• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

தேன் மழையில் சிறுதுளி இறுதி---- சௌந்தர்யா

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Soundarya Krish

முதலமைச்சர்
Joined
Sep 17, 2018
Messages
10,587
Reaction score
27,628
Location
Home Town
"நமது மகன்! புனிதமான நம் காதலின் பரிசுத்தம்! வீரமிக்க என் சோழனின் தீரம்! காதலில் கனிந்த சின்னவளின் உயர்ந்த செந்நீர்க்குருதி! சோழற்பெருமையை பாதுகாக்க வந்த கேடயம்! அப்படிப்பட்டவனின் உயர் பிறப்பு துரோகிகளும் நயவஞ்சகரும் நிறைந்த இவ்விடத்திலா அமைய வேண்டும். அது அவனின் பசுமை நிறைந்த வாழ்விற்கு நாம் பூசும் கருஞ்சாந்து ஆகிவிடாதா?இவ்விடம் விட்டு நீங்கும் வரை என் மகன் காத்திருக்கட்டும் அவன் உதித்த இருட்டு அறையிலேயே."

தன்னவளின் வேண்டுதலுக்கிணங்க ஆதித்தன் முத்தழகனுடன் மற்ற இருவரையும் அழைத்துக்கொண்டு ஆதித்தன் தன் அழகிக்காகக் கட்டிய மாளிகையை அடைந்தனர். தனக்காக தன் காதல் மன்னவன் கட்டிய அற்புதமான மாளிகையில் தங்கள் மகனை முழு மனதுடன் பேருவுகையுடனும் பிரசவித்தாள். தேனருவி தாயாய் தோழியாய் அவள் தேவைகளைக் கவனித்தாள்.

பின்னர் அங்கிருந்த தூண்களில் சரியாக ஏழாவது தூணின் அருகில் சென்று அதிலிருந்த சிறு துவாரத்தில் தன் கழுத்திலிருந்த சூரியனும் சந்திரனும் சேர்ந்து பதித்திருந்த முத்திரையை வைத்து அழுத்தினான் ஆதித்தன். அந்தத் தூண் இருந்த இடத்தைவிட்டு விலகி ஓர் சுரங்கப்பாதை தொடங்கியது அதற்குள் நால்வரும் குழந்தையுடன் சென்று மாளிகையைவிட்டு சிறிது தொலைவில் உள்ள ஓர் மண்டபத்தை அடைந்தனர்.

ஆதித்தன் தன்னிடமிருந்த தொலைநோக்கும் கண்ணாடியின் வாயிலாக அம்மாளிகையைக் கண்டான். பகைவர்கள் படையுடன் மாளிகைக்குள் நுழைவது தெரிந்தது. ஆதித்தன் அங்குள்ள ஏழாவது தூணில் இருந்த சிறிய துவாரத்தில் மீண்டும் தன் சூரிய முத்திரையை வைத்து அழுத்தினான். அந்த மாளிகை அப்படியே மண்ணுக்குள் சென்று தரைமட்டமாகியது. அதனைச் சோகமாகப் பார்த்த தன் மனையாளிடம் தன் முத்திரையைக் காட்டியவாறே,"இதை மீண்டும் இந்த தூணில் அழுத்தினால் மாளிகை மீண்டும் அதன் பழைய பிரமாண்ட நிலையை அடையும்."என்றான்.

தன்னவளின் ஆசைக்கிணங்க தன் அரியணையைத் துறந்து உலகமெங்கும் புலிக்கொடியை நாட்ட தன் பயணத்தைத் தொடங்கினான் ஆதித்தன் தன் மனைவியுடனும் மகனுடனும். உற்ற தோழனாய் அவனை நிழலாய் தொடர்ந்தான் முத்தழகன் தன்னவளுடன். (இப்பரந்து விரிந்த பாரதத்தில் எங்கெல்லாம் புலிக்கொடி பட்டொளி வீசுகின்றதோ அங்கெல்லாம் நம் ஆதித்தனும் கால் பதித்திருப்பான்.)

கண்களைத் திறந்த சூர்யா அதிர்ச்சியிலிருந்து வெளிவரவில்லை. கனவென்று கூற இயலாதவாறு மிக உணர்வுப்பூர்வமான ஓர் உணர்வு அவனை ஆட்கொண்டிருந்தது. தனக்கருகில் படுத்திருந்த தன் மனையாளை எழுப்பினான்.
"என்னடா? என்னாச்சு ஏதாவது பேய் கனவா?" என்று கண்களைத் தேய்த்தவாறே வினவினாள் மதி.
"அதை விடு ஒரு சர்ப்ரைஸ் பற்றிப் பேசினாயே அதென்ன?"
"ஏன் ஏதாவது கனவு வந்ததா??"என்று ஆர்வமாகப் பார்த்தாள்.
"சோ! உனக்கும் அல்ரெடி இந்த கனவு வந்திருக்கிறது."
"ம்ம்..ம்"
"அதான் இவ்வளவு ஆர்வமாக ப்ராஜக்ட் பண்ணனும்னு ஆசைப்படுகிற. சரி விடு அந்த சர்ப்ரைசையும் சொல்லிரு டீ!"
அவன் கேட்டவுடன் அவள் புத்தக அலமாரியில் சென்று ஓர் பழங்கால புத்தகமொன்றை எடுத்து வந்து தந்தாள். அதில் ஓர் நான்கு பக்கங்கள் மட்டும் குறிக்கப் பட்டிருந்தது. அதைத் திருப்பி பார்த்தவன் அதிர்ந்தான்.


"எப்படி டீ? அப்படியே இருக்கிறார்கள்? நமது அப்பா அம்மாவா இவங்கனு யோசிக்கும்போது புல்லரிக்கிறது."
"வெயிட்! வெயிட்! அப்போது அப்பா நமது கல்யாணத்துக்கு கிஃப்ட்டா கொடுத்த பெட்டியில் என்ன இருக்கிறது?"
"அந்த முத்திரை!!!"இருவரும் மற்றவரை அணைத்தவாறே கூவினர்.

முற்றும்...
 




Last edited:

Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
Wow wow ??????
படிச்ச தேன் மழையிலே உங்க தேன்மழையில் தான் ஆதித்ய கரிகாலன் பற்றிய மேலும் ஒரு தகவல் தெரிந்து வித்தியாசமா இருந்தது அவங்க ஆராய்ச்சி கனவு எல்லாமே அருமையா இருக்கு குறிப்பிட்டுச் சொல்லும் நா அந்த சுரங்கப்பாதை, மாளிகை மறைவது, இந்த முத்திரை இவர்கள் கையில் இருப்பது ரொம்ப நல்லா இருக்கும் சூப்பர் எண்டு நைஸ் டா ??????
 




Soundarya Krish

முதலமைச்சர்
Joined
Sep 17, 2018
Messages
10,587
Reaction score
27,628
Location
Home Town
Wow wow ??????
படிச்ச தேன் மழையிலே உங்க தேன்மழையில் தான் ஆதித்ய கரிகாலன் பற்றிய மேலும் ஒரு தகவல் தெரிந்து வித்தியாசமா இருந்தது அவங்க ஆராய்ச்சி கனவு எல்லாமே அருமையா இருக்கு குறிப்பிட்டுச் சொல்லும் நா அந்த சுரங்கப்பாதை, மாளிகை மறைவது, இந்த முத்திரை இவர்கள் கையில் இருப்பது ரொம்ப நல்லா இருக்கும் சூப்பர் எண்டு நைஸ் டா ??????
Akka romba happy kaa:love::love::love:
Me flying ???Maha kaa lub u??
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top