• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

தைப்பாவை

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

KarthikaSS

புதிய முகம்
Joined
Apr 22, 2018
Messages
1
Reaction score
0
Location
madurai
தையில் திருப்பாவை படித்தால் பாவை ஆண்டாள் என்ன வேண்டாம்னு சொல்லப் போறாளா? என்று வினவிய பெண்ணைக் காணும் ஆர்வம் மேலிட கண்கள் தானாய் வாசித்துக் கொண்டிருந்த புத்தகம் விட்டு அகல பார்வை பாவை அவளைத் தேடியது. யாராக இருக்கும்?
முதிர்சியான அதே சமயம் இளமையும் இனிமையும் கலந்த குரல்....
இரயில் சிநேகங்கள் அவனுக்கும் நிகழ்ந்தது உண்டு தான் ஆனால் இப்படியான உரையாடல்களைக் கேட்க நேர்வது இது முதல் முறை....
உரையாடல் என்ன உரைக்கும் படி கூப்பிட்டால் தான் கேட்கும் அந்தளவிற்கு selective செவுடனாக மன்னிக்கவும் செவிடராக இருப்பார் நம்ம குரு.... குருப்ரசாத்.... headphones உபயம்....
இன்றைக்கு என்னவோ கொஞ்சம் விடுதலை காதுக்கு!!!
அப்படியொரு சந்தர்பத்தில் தான் இந்த உரையாடலைக் கேட்க நேர்ந்தது... கேட்க நேர்ந்தது தான்... தெளிவு படுத்தியாக வேண்டும் இல்லையா?
ஹ்ம்ம் அவனும் கவனிக்க ஆரம்பித்தான்... அவனும்னா பெயர் தெரியா அவளிடம் பேசிக் கொண்டிருக்கும் அந்த நபரும் தான்...
என்னவாக இருக்கும் என அவனின் எழுத்தாளன் மூளைக்குள் ஓடி மறைய அவன் தொகுத்துக் கொண்டான் மீதிக் கதையை....
அவள் அலைபேசிக் கொண்டிருக்கிற நபர் என்ன செய்கிராய் என வினவி இருப்பார்.... இவள் வாசிப்பதாக சொல்லி இருக்கக் கூடும்.
என்ன வாசிக்கிறாய் எனக் கேட்டிருக்கக் கூடும்.... திருப்பாவை!
அதான் மார்கழி முடிஞ்சதே இன்னும் என்ன திருப்பாவை எனக் கேட்டிருக்கக் கூடும்?
ஹ்ம்ம் இரசனை இல்லா மனிதன் போல..... மாதங்கள் அத்தனையும் மார்கழியாய் ஆக்கிடும் திருப்பாவை எப்பொழுது படித்தால் என்ன? இது குரு எண்ணியது....
சரி அந்த கதாகாரி என்ன பதில் சொல்றா கேட்போம் என தயாரானான்.. ஹ்ம்ம் அவனுக்கு அவள் கதாகாரி தான்.... பாவைக் கூத்தில் வருகிற தோல் பாவை போல கவனமில்லா ஆடை உடுத்தல்... கொஞ்சம் கலகக்காரி கூட.... மனதுக்குள்' நுழையுறா அத்துமீறி!!! ரொம்ப புதுமைக்காரியாவும் இருப்பா போல..... இட்டிருந்த கை வளை சொன்னது....
பார்வை கூர் தீட்டியது.... எதிரே இருப்பவன் கவனம் தன்னிடம் வந்தது தெரிந்த கணம் முதல் பார்வை லேசர் தான்...
இத்தனை நேரம் பேசி வீணடித்த நேரத்தை ஈடு செய்ய எண்ணினாலோ என்னவோ அலைபேசியை அலைகற்றைக்கு தாரை வார்த்து விட்டு எதிரே இருந்த குருவின் பார்வைக்கு பதில் பார்வை பார்க்க ஆரம்பித்தவள் அவனையும் புத்தகத்தையும் மாறி மாறிப் பார்க்க ஆரம்பித்தாள்.
காரணம் குரு அணிந்து இருந்த காவியும் கையில் இருந்த லெனின் புத்தகமும்....
குருபிரசாத்! என கை குலுக்கி தன்னை அறிமுகம் செய்தவனிடம் நொடி நேரம் யோசித்தவள் சத்யேகி எனத் தன்னையும் அறிமுகம் செய்து கொண்டாள்.
ஆச்சரியம் அவன் பார்வையில்!
குரு அத்தனை சீக்கிரம் ஆச்சர்யப் பார்வை வீசுபவனும் இல்லை.... காரணம் அவன் வாழ்ந்த சூழல்! இப்போழுது கேட்டால் வயதும் கூட!
வயதிற்கு தகுந்த முதிர்வும் வேண்டும் இல்லையா? நாற்பதுகளின் தொடக்கத்தில் இருப்பவனுக்கு சமீபமாய் இந்த சிந்தனை... நிதானம் எல்லாம்....
இருவதுகளில் அவனின் வேகம் கண்டு அவனே பின்னாளில் பிரமித்துப் பார்த்திருக்கிறான்.
சத்யேகி உங்க பார்வை புரியாமல் இல்லை.... புரட்சியாளன் காவி உடுத்தக் கூடாதுன்னு இல்லை தானே? எனவும்
முந்திக் கொண்டு பதில் சொன்னாள்.... ச்ச அப்படி பார்க்கல குரு!
இந்த மாதிரி மனசு சொல்றது கேட்டு வாழ்றவங்களைக் கண்டு வருஷக் கணக்கு ஆகிருச்சு என சொன்னதும் குரு கேட்டான்...
எப்படி சொல்றீங்க நான் மனசு சொல்றத தான் கேட்குறேன்னு?
அதற்கு சத்யா, "ஹ்ம்ம்... உதாரணம் இந்த உரையாடல்... நான் யாரோ என்னவோ.... எதுக்கு என் பேச்சு சத்தமோ இல்லை சாராம்சமோ எதுவோ ஒன்னு உங்களோட புத்தகத்த விட்டுட்டு என்னைப் பார்க்குதுன்னா மனசு சொல்லணும் இல்லையா?" என்றதுமே
ஒரு மைக்ரோவினாடி வியப்பு குருவின் கண்ணில்!!!
குரு தொடர்ந்தான்... "இல்லைன்னு சொல்ல மாட்டேன்.... இந்த நாள் ஆசீர்வதிக்கப் பட்டிருகிறது... இல்லன்னா உங்களை சந்திச்சு இருக்க மட்டேன்.... முக்கியமா உங்களுடைய திருப்பாவை விளக்கம் கேட்காம போயிருப்பேன்..."
உண்மை குரு!! என சத்யா தொடர்ந்தாள்....
உண்மையிலேயே ஆண்டாள் பாவம் இல்லையா?எல்லாரும் அவளை கடவுளோட நேரடி சேவகி அப்படி இப்படின்னு பல பிம்பங்களை உருவாக்கி வைச்சாலும் எனக்கு அவ இப்போவும் unrequited love அப்படின்னு தெரிஞ்சும் ஏங்கின குழந்தை மனது அவளது!!! என்ற சத்யாவின் கூற்றுக்கு பதில் சொல்லாமல் மௌனமாய் அவளை அவளின் புரிந்து கொள்ளும் தன்மையை இரசிப்பது பிடித்தது குருவிற்கு...
ஹ்ம்ம் என மீசை நீவி அவளைப் பார்வையிட்ட குருவை இப்பொழுது தான் பார்க்க ஆரம்பித்து இருந்தாள் சத்யா!
ஹே குரு sorry... corporate பழக்கம் சுடுகாடு மட்டும்னு புதுமொழி ஆக்க வேண்டிய காலம்... உங்களை பெயர் சொல்லி கூப்பிடுறேன்...
கண்டிப்பா உங்களை விட சின்னவ தான் நான்.... நீங்க என்னை வா போன்னே சொல்லலாம்.... என்ற சத்யாவினைக் கண்டு சுவாரஸ்ய புன்னகை ஒன்றை புரிந்த குரு அவளுக்குப் பதில் சொல்ல ஆரம்பித்தான்....
"சத்யா மரியாதை அப்படிங்கறது பெயர் சொல்லாமல் தவிர்க்கிறது இல்லைன்னு உனக்குமே தெரியும்.... என்னோட சக வயது தோழமை பால்யம் எல்லாம் ஞாபகப்படுத்தும் இந்த விளிப்பு வியப்பு தான் எனக்கு..." என்றவனுக்கு என்ன பதில் சொல்லவென தெரியாமல் தற்காலிகமாய் மௌனச் சாமியார் ஆகி விட்டிருந்தாள் சத்யா.
பழகத் தோன்றும் இயல்பு சிலரிடம் மட்டும் தோன்றும்!! நிச்சயமா இந்த போன் ஆசாமிக்கு நன்றி சொல்லியே ஆகணும்.... நீ அப்படி சொல்லாம இருந்தா உன்னை நான் கவனிக்காமலே போய் இருப்பேன் இல்லையா சத்யா? என்ற குருவிடம் விரிந்த புன்னகை ஒன்றை சிந்தியவள் அவனிடம் மனம் கூற ஆரம்பித்தாள்.
குரு! இது பர்சனல்னு தோணுனா நீங்க பதில் சொல்ல வேணாம் என ஆரம்பித்ததுமே தெரிந்து விட்டது குருவிற்கு இது எதுவோ பர்சனல் கேள்வி தான் என....
ஹ்ம்ம் என தலை லேசாய் சாய்த்து மட்டும் சம்மதம் சொன்ன குருவினைக் காணும் போது ஒன்றே ஒன்று தான் தோன்றியது.... இரசிகன் கூடவே கலைஞன்...
உங்களுக்கு கல்யாணம் ஆகிருச்சா?
ஹ்ம்ம் என மெல்லமாய் தலை அசைத்தவன் லவ் marriage... என்றதும் அவன் முகத்தில் வந்த விகசிப்பினை உணர்ந்தவள் சற்றே மகிழ்ந்து இதழ் திறந்தாள்...
சரி இந்தக் கேள்வி ஏன் கேட்டேன் தெரியுமா? என்ற சத்யாவிற்கு ம்ம்ம்ஹம்ம் தெரியல என இடம் வலமாய் தலை அசைத்தவனைக் கொட்ட வேண்டும் போல தோன்றினாலும் சூழல் கருதி அமைதியாய் அவனிடம் சொல்ல ஆரம்பித்தாள்.
ஆண்டாள் ஏன் பிடிக்கும்னு கேட்டா ஆள் ஆளுக்கு ஒரு காரணம் சொல்லுவாங்க... ஆனா எனக்கு ஆண்டாள் திருப்பாவை மட்டுமே காரணம் இல்லை....மனுஷங்க யார் மேலேயும் காதல் இல்லைன்னு இல்லை.... அவளுக்கு அது ஏற்புடையதா இல்லை....
கடவுள் மேல் காதல் கொண்டால் பித்தென எண்ணினும் என்ன? இது மனது சம்பந்தப் பட்டது....
ஆனா ஆண்டாள் போல எல்லாம் இருக்க முடியாது அப்படின்றது நிதர்சனம்!
இருவத்தோரு வயசில படிக்கிற திருப்பாவைக்கும் இருவத்தேழுல படிக்கிற திருப்பாவைக்கும் எத்தனை வித்யாசம் தெரியுமா? என்ற சத்யாவிற்கு என்ன பதில் உரைக்கவென அப்பொழுதும் மௌனம் தான் குருவிடம்.
கல்யாணம் ஆகலைங்கறது அத்தனை பெரிய சமூக விரோதமான விஷயமா என்ன?
எனக்கும் தெரியும் தான் குரு.... இங்கே இல்லாம வேற எங்கவாது போகலாமேன்னு... ஆனா இது உளவியல் ரீதியா ஏற்படுத்துற பாதிப்பு இருக்கு பாரேன்.... இது தான் ரொம்ப பலவீனப்படுத்துற விஷயம்...
சத்யாவின் பேச்சு தலைகீழ் மற்றம் போல இருக்க குருவிற்கு அவளிடம் என்ன பேசவெனத் தெரியாமல் அவள் கைகளை மட்டும் பட்டும் படாமல் பிடித்துக் கொண்டான்.
ஹே குரு ரொம்ப boring story சொல்லிட்டேனா?
இல்லை சத்யா! நீ சொன்னதை உள்வாங்கிட்டு இருக்கேன்....நாம பார்க்கிற மனுஷங்க பார்க்கிறது போல இல்லைன்னு ஒரு முறை எழுதிருக்கேன்... அது எத்தனை உண்மைன்னு உன்னைப் பார்க்கிற போது புரியுது சத்யா என்ற குருவினை குழப்பமாய் பார்த்தாள்.
ஹ்ம்ம் நீ பேசும் போது என்னடா இது கோவக்கார கிளி கொஞ்சிப் பேசுதேன்னு தோனுச்சு...
லேசாய் தூவிடும் கொத்தமல்லி போல முறைப்பை அள்ளித் தெளித்தவளைக் கண்டு புன்னகைத்தவன் ஹே சத்யா அப்படி இல்லை ப்பா.... அது என்ன தோனுச்சுன்னு சொன்னேன் அவ்வளவு தான்....
ஒருத்தர் கூட அரை மணி பேசினா கொஞ்சம் தெரியும்னு சொல்லுவாங்க... ஆனா நிமிஷத்துக்கு நூறு தரம் என்னை வியப்பில் ஆழ்த்திக் கொண்டே இருக்கிறாய்!
இன்னும் என்னை என்ன செய்யப் போகிறாய் அன்பே அன்பே ன்னு பாடத் தோணுது!!! என்ற குருவினைக் கண்டு வாய் கொள்ளாப் புன்னகை சிந்தியவள் குருவின் கைகளை இறுக்கமாய் பற்றிக் கொண்டு விட்டாள்.
திருப்பாவை படிக்கிற என் தைப்பாவை நீ!!! மகிழ்ந்திரு பெண்ணே!!! என்ற குருவின் திருவாசகம் அவளுக்கு நிரம்பவும் தேவையாய் இருக்க தேடித் திரிய ஆரம்பித்தாள் தொலைத்த கனவை!!! கூடவே தன்னையும்!!!
-சரவணா
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top