தேன்மழை-பவ்யா மூன்றாம் அத்தியாயம்

Bhavya

Author
Author
SM Exclusive Author
#1
ஹாய் பிரெண்ட்ஸ் தேன்மழை மூன்றாம் அத்தியாயத்தோடு வந்துவிட்டேன்.அடுத்த அத்தியாயம் இறுதி அத்தியாயம்....இது கொஞ்சம் கசமுசா எபி...பிரியாணியா...தயிர்சாதமா... படிச்சிட்டு நீங்களே சொல்லுங்க...
Green sands கண்ண மூடிட்டு படிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்...
காலை சூரியன் உதயமாகி சிறிது நாழிகையிலேயே வீர நாராயண ஏரியின் கரையிலிருந்த காட்டில் வேட்டையாட ஆதித்த கரிகாலன் தலைமையில் தேன்மொழி செங்கமலம் முத்தழகன் கந்தமாறன் மற்றும் ஐந்தாறு வேட்டைக்காரர்கள் கிளம்பி விட்டனர்.


குதிரை ஏற்றத்திற்காகவும் வேட்டைக்காகவும் என்றே வடிவமைக்கப்பட்டிருந்த உடையில் தயாராகி வந்த தேன்மொழியைக் கண்டு மூச்சு விட மறந்தான் ஆதித்தன்.அவளின் அழகிய உடல் வளைவை எடுத்துக் காட்டியது அந்த உடை.தமையனோடு எத்தனையோ முறை அதை அணிந்து வேட்டைக்குச் சென்றிருக்கிறாள் தேன்மொழி.ஆனால் ஆதித்தனின் ஊடுருவும் பார்வை அவளை செவ்வானமாக்கியது.இதுவரை வெறும் ரசிக பார்வையாக இருந்தது அன்று கிறங்கும் பார்வையாக இருந்தது.அவனை நிமிர்ந்தும் பாராமல் சென்று அவளின் குதிரையில் லாவகமாக ஏறி அமர்ந்துக் கொண்டாள்.அனைவரும் வந்ததும் ஏரிக்கரை காட்டை நோக்கி பயணம் தொடங்கியது.


காட்டை அடைந்தவர்கள் நான்கு கூடாரங்களை அங்கே அமைத்தனர்.
ஏரியை ஒட்டி அமைந்திருந்த அந்த காட்டில் பறவைகளின் இன்னிசை காதுகளுக்கு பரவசமூட்டியது.சுற்றிலும் இருந்த மாசில்லா பசுமை மூச்சுக் காற்றை சுத்தம் செய்தது.


மான் கூட்டமொன்று இவர்களைத் தாண்டிக் கொண்டு சென்றது.உடனே தன் வில்லைப் பூட்டி அதன் மேல் அம்பு விடத் தயாரானான் கந்தமாறன்... அப்போது


"அண்ணா....."என்ற தேன்மொழியின் குரலில்


"இல்லை இல்லை..தங்காய்..நான் அவைகளை ஏதும் செய்வதில்லை...நீ வந்ததை மறந்துவிட்டேன்.."


"கந்தமாறா! நீங்கள் என்ன பேசிக் கொள்கிறீர்கள்...எனக்கொன்றும் புரியவில்லையே?"


"இளவரசே!அதொன்றுமில்லை....இவள் வேட்டைக்கு வரும்போது மட்டும் மான் முயல் போன்ற சாது பிராணிகளை வேட்டையாடக் கூடாது என்பது என் அருமை தங்கையின் கட்டளை...அதை நான் மீறுவதில்லை..."என்றான் கந்தமாறன்.


"ஓ....அப்படியா...!அப்படியானால் நானும் இனி சாது பிராணிகளை வேட்டையாடுவதில்லை"என்று ஆதித்தன் கூறவும் அனைவரும் அவனை ஆச்சரியமாக பார்த்தனர்.அதிலும் தேன்மொழிக்கு அவன் வார்த்தை புரிந்தும் புரியாமல் போக்குக் காட்டியது.மற்றவர்களுக்கு அந்த குழப்பம் இல்லை...அவன் பேச்சின் உட்கரு அவர்களுக்கு தெள்ளத்தெளிவாக விளங்கியது.


அன்று மதியம் வரை முள்பன்றி கழுகு ஓநாய் என பலவகை பிராணிகளை வேட்டையாடித் தீர்த்தனர்.மதிய உணவிற்கு பின் அவர்கள் வேட்டைத் தொடர்ந்தது.ஆனால் இம்முறை எந்த பிராணியும் கிடைக்கவில்லை.காட்டில் வெகுதூரம் சென்றும் எதுவும் கிடைக்காததால் எல்லோரும் நிராசையுற்றனர்.


"இளவரசே!சூரியன் மறையும் நேரமாகிவிட்டது... இன்னும் ஏதாவது பிராணி கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கில்லை... நான் கூறுவதானால் நாம் கூடாரத்துக்கு திரும்பி சென்று விடுவோம்... நாளைக்கு திரும்பவும் வேட்டையை ஆரம்பிக்கலாம்"என்றான் கந்தமாறன்.


"இல்லை கந்தமாறா! எனக்கு இன்னும் திருப்தியில்லை....நாம் இதுவரை வேட்டையாடியது சிறிய பிராணிகள்... இவைகளை வேட்டையாடி என்ன பெருமை இருக்கிறது?..... நான் ஒரு யோசனைக் கூறுகிறேன்... நாம் இரண்டிரண்டு பேராக பிரிந்து சென்று வேட்டையாடுவோம்... சூரியன் அஸ்தமனத்திற்குள் யாருக்கு என்ன கிடைக்கிறதோ..‌அது அவர்கள் அதிருஷ்டம்... என்ன சொல்கிறாய்?"


"அப்படியே ஆகட்டும்...யார் யார் இணை என்பதை தாங்களே கூறிவிடுங்கள் இளவரசே!"என்று அவன் புறமே தேர்ந்தெடுப்பை ஒப்படைத்தான் கந்தமாறன்.


அவர்கள் அனைவருமே எதிர்ப்பார்த்தாற் போல் இளவரசன் தன்னோடு வர தேன்மொழியை தேர்ந்தெடுத்தான்.முத்தழகனோடு கமலம் கந்தமாறனோடு வீரன் ஒருவன்...இப்படி இணைகள் முடிவு செய்யப்பட்ட பின் அவரவர் அவர்களின் வழியில் சென்றனர்.


சிறிது தூரம் வரை இருவரும் சுற்றுப்புறத்தை பார்த்தபடி பேசாமல் வந்தனர்.அவர்கள் மவுனத்தை கலைக்கவென்றே புதர் ஒன்றின் பின்னே சலசலப்பு சத்தம் கேட்டது.இவரும் சிறிது கவனமாயினர்.இவர்களை அதிகம் காக்க வைக்காமல் வெளியே வந்தது ஒரு சிறுத்தைப்புலி.


அதை கண்டவுடன் தன் வில்லைப் பூட்டி அதன் வயிற்றுக்கு குறிப் பார்த்து அம்பை விட்டான் ஆதித்தன்.தூரம் அதிகமானதால் அம்பு சிறுத்தைப்புலியின் வயிற்றில் சிறிதளவே சென்றது.அதனால் அந்த சிறுத்தைப்புலி வேகமாக ஓடிவிட்டது.அதன் பின்பற்ற எண்ணி குதிரையைத் திருப்பினான் ஆதித்தன்.


"இளவரசே!வேண்டாம் விட்டுவிடுங்கள்...அது செல்லும் வழி காடு இன்னும் அடர்ந்து விடும்...சூரிய அஸ்தமனத்திற்குள் நம்மால் திரும்பி வர முடியாது...வானம் வேறு கருமை நிறம் கொண்டிருக்கிறது...பெருமழை வருவதற்கான அறிகுறிகள் காண்கின்றன...நாம் கூடாத்திற்குத் திரும்பி விடுவோம்..."என்றாள் தேன்மொழி மன்றாடும் குரலில்.


"தேவி! இந்த கரிகாலன் ஒரு முறை எண்ணியதை சுலபத்தில் விடுபவனல்ல... அதிலும் வேட்டை அரைகுறை ஆகிவிட்டது... அந்த சிறுத்தைப்புலியை கொண்டு செல்லாமல் கூடாரத்திற்கு திரும்ப மாட்டேன்... தாங்கள் வேண்டுமானால் திரும்பிச் செல்லுங்கள்..."என்றான் தீர்மானக் குரலில்.


அவன் குணத்தை நன்கு அறிந்த தேன்மொழி மறுமொழிக் கூறாமல் அவனை பின்தொடர்ந்தாள்.ஆனால் அவன் கூறியதில் நினைத்ததை விட மாட்டேன் என்ற வரி அவள் இதயத்தைச் சுருக்கென்று தைத்தது.நந்தினி இன்னும் அவன் மனதில் இருப்பதால் தான் அப்படிக் கூறினானோ?அவளை விடப் போவதில்லை என்பது அவன் பேச்சின் பொருளோ? என்று வேண்டாத நினைவு அவள் இதயத்தை பிசைந்தது.


அதற்குள் காற்று பலமாக வீசத் தொடங்கியிருந்தது.சுழன்றடிக்கும் காற்றில் குதிரை மேலே செல்ல மிகவும் சிரமப்பட்டன.அவர்களை மேலும் சோதிக்காமல் நெடுந்துயர்ந்து கிளைகள் பரப்பிய பெரிய மரத்தின் தாழ்ந்த கிளையில் இருந்தது அந்த சிறுத்தைப்புலி.


இதில் தேன்மொழி மேலும் பயந்து நடுங்கும் வண்ணம் மரத்தின் கீழே கொடிகளில் சிக்கி வெளியேற முடியாமல் தவித்துக் கொண்டிருந்தது ஒரு மான்குட்டி.அந்த ரத்தம் வழியும் நிலையிலும் சிறுத்தைப்புலி அந்த மான்குட்டி மேல் பாயத் தயாராக இருந்தது.


ஆதித்தன் கண நேரமும் யோசிக்காமல் அம்பை சிறுத்தையை நோக்கி எய்த்தான்.‌ஆனால் அதற்குள் அது மான்குட்டி மேல் பாய்ந்திருந்தது.


கண்சிமிட்டும் நேரத்தில் ஒரு அதிசயத்தைக் கண்டான் கரிகாலன்.அவன் அம்பை விடும்போதே சிறுத்தை மான்குட்டி மேல் பாய்ந்துவிட்டதைக் கண்ட தேன்மொழி பாய்ந்து சென்று சிறுத்தைக்கும் மான்குட்டிக்கும் இடையில் சென்றுவிட்டிருந்தாள்.அதனால் சிறுத்தை மான்குட்டிக்கு பதிலாக தேன்மொழி மேல் பாய்ந்திருந்தது.அதே சரியான நேரமெனக் கண்ட ஆதித்தன் தன் கையிலிருந்த வேலை குறிப் பார்த்து சிறுத்தை மேல் எறிந்து விட்டான்.இதுவரை அவர்களுக்கு ஆட்டம் காட்டிய சிறுத்தைப்புலி கோர சத்தத்தோடு கீழே விழுந்து தன் கடைசி மூச்சை விட்டது.


விரைவாக தேன்மொழியின் அருகில் வந்த போது அவள் ஏற்கெனவே நினைவிழந்திருந்தாள்.பூமாலையென அவளைத் தூக்கி தன் தொடை மேல் வைத்துக் கொண்டு அவள் கன்னத்தை தட்டி சுயநினைவுக்கு கொண்டுவர முயன்றான்.
 

Bhavya

Author
Author
SM Exclusive Author
#2
ஆனால் அவ்வளவு நேரம் கிடுகிடுத்த வானம் சிறு தூரலாக ஆரம்பித்து பெருமழையைக் கொட்டத் தொடங்கிவிட்டது.கண்ணை பறிக்கும் மின்னலும் இந்திரனின் வஜ்ராயுதமென அண்ட சராசரத்தை நடுங்க வைக்கும் இடியும் எங்காவது ஒதுங்க இடம் தேடும் அவசியத்தைத் தோற்றுவித்து விட்டது.


முதலில் கொடிகளில் மாட்டிய மான்குட்டியை ஆதித்தன் விடுவித்ததும் அது ஒரே ஓட்டமாக காட்டுக்குள் சென்று மறைந்தது.பின் தேன்மொழியை தன் தோளில் தூக்கியவன் கண்ணை மறைக்கும் மழையைக் கிழித்துக் கொண்டு பார்த்தவன் அந்த இடம் ஏரியின் மறுபுறம் என்பதையும் அங்கே ஏரியின் கரையில் சிறிய மண்டபம் தெரிவதைக் கண்டு நிம்மதி பெருமூச்செறிந்தான்.


விரைவாக மண்டபத்தை வந்தடைந்தான் ஆதித்தன்.அது உபயோகத்தில் இருக்கும் மண்டபமே என்பது பார்த்த போதே தெரிந்தது.மங்கலாக தெரிந்ததில் அங்கிருந்த பளிங்கு மேடையில் தேன்மொழியைப் படுக்க வைத்தான்.சுவர்களில் இரண்டு மூன்று தீவிட்டிகள் தெரிந்தது.வெளியே இருந்து இரண்டு கற்களை தந்தவன் அதன் உதவியோடு நெருப்பை உண்டாக்கினான்.தீவிட்டிகள் ஒளிப் பெற்றதும் அந்த இடம் தெளிவாகக் காட்சியளித்தது.


அரண்மனை பெண்டிர் நீர் விளையாட்டிற்காக கட்டப்பட்ட மண்டபம் அது என்பதை உணர்ந்துக் கொண்டான் ஆதித்தன்.அவன் மண்டபத்தை ஆராய்ந்த போது தேன்மொழிக்கு விழிப்பு வந்து எழுந்திருக்க முயன்றாள்.அசைவை உணர்ந்து வேகமாக அவள் அருகில் வந்து அவளை தாங்கிப் பிடித்தான்.


"தேவி! இப்போது எப்படியிருக்கிறீர்கள்? சுகவீனம் ஏதும் இல்லையே?"என்று ஆதுரத்தோடு விசாரித்தான்.


"இல்லை இளவரசே! இப்போது ஒன்றுமில்லை...ஆமாம் அந்த சிறுத்தைப்புலி என்னவாயிற்று?மான்குட்டி ஏனாயிற்று?"என்றாள் கவலையோடு.


"சிறுத்தைப்புலி என் வேலுக்கு இரையாகி விட்டது....குறுக்கே பாய்ந்து தாங்கள் தான் மான்குட்டியை காப்பாற்றிவிட்டீர்களே... அப்பப்பா என்ன வேகம்! எத்துணை வீரம்!ஒரு சாதாரண மான்குட்டிக்காக உங்கள் உயிரையும் மதியாமல் செயல்பட்டீர்களே...அதற்கு எத்தனை மனோதைரியம் வேண்டும்!"


"மான்குட்டி என்றால் அதுவும் ஒரு உயிரே அல்லவா!அதை காப்பாற்றும் சந்தர்ப்பம் எனக்கு கிடைத்தது என் பேறாக கருதுகிறேன்..."


"ம்..."என்ற அவன் குரலில் பெருமிதம் வழிந்தது.ஏனோ தேன்மொழியின் ஒவ்வொரு பேச்சும் ஏன் ஒவ்வொரு அசைவும் கூட அவனை நிலைக்குலைய செய்தது.நந்தினியைப் பற்றிய நினைவுகளை கனவோ என்று நினைக்குமாறு தன் அழகாலும் தன் உயர்ந்த குணத்தாலும் இந்த இரண்டே நாட்களில் செய்திருந்தாள் அந்த ஏந்திழை.அவளிடம் தன் மனம் சரணடைந்துவிட்டது என்பதை சந்தேகமற உணர்ந்து விட்டான் யாருக்கும் அஞ்சா அந்த மாவீரன்.ஏதேதோ எண்ணங்களை அசைப்போட்டிருந்தவன் தேன்மொழி அவளின் கையை மார்பில் வைத்து அழுத்தியபடி வலியில் முகம் கசக்குவதைக் கண்டு பதறிப் போனான்.


"தேவி!என்ன ஆயிற்று உங்களுக்கு?அங்கே என்ன?கையை எடுங்கள்... எடுங்கள் என்கிறேன்"என்று சிறிது அதட்டி அவள் கையை மார்பிலிருந்து பிரித்து எடுத்தான்.அங்கே அவள் மார்பின் மேல் பாகத்திலிருந்து ஆடையைத் தாண்டி ரத்தம் வழிந்துக் கொண்டிருந்தது.


"ஆ.... ரத்தம்.... சிறுத்தை உங்கள் மேல் பாய்ந்த போது இந்த காயம் ஏற்ப்பட்டிருக்க வேண்டும்....இருங்கள் இங்கே மண்டப வாயிலில் ரத்தத்தை உறைய செய்து காயத்தை குணப்படுத்த வல்ல மூலிகை இருப்பதைக் கண்டேன்...அதை கொண்டு வந்து காயத்தில் வைத்துக் கட்டினால்...காயம் சீக்கிரம் குணமாகிவிடும்..."


"இல்லை....இல்லை...வேண்டாம்...அது...அது அரண்மனைக்கு சென்ற மேல் வைத்தியரிடம் காட்டி சிகிச்சை செய்துக் கொள்கிறேன்..."


"நன்றாக இருக்கிறது...நாளை வரை இதை இப்படியே விட்டால் காயம் புரையேறி ஆபத்தில் கொண்டு விட்டுவிடும்...நான் சென்று ஒரு நொடியில் தந்துவிடுகிறேன்"


"இளவரசே! வேண்டாம் வெளியே மழை அதிகமாக இருக்கிறது.... உங்களுக்கு எது வீண் தொந்தரவு....விட்டு விடுங்கள்...நாளைப் பார்த்துக் கொள்ளலாம்"


"நாளை என்ற பேச்சுக்கே இடமில்லை....இருங்கள் வருகிறேன்"என்று அவள் சொல்ல சொல்ல கேட்காமல் வெளியே சென்றே விட்டான்.


'ஐய்யோ!இவர் ஏன் இப்படி பிடிவாதம் செய்கிறார்....?காயம் இருக்கும் இடத்தை இவருக்கு எப்படி காட்டுவேன்....கடவுளே!என்னை ஏன் இப்படி சோதிக்கிறாய்?ஐய்யோ!திரும்ப வந்துவிட்டாரே...இப்போது என்ன செய்வது? எப்படி இவரை தடுப்பது?'என பலவாறு எண்ணித் தவித்தாள்.


அவனுக்கு அதெல்லாம் ஒன்றும் தோன்றவில்லை...அவனின் ஒரே எண்ணம் அவள் காயம் பெரிதாகாமல் இருக்க சிகிச்சை செய்வது...அவள் பெண்... அவளுக்கு காயத்தைக் காட்ட வெட்கமாக இருக்கும் என்பதெல்லாம் அவன் கவனத்தில் இல்லவே இல்லை.


எடுத்து வந்த மூலிகையை அங்கிருந்த கல்லில் நன்றாக அரைத்த கரிகாலன் அதை ஒரு இலைச் சுருளில் எடுத்துக் கொண்டு அவள் அருகில் வந்து அமர்ந்தான்.


"தேவி!காயத்தைக் காட்டுங்கள்...இதை அங்கே வைத்துக் கட்டி விட்டால் இரண்டே நாட்களில் குணமாகிவிடும்...இது அபூர்வ வகை மூலிகை... இப்போது இங்கே கிடைத்தது நமது அதிருஷ்டம்..."


"இளவரசே!மருந்தை இப்படிக் கொடுங்கள்...நானே காயத்தில் வைத்துக் கட்டிக் கொள்கிறேன்..."


"நன்றாக இருக்கிறது தேவி!அது எப்படி ஒருவர் தானே தனக்கு சிகிச்சை செய்துக் கொள்ள முடியும்...விளையாடமல் காயத்தை காட்டுங்கள்...ம்...ஏன் தயக்கம்?"


அவனிடம் இனி பேசி பயனில்லை என கண்ட தேன்மொழி மறுபேச்சில்லாமல் தன் மேலாடையை பின்புறம் இணைக்கும் முதல் மூன்று முடிச்சை அவிழ்த்தாள்.வலதுபுறம் தோளில் இருந்த ஆடையை நெகிழ்த்தியவள் தன் கண்களை இறுக்கமாக மூடிக் கொண்டு விட்டாள்.


காயத்தின் வீரியத்தை ஆராய்ந்த ஆதித்தன் அது ஆழமாக இல்லை என்பதில் நிம்மதியடைந்து தன் கையிலிருந்த பச்சிலை குழம்பை அதில் வைத்து அழுத்தி இறுக்கமாக ஒரு கட்டையும் போட்டான்.கட்டு சரியாக இருக்கிறதா என ஒருமுறை அழுத்தி சரிப் பார்த்தவன் இனி கவலையில்லை என்று நிம்மதியடைந்தவன் அதையே தேன்மொழியிடம் கூற எண்ணி அவளை நிமிர்ந்துப் பார்த்தவன் அவள் முகம் செக்கச்சிவந்த செவ்வானமாக இருந்ததைக் கண்டவனுக்கு அவளின் நாணம் அதுவரை அவன் அறிந்திராத புது உணர்வை உண்டாக்கி அவனின் உடலை சுடாக்கியது.


"தேவி...!"


"......"


"இளவரசி...!"


"..‌......"


"தேன்மொழி...!"


மென்மையாக அவன் தன் பெயரை அழைத்ததும் கண்களை மெல்ல மலர்த்திய தேன்மொழி அவன் கண்களில் அளப்பரிய காதலோடு வேற்றொரு உணர்வைக் கண்டு விக்கித்துப் போனாள்.மெதுவாக அவள் புறம் நீண்ட அவன் கைகள் அவளின் பட்டு கன்னங்களை தடவிக் கொடுத்தது.பின் கீழிறங்கி அவள் தோள்களை தடவிய கை மேலும் இறங்கி அவள் சிற்றிடையில் நிலைத்து அதை இறுக்கமாக இழுத்து அவள் பூவுடலை தன்னோடு சேர்த்தணைத்தான்.


நொடிகள் செல்ல செல்ல அணைப்பு மேலும் மேலும் இறுகியது.அணைப்பை தளர்த்தாமல் முகத்தை நிமிர்த்தியவன் அவள் பிறை நெற்றியில் தன் முதல் முத்திரையை பதித்தான்.அதில் சிலிர்த்து அடங்கியது அவள் தேகம்.


நெற்றியில் தொடங்கிய முத்திரை மெதுவாக கன்னங்களில் தொடர்ந்தது.அதன் அருகிலேயே ஜொலித்த பவள உதடுகளை சிறை செய்ய அவன் முயன்ற போது அவன் நெஞ்சில் கைவைத்து தடுத்தாள் தேன்மொழி.


"ஏன்...."என்று எழுந்தது உணர்ச்சியில் கொந்தளித்த அவன் குரல்.


"வேண்டாம்....இது தவறு.... இதற்கு பெயரில்லை...எதிர்காலமுமில்லை...இதனால் வரும் பொறுப்பை நீங்கள் சுமக்க நேரிடலாம்....அந்த வீண் சுமையை தவிர்க்க வேண்டுமானால் இதை இத்தோடு நிறுத்துவதே சிறந்தது"


"அந்த சுமையை ஏற்க நான் முழு மனதோடு விரும்புகிறேன் என்றால்...இந்த உறவுக்கு பெயர் கேட்டாய் அல்லவா!இதன் பெயர் காதல்..‌.இதன் எதிர்காலம் நம் திருமண வாழ்வு..."என்றவன் தன் கழுத்திலிருந்த பொன்னாரத்தை அவள் கழுத்தில் அணிவித்தவன் தன் கைகளில் மின்னிய மோதிரத்தை அவள் விரலில் அணிவித்தான்.


"தேன்மொழி! இதற்கெல்லாம் விரிவான விளக்கங்கள் இருக்கின்றன...பின்பு கூறுகிறேன்...ஒன்று மட்டும் கூறுகிறேன்..‌என் வாழ்வில் இனி நீ ஒருவள் மட்டுமே....வேறு எந்த பெண்ணிற்கும் அதில் இடமில்லை...இது நம் காந்தர்வ திருமணம்"என்றவன் அவள் இதழ்களை சிறை செய்தான்.


முத்தம் நீண்டுக் கொண்டே சென்றது...நொடி செல்ல செல்ல அதில் அழுத்தமும் வெப்பமும் கூடிக் கொண்டே சென்றது.அவளை மெதுவாக பளிங்கு கல் மேல் கிடத்தினான்.அவன் கைகள் அவளின் வளைவுகளை ஆராய்ந்தது.தடையாயிருந்த ஆடை ஒவ்வொன்றாக உடலை விட்டு விடைபெற்று நிலத்தை அடைந்தது.அவன் முத்தங்களால் அவள் பூவுடல் நனைந்தது.முடிவில் வன்மை மென்மையோடு சேர்ந்து ஈருடல் ஓருயிர் ஆனது.இடியும் மின்னலும் கொட்டும் மழையும் அவர்கள் இணைவிற்கு சாட்சியானது.
 
Top