• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

தொட்டாச் சிணுங்கி தேவா 16

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
சர்க்க்க்க்..கார்
÷÷÷÷÷÷÷÷÷÷÷

ம்..இப்படித் தான அந்தப் படத்துல ஒரு காட்சில விஜய் சொல்றார்?

'சர்க்க்க்க்க்.............கார்'

படத்தப் பத்தின விமர்சனத்துக்குப் போறதுக்கு முந்தி ஒரு பிளாஸ் பேக்குல ரவுண்ட்ஸ் வரலாம்..

1973ல ரீலீஸ் ஆச்சு அந்தப் படம்..அது அவரோட சொந்த தயாரிப்பும் இயக்கமும் கூட !அப்பத் தான் ஆளும் கட்சில இருந்து விலக்கப் பட்டு தனிக் கட்சி ஆரம்பிச்சு வருசங் கூட ஆகாத வேளை..அப்ப ஆளுங் கட்சில செல்வாக்கா இருந்த மதுரை முத்துங்கறவர் 'இந்தப் படம் ரீலீஸானா சேலையக் கட்டிக்கறேன்'னு பகிரங்க சவால் விட்டார்..

ஏகப் பட்ட தடைகள்.. எதிர்ப்புகள்..சத்யா ஸ்டுடியோவுல எந்த நேரமும் ராட்சத ஜெனரேட்டர்கள வாடகைக்கு எடுத்து பெரும் பகுதி ஸ்டுடியோ காட்சிகளை எடுத்தார்.. ஏன்னா,பெரும் பாலான நேரம் அந்தப் பகுதில (மட்டும்)
பவர் கட்..படம் ரிலீஸாகறதுக்கு முந்தின நாளு சென்னை நகராட்சி சுவத்துல போஸ்டர் ஒட்டறதுக்கு உண்டான வரியப் பல மடங்கு உயர்த்த...

சில விசயங்களே வெளிய தெரியும்.. தெரியாத பல விசயங்கள ஆண்டவனே அறிவான்..ஆனா, அத்தனை எதிர்ப்புக்கும் அவர் அசரல..அசந்து கோபால புரத்துக்கு பொக்கே தூக்கிட்டு ஓடல..சென்னைல ஒத்த போஸ்டர் கூட ஒட்டாம ,1973ல வெளி வந்து அந்தப் படம் வெள்ளி விழா கண்டது..

அந்தப் படத்தின் பெயர்..

'உலகம் சுற்றும் வாலிபன்'

அதன் தயாரிப்பு..டைக்ரசன்..சென்னை விநியோகத்தோடு இரட்டை வேடங்களில் நடித்தவரின் பெயர்..

'எம்.ஜி.ராமச் சந்திரன்'

யெஸ்..அவர் ஆரம்பிச்சு வச்சது இத்தனையும்.. இரண்டு ஹீரோயின்கள்..கனவுக் காட்சிகள்.. பல வண்ண உடைகள்..இதோடு சினிமாவிலிருந்து அரசியல்..

ஆனா,அரசியல தனக்குச் சாதகமான காலம் பாத்து கைல எடுத்துக்கல..காங்கிரஸ் அசுர பலத்தோட ஆட்சில இருந்த போது ஐம்பதுகளின் இடையில் தான் பெருசா பிரபலமாகாத போது தி.மு.கவில் இணைந்தவர்..1957ல் வெளியான சக்கரவர்த்தி திருமகள் படத்தில் அவரின் கதா பாத்திரத்தின் பெயரே உதய சூரியன்..அடுத்த ஆண்டு வெளியான அவரது சொந்த தயாரிப்பு,டைரக்சனில் வெளி வந்த நாடோடி மன்னனில் எம்.ஜி.ஆர் பிக்ஸர்ஸ் அடையாளமாக தி.மு.க கொடியைக் காட்டியவர்..


நடிகன் நாடாளும் ஆசையை விதைத்தவர் மட்டுமல்ல.. அவரே சாதித்தும் காட்டியவர்.. ஆனால்,எதிர்ப்புக்கும் மிரட்டலுக்கும் அடி பணியாதவர்..அது அவர் மட்டுமல்ல.. அவர் ரசிகர்களும் கூட..!அவர் கட்சி ஆரம்பித்த போது அடி பட்டவர்களும் உயிரிழந்தவவர்களும் பலர்.. ஆனால், அவர் செல்வாக்கும்,கூடிய கூட்டமும் அதிகரித்ததே தவிர கொஞ்சமும் குறையல..

நேத்து திருப்பூர்ல சர்கார் ஓடின ஒரு தியேட்டரில் ஆளும் தரப்பால் ரகளை ஏற்பட்டு ரசிகர்கள் பயந்து அலறியடிச்சுக்கிட்டு ஓடினதா செய்தித் தாள் தகவல்.. எனக்கு மட்டுமல்ல.. விஜய்க்கும் அவர மாதிரியே முதல்வர் நாற்காலி கனவுல இருக்கற மத்த நடிகர்களுக்கும் அது வேற ஒரு செய்தியச் சொல்லுச்சு..

இதே அவர் படம் ஓடற தியேட்டர்ல யாரு ரகளை பண்ணி இருந்தாலும் ஒருத்தர் கூட மிச்சமாயிருக்க முடியாது.. செத்து மண்ணோட கலந்து முப்பது வருசத்துக்கு மேல ஆகியும் அவருக்கு இன்னும் அப்படிப் பட்ட ரசிகர்கள் உண்டு.. ஏன்னா,அவருக்கிருந்தது வெறும் ரசிகர்கள் பட்டாளமல்ல..ராஜ விசுவாசிகள்!உங்களுக்கு இருப்பது விசிலடிச்சான் குஞ்சுகள்..இத நம்பி எறங்காதீங்க..
 




Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
படம் முழுக்க முழுக்க அரசியல்ல அவர நிலை நிறுத்தறதுக்காகவே ஆரம்பக் காட்சில இருந்து கிளைமாக்ஸ் வரைக்கும் யோசிச்சு எடுத்த படமிது.. அதுக்கு அவங்க தேடினது பலமான சென்டிமென்ட்.. ஆனா,அதுவே பலவீனமா இருக்கறது தான் பரிதாபம்..

அவருக்கு அது சுலபம்..கதைப்படி அவர் மில்லியனர்.. தன் வாக்குக்காக ஜெத்மலானி ரேஞ்சுல வக்கீல் வச்சு நிமிசத்துக்கு லட்சக் கணக்குல குடுத்து உயர்,உச்ச நீதி மன்றங்கள்ல வாதாடி அவரோட ஜன நாயகக் கடமைய ஆத்தலாம்.. அப்ப காசிருந்தாத் தான் அது சாத்தியம்னு நீங்களே சொல்லிடறதால..எங்கள மாதிரி குப்பனும், சுப்பனும் என்ன பண்றதுன்னு சொல்லவே இல்லீங்களே?

ஆட்சியர் அலுவலகத் தீக்குளிப்பு...
விலையில்லாப் பொருள் அவலங்கள்..
டெங்கு,பன்றிக் காய்ச்சல் பரிதாபங்கள்..

நானும் கிறுக்கறவன் தான்..அதுல பெருசா பேரு வாங்கினவனோ.. படிச்சவனோ இல்ல.. ஆனா,ஒரு படைப்பு நிலைக்க..படிக்கறவங்களோட மனசத் தொட ஒண்ணு அல்லது ஒம்பது சென்டிமென்ட் அதுல இருக்கணும்னு தெரியும்..எழுத்தாளரா ஜெயமோகன் அந்த டெக்னிக்க கைல எடுத்தது தான் மேல சொன்ன விசயங்கள்..டைக்டரா முருகதாசும் காட்சிகள்ல சென்டிமென்ட பிழிஞ்சு எடுக்கறார்..

நடிகரா நீங்களும் இதுல அனல் பறக்க வசனம் பேசி நடிச்சு கல்லா கட்டியாச்சு..ஆனா,ஒரு அரசியல் வாதியா இந்த விசயங்கள்ல நீங்க பண்ணினது என்ன? இது ஒண்ணும் கதைக்கான கற்பனையில்லையே.. போன நூற்றாண்டுல நடந்ததில்லையே..இப்ப சடுதிக்கு நடந்தது தான?அப்ப அரசியல் களத்துல இருந்தீங்க இலலையா... கைக் காச அள்ளி இறைக்காட்டிப் போய்த் தொலையுது..கந்து வட்டிக்கும்,அரசுக்கும் எதிரா போராடினீங்களா?அட்லீஸ்ட் அறிக்கைப் போராவது நடத்துனீங்களா?உங்கள விட வைகோ அண்ணனே தேவல !!!!

கடைசிக்கு..நீங்க இருக்கற துறைல தியேட்டர் காரங்களே அநியாயமா கொள்ளை அடிக்கறாங்களே..ஒரு நடிகராவது வாயத் திறந்து ஒரு வார்த்தை கண்டிச்சிருக்கீங்களா?

சரி..போனதெல்லாம் போகட்டும்.. இப்ப பிரச்னைன்னதும் சில காட்சிகளையும் கோமள வல்லில கோமளத்தையும் தூக்குனது ஏன்?அது தயாரிப்பாளர் செஞ்சது..நானென்ன பண்றதுன்னு சொன்னீங்கன்னா.. ஹல்ல்லோவ் விஜய் சார் .. எம்.ஜி.ஆர் கிட்ட இது நடக்காதுன்னு தெரியுமுங்களா?

அவரு படம்னா அடி முதல் நுனி வரை அவர் தான்.. அவர் அறியாம ஒரு இமைச் சிமிட்டலக் கூட சேர்க்கவும் முடியாது..நீக்கவும் முடியாது.. இத்தனைக்கும் உங்க கிட்ட இருக்கற பிளஸ் பாயிண்டான டான்ஸ் கூட அவருக்குத் தெரியாது..எம்.ஜி.ஆரா திரைல மட்டும் இருந்தாப் போதாதுங்க..நிஜத்துவயும் இருக்கணும்..ஆனா, அதுக்கு தில்லு வேணுமுங்களே?!!!!!!

பி.கு..
÷÷÷÷

சினிமா விமர்சனம்னு ஒரே அரசியல் விமர்சனமா இருக்கேன்னா... நானென்ன பண்ண?படம் எதப் பத்தி பேசுச்சோ அதப் பத்தியே நானும் பேசினேன்..

இங்க மாற வேண்டியது அரசியலோ, அதிகாரிகளோ, சினிமாவோ அல்ல.. மக்கள் !!

இவங்க யாரும் செவ்வாய் கிரகத்துல இருந்து வந்தவங்க இல்லையே..நமக்குள்ள ஒருத்தர் தானே.. நாம தேர்ந்தெடுத்து ஊக்குவிச்சவக்க தானே?

ஒரு இலை பழுதுன்னா கிள்ளிடலாம்.. விழுது பழுதுன்னா வெட்டிடலாம்..ஆணி வேரே ஆகா வழியா இருந்தா.... மொத்த மரமும் அழுகிப் போனதா இருந்தா ..???!!!!!!

ஆம்..வெட்டப் பட வேண்டியது நாம் தான்..,!!

என் காலத்தில் மாற்றத்தப் பாக்க முடியும்னு தோணல..இருக்கற இளைய தலை முறையால மாற்றம் வரும்னு இந்தப் படத்தப் பாத்தா நம்ப முடியல..ஆனா, மாற்றம் வரும்னு நம்பிக்கை மட்டும் இருக்கு..ஏன்னா,மாறாதது மாற்றம் மட்டுமே !


சினிமான்னால சமூகம் மாறும்னா இந்தியன், அந்நியன் படங்களுக்கே இது புனித தேசமா மாறி இருக்கணும்.. மாறலியே?மாறாது...ஏன்னா,திருந்த வேண்டியது அவங்க மட்டுமே இல்லைங்கறதால...

கடைசியா..


படத்துல விஜய் அரசியலுக்கு வந்தா என்ன பண்ணுவார்னு சிம்பாலிக்கா சொல்லிடறார்.. நீங்க கவனிச்சீங்களா? ☺☺☺☺

அதாவது அவர் அரசியல்ல குதிச்சதும் கட்சி நடத்த ஆபீஸ் இல்லையாம்..அதனால, குப்பத்து ஜனங்க தான் குடியிருக்கற பெரிய வீட்டக் காலி பண்ணிக் குடுத்துட்டு தட்டு முட்டுச் சாமான்களோட வீதிக்கு வர்றாங்க..

கதைப் படி விஜய் யாரு...?!!!!!!

பெரிய பன்னாட்டு நிறுவனத்துல வருசம் 1800 கோடி சம்பாதிக்கறவர்..

அதாவது..

மாசம் 150 கோடி..

தினமும் 5 கோடி..

மணிக்கு 20 லட்சம்..

நிமிசத்துக்கு 35 ஆயிரம்..

நொடிக்கு..அதாவது நீங்களும் நானும் கண்ணுச் சிமிட்டற நேரத்துல 600 ரூவா சம்பாதிக்கறவர்..

ஆபீஸ் விலைக்கு வாங்க ஒரு மாச சம்பளம்..
வாடகைக்குப் பிடிக்க ஒரு மணி நேர சம்பளம்..
போதும் தான்..

புரிஞ்சவன் பிஸ்தா..

ஏமாத்துறதுங்கற முயற்சில அவங்களும்..
ஏமாறணும்ங்கற தீவிரத்துல நாமளும் இருந்தா..
இறை காக்கட்டும் என் தேசத்தை...

பிம்பங்கள் கலையட்டும்..
கலையுமென்ற நம்பிக்கையுடன்..

ஜெய்ஹிந்த் !
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
சூப்பர்ப், ரொம்பவே
அருமையான விமர்சனம்,
தேவா தம்பி
 




sridevi

அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
4,750
Reaction score
7,120
Location
madurai
Wow super asathal sago MGRcinemala cigarette ,thanni adikira mathiri vara mattaru amma sentiment,thangachi paasam,nermai athu mathiri neraiya elements irukum innum athanala retta illainu MGR nu adaiyalam a irukaru... Intha padathai sensational entertainments than parka mudiyum sago karutha thediyellam illai .romba arumaiya vivarichutneenga?????????
 




ORANGE

முதலமைச்சர்
Joined
Feb 9, 2018
Messages
5,559
Reaction score
18,173
Location
chennai
எனக்கு ஒரே ஒரு டவுட் தான்.... NRI இப்படி தான் இந்தியா வந்து வோட் போடணுமா.... வேற option இல்லையா?
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top