• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

தொட்டாச் சிணுங்கி தேவா 25

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
என்னை இன்று வரைக்கும் பாதிக்கும் ஒரே நபரின் 102வது பிறந்த நாளை முன்னிட்டு... முக நூல்ல அவரப் பத்தி நான் போட்ட சில பதிவுகள்..

1

இது மருத்துவத் தோழி Murugeswari Madurai அவர்களுக்குச் சமர்ப்பணம்...

ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்தீர்கள்.. எம்.ஜி.ஆரால் சந்திர பாபுவின் வாழ்க்கை அஸ்தமனம் ஆனதாக... நீங்கள் இன்னொருவரைக் குறிப்பிட மறந்து விட்டீர்கள்.. S.A.அசோகன்! அவரும் எம்.ஜி.ஆரை வைத்து படமெடுத்ததால் நாசமானதாகக் கதையுண்டு...

நான் கேட்ட,றிந்த வரையில் சில விசயங்களை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்..நான் முதன் முதலில் என் ஏழு வயதில் பார்த்த முதல் சினிமா "நீரும் நெருப்பும்" அப்பவே எனக்கு எம்.ஜி.ஆரை பிடித்து விட்டது... வக்காலி.. எல்லாரையும் காப்பாத்த எங்க இருந்தாலும் சமயத்துக்கு 'டாண்'ணு வந்துடறாரே? பதினஞ்சு வயசுல ஒம்பதாவது படிக்கறதா நடிக்கறப்ப 1979ல அவரப் பாக்கற பாக்கியம் என்.சி.சி.ல இருந்ததால கெடைச்சது..(ஜனவரி 5ஆம் தேதி பதிவைப் பார்க்கவும்)

அப்ப இருந்து ரசிகனா இல்ல... வெறியனாவே மாறினேன்... முந்தா நேத்துக் கூட நாடோடி மன்னனை அறுபதாவது தடவையா யூ டுயூப்ல பாத்தேன்

ஊடு பூரா எந்தப் பக்கம் திரும்பினாலும் அவரோட படம் தான்...முப்பது வயசுக்கு மேல தான் ஒரு நிதானத்துக்கு வந்தேன்...ரசிக்கத் தக்கது எதுவா இருந்தாலும் ரசிக்கறதே ரசனைங்கறதப் புரிஞ்சுக்கிட்டேன்..அது தில்லானா மோகனாம்பாள் படம் பாத்த பின்னால வந்த நிதானம்... கலைமணி என்ற புனைப் பெயரில் கொத்தமங்கலம் சுப்பு அவர்கள் இரண்டு பாகங்களாக ஏறக்குறைய 1400 பக்கங்களில் எழுதியது..அதை ஏ.பி.நாகராஜன் அவர்கள் நாவலின் தன்மையை துளியும் சிதைக்காமல் படமாக்கியது மிக மிக அற்புதம்..

சிவாஜி என்னங்க சிவாஜி.. ஏ.வி.எம் ராஜன்ல இருந்து மனோரமா வரைக்கும் அந்தப் பாத்திரமாவே மாறி இருப்பாங்க... அவ்வளவு ஏன்?தவில் வித்வானாக நடிக்கும் டி.எஸ்.பாலையா தவில் வாசிக்கும் போது அதுக்கு ஏத்தாப்ல அவரோட மார்புத் தசையும் ஆடும்..

இத ஏஞ் சொல்றேன்னா ரசிக்கத் தக்கத ரசிப்பதே ரசனைங்கற கட்டத்துக்கு வந்த பின்னால எல்லாரையும் எல்லாத்தையும் ரசிக்க ஆரம்பிச்சாலும் எம்.ஜி.ஆரத் தாண்ட முடியல... அதுக்குக் காரணம் அவரோட மனித நேயம்.. பெண்கள் மீது அவர் வைத்திருந்த மதிப்பு !

மத்தவங்க படத்துல நடிக்கற கதா நாயகிங்க,துணை நடிகைங்களுக்கு பாலியல் தொல்லை வரலாம்... ஆனா, எம்.ஜி.ஆர் படத்துல வராது.. வந்ததா அவர் காதுக்குப் போச்சுன்னா அந்தத் தயாரிப்பாளன் செத்தான்.. அதான் அவர்!!!!!

சந்திரபாபு விசயத்தில் நடந்ததும் அதுவே.. இதை வசனகர்த்தா முருகதாஸ்,எம்.ஜி.ஆருடன் எப்போதுமிருந்த ரவீந்தர் போன்றோருடன் நேரிடையாவே பேசி இருக்கிறேன்..நடந்தது இது தான்..மாடி வீட்டு ஏழை படத்தின் தயாரிப்பாளரும்,இயக்குனரும் சந்திர பாபு.. ஆனால், பைனான்சியர் இருவர்..
 




Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
சந்திர பாபு மிகச் சிறந்த கலைஞன்..ஒரு கோழிக் குஞ்ச வாய்ல அடக்கி அதை உயிருடன் வெளியே வாயைப் பிளந்து பறக்க விடுவார் நாடோடி மன்னனில்! குஞ்சானாலும் கூரிய நகங்களுண்டு அதற்கு.. வாயில் அடங்கி இருக்கும் பயத்தில் மலம் கழிக்கவும் வாய்ப்புண்டு.. காட்சி சரியாக அமையாமல் அது எட்டு டேக்குகள் வரை அது போனது... "போதுமா மிஸ்டர் எம்.ஜி.ஆர்? எதுக்கும் இன்னொரு டேக் எடுத்துக்கலாமா?"ன்னு கேட்டவர் அவர்!!!சபாஷ் மீனாவில் ரங்கராவின் சத்தம் கேட்டதும் வேகமாக ஓடி ஒரு சோபாவைத் தாண்டி பீரோவில் பதுங்குவார் பாருங்கள்...சான்சே இல்ல.. எந்த நடிகனும் ஒரு டேக்ல அதப் பண்ண முடியாது..ஆனா,அவர் பண்ணினார்..முப்பதடி உயரத்திலிருந்து குதின்னாலும் யோசிக்காமல் குதிப்பார்..

ஆனால்,எந்த வரையறைக்கும் எல்லைக்கும் உட்படாதவர்.. மனதில் பட்டதை ஒளிக்காமல் சொல்வதோடு குடிப் பழக்கம் வேறு..கேக்கணுமா?தன் மனைவி இன்னொருவரைக் காதலிப்பதாய் அறிந்ததும் பத்திரமாய் கப்பலேற்றி அனுப்பிய மா மனிதரால் பிறன் மனை விழையாமல் இருக்க முடிய வில்லை.. பைனான்சியர்களில் ஒருவரின் மனைவியுடன் நெருங்கிப் பழகி இருக்கிறார்.. பஞ்சாயத்து எம்.ஜி.ஆர் வரை போய் விட்டது.. சந்திர பாபுவை அழைத்து எம்.ஜி.ஆர் விசாரிக்க "மிஸ்டர் எம்.ஜி.ஆர்... என் படத்துக்குத் தான் நீங்க ஹீரோ.. எனக்கல்ல...என் பர்சனல்ல நீங்க தலையிடாதீங்க"ன்னு மூஞ்சில அடிச்ச மாதிரி சொல்லிட்டார்.. "அப்படியா?இனிமே என் கால்ஷீட் விசயமெல்லாம் பெரியவர் சக்ரபாணி அண்ணங் கிட்ட பேசிக்கங்க''ன்னு சொல்லிட்டுப் போயிட்டார்..அதற்குப் பின்னால் நடந்ததை சந்திர பாபுவே பல பேட்டிகளில் சொல்லி இருக்கிறார்.. பின் அவர் மாடி வீட்டு ஏழையானது அவரே தேடிக் கொண்ட விசயம்.. அவரின் மித மிஞ்சிய குடி.. இத்தனைக்குப் பிறகும் பறக்கும் பாவை, அடிமைப் பெண் போன்ற படங்களில் தன்னுடன் நடிக்க வைத்தார் எம்.ஜி.ஆர்!! "எனக்குத் தெரிஞ்சு தமிழ் சினிமாவுல நடிக்கத் தெரிஞ்சு நடிக்கத் தெரிஞ்ச ரெண்டே பேரு நானும், சிவாஜியும் தான்"னு பேட்டியா சந்திர பாபு சொன்ன பின்னாலும்...

S.A.அசோகன் B.A இவருடன் நடித்த முதல் படம் பாக்தாத் திருடன்..அதற்குப் பின் 63 படங்களில் அப்பா,அண்ணன், மாமனார் என பல வித கேரக்டர்களில் நடித்தவர் இவர் ஒருவர் மட்டுமே..காரணம் படித்தவர்கள் கலைத் துறைக்கு வர வேண்டும் என விரும்பியவர் எம்.ஜி.ஆர்...நேற்று இன்று நாளை படத்தை அசோகன் தயாரிக்கத் தொடங்கிய போது எம்.ஜி.ஆர் தனிக் கட்சி தொடங்கி ரொம்பவே பிஸி..திண்டுக் கல் இடைத் தேர்தல் மாயத் தேவர வேட்பாளரா அறிவிச்சு அ.தி.மு.க கன்னித் தேர்தலைச் சந்திச்ச சமயம் அது.. இவரோ தேர்தல் விசயமாய் அலைந்து கொண்டிருக்க அசோகனோ ஏ.எம்மில் செட் போட்டு எம்.ஜி.ஆருக்காக காத்துக் கொண்டிருக்கறார்.. இவரும் குடிப் பழக்கமுள்ளவர்..ஒரு நாள் நல்ல போதையில் இருக்கும் போது "இந்தக் கெழவனுக்கு மூணு ஹீரோயின் கேக்குதா?"ன்னு சொல்லிட்டார்...அது அவர் காதுக்கும் போயிருச்சு.. அது வரைக்கும் நியாயமான காரணங்களுக்காக இழுத்தடிக்கப் பட்ட கால்ஷீட் அப்புறம் தேவையற்ற காரணங்களாலும் இழுத்தடிக்கப் பட்டது..ஆனால்,படத்தை முடித்துக் கொடுத்தார்...முதல்வரான பின் டெல்லி சென்று மீனம் பாக்கத்தில் இறங்கியவருக்கு அசோகன் இறந்ததாக தகவல் சொல்லப் படுகிறது..கவர்னரைச் சந்திக்க இருந்த அப்பாயிண்ட் மெண்டை கான்சல் (இது மரபல்ல என செயலாளர் சொல்லியும்|) செய்து நேரே அசோகன் வீட்டுக்குப் போனவர்..சவ அடக்கம் வரை இருந்து விட்டு அவர் மகன் வின்சென்ட் அசோகனிடம் "எந்த உதவி வேணும்னாலும் தோட்டத்துக்கு வா"எனச் சொல்லி விட்டு வந்தவர்... இதை வின்சென்ட் அசோகனே ஒரு பேட்டியில் சொல்லி இருக்கார்..கண்ணதாசனை விட எம்.ஜி.ஆரை விமர்சித்தவர்கள் எவருமில்லை..ஆனால்,முதல்வரான பின்பு அரசவைக் கவிஞராக்கி அழகு பார்த்தவர்...எம்.ஜி.ஆரை "மிஸ்டர் எம்ஜிஆர்" எனக் கூப்பிடும் ஒரே நடிகை பானுமதி...நாடோடி மன்னனில் பாதியில் கறுத்து மாறு பாட்டு விலகியவர்...ஆனால்,முதல்வரான பின் அவரையே இயல்,இசை,நாடகத் துறைக்குத் தலைவராக்கினார்...

எம்.ஜி.ஆர் நினைத்திருந்தால் இவர்களைப் பற்றி இஷ்டத்துக்கு பேட்டி குடுத்திருக்கலாம்... ஆனா, தன்னையே சுட்ட எம்.ஆர்.ராதா பத்திக் கூட விமர்சிச்சு பேட்டி குடுக்காதவர் அவர்..கடைசியா நான்... ஸாரி.. ரவீந்தர் எழுதி நாடோடி மன்னன்ல அவரே சொன்னது...அது மிக மிக உண்மையுங் கூட....

"அமைச்சரே.... என்னை நம்பாமல் கெட்டவர் நிறைய உண்டு... நம்பிக் கெட்டவர் இன்று வரை இல்லை..

(தொந்தரவிற்கு மன்னிக்க வேண்டி விடை பெறுகிறேன்)
 




Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
2

ஒண்ணும் தப்பில்ல... ஆரு வேணும்னாலும் இங்க அரசியலுக்கு வரலாம்.. ரசினில ஆரம்பிச்சு விசாலு வரைக்கும்.. எல்லாரையும் வரவேற்போம்.. சினிமா நடிகன்ங்கற ஒரே காரணத்தக் கொண்டு அவங்கள அரசியலுக்கு வரவோ,பேசவோ வேண்டாம்னு சொல்ல முடியாது.. நாமளும் நம்மள காப்பாத்தற கடவுள் வெள்ளித் திரைய பொத்துக்கிட்டு வருவாருன்னு தான நம்பிக்கிட்டிருக்கோம்?அதே சமயம் நடிகன்ங்கற ஒரு தகுதியே அரசியல்ல அரியாசனம் தந்திடாதே?

இதெல்லாம் அவுரு ஆரம்பிச்சு வச்சது..ரெண்டு மூணு ஈரோயினு, கனவுப் பாட்டு,படத்துலயே அரசியல் பிரச்சாரம்னு அவுருக்குன்னு ஒரு தனி பாணியே உண்டாக்கினவரு.. ஆனா,அவரு இந்த மாதிரி வழ வழ,கொழ கொழ பார்ட்டியா?

ஆரம்பத்துல நெத்தில பட்டை, கழுத்துல கொட்டைன்னு தீவிர காங்கிரஸ்காரர்.. 53 வாக்குல திமுகவுக்கு வந்தார்.. 57ல அவுரு சொந்தப் படமான நாடோடி மன்னன்ல தன்னோட பிக்சர்ஸ் கம்பனிக்கு திமுக கொடிய சிம்பலா வெச்சவர்..அதே கால கட்டத்துல வந்த சக்கவர்த்தி திருமகள்ல அவர் கேரக்டர் பேரே 'உதய சூரியன்'

72ல தனிக் கட்சி தொடங்கி திமுகவோட தீவிர எதிர்ப்பச் சம்பாதிச்சவரு.. அவரோட தயாரிப்பு,டைரக்சன்ல உருவான 'உலகம் சுற்றும் வாலிபன்' வெளிய வருமாங்கற அளவுக்கு பிரச்னை வந்தப்பக் கூட கோபால புரத்துக்கு காவடி எடுக்காதவர்.. சென்னைல ஒத்த போஸ்டர் கூட ஒட்டாம வெளி வந்து வெள்ளி விழா கண்ட படமது!

எல்லாத்தையும் விடுங்க.. அவரோட அந்த ஆளுமை இப்ப எவனுக்கு இருக்கு?எங் கண்ணு முன்னால நடந்த ஒரு சம்பவத்தச் சொல்றேன்...

77 ல சீப் மினிஸ்டர் ஆனாரு..79ன்னு ஞாபகம்.. அப்ப நைன்த்ல பெஞ்ச தேச்சுக்கிட்டிருந்தேன்.. புரோட்டா,புட்டுமாவுக்கு ஆசப் பட்டே என்.சி.சி.ல சேந்து லீடரும் ஆயிட்டேன்.. கோவை,நீலகிரி மாவட்டத்துல இருந்து கொஞ்சத்தப் புடுங்கி 'பெரியார்' மாவட்டம் அறிவிச்சாரு.. அதுக்கான விழா ஈரோடு வ.உ.சி பூங்காவுல நடந்தப்ப பாதுகாப்பு பணிக்கு என்.சி.சிங்கறதால நாங்களும் போயிருந்தோம்

நான் மேடைக்குப் பக்கத்துலயே தாய்மாருங்க பகுதில தீவிர பாதுகாப்பு பணில இருந்தேன்... ஜே ஜேன்னு கூட்டம்.. லட்சம் பேருக்குப் பக்கமா இருந்தாங்க.. மைதானமே மூச்சுத் தெணறிக்கிட்டிருக்க சில நூறு காவலர்களும் அரை டிக்கட்டான நாங்களும் தான் பாதுகாப்பு பணில!சுமூகமாத் தான் விழா நடந்துகிட்டிருந்துச்சு..அப்ப மேடையச் சுத்தி ஒரு பரபரப்பு.. மைக்ல பேசிக்கிட்டிருந்தவரு "இதோ புரட்சித் தலைவர் வந்து விட்டார்"னு சொன்னது தான் கோடு.. மொத்த சூழ் நிலையும் தலை கீழா மாறுச்சு...

பின்னால,நடுவுல இருந்த மொத்தக் கூட்டமும் அவர கிட்டப் பாக்கற ஆர்வத்துல முன்னால வர.. தடியடி நடத்துன காவலர்களையும் முன்னால இருந்த பல ஆயிரம் தாய் மாருங்களையும் முன்னுக்குத் தள்ளி என்னையும் மேடையோட வச்சு தேய்ச்சுது.. அத எப்படியோ கவனிச்சவரு வேகமா வந்து மைக்ல சொன்னாரு..

"உங்க எல்லாரையும் பாத்துப் பேசத் தான் சென்னைல இருந்து ஈரோடு வந்திருக்கேன்.. கொறைஞ்ச பட்சம் ஒரு மணி நேரமாவது பேசலாம்னு இருக்கேன்.. இந்த விழா சிறப்பா நடக்கணும்னா அது உங்க ஒத்துழைப்பால தான் முடியும்.. முன்னுக்கு வந்துக்கிட்டிருக்கற ஆண்கள் அத்தன பேரும் பின்னுக்கு பழைய எடத்துக்குப் போங்க.. தாய் மாருங்களுக்கும், கொழந்தைங்களுக்கும் வழி விட்டு முன் பகுதிக்கு அனுப்புங்க.. காவலர்களுக்கு தயவு செஞ்சு ஒத்துழைப்புக் குடுங்க"

என்ன ஆச்சரியம்? தடியடிக்குக் கட்டுப் படாத வெறி புடிச்ச கூட்டம் அவரோட தனிப் பட்ட குரலுக்கு கட்டுப் பட்டு அப்படியே பின்னுக்குப் போச்சு.. முன்னால வந்த தாய்மார்ங்க, கொழந்தைங்கள சவுகரியமா உக்காரச் சொன்னதோட எங்களையும் அந்தந்த எடங்கள்லயே அமரச் சொல்லிட்டார்.. அதுக்கப்புறம் ஒண்ணரை மணி நேரம் அவுரு பேசினாரு.. கூட்டம் அசையணுமே? தன்னோட ஒத்த வெரலசைவுல மொத்தக் கூட்டத்தையும் கட்டுப் படுத்துன அந்த விந்தைல மயங்கி நான் அவரோட தீவிர ரசிகனானது அன்னிக்குத் தான்!

சொல்லுங்க... நடிகன்ங்கற ஒரு தகுதியக் கொண்டே எல்லாரும் எம்.ஜி.ஆர் ஆயிட முடியுமா?

பி.கு..

1)விசிலடிச்சான் குஞ்சுகள ரசிகனா,வெறியனா ஆக்கறது ரொம்ப சுலபம்.. மாறாத வாக்காளனா மாத்தறது அவ்வளவு சுலமில்லேன்னு நான் நெனைக்கறேன்..

2)அவரோட மிகப் பெரிய பலமே ஆர்ப்பாட்டமில்லாத தாய் மாருங்க ஆதரவு தான்... இன்னிக்கு அது எந்த நடிகருக்கும் இல்லேன்னும் நெனைக்கறேன்..
 




Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
3

மறுபடியும் அவரப் பத்திப் பேசறதுக்காக சந்தோசப் படறேன்...

ஏ.வி.எம்ல அன்பே வா சூட்டிவ்... இவரு போறப்ப அம்பது பேரு உக்காந்நிருந்தப் பாக்கறார்..

ஆறு மணிக்கு வெளிய வர்றப்பவும் அலங்க உக்காந்திருங்கறதப் பாக்கறார்... உடனே "மாணிக்கம் கார நிறுத்நச் சொல்லு"என்கிறார்...

மாணிக்கம் என்பவர் அவர் உதவியாளர்.. மஞ்சப் பைல ரிவால்வாருடன் உடன் வருபவர்...ஸ்டண்ட் நடிகர்...எம்.ஆர்.ராதா வந்த போது மட்டும் "நீ உள்ள போ"என்று.அனுப்பியவர்...இல்லா விட்டால் சரித்திரம் வேறு விதமாய் அமைந்திருக்கும்...அவரத் தூக்கி ஆஸ்பிடலுக்குப் போகும் போது கூட"அண்ணண கவனிங்க",ன்னு சொல்லிட்டுப் போனார்...

அவரோட எடத்துல அவரச் சுட்ட எம்.ஆர்.ராதா எப்படி அவர அனுமதிச்ச ராயப் பேட்டை ஆஸ்பத்திரிக்குப் போனார்?அதும் எம்.ஜி.ஆர் என்ற ஆச்சரியம்

ஆஸ்பத்திரிக்கு பதறிட்டு வந்ந ராதிகா அம்மா கிட்ட"கவலப் படாதீங்க... அண்ணணுக்கு ஒண்ணும் ஆகாது"ன்னு சொன்னவர்...

இதை ராதிகா சரத் குமாரே ஒரு பேட்டியில் சொல்லி இருக்கிறார்

அவர் உயிருடன் இருக்கிறார்...யார் வேண்டுமானாலும் அவரைத் தொடர்பு கொண்டு கேட்கவாம்....அதும் மறைக்காது..ஏன்னா,ஒரிஜினலா இருந்த எம்.ஆர்.ராதா புள்ளையது...

ஸாரி....எப்பவும் போல டிராக் மாறிட்டேன்.. மாணிக்கம் சொன்னதும் அந்த அம்பாசிடர் கார் நின்றது.. இவரு எறங்கறதப் பாத்ததும் அவங்க எந்திரிச்சு ஓடியாறாங்க..

"காலைலயும் பாத்தேன்... இப்பவும் பாக்கறேன்..என்ன விசயமா உக்காந்திருக்கீங்க?"

இவர் கேட்க வந்த தர்ம சங்கடமான பதிலிது...

"ஐயா... நாங்க எல்லாம் சிவாஜி ரசிகனுங்க... மதுரைல இருந்து பாக்க வந்தோம்.. வாட்சு மேனு உள்ள விட மாட்டேங்காருறுங்க"

இவர் துளியும் யோசிக்கலை

"சரி...வாங்க"ன்னு சொல்லிட்டு முன்னால போறார்...மொத்தக் கூட்டமும் அவர் பின்னால... வாட்ச் மேன் தடுக்க முடியுமா?

அப்ப சிவாஜிய வச்சு சிவந்த மண் சூட்டிங் எடுத்துக்கிட்டிருக்கார் அவர் (அந்த டைரக்ரோட பேரச் சொன்னா உங்களுக்கு பாதி ராஜ்ஜியமும் இளவரசியும் காணிக்கையா.தர்றேன்)

ரெண்டு பேருமே தம்மடிக்கறவங்க... ஷாட் முடிஞ்சு உக்காந்து ஒண்ணா உக்காந்து தம்மடிச்சுட்டிருக்கைல அம்பது பேரோட உள்ள நுழையறார் இவர்...

பதறிப் போயி ரெண்டு பேரும் சிகரெட்ட கால்ல போட்டு மிதிச்சுட்டு "வாங்கண்னே"என எந்ததிரிச்சு வணக்கம் சொல்றாங்க...

இவரும் பதிலுக்கு வணங்கி விட்டு சிவாஜியிடம் சொன்னாராம்

"தம்பி....பாவம்...மதுரைல இருந்து உன்னப் பாக்க வந்திருக்காங்க.. பாத்து அனுப்பிச்சுடு"ன்னு சொல்லிட்டு திரும்பிப் போயிட்டாராம் மறு பதில் எதிர் பார்க்காமல்!

சிவாஜியும் அவங்களோட போட்டோ எடுத்துட்டு அனுப்பிச்ச பின்னால டைரக்டர் கிட்டச் சொன்னாராம்

"இதுல பாதிப் பேரு இனிமே அண்ணணோட ரசிகர்களா மாறிடுவாங்க"

அது தான் எம்.ஜி.ஆர...

இது கற்பனையல்ல...

அந்த டைரக்டர் "என் கதை" என்ற தலைப்பில் எழுதிய புத்தகம் இருக்கிறது..

படியுங்களேன்...சிவாஜியால் நஷ்டமடைந்து எம்.ஜி.ஆரை வைத்து உரிமைக் குரல் படம் எடுத்ததால் தப்பித்தவர்...

கல்யாணப் பரிசு ஞாபகமிருந்தால் அவர் பெயரும் உங்களுக்கு ஞாபகம் இருக்கும்...

சொல்லுங்களேன்... பார்ப்போம்...

எனக்குத் தெரிஞ்சு இதுக்குப் பதில் சொல்லக் கூடியவர் ஒருவரே... அவர் ஹோமியோபதி மருத்துவர்....

பாக்கலாம் சொல்றாராரான்னு.....
 




Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
4

(இப்பதிவுக்கு உதவிய ”மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்”நூலுக்கும் அதன் ஆசிரியர் திருமதி மேகலா சித்ரவேல் அவர்களுக்கும் முதலில் நன்றி சொல்லி…)

”நான் சாப்பாட்டுக்கே வழியற்றவனாக சிறு வயதில் தமிழகத்திற்கு வந்தேன்.இன்றைய என் பணம்,புகழ் எல்லாவற்றுக்கும் காரணம் தமிழ் நாடு தான் நான் சாகும் போது பணக்காரனாகச் செத்தால் நன்றி உள்ளவனாக மாட்டேன். ஏனென்றால் அந்தப் பணமெல்லாம் தமிழ் நாட்டுக்குச் சொந்தமானவை”
,,,திரு. எம்.ஜிஆர் அவர்கள் ஒரு உரையில்

மறைந்த எம்.ஜிஆர் அவர்களின் உயிலின் சில பகுதிகள்..

”ஜளவரி மாதம் 1987ஆம் ஆண்டு செங்கல் பட்டு ஜில்லா மணப் பாக்கத்தில் இருக்கும் ராமாவரத்தில் உள்ள எம்.ஜி.ஆர் தோட்டத்தில் குடியிருக்கும் என்.கோபாலன் அவர்களின் குமாரன் தமிழக முதல்வராகப் பணியாற்றி வரும் எம்.ஜி.ராமச்சந்திரன் என்னும் நான் இந்த உயில் பத்திரத்தை சுய நினைவோடும் மனப்புர்வமாகவும் பிறர் தூண்டுதலின்றி எழுதி வைக்கிறேன்

எனக்குக் குழந்தைகள் கிடையாது.என் காலத்திற்குப் பிறகு சொத்துகள் விசயமாக எந்த விதமான வழக்குகள் தகராறுகள் ஏற்படாமல் இருக்கவும்,என்னுடைய உறவினர்கள் எவரும் பாத்தியம் உரிமை கொண்டாடிடாமல் இருக்கவும் இந்த உயில் சாசனத்தில் சொத்துகள் விசயமாக ஏற்பாடு செய்து இருக்கிறேன்

அடியில் கண்ட அசையும் மற்றும் அசையாச் சொத்துக்கள் எனக்குச் சொந்தமானவை.அவைகளில் வேறு யாருக்கும் எந்த பாகமும் உரிமையும் கிடையாது

1)நான் குடியிருக்கும் மணப்பாக்கம் கிராமம் ராமாவரத்தில் உள்ள என் பெயருள்ள அதாவது எம் ஜி ஆர் கார்டன் எனப் படும் பங்களாவும் தோட்டமும்..

2)சென்னை தியாக ராய நகரில் உள்ள ஆற்காடு சாவையில் 27 இலக்கமிட்ட அதன் கட்டிடமும் அதன் அடி மனையும்..

3)சென்னை சாலிகிராமத்தில் இருக்கும் சத்தியா தோட்டம் என்கிற தோட்டமும்..

4)ஆலந்தூரில் உள்ள 43லிருந்து 47வரை மார்க்கெட் சந்தில் உள்ள கட்டிடங்களும் அடி மனையும்..

5)நான் குடியிருக்கும் ராமாவரம் தோட்டம் பங்களாவிலுள்ள அசையும் சொத்துக்களான எனக்குச் சினிமாத் துறையில் கிடைத்த விலையுயர்ந்த பரிசுகளும்,என் சொந்த மர இரும்புப் பொருட்கள் முதலான சாமான்களும்,வெள்ளிப் பாத்திரங்களும்,மோட்டார் வாகனங்களும்.பசு முதலிய கால் நடைகளும்..

6)சத்தியா படப் பிடிப்பு நிறவனம் தனியார் வகையறுக்கப் பட்ட நிறுவனம் (பிரைவேட் லிமிடேட்)கம்பெனியில் என் சொந்தப் பெயரில் உள்ள பங்குகள்..

இவையெல்லாம் என் சுய சமபாத்தியத்தில் வாங்கப் பட்டவை.எனக்கு சர்வ சுதந்திரமாகப் பாத்தியப் பட்டவை

ராமாவரம் தோட்டத்தில் வரைபடத்தில் குறிப்பிட்ட ஏ,பி,சி,டி,ஈ,எப்,ஜி.எச.ஐ,ஜே தவிர பாக்கி உள்ள காலி இடம் தோட்டத்தை நிறைவேற்றுபவர் ”எம்.ஜி.ஆர் ஊமைகள் இல்லம்”என்ற பெயரில் ஊமைகள்,காது கேளாதவர்களுக்கு இலவசமாக இல்லமாக ஸ்தாபிக்க வேண்டியது
 




Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
அதாவது ஏழைகளாக இருக்கும் ஊமைகள்,காது கேளாதவர்கள் இலவசமாகத் தங்கவும்,அவர்கள் உண்ண உணவும் உடுக்க உடையும் மருத்துவ வசதி கல்வி தொழிற்க் கல்வி பயில வசதி முதலியனவைகளுக்கு அந்தக் காலி இடத்தில் செட்டுகளோ,கட்டிடங்களோ போட வேண்டும்..ஊமைகள் பேசுவதற்குச் சிகச்சையும்,பேச முயல சிகிச்சையும்,பேச்சுப் பயிற்சிகளும் ஏற்பாடு செய்தல் வேண்டும்.

இதே மாதிரி காது கேளாதவர்கள் இதே இடத்தில் தங்க வசதியும் காது கேட்கும் கருவிகள் வாங்கிக் கொடுப்பதற்கும் ஏற்பாடு செய்தல் வேண்டும்

இந்த எம்.ஜிஆர் ஊமைகள் இல்லத்திற்கு ஷெட்,கட்டிடங்கள் போடுவதற்கும் மற்ற இதர செலவுகளுக்கும் மேலே மூன்றாவது இனம் குறிப்பிட்ட சாலி கிராமத்தில் இருக்கும் சத்தியா தோட்டத்திலிருந்து வரும் வருவாயைக் கொண்டு மேற்கூறியுள்ள செலவுகளுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். மேற்ச்சொன்ன சத்தியா தோட்டமும் எம்.ஜிஆர் ஊமை இல்லம் அறக் கட்டளைக்கு எழுதி வைக்கிறேன்

என்னுடைய வீட்டில் இருக்கம் பரிசு சாமான்களும் ஆற்காடு ரோடில் உள்ள 27 இலக்கமிட்ட கட்டிடத்தில் இருக்கும் பரிசு சாமான்களும் புத்தகங்களும், நூல்களும் மற்றும் மேற்சொன்ன தியாகராய நகர்.ஆற்காட் ரோட்டில் உள்ள 27இலக்கமிட்ட மனையும் கட்டிடமும் என் காலத்திற்குப் பிறகு ”எம்.ஜிஆர் நினைவு இல்லம்” ஏற்படுத்தப் பட்டு.அதில் உள்ள மேற்கூறியுள்ள சாமான்களையும்.இந்த இடத்தையும் மக்கள் பார்வையிட சௌகரியங்கள் செய்ய வேண்டும்..

மேற்ச்சொன்ன எம்.ஜிஆர் இல்லத்தை விற்கவோ,அடைமானம் வைக்கவோ, நன் கொடை கொடுக்கவோ,குத்தகைக்குக் கொடுக்கவோ உரிமை கிடையாது. இந்த இல்லத்தைப் பாது காக்க காவல் காரர் ஏற்படுத்தவும்,மற்றபடி பராமரிக்க,பாதுகாக்க வேண்டிய செலவுகளுக்கு மேற்படி நான்காவது இனமாகக் குறிப்பிட்ட ஆலந்தூர் மார்க்கெட் கட்டிடங்கள் வரும் படியிலிருந்து எடுத்துக் கொள்ள வேண்டியது.அந்த மார்க்கெட் கட்டிடத்தை இந்த எம்.ஜி.ஆர. இல்லத்திற்கு எழுதி வைத்திருக்கிறேன்

பேரறிஞர் அண்ணா அவர்களுக்கும்,பெருந் தலைவர் காமராசர் அவர்களுக்கும் நினைவு இல்லங்கள் தமிழக அரசின் செலவில் ஏற்படுத்தப் பட்டன.அரசுக்குச் இச் செலவினைத் தவிர்த்திட என்னுடைய வீட்டையே மேற்படி இல்லமாக ஏற்பாடு செய்திருக்கிறேன்

சத்யா படப் பிடிப்பு நிலையம் பிரைவேட் கம்பெனியில் எனக்கு ஷேர்கள் இருக்கின்றன.அந்தப் பங்குகள் அனைத்தும் நான் ஆரம்பித்த “அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்”கட்சிக்கு கீழே சொன்ன நிபந்தனைக்கு உட்பட்டு சேர வேண்டும்.அந்த சத்தியா படப்பிடிப்பு நிலையம்,கட்டிடங்கள் மற்றும் அங்குள்ள பொருட்களையும் கட்சியே கைப்பற்றி நிர்வாகம் செய்து அதில் வரும் வருவாயை கட்சிப் பணிக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்

ஒருக்கால் கட்சி பிளவு பட்டோ அல்லது கலைக்கப் பட்டாலோ மேற்படி சத்தியா படப்பிடிப்பு நிலையம் கம்பனி ஷேர்கள் நிர்வாகம் எல்லாம் மேல் குறிப்பிட்ட எம்.ஜி.ஆர் ஊமைகள் இல்லம் அறக் கட்டளை செலவுகளுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.மேற்படி சத்தியா இல்லம் விற்கவோ,குத்தகைக்குக் கொடுக்கவோ செய்ய முயலக் கூடாதுசத்தியா படப்பிடிப்பு நிலையக் கட்டிடத்திற்கு என் தாய் பெயரில் சத்யபாமா எம்.ஜி.ஆர் மாளிகை என்ற பெயர் வைக்க வேண்டும்

இந்த உயில் சாசனத்தை மாற்றவோ அல்லது ரத்து செய்யவோ எனக்கு முழு அதிகாரம் உண்டு.இந்த உயில் சாசனத்தை நல்ல தேக ஆரோக்கியத்துடனும் சுய நினைவோடும் கீழே கையொப்பமிட்டிருக்கும் சாட்சிகள் முன்னிலையில் நான் கையொப்பம் செய்து இருக்கிறேன்

இந்த உயில் பத்திரத்தை என் காலத்திற்குப் பிறகு ஆறு மாதத்திற்குள் அமுலுக்குக் கொண்டு வர வேண்டும்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top