• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

தொட்டாச் சிணுங்கி.. தேவா.. 1

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
என்னோட மொதோ பதிவு..
++++++++++++++××+

பிச்சை புகினும்…- தா.க.தங்கவேல்

May 22, 2014 at 11:24pm

என் வாசிப்பு, எழுத்து அனைத்துக்கும் முன்னோடி என் அண்ணன். கணினி, இணையம் குறித்து இதுவரை எதுவும் தெரியாவிட்டாலும் நன்றாக எழுதுவார். கடந்த ஒரு மாதத்தில் கணினி கற்று தானாகவே தட்டுத் தடுமாறி தட்டச்சி தன் அனுபவத்தையே நீண்ட கட்டுரை ஆக்கி அனுப்பி இருக்கிறார். அவரை உங்களுக்கு அறிமுகம் செய்வதில் பெருமை அடைகிறேன். உங்கள் பின்னூட்டம் அவரை மேலும் ஊக்கப்படுத்தும். .(இப்படி ஒரு அறிமுகத்தோட எந் தம்பி குடுத்தது தான் என்னோட முக நூல் வாழ்க்கை.. அவனில்லேன்னா இந்த நானில்ல)

# பிச்சை புகினும்…- தா.க.தங்கவேல் #

நா ஒரு காட்டாளு.. பின்ன என்னங்க? இந்த 2014ல் கம்ப்யூட்டர் தெரியாதவன்… கடைசிக்கு அலைபேசில கூட இணையம் இல்லாதவன வேற என்னன்னு சொல்றது?

தமிழ் நாடு சரித்திரத்துல களப்பிரர் காலத்த இருண்ட காலம்னு சொல்லுவாங்க..அந்த மாதிரி என் வாழ்க்கைலயும் அஞ்சு வருச இருண்ட காலமுண்டு..ஒரு தேவதையால மீண்டு வெளிச்சத்துக்கு வந்தப்ப ..தொடுதிரை, ஆண்ட்ராய்டு, மடிக்கணிணின்னு காலம் என்ன விட்டுட்டு ரொம்ப வேகமா முன்னால போயிடுச்சு..

இயலாமை ஏமாற்றத்தையும் ஏமாற்றம் கோவத்தையும் தருமில்லையா? காலம் போற வேகத்துக்கு என்னால ஓட முடியாத போது எல்லாத்தையும் திட்ட வேண்டியதா போச்சு... அவனவன் போற வேகத்துக்கு என்னோட ஊளைச் சத்தம் காதுல விழுமா? தொண்டத் தண்ணி காஞ்சு பேசவே முடியாத கட்டம் வந்த போது உடனடியா ஒரு முடிவுக்கு வந்தேன். ”இனி எவனாவது கணிணி இணையம் பத்தி பேச்செடுத்தா கொரவளையக் கடிச்சுடணும்”.

அதுக்குள்ள நம்ம புகழ் ஊரு முழுசும் பரவ… எவனும் அதப் பத்தி பேசல... விசயம் தெரியாதவன் கிட்ட என்ன பேசுவான்? ஆனா உள்ளுக்குள்ள இதெல்லாம் தெரிஞ்சுக்கணும்னு ரொம்பவே ஆசை.. அப்ப இருந்த பொருளாதார நெருக்கடில ‘சீச்சி இந்தப் பழம் புளிக்கும்’.

எனக்கொரு தம்பி… சென்னைல வேலை… ஊருக்கு வரும் போதெல்லாம மடிக்கணிணிய எடுத்துட்டு வந்து ராப்பகல்னு இல்லாம எந்த நேரமும் லொட்டு லொட்டுனு அடிக்கறதும் படிக்கறதுமா இருந்தான்... போகைல வரைல எல்லாம் எட்டிப பாத்து பெருமூச்சு விடறத பயல் கவனிச்சுட்டான் போலிருக்கு…

‘"கத்துக்கலாமே பிரதர்...ஈசி தான்’"

சின்னதா ஒரு புழுவக் குத்தி மொதத் தூண்டி போட்டான்

"‘எனக்கும் இங்கிலீசுக்கும் மாற்றாந்தாய் மகன் உறவுங்கறது உனக்கே தெரியும்’."

மீன் நைசா நழுவுச்சு..

"பேஸிக் தெரிஞ்சுகிட்டா அப்புறம் தமிழ்லயே பூந்து வெளையாடலாம்..நெறைய படிக்கலாம் எழுதலாம்"..’

இந்தப் புழுவுக்கும் மீனு சிக்கலை.(.அவன் சைக்கிள் ஓட்டிப் பழகுன காலத்துல.."’இந்தக் கால அந்தப் பெடல்ல வெச்சு அந்தக் காலால ரெண்டு உந்து உந்தி …சொய்ங்..ரொம்ப ஈஸிடா”"ன்னு சொல்லி ஓட்டிக் காண்பிச்சேன்.அவனும் அதே மாதிரி உந்தி ‘சொய்ங்’னு ஏறி முட்டி மொகரையெகல்லாம் பேத்துட்டு வந்து மொறைச்சான். பழச மனசுல வச்சுட்டு பழி வாங்கறானோ?)

‘"சரி தான்.. இனிமேக் கொண்டு பள்ளிக் கூடத்துப் பையனாட்டம் நோட்டும் பேனாவும் எடுத்துக்கிட்டு கம்ப்யூட்டர் கிளாசுக்குப் போகச் சொல்றியா?’

‘'கத்துக்கறதுக்கு வயசேது பிரதர்?"’
 




Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
அவங் கேள்விக்கு பதில் சொல்லாம அமைதியா யோசிச்சேன்;.. கத்துக்கறதுக்கு வயசு தடையில்லேன்னு எனக்கும் தெரியும… ஆனா வெக்கத்துக்கு..? உண்மையச் சொன்னா எனக்கு கத்துக்கறதுல வெக்கம்...அத வெளிப்படையா சொல்லவும் வெக்கம்... இது தான் ஒரே காரணம்…

என் அமைதிய புரிஞ்சவனாட்டம் போட்டானே தூண்டில்ல ஒரு லெக் பீஸ் போன்!..“

’பிரயோஜனமா பொழுது போறதுமில்லாம அதுல சம்பாரிக்கவும் செய்யலாம்..அதுக்கு நா ஏற்பாடு பண்றேன்’”

. லட்சத்துக்கு பத்தாயிரம் வட்டின்னா ஈமு கோழி பின்னால மஞ்சப் பையத் தூக்கிட்டு ஓடற ஏரியா ஆளாச்சே? நக்கினியூண்டு செலவுல உபயோகமா பொழுதும் கழிஞ்சு வருமானமும் வரும்னா .. "லபக்” மீன் மாட்டிக்கிச்சு.

அன்னைல இருந்து போறவன் வர்றவன் எல்லார் கிட்டயும் இதப் பத்தியே விசாரணை...‘ஏம்பா..கம்ப்யூட்டர் கத்துக்கணும்..நல்ல சென்டர் எது?’ ஆளாளுக்கு ஒண்ணு சொல்ல எல்லாத்தையும் குறிச்சுட்டு நாலு நாள் கழிச்சு புறப்பட்டேன்… ஏன் நாலு நாள்னா அதே வெக்கம், கூச்சம் தான்... எந்தக் கிளாசுலயும் சேராமயே நான் கம்ப்யூட்டர் கத்துக்கறதா உறவுல பேசற அளவுக்கு பண்ணிட்டேன்... இனியும் தள்ளிப் போட முடியாதுங்கற கட்டத்துல பட்டியல்ல மொதல்ல குறிச்சிருந்த சென்டரத் தேடிப் போனேன்.

மூணாவது மாடில.. அண்ணாந்து பாத்தேன். பேர முன்னால போட்டு அப்புறமா “‘டிரெயினிங் காலேஜ்‘”னு பெரிய போர்டு... உள்ளங்கால்ல இருந்து உச்சந்தலை வரைக்கும் விர்ருனு சூடேறி ஜன்னியே வந்துடுச்சு... காலேஜ்? அடிச்சேன் ரிவர்ஸ்... எனக்கு அங்கென்ன வேலை?

அடுத்தது ரெண்டாவது மாடில..பெரிசா போர்டு இல்லாததால துணிஞ்சு மேல ஏறினேன் முன்னால எட்டு வயசுப் பையன் செருப்பு கழட்டிக்கிட்டிருந்தான்... ’”என்ன அங்கிள்..கம்ப்யூட்டர் கத்துக்கறீங்களா?... வாங்க...”” சிரிச்சுக்கிட்டே கூப்பிட ஓடியாந்துட்டேன்… ஒரு வேளை அவந்தான் சொல்லிக் குடுத்து மண்டைலயும் கொட்டுவானோ? சின்னக் கொழந்தைக்குக் கூட நம்ம மொகரையப் பாத்தாலே மேதா விலாசம் தெரிஞ்சுடுதோ?

வெக்கம் ,கூச்சம், கவலை, பயம்...அடேங்கப்பா..தப்பு தப்பா எத்தனையோ காரியம் பண்ணினப்ப எல்லாம் வராத இந்த உணர்ச்சிங்க இப்ப ஒரு சேர வந்து மோதி… ப்பூ..மூச்சடைக்காத கொறை தான்...

இப்படியே இன்னும் நாலு நாள் கழிய.. “’கத்துக்கலாமே பிரதர் ஈசி தான்”” சொன்ன பிரதர் மேல் கோவமா வந்தது..’“அது சரி பிரதர்..உள்ள போனா இல்ல கத்துக்க முடியும்?’” சரி..இதோட விட்டுடலாம்னு பாத்தா பாக்கறவனெல்லாம் ”என்ன..சென்டர்ல சேந்தாச்சா.. பீஸ் எவ்வளவு?”’ ங்கற மாதிரி அதப் பத்தியே விசாரணை.. ’“ஏண்டா..உங்களுக்கெல்லாம் வேற வேலையே கிடையாதா?””ன்னு கத்த ஆசை தான்...ஆனா போன வாரம் முழுக்க சென்டர் பத்தி மணிக் கணக்குல ஆலாபிச்சவன் நானாச்சே? அந்த ஓட்டை வாய்லயே ‘ணங் ணங்’னு குத்தணும்னு ஆத்திரம்னா ஆத்திரம்…

‘“இன்னும சேரலையா?ஏறு வண்டீல”’ ஒரு நண்பன் என்னப் புரிஞ்சுக்கிட்டு கூப்பிட்டான்..கூட்டுச் சேந்தா கூச்சம் வெக்கம் குறையுமோ? அதுவுமில்லாம அந்த நண்பனுக்கு அநத சமாச்சசாரமெல்லாம சுட்டுப் போட்டாலும் வராது(வெக்கம் தான்!). சிம்பிளா ஒண்ணு கண்ணுல பட உள்ள போனோம்
‘’உக்காருங்க சார்…சொல்லுங்க சார்’’ வார்த்தைக்கு ஒரு சார் போட்டு வரவேற்பு பொண்ணு பேச நாம கூட மத்தவங்க கண்ணுக்கு அறிவாளியா படறோம்கற தைரியத்துல விஷயத்த சொன்னேன்
 




Last edited:

Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
டீஒஎ டிசிஎ டாலி…..’’ன்னு படபடன்னு அஞ்சாறு டெக்னிகல் வார்த்தைகளாச் சொல்லி “எதுல சேந்துக்கறீங்க சார்?’’னு கேக்கவும் ‘திரு திரு’ன்னு முழிச்சேன்.

”‘சரி..தலயக் குடுத்தாச்சு..ஒலக்கைக்கு பயந்தா முடியுமா?’”ன்னு தேத்திக்கிட்டு எந்தேவைய தெளிவாச் சொல்றதா நெனைச்சுக்கிட்டு ஏகத்துக்கும் ஒளறி பின்னால வசமா மாட்டிக்கிட்டேன். ஒரு மடிக்கணிணிய தொட்டுப் பாத்தது கூட இல்லைங்கற உண்மையச் சொல்லாம அடிப்படை விஷயங்கள் தெரிஞ்சா போதும்னு சொன்னேன்.

‘’எப்ப இருந்து வர்றீங்க?’’

‘’திங்கக் கிழமை’’ என் பதிலுக்கு நண்பன் ஆச்சரியமா பாத்தான்..ஏன்னா அன்னிக்கு வெள்ளிக் கிழமை..பணம் கட்டிச் சேந்த பின்னால நாலு நாள் எதுக்குத் தள்ளிப் போடறேன்னு புரியாம வாய் விட்டு கேட்டுட்டான்.

‘’ஏண்டா..இன்னிக்கென்ன…வெள்ளிக் கிழம.. அருமையான நாளு…இத விட்டுட்டு திங்கக் கிழமையா…. அது தவணை நாளேச்சே?’’ சிரிச்சுட்டேன்…கம்ப்யூட்டர கத்துக்கவும் பஞ்சாங்கமா? உண்மைய அவங்கிட்ட சொன்னேன்.

‘’இன்னுங் கூட தயக்கமும் கூச்சமும் போகலை நண்பா’’

வரவேற்பு நிமிர்ந்து பாத்து சிரிச்சுக்கிட்டே ”உங்கள விட வயசானவங்க எல்லாம் இங்க வந்து கத்துக்கறாங்க சார்’’ ன்னு சொல்ல எனக்கு வந்துச்சே கோவம்….அப்படீன்னா அந்த ‘சார் சார்’ வயசுககுத் தானா? டேபிள்ல வச்ச பணத்த எடுத்து பாக்கெட்ல போட்டு ’“பில் கேன்சல்“’னு
கடுப்பா சொல்லவும் வரவேற்பு பதறிப் போய் கேட்டது.

‘“ஏன் சார்…...என்னாச்சு?’”

“‘வயசப் பத்தி பேசறதா இருந்தா எல்லாமே கேன்சல் தான்’”

‘ஓ..சாரி சார்..அந்தக் கொழந்தையே நீங்கதான்..போதுமா சார்?’

அது கொஞசம் ஓவர் தான்..பட் அந்த டீலிங் எனக்குப் புடிச்சிருக்க சிரிச்சுக்கிட்டே பாக்கெட்ல கை விட்டேன்.

இப்படியாகத் தானே கலியுக சகாப்தம் ஜெய வருஷம் சித்திரை மாதம் 22ம் தேதி ஆங்கில வருஷம் 2014 மே மாதம் 6ம் தேதி திங்கள் கிமமை சாயந்திரம் மூணு மணிக்கு இந்தக் காட்டாளு கம்ப்யூட்டர் .கிளாசுக்கு மொத மொதலா உள்ள காலடி எடுத்து வச்சான்…சான்…சான்…சான்ன்ன்!!

காலடி எடுத்து வக்கறதுக்கு முன்ன சில சம்பவங்கள்………
 




Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
1) ஹை.. கம்ப்யூட்டர் கிளாசுக்குப் போறேன்’… பாக்கறவன்.. பேசறவன்... பாத்தும் பாக்காம போறவன்…இப்படி எல்லார் கிட்டயும்….(ஹ….நிலாவுக்குப் போன அந்த மனுசன் நீல் ஆம்ஸ்ட்ராங் கூட என்னளவுக்கு சொல்லியிருக்க மாட்டார்) அது எந்த அளவுக்கு போச்சுன்னா….என் வீடு ஒண்ணு வாடகைக்கு விடப்படும்னு போர்டு மாட்டியிருந்தேன்..அதுல இருந்த என் கைபேசி எண்ணுக்கு ஒருத்தர் கூப்பிட உரையாடல் இப்படி போகுது...

”‘ஹலோ சார்…வணக்கம்’”

“ ‘வணக்கம்…சொல்லுங்க”’

“ ‘டூ லெட் போர்டு பாத்தேன்…வீட்டப் பாக்க முடியுங்களா?”’;

“‘இப்பவா….சாரி சார்..நா கம்ப்யூட்டர் கிளாசுக்குப் போகணுமே?”’’(அழைப்பு வந்தது ஒம்பது மணிக்கு.. கிளாசோ மூணு மணிக்கு!!)மனுஷன் விட்ட பாடில்லை.

‘’அப்படீங்களா…நா வேணும்னா ஈவினிங் மூணு மணிக்கு வரட்டுங்களா?’’

கேட்ட கேள்விக்கு தெரியலேன்னாலும் தப்பு தப்பாவாவது பதில் சொல்வேனே தவிர பின் வாங்குனதா சரித்திரமில்லாத ஆனானப் பட்ட நான் இதுக்குப் பதில் சொல்ல முடியாம……’’டொக்’.

2) வெள்ளிக்கிழமைல இருந்து ஞாயித்துக் கிழம ராத்திரி வரைக்கும்..;‘கிளாசுக்குப் போறேன்” குறுஞ்செய்தி.. அலைபேசி அழைப்பு..வாய் மொழி.. எல்லாத்துலயும் ஒரே பல்லவி தான்.அதுக்கு முற்றுப் ; புள்ளி வச்சா ஒரு தோழி..

“‘ஹலோ....என்ன இந்த நேரத்துல?...ஹாாாாவ்’”

“‘உனக்கு விஷயம் தெரியுமா?கம்ப்யூட்டர் கிளாசுல சேந்துட்டேன்’“

அந்தப் பக்கம பேச்சே இல்ல...’புஸ் புஸ்’னு நாக பாம்பு கணக்கா சீர்ற சத்தம் மட்டும்...ஆனந்த அதிர்ச்சில பேச்சு வரலையோ? ஆனா அப்படியில்லேங்கறத துப்பாக்கி குண்டா அந்தப் பக்கமிருந்து வந்த வார்த்தைகள்ல இருந்து புரிஞ்சுகிட்டேன்.

“‘அத விட முக்கியமான விஷயம் நீ தெரிஞ்சுக்கணும்..இந்த ஊர்ல இப்ப ராத்திரி மணி ஓண்ணு..பேய் கூட தூங்கியிருக்கும்’;”

“‘ஒண்...ணா..ஆஆ? ஸாரி..தகவல் சொல்லலாம்னு..”.

“‘ஒரு தடவ சொன்னாத் தகவல்....ஒம்பது தடவ சொன்னா அது தலவலி..வைடா போன..”

குட்டியத் தூக்குனா தாய்ப் பூனை சீறுமே..அந்த மாதிரி சீறிட்டு கட் பணணிட்டா… நாம அறிவாளி ஆகறதுல நட்புக்குக் கூட பொறாமையோ?”

அந்தத் திங்கக் கிழம எனக்கு மட்டும புதுசா விடிய....சோம்பேறி நாளான அன்னிக்கு நா மட்டும் சுறுசுறுப்பா அலைஞ்சேன்.அட எத்தனை வேல..? சலவைக்குப் போட்ட துணி வாங்கணும்..கட்டிங் சேவிங் பண்ணனும்..நோட்டு பேனா வாங்கணும்..பாஸ்போர்ட் சைஸ் போட்டோ எடுக்கணும்....வெளையாட்டா என்ன?

சரியா மூணு மணிக்கு உள்ள நொழைஞ்சதும் லாங்க்; சைஸ் நோட்டு ஒண்ண எடுத்துப் போட்டாங்க..உள்ள வெளிய டைம் போட்டு கையெழுத்துப் போடணுமாம் ..இதுல எனக்கொரு நம்பர் வேற...6965..(கூட்டினா எட்டு வருதே..தேருவனா?)

‘போங்க..ரெண்டாவது ரூமுல சிஸ்டத்துல உக்காருங்க’

சிஸ்டம்?கூச்சத்த ஒதறி துணிஞ்சு அந்தக் கேள்வியக் கேட்டேன்

“ஏங்க...இங்க சேரில்லையா?”’

“நெறைய இருக்கே..எதுக்குக் கேக்கறீங்க?”

“அப்ப ஏன் சிஸ்டத்துல உக்காரச் சொல்றீங்க?”

சும்மா சொல்லக் கூடாது..ஏதோ ரொம்பச் சிக்கலான கேள்வி தான் கேட்டுட்டேன் போலிருக்கு..வரவேற்பு மட்டுமில்ல..அங்க இருந்த அத்தன பேருமே மைனாக் குருவி மாதிரி வாயப் பொளந்துட்டாங்க .. வரவேற்பு ஏதோ சொல்றதுக்கு வாயத் தெறந்து தெறந்து மூடுது...பாவம் பேச்சே வரல..வெறுங் காத்தா வருது. அதோட விட்டனா?அடுத்த கேள்வியும் கேட்டு வச்சேன்.

”தண்ணி வேணுங்களா?’”

வரவேற்பு மஞ்சத் தண்ணி தெளிச்ச வெள்ளாட்டுக் கெடா மாதிரி தலயத் துலுக்கிட்டு கேட்டுதே அந்த மில்லியன் டாலர் கேள்விய…

“கம்ப்யூட்டர் பத்தி உங்களுக்கு என்ன தெரியும்?”

இனிக் கூச்சப் பட்டா வேலைக்கு ஆகாதுன்னு புரிஞ்சசதால என்னோட பில்லியன் டாலர் பதிலச் சொன்னேன்..
“ஒண்ணுமே தெரியாது”

ஒரு அஞ்சு நிமிஷம் உக்காந்து பேசி வரவேற்பு என்னோட வண்டவாளத்த தெரிஞ்சுக்கிட்ட பின்னால கூடவே கூட்டிட்டுப் போயி ஒரு மூலைல சிஸ்டத்து முன்னால இருந்த சேர்ல உக்காரச் சொல்லுச்சு..

சுத்தியும் பொண்டும் பொடுசுகளுமா… எனக்குப் பக்கத்துல ஏழு வயசிருக்கும் அந்தக் கொழந்தைக்கு… திரைல ஒரு துப்பாக்கிய’டக டக’ ன்னு சுட வச்சு ஒரு கூட்டத்தையே ரணகளம் பண்ணிக்கிட்டிருக்க...ஆஹா..அந்தப் பிஞ்சு விரல் நர்த்தனமாடறதும் திரைத் துப்பாக்கிக்கு வாய்லயே ‘ரட் ரட் ரட்”னு குரல் குடுக்கறதும்..காணக் கண் கோடி வேணும்.

“ஏன் நின்னுக்கிட்டே இருக்கீங்க..உக்காரக் கூட சொல்லித் தரணுமா?”

வரவேற்பு கேக்க சடார்னு உக்கார அந்தச் சேர் ‘சொய்ங்’ னு வழுக்கிட்டுப் போயி அந்தக் கொழந்த மேல மோத திரைத் துப்பாக்கி என் பக்கம் திரும்பி….’ரட் ரட் ரட்” (ரிவால்விங் சேர்..!!!!!!எழவு... அதையெல்லாம் சினிமாவுல பாத்திருக்கேனே தவிர உக்காந்து பாத்ததில்லை.)

“போங்க அங்கிள்..போனஸ் போச்சு
 




Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
அந்தக் குழந்தை சிணுங்க.. போனஸ் கூட உண்டா இங்க?பொங்கலுக்கா தீபாவளிக்கா? (நல்ல வேளையா இந்த சந்தேகத்த வாய் விட்டு கேக்கல) உற்சாகத்துல கால உந்தி கம்ப்யூட்டர் கிட்ட போ...ம்கூம்..செவுத்துல மோதி பழைய எடத்துக்கே வந்தேன். சரி தான்..இந்த சேர்ல உக்காந்து பழகவே மாசமாயிடும் போலிருக்கே.. கம்ப்யூட்டர் எப்ப கத்துக்கறது? போச்சா காசு?

ஒரு வழியா வரவேற்புப் பதுமை சேரை திருவாரூர் தேரா இழுத்து நிலைல நிறுத்தி “கவனிங்க..இது தான் சிஸ்டம்..இது கீ போர்டு..இது மவுஸ்..இது ஸ்கிரீன்..” வேகமா ரெண்டு நிமிசம் சொல்லிட்டு கடைசியா ஒரு முத்தாய்ப்பா கேட்டுது

“புரிஞ்சுதா?”

“…சத்தியமா புரியல…”

முணுமுணுத்தது கேட்டுருச்சோ? அதோட கண்ணுல அவ்வளவு அதிர்ச்சி..ஏறக்குறைய என்ன வேத்துக் கிரக வாசி மாதிரியே பாத்துட்டு பெருசா ஒரு மூச்ச விட்டு தளந்து போயி பக்கத்துல உக்காந்து பொறுமையா மொதல்ல இருந்து ஆரம்பிச்சுது..

மொதல்ல வீடு வரைஞ்சு அதுக்கு பெயிண்ட் அடிக்கற பாடம்..

அந்த மவுசுச் சுண்டெலி இருக்கே..அதோட பெரிய ரவுசு..டில்லி எருமைக்குக் கூட மூக்கணாங் கயிறு போட்டு சீக்கிரம் கட்டுக்குள்ள கொண்டு வந்துடலாம்..சுண்டெலி கைல அடங்கவே கால் மணி ஆயிடுச்சு..

மொள்ள தட்டுத் தடுமாறி ஒரு ஊட்ட வரைஞசு அதுக்கு பெயிண்ட் அடிச்சேன்.வரவேற்பு எட்டிப் பாத்துட்டு “வெரிகுட்..அப்படியே அதுக்கு ஒரு பேரு குடுங்க பாக்கலாம்”னு சொல்ல நா முழிச்சேன். பரிதாபமா பாத்துட்டு “இங்க கவனிங்க..டெக்ஸ்ட்…ல போயி மை ஹவுஸ் மை ஹோம்னு எதையாவது உங்களுக்குத் தோணறத டைப் பண்ணுங்க..உங்களால முடியும்.” அன்பா தோள்ல தட்டிட்டுப்போக… வெரி குட்டே ஓவர்.. தோள்லயும் தட்டினா..கேக்கணுமா?

அது சொன்னத அப்படியே பண்ணிட்டா நம்ம கிரியேட்டிவ மைண்ட் என்னாகறது? அதனால “மை பஸ்ட் ஸ்வீட் ஹோம்” னு தலைப்பு குடுத்தேன்..

“குட்..வெரி குட்.. இன்னொரு வீடு வரைஞ்சு கலர் குடுத்து பேரு வைங்க..பாக்கலாம்”.....

சும்மாவே கொரங்குப் புத்தி..அதுக்கு கள்ளையும் ஊத்தி கைல மாலையும் குடுத்தா...கேக்கணுமா?முன்னத விட பெரிசா ஒரு ஊட்ட வரைஞ்சு கலர் குடுத்து…”மை செகண்ட் ஸ்வீட் ஹோம்…”னு பேரு குடுக்க

“வெல்.. சீக்கிரமா பண்ணிட்டீங்களே… ஆனா இவ்வளவு பெரிசு தேவையில்ல..சின்னதா ஒண்ணு..கமான்..பத்து நிமிசம் தான் இருக்கு”

இன்னொரு தோள் தட்டல்!!உற்சாகத்துல தல கால் புரியல..சீக்கிரமா சின்னதா ஒரு ஊட்ட வரைஞ்சு கலர் குடுத்து ரெண்டு நிமிசம் யோசிச்சு பேரு வச்சு கூப்பிட்டு காட்டினேன்… ஊட்டப் பாத்துட்டு எதையோ சொல்லத் திறந்த வாய் தலைப்பப் பாத்ததும் கப்புனு மூடினதுமில்லாம ’டூ மச்’னு முணுமுணுத்தது.அந்த வீட்டுக்கு நாங் குடுத்திருந்த தலைப்பு

’மை”ஸ்வீட் அண்ட் பஸ்ட் ஸ்மால் ஹோம்”’;


ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

1) நான் கற்றுக் கொண்டு சம்பாதிப்பது ஒரு புறம் இருக்கட்டும்..கற்கத் துவங்கியது பெரிய விசயமானால் கற்றலினால் வந்திருக்கும் ஒரு சிறிய பணிவு மிகப் பெரியது..என்றும் உள்ளிருக்கட்டும்.

2) நாம் துளி வெட்கம் உதறி களத்திற்கு தடுமாறிப் போனால் கை பிடித்து அழைத்து செல்ல அத்தனை பேருமே தயாராக இருப்பதை உணர முடிந்தது.

3) நான் சிறிய வயதில் செய்ய ஆசைப் பட்டு முடியாமல் போனதையெல்லாம் என் தம்பி செய்ய ஆசைப் பட்டேன்.நான் தூக்கி வளர்த்த அந்தக் குழந்தை இன்று தான் கற்றதெல்லாம் நானும் கற்க ஆசைப் படுகிறது..மீண்டும் நான் குழந்தையானேன்.

4) அனைவருக்கும் என் செய்தி இதுவே..

"வாங்க..பழகலாம்..ஈசி தான்’'
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
நான் வந்துட்டேன்,
தேவா தம்பி
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
ரொம்பவே சூப்பரான
பதிவு, தேவா தம்பி
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top