• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

தேன்மழையில் சில்வண்டின் உளறல்---2

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,980
Location
madurai
அன்புத் தோழமைகளே!.. மறுபடியும் என்னோட உளறலை இங்கே கொட்ட வந்துட்டேன்... silentaa படிச்ச என்னோட friends எல்லாம் violenta மாறி முகத்துல காறி துப்பிட்டாங்க......இளவரசர நாட்டை விட்டு போக வச்சதுக்கு.....

“ஒழுங்கா சோழ இளவரசர் ஊருக்கு போக ரூட்டை சொல்லு இல்லனா தீர்ந்தே நீ ப்ளாக்மெயில் பண்ணறாங்க... அதான் நல்ல பிள்ளையா இளவரசருக்கு வழிகாட்ட வந்துட்டேன்... நான் காட்டுன வழியும் அவர் ஊர் போய் சேர்ந்த விதமும் முழுக்க முழுக்க என்னோட கற்பனை.. கற்பனை... கற்பனை மட்டுமே... நீங்களும் படிச்சுட்டு இந்த வழி சரியா? இல்லையானு உங்க கருத்த இங்கே சொல்லிட்டு போங்க.... நல்லா இருக்குனு சொல்றவங்க comment boxleyum வேற ரூட் போட்டுகுடு இந்த வழி சரியில்லன்னு சொல்றவங்க இன்பாக்ஸ்லேயும் வந்து சொல்லிட்டு போங்க உங்க கருத்துக்களை கேட்க நான் ஆவலோட waiting friends....


தேன்மழை--2
பொழில் (Rainforest, மழைக்காடு) என்பது அதிக மழை வளத்தால் செழித்து இருக்கும் காடுகள்ஆகும். பொழிதல் என்றால் மழை பெய்தல் என்னும் பொருள்வழி பொழில் என்றாயிற்று. இச்சொல் இன்றைய. அறிவியலில் மழைக்காடு என்று அழைக்கப்படுவதுதான். இது மனிதரும், விலங்குகளும் காட்டினூடாக இலகுவில் நடந்து செல்வதற்கு வசதியாக அமைகிறது.

அவ்வகையயாய் அமைந்த அடர்ந்த மழைகாட்டுக்குள் அடைமழையில் இருந்து தன் பெண்ணனங்கை காக்கும் பொருட்டு குகையினில் தஞ்சமடைந்த சோழ இளவரசனை விடிந்ததின் அடையாளமாய் பறவைகளின் கீச்சிடும் ஒலி எழுப்பியது........



விடியலில் பறவைகளின் பூபாளத்தில் கண் மலர்ந்தவனுக்கு தன் அருகே தன்னையே அணைவாய் பற்றிக்கொண்டு உறங்கிக் கொண்டிருக்கும் தன் மனையாளைக் கண்டவுடன் மனம் எங்கும் ஆனந்த கூக்குரலிட்டு அவளைக் கொஞ்சிக் கொண்டது......



முன்னிரவில் தன் கூற்றிக்கு மறுப்பேதும் சொல்லாமல் தன்னைச் சரணடைந்தவளை காணக்காண தெவிட்டவில்லை அவனுக்கு.....மென்மையாய் தொடங்கிய அவனின் முற்றுகை நாழிகை செல்லச்செல்ல வன்மையாய் மாறி அவளின் பெண்மையை மொத்தமாய் களவாடி நிமிர்ந்தவனை ஏறெடுத்து பார்க்கவும் முடியா வண்ணம் அவளை நாணம் வந்து ஆட்கொண்டது.....

பேசாமடந்தையாய் தன் வதனத்தையும் மறைத்துக்கொண்ட வஞ்சியை கெஞ்சியும் கொஞ்சியும் தன்னிடம் பேசிய பின்பே அவன் மார்பில் துயிலவிட்டான்.....

தன்மேல் படர்கொடியாய் படர்ந்திருந்த மென்னிடையாளின் மெல்லிய கையை மென்மையாய் எடுத்து விட்டான்.....

மன்னனின் அசைவிலேயே மங்கையவளும் மலர்ச்சி பெற இருவரின் பார்வையும் ஒருவரையொருவர் தழுவி மீண்டது.....

வதனம் சிவந்து தாமரை நயனங்கள் தாழ்ந்தாலும் அவளின் அதரத்தின் மரு அவனுக்கு மீண்டும் அவளை நாடும் எண்ணத்தையே தோற்றுவித்தது......

தான் கலைத்ததால் வந்த அவளின் களைப்பிற்கு தன்னை தானே நொந்து கொண்டவன் மனதினில் ஏற்பட்ட கிளர்ச்சிற்கு தற்காலிக அணையை கட்டினான்.....

அவனின் கூர்ந்த பார்வையை உத்தேசித்தவள்.....” என் வதனத்தில் தங்களின் அடுத்த செயல் யாதென்று தெரிகின்றதா? அரசே!.....” என்று பரிகாசத்துடன் வினவினாள்......

அவளின் பரிகாச பேச்சு சினங்கொள்ள வைத்தது அவளின் முன்கோபக்காரனுக்கு......

“இங்கே எந்த அரசர் இருக்கிறார் என்று கூறினால் அவரிடமே நான் கேட்டுக் கொள்கிறேன் தேவி!....” என்று சினம் கட்டினான்.

“தங்களையன்றி வேறு எவரை நான் அரசே என்று விளிப்பேன்!....எம் அரசர்!... வேந்தருக்கு வேந்தர்!.... வருங்கால சோழச் சக்கரவர்த்தி!... என்றும் எந்தன் மஹானுபாவனர்!... தாங்கள் மட்டுமே!...” என்று கூறி

அவனை குளிர்விக்கும் வேலையை செவ்வென செய்து மனதிற்குள் நகைத்துக் கொண்டாள்....

மனதின் வெளிப்பாடு அவளின் முகத்திலும் தெரிய அவளின் முக வடிவை தன் கைகளில் ஏந்தியவன் “தன்னடக்கத்திலும் சிறந்தது நாவடக்கம் தேவி!.... அதை இக்கணம் தாங்கள் செய்தே ஆக வேண்டும்”.....

“உமதருமை தலைவன் இக்கணம் ஏதுமற்ற நாடோடியாய், பராரியாய் இருக்கின்றேன்!.... இன்றைய பொழுது தங்களின் பசியாற்ற வழிவகை செய்யாது தவிக்கின்றேன்!...” என்று நகைப்புடன் ஆரம்பித்து துயரத்துடன் முடித்தான்.

அவனின் இந்த பேச்சு பாவையவளின் உயிர் நாடி வரை சென்று பதற வைக்க கண்களில் கண்ணீரை சிதற விட்டாள்......

அதை காண சகியாதவனாய் “தங்களின் வேடிக்கை பேச்சிற்கு வேடிக்கையாகத் தான் விடை பகிர்ந்தேன் தேவி!.... ஏன் இந்த கலக்கம்!...”

“குடிமக்கள் கண்கலங்கினால் அரசன் மீது தான் பிழை சொல்வார்கள்....தங்களின் இந்த கலக்கமும் என்னையே குறை சொல்லும்...இந்த நாடோடி அரசனுக்கு தங்களின் சன்மானம் இவை தானா?....” என்று கூறி பெருங்குரல் எடுத்து நகைத்தான்.

“பரிகாசம் வேண்டாம்.... என்றும் தாங்கள் தான் எனக்கும் இந்நாட்டு மக்களுக்கும் அரசர்!...” என்று கோபத்துடன் முடித்தவளின் இடையினை தன்னை நோக்கி இழுத்து நெற்றி முட்டியவன் “தங்கள் சித்தம் என் பாக்கியம் தேவி!...” என்று கண் சிமிட்டினான்...

“ மகிழ்ந்தேன் பக்தரே! தற்சமயம் தங்களின் தேவிக்கு சிரமப்பரிகாரம் செய்தே ஆகவேண்டிய சமயம் இது.... அதற்கு வழிவகை செய்தால் இந்த அடியவளின் மனம் சாந்தி பெறும்...”

“அடியவளுக்கு பணி செய்து கிடப்பதே அடியேனின் கடமை...” என்றவனை முறைத்தவள்.... “ போதும் வேடிக்கைப் பேச்சு.... அரசருக்கு சித்தம் கலங்கி விட்டது போலும்!..... தேவி உபாசகராக மாறி விட்டார்....”

உனது வேல் விழியின் வீச்சும், செம்பவள அதரத்தின் சிவப்பும் நித்தமும் என்னை பித்தனாக்குகின்றன தேவி!....” என்று அணைப்பை இறுக்கி அவளை விடுவித்தவனின் முகம் இறுக்கத்தை தத்தெடுத்துக் கொண்டது.

அந்த குகையை சுற்றி தன் பார்வையை சுழல விட்டவன் அங்கே ஒரு மூலையில் கிடந்த உளி, கூர் கத்தி, சிறிய ஈட்டி, ஆகியவற்றை கூர் தீட்டி இடை கச்சையில் வைத்துக் கொண்டான்...

பின்பு வெளியே வந்தவன் “ தேவி! இங்கிருந்து முன்னே கிழக்கு நோக்கி சென்றால் பூம்புகார் துறைமுகத்தை நாம் அடையலாம்...ஆனால் இப்போதைய நம் நிலை அங்கே செல்வதற்கு உசிதமல்ல..... நேற்றைய சம்பவங்கள் நாட்டினில் கசிய தொடங்கியிருக்கும்..... தேடுதல் வேட்டையில் உள்ள பாண்டிய ஒற்றர்கள் எந்நேரமும் நம்மை தாக்க நாலா பக்கமும் சஞ்சாரித்திருப்பர்..... ஆகையால் நாம் காட்டினில் தஞ்சம் அடைவதை தவிர வேறு வழியில்லை....” என்று தன் முடிவை உரைத்தான்..

“நேற்றைய இரவு காட்டினில் நடந்தவைகள் அதற்குள் எப்படி நாட்டிற்குள் எப்படி தெரிய வரும்? அரசே!...” என்று கேட்டவளுக்கு



“ சோழ நாட்டில் வீசும் காற்றுக்கும் காது உண்டு தேவி!....நாம் தான் தகுந்த முன்னெச்சரிக்கையுடன் செயல் பட வேண்டும்...” என்றுரைத்து அவளை அழைத்துக் கொண்டு குகையின் ஊடே செல்லும் பாதை வழியாக காட்டின் உள்ளே தன் பயணத்தை தொடங்கினான்.....

மழைபெய்து கொண்டே இருப்பதால் சிறு சிறு ஓடைகளாக நீர் சென்று கொண்டே இருந்தது.... அவ்விடத்திலேயே தங்களை சுத்தப்படுத்திக் கொண்டவர்கள் அங்குள்ள கனிகளை பறித்து பசியாற்றிக் கொண்டனர்....

சிறய ஓடைகள் ஒன்றாய் சேர்ந்து ஆறாக ஓடிய இடத்தில் மேற்கொண்டு செல்ல வழியில்லாமல் மரங்கள் அடர்ந்து காணப்பட்டன...

அந்த ஆற்றை கடக்கவென மரப்பாலம் ஒன்று தென்பட்டது. நீளமான நாணல் மற்றும் பல வகை நார்களைப் பயன்படுத்தி, பெரிய கயிறுகளை உருவாக்கி அதில் குச்சிகள் கட்டைகள் ஆகியவற்றைப் பினைத்து திண்மையாக இருந்த அந்த பாலத்தின் மேலே ஏறி எதிர் திசையை அடைந்தனர்....

அங்கே கொய்யா. மாதுளை மரங்கள் நிறைந்து பழ தோட்டமாக காட்சியளித்தது. அந்த மரங்களை கொடியாக பற்றி கோவைக்காய் தாவரம் படர்ந்திருந்தது... சுற்றிலும் கண்களை சுழற்றியவன் ஒரு வித சங்கேத ஒலி எழுப்பினான்..... கரிகாலன் ஒலி எழுப்பிய சில நொடிகளில் புறா ஒன்று அவன் தோளில் வந்தமர்ந்தது.....

பறவையை கரங்களில் ஏந்தியவன் கோவைக்காய் ஒன்றை பறித்து அதற்கு கொறிக்க கொடுத்தவன் கொய்யா இலையையும், மாதுளை இலையையும் நாரில் திரித்து அதன் இரு பக்க கால்களிலும் பக்கத்திற்கு ஒன்றாக கட்டி விட்டான்.....
 




Last edited:

srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,980
Location
madurai
மீண்டும் அதே சங்கேத ஒலி எழுப்பியவுடன் புறாவும் பறந்து சென்றது... இந்த செயலை விழி அகற்றாது பார்த்தவளிடம்...

“ இதுவும் ஒரு வகையான ஒற்று வேலை தான் தேவி!.... இன்னும் ஒரு முகூர்த்தத்தில்(1 நாழிகை = 24 நிமிடங்கள் 3.75 நாழிகைகள் = 1 முகூர்த்தம்) நம்மை தேடி ஒருவன் வருவான்.... அதுவரை நாம் இங்கே நிற்பது நம்மை சிரமத்தில் ஆழ்த்தி விடும்... காட்டெருமைகள் உலாவும் பகுதி இது... நாம் இந்த மரத்தின் மேலேஏறி விடலாம்..” என்றவன் அவளை முதலில் ஏற்றியவன் பின்னே அவனும் ஒரு பெரிய மரக்கிளையின் மீது அமர்ந்து சுற்றுப்புறத்தை ரசிக்கத் தொடங்கினான்...

“யாருமற்ற இந்த அத்துவானக்காட்டில் எவர் வருவர் அரசே!....” என்றவளைப் பார்த்து ... “ யாருக்குத் தெரியும்..... தோழனோ... வைறியோ...வரட்டும் பார்க்கலாம்...” என்று நகைத்தான்.

“ வாள் வீச்சில் தந்திரத்தை காட்டுபவர் வாய் ஜாலத்திலும் மாயவித்தை காட்டுகிறார்..... பறவையும் தங்களுக்கு ஏவல் செய்ய வருகிறது....” என்று கிளுக்கிச் சிரித்தவளை இழுத்து தன் மேல் போட்டுக்கொண்டவன் ....

“வாய்ச் சொல்லிலும் வீரனடி!.... உன் அரசன்...நந்தினி எனும் பெயரை மந்திரம் செய்து தந்திர வித்தை கற்றவன்...இவன்!....” என்றே அவளின் அதரத்தில் கவி பாட தொடங்கினான்.....

அவர்களின் மோன நிலையின் இடையே ஏற்பட்ட மிக மெல்லிய சலசலப்பில் விழி உயர்த்தியவளின் பார்வையில் அரவம் ஒன்று மேலே உள்ள கிளையில் தொங்கிக் கொண்டிருந்தது.....

“சிரம் உயர்த்த வேண்டாம் அரசே!.... மேற்கிளையில் அரவம் ஒன்று உள்ளது .... “ என்று செவியருகே மிகவும் மெல்லிய குரலில் கிசுகிசுத்தாள்...

“என் முதுகின் கீழே இடது புற இடை கச்சையின் மடிப்பில் நீளமான ஈட்டி ஒன்றை வைத்துள்ளேன்... அதனை வெளியே எடுத்து அரவத்தை அப்புறப்படுத்த முயற்சி செய்!.....” என்று அவன் உரைத்தவாறே ஈட்டியை வெளியில் எடுத்து அரவத்தை அங்கிருந்து அகற்றியவள் பதபதைப்புடன் அவனை இறுக அணைத்துக் கொண்டாள்......

அவளின் மனவாட்டத்தை போக்க பலபல சிறு வயது நிகழ்வுகளைக் கூறி இயல்பு நிலைக்கு திருப்பினான்.....

கரிகாலன் அனுமானித்தவாறே ஒரு முகூர்த்தம் கழித்து அவன் எழுப்பிய சங்கேத ஒலி போன்றே ஒரு ஒலி வர அதைத் தொடர்ந்து ஒரு கூர் கத்தி ஒன்று அவர்கள் அமர்ந்திருந்த மரத்திலிருந்து நான்காவது மரத்தில் சென்று நிலை குத்தி நின்றது.....

இதனைக் கண்ட கரிகாலனும் தன்னிடம் உள்ள கூர் கத்தியை அதே மரத்தில் பாய்ச்சினான்... உடனே ஒரு கருத்த தேகத்துடன் பருத்த சரீரத்துடன் காட்டுவாசி ஒருவன் தோன்றினான்...

தனது உடலைச் செடி கொடிகளின் நடுவே மறைத்து தலையை மட்டும் நீட்டியபடி இருந்த. அவனது கேசம் தோள்பட்டையில் தவழ்ந்திருக்க, இறுக்கமான முகத்தோடும் கூரிய விழிகளோடும் மேலாடை இல்லாமலும் இடைக்கு கீழே புலித்தோலை ஒன்றுக்கு இரண்டாக சுற்றியிருந்த அவனைக் கண்ட கரிகாலன் மனம் மகிழ்ந்த நேரத்தில் நந்தினியின் உள்ளம் கலக்கம் கொண்டது......

கீழிறங்கிய சோழன் காட்டுவாசியை விரைந்து சென்று அணைத்துக் கொண்டான்..... இருவரும் பல நாள் பழகியவர்களை போல் சிரித்து பேசி பின்பு நந்தினியை அழைத்து அறிமுகப்படுத்தி வைத்தான்.....

“ இவன் பெயர் கார்கோடகன்.... மிகப்பெரிய ஆதிவாசி இனங்களில் ஒன்றான “கோண்டு” பழங்குடி இன மக்களின் தலைவன் இவன்... நாம் சிறிதுகாலத்திற்கு இவர்களின் இருப்பிடத்தில் தான் வசிக்கப் போகிறோம்...இவனுடன் செல்வதே இப்போதைய சூழலுக்கு நன்மை பயக்கும். செல்வோமா தேவி!....’என்றவனை பார்த்து பெரும் குழப்பத்துடனே ஓப்புதல் அளித்து அந்த காட்டுவாசிக்கு தன் வணக்கத்தை வைத்தாள்.....

அந்த காட்டுவாசி தன் செடியாடையில் மறைத்து வைத்திருந்த சிறிய குப்பியை கரிகாலனிடம் கொடுத்து “ இளவரசே! இந்த குப்பியில் உள்ள திரவத்தை இருவரும் தங்களது சரீரத்தில் பூசிக் கொள்ளுங்கள்.... அப்போது தான் காட்டு விலங்குகள் நம்மை அண்டாது..... எவ்வித தடையும் இல்லாமல் நம் இருப்பிடத்தை அடைய முடியும்.....” என்று நீட்டினான்..

அவ்வாறே செய்தவர்களின் பாதைக்குத் தடங்கலாக வழிமறித்த பூதாகரமாக வளர்ந்திருந்த மரங்களையும் மண்டிக்கிடந்த செடி கொடிகளையும் அகற்றிவிட்டு இருப்பிடம் சென்று சேர்ந்தனர்....

பழங்குடியினரின் குடில்கள் அனைத்தும் மரகட்டைகளால் நான்கு புறமும் அடிக்கப்பட்டு மேல சிறுசிறு கட்டைகளால் நெருக்கமாக அடைக்கப்பட்டு அதன் மேலே இலைளும், கொடிகளும் சுற்றிப் படரும் வண்ணம் அமைக்கப்பட்டிருந்தது....

ஒவ்வொரு குடிலுக்கு மேலே மரங்கள் பரந்து விரிந்து மாதவிபந்தல்(குருக்கத்திக் கொடிகளாலான பந்தர்) போல் அழகுற காட்சி அளித்தன...



அந்த இடத்தின் ரம்மியமான அழகில் மனதை பறிகொடுத்தவளின் கரங்களில் மாற்றுடையாக சோழமகளிர் அணியும் பருத்தியினால் நெய்யப்பட்ட சீலை ஒன்றும் அளிக்கப்பட்டது.....

மாற்றுடை அணிந்துகொண்டு குடில்களை பார்வையிட்டவாறே நடந்த இருவரின் மனதிலும் பலவித எண்ணங்கள்....

“ தேவி!... இந்த கார்கோடகன் நம் சோழர் படை ஒற்றர்களில் ஒருவன், அவனுக்கு கீழே மூன்று வீரர்கள் இங்கே உள்ளனர்... அவர்கள் தான் இங்கு தேவையானவற்றை தஞ்சசையில் இருந்து கொண்டு வருகின்றனர்... இப்பொழுது தெரிந்ததா தங்களை தழுவி இருக்கும் சீலை இங்கே வந்த ரகசியம் ... “ என்று நகைத்தான்....


“மற்றுமொரு விண்ணப்பம் தேவி! இவ்விடத்தில் நான் ஒரு சோழ ஒற்றனாகவே அறியப்பட்டுள்ளேன்..... கார்கோடகனைத் தவிர்த்து வேறுயாருக்கும் நான் சோழஇளவல் என்று தெரியாது...... ஆகையால்...” என்று இழுத்தவனின் வாக்கியத்தை “ தங்கள் ரகசியத்தை என்றும் காப்பேன் மணவாளரே!... “என்று கூறி முடித்தாள்.

“நன்று தேவி!.... மிச்சக் கதைகளை நம் குடிலுக்கு சென்று உரைக்கிறேன்!.... “ என்று அழைத்துச் சென்றான்...

அழகான அமைதியான குடில்.... மலர்களின் வாசமும், அதன் குளிர்ச்சியும் மனதை மயக்கினாலும் அதனை அடக்கிவிட்டு தனது பேச்சினை தொடர்ந்தான்...

“நான் இங்கே இருந்துகொண்டே சில ராஜாங்க காரியங்களை செய்ய திட்டமிட்டுள்ளேன்.... அந்த காரியங்களுக்கு உன் பெயரையே முன்னிறுத்தி களமிறங்கப் போகிறேன்....அதற்கு உன்னுடைய உத்தரவை வேண்டி நிற்கிறேன்.... இதனால் ஏற்படும் நன்மைக்கும், தீமைக்கும் நானே பொறுப்பு”..... என்றுரைத்தவனை முறைத்துக்கொண்டே.....

“தங்களின் இந்த பேச்சில் எனக்கு பிடித்தமில்லை அர... அழகரே!.... உங்களின் செயலுக்கு நீங்களே உங்களிடம் உத்தரவு பெறுவீர்களா!....என்னை முன்னிட்டு தாங்கள் செய்யும் காரியம் எப்பொழுதும் நன்மையே பயக்கும்....மனதில் எவ்வித குழப்பத்திற்கும் இடம் கொடாமல் காரியசித்திக்கு வழிவகை செய்யுங்கள்”......அத்துடன் தன் பேச்சு முடிந்தது என்று அங்கிருந்த மரக்குச்சிகளைக் கொண்டு நாரினால் பின்னப்பட்ட பாயை விரித்து உறங்க ஆயுத்தமானாள்....

அவளின் முறைப்பான பேச்சிற்கு நகைத்தபடியே "ஏன் இத்துணை கடினபேச்சு ....சினம் உரைப்பதில் என்னையும் மிஞ்சி விடுவாய் போலல்லவா உள்ளது” .... என்றவனை பார்த்து



"என்ன செய்வது என்னுடைய மணாளரின் மனம் என்னிலே ஒன்றி அவரின் குணமும் என்னை தொற்றிக்கொண்டு விட்டது ....." என்று பரிகாசம் செய்தாள் ....



பின்பு தன் பேச்சு சற்று அதிகப்படியாய் தோன்ற இதழைக் கடித்து தன படபடப்பை மறைத்துக் கொண்டாள் .....

“என் மீது மூண்ட சினத்திற்கு தண்டனை உன் அதரத்திற்கு கொடுப்பதேனோ!”... என்ற அவனின் சமரச பேச்சு மங்கையவளை மயக்கவில்லை ....



அவனின் "சாம, தான, பேத, தண்டம் " முறையின் முடிவில் அவளின் வன்மையும் , அவனின் மென்மையும் கரைந்து முடிவில் பெண்மையில் கலந்து அழகான விடியலில் மலர்ந்தது .
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,980
Location
madurai
அடுத்துவந்த நாட்களில் அங்கே உள்ள தூதுப்புறாக்களின் மூலம் சேதிகளை அனுப்பியதன் பயனாய் வந்த ஒற்றர்களிடம் தான் வரைந்த ஓலைகளை அளித்தான்.....

காட்டினில் உலாவுவதை அன்றாட பணியாய் கொண்டவனின் செய்கைகள் புரியாத புதிராய் அமைந்தன.....

குடிலுக்கு சென்ற ஏழாவது கிழமையில் தனக்கு மிக அத்தியாவசியமான காரியங்கள் நிறைவேற்றப்பட வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் இங்கிருந்து செல்வதாகவும், தக்க தருணத்தில் வந்து அவளை அழைத்துச் செல்வதாகவும் கூறி விடை பெற்று சென்றான்.....

அன்றைய நாளிலிருந்து மூன்றாம் நாள் நந்தினிதேவி சோழபடையினரால் மீண்டும் சிறைபடுத்தப்பட்டாள்.....



பெரிய பழுவேட்டரையரின் காட்டுமாளிகை.....நியாய விசாரிப்பு நடைபெறும் இடம்..... அங்கே நடு நாயகமாக சுந்தர சோழரின் உயிர் தோழரும், சோழப் பேரரசின் முதன்மை மந்திரியுமான அநிருத்தப் பிரம்மராயர் விற்றிருந்தார்... அவரின் கம்பீரமும், யாரையும் எளிதில் எடை போடும் கூர்மையான பார்வையும் தன்னை மீறி சோழ தேசத்தில் எந்தவொரு காரண காரியங்களும் நடக்க சாத்தியமில்லை என்பதை கட்டியங்கூறி சொல்லியது....

அவரின் இருபுறங்களிலும் “கண்டன் அமுதனார் என்கிற பெரிய பழுவேட்டரையரும்” “காலாந்தகக் கண்டர் என்கிற சின்ன பழுவேட்டரையரும்” அமர்ந்திருந்தனர்...

இவர்களுடன் மெய்க்காவலன் முத்தழகனும், தலைமை காவாலன் இளமாறனும் நின்றிருந்தனர்.....

அந்த சபையில் நான்கு குற்றவாளிகள் இழுத்துக்கொண்டு வரப்பட்டனர். அவர்களின் குற்றங்களை இளமாறன் பட்டியலிட ஆரம்பித்தான்....

“முதன் மந்திரி அவர்களே இங்கே குற்றவாளிகளாய் நிற்கும் நால்வரும் பாண்டிய நாட்டு ஒற்றர்கள் ஆவர்... ரவிதாசன், சோமன் சாம்பவன், தேவராளன் , இடும்பன்காரி என்ற பெயர்களைக் கொண்ட இவர்களை “பாண்டிய ஆபத்துதவிகள்” என்று அழைக்கின்றனர்”.......

“ வீரபாண்டியனை சோழ இளவரசர் ஆதித்த கரிகாலர் பழிமுடித்ததால்(கொன்றதால்), சோழ வம்சத்தினைப் பழிவாங்குவதற்காகச் சபதம் எடுத்தவர்கள். அவரை எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தி கொலை செய்ய திட்டமிட்டு உள்ளார்கள்.....”

அவ்வாறு சோழ இளவரசரை காட்டிலினிலே தேடும் போது நம்மிடம் அகப்பட்டார்கள்”.... என்று கூறி முடித்தான்...

குற்றவாளிகளைக் பார்த்த முத்தழகன் “இதற்கு உங்களின் பதில் என்ன?”... குற்றம் நிருப்பிக்கப்பட்டு விட்டால் தண்டனை மிக கடுமையாக இருக்கும்....”

அதற்கு ரவிதாசன் “அப்படியானால் எங்களை தூண்டி விட்டு எங்களை இங்கே வரவரவழைத்த நந்தினி தேவியாருக்கும் இந்த தண்டனை பொருந்தும் தானே?...” என்று கேட்டான்..

முத்தழகன் “இது என்ன குளறுபடியான பேச்சு.... இங்கே எவ்வாறு நந்தினி தேவி வரமுடியும்?...”

ரவிதாசன் “அவர் தான் எங்களை இங்கே வரவழைத்தது.... சோழ நாட்டை விட்டு செல்ல இளவரசருடன் கடற்பயணம் மேற்கொண்ட போது அடர்மழையிலும் சூறாவளிக்காற்றிலும் வழி தவறி இளவரசர் பாதை மாறி சென்று விட்டதாகவும் தனக்கு செல்லும் திசை தெரியாததால் மீண்டும் திரும்பி இங்கே காட்டில் மறைந்துள்ளதாகவும், சோழ நாட்டின் இராஜதுரோகியாய் தாம் குற்றம் சாற்றப்பட்டிருக்கும் இவ்வேளையில் பாண்டிய நாடு தமக்கு ஆதரவு அளித்தால் அவர்களுக்கு விசுவாசமாய் காரியங்கள் ஆற்ற சித்தமாய் இருப்பதாகவும் எங்களுக்கு ஓலை அனுப்பினார்.... அதனை முன்னிட்டே நாங்கள் இங்கு வந்தது... உங்களின் சதியில் வகையாய் மாட்டியதும் இப்படித்தான்... ஆகையால் நந்தினி தேவியாரையும் அழைத்து நடந்தவைகளை கேட்டறிந்து நியாயம் வழங்குவீர்கள் என்று நம்புகிறேன்”....என முடித்தான்..

அந்த சமயத்தில் அங்கே வந்த கரிகாலன், “ எனது வணக்கத்தை முதன் மந்திரி அவர்களுக்கு தெரிவித்து கொள்கிறேன்... விசாரணைக்கு தடங்கல் ஏற்படுத்தும் விதத்தில் வந்தமைக்கு வருந்துகிறேன்...” என்றவன் “ இங்கே நடந்து கொண்டிருக்கும் விசாரணையில் என் பெயரும், எனது மனைவியின் பெயரும் தொடர்பு படுத்தப்படுவதால் என்னுடைய விளக்கத்தை கூற முன்வந்துள்ளேன்... அதற்கு சபையோரின் அனுமதியை வேண்டுகிறேன்...”

“ அனுமதி அளிக்கப்பட்டது தங்களின் விளக்கத்தை கூறலாம்...” என்று அநிருத்தரின் குரல் ஆணையிட்டது....

“ நந்தினியின் பெயரில் ஓலை அனுப்பி இவர்களை காட்டிற்கு வரவழைத்தது நானே!....” என்றவனை அனைவரும் திகைப்புடன் நோக்கினர்.....

“என்மேல் இருக்கும் பகைமையில் என்னை கொல்ல நினைப்பவர்களை காண வேண்டும் அதே சமயத்தில் என் மனைவியின் மேல் உள்ள குற்றமும் களையப்பட்டு களங்கமும் துடைக்கப்பட வேண்டும் என்றே நான் அவ்வாறு செய்தது”....

“சில உண்மைகளை வெளிக் கொணர்ந்திடவே நான் சோழ நாட்டை விட்டு வெளியேறுவது போல் நாடகமாடியது..... காட்டினில் தஞ்சமடைந்தேன்.... புறாவை தூதனுப்பி ஒற்றர்களை வரவழைத்தேன்..... அவர்களிடம் நான் எழுதிய ஓலையை ஒப்படைத்து பாண்டிய ஒற்றனாகவே சென்று அவனின் ஆபத்துதவிகளின் கைகளில் சென்றடையுமாறு பார்த்துக்கொண்டேன்.... இவர்களின் நடமாட்டத்தை அறிந்து காட்டினில் பதுங்கி இருந்து இளமாறன் மற்றும் முத்தழகனின் உதவியுடன் சிறை செய்தோம்....தற்பொழுது இவர்களிடம் நான் அறிய விரும்புவது எவ்வாறு வீரபாண்டியனின் கூடாரத்தில் நந்தினி தேவி கொண்டு செல்லப்பட்டாள் என்பதே”....

“ ஒற்றர்களே! நடந்தவைகளை உள்ளது உள்ளபடி கூறினால் சோழ நாட்டின் கடும் தண்டனைகளில் இருந்து தப்பிக்கலாம்.. இல்லையென்றால் உங்களின் குலத்திற்கே இழிசொல் வருமாறு தண்டனை கடுமையானதாய் இருக்கும்...” என்று கர்ஜனையுடன் முடித்தான்.....

அதற்கும் அவர்கள் பழைய பல்லவியையே பாட முடிவினில் நந்தினியும் சபைக்கு அழைத்து வரப்பட்டாள்.....

அவர்கள் யாரென்ரே தனக்கு தெரியாது என்று நந்தினி கூற அவர்களோ பாண்டிய கூடாரத்தில் இருந்தது இவள் தான் என்று சாதித்தனர்...

பெரும் குழப்பம் நீடித்த வேளையில் காவலர்கள் நந்தினியை போன்றே மற்றுமொரு ஆரணங்கை சபையில் நிறுத்தினர்.....

இருவரின் தோற்றமமும் ஒன்றாய் இருந்தது. அவர்களுக்கு இடையேயான வித்தியாசங்களை கூர்ந்து நோக்கினலோழிய அவர்களை பகுத்தறிய முடியாது....

ஒரு பெண்னின் கண்களில் அன்பும், அமைதியும் நிறைந்து அவளின் நடையில் நிமிர்வும் ,கம்பீரமும் காணப்பட்டாலும் அவளின் அதரங்கள் தன் நிலைமையை உரைத்திட துடித்துக் கொண்டிருந்தன....வெண்பட்டு உடுத்தி மெல்லிய அலங்காரத்தில் இருந்தாலும் அவளின் வதனம் சாந்தமாய் பெண்மையின் பாந்தத்துடன் காணப்பட்டது.....

மற்றொரு பெண்ணின் கண்கள் காண்போரை வீழ்த்தும் விழி விச்சும், அலட்சியமும் நிறைந்து அவளின் நிற்கும் தோரணையே ஆணவமாய் தன்னை வீழ்த்த யாரும் இல்லை என்பதை பறைசாற்றிக் கொண்டிருந்தது. அரக்கு நிற பட்டுடுத்தி பாண்டிய நாட்டு முத்து ஹாரத்தை அணிந்துகொண்டு அதீத அழகில் ஜொலித்த அவளின் அதரங்கள் அவையோரை இகழ்ச்சியாய் பார்த்தன....

“ இப்பொழுதாவது உண்மையை உரைக்க முடியுமா? ஒற்றர்களே!... என்று கரிகாலன் சிவப்பேறிய கண்களுடன் மிகவும் ஆக்ரோஷமாக வினவினான்...

அவனின் கேள்விக்கு தலை குனிந்தவர்கள் செய்வதறியாது நின்றனர்...பின்பு அவனே நடந்தவைகளை உரைக்க ஆரம்பித்தான்....

“ இதோ இங்கே நின்றிருக்கும் இருவரும் ஒன்றாய் பிறந்த இரட்டையர்கள்.... வெண்பட்டில் இருப்பவள் தான் என்னுடைய மனைவியும் முத்தவளுமான நந்தநந்தினிதேவி..... அரக்கு பட்டில் நிற்பவள் தான் இளையவளும் பாண்டிய கூடாரத்தில் இருந்த நந்தினிதேவி.....சிறு பிராயத்தில் என் மீது இவள் கொண்ட அன்பை நான் நிராகரித்த காரணத்தால் பாண்டியகர்ளுடன் சேர்ந்து என்னையும் சோழ நாட்டையும் அழிக்க சபதம் கொண்டாள்.... உடன் பிறந்த தமக்கையையும் பழி கொள்ள துணிந்தாள்”....

“தக்க சமயம் பார்த்து நாங்கள் இருவரும் சந்திக்கும் இடத்தில் வீரபாண்டியனுடன் அங்கே வந்தவள் அதற்கு முன்னரே ஒற்றர்களையும் படை வீரர்களையும் மறைந்திருக்கச் செய்தாள்”...

“அன்றைய தினத்தில் நான் பாண்டியனுடன் போர் புரிந்த சமயத்தில் நந்தநந்தினியை மயக்கமுறச் செய்து அவளை கடத்தி பாண்டியன் கூடாரத்தில் அடைத்தவளும் இவளே!”....

“பெரிய பழுவேட்டரையர் அங்கே சென்ற சமயத்தில் சிறை பிடித்ததும் மயக்கமுற்ற நந்தநந்தினியை தான்..... எப்படியும் என்னையும் என் மனைவியையும் பழி தீர்க்கும் வெறியில் சுற்றிகொண்டிருந்தவளை வளைத்து பிடிக்கவே மறைந்திருந்து என் மனைவியின் பெயரில் ஓலை அனுப்பி ஒருவருக்கொருவர் அறியாமல் சிறை படுத்தியது.... காட்டினில் என் தேவியை கண்டதும் அவளை கொல்வதே இவர்களுக்கு இடப்பட்ட ஏவல்”...

“இவர்களின் ஏற்பாட்டினை உடைத்து தக்க சமயத்தில் எல்லோரையும் கைப்பற்றிடவே காட்டினில் இருந்து மறைந்தேன்.... இவர்களிடம் இருந்து நந்தநந்தினியை காக்கவே மீண்டும் அவள் சிறைப்படுத்தபட்டாள்.....இவர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் அடர்ந்த காட்டில் சந்திப்பதே நந்தினி தேவியின் உத்தரவு. அதற்கு ஒப்புதல் அளித்து மாற்று ஓலை அனுப்பி நந்தினி தேவியை இங்கே வரவழைத்ததும் நானே!.... இவை தான் நடந்தது.... இப்பொழுது நியாயதீர்ப்பு வழங்குமாறு முதன் மந்திரியாரை கேட்டுகொள்கிறேன்....” என்று தனது நீண்ட உரையை முடித்தவனின் கண்கள் அவனின் அன்பிற்குரியவளை கர்வத்துடன் நோக்கியது....

அவனின் பார்வைக்கு சற்றும் சளைக்காமல் பாவையவளின் பார்வையும் பெருமையுடன் அவனை சந்தித்தது....

கரிகாலன் மொழிந்த குற்றப்பத்திரிகைக்கு எதிராக எதிர் தரப்பில் இருந்து ஒருவரும் மறுப்பு கூறாத காரணத்தால் குற்றமுடிவை அறிவிக்கும் விதமாக அந்த சபையினில் கம்பீர குரலில் அநிருத்தர் தீர்ப்பை உரைக்க ஆரம்பித்தார்.....

“ சோழ நாட்டின் புகழுக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும், அரச குடும்பத்தின் மேல் பகைமை கொண்டும், ஒரு பெண்ணின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கக்கூடிய செயல்களையும், பழிவாங்கும் எண்ணத்துடன் செய்த பாவச்செயல்களுக்கும் இவர்கள் அனைவரையும் கழுவில் ஏற்ற உத்தரவிடுகிறேன்...”

“இந்த தண்டனை காலங்காலமாக சோழ நாட்டிற்கு துரோகம் இழைப்பவர்களுக்கு கொடுக்கப்படும் பொதுவான நடைமுறை தான்....அதையே இப்பொழுதும் பின்பற்ற ஆவண செய்கிறேன்”... என்று முடித்தார்.....

நீதி விசாரணை முடிந்ததின் அடையாளமாக குற்றவாளிகளை அழைத்துச் செல்ல காவலர்களுக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டது....
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,980
Location
madurai
அந்த சமயத்தில் தங்கையான நந்தினி தேவியின் கண்கள் குரோதத்துடன் அனைவரையும் நோக்கியது.... தனக்கு தண்டனை கொடுக்க இங்கே யாருக்கும் தகுதியில்லை “என் முடிவை நானே முடித்துக்கொள்வேன்” என்று இறுமாப்புடன் எண்ணிய எண்ணத்தில் தன் இடையினில் மறைத்து வைத்திருந்த கூர் கத்தியால் நெஞ்சை குத்தி அந்த இடத்திலேயே குற்றுயிராகிப் போனாள்....

இந்த செயலால் அந்த சபையினில் உள்ளவர்கள் அதிர்ந்தது சில நொடிகளே என்றாலும் அவளின் இந்த முடிவிற்கு அவளே காரணகர்த்தா என்று சமாதானப் படுத்திக்கொண்டனர்.....

எல்லோரையும் போல நந்தநந்தினியின் மனம் எளிதில் சாமாதானம் அடையவில்லை.... தனக்கு உறவு என்று சொல்லிக்கொள்ள இருந்த ஒரு ஜீவனை இழந்த துக்கம் அவளை பாடாய்படுத்த தன் மன்னவன் தோளிலே அடைக்கலமானாள்....

“தங்களின் வரவை எதிர்பார்த்து தஞ்சை மண்ணின் மக்கள் பெரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர் இளவரசே!... எப்பொழுது தாங்கள் வருகை புரிவதாய் அரசரிடம் தெரிவிப்பது?” என்று அநிருத்தர் கேட்ட கேள்விக்கு பதிலாக....

” இன்னும் அதற்கான நேரம் வரவில்லை முதன் மந்திரியரே!... நான் சோழ நாட்டின் விஸ்தரிப்பிற்கும், கடல் வாணிபத்தை விரிவு படுத்தவும் சீனாவிற்கு செல்ல திட்டமிட்டுள்ளேன்... தற்போதைய எனது மனநிலை ஆட்சி பொறுப்பை ஏற்க மறுக்கிறது ....நாட்டின் உயர்விற்கு வழிவகை செய்யவே என் மனம் விழைகிறது... ஆதலால் எனது தமையனார் மதுராந்தகச் சோழரையே தற்சமயம் அரசராக பொறுப்பேற்க நான் வழிமொழிகிறேன்.... எனது விருப்பத்திற்கு ஆதரவளித்து எனது பயணத்தை துவக்க அனுமதி வேண்டுகிறேன்”..... என்று முடித்தான்...

கரிகாலனின் விருப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டு கடல் பயணமும் தொடங்கப்பட்டது.... கப்பலின் மேல்தளத்தில் பூரண சந்திரனின் அழகை ரசித்துக்கொண்டே தன் கைவளைவில் அடங்கியிருந்த பெண்ணனங்கையும் ரசித்துக் கொண்டிருந்தான் கரிகாலன்.... “தங்களின் ஆராய்ச்சி இன்னும் எத்தனை நாழிகைகள் நீளும் கடல் வேந்தே!....” என்று புன்னைகையுடன் கேட்டவளை விழுங்கும் பார்வை பார்த்தவன் ....

“ அந்த வெண்மதியின் குளிர் வீச்சில் இந்த பெண்மதியை ரசிக்கும் நிலையை என்னென்று நான் உரைப்பேன்... தேவியின் கடைக்கண் பார்வை எனக்கு தேவர்களின் அமுதம் உண்ட நிறைவை தருகிறது.... எனக்கான உன்னுடைய ஒவ்வொரு விளிப்பிலும் உன்னுடைய அன்பின் ஆழத்தை உணர்கிறேன் தேவி!....”

“தாங்கள் எங்கிருந்தாலும் அவ்விடத்தின் தலைவராகவே தங்களை உணர்வதால் வரும் வார்த்தைகள் தான் இவையெல்லாம்....” என்று முத்துப்பல் தெரிய கிண்கினித்துச் சிரித்தவளின் இதழை தன் இதழால் அளந்தவன் அவளை கைகளில் அள்ளிகொண்டான்....

அவனின் செய்கையில் நாணங்கொண்டு முகம் சிவந்தாலும் நகைத்தவாறே “இப்பொழுது தாங்கள் காதலரசர்... இன்னும் சில நொடிகளில் முத்திரைகளை பதிக்கும் முத்தரசராய் மகுடம் சூட்டிக் கொள்வீர்கள்...” என்றவளின் தேனூறும் இதழை சிறை செய்தவன் புதிய அரசனாய் அவள் அழகின் எழுச்சிகளுக்கெல்லாம் தனது முரட்டு முத்திரையை மூர்க்கத்துடன் தேன்மழையாய் பொழிந்தான்....
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top