• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

தேன்மழை - 2 நவீன உலகம்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
ஹாய் நட்பூஸ்,

நாளை பதிவு தருகிறேன் என்று சொல்லிவிட்டு இவ்வளவு நாள் தலைமறைவானதற்கு முதலில் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.. நேரம் எனக்கு ரொம்பவே குறைவாக இருக்கிறது.. இதோ அடுத்த பதிவு.. கொஞ்சம் முயற்சி மட்டுமே செய்திருக்கிறேன்.. என்னோட தேன் மழை எப்படி இருக்கிறது என்று நீங்கதான் சொல்லணும்..

என்றும் நட்புடன்
சந்தியா ஸ்ரீ


இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டான இன்று..!

ஆள் இல்லாது கார் தானாக செல்லும் மாயம் உலகம்..! நாம் வாய் வார்த்தையாக சொல்லும் சொல்லை வைத்தே, அந்த பொருள் என்ன பொருள் எப்படி உருவானது, அது இப்பொழுது எப்படி இருக்கிறது என்று மொத்த தகவலையும் கொடுக்கும் கணினி உலகம்..!

அவ்வளவு பெரிய பூலோகத்தையே சின்னச்சிறு பாக்ஸில் அடைத்துவிட்ட நவீன உலகத்தில் சின்னஞ்சிறு குழந்தை முதல் வயதான பாட்டிகள் வரையில் செல்போன் வைத்திருக்கும் இந்தகம்பியூட்டர் யுகத்தில் கரிகாலனின் காதல் மனம்..!

அவனின் சிந்தனை எல்லாம் நந்தினியின் மீதே இருக்க அங்கிருந்த பச்சை பசும்புல்லின் மீது படுத்து கண்ணிரைடையும் மூடினான்.. அவனின் மூடிய இமைகளின் இடையே பேசும் பொற்பாவையென வந்து நின்றாள் நந்தினி..

அவள் பேசும் பொழுது அவளோடு பேசும் கருகருவென இருக்கும் மீன் போன்ற விழிகளில் அவள் தன்னை பார்க்கும் பார்வையில் அவனின் உள்ளம் அவளிடம் தஞ்சம் அடையும்..

செந்நிற பாவை அவளின் மீன் போன்ற விழிகள் எப்பொழுதும் அவளைப் பார்த்தால் மட்டுமே காதல் என்ற மொழி பேசும்.. அவளின் கன்னங்கள் இரண்டிலும் முகம் பார்க்கலாம்.. அவளின் சிந்தனையில் அவன் கண்மூடி படுத்திருந்தான்..

வானில் பௌர்ணமி நிலவு மேகக்கூட்டங்களோடு இணைந்து ஊர்வலம் போனது.. அவளின் மீன்விழிகள் இரண்டும் அவனைக் கண்டு காதல்மொழி பேச, ‘நந்தினி..’ என்றவளின் பெயரை உச்சரித்தான்..

அடுத்தநொடி, “அழகா விழிதிறந்து பாருங்கள்..” என்று அவனின் விழியை அவளின் மெல்லிய விரல்கள் வருடி விளையாடியது.. அந்த விரல்களின் வழியே உறவு பெற்றவன் அவளை இழுத்து அணைத்தான்..

இதோ கனவு என்ற ஒன்றில் தன்னையும் மறந்த நிலையில் துயிலில் ஆழ்ந்திருக்கிறான் ஆதித்யா..

“ஐயோ அம்மா இங்கே பாருங்க.. இவன் என்னை என்னவோ பண்றான்..” என்று சிறிய மகனின் உயிர் போகும் அலறல்கேட்டு சமையலறையில் இருந்து ஓடிவந்தார் கலையரசி..

அவர் வந்து பார்க்கும் பொழுது படுக்கையில் ஆதித்யா அறிவழகனை அணைத்துக்கொண்டு படுக்கையில் புரண்டு கொண்டிருந்தான்..

“அம்மா என்னை காப்பாத்துங்க..” என்று உயிர் போக கத்திட, அவனின் குரல்கேட்டு விழிதிறந்து பார்த்தான் ஆதித்யா..

அவன் விழி திறந்து பார்க்கும் பொழுது அங்கே காடும் இல்லை.. அருகில் குதிரையும் இல்லை.. பச்சை பசும் புல்வெளியும் இல்லை.. ஆனால் ஒரு சின்ன மாற்றம் ஆதித்யாவின் அருகே அறிவழகன் [முத்தழகன்] மட்டும் இருந்தான்..

அவள் தூக்கக் கலக்கத்தில் விழிதிறந்து, “டேய் அறிவு என்னடா நீயிருக்கிற.. என்னோட நந்தினி எங்கே..?” என்று கேட்டான்..

அவனின் கேள்வியில் அறிவின் முகம் இரண்டும் சிவக்க, “டேய் முதலில் என்னை விடுடா..” என்று கொலைவெறியுடன் கத்தினான்..

அப்பொழுதுதான் அவனை இறுக்கியணைத்து படுத்திருப்பதை உணர்ந்து, “ஹி.. ஹி.. ஸாரி அறிவு..” என்றவன் அவனைவிட்டு விலக எழுந்தமர்ந்தான்..

“அம்மா இவனுக்கு ஒரு கல்யாணம் பண்ணி வைம்மா..” என்ற சின்ன மகனை பார்த்து வாய் மூடி சிரித்தார் கலையரசி..

“ஸாரிம்மா.. நைட் தூக்கத்தில்..” என்று இழுத்த பெரிய மகனைப்பார்த்த கலையரசிக்கு சிரிப்புதான் வந்தது..

ரகுராமன் – கலையரசியின் தவப்புதல்வன் அதித்ய கரிகாலன். வயது 27.

“எனக்கு கல்கியின் நாவல் பொன்னியின் செல்வன் ரொம்ப பிடிக்கும்.. அதனாலோ என்னோவோ உனக்கு ஆதித்ய கரிகாலனின் பெயரை கொஞ்சம் மார்டனாக ஆதித்யா என்று பெயர் வைத்தேன்..” என்றவர் சொல்ல,

“அதுதான் அம்மா இப்போ பிரச்சனையாகி போனது..” என்று புலம்ப தொடங்கினான் அறிவழகன்..

“இவன் நந்தினி மீது உயிராக இருக்கிறான் அம்மா.. கனவில் யாரை கட்டிபிடிக்கிறோம் என்று தெரியாமல் என்னைக் கட்டிபிடித்துகொண்டு இருக்கிறான்..” என்றவன் எழுந்து அறையைவிட்டு வெளியே சென்றான்..

அவன் வெளியே சென்றதும் பெரியமகனின் பக்கம் திரும்பியவர், “என்னடா பொன்னியின் செல்வன் புத்தகம் படித்தாயா..?” என்று அவனை தலையை கோதினார்..

“ம்ம் கனவில் அவளோட முகம் பார்த்தேன் அம்மா.. நான்.. நான்.. அவளை நேரில் பார்ப்பேனா..?” என்று தவிப்புடன் கேட்டான் ஆதித்யா.. அவனின் தவிப்பு கலையரசிக்கும் புரிந்தது..

அந்த ஆதித்ய கரிகாலச்சோழனை அச்சில் வார்த்தது போலவே இருந்த மகனைப் பார்த்தவர், “உனக்கு எல்லாம் நல்லதாகவே நடக்கும் ஆதி..” என்றார் அவனின் தவிப்பை போக்குவது போல..

அதில் அவனின் முகம் தெளிவடைய, “ஆதி எழுந்திருச்சு ஹாஸ்பிட்டல் கிளம்புடா..” என்று அவனை அதட்டிட, “சரிம்மா..” என்று எழுந்து சென்றான் ஆதித்யா..

அவனின் மனம் முழுவதும் அவளையே தேடியது.. அவனுக்கு இன்று நெற்றில் இருந்து நந்தினியின் மீது காதல் அல்ல.. கிட்டதட்ட மூன்று ஆண்டுகளாக அவளைக் கனவில் பார்க்கிறான்..

தினமும் ஆயிரம் பெண்ணை கடந்து வரும் அவனின் மனம் எப்பொழுதும் அவளை மட்டுமே தேடியது.. அவன் உள்ளம் அவளை மட்டுமே தேட காரணம் என்னவென்று அவனுக்கே தெரியவில்லை..

அவனின் தேடலுக்கான அர்த்தமும் அதே நாவலில் இருக்கிறது என்று உணர்ந்த ஆதித்யா மீண்டும் மீண்டும் அதே நாவலைப் படிக்கிறான்.. அவனின் ஆழ்மனத்தின் சிந்தனையில் அந்த குறிப்பு மட்டும் கிடைக்கவே இல்லை..

அவனை பொறுத்த வரையில், “பொன்னியின் செல்வன்” என்பது ஒரு நாவல் என்று அவனுக்கு புரிந்தாலும் அவனின் மனதிற்கு மட்டும் அந்த உண்மை புரியவே இல்லை.. அவனின் ஆழ்மனம் விழிக்கும் தருணத்திற்காகவே காத்திருக்க தொடங்கினான்..

அவனின் தேடல் தொடர்ந்துகொண்டே இருந்தது.. அவன் தேடும் நந்தினி மட்டும் அவன் கண்ணில்படவில்லை..

அவன் இருப்பதோ அமெரிக்காவில்.. அங்கே வெள்ளை அழகிகள் தான் அதிகம்.. தமிழ்நாட்டு சாயலில் அவனின் கண்களுக்கு ஒரு பெண் கூட தட்டுப்படவில்லை..

சிறிதுநேரம் அங்கேயே நின்று மகனின் முகம் பார்த்த கலையரசி, ‘இவனோட ஆசை எல்லாம் பழிக்கனும் ஆண்டவா..’ என்ற வேண்டுதலோடு அந்த அறையைவிட்டு வெளியே சென்றார்..

அண்ணனுக்கு முன்னே வேலைக்கு கிளம்பிய அறிவழகன் டைனிக் ஹாலில் அமர்ந்திருந்தான்.. கலையரசி தன்னுடைய சமையல் வேலையை தொடர்ந்தார்..

அவன் தன்னுடைய கனவை எல்லாம் ஒதுக்கு வைத்துவிட்டு குளித்துவிட்டு ஹாஸ்பிட்டல் கிளம்பிய ஆதித்யா, “அம்மா நான் ஹோஸ்பிடல் போறேன்..” என்று சொல்லிவிட்டு கிளம்பினான்..

ஆதித்யா பிரபல ஹார்ட் ஸ்பெஷலிஸ்ட். அவன் செய்த ஆப்ரேஷன் இதுவரை தோற்றுபோனதே கிடையாது.. அவன் செல்லும் வரையில் பொறுமையாக இருந்த அறிவழகன் அவன் வெளியே சென்ற மறுநொடி சமையறைக்குள் நுழைந்தான்..

“அம்மா அண்ணா நினைப்பது நடக்குமா அம்மா..?” என்றவன் அண்ணனின் மீது உள்ள அக்கரையில் கேட்டான்..

அவனின் கேள்வியில் சின்ன மகனின் முகம் பார்த்த கலையரசி, “அவனுக்கு என்று நந்தினி பிறந்திருப்பாள்.. அவனோட கனவு கட்டாயம் பழிக்கும்.. அவள் மீது அவன் உயிராக இருக்கிறான் அவனோட தேடல் உண்மையென்றால் அவனின் காதல் கட்டாயம் ஜெய்க்கும்..” என்றார் கலையரசி..

அவர் சொல்வதில் ஏதாவது உள்ளர்த்தம் இருக்குமென்று உணர்ந்த அறிவழகன் எதுவும் பேசாமல் கல்லூரி கிளம்பிச் சென்றான்.. ஆதித்யாவை விட ஆறுவருடம் சிறியவன் அறிவழகன்.. அண்ணன் என்றால் அவனுக்கு உயிர்..!

தன்னுடைய பிளாக் ஹோண்டா காரில் ஏறி ஹாஸ்பிட்டல் சென்றான் ஆதித்யா.. அங்கே அவனுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருப்பதை அறியாமலே...!

தொடரும்....
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,884
Location
madurai
Nalla pathivu சந்தியா dear நந்தினி தேவியின் வருகைக்கு காத்திருக்கிறேன்??
 




Nachuannam

அமைச்சர்
Joined
Nov 27, 2018
Messages
4,031
Reaction score
8,390
Location
U.A.E
Nice ka ??
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
நானும் வந்துட்டேன்,
சந்தியா டியர்
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சந்தியா ஸ்ரீ டியர்
 




Last edited:

Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
Nice சந்தியா நல்ல எழுதி இருக்கீங்க ???
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top