போட்டுக்கொண்டு நின்றான்...

நேத்ரா இருவரையும் முறைக்க சிரித்துக்கொண்டே மெல்ல வெளியேறினார்..

முகில் தந்தையைப் பார்த்துவிட்டு மெல்ல மாடியில் நின்று பேச்சு கொடுத்தான்... அம்மாவுக்கு சந்தோஷத்தை பார்த்தீங்களா அப்பா...

இதை ஏன்பா இத்தனை வருஷம் கிடைக்காம பன்னீங்க... ???
அவங்க எவ்வளவு பாவம் தெரியுமா... நானே இந்த விஷயத்தினால உங்க மேல டூஊஊ....போங்க...

மித்ரனுக்கு சிரிப்பு வந்தது கூடவே கடந்த காலமும்... அதற்குள் முகில் மீண்டும் மீண்டும் ஏதோக் கேட்டு அவரை சுரண்டிக்கொண்டு நின்றான்...

நினைவிலிருந்து விழித்த மித்ரன் என்னடா என்றார்...

ப்பா ...... ஒன்னு கேட்டா திட்ட மாட்டீங்களே ...

என்னடா....

அந்தா போகுதே அந்த பச்சை கலர் தாவணி... அது எனக்கு என்ன சொந்தம்... ஐ...மீன்.... நான் எப்படி கூப்பிடனும் நைனிக்காவை பார்த்துக்கொண்டே கேட்டான்…

பாரதியோடு அவளை பார்த்தாலும் ஒரு வாய்வார்த்தைக்காக உறுதிபடுத்தி கொள்ள கேட்டுவிட்டான் தான் ஆனாலும் உள்ளுக்குள் சிறு குறுகுறுப்பு ஓடியது..

மித்ரன் யார்…. அவனுக்கு தந்தை இல்லையா ...மகனின் நோக்கம் புரிந்து குதற்கமாக தங்கச்சிடா... என்று ஆழம் பார்த்தார்...

முகிலின் முகம் சுண்டைக்காய் மாதிரி சுருங்கியது ...
பின்பு வேண்டுமென்றே உங்க செல்வம் மாமா பொண்ணுடா என்றார்...

முகிலுக்கு மண்டையில் பல்ப் எறிந்தது...

ப்பா.... அப்படினா மாமா வோட பொண்ணு எப்படிப்பா தங்கச்சி ஆகும்... ???, எனக் கோவமாக கேட்டான்...

சிரித்த மித்ரன் எல்லாம் உன்னைவிட வயசுல சின்ன பொண்ணுதானே டா... அதா தங்கச்சினு சொன்னேன் என்றார்...

போங்கப்பா உங்க கிட்ட கேட்டேன் பாருங்க எனக் கீழே நைனிகாவை விழிகளால் வருடிக்கொண்டே... இல்லை... இல்லை.... வழிந்துக் கொண்டே நின்றான் ..

மித்ரன் சற்றே கடுப்பாக... டேய் முகில் நா ஒருத்தன் அந்தக் குடும்பத்துல வாக்கப்பட்டே படாத பாடு படுறேன்... இப்போ நீயுமா... என சலித்துக் கொண்டார்...

முகிலனோ ... ஏன்பா கதை விடுறீங்க... அதான் அம்மாவ லவ் மேரேஜ் பன்னீங்களா... ??

அதான் டா எனக்கே புரியல... நான் லா எங்க ....??? எப்படி ...?? இருந்தவன் தெரியுமா... ?? ஏரியால .. வேலை பார்த்த எடத்துலனு அவ்வளவு பொண்ணுங்க அப்பாவ சைட் அடிச்சாங்க டா...

எத்தனை பேரு என்ட தானா வந்து ப்ரப்போஸ் பன்னாங்க தெரியுமா... கடைசில எப்படியோ உங்க அம்மா என்னை மொத்தமா கவுதாதுட்டா டா முகில் ......

அதெல்லாம் ஒரு கெட்ட கனவுடா... நான் நெனைக்கிறதே இல்........ ல என பேசிக்கொண்டே திரும்பிட...

ஆங்கே.

நேத்ரா தீர்க்கமான பார்வைகளால் முறைத்துக்கொண்டிருந்தார்...

ஐயய்யோ அவசரப்பட்டு அக்கம் பக்கம் பார்க்காம உண்மைய உலறிட்டேனே.... கடவுளே என்ன காப்பார்த்து என வேகமாக நழுவப் பார்த்தார்...

நேத்ரா முகிலிடம் திரும்பி கெட்ட கனவா...

இனிமைல் கஷ்ட்டப்பட வேணா.. உங்க அப்பாவ டைவர்ஸ் பன்னிட்டு போக சொல்லுடா என எகிறினார்...

அம்மு ...அம்மு நான் விளையிட்டுக்கு சொன்னேன் டி ... சத்தியமா என சரணடைந்தார். நேத்ரா வேகமாக சென்று டமால் என கதவடைத்தார்...

போச்சுடா.... உனக்கு உதவ போய் எனக்கு நானே ஆப்பு வைச்சிகிட்டேனே.... போடா இன்னைக்கு மாடில தான்... தூங்கனும் என புலம்பினார்...
ஏற்கனவே மாசத்துக்கு ஒரு பீருக்கே உங்க அம்மா கிட்ட கிரிகாலன் மேஜிக் ஷோ மாதிரி குட்டிகரணம் போடனும்… இப்போ நானே சொந்தமா அதுக்கும் ஆப்பு வச்சிகிட்டேன் போடா...
மாமா பொண்ணு தங்கச்சிடானு சொல்லி கடுப்பேத்தின உங்களுக்கு இந்த பனிஷ்மெண்ட் கொஞ்சம் தான் ப்பா.... வாங்க வாங்க....

இரவு உணவிற்கு வீடே தடபுடலாகத் தயார் ஆனது... சப்பாத்தி... குருமா... இட்டலி..சட்னி... சாம்பார்... கிச்சடி ... என மணம் கமழ இரவு உணவு தயாரானது...

செல்வத்தின் உதவியால் கண்ணம்மா ஆச்சியின் கையும் கூடுதலாக.... சமையலறை தூள் பறந்தது...

அனைவரும் வட்டமாக அமர வேண்டியதை ஒருவருக்கு ஒருவர் பரிமாறி விருப்பம் போல வெளுத்து கட்டினர்...

சுகர்..பி.பி...க்கு பயந்த அடங்கிக்கிடந்த நாவெல்லாம்.... அடப் போங்கடா என தாராளமாக களத்தில் இறங்கி வெட்டு வெட்டியது...

சண்டையும் கோப தாபங்களும் காணமல் போக எல்லோரும் நிறைவாகவே இரவு விருந்தை முடித்து கதையளக்கவும் தூங்கவும் செல்ல ....

யாழுக்கு விளையாட நான்கு புதிய நண்பர்கள் கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி... கதிர் மற்றும் பன்னீரின் மூன்று ஆண் இரு பெண் என இருந்த பட்டாளத்தில் யாழும் புகுந்து கொண்டாள்... பன்னீருக்கு இரு மகன்கள் ரித்திக்,, சாதிக் மகள் மேக்னா கதிருக்கு ஒரு மகள் தன்ஷிகா மகன் ஆஷிக்.... இந்த பட்டாளத்தில் யாழும் இணைந்து கொண்டாள்...

உணவு முடிந்து பாரதியும் விஜியும் அனைத்தையும் ஒழுங்கு படுத்த சந்தியாவும் உதவியாக உடனிருக்க அருகில் வந்த நேத்ராவிற்கு மனம் சற்று சங்கடமாக இருந்தது... சாரி அண்ணி... வீட்டுக்கு வந்த விருந்தாளி உங்களையே சமைக்கும்படி விட்டுட்டேனு சச்கடமா இருக்கு..என்னை மன்னிச்சிடுங்க...

ஏய்... என்னடி இது எத்தனை வருஷம் கழிச்சி இப்படி எல்லாரும் சேர்ந்து சந்தோஷமா இருக்கும்போது நீ தேவையில்லாம யோசிச்சி உன் மனச குழப்பாம போய் படு போ...போ... போடி நித்தி... நேத்ராவிற்கு நிறைவாக பெருமிதமாகக் கூட இருந்தது மேலே வந்தவர் சன்லை நோக்கி நடந்தார்...

இரவை ஊடுருவி பார்த்து சிரித்தார்...
கையின் தழும்பைத் தடவி எல்லாம் ஏதோ ஒரு காரணத்தோடு தான் நடக்கும் போல என தனியேப் பேசிக் கொண்டிருந்தார்...

முகிலனுக்கோ நைனிகா வை முறைப்பெண் எனத் தெரிந்த பின்பு ஏதோ ஒரு புரியாத உணர்வுடன் உரிமையும் இனணந்து கொண்டது...

அவளை அன்றும் கல்லூரியில் சரியாக கவனிக்கவில்லை. இன்றும் சண்டைக்கோழி போல சண்டை போட்டு நழுவிட்டா.... அன்னைக்கு அப்பாவி மாதிரி திரு ....திருனு முழிச்சா .. இன்னைக்கு விட்டா தாவணிய ஏத்தி சொருகி மல்லுகட்ரவ மாதிரி மொரைக்கிறா...

பரவால்ல ...டா.. முகில்... குடும்பம் னா அப்படி இப்படி தானே இருக்கும். என அவனேத் தேற்றிக் கொண்டு புன்னகைக்க... அங்கே இன்னொரு மூலையில் செல்வம் நின்றிருப்பதைப் பார்த்தான்.....

முகிலுக்கு பல தீராத கேள்விகளும்... தெரிந்தே ஆக வேண்டிய புதிர்களும் இருந்தது அதைத் தெளிய வைக்க செல்வத்தால் தான் முடியுமென நம்பினான்...

வருங்கால மாமனார் வேறு... நெருங்கிச் சென்று பேச முனைந்தான்...

அவன் வாய் திறக்கும் முன் அவரே... கேட்டுவிட்டார்..... என்ன மறுமகனே தூக்கம் வரலையா...

மறுமகனே... மறுமகனே... ஆஹா ... அந்த வார்த்தையை செல்வத்தின் வாயால் கேட்ட முகிலுக்கு தோளோடு இறகே மூளைத்தது.... புன்னகையோடு இல்லை மாமா சாப்பிட்ட உடனே படுக்க கூடாது.... இது அம்மாவின் விதிமுறை அதான் கொஞ்சம் நடக்கலாம்னு ... என இழுத்தான்....

செல்வமும் காதல் திருமணம் புரிந்தவர் தான் மாலை முகிலுகாகும் நைனிகாவிற்கும் நடந்த மோதலையும்.. இரவு உணவின் போது முகிலின் கண்களில் வழிந்த காதலையும்.. நைனிகாவின் பதட்டத்தையும் வெட்கத்தையும் தெளிவாகத் தன் கேமராக் கண்களால் பதிவிரக்கம் செய்திருந்தார்
ஆனால் அது மனதிற்கு கொஞ்சமும் ஒப்பவில்லை… தங்கை ஒருத்தி பட்ட பாடே இந்த குடும்பத்தோடு போதும் என்று தான் தோன்றியது… ஆனாலும் வெட்டி விட நினைத்து தானே அதை உறுதிபடுத்திக் கொள்ளக்கூடாது என்று அவரும் தட்டிக் கொடுத்து பேசினார்...
முதல்ல படிப்ப முடிங்க மறுமகனே... அடுத்து உங்க எதிர்காலத்தை சரியா முடிவுபன்னிட்டு அதுல முன்னேறுங்க.. அதுக்கு பிறகும் உங்க மனசுல என் பொண்ணு இருந்தா நீங்க தான் என் மாப்ள... இல்லை அந்த அந்த கால கட்டத்துக்கு தகுந்த மாதிரி மனசு மாறிட்டா...

இந்த ஒரு வாரக் காதலால என் பொண்ணு மனசு கலங்க கூடாது...

ஏற்கனவே என் தங்கச்சி என் பேச்ச கேக்காம நிறைய அனுபவச்சிட்டா... என் பொண்ணையும் நான் அப்படி பார்க்க முடியாது மறுமகனே... நீங்க புரிஞ்சிக்கிட்டீங்கனு நினைக்கிறேன் என்றார் செல்வம்...

முகிலுக்கு கால்கள் பூமியிலிருந்து நழுவியது காதல் வந்த ஒரு மணி நேரத்தில் வில்லன் இன்ட்ரோவா....
இப்போ உண்மையா என் காதலுக்கு வில்லன் என் அப்பா வா....??.இல்ல மாமா ....வா???
முழிப்பிதுங்க அவன் நின்றிருக்க... செல்வம் குட்நைட் மறுமகனே எனக் கூறி விலகினார்...

முகில் சிலையாகி சிந்தையில் விவாதித்துக்கொண்டு இருந்தான்....

மித்ரன் மேலே முகிலைத்தேடி வந்தார்...

என்னடா தூங்க போகாம சிலையாட்டம் நிக்கிற...
இந்த மனசு சொல் பேச்ச கேக்கவே மாட்டுது ப்பா.... என்றான்.
மனசு சொல்பேச்ச கேக்கும் டா முகிலா ....
காதல் தான் என்ன சொன்னாலும் கேக்காது....எனப் புன்னகைத்தார்...

முகிலுக்கும் அந்த புன்னகை தொற்றிக் கொண்டது.. fact.....fact...fact... எனப் புலம்பினான்...

மித்ரனைத் தேடி நேத்ராவுமே மாடிக்கு வந்து சேர்ந்தார்.... இருவரும் பேசிக்கொண்டு நிற்க நானும் வரலாமா எனக் கேட்டு நின்றார்....


ம்ம்மா.... வாங்கம்மா... இதுக்காக பர்மிஷன் கேக்கலாமா வாங்க ... வாங்க .. எற மேல்ல தூண்டில் விரித்தான்....
ம்மா
என்னடா
உன்னை ஒன்று கேட்பேன்….
உண்மை மட்டும் தான் வரும் கேளு
கேள்விய ஸ்கிப் பன்ன கூடாது….
ம்ம்ம்ம் சாயுங்காலம் அப்பா இப்போ நானா…
ம்மா… பிளீஸ்...
உங்க கிட்ட ஒன்னு கேட்டா பதில் சொல்வீங்களா....??
கேளுடா முகில் உன்கிட்ட சொல்லாம யாருகிட்ட சொல்லப் போறேன்...

நீங்களும் அப்பாவும் எப்ப... எப்படி லவ் பன்னீங்க... எப்படி வீட்ல கன்வின்ஸ் செஞ்சி மேரேஜ் பன்னீங்க எனக் கேட்டான்..

நேத்ராவும் மிதாரனும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்தனர்... நேத்ரா சொல்லுங்க என்றார்.....மித்ரனிடம்.

மித்ரனோ அய்யோ அம்மு இந்த விளையாட்டுக்கு நான் வரல... என பின் வாங்கினார்..
நேத்ரா அமைதியாக நின்று இரவை இரசிக்க முகில் மீண்டும் மீண்டும் பிளீஸ்....மா.... பிளீஸ்மா என வேண்டினான்...

நேத்ராவின் கரங்களைப் பற்றிக் கொண்டு சொல்லுங்கமா என அடம் பிடித்தான்.... மித்ரனும் ஆவலாக அவள் முகத்தை ஊடுருவினார்...
அவள் என்ன சொல்வாள்… என் காதலை மட்டுமா என் பாவத்தையுமா… கொஞ்சம் உள்ளே கலக்கவும் செய்தது அதையும் மீறிய எதிர்பார்ப்பு இருந்தது அவர் விழிகளில்...

நேத்ராவின் புன்னகையில் வேட்கம் இழையோடியது... மெல்ல மித்ரனை பார்த்துவிட்டு முகிலிடம் சொல்லத் தயாராகினார்...

காதல் யாருடைய சொல் பேச்சைத் தான் கேட்டிருக்கிறது..... பதிலாக... கோடி வருடம் கடந்தாலும் இளமையோடு இருப்பது காதலாக மட்டும் தானே... இருக்க முடியும்

நேத்ராவிற்கு வெட்கத்தோடு காதல் காலம் இளமையாக கண்முன் விரிந்தது...

நாங்க... நாங்க ....நாங்க....ரெண்டு பேரும் ஒருத்தர ஒருத்தர் பார்த்து பேசி காதலிக்கல முகில்... ஏன் முகத்தைக் கூட பார்க்காம தான் உங்க அப்பா என்னையும் நான் உங்க அப்பாவையும் காதலிச்சோம்.....


__ தொடரும்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top