• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

நகராத தூரங்கள்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
10

பொதுத் தேர்வின் முடிவுகள் வெளி வந்து, என்ட்ரன்ஸ் எக்ஸாம் முடிந்து கடைசியாக கல்லூரியில் சேரும் நேரமும் வந்தது. ஜிஷ்னா என்ஜினீயரிங் கம்ப்யூட்டர் சயின்ஸ் க்ரூப் எடுத்து படிக்க விரும்பினாள்.

நண்பர்களை சந்திக்க சென்றிருந்த ஜேஷ் வீட்டினுள் நுழைந்ததும் "பா… அன்னைக்கு கேட்டீங்களே அடுத்து என்னன்னு... நான் டிசைட் பண்ணிட்டேன்... கம்ப்யூட்டர் சயின்ஸ் எடுக்கலாம்னு இருக்கேன்..." என்றுக் கூறி பிரேம் ரூபாவின் எதிரில் அமர்ந்தான்.

பிரேமும் ரூபாவும் ஒருவரை ஒருவர்ப் பார்த்து சிரித்தனர். "இப்போ எதுக்கு ரெண்டுப் பேரும் சிரிக்குறீங்க?" என்று கேட்டவன் மனதிற்குள் "இதுக்குதான் லவ் மேரேஜ் பண்ணவங்களுக்கு புள்ளயா பொறக்க கூடாது... என்னத்த செஞ்சாலும் கண்டுப்புடிச்சிடுறாங்க ச்ச.. இப்போ எதுக்கு சிரிக்குறாங்கன்னுத் தெரியலையே..." என்று மனதிற்குள் கலவரமானான்.

"இல்ல... காலைலதான் ஜிஷ்னா போன் பண்ணா... நீ வெளில போயிட்ட… சோ நான் கொஞ்ச நேரம் அவக்கிட்டப் பேசிட்டு இருந்தேன். அவ இதே குரூப் எடுக்கப் போறதா சொன்னா.... அதான் நீயும்..." என்று இழுத்தார் ரூபா.

இத்தனை நாட்களில் ஜேஷ் ஜிஷ்னாவிடம் போனில் பேசும்போது அவ்வபோது ரூபாவும் பேசுவார். நேரில் பார்த்ததில்லையேத் தவிர இருவருக்கும் இடையே ஒரு ஒட்டுதல் இருந்தது.

"அதெல்லாம் ஒண்ணும் இல்ல... எனக்கு கம்ப்யூட்டர் புடிக்கும்... அப்பறம் எதுக்கு இத்தன கோர்ஸ் பண்ணேன்" என்று வேகமாகக் கூறினான் ஜேஷ்.

"ஓஹோ" என்று ராகம் பாடி சிரித்தார் பிரேம்.

"பொறி வெச்சுப் புடிக்குறாங்கபா நம்மள..." என்று நினைத்த ஜேஷ் அங்கிருந்து சைலெண்டாக எழுந்து ஓடினான்.

என்ன படிக்க வேண்டும் என்று முடிவு செய்ததும் எங்கேப் படிக்கலாம் என்று ஜேஷ் கூறினான். “நீயும் அங்கயே ஜாயின் பண்ணு ஜிஷ்னா... ராஜா, வினோத் ரெண்டுப் பேரும் சென்னை போறாங்க... நீயாவது என்கூடவே இரு...”

“சரி ஜேஷ்... அங்கயே ஜாயின் பண்ணுறேன்... என்ன இருந்தாலும் ராஜாவும் வினோத்தும் உன்கூட இல்லாம உனக்கு கஷ்டமாதான் இருக்கும்... யாராவது ஒருத்தர் இங்கயே இருப்பாங்கன்னு நெனச்சேன்...”

“ஆமா ஜிஷ்னா... நானும் அப்படிதான் நெனச்சேன்... கடைசில அவங்களும் ஒண்ணா இருக்கப் போறதில்ல. சென்னை போறாங்களேத் தவிர வேற வேற காலேஜ்...”

“ம்ம்... அன்னைக்கே சொன்னியே... சரி விடு...”

கல்லூரியில் அட்மிஷன் முடித்த அன்று ஜிஷ்னா ஜேஷின் வீட்டிற்கு வந்தாள். ஆவலுடன் வந்த ஹரீஷ் ஜேஷுடன் அவளை அனுப்பிவிட்டு வேலைக்கு சென்றார். ஜேஷ் தனியாக வந்திருந்தான்.

“காலேஜ் எல்லாம் நானே செர்ந்துப்பேன்... சும்மா சின்னப் புள்ளைய ஸ்கூல்ல சேர்க்குற மாதிரி நீங்கக் கூட வர வேண்டாம்...” என்று அவன் கறாராகக் கூறிவிட்டதால் பிரேமும் ரூபாவும் அரை மனதாக அவனைத் தனியே அனுப்பினர்.

ஹரீஷ் சென்றதும் பஸ் பிடித்து கல்லூரியில் இருந்து அவன் வீட்டிற்கு ஜிஷ்னாவை அழைத்து வந்தான் ஜேஷ்..

வாசலில் சத்தம் கேட்டு வெளியே வந்த ரூபா "வா மா ஜிஷ்னா. இப்பதான் உன்ன நேர்ல பாக்குறேன்" என்று வரவேற்றார்.

அவர் பின்னால் வந்த பிரேம் "உன்ன கூட்டிட்டு வர சொன்னா எங்க... இவன் கேட்டாதான? நாங்களும் எத்தன வருஷமா கேக்குறோம்..." என்றார்.

"பாத்தியா? தேவையா எனக்கு இது? எத்தன தடவ கூப்பிட்டிருப்பேன்... வீட்டுக்கு வா உன்ன பாக்கணும்னு சொல்லுறாங்க அப்படின்னு… நான் உங்க வீட்டுக்கு வரேன் நீ எங்க வீட்டுக்கு வர மாட்டியான்னு... கேட்டியா?" என்றுக் கேட்டு முறைத்தான் ஜேஷ்.

"டேய் முதல் தடவ நம்ம வீட்டுக்கு வந்திருக்கா... அவள ஏன்டா திட்டுற? அது ஒண்ணும் இல்லம்மா... இன்னைக்கு உன்ன கூட்டிட்டு வந்தாதான் இவன வீட்டுக்குள்ள விடுவோம்னு காலையில சொல்லிட்டோம்... அந்தக் கடுப்பு..." ஜெஷை கடிந்துக் கொண்ட ரூபா ஜிஷ்னாவிற்கு விளக்கினார்.

"எல்லாம் நேரம்" என்றுக் கூறி பிரேம் அமர்ந்திருந்த சோபாவின் கைப்பிடியில் அமர்ந்தான் ஜேஷ்.

“அம்மா அப்பா எல்லாம் நல்லா இருக்காங்களா ஜிஷ்னா?”

“நல்லா இருக்காங்க ஆன்ட்டி...”

“அட்மிஷன் முடிஞ்சுதா? ஏன் இவ்வளவு நேரம் ஆகிடுச்சு? நீங்க இன்னும் முன்னாடியே வருவீங்கன்னு எதிர்ப்பார்த்தோம்...”

“ஒரே கூட்டம் பா... லைன்ல நிண்ணு எல்லாம் முடிக்க லேட் ஆகிடுச்சு. ஹரீஷ் அங்கிள் இருந்ததால கொஞ்சம் ஹெல்ப் பண்ணாங்க...”

“இதுக்குதான் நாங்களும் வரோம்னு சொன்னோம்... வந்திருந்தா திரும்பி கார்லயே கூட்டிட்டு வந்திருப்பேன்ல? இப்போப் பாரு... இந்த வெயில்ல பஸ் பிடிச்சு வந்திருக்கீங்க...”

“அப்பா... அதான் சொன்னேன்ல... நான் ஒண்ணும் சின்ன புள்ள இல்ல... இதெல்லாம் நானே பார்த்துக்குவேன்...”

“சரி சரி... அப்பாவும் பையனும் ஆரம்பிக்காதீங்க. ஜிஷ்னாவுக்கு வீட்ட சுத்தி காமி ஜேஷ். நான் சாப்பிடுறதுக்கு ஏதாவது ரெடி பண்ணறேன்" என்றுக் கூறி எழுந்தார் ரூபா. “கடைக்குப் போகணும்... நான் போயிட்டு வந்துடறேன்...” என்றுக் கூறி சென்றார் பிரேம்.

"என்னைக்காவது உங்க வீட்ட எனக்கு சுத்தி காட்டியிருக்கியா?" அவளைக் குற்றம் சாட்டுவது போல் கேட்டான் ஜேஷ்.

"நீ கேட்டதே இல்லையே" என்றுக் கூறிய ஜிஷ்னா ஜேஷின் அறையைப் பார்த்து வியந்தாள். "பசங்க ரூம நீட்டா வெச்சுக்க மாட்டாங்கன்னுக் கேள்வி பட்டிருக்கேன். நீ நல்லா வெச்சுருக்க…"

"இதெல்லாம் பார்த்து ஏமாந்துடாத ஜிஷ்னா. இதெல்லாம் ரூபி அம்மாவோட வேல" சிரிப்பினூடே சொன்னான் ஜேஷ்.

அவர்கள் ஜேஷின் அறை வாயிலில் நின்றபோது ஸ்நாக்ஸ் சாப்பிட அழைத்தார் ரூபா.

"நீங்களும் எடுத்துக்கோங்க ஆன்ட்டி"

"இல்லம்மா எனக்கு கிச்சென்ல கொஞ்சம் வேல இருக்கு... நீங்க சாப்பிடுங்க. நான் அப்பறம் எடுத்துக்குறேன்"

"அப்போ நாங்களும் கொஞ்ச நேரம் கழிச்சு உங்களோடவே சாப்பிடுறோம் ஆன்ட்டி"

"இல்ல இல்ல..."

"அடடா என்ன இப்போ உங்க ரெண்டு பேருக்கும்? சேர்ந்து சாப்பிடணும்... அவ்வளவுதானே... ஜிஷ்னா நீ வா" என்றுக் கூறி ஜேஷ் முன்னே சென்று சமையலறை மேடையில் ஏறி அமர்ந்தான்.

அங்கே இருந்த ஒரு சேரில் அவளை அமரச் செய்து "அம்மா நீங்க என் தட்டுலேருந்து எடுத்து சாப்பிட்டுட்டே வேல பாருங்க... இப்போ ஓகேவா உங்க ரெண்டு பேருக்கும்?" என்றுக் கேட்டு இருவரையும் பார்த்தான்.

"ஆமா அந்த ஸ்ருதி என்னடா ஆனா? அவள பத்தி நீ ஒண்ணுமே சொல்லுறதில்ல?" என்று பேச்சைத் துவங்கினார் ரூபா.

"ரூபிம்மா வேணாம்... நல்ல நேரத்துல அத ஞாபகப்படுத்தாத..."

ஜிஷ்னா நக்கலாக "ஆன்ட்டி சார் அவள நெனச்சு உருகிட்டுதான் இருக்காரு..." என்றாள்.

அதைக் கேட்டு ஆர்வமான ரூபா சமைப்பதை நிறுத்தி விட்டு "நெஜமாவா? எப்படிமா சொல்லுற?" என்றுக் கேட்டார்.

ஜிஷ்னா வேகமாக அவளது தட்டை ஜேஷின் கையில் திணித்துவிட்டு எழுந்து ஓடினாள். சற்று முன் ஜேஷின் அறையில் அவள் கண்ட அந்த ப்ரேஸ்லெட்டை எடுத்து வந்து ரூபாவின் கையில் கொடுத்து விட்டு ஜேஷிடமிருந்து மீண்டும் தட்டை வாங்கி சேரில் அமர்ந்தாள்.

"ஆன்ட்டி உங்களுக்குத் தெரியுமா? இது ஸ்ருதி ஜேஷுக்கு ஸ்பெஷலா ப்ரெசென்ட் பண்ணது... அத இன்னும் கவர் கூட பிரிக்காம வெச்சுருக்கான்" என்று ஏற்ற இறக்கத்துடன் கூறினாள் ஜிஷ்னா.

ஜேஷ் "ஐயோ அத போட்டு பாக்க கூட தோணாம வாங்கிட்டு வந்து ஷெல்ப்ல வெச்சேன்... அதுக்கப்பறம் அத நான் தொட்டதுக்கூட கிடையாது..." என்றான்.

"தூக்கிப் போடவும் இல்ல" என்று ஒரே நேரத்தில் கூறிய ரூபாவும் ஜிஷ்னாவும் ஹய் பை கொடுத்துக் கொண்டனர். இதைப் பார்த்த ஜேஷ் "ஜாடிக்கேத்த மூடிதான்..." என்று நினைத்துக் கொண்டான்.

"சிரிக்குறீங்களா? அம்மா... நான் சொல்லல... இதுக்கு எல்லாத்துக்கும் இவதான் காரணம். இவளாலதான் நான் நேர்ல போய் ஸ்ருதிய பாத்தேன்" என்று ஜிஷ்னாவின் மீதுக் குற்றம் சாட்டினான் ஜேஷ்.

முகத்தை சோகமாக வைத்துக்கொண்ட ஜிஷ்னா "நான் என்ன ஆன்ட்டி பண்ணுவேன்? அவதான் இவன்கூட பேசியே ஆகணும்னு ஒத்தக் கால்ல நின்னா..." என்றுப் பாவம் போல் கூறினாள்.

"ஆமாடா ஜிஷ்னா… என்னப் பண்ணுவா பாவம்..." என்றுக் கூறி ஜிஷ்னாவின் தட்டிலிருந்து பக்கோடாவை எடுத்து சாப்பிட்டார் ரூபா. இருவரும் வாய் பொத்தி சிரிப்பதைக் கண்ட ஜேஷ் கடுப்பானான்.

சரியாக அந்த நேரம் அங்கே வந்த பிரேமை துணைக்கு அழைத்தான் ஜேஷ். "பா… நீங்களாவது இதுங்க ரெண்டையும் என்னன்னுக் கேளுங்க... இந்த ப்ரேஸ்லெட்ட நான் தொட்டதே இல்லதான?"

"அப்படியா ஜேஷ்?" என்று ஆச்சர்யமாகக் கேட்டவர் அவன் அருகில் எம்பி மேடையில் அமர்ந்து தோளில் கை போட்டு அவன் தட்டில் இருந்ததை சாப்பிட ஆரம்பித்தார்.

ஒரு நிமிடம் அவரை முறைத்துப் பார்த்தவன் "உங்ககிட்ட போய் சொன்னேன் பாருங்க..." என்றான்.

"நாங்க எதுவும் சொல்லலபா..." என்று ஒன்றாக கூறினர் ரூபாவும் பிரேமும். அதை கேட்டு இருவரையும் முறைக்க ஆரம்பித்தான் ஜேஷ்.

அவன் முறைத்ததும் ரூபா பிரேமின் அருகில் வந்து நின்று "சரி ஸ்ருதிய பத்தி இனி பேசல... போதுமா?" என்றதும் பிரேம் மற்றொரு கையை ரூபாவின் தோளில் போட்டு "ம்ம் போதுமா?" என்றார்.

இதைப் பார்த்த ஜிஷ்னா அதிசயித்தாள். அவளுடைய பெற்றோர்களும் இப்படி சில நேரம் சீண்டி விளயாடுவார்கள் தான்… ஆனால் இந்த அளவு நெருக்கத்தை அவள் உணர்ந்ததில்லை.

"பெர்பெக்ட் பேமிலி" என்று வாய் விட்டுக் கூறினாள். "அப்போ நீயும் வா... ஜாயின் பண்ணிக்கோ" என்றுத் தன் கையை நீட்டி அழைத்தார் ரூபா. எழுந்து சென்று அவர் அருகில் நின்றவளை தோளோடு அணைத்துக் கொண்டார் ரூபா.

"உனக்கு ஸ்ருதிய புடிக்காதுதான்...." என்று பிரேம் இழுக்க "ஆனா..." என்று அதே போல் ராகம் பாடினார் ரூபா.

"புடிச்ச எலிய அடிச்சுக் கொள்ளாம விட மாட்டாங்க போலயே..." என்று மனதிற்குள் நினைத்தான் ஜேஷ்.

அவர்கள் அவனை ஏதோ கிண்டல் செய்வதுப் புரிந்து "ஆனா அவ வாங்கிக் குடுத்த ப்ரேஸ்லெட் மட்டும் புடிக்கும்... அத தூக்கியும் போட மாட்ட..." என்று வேகமாகக் கூறினாள் ஜிஷ்னா.

"எல்லாம் உன்னால வந்தது" என்றுக் கூறி மேடையில் இருந்து இறங்கி அவளை நோக்கி சென்ற ஜேஷை பிடித்து நிறுத்தினார் பிரேம். ஜிஷ்னா வேகமாக ரூபாவின் பின்னால் நின்று "ஆன்ட்டி காப்பாத்துங்க" என்றாள்.

“இன்னைக்கு நீ தப்பிச்சுட்ட... ஒரு நாள் சிக்குவ... அன்னைக்கு இருக்கு இதுக்கு உனக்கு...” என்று எச்சரித்தான் ஜேஷ். ஜிஷ்னா ரூபாவின் பின்னாலிருந்து நாக்கைத் துருத்தி அவனுக்கு அழக்குக் காட்டி வெருபேற்றினாள்.

பிரேமிற்கு கால் வர, அவர் எழுந்து தனதறைக்கு சென்றார். ஜிஷ்னாவும் ஜேஷும் ஹாலிற்கு வந்து பேசிக் கொண்டிருந்தனர். இதற்கிடையில் ரூபா சமையலை முடித்து அனைவரையும் உணவருந்த அழைத்தார்.

அனைவரும் ஒன்றாக அமர்ந்து மதிய உணவை உண்டனர். உணவருந்தும் பொழுது ஜிஷ்னாவின் வீட்டை பற்றிக் கேட்டார் பிரேம்.

ரூபா ஜேஷ் சிறு வயதில் செய்த சேட்டைகளைக் கூறி அவனை மேலும் மேலும் கடுப்பேத்தினார். சொல்ல வேண்டாம் என்று அவன் செய்த சைகைகளும் மிரட்டல்களும் வீண் போயின.

சிறிது நேரம் ஜேஷை வம்பிழுத்து விட்டு ரூபாவுடன் உரையாடி விட்டு புறப்பட்டாள் ஜிஷ்னா. அவள் வீடு வரை அவளுடன் நடந்து வந்து விட்டான் ஜேஷ்.

“என்னடி நல்லா சாப்பிட்டியா?” உலாஎ நுழைந்ததும் நக்கலாகக் கேட்ட ஸ்வப்னாவை முறிக்காமல் “செம சாப்பாடு... ஆன்ட்டி சூப்பரா சமைக்குறாங்க... நீயெல்லாம் என்னத்த சமைக்குற போ...” என்று சிரிப்புடன் கூறி சென்றாள் ஜிஷ்னா.

“உன் பொண்ணு பயங்கர ஹேப்பியா இருக்கா போலயே... அதிசயமா நீ கேள்விக் கேட்டதுக்கு சிரிச்சுட்டே பதில் சொல்லிட்டுப் போறா?”

“ம்ம்கும்... உங்கப் பொண்ணாச்சே... அதான் எப்பப் பாரு என்ன நக்கலடிச்சுட்டேத் திரியுறா...” ஹரீஷிடம் நொடித்துக் கொண்டாலும் ஸ்வப்னாவிற்கும் ஜிஷ்னா மிகுந்த மகிழ்ச்சியாக இருப்பதாகவேத் தோன்றியது.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
11

ஜிஷ்னாவின் வீட்டில் அவளை விட்டு வந்த ஜேஷ் பிரேமிடம் சென்று "அப்பா எனக்கு பைக் வேணும். காலேஜ் சேரப்போறேன்... இனிமே என்னால சைகிள்ல போக முடியாது" என்றான்.

"காலேஜ் பஸ்ல போடா... பிரண்ட்ஸோட சேந்துப் போறப்போ ஜாலியா இருக்கும். பைக்ல எப்படியும் தனியாதான போகப் போற?"

"நான் தனியாலாம் போக மாட்டேன்... நீங்கப் பேச்ச மாத்தாதீங்க... எனக்கு பைக் வேணும்..."

"என்னடா இப்பயாவது சொல்லு ஸ்ருதியா ஜிஷ்னாவா? அந்த ப்ரேஸ்லெட்ட திரும்ப கொண்டுப் போய் உன் ரூம்ல வெச்சுட்ட போல?"

"அது இருக்கட்டும்... பின்னாடி யூஸ் ஆகும்... ஸ்ருதி நல்ல பொண்ணு தான் பா... ஆனா கண்டிப்பா ஸ்ருதி இல்ல"

"அப்போ ஜிஷ்னாவா?"

"ம்ம்" என்றுத் தலை ஆட்டியவன் "நீங்க அன்னைக்கு கேட்டீங்களே... ஸ்ருதியா ஜிஷ்னாவான்னு... அன்னைக்கு தான் பா யோசிச்சேன்... ஜிஷ்னா நல்ல பிரண்ட் பா...

அவளப்பத்தி எனக்கு நல்லாத் தெரியும்... என்னப் பத்தி அவளுக்கு எல்லாமேத் தெரியும்... அவள எனக்கு ரொம்பப் புடிக்கும் பா... ஆனா இதுக்கப்பறம் அவள பிரண்டா மட்டும் நெனைக்க முடியும்னுத் தோணல...

யார்க்கிட்டயும் இது வரைக்கும் எனக்கு இல்லாத ஒரு வித்யாசமான பீல்... அவ கிட்ட இருக்கும்போது மட்டும் எனக்கு தெரியுது பா...

அதும் இன்னைக்கு நம்ம வீட்டுல அவ இருந்தப்போ... என்னமோ நம்ம எல்லாரும் இப்படியே ஒரே குடும்பமா ஒண்ணா இருக்கணும்னு ஆசையா இருக்கு...

அம்மாக்கிட்ட இப்போ சொல்லாதீங்கப்பா. நான் அப்பறமா சொல்லிக்குறேன். இது இன்னும் ஜிஷ்னாவுக்கே தெரியாது... உங்ககிட்டதான் முதல்ல சொல்லுறேன்..." என்றான்.

"சீக்கிரம் சொல்லிடு ஜேஷ்... வேணுன்னா நான் எதாவது ஐடியா சொல்லவா?"

"அய்யய்யோ... வேணவே வேணாம்... நீங்க உங்க லவ்வுக்குப் பண்ண வேலையெல்லாம் அம்மா ஏற்கனவே சொல்லிட்டாங்க. இத நானே பார்த்துக்குறேன்..."

"ச்ச சொல்லிட்டாளா?" என்று அசடு வாழ்ந்தவர் "சரி நீயே சொல்லு. அப்பறம் என்ன பைக் வேணும்? எவ்ளோ பட்ஜெட்? எல்லாம் ஈவ்னிங்குள்ள சொல்லு. நாளைக்குப் போய் வாங்கலாம்" என்றார்.

"தேங்க்ஸ் பா" என்று அவரை அணைத்துக் கன்னத்தில் முத்தமிட்டு ஓடுபவனை பார்த்த ரூபா "டேய் இதெல்லாம் நீ செய்யக்கூடாது... பிச்சிடுவேன்..." என்றார்.

போகிறப் போக்கில் "அட போம்மா" என்றுக் கூறி அவருடையக் கன்னத்திலும் முத்தமிட்டு சென்றான்.

"என்ன பிரேம்? இவ்வளவு சந்தோஷமா போறான்?"

"அவனுக்கு பைக் வேணுமாம். நாளைக்கு வாங்கலாம்னு சொன்னேன். அதான்" என்றுக் கூறி ரூபாவுடன் ஹாலில் அமர்ந்து சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார் பிரேம்.

அறைக்கு சென்ற ஜேஷ் ஜிஷ்னாவின் வீட்டு எண்ணிற்கு அழைத்து அவள் எடுத்ததும் இரண்டு பைக்கின் பெயர்களை சொல்லி "இதுல எது உனக்குப் புடிச்சுருக்குன்னு நெட்ல பார்த்து சொல்லு ஜிஷ்னா" என்றான்.

"ஹே பைக் வாங்க வீட்டுல ஓகே சொல்லிட்டாங்களா??? உனக்கு எதுப் புடிச்சிருக்கு? எனக்கு பைக் பத்தி என்னத் தெரியும் ஜேஷ்?" ஆச்சரியமாக ஆரம்பித்துக் கெஞ்சலில் முடித்தாள்.

"நீ நெட்ல தேடி பாரு ஜிஷ்னா... எந்த பைக்னு அப்பா ஈவ்னிங் சொல்ல சொன்னாங்க. சோ நீ இன்னும் கொஞ்ச நேரத்துலப் பாத்துட்டு எனக்கு சொல்லு"

ஒரு நொடி யோசித்தவன் "இப்போ தான் காலேஜ் போகப் போறோம்ல வீட்டுல சொல்லி உனக்கு மொபைல் வாங்கித் தர சொல்லிக் கேளு. எது வாங்குறதுன்னு டிசைட் பண்ணி சொல்லு. நானும் அதே வாங்குறேன். பை" என்றுக் கூறி வைத்தான்.

"இவனோட பெரிய தொல்லையாப் போச்சு..." என்று அலுத்துக் கொண்டவள் ஹரீஷிடம் சென்று மொபைல் கேட்டாள். அவர் சரி என்று கூறியதும் ஸ்வப்னா வேண்டாம் என்றார்.

"நீ போ நான் பார்த்துக்குறேன்" என்று ஜிஷ்னாவிற்கு கண்ணைக் காட்டியவர் ஸ்வப்னாவை சமாதானம் செய்ய ஆரம்பித்தார்.

“இப்போ எதுக்காம் அவளுக்கு மொபைல்? நீங்க என்ன அவ எதுக் கேட்டாலும் சரி சரின்னு சொல்லுறீங்க?”

“இந்தக் காலத்துப் பசங்க ஸ்கூல் படிக்கும்போதே ரெண்டு மூணு மொபைல் வெச்சிருக்குங்க... இவ காலேஜ் வந்துதான கேக்குறா? வாங்கித் தருவோம் ஸ்வப்னா...”

“என்னவோ போங்க... சொன்னாலும் நீங்கக் கேக்கப் போறதில்ல... அவளுக்கு ரொம்ப செல்லம் குடுக்குறீங்க...”

தனதறைக்கு வந்த ஜிஷ்னா அடுத்த ஒரு மணி நேரத்தில் பைக் மற்றும் மொபைல் குறித்து நெட்டில் தேடி எந்த மாடல் வாங்கலாம் என்று முடிவு செய்தாள்.

ஜேஷின் வீட்டிற்கு அழைத்தபோது ரூபா எடுத்தார். “சொல்லும்மா...”

“ஜேஷ் இருக்கானா ஆன்ட்டி?”

“இரு தரேன்...” என்றுக் கூறியவர் ரிசீவரை கையால் மூடி “அதுக்குள்ள அங்கக் கேட்டுட்டியா?” என்றார். “அதெல்லாம் ஒண்ணும் இல்ல... அவ வேற எதுக்காவதுக் கூப்பிட்டிருப்பா... நீங்க நகருங்க...”

அவர் கையில் இருந்து ரிசீவரைப் பிடுங்கி “சொல்லு ஜிஷ்னா” என்றான். தனக்குப் பிடித்த பைக்கின் பெயரைக் கூறினாள்.

"வைட் வேணாம்… கொஞ்ச நாள்ல கேவலமாகிடும்…. நீ எப்படியும் ஒழுங்கா தொடைக்க மாட்ட... கிரீன் எல்லார்க்கிட்டையும் இருக்கு..." என்று இழுத்தவளிடம் "உனக்கு எந்த கலர் புடிச்சிருக்கு?" என்று சிரிப்புடன் கேட்டான்.

"ப்ளாக் புடிச்சுருக்கு... ஆனா இது உன் பைக்.... நீ..."

"நான் ப்ளாக் வாங்குறேன். மொபைல் பாத்தியா?"

“ம்ம்... பாத்தேன்...” தான் வாங்க முடிவு செய்த மாடலை கூறினாள். "சரி நாளைக்கு நான் பைக் வாங்கப் போறேன். நம்ம நாளைக்கு ஈவ்னிங் மொபைல் வாங்கலாமா?"

"நாளைக்கு வீட்டுல கெஸ்ட் வராங்க ஜேஷ். நாளான்னைக்குப் போகலாமா? அப்பா அப்போதான் ப்ரீயா இருப்பாங்க. அப்பறம் ஜேஷ்... உன் பைக் உனக்கு புடிச்ச கலர்ல வாங்கு…"

"சரி நாளான்னைக்குப் போகலாம். எனக்கும் ப்ளாக் புடிச்சிருக்கு" என்றுக் கூறி வைத்தான்.

அன்று மாலை எந்த பைக் வாங்குவது என்று பிரேமிடம் கூறி அருகிலிருந்த ஷோரூமிற்கு அழைத்து அந்த கலர் இருக்கிறதா என்று விசாரித்தான்.

அடுத்த நாள் சென்று பைக் வாங்கி வந்து பிரேமையும் அதன் பிறகு ரூபாவையும் வைத்து ஒரு ரவுண்டு ஓட்டினான்.

“பரவாயில்ல... கீழ விழாம ஓட்டுற... உன் பின்னாடி உட்கார கொஞ்சம் பயமாதான் இருந்துது...” என்றுக் கூறி சிரித்த ரூபாவை முறைத்தான் ஜேஷ்.

வீட்டில் வந்து பைக்கை நிறுத்தியதும் ரூபா உள்ளே செல்ல பிரேமை கையைப் பிடித்து இழுத்து தன்னுடன் நிறுத்தினான் ஜேஷ்.

"எனக்கு மொபைல் வேணும்"

"முடியாது"

"பா... பைக் வாங்கிக் குடுத்தீங்க... மொபைல் வாங்கித் தர மாட்டீங்களா? நான் நாளைக்கு வந்து வாங்குறதா ஜிஷ்னாகிட்ட சொல்லிட்டேன்… அவ மொபைல் கூட செலக்ட் பண்ணிட்டா..."

"ஓஹோ... ஒரே மொபைல் வாங்குற அளவுக்கு முன்னேறிட்டியா? என்னக் கேக்காம உன்ன யாரு வாக்குக் குடுக்க சொன்னா?"

"அதெல்லாம் இல்லபா... நாளைக்கு வாங்கணும்..."

"சரி சரி... இதெல்லாம் நல்லாதான் பண்ணுற... எப்போ சொல்லுவ?"

"அதுக்குள்ளயா??? இப்போ அவ என்ன நல்ல பிரண்டா நினைக்குறா பா... இப்போ சொல்லி இந்த பிரண்ட்ஷிப்பும் போயிட்டா? கொஞ்ச நாள் ஆகட்டும்..."

"மகனே... தேறிட்ட..."

"நான் தப்பு பண்ணுறேன்னுத் தோணுதா பா?"

"இல்லடா... உன்னோட சாய்ஸ் சரி. ஜிஷ்னா நல்ல பொண்ணு. நீ இப்போ பொறுமையா இருக்குறதும் கரெக்ட் தான். பட் சீக்கிரமே சொல்லிடு"

"தேங்க்ஸ் பா" என்றுக் கூறி அவரை அணைக்க போன சமயம் வெளியே வந்த ரூபா "டேய் டேய் வீட்டுக்கு வெளியில நிண்ணு என்னதிது? எத்தன தடவ சொல்லி இருக்கேன்... நீ இதெல்லாம் பண்ணக் கூடாதுன்னு?" என்றுக் கூறி அவனை விளக்கினார்.

"அய்யய்யய்ய... வந்துடுவியே... இந்தா உன் புருஷன நீயே வெச்சுக்கோ ரூபி..." பிரேமின் கையை ரூபாவின் கையில் திணித்தவன் "எப்படிப்பா இந்தம்மாவோட குப்பக் கொட்டுறீங்க?" என்றான்.

"போடா போடா..." என்று பிரேம் கூற சிரித்துவிட்டு உள்ளே சென்றான் ஜேஷ்.

“உங்களுக்குத் தெரியுமா? இவன் மொபைல் வாங்கப் போறானாம்... ஜிஷ்னாகிட்ட தான் மாடல் சொல்ல சொன்னான் போல... அவ கால் பண்ணா...”

“அப்படியா? மொபைல் வேணும்னு இப்போதான் கேட்டான்... சரின்னு சொல்லியிருக்கேன்... நாளைக்கு வாங்கப் போறானாம்...”

“எனக்கென்னமோ இவங்க ரெண்டுப் பேரும் ஒரே மாடல் வாங்குவாங்கன்னுத் தோணுது... நீங்க என்னங்க நினைக்குறீங்க?”

“வாங்குனா வாங்கிட்டுப் போறாங்க... நீ ஏன்டி இவ்வளவு ஆராய்ச்சிப் பண்ணுற? அவன் என்னமோ செய்யுறான் விடேன்...”

“பிரேம்... நீங்க பேசுறதே சரியில்லையே... என்கிட்டேருந்து எதையாவது மறைக்குறீங்களா? அவனும் ஜிஷ்னா போன் பண்ணப்போ இப்படிதான் என்னை விரட்டுனான்... உண்மைய சொல்லுங்க...”

“இவ ஒருத்தி... எல்லாத்தையும் கரெக்டா கண்டுப்புடிச்சிடுவா... அவன் வேற இவக்கிட்ட சொல்லாதீங்கன்னு சொல்லிட்டுப் போயிட்டான்... எப்படிதான் சமாளிக்கப் போறேனோ?”

“எனக்கு பால் பாயாசம் செஞ்சுத் தரியா? ரொம்ப நாளாச்சு...” என்று பிரேம் கேட்கவும் “ஆமால்ல... ரொம்ப நாள் ஆச்சு... உங்களுக்கு ரொம்பப் பிடிக்குமே... இப்போவே செய்யுறேன்” என்றுக் கூறி விரைந்து உள்ளே சென்றார் ரூபா. பிரேம் நிம்மதிப் பெருமூச்சு விட்டார்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
12

அடுத்த நாள் மொபைல் வாங்க காலையிலேயேக் கிளம்பிச் சென்றான் ஜேஷ். கடை வாசலில் அவன் காத்திருக்க ஜிஷ்னா ஹரீஷுடன் சிறிது நேரத்தில் வந்தாள். ஏற்கனவே எந்த மொபைல் வாங்குவது என்று முடிவு செய்து வைத்திருந்ததால் சீக்கிரம் வாங்கினர்.

வெளியே வந்ததும் "ஜேஷ் வீட்டுக்குப் போறியா?" என்றார் ஹரீஷ்.

"ஆமாம் அங்கிள்... நேரா வீட்டுக்குதான்..."

"அப்போ ஜிஷ்னாவ வீட்டுல விட்டுடுறியா? எனக்கு ஆபீஸ் போகணும்... இப்போவே லேட் ஆகிடுச்சு..."

"புது பைக் வாங்கி எப்படிடா ஜிஷ்னாவ அதுலக் கூட்டிட்டுப் போறதுன்னு நெனச்சேன்... நீங்க தெய்வம் அங்கிள்" என்று மனதிற்குள் அவருக்கு நன்றி கூறியவன் "நான் ட்ரோப் பண்ணிடுறேன் அங்கிள்" என்றான்.

இடையில் பேச வந்த ஜிஷ்னாவை இருவருமே கண்டுக் கொள்ளவில்லை. “அவன்கூட போய்டு” என்றுக் கூறிவிட்டு ஹரீஷ் சென்றுவிட்டார்.

“உக்காரு“ என்றுக் கூறி ஜேஷும் வண்டியில் அமர்ந்து ஸ்டார்ட் செய்தான்.

"நம்மள யாரும் மதிக்கவே மாட்டேங்குறாங்க" என்று நினைத்து சிரித்த ஜிஷ்னா பின் இருக்கையில் அமர்ந்தாள்.

வண்டியின் சைடில் இருந்த கம்பியை பிடித்து ஒரு பக்கமாக சற்றுத் தள்ளியே அமர்ந்திருந்தவளை கண்ணாடியில் ஒரு முறைப் பார்த்து விட்டு வண்டியை எடுத்தான் ஜேஷ்.

இப்போதும் அவள் கன்னக்குழி தான் அவன் கண்ணில் பட்டது. வீடு வரை எதுவும் பேசாமலே வந்தனர். அவள் வண்டியில் இருந்து இறங்கியதும் ஒரு கவரை நீட்டினான் ஜேஷ்.

"என்ன இது?"

"சிம் கார்டு. போன் வாங்குனாப் போதுமா? வீட்டுக்குப் போயிட்டு கால் பண்ணுறேன்" அவள் பதிலை எதிர்ப்பார்க்காமல் வேகமாகக் கிளம்பி சென்றான்... அவள் அதை மறுத்துவிடுவாளோ என்ற பயத்தில்.

அவ்வபோது சிறிது நேரம் போனில் பேசுவதும் எப்போதாவது மெசேஜ் அனுப்புவதுமாக நாட்கள் சென்றன. இவர்களின் விடுமுறை காலம் முடிந்து கல்லூரி திறக்கும் நாளும் வந்தது.

காலையில் ஜிஷ்னாவை அழைத்த ஜேஷ் "ஹலோ ஜிஷ்னா... இப்போ காலேஜ் பஸ்ல போகப் போறியா?" என்றுக் கேட்டான்.

"இல்ல ஜேஷ். முதல் நாள் இல்லையா... இன்னைக்குக் காலையில அப்பா கொண்டு வந்து விடுவாங்க. ஈவ்னிங் காலேஜ் பஸ்ல திரும்பி வந்திடுவேன். நாளைலேருந்து ரெகுலரா காலேஜ் பஸ்"

"ஓகே... அப்போ காலேஜ் கேட் கிட்ட வெயிட் பண்ணுறேன்... அங்கேருந்து சேர்ந்துப் போகலாம்..." என்றுக் கூறி வைத்தான்.

“ஜேஷ்... இவள பார்த்துக்கோ... எப்படியும் ஒரே கிளாஸ்ல தான் இருப்பீங்க... ஈவ்னிங் பஸ்ல வந்திடு ஜிஷ்னா...”

ஹரீஷ் கிளம்பியதும் ஜிஷ்ணாவுடன் நடந்தவன் தங்களின் வகுப்பை விசாரித்து அவளை அழைத்து சென்றான். அதன் பின் பிரேக், லஞ்ச் என்று எப்போதும் அவளுடனே இருந்தான்.

அன்று இருவருமே மதிய உணவை எடுத்து வராததால் காண்டீன் சென்று சாப்பிட்டனர். அவளை ஒரு டேபிளில் அமர வைத்து பெரும் கூட்டத்தின் இடையில் லைனில் நின்று ஜேஷ் தான் உணவு வாங்கி வந்தான்.

ஜிஷ்னாவிற்கும் அவளுடைய பள்ளித் தோழிகள் யாரும் அங்கே சேராததால் ஜேஷ் உடன் இருந்து இப்படிப் பார்த்துக் கொள்வது ‘புது இடம்’ என்ற பயத்தைப் போக்கியது.

முதல் நாள் என்பதால் வகுப்புகள் எதுவும் நடைப்பெறவில்லை. அருகில் இருந்தவர்களுடன் பேச ஆரம்பித்தாள் ஜிஷ்னா. நேரம் செல்ல செல்ல அது அரட்டையாக மாறியது.

மாலை அவளுடையப் பேருந்தை விசாரித்து அவளை அதில் ஏற்றி விட்ட ஜேஷ் பேருந்து கல்லூரியை விட்டுக் கிளம்பும் வரை காத்திருந்து அதன் பின்னரே வீட்டிற்குக் கிளம்பினான். இதுவே அடுத்து வந்த ஒரு வாரமும் தொடர்ந்தது.

“ராக்கிங் எதுவும் இருந்துதாடி? பஸ் கரெக்டா பார்த்து ஏறிட்டியா?” கவலையாகக் கேட்டார் ஸ்வப்னா.

“அதெல்லாம் ஜேஷ் கூடவே இருந்துப் பார்த்துக்கிட்டான் மா... அவனே பஸ் ஏத்திவிட்டு அதுக் கிளம்புற வரைக்கும் வெயிட் பண்ணி அனுப்பி வெச்சான்...”

“நல்லவேள அவன் கூட இருக்கான்... அதனால ஏதோ கொஞ்சம் நிம்மதியா இருக்கு...”

“இந்த அம்மாவ புரிஞ்சுக்கவே முடியல... அவன திட்டிட்டே இருக்காங்க... ஆனா நான் அவன்கூட இருக்குறது எப்பயும் நிம்மதியா இருக்குன்னும் சொல்லுறாங்க... இவங்க என்னதான் நினைக்குறாங்களோ?”

ரூபா வழக்கம் போல் வாசலில் நின்றுக் காத்துக் கொண்டிருந்தார். “ம்மா... இதெல்லாம் ஓவர் மா... இந்த வாசல்ல நிண்ணு வெயிட் பண்ணுறப் பழக்கத்த நீங்க எப்போதான் மாத்துவீங்களோ?”

பைக்கை ஸ்டான்ட் போட்ட ஜேஷின் தோளில் அடித்த ரூபா “சும்மா இருடா... இன்னைக்கு முதல் தடவ அவ்வளவு தூரம் பைக்ல போயிருக்க... பயமா இருக்காதா? இனிமே நிக்க மாட்டேன்...” என்றார்.

ஒரு வாரம் முடிந்த நிலையில் அன்று வழக்கம் போல் கல்லூரிக்கு வந்தவர்கள் ஊரின் முக்கியப் பகுதியில் ஏதோ ஸ்ட்ரைக் நடப்பதாகவும், கல்லூரி பேருந்துகள் எதுவும் இன்று ஓடாது என்றும், கல்லூரி மதியத்துடன் முடிந்து விடும் என்றும் வந்த சர்குலரை படித்ததும் கலவரமானார்கள்.

மதியம் ஜிஷ்னாவிடம் வந்த ஜேஷ் "என்கூட வந்துடு ஜிஷ்னா. நான் ட்ரோப் பண்ணிடுறேன்..." என்றான்.

"இல்ல நான் பஸ்ல போயிடுறேன்… உனக்கு எதுக்கு கஷ்டம்?" என்று தயங்கி நின்றாள் ஜிஷ்னா.

"இப்போ சீனியர்ஸ்கும் விட்டுட்டாங்க. ராக் பண்ணா சமாளிச்சிடுவியா? அட்லீஸ்ட் உன்கூட அந்த சைட் வரதுக்கு பொண்ணுங்க யாராவது துணைக்கு இருக்காங்களா?" அவன் கேட்டதும் தலைக் குனிந்தாள் ஜிஷ்னா.

"போகலாம்" என்றுக் கூறி முன்னே நடந்தான் ஜேஷ்.

வண்டியில் அமர்ந்தவன் ஜிஷ்னா இன்னுமே யோசித்துக் கொண்டிருப்பதை பார்த்து வேகமாக அவள் கையில் இருந்த பாகை வாங்கி பின்னால் மாட்டி "உக்காரு" என்பது போல் தலை அசைத்தான்.

கல்லூரியை தாண்டி சிறிது தூரம் வந்ததும் "எதுக்கு ஜிஷ்னா என்கூட வரதுக்கு இவ்வளவு யோசிச்ச?" என்றுக் கண்ணாடியில் அவளைப் பார்த்து வருத்தமாக கேட்டான் ஜேஷ்.

"நீ சொன்ன அதே காரணம் தான் ஜேஷ்... இப்போ சீனியர்ஸ்கும் விட்டுட்டாங்க. நம்ம ரெண்டுப் பேரும் ஒண்ணா பைக்ல போறதப் பாத்து எதாவது வம்பு பண்ணா... அதான்.

உன் மேல நம்பிக்க இல்லாம இல்ல... அப்படி யோசிக்குறதா இருந்தா மொபைல் வாங்குன அன்னைக்கே எங்க அப்பா சொல்லி இருந்தாலும் உன்கூட வர சம்மதிச்சிருக்க மாட்டேன்"

அவள் கூறியதைக் கேட்டு ஒரு முறை அவளை திரும்பிப் பார்த்து சிரித்தவன் பிறகு எதுவும் பேசாமல் வண்டியை ஓட்டிச் சென்றான். ஜிஷ்னாவின் வீட்டு முன் வண்டியை நிறுத்தியபோது ஹரீஷ் வெளியே நின்றிருந்தார்.

"தேங்க்ஸ் ஜேஷ். நல்லவேள நீ கூட்டிட்டு வந்துட்ட... கொஞ்சம் கலவரம் நடக்குதுன்னு இப்போதான் கேள்விப்பட்டேன். நானும் பான்க்லேருந்து இப்போதான் வரேன். இதுக்கப்பறம் கெளம்பி போய்... எப்படி இவள அங்கேருந்து சேப்பா கூட்டிட்டு வரதுன்னு யோசிச்சேன்" என்றார் நிம்மதி பெருமூச்சுடன்.

"அதெல்லாம் நான் பார்த்துக்குறேன்... அங்கிள் நான் ஒண்ணு கேட்டா தப்பா நெனச்சுக்க மாட்டீங்களே..." என்று சிறிதுத் தயங்கி ஜிஷ்னாவை ஒரு முறைப் பார்த்தான்.

"இனிமே ஜிஷ்னாவ நானே காலேஜ் கூட்டிட்டுப் போயிட்டு ஈவ்னிங் கூட்டிட்டு வந்து விடவா? நான் காலேஜ் போகாத அன்னைக்கு நீங்க கார்ல ட்ரோப் பண்ணிடுங்க..." என்றான்.

சிறிது யோசித்தவர் ஜிஷ்னாவின் முகத்தைப் பார்த்துவிட்டு "சரிபா. அவளுக்கும் அதுதான் ஈசியா இருக்கும். நாளைலேருந்து நீயே கூட்டிட்டு போ" என்றார்.

"தேங்க்ஸ் அங்கிள். பை ஜிஷ்னா. காலையில பார்க்கலாம்... ரெடியா இரு... நான் வீட்டுல இருந்துக் கிளம்பும்போது கால் பண்ணி சொல்லிடுறேன்..."

“காலேஜூலயே 100% அட்டெண்டன்ஸ் வெச்சிருக்க ஒரே பையன் இனி நானாதான் இருப்பேன்...” என்று மனதில் நினைத்துக் கொண்டான்.

“எப்படிம்மா வந்த? பயந்தேப் போயிட்டேன்டா...” ஸ்வப்னா அவள் முகம் வருடியதிலிருந்தே அவரின் பயம் தெரிந்தது.

“ஜேஷ்கூட வந்தேன்மா... தனியா போகாதன்னு சொல்லி அவன் கூட்டிட்டு வந்து விட்டான்...”

“அவன் இருக்கப் போயி நீ ஒழுங்கா வீடு வந்து சேர்ந்துட்ட... நம்ம பக்கத்து வீட்டு குமார் அம்மா இப்போதான் வந்து அவங்க வீட்டு சாவி குடுத்திட்டு ஹாஸ்பிட்டல் போறாங்க... குமாருக்கு வர வழியில ஏதோ அடிப்பட்டுடுச்சாம்...

அதக் கேட்டதுல இருந்து மனசே சரியில்ல... எப்படி வருவியோ... என்னாகுமோன்னு ஒரே யோசனையாவே இருந்துது... அப்பா... இப்போதான் நிம்மதியா இருக்கு...”

“அது மட்டும் இல்ல ஸ்வப்னா... நாளையில இருந்து ஜேஷ் இவள கூட்டிட்டுப் போயிட்டுக் கூட்டிட்டு வந்து விடுறேன்னு சொல்லியிருக்கான். நானும் சரின்னு சொல்லிட்டேன்”

“என்னங்க நீங்க? வயசு பொண்ண எப்படி அவன்கூட தெனம் அனுப்ப முடியும்? எதுக்கு சரின்னு சொன்னீங்க?”

“அதே வயசு பொண்ண இன்னைக்கு அவன் கூட்டிட்டு வந்து விட்டா மட்டும் உனக்கு நிம்மதியா இருக்கும்... தெனம் கூட்டிட்டுப் போனா என்ன?”

“இது ஏதோ ஆபத்துக்கு பாவமில்லன்னு செஞ்ச உதவி... அதுக்காக இதையே எப்பயும் செய்ய முடியுமா?”

“ஆபத்துக்கு பாவமில்லன்னா என்ன வேணா செய்யலாமா? இங்கப் பாரு... அவன்கூட இவ போறதுல எனக்கு எந்த அப்ஜெக்ஷனும் இல்ல... நம்ம நிம்மதியா இருக்கலாம்... இன்னைக்கு மாதிரி டென்ஷன் ஆக தேவையில்ல... ஜிஷ்னா ஜெஷ்கூட தான் போவா”

முடிவாகக் கூறி ஹரீஷ் நகர்ந்ததும் ஸ்வப்னா அரை மனதாகத் தலையாட்டி உள்ளே சென்றார்.

“இன்னைக்கும் இவங்களா பேசி இவங்களா முடிவுப் பண்ணிக்கிட்டாங்க... ‘என்னம்மா... உனக்கு ஒகேவா? அவன்கூட போறியா?’ ம்ம்ஹும்ம்... யாரும் எதுவும் கேக்குறதில்ல... அப்படி என்ன இந்த ஜேஷ் மேல அவ்வளவு நம்பிக்கையோ ஆண்டவா? அநியாயத்துக்கு நல்ல பேரு எடுத்து வெச்சிருக்கான்...”
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
13

விசிலடித்தபடியே வண்டி சாவியை தூக்கிப் போட்டுப் பிடித்து விளையாடி வீட்டின் உள்ளே வந்தான் ஜேஷ். பதட்டமாய் வெளியே வந்த ரூபா அவனைப் பார்த்ததும் குழம்பினார்.

"ஊரே கலவரத்துல கதி கலங்கிப் போயிருக்கு... நீ என்னடா இவ்வளவு சந்தோஷமா வர?"

"ஒண்ணும் இல்ல மா. நாளையிலேருந்து ஜிஷ்னா என்கூட தான் பைக்ல காலேஜ் வருவா..." என்றுக் கூறி பிரேமை பார்த்தான் ஜேஷ்.

"பார்த்து பத்திரமா கூட்டிட்டு போயிட்டு வாடா.... எப்பயும் போல விழுந்து வாராத... அவங்க வீட்டுல பதில் சொல்ல முடியாது..." என்றுப் பதறினார் ரூபா.

அவரை பார்த்து முறைத்தவன் "நம்பு ரூபி... சத்தியமா எனக்கு பைக் நல்லா ஓட்ட தெரியும். அவள வேற கூட்டிட்டு போகப் போறேன்... கேர்புல்லா ஓட்டுவேன் மா..." என்றான்.

"ம்ம்" என்றுக் கூறி ரூபா உள்ளே சென்றதும் அதற்காகவேக் காத்திருந்த பிரேம் "அன்னைக்கு பைக் வாங்கிக் குடுங்க… நான் ஒண்ணும் தனியாப் போக மாட்டேன்னு சொன்னது இதுக்குதானா?" என்றுக் கிண்டல் செய்தார்.

"ஆமாமா. ஹரீஷ் அங்கிள்கிட்ட கேட்டேன். சரின்னு சொல்லிட்டாங்க" என்றுக் காலரை தூக்கி விட்டான் ஜேஷ்.

"எல்லாம் சரி... நாளைக்கு யாரும் ஜிஷ்னாவ எதுவும் சொல்லிடக் கூடாது... பார்த்து நடந்துக்க ஜேஷ்... உன்னால அவளுக்கு எந்த கெட்டப் பேரும் வரக் கூடாது"

"இல்ல பா. அப்படியெல்லாம் எதுவும் ஆகாது... அவ என் பொறுப்பு. நான் பார்த்துக்குவேன்"

அடுத்த நாள் காலை எழுந்தது முதல் “ஜிஷ்னா எந்திரிச்சுட்டியா?” “ஜிஷ்னா சாப்பிட்டியா?” ஜிஷ்னா ரெடியா?” என்று பலநூறு குறுஞ்செய்திகளை அனுப்பினான் ஜேஷ்.

“காலேஜ் போக எட்டு மணிக்குதான கிளம்பணும்? நீ ஏன் என்ன இப்படிப் படுத்துற?” ஒருக் கட்டத்திற்கு மேல் பொறுமை இழந்த ஜிஷ்னா அவனைத் திட்டி அனுப்பினாள்.

அதன் பின்னரே அமைதியானான் ஜேஷ். வீட்டில் இருந்துக் கிளம்பும் முன் அவளை அழைத்துக் கூறினான். அவளும் பையை எடுத்து வந்து ஹாலில் தயாராய் அமர்ந்து அவனுக்காய் காத்திருந்தாள்.

ஜிஷ்னாவின் வீட்டிற்கு சென்ற ஜேஷ் ஸ்வப்னா கொடுத்த ஜூசை குடித்தவன் முன் தினம் போல அவள் கையில் இருந்த பேகை வாங்கி மாட்டி "போலாமா?" என்றான்.

வெளியே வந்து வழியனுப்ப நின்றபோது இதைக் கண்ட ஸ்வப்னாவிற்கு ஜேஷுடன் ஜிஷ்னா செல்வதில் இருந்த நெருடல் குறைந்தது.

மாலை அவளுக்காக பைக்கில் காத்திருந்தவனிடம் வந்த ஜிஷ்னா "ஜேஷ் கொஞ்சம் வெயிட் பண்ணு... நான் போய் அப்சர்வேஷன் நோட் வாங்கிட்டு வந்துடறேன். இல்ல நீ யாருக்கிட்டயாவது ஏற்கனவே வாங்கிட்டியா? எழுத ஆரம்பிச்சுட்டியா?" என்றுக் கேட்டாள்.

"நான் எங்கயும் உன்ன விட்டு தனிச்சு செயல்படுறதில்ல ஜிஷ்னா... போ போ... போய் வாங்கிட்டு வா... நீ நோட்ஸ் எடுக்குறேங்குற தைரியத்துல நான் கிளாஸ்ல நோட்ஸே எழுதுறதில்லயாம்… இதுலக் கேக்குறா கேள்வி…" என்று அலுத்துக் கொண்டான்.

"சும்மா புளுகாத... நீ நீட்டா கலர் கலரா நோட்ஸ் எழுதறத பத்திதான் கிளாஸே புகழ்ந்துத் தள்ளுது... பேசுறான் பெருசா…" அவனை முறைத்தவள் சென்று நோட் வாங்கி வந்தாள்.

"சீக்கிரம் எழுதி முடிச்சுட்டு மெசேஜ் பண்ணு... வந்து வாங்கிக்குறேன்... நாலு வருஷம் என் ரெகார்ட், அப்சர்வேஷன் எல்லாத்துக்கும் நீதான் மா பொறுப்பு... இப்போவே சொல்லிட்டேன்" திரும்பி பின்னால் அமர்ந்திருந்தவளிடம் கூறி சிரித்தான்.

"ம்ம்... பாக்கலாம் பாக்கலாம்... நீ நேரா பார்த்து ஓட்டு"

ஜேஷ் ஜிஷ்னா இருவரும் உடன் பயிலும் மாணவர்களுடன் பேச ஆரம்பித்து அவர்களுக்கு சில நண்பர்கள் கிடைத்தனர். ஜேஷ் மற்ற மாணவர்களுடன் பேசினாலும் அவனால் ராஜா வினோத்திடம் பழகியது போல் நெருக்கமாக யாருடனும் பழக முடியவில்லை.

ராஜா வினோத் சென்னையில் இருந்தாலும் அடிக்கடி அவனுடம் போனில் பேசினார். இங்கே நடப்பவற்றை அவர்களிடம் உடனுக்குடன் கூறி விடுவான் ஜேஷ். அவர்களும் அப்படியே...

ஜிஷ்னாவிற்கு நெருங்கிய பள்ளித் தோழி என்றால் அது ஸ்ருதி மட்டும்தான். இப்போதும் அவளுடன் போனில் பேசுவாள்... அவள் வீட்டிற்கு எப்போதாவது செல்லுவாள்.

ஜேஷ் குறித்து அதன் பின் ஸ்ருதியும் கேட்கவில்லை... ஜிஷ்னாவும் அவளிடம் பேசியதில்லை... இந்த விஷயத்தால் அவர்கள் நட்பு முறிந்துப் போவதை இருவருமே விரும்பவில்லை.

இப்போது கல்லூரியில் கிடைத்த தோழிகளுடன் நன்றாகப் பேசி பழகினாள் ஜிஷ்னா. சில நாட்களுக்கு பின் ஜிஷ்னாவின் தோழிகள் அவளை ஜேஷுடன் இணைத்து கிண்டல் செய்யத் துவங்கினர்.

"என்னடி எப்போ பார்த்தாலும் ஜேஷ்கூடவேப் போற?"

"எங்கக்கூட எல்லாம் லஞ்ச் சாப்பிட வர மாட்டியா?"

"அப்படியெல்லாம் இல்ல... இங்க என்னோட ஸ்கூல் பிரண்ட்ஸ் யாரும் இல்ல... தனியா சாப்பிட வேணாமேன்னு ஜேஷ்தான் என்ன அவன்கூட சாப்பிட சொன்னான்" என்று அவர்களுக்குப் பொறுமையாக விளக்கினாள் ஜிஷ்னா.

"அதான் இப்போ நாங்க இருக்கோமே... எங்களோட நல்லா பேச ஆரம்பிச்சுட்டியே... எங்கக்கூட லஞ்ச் வா..."

"அவ வர மாட்டாடி... அப்பறம் ஜேஷ் கோச்சுக்குவான்..." என்று கூறி சிரித்தாள் ஒருத்தி.

"ஜேஷ் ஒண்ணும் கோச்சுக்கமாட்டான்... இருங்க சொல்லிட்டு வரேன்" என்றுக் கோபமாகக் கூறி ஜேஷிடம் சென்றாள் ஜிஷ்னா.

"ஜேஷ் நம்ம ரெண்டுப் பேரையும் சேர்த்துப் பேசி ரொம்ப ஓட்டுறாங்க என் பிரண்ட்ஸ் எல்லாரும். நான் இனிமே லஞ்ச் அவங்களோடப் போய் சாப்பிடுறேன் ஜேஷ்"

"எவடி அவ... நல்லா போயிக்கிட்டிருக்க எடத்துலக் கல்ல தூக்கி போடுறவ?" என்று மனதுக்குள் பொரிந்தவன் "அப்போ அவங்க சொன்னா என்கூட வண்டில வர மாட்டியா? அப்படியே பேசுறதையும் நிருத்திடேன்... ரொம்ப நல்லா இருக்கும்" என்றான் கோபமாக.

"ச்ச இல்லடா... லஞ்ச் மட்டும் அவங்களோட சாப்பிடுறேன்... ப்ளீஸ் ஜேஷ்... அவங்கள சமாளிக்க முடியாது... நீ புரிஞ்சுக்குவன்னு நெனச்சு தான் உங்கிட்ட சொன்னேன்... நீயும் இப்படிப் பேசுனா நான் என்ன பண்ணுறது சொல்லு..." என்று சிறிது வருத்தமாக கூறினாள்.

"ஹே இல்ல இல்ல... சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்... நீ அவங்களோடவே சாப்பிடு..." என்றுக் கூறி சிரித்தவன் "யாரு... அந்த சிந்துஜாதான் ஓவரா ஓட்டுறாளா?" என்று கேட்டான்.

"ஆமாம்" என்பது போல் தலை அசைத்து விட்டு அங்கிருந்து சென்றாள் ஜிஷ்னா.

"நெனச்சேன் அந்தக் குள்ள கத்திரிக்காவா தான் இருக்கும்னு" மனதிற்குள் அவளை திட்டியவன் வேறு வழியின்றி அன்றிலிருந்துத் தன் நண்பர்களுடன் உணவருந்த முடிவெடுத்தான்.

“என்னடா அதிசயமா எங்களோட சாப்பிட வர? இன்னைக்கு ஜிஷ்னா லீவா? இல்லையே... காலையில பார்த்தனே...”

“உங்களோட சாப்பிட வேண்டாம்னா சொல்லு... நான் தனியாப் போய் சாப்பிட்டுக்குறேன்...”

“சரி சரி கோச்சுக்கதடா... அவன் சும்மா கேட்டான்... நீ வா சாப்பிட போகலாம்...”

எப்படியோ நண்பர்களை சமாளித்த திருப்தியில் சாப்பிட ஆரம்பித்தான் ஜேஷ். “பாவம் இதுக்கு பயந்துதான ஜிஷ்னா அவ பிரெண்ட்ஸ்கூட போறா... பாவம் அவளையும் சத்தம் போட்டுட்டோம்...”

மாலை ஜேஷ் அருகில் வந்தவள் அவன் கோபமாக இருக்கிறாளா என்றுப் பார்த்தாள். “பயப்படாத ஜிஷ்னா... கோவம் எல்லாம் இல்ல... நீயும் பாவம்தான? எனக்குப் புரியுது... இனிமே இப்படி பேசல சரியா? உக்காரு... டைம் ஆச்சு...”

ஜேஷ் முகத்தில் புன்னகையை பார்த்தப் பிறகே ஜிஷ்ணாவிற்கு நிம்மதியானது. “மதியானத்துலேருந்து இவன் முகத்துல இந்த சிரிப்ப பாக்குறதுக்குள்ள எவ்வளவு தவிச்சுப் போயிட்டோம்... ஷப்பா...”

இரவு வீடு திரும்பிய பிரேமிடம் வந்த ஜேஷ் "அப்பா பெட்ரோலுக்கு காசு வேணும்" என்றான்.

"எவ்வளவு பெட்ரோல்டா போடுற ஒரு மாசத்துக்கு? என் காருக்கு கூட நான் இவ்வளவுப் போடுறதில்ல..."

"அதெல்லாம் கம்மியாதான் போடுறேன்... போய் பாருங்க... என்னோடப் படிக்குற பசங்க எல்லாம் எப்படி இருக்காங்கன்னு..."

"ம்ம்கும்ம்... உன்ன என்னைக்கும் மத்த பசங்களோட நான் கம்பேர் பண்ண மாட்டேன்... அது உனக்கும் நல்லா தெரியும்... அப்பறம் எதுக்கு இப்படி சொல்லுற? பெட்ரோல் போடுறதெல்லாம் சரி... எப்போதான் ஜிஷ்னாகிட்ட சொல்லப் போற?"

"அய்யோ அப்பா... ஏன் இப்படி இதையேக் கேக்குறீங்க? நீங்க லவ் பண்ணுறப்போ உங்ககிட்ட வந்து சொல்லு சொல்லுனு சொன்னா எவ்வளவு கோவம் வரும் உங்களுக்கு?

எனக்கும் அப்படிதான இருக்கும்? இதெல்லாம் அவசரப்பட்டு செய்யுற காரியமா? பொறுமையா யோசிக்க வேண்டாமா? அதுக்குன்னு ஒரு நேரம் வரும்... அதெல்லாம் சொல்லிடுவேன்"

முகத்தை கடுகடுவென்று வைத்துக் கொண்டு செல்லும் மகனை பார்த்த ரூபா “என்னங்க ஆச்சு? என்ன சொல்லி அவன கடுப்பேத்தினீங்க? உள்ள வரும்போது நல்லாதான வந்தான்?” என்று பிரேமிடம் கேட்டார்.

“பெட்ரோலுக்கு காசு கேட்டான் ரூபி... எவ்வளவு பெட்ரோல் போடுவன்னுக் கேட்டேன்... அதுக்கு கோச்சுக்கிட்டான்...”

“ஏன் உங்களுக்கு இந்த வேலை? அவன் எங்கப் போறான் சொல்லுங்க? காலேஜ் போயிட்டு வரதோட சரி... பிரெண்ட்ஸ் பாக்க வீக்கென்ட் எப்பயாவது தான் போறான்...

பக்கத்துல இருக்க ஜிஷ்னா வீட்டுக்குப் போறதுக்கு எவ்வளவு பெட்ரோல் செலவாகிடப் போகுது? என்ன கடைக்குக் கூட்டிட்டுப் போறது எல்லாம் அவன்தான்... மத்த நேரமெல்லாம் வீட்டுல தான இருக்கான்? அப்பறம் என்ன...”

“இதெல்லாம் எனக்கு தெரியாதா? உன் பையன் கோச்சுட்டுப் போறதே வேற விஷயத்துக்காக... உன்கிட்ட அதா சொல்ல முடியாமதான் தவிக்குறேன்...”

“சும்மா கேட்டேன் ரூபி... அவன் ஏதோ டென்ஷன்ல இருந்தான் போல... விடு... இனி இப்படிக் கேக்கல... போதுமா? அதுக்கு நீ ஏன் என்ன திட்டுற?” ரூபாவும் உடனே சமாதானம் ஆகி அவருடன் பேச ஆரம்பித்தார்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
14

தினமும் மாலை ஜேஷும் ஜிஷ்னாவும் வண்டியில் செல்லும்போது அவர்கள் கல்லூரிக்கு வெளியில் இருக்கும் பேருந்து நிலையத்தில் காயத்ரி என்னும் பெண் நின்றிருப்பாள்.

அவள் IT டிபார்ட்மெண்ட். முதலாம் ஆண்டு எல்லாப் பிரிவு மாணவர்களையும் ஒன்றாக செக்ஷன் பிரித்திருந்தனர். அப்போது இவர்கள் வகுப்பில் படித்தவள் காயத்ரி.

ஜிஷ்னா அவளிடம் அதிகம் பேசியதில்லை. ஜேஷ் அவளுடன் பேசும் வாய்ப்புக் கிட்டியதில்லை. காயத்ரி எப்போதும் அவள் தொழிகளுடனே சுற்றியதால் ஏற்பட்ட இடைவேளை... இன்றுவரை நிரப்பப்படாமலேயே இருந்தது.

ஜேஷ் பைக்கில் அவளைக் கடந்து செல்லும்போதெல்லாம் "அந்த பொண்ணு அழகா இருக்கால்ல?" என்று ஜிஷ்னாவிடம் கூறுவான்.

"ஆமாம்" என்று தினம் சிரித்துக்கொண்டே சொல்பவள் ஒரு நாள் "டெய்லி ஏன் இதையே சொல்லுற?" என்றுக் கேட்டாள்.

அதைக் கேட்டு சிரித்தவன் "பாவம் ரொம்ப நேரமா நிக்குறா போல... இன்னைக்கு நம்மளே லாப் முடிச்சு லேட்டாதான் வரோம்... அவ எப்படியும் ஒரு மணி நேரமா நிக்குறானு நெனைக்கறேன்...

நான் அவளக் கூட்டிட்டு போய் கொஞ்சம் தள்ளி மெயின் பஸ் ஸ்டாப்ல விட்டுட்டு வந்துடறேன்... அட்லீஸ்ட் அவ ஆட்டோ புடிச்சாவது போவால்ல... இங்க அதுக்கூட கெடைக்காது..." என்றான்.

"சரி விட்டுட்டு வா. அப்போ கூடிய சீக்கிரம் ஸ்ருதிக்கு ஹெல்ப் பண்ண மாதிரி இவளுக்கும் பண்ண வேண்டி வரும்...." என்றுக் கூறி சிரித்தாள் ஜிஷ்னா.

"இத்தன நாள் அவள மறந்திருந்தேன்... தேவ இல்லாம எதுக்கு ஞாபகப்படுத்தற" என்று கோபமாக கூறியவன் அருகில் இருந்த படியைக் காண்பித்து "இங்கயே உக்காந்திரு... போய் ட்ரோப் பண்ணிட்டு வந்துடறேன்..." என்றுக் கூறி வேகமாக சென்றான்.

"ஹாய் காயத்ரி" என்று கூறி அவள் முன் வண்டியை நிருத்தியவனை ஆச்சர்யமாக பார்த்தவள் வண்டியின் பின் இருக்கையை எட்டிப் பார்த்து "ஜிஷ்னா வரல?" என்றுக் கேட்டாள்.

"அவள நாந்தான் கூட்டிட்டுப் போகணும்... அங்க வெயிட் பண்ண சொல்லிட்டு வந்தேன். நீ ரொம்ப நேரமா நிக்குறியா? வா உன்ன மெயின் பஸ் ஸ்டாப்ல விட்டுடறேன்"

"இல்ல... நான் பஸ்லயே போயிடுறேன்..." என்றுத் தயங்கினாள் காயத்ரி.

"இதோ பாரு... நீ எப்படியும் ஒரு மணி நேரத்துக்கு மேலயா இங்க நிக்குற... இன்னும் கொஞ்ச நேரத்துல இருட்டிடும்... உன்ன வீட்டுல விடுறேன்னு சொல்லலையே... வா போகலாம்... உனக்காக ஜிஷ்னாவ வேற தனியா உக்கார சொல்லிட்டு வந்திருக்கேன்..."

அவன் சொல்வதும் உண்மையே... இப்போதே இருட்டத் துவங்கியிருந்தது. துணைக்கு வேறு யாரும் அந்தப் பேருந்து நிறுத்தத்தில் அவளுடன் இல்லை. கல்லூரியின் அருகில் ஆட்டோ எதுவும் இருக்காது.

சிறிது தூரத்தில் இருக்கும் மெயின் பஸ் ஸ்டாப்பிற்கு நடந்துதான் செல்ல வேண்டும். ஆனால் அந்த வழியும் ஆல் நடமாட்டமின்றி இருக்கும். தனியாக செல்வது அவ்வளவுப் பாதுகாப்பானது இல்லை.

இவை அனைத்தையும் யோசித்து “சரி” என்ற காயத்ரி ஜேஷின் பின்னால் அமர்ந்தாள். அவள் சரியாக அமர்ந்திருக்கிறாளா என்றுப் பார்த்தவன் வண்டியை செலுத்தினான்.

இத்தனை நாட்கள் அவனுடன் பேசிப் பழகியிருக்கா விட்டாலும் இன்று அவனாக வந்து உதவி செய்ததும் சட்டென்று அவள் மனதில் இடம் பிடித்தான் ஜேஷ்.

எப்போதும் ஒன்றாக செல்லும் ஜெஷையும் ஜிஷ்னாவையும் குறித்து காயத்ரியும் அவள் தோழிகளுடன் பேசியதுண்டு. அதைப் பற்றி அவனிடம் கேட்கலாமா என்று முதலில் யோசித்துத் தயங்கியவள் “நிச்சயமா இவன் தப்பா நினைக்கமாட்டான்” என்றெண்ணி தன் சந்தேகத்தைக் கேட்டாள்.

"என்ன ஜேஷ்? உனக்கும் ஜிஷ்னாவுக்கும் நடுவுல என்ன நடக்குது? காலேஜ்ல எப்பயும் அவக்கூடயே சுத்துற? வீட்டுலக் கொண்டு போய் விடுற? உங்க வீட்டுல பேசி முடிவு பண்ணிட்டாங்களா? இல்ல... நீங்க லவ் பண்ணறீங்களா?"

காயத்ரி இலகுவாகக் கேட்கவும் ஜேஷும் அவளுடன் பேச எண்ணினான். "அதெல்லாம் நம்ம மட்டும் நெனச்சு என்னப் பண்ணுறது காயத்ரி... அந்த பக்கமும் ஏதாவது ரியாக்ஷன் தெரியணுமே..."

அவன் சிரிப்பதைப் பார்த்ததும் “தப்பா நெனைக்கல” என்று நிம்மதியடைந்தவள் "நான் ஏதாவது பேசவா?" என்றுக் கேட்டாள்.

"வேணாம் காயு... நானே பார்த்துக்கறேன்..." என்றுக் கூறி அவளை இறக்கி விட்டு அடுத்து வந்தப் பேருந்தில் அவள் ஏறியதும் கல்லூரிக்கு வந்தான் ஜேஷ்.

"என்னடா... பத்திரமா எறக்கி விட்டுட்டு வந்துட்டியா? அவ ஒழுங்கா வீடு போய் சேர்ந்திடுவாளா?"

கிண்டலாகக் கேட்டாள் ஜிஷ்னாவிற்கு "ம்ம் ம்ம்" என்று மட்டும் பதில் கூறி வண்டியை எடுத்தான் ஜேஷ்.

அடுத்த நாள் கல்லூரியில் ஜிஷ்னாவை ஜேஷுடன் காண்டீனில் பார்த்த காயத்ரி சிநேகமாகப் புன்னகைத்தாள்.

"உன்ன பார்த்து சிரிக்குறா ஓகே... நேத்து நீ அவளுக்கு ஹெல்ப் பண்ண... இவ எதுக்குடா என்ன பார்த்து சிரிக்குறா?" என்றுப் புரியாமல் கேட்டாள் ஜிஷ்னா.

"நீ என் பிரண்டுன்னு உன்ன பார்த்து சிரிச்சிருப்பா" என்று ஜேஷ் கூறும்போதே "சொல்லிட்டியா?" என்று சைகை செய்தாள் காயத்ரி.

அதை கவனித்துவிட்ட ஜிஷ்னா "என்ன சொல்லுறா?" என்று ஜேஷிடம் கேட்டாள்.

"தெரியல. இரு சாப்பிட பப்ஸ் வாங்கிட்டு வரேன்" என்றுக் கூறி ஜிஷ்ணாவிடமிருந்து தப்பித்து காயத்ரியின் அருகில் சென்றான்.

"அம்மா தாயே பரதேவத.... கொஞ்சம் கையையும் காலையும் வெச்சுகிட்டு சும்மா இரு... அதான் நான் பார்த்துக்குறேன்னு சொன்னேன்ல?" வார்த்தைகளை அவளுக்கு மட்டும் கேட்கும்படி மென்றுத் துப்பியவன் பப்ஸ் வாங்கி மீன்றும் ஜிஷ்னாவின் அருகில் வந்தான்.

இந்நிலையில் முதலாமாண்டு முடிவடைந்து இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைத்தனர். இத்தனை நாட்களாக ஜிஷ்னாவிடம் தனது காதலை சொல்ல சரியான சந்தர்ப்பத்தை எதிர்ப்பார்த்துக் காத்திருந்தான் ஜேஷ்.

சொல்லிவிடலாம் என்று நினைக்கும்போதெல்லாம் ஏதோவொன்று தடுக்க எப்படி ஆரம்பித்து எப்படி சொல்லுவது என்ற சிந்தனையிலேயே நாட்கள் உருண்டோடின... வீட்டில் பிரேமும் கல்லூரியில் காயத்ரியும் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லுவது அவனுக்கு வாடிக்கை ஆகிப் போனது.

அன்று மாலை வண்டியில் செல்லும்போது "நம்மளும் எத்தன நாள்தான் எல்லாருக்கும் சமாதானம் சொல்லி சமாளிக்குறது? என்னைக்கா இருந்தாலும் சொல்லிதான ஆகணும்?

பேசாம இப்போவே சொல்லிடலாம்... வண்டிலப் போறப்போ சொன்னா அவளால வண்டிய விட்டு குதிக்கவா முடியும்? ரோட்டுல பலப்பேறு முன்னாடி அடிக்கவும் முடியாது..." என்றுத் தீவிரமாக யோசித்து ஒரு முடிவுக்கு வந்தான் ஜேஷ்.

எப்படி ஆரம்பித்து என்ன சொல்ல வேண்டும் என்று மனதிற்குள் ஒரு முறை ஒத்திகைப் பார்த்தவன் “ஜிஷ்னா” என்றழைத்துப் பேச்சை துவங்கினான்.

"அன்னைக்கு காயத்ரிய பஸ் ஸ்டாப்ல ட்ரோப் பண்ண போனேன்ல... ஞாபகம் இருக்கா? அப்போ அவ என்கிட்ட கேட்டா... உனக்கும் ஜிஷ்னாவுக்கும் நடுவுல என்னனு...

அவக்கூடவே எப்போ பாத்தாலும் இருக்க... வண்டியிலக் கூட்டிட்டுப் போற… வீட்டுலக் கொண்டு போய் விடுற... உங்க வீட்டுலப் பேசி முடிவு பண்ணிட்டாங்களா இல்ல நீங்க ரெண்டுப் பேரும் லவ் பண்ணறீங்களா?னு கேட்டா...

இதையே காலேஜூலயும் நெறையப் பேரு கேட்டுட்டாங்க... பசங்க சில சமயம் கிண்டல் செய்யும்போதெல்லாம் ஏதாவது சொல்லி அவங்க வாய அடைச்சிடுவேன்...

ஆனா அதுக்கப்பறம் நானும் நிறைய யோசிச்சேன்... ஒரு வேல எனக்கேத் தெரியாம உன்ன லவ் பண்ணுறதுனால தான் உன்கூடவே டைம் ஸ்பென்ட் பண்ணுறேனோன்னுத் தோணுச்சு...

எனக்கு உன்ன 9thல இருந்தே ரொம்பப் புடிக்கும் ஜிஷ்னா... ஆனா எப்போலேருந்து லவ் பண்ண ஆரம்பிச்சேன்னு எனக்கேத் தெரியாது..."

நீளமாகப் பேசி ஜிஷ்னாவின் முகத்தைக் கண்ணாடியில் பார்த்தவன் ஒரு முறை மூச்சை இழுத்து விட்டு "ஐ லவ் யூ" என்றான்.

ஜேஷ் பேச ஆரம்பித்ததும் காயத்ரியை குறித்து ஏதோ கூறப் போகிறான் என்றெண்ணி அமைதியாக இருந்தவளுக்கு பின் அவன் கூறியதை கேட்க கேட்க கோபம் வந்தது.

கடைசியாக அவன் ஐ லவ் யூ என்றுக் கூறியதும் கோபம் தலைக்கேற "வண்டிய நிறுத்து" என்றாள்.

"நான் சொல்லுறதக் கேளு ஜிஷ்னா..." அவளின் கோபம் உணர்ந்து தன்மையாகக் கூறியவனை இடை மறித்தவள் "வண்டிய நிறுத்தப் போறியா இல்லையா?" என்று சிறிது சத்தமாகவேக் கேட்டாள்.

"ஜிஷ்னா எதுவா இருந்தாலும்..." என்று மீண்டும் ஆரம்பித்தவனை "நிறுத்துன்னு சொன்னேன்" என்றுக் கத்தி அமைதியாக்கினாள்.

ஜேஷ் வேறு வழியின்றி வண்டியை ஓரமாக நிறுத்தினான். உடனே இறங்கி அவனைக் கடந்து சென்றவள் கையில் பணம் இல்லை என்று நினைவு வர திரும்பி வந்து ஜேஷ் மாட்டியிருந்த அவளுடைய பேகைப் பிடுங்காதக் குறையாக பிடித்து இழுத்து வாங்கி சென்றாள்.

அவள் போவதையே பார்த்துக் கொண்டிருந்தவன் ஒரு வித இயலாமையுடன் கிளம்பி வீடு நோக்கி சென்றான்.

“என்னடி நடந்து வர? ஜேஷ் வரலையா?” என்றுக் கேட்ட ஸ்வப்னாவை முறைத்து “இப்போ அவனுக்கு என்ன வந்துது? ஏன் நான் நடந்து வரக்கூடாதா? எப்பவும் அவன் கூட தான் வரணுமா?

எப்போப் பாரு கேள்விக் கேட்டுட்டே இருப்பியா? அவன் வந்தாலும் குத்தம் அவன் வராட்டியும் குத்தம்... என்னை என்னதான் செய்ய சொல்லுற? உயிரை வாங்காமப் பேசாம இரு...” என்றுக் கத்திவிட்டு சென்றாள் ஜிஷ்னா.

“நான் இப்போ என்னங்க கேட்டேன்? இவ இந்தக் கத்துக் கத்திட்டுப் போறா? அவன்கூட சண்டையா இருக்குமோ?”

ஹரீஷ் அணிந்திருந்தக் கண்ணாடியை சரி செய்துக் கையில் இருந்தப் புத்தகத்தை வாசித்தபடியே “அவ பேசுறதக் கேட்டா அப்படித் தெரியலயே... உன்னதான திட்டிட்டுப் போறா...

நீ என்னைக்காவது ஒரு நாள் ஜிஷ்னா கிட்ட நல்லா வாங்குவன்னு நெனச்சேன்... இன்னைக்கு நடந்திடுச்சு. விடு... தானா சரியாயிடுவா” என்றார் ஹரீஷ்.

“உங்ககிட்ட போய் சொன்னேனே... பொண்ண விட்டுக் குடுப்பீங்களா?” அலுத்துக் கொண்டாலும் ஜிஷ்னா பேசியதைப் பற்றி யோசித்தபடியே உள்ளே சென்றார் ஸ்வப்னா.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
15

அமைதியாக வீட்டிற்குள் நுழைந்த ஜேஷ் பிரேமின் அருகில் அமர்ந்து "ஜிஷ்னாகிட்ட சொல்லிட்டேன் பா. அவ கோவப்பட்டு எறங்கி பஸ் புடிச்சு போய்ட்டா" என்றான்.

"என்னடா? பெரிய பிரச்சனையா?” என்று வருத்தத்துடன் கேட்டார் பிரேம்.

"அதெல்லாம் இல்லபா... அவளால பேசாம இருக்க முடியாது... என்னால அவக்கிட்ட பேசாம இருக்கவே முடியாதுபா... நான் பார்த்துக்கறேன்"

பிரேம் வருந்துவதைப் பார்த்தவன் முகத்தில் வரவழைத்த சிரிப்புடன் அவருக்கு சமாதானம் கூறி அதற்கு மேல் அமர்ந்திருக்காமல் எழுந்து அறைக்குள் வந்தான்.

நீண்ட நேரம் யோசித்தப் பின் ஒரு முடிவுடன் ஜிஷ்னாவிற்கு அழைத்தான். அவள் எடுக்காவிட்டால் அவள் வீட்டிற்கே செல்வது என்று முடிவு செய்திருந்தான்.

மூன்று ரிங் சென்ற பின் எடுத்தவளை பேச விடாமல் "நாளைக்கு காலையில உங்க வீட்டுக்கு வருவேன். என்கூட பைக்ல வர மாட்ட பஸ்லதான் போவேன்னு சொன்னா நேரா போய் ஸ்வப்னாக்கிட்ட பேச வேண்டி இருக்கும்...

அதுக்கப்பறம் அவங்க ஏன் எதுக்குன்னுக் கேப்பாங்க... அவங்கள நீயே சமாளிக்க வேண்டியதுதான். மரியாதையா என்கூட வர" என்றுக் கூறி அவளின் பதிலுக்கு காத்திராமல் வைத்தான்.

அவன் போனை வைத்ததும் "இவன் பெரிய இவன்... சும்மாவே அம்மா இவன்கூடப் போறதுக்கு ஆயிரத்தெட்டு கேள்விக் கேக்கறாங்க... அதையெல்லாம் இப்போ தான் பேசி ஓரளவு சமாளிச்சு வெச்சிருக்கேன்.

இதுல இனிமே இவன்கூடப் போகலன்னு சொன்னா அதுக்கும் கேள்விக் கேப்பாங்க... வேற வழியே இல்ல... இவன்கூட தான் போயாகணும்... ச்ச... உயிரை வாங்குறான்..." போனை பெட்டில் எறிந்தாள் ஜிஷ்னா.

“அட பாவி... சொல்லிட்டியா?" என்று ஒரே நேரத்தில் கேட்டனர் வினோத்தும் ராஜாவும். எப்போதும் முக்கியமான விஷயம் எதுவாக இருந்தாலும் அதை அவர்களிடம் பகிர்ந்துக் கொள்ளும் ஜேஷ் இன்று ஜிஷ்னாவிடம் தன் காதலை சொல்லியதையும் அவர்களிடம் தெரிவிக்க எண்ணினான்.

தனிததநியே இருவரிடமும் சொல்லும் பொறுமை இல்லாமல் அவர்களுக்கு கான்பெரென்ஸ் கால் செய்திருந்தான்.

"ம்ம் சொல்லிட்டேன்... கோவமாதான் போனா... பாப்போம்..."

“ஆனாலும் உனக்கு தைரியம் தான்டா... அசால்ட்டா சொல்லுறான் பாரு வினோத்...”

“விடுடா... அவனும் எத்தன நாளைக்குதான் சொல்லாமயே தவிப்பான்? அதுக்கு இது எவ்வளவோ மேல்... நீ தைரியமா இரு ஜேஷ்...”

“அத விடுங்கடா... சரி ஆகிடும்... நீங்க அடுத்து எப்போ ஊருக்கு வரீங்க? பார்த்தே ரொம்ப நாள் ஆன மாதிரி இருக்கு...”

“நானும் உன்ன ரொம்ப மிஸ் பண்ணுறேன் ஜேஷ். பேசாம அங்கயே ஏதாவது ஒரு காலேஜுல சேர்ந்திருக்கலாம்... நீ சொன்னதக் கேக்காம இங்க வந்து தனியா கஷ்டப்படுறேன்...”

“பொலம்பாத ராஜா... நான் அடுத்த வாரம் வருவேன் ஜேஷ். மீட் பண்ணலாம்”

“நானும் அடுத்த வீக்கென்ட் வரேன் ஜேஷ்... எல்லாரும் சேர்ந்து எங்கயாவது வெளியிலப் போகலாம்... ரொம்ப நாள் ஆச்சுடா நம்ம எல்லாம் சேர்ந்து சுத்தி...”

“சரிடா... வந்ததும் சொல்லுங்க...” என்றுக் கூறி வைத்தான் ஜேஷ். நண்பர்களிடம் நீண்ட நாட்களுக்குப் பிறகுப் பேசியது மனதிற்கு இதமாக இருக்க எந்த பிரச்சனை வந்தாலும் சமாளித்து விடலாம் என்ற நம்பிக்கைப் பிறந்தது.

அடுத்த நாள் வழக்கம்போல் காலை அவள் வீட்டின் முன் சென்று நின்றபோது முகத்தில் கோபம் கொப்பளிக்க அவனருகில் வந்தாள் ஜிஷ்னா. அவள் கையில் இருந்த பெகை வாங்கி மாட்டி பைக்கை ஸ்டார்ட் செய்தான் ஜேஷ்.

அப்போது ஜிஷ்னா மறந்து விட்டு வந்திருந்த லஞ்ச் பாக்ஸை கொடுக்க வந்த ஸ்வப்னா ஜேஷின் நடவடிக்கைகளைக் கவனித்தார். அவர் நீட்டிய லஞ்ச் பாக்ஸை ஜிஷ்னா வாங்கிப் பைக்குள் வைக்க வண்டியைக் கிளப்பினான் ஜேஷ்.

அவர்கள் சென்றதும் "நல்ல பையன்தான்... இன்னைக்கு வரைக்கும் அவ கைல இருக்க பேக அவனே வாங்கி மாட்டிட்டுப் போறான்…" என்று முணுமுணுத்தபடியே உள்ளே சென்றார்.

எதுவும் சொல்லாமல் காலேஜில் அவளை விட்டவன் அதன் பின் மாலை வரை அவளிடம் பேசவில்லை. வகுப்புத் தோழர்களுடன் பேசும் சாக்கில் அவள் பக்கமெத் திரும்பாமல் இருந்தான்.

மாலை காலேஜை விட்டு வெளியே வந்ததும் "ஜிஷ்னா... உனக்குப் புடிக்கலன்னா அத நேரடியா என்கிட்ட சொல்லிடு... அதுக்கப்பறம் நான் லவ் பண்ணுறேன்னு சொல்ல மாட்டேன்... அதுக்காக இப்படி கோவமாப் பேசாம இருக்காத... கஷ்டமா இருக்கு..." என்றான்.

"அன்னைக்கு ஸ்ருதி ப்ரொபோஸ் பண்ணப்போ பெருசா சொன்ன… ஒரு தடவ லவ் பண்ணுறேன்னு சொன்னவங்களால அதுக்கப்பறம் பிரண்டா பழக முடியாதும்னு... இப்போ எத வெச்சு உன்ன நம்ப சொல்லுற?"

"நான் உன்கிட்ட திரும்ப பிரண்டா பழகுறேன்னு சொல்லவே இல்லையே... இப்போவும் உனக்கு புடிக்கலன்னா இனி லவ் பண்ணுறதா சொல்ல மாட்டேன்னுதான் சொல்லுறேன்..." என்றான் அழுத்தமாக.

சிறிது நேர மௌனத்திற்குப் பின் "எனக்குப் பிடிக்கல" என்றாள்.

சரி என்பது போல் தலையை ஆட்டியவன் அதன் பின் வந்த நாட்களில் ஜிஷ்னாவிடம் எப்பொழுதும் போல் பேசினான். “காதல்” என்றோ “காதலிக்கிறேன்” என்றோ எதுவும் சொல்லவில்லை.

சில நாட்கள் கழித்து ஹரீஷ் பிரேமிற்கு கால் செய்தார். “பிரேம்... நீங்க குடுத்த ஸ்பேர் பார்ட்ஸோட க்வாலிட்டி என் பிரெண்ட்ஸுக்கு ரொம்ப பிடிச்சுப் போச்சு... அவங்களுக்கு பரம திருப்தி...

இதுக்கப்பறம் அவங்களோட மொத்த ஆர்டரையும் உங்களுக்கே தரதா முடிவுப் பண்ணிட்டாங்க... இத அவங்கதான் உங்ககிட்ட சொல்லணும்... ஆனா விஷயம் கேள்விப்பட்டதும் என்னால சொல்லாம இருக்க முடியல... ரொம்ப சந்தோஷம் பிரேம்... அவங்க உங்களுக்கு கால் பண்ணி சொல்லுவாங்க...”

“அப்படியா? இது எல்லாமே உங்களால தான் ஹரீஷ். ரொம்ப தேங்க்ஸ்...”

“அட நீங்க என்ன உங்க பையன மாதிரியே பேசுறீங்க? உங்களுக்கு திறமை இருக்கு... கடினமா உழைச்சீங்க... அதுக்கேத்தப் பலன் கெடைக்குது. இதுல நான் என்ன பிரேம் செஞ்சேன்?”

“என்ன இருந்தாலும் இது நீங்க சொன்னதால தானே ஹரீஷ்... திறமை இருந்தாலும் வாய்ப்புக் கிடைக்கணுமே?”

“அதெல்லாம் இருக்கட்டும் பிரேம்... சரி நான் வெக்குறேன். அவங்க கால் பண்ணா நான் சொன்னதா எதுவும் காட்டிக்க வேண்டாம்...”

ஹரீஷ் போனை வைத்ததும் கணேஷிடம் சென்றார் பிரேம். விஷயத்தைக் கேள்விப்பட்டதும் “உன்னாலதான் பிரேம் ஹரீஷ் நம்மக்கிட்ட பேசுனாரு... தேங்க்ஸ்டா” என்றார் கணேஷ்.

“நீ வேற... என் பையன் ஜிஷ்னாகிட்ட பேசுனதால எனக்கு இவருப் பழக்கம் ஆனாரு... எல்லாம் சரியா அமஞ்சுதுன்னா இவரே என்னோட வருங்கால சம்பந்தியா வர வாய்ப்புகள் அதிகம் இருக்கு கணேஷ்”

பிரேம் கண்ணை சிமிட்டவும் “டேய்... உன் பையன் வேலையா? தேறிடுவான்டா... இது எப்போ இருந்து? என்ன சரியா வரணும்?” என்றுக் கேட்டார் கணேஷ்.

“அதெல்லாம் நம்ம மட்டும் ஆசைப்பட்டா போதுமா கணேஷ்? எல்லாருக்கும் ஒத்து வரணுமே? எங்க லைப் மாதிரி ஆகிடக் கூடாதுடா... ரூபா மாதிரி ஜிஷ்னா பின்னாடி வைத்தப் படக் கூடாது”

தேவையில்லாமல் பழைய ரணங்களைக் கிளறி விட்டோம் என்று வருந்திய கணேஷ் “சரி... இப்போ இவ்வளவுப் பெரிய ஆர்டர் நம்மளால சமாளிக்க முடியுமா பிரேம்? இத முடிச்சுக் குடுக்க இன்னும் என்னென்ன வாங்க வேண்டியது இருக்கு?” என்றுக் கேட்டுப் பேச்சை மாற்றினார்.

அவர் நினைத்ததுப் போலவே பிரேமும் அடுத்து செய்ய வேண்டிய வேலைகளைக் குறித்துப் பேச ஆரம்பித்தார். சில காயங்கள் எத்தனை வருடங்கள் ஆனாலும் எவ்வளவு மருந்திட்டாலும் முழுவதுமாக ஆறாமல் வடுவாய் மனதில் தங்கி விடுகின்றன.

வீட்டிற்கு வந்ததும் ரூபாவை தேடி சென்ற பிரேம் விஷயத்தைக் கூறினார். “கலக்குறீங்க போங்க... இப்போ நைட்டாவது வீட்டுக்கு வரீங்க... இனிமே எப்படி? பாக்டரியிலயே தங்கிடுவீங்களா?”

தன் மகிழ்ச்சியை தெரிவித்தாலும் கூடவே தன் ஆதங்கத்தையும் சேர்த்து தெரிவித்தார் ரூபா. இத்தனை நாட்கள் அவர் அனுபவித்த துயரை அந்த ஒற்றைக் கேள்வி பிரேமிற்கு சொல்லிவிட “இனிமே சீக்கிரம் வீட்டுக்கு வந்திடுறேன் ரூபி” என்றார்.

சமையலறையுள் மனைவியின் தோள் மீதுக் கைப் போட்டுப் பேசிக் கொண்டிருந்த பிரேமை பார்த்ததும் “ஹக்க்ம்ம்... நான் உள்ள வரலாமா?” என்று அனுமதிக் கேட்டான் ஜேஷ்.

“வாடா... ஹரீஷ் சொன்ன ஆர்டர் மொத்தமும் நமக்கே தரதா சொல்லிட்டாங்க...”

“நேஜமாவா? சூப்பர் பா...” கைக்குளுக்கிய மகனை பார்த்தபடியே “இதெல்லாம் ஹரீஷால தான்... அவங்க வீட்டுக்கு நம்ம இது வரைக்கும் போனதே இல்ல ரூபி...” என்றார்.

“அதுக்கென்னங்க? இப்போ அவங்களுக்கு தாங்க்ஸ் சொல்லணுமே? அவங்க வீட்டுல எல்லாரையும் கூப்பிட்டு ஒரு பார்ட்டி குடுத்திட்டாப் போச்சு... நீ என்ன சொல்லுற ஜேஷ்?”

“நல்ல ஐடியா மா... ஏதாவது ஒரு ஹோட்டலுக்கு போகலாம்... டின்னருக்கு இன்வைட் பண்ணுவோம்...”

“எதுவா இருந்தாலும் உடனே செய்யணும். நாளைக்கே அவங்க வீட்டுக்குப் போய் இன்வைட் பண்ணிடலாம் ரூபி”

ஆனால் சொன்னதுப் போல் மறுநாள் பாக்டரியில் இருந்துகி பிரேமால் சீக்கிரம் கிளம்ப முடியாமல் வேலைகள் அதிகம் இருந்தன. அதனால் வீட்டிற்கு அழைத்து ஜெஷை சென்று ஜிஷ்னா குடும்பத்தினரை அழைக்க கூறினார்.

அன்று மாலை ஜேஷ் வந்ததும் “அப்பா வர முடியாதாம் ஜேஷ்... உன்னையே போய் ஜிஷ்னா வீட்டுல சொல்லிட்டு வர சொன்னாங்க...” என்றுத் தகவல் தெரிவித்தார் ரூபா.

“இப்போதானம்மா அவ வீட்டுல இருந்து வரேன்? அப்பா எனக்கு கால் பண்ணி சொல்லியிருக்கலாம்ல? சரி போறேன். குளிச்சிட்டு டிரஸ் மாத்திட்டுப் போறேன்...”

“உனக்கு கால் பண்ணாங்களாம்... நீ எடுக்கலன்னு சொன்னாங்க... வண்டியில வந்திட்டு இருந்திருப்ப... பரவாயில்ல ஜிஷ்னா வீட்டுக்குதான... கிளிச்சுட்டுப் போயிட்டு வா”

ஜேஷ் அங்கே சென்றபோது நல்லவேளையாக ஹரீஷ் வீட்டில் இருந்தார்.

"அங்கிள் அப்பா உங்க எல்லாரையும் நாளைக்கு டின்னர்கு இன்வைட் பண்ண சொல்லி என்னை அனுப்புனாங்க... அப்பாதான் நேர்ல வந்து இன்வைட் பண்ணி இருக்கணும்.

ஆனா அவங்களுக்கு கடைசி நேரத்துல ஒரு முக்கியமான வேல வந்துடுச்சாம்... இன்னும் வீட்டுக்கு வரல. அதான் நான் வந்தேன். தப்பா நெனச்சுக்காதீங்க அங்கிள்"

"அதெல்லாம் ஒண்ணும் இல்ல ஜேஷ். நாளைக்குப் போகலாம்னு சொல்லிடு..."

"சரி அங்கிள். எங்க எப்போன்னு டீடயில்ஸ் நான் ஜிஷ்னாகிட்ட நாளைக்கு காலேஜுல சொல்லிடுறேன். வரேன் அங்கிள்" என்றுக் கூறி எழப் போனவனை "இரு ஜேஷ் ஜூஸ் குடிச்சுட்டு போ" என்று ஒரு கிளாஸை அவன் கையில் கொடுத்தார் ஸ்வப்னா.

ஜேஷ் வந்தவுடன் அவன் குரல் கேட்டு அறையை விட்டு வெளியே வந்துப் பார்த்த ஜிஷ்னா அவனைக் கண்டதும் அமைதியாக அவன் அருகில் சென்று அமர்ந்தாள்.

அவன் கூறிய விஷயத்தைக் கேட்டதும் “நாளைக்கு பேரன்ட்ஸ் முன்னாடி வேற இவன சமாளிக்கணுமா? ஏற்கனவே காலேஜுல எல்லார் முன்னாடியும் இவன்கூட நார்மலா பேசுற மாதிரி நடிக்க வேண்டியதா இருக்கு” என்று யோசித்து நொந்தாள்.

ஸ்வப்னாவிடமிருந்து ஜூஸை வாங்கியவன் அருகில் அவனை கண்டுக் கொள்ளாது அமர்ந்திருந்த ஜிஷ்னாவிடம் "உங்க அம்மா கையால ஜூஸ் குடிச்சு குடிச்சுதான் நான் வளருறேன்" என்று அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் கூறினான்.

அதை கேட்டு வந்த சிரிப்பை அடக்கி சோபாவின் கைப்பிடியில் கோலம் போட்டுக் கொண்டிருந்தாள் ஜிஷ்னா.

இரண்டு வாய் குடித்தவன் "இன்னைக்கு என்ன அதிசயமா சிரிச்சுக்கிட்டே குடுக்குறாங்க? நீ ஏதும் மந்திரிச்சு விட்டியா?" என்று அவளிடம் பேச்சுக் கொடுப்பதற்காகவே மீண்டும் கூறினான்.

அதை கேட்டு அவனை திரும்பி பார்த்து முறைக்க முயன்றவள் அது முடியாமல் சிரித்து விட்டாள்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
16

ஜேஷ் அடுத்த நாள் செல்ல வேண்டிய ஹோட்டலின் பெயரையும் நேரத்தையும் ஜிஷ்னாவிடம் கல்லூரியில் கூறினான். இரவு ஜேஷின் குடும்பம் முன்னரே சென்று காத்திருந்தனர்.

“சீக்கிரம் ஸ்வப்னா... அவங்க எல்லாம் ஏற்கனவே அங்க வந்துட்டாங்களாம்... எவ்வளவு நேரமா அந்தப் புடவைய சரி பண்ணுவ?”

“கொஞ்சம் இருங்க... அப்படியே ஏனோதானோன்னா கட்டிட்டு வர முடியும்? உங்களுக்கென்ன? ஒரு பேன்ட் சட்டைய மாட்டிக்கிட்டு ஜம்முன்னு உக்கார்ந்திருக்கீங்க”

“ம்மா... நானும்தான் சீக்கிரம் ரெடி ஆகிட்டேன்”

“உன்ன புடவை கட்ட சொன்னா கேக்குறியா? எப்போப் பாரு சுடிதார் போட்டுட்டே சுத்து”

ஸ்வப்னா இவ்வாறு கூறவும் தேவையில்லாமல் கேள்விக் கேட்டுவிட்டோமோ என்று நினைத்த ஜிஷ்னா அமைதியானாள். ஒரு வழியாக இவர்கள் கிளம்பி சென்றபோது ஜேஷ் ஹோட்டல் வாசல் வரை வந்து இவர்களை வரவேற்று உள்ளே அழைத்து சென்றான் ஜேஷ்.

“வாங்க... உங்கள எல்லாம் இப்போதான் பார்க்க முடியுது... இவன் ஜிஷ்னாவ வீட்டுக்கு கூட்டிட்டு வரதுக்கே அத்தன வருஷம் ஆகிடுச்சு... உங்க சாரீ அழகா இருக்குங்க... நீட்டா கட்டியிருக்கீங்க...”

அவ்வளவுதான் ஸ்வப்னா ரூபாவிடம் விழுந்துவிட்டார். “எங்க கட்ட விடுறாங்க? எங்கயாவது கிளம்பணும்னா அவசரப்படுத்திட்டே இருக்க வேண்டியது... இன்னைக்கும் அவசர அவசரமாதான் கட்டினேன்... நீங்க வாங்க வந்து உட்காருங்க...”

ஆண்கள் ஒரு பக்கமும் அதற்கு எதிரில் பெண்கள் மூவரும் அமர்ந்தனர். ஹரீஷும் பிரேமும் பிசினெஸ் பற்றி பேசியவர்கள் நாட்டு நடப்பு, அபீஸ் என்று பேசிக் கொண்டே சென்றனர்.

ஸ்வப்னாவும் ரூபாவும் நன்றாக பேச ஆரம்பித்தனர். சொல்லப் போனால் ஸ்வப்னாவிற்கு இலகுவாகப் பேசிப் பழகும் ரூபாவை மிகவும் பிடித்துப் போனது. ஜேஷும் ஜிஷ்னாவும் இவர்கள் நால்வரும் பேசுவதை கவனிப்பதும் அங்கு உள்ளோரை வேடிக்கைப் பார்ப்பதுமாக இருந்தனர். எதுவும் பேசிக் கொள்ளவில்லை.

அவர்கள் ஆர்டர் செய்த உணவு வந்ததும் பெற்றோர்களுக்குள் பேச்சு தொடர அவர்கள் நால்வருக்கும் நெருங்கிப் பழக இந்த ஒரு சந்திப்பு போதுமானதாய் இருந்தது.

சாப்பிட்டு முடித்து கை கழுவ செல்லும்போது பிரேம் “எப்படி ஹரீஷ்? அவங்கள எல்லாம் அனுப்பிடுவோமா?” என்றுக் கேட்க “ம்ம் ம்ம்... ஆனா நீங்கதான் சொல்லணும்... நான் சொன்ன இன்னைக்கு தொலைஞ்சேன்...” என்றார்.

உடனே பிரேம் ஜெஷிடம் கூற அவன் ரூபாவிடம் "அம்மா நீங்க நம்ம கார்ல ஆன்ட்டியையும் ஜிஷ்னாவயும் அவங்க வீட்டுல விட்டுட்டுப் போங்க. நாங்க பின்னாடி வரோம்" என்றான்.

அவன் எதற்காக இப்படி கூறுகிறான் என்று அறிந்ததால் ஜேஷை பார்த்தாள் ஜிஷ்னா. அவனும் அவளைப் பார்த்தாலும் முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டவில்லை. அவர்கள் சென்றதும் மூவரும் அந்த ஹோட்டலில் இருந்த பாருக்கு சென்றனர்.

ஜேஷும் பிரேமும் “சீயர்ஸ்” சொல்லி குடிப்பதை ஆச்சர்யமாகப் பார்த்தார் ஹரீஷ். "என்ன அங்கிள் இப்படி பார்க்குறீங்க?" என்று கெட்டவனை தோளோடு அணைத்துக் கொண்டார் பிரேம்.

"உங்கள பார்த்தா கொஞ்சம் பொறாமையா இருக்கு பிரேம். ஒரு வேல எனக்கும் பையன் இருந்தா நான் அவன்கூட இந்தளவுக்கு பிரண்ட்லியா இருப்பனான்னு தெரியல"

சிரித்து விட்டு தான் சென்று அவர்களுக்கு இன்னொரு ட்ரின்க் வாங்கி வருவதாக கூறி நகர்ந்தான் ஜேஷ். "பிரேம் நான் ஒண்ணு சொன்னா தப்பா நினைக்க மாட்டீங்களே..." என்று சிறிதுத் தயங்கிக் கேட்டார் ஹரீஷ்.

"சொல்லுங்க ஹரீஷ். நான் எதுவும் நினைக்க மாட்டேன்" அவரை ஊக்குவித்தார் பிரேம்.

"எனக்கு ஜேஷை ரொம்ப பிடிச்சுருக்கு பிரேம். இப்போ இல்ல... அவனை முதல் தடவ பார்த்தப்போவே. ஜேஷுகு ஜிஷ்னாவ கல்யாணம் பண்ணி வைக்க... உங்களுக்கு சம்மதமா?" என்றுக் கேட்டு பிரேமின் முகத்தை பார்த்தார்.

பிரேம் இதை ஹரீஷ் கேட்பார்... அதுவும் இப்போது கேட்பார் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஜேஷ் அருகில் இல்லாத இந்த சமயம் தான் என்ன கூறுவது என்று யோசித்தார்.

அவனுக்கு விருப்பம்தான் ஆனால் ஜிஷ்னா என்ன பதில் கூறினாள்... இவன் என்ன முடிவில் இருக்கிறான்... இப்படி எதுவும் அவருக்கு தெரியாது. அவன் வரும்வரை காத்திருக்கலாம் என்றால், தனக்கு இதில் விருப்பம் இல்லாததால் பதில் சொல்ல தயங்குவது போல் இருக்கும் என்றுத் தோன்றியது.

"எனக்கு இதுல எந்த ஆட்சேபனையும் இல்ல ஹரீஷ். ஆனா இது நம்ம பசங்க சம்மந்தப்பட்ட விஷயம்... அவங்க தான் டிசைட் பண்ணணும்... நம்ம போர்ஸ் பண்ண முடியாதே..." என்றுக் கூறி சமாளித்தார்.

ஜேஷ் அருகில் வந்ததும் ஹரீஷ் வேறு விஷயம் பேச ஆரம்பித்தார். அவரே இதைப் பற்றி இப்போது பேச விரும்பாதபோது தான் பேசுவது நாகரீகம் இல்லை என்று பிரேமும் அதில் கலந்துக் கொண்டார்.

அவர்கள் புறப்பட்ட சமயம் ஜேஷ் தானே வண்டி ஒட்டுவதாகக் கூறி ஹரீஷின் காரை எடுத்தான். முதலில் பிரேமை தங்கள் வீட்டில் விட்டவன் "அங்கிள் ட்ரோப் பண்ணிட்டு நான் நடந்து வந்துடுறேன்" என்று ரூபாவிடம் கூறி சென்றான்.

ஜிஷ்னாவின் வீட்டின் முன் காரை நிறுத்தி ஹார்ன் அடித்ததும் வந்து கதவைத் திறந்து விட்டாள் ஜிஷ்னா. காரை உள்ளே நிறுத்தி இறங்கி வந்து ஹரீஷை வீட்டினுள் அழைத்து சென்றான். அவரை ஹாலில் அமர வைத்து விட்டு "வரேன் ஆன்ட்டி" என்றவன் வேகமாக வெளியே வந்தான்.

ஜேஷின் பின்னால் வந்த ஜிஷ்னா அவன் கேட் அருகில் சென்றதும் அவன் முன் போய் நின்று வழிமறித்து கோபமாக "எதுக்கு அப்பாவ குடிக்க வெச்ச?" என்றாள்.

"ஆமா நாந்தான் குடிங்க குடிங்கன்னு சொன்னேன்... நான் ஒரு ரவுண்டோட நிறுத்த சொன்னேன். உங்க அப்பாவும் எங்க அப்பாவும் தான் மொடா குடி குடிச்சாங்க... இன்னைக்கு எங்கப்பா என்ன மூட்ல இருந்தாங்கன்னு தெரியல..."

"அப்போ நீ குடிக்கலையா? பெரிய யோக்கியன் மாதிரிப் பேசுற?" என்று சிறிதுக் குரலை உயர்த்தினாள் ஜிஷ்னா.

"இங்க பாரு ஜிஷ்னா... நாந்தான் சொல்றேன்ல... ஒரு ரவுண்டோட நிறுத்த சொன்னேன்னு... நான் இவங்க ரெண்டு பேரு குடிச்ச அளவுக்கு குடிச்சுருந்தா கார் ஓட்டிட்டு வந்திருக்க முடியுமா? அவங்களுக்கு சும்மா கம்பனி குடிக்க குடிச்சேன்.

எங்க அப்பாவ வீட்டுல விட்டுட்டு தான் வரேன்... இப்போ நடந்து போகப் போறேன்... இதுக்கு மேலயும் நீ கோபப்பட்டு கத்துவன்னா கத்திக்கோ போ..." அதற்கு மேல் அவள் வீட்டு வாசலில் அந்த நேரத்தில் நின்றுப் பேச விருப்பமில்லாதவன் நடக்க ஆரம்பித்தான்.

வீட்டிற்கு வந்தபோது பிரேம் நல்ல உறக்கத்தில் இருந்தார். ஜேஷும் சென்று படுத்தான். அவன் மொபைலிற்கு மெசேஜ் வந்தது.. "ரீச்ட் ஹோம்?" என்று ஜிஷ்னா அனுப்பி இருந்தாள்.

உடனே பதில் அனுப்பாமல் அவளுக்கு கால் செய்தவன் அவள் எடுத்ததும் "வீட்டு வாசல்ல வெச்சுக் கத்தி அனுப்பிட்டு இப்போ எதுக்கு அக்கறையா விசாரிக்கற?" என்றான் உணர்ச்சியற்ற குரலில்.

"நீ பண்ணதுக்கு கத்தாம வேற என்ன பண்ணுவாங்க?" என்றாள் அமைதியாக. "நான் தண்ணி அடிப்பேன்னு உனக்கு தெரியாது? நான் சொன்னதே இல்லையா?" என்று நக்கலாகக் கேட்டான் ஜேஷ்.

"தெரியும். ஆனா நீ வீட்டுல அங்கிள் கூட அடிப்ப. இன்னைக்கு கார் வேற ஓட்டிட்டு வந்திருக்க... உன்கூட ரெண்டு பேரு வேற இருக்காங்க... அதான் கத்திட்டேன்" என்றாள் 'நான் செய்ததில் தப்பொன்றும் இல்லை' என்றக் குரலில்.

"சும்மா பேருக்கு சீயர்ஸ் சொல்லி ஒரு சிப் அடிக்குறதுல எல்லாம் ஒண்ணும் ஆகிடப் போறதில்ல... வேணும்னா உங்க அப்பாக்கிட்ட கேளு... வண்டி ஓட்டணும்னா சும்மாப் பேருக்கு தான் நான் குடிப்பேன்

இது உனக்கு நல்லா தெரியும். அப்பறமும் எதுக்கு இப்போ கத்துற? அப்போ உனக்கு அவங்க ரெண்டு பேருக்கும் எதுவும் ஆகிடக் கூடாது... என்ன பத்தி அக்கறை இல்ல… அப்படி தான?"

"நான் அப்படி சொல்லலையே... இனி வீட்டுல மட்டும் தண்ணி அடி... வெளில அடிச்சாலும் வண்டி ஓட்டாத..." என்றாள் கண்டிப்பாக.

ஒரு முறை மூச்சை இழுத்துவிட்டவன் "எந்த உரிமைல ஜிஷ்னா இத சொல்லுற?" என்று அமைதியாகக் கேட்டான்.

..................

"சொல்லு ஜிஷ்னா..."

"உன்னோட பிரண்டா உன் மேல இருக்க அக்கறைல சொல்லுறேன்" அழுத்தமாகவே கூறினாள் ஜிஷ்னா.

"அப்படியா?" என்று வியப்பாக கேட்பது போல் கேட்டான் ஜேஷ். "ஜேஷ் ப்ளீஸ். எனக்கு பிடிக்கலன்னு சொன்னா நீ இதப் பத்தி பேச மாட்டேன்னு சொல்லியிருக்க மற..."

"எத பத்தி ஜிஷ்னா?"

.......................

"சொல்லுடி" என்றான் அதட்டலாக.

"உன்கிட்ட இப்போ பேசி பிரயோஜனம் இல்ல... குட் நைட்" என்றுக் கூறி வைத்தாள் ஜிஷ்னா.

கடுப்பான ஜேஷ் மீண்டும் அவளுக்கு கால் செய்தான். ஜிஷ்னா எடுத்ததும் "தண்ணி அடிச்சுட்டு உன்கிட்ட பேசுறேன்னுக் கேவலமா நெனச்சுட்டியா?" என்றுக் கத்தினான். "இல்ல" என்று மட்டும் பதில் சொன்னாள் ஜிஷ்னா.

"என்ன இல்ல?" என்றான் எரிச்சலாக. "நீ இதுக்கு முன்னாடியும் தண்ணி அடிச்சுட்டு பேசி இருக்க ஜேஷ். நீ ஒளருறன்னு நெனச்சு ஒண்ணும் நான் வெக்கல..."

"பின்ன?"

"எனக்கு இந்த டாபிக் பேச புடிக்கல ஜேஷ். நீ என்னோட பிரண்ட்…”

"ஒரு பையன் பிரண்டா இருந்தா அவனோட எல்லா பழக்கமும் அந்த பொண்ணுக்குத் தெரிஞ்சுருக்கும்... அவனுக்கும் மறைக்க எதுவும் இருக்காது... அப்படி இருக்க பையன எதுக்கு லவ் பண்ண யோசிக்குற?

ஒரு சிப் பண்ணிட்டு அந்த கிளாஸ் நான் தொடவே இல்லன்றதால தான் உங்கப்பா என்ன வண்டி ஓட்ட விட்டாரு. குடிச்சுட்டு வண்டி ஓட்டுறதுக்கு நான் ஒண்ணும் முட்டாளோ குடிகாரனோ கிடையாது....

உங்கப்பா என்ன புரிஞ்சுக்கிட்ட அளவுக்குக் கூட நீ என்ன புரிஞ்சுக்கல... பேசாம படு. எனக்கு தூக்கம் வருது. குட் நைட்" கோபமாக ஆரம்பித்து கடைசியில் வருத்தமாக முடித்து போனை வைத்தான் ஜேஷ்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
17

காலை வண்டியில் போகும்போது ஜேஷ் அமைதியாகவே வர அவன் ஏதாவதுப் பேசுவான் என்று எதிர்ப்பார்த்த ஜிஷ்னா தானே அவனிடம் பேசினாள். "நீ இத பத்தி பேச மாட்டேன்னு சொல்லிட்டு திரும்ப ஏன் ஜேஷ் நேத்து அப்படி பேசுன?"

ஜேஷ் "நான் எத்தனையோ நாள் பாட்டில் பாட்டிலா அடிச்சிருக்கேன்… அன்னைக்கெல்லாம் விட்டுட்டு நேத்து நீ எதுக்கு அவ்வளவு அக்கறையாப் பேசுன?" என்றான் சாலையில் கவனம் வைத்து.

"நீ வண்டி ஓட்டுனதுனால தான் உன்ன திட்டுனேன்... உன்னோட..."

"சும்மா நிறுத்து ஜிஷ்னா. நான் நெறைய குடிச்சப்போ இல்லாத அக்கறை உனக்கு நேத்து வந்துடுச்சா? நேத்து நான் கேட்டதுக்கு நைட் புல்லா யோசிச்சு டையலாக் பேசாத..." அத்துடன் அமைதியானான் ஜேஷ்.

"இவன் பேசுறதை எல்லாம் பேசுவான்... நான் பேசுனா மட்டும் கேக்க மாட்டானா? எரும... இதுல நான் டையலாக் பேசுறனா?" மனதிற்குள் அவனை திட்டிக் கொண்டே கண்ணாடியில் அவனை பார்த்து முறைத்தாள் ஜிஷ்னா.

வண்டியிலிருந்து இறங்கியவள் அவனைத் திரும்பிப் பாராமல் வகுப்பறைக்கு சென்றாள். வண்டியை நிறுத்தி விட்டு அவள் பின்னால் சென்றவன் வழியில் காயத்ரியை கண்டான்.

"ஜேஷ் என்ன ஜிஷ்னா கோவமா போறா?"

"அதெல்லாம் ஒண்ணும் இல்ல காயு..." என்று வருத்தமாகக் கூறினான் ஜேஷ்.

"என்ன ஜேஷ்? எதுவும் சண்டையா?"

"ம்ம்... ஆனா நான் பாத்துக்குறேன்..." என்று சிரித்தவன் "ஓகே பை" என்றுக் கூறி அவளிடம் விடைப்பெற்றான்.

கிளாஸுக்கு சென்று அவள் முன் தான் மாட்டியிருந்த பேகை கழட்டி வைத்தவன் அவளை ஒரு நொடி நின்றுப் பார்த்து விட்டு தன் இடத்தில் சென்று அமர்ந்தான்.

ஜிஷ்னாவிற்கு அவனது கோபம் பெரும் வருத்தத்தை தந்தது. வகுப்புகள் நடக்கும் போதும் அவனை அவ்வபோது திரும்பிப் பார்த்தாள். அவள் திரும்பி பார்த்தபோதெல்லாம் ஜேஷ் மும்முரமாக பாடத்தை கவனித்துக் கொண்டிருந்தான்.

ஜிஷ்னா தன்னை பார்ப்பது அவனுக்கும் தெரிந்தே இருந்தது. ஆனாலும் திரும்பி அவளை பார்க்கவில்லை. எதற்காகப் பார்க்க வேண்டும் என்ற வீம்பு...

ஜிஷ்னாவின் அருகில் இருந்த பெண் "என்ன டி திரும்பி திரும்பி பாக்குற? ஜேஷ பாக்குறியா?" என்றுக் கேட்டதும் "அதெல்லாம் ஒண்ணும் இல்ல... நீ கிளாஸ் கவனி..." என்றுக் கூறி தானும் கவனிக்கத் துவங்கினாள்.

இடையில் லேப் சென்றபோது ஜேஷ் அவளைக் கண்டுக் கொள்ளாமல் அவள் அருகில் அமர்ந்திருந்தா. அவர்கள் இருவரும் சேர்ந்து செய்ய வேண்டிய ப்ரோக்ராம் அது...

எப்போதும் ஜேஷ் கோட் அடிப்பான். ஜிஷ்னா அவனிடம் கேட்டுத் தெரிந்துக் கொண்டு அனைத்தையும் குறித்து வைப்பாள். அவள் முதலில் அப்சர்வேஷன், ரெகார்ட் அனைத்தையும் எழுதி முடிக்க அதை வாங்கி ஜேஷ் எழுதிக் கொள்வான்.

இன்று தானே எல்லாம் செய்ய வேண்டி வந்ததை எண்ணி வருந்தினாள். திடீரென்று “எதுக்கு IF கண்டிஷன் போட்ட... இதுக்கு அது தேவ இல்ல” என்று அவன் கூறவும் தன்னிடம் பெசிவிட்டானா என்ற சந்தோஷத்தில் நிமிர்ந்து அவனை பார்த்தாள்.

அருகில் அவர்களின் லெக்சரர் நின்றுக் கொண்டிருந்தாள். ஜிஷ்னாவிற்கு சந்தேகம் வந்தது... அவருக்காகதான் அவன் தன்னுடன் பேசினானோ என்று.

“ஆமா ஜிஷ்னா... IF தேவையில்ல...”

அவர் நகர்ந்து சென்றதும் மீண்டும் கையில் ஒரு நோட்டை எடுத்து அதை வைத்து விளையாட ஆரம்பித்தான் ஜேஷ்.

“அப்போ அவங்களுக்காகதான் என்கிட்ட பேசினானா? அப்படி என்ன கோவம் இவனுக்கு? ஏன் நான் இவன எதுவும் கேட்க கூடாதா? இப்படி முகத்த திருப்பிட்டு நிக்குறான்...”

மாலையும் ஜேஷ் எதுவும் பேசவில்லை. அமைதியாகவே அவளை வீட்டில் விட்டான். ஜிஷ்னாவின் வீட்டில் அவள் இறங்கியபோது பிரேம் அவனை அழைத்தார். "டேய் எங்கடா இருக்க? உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்... சீக்கிரம் வா..."

"ஜிஷ்னா வீட்டுல இருக்கேன் பா. இன்னும் பத்து நிமிஷத்துல வரேன்"

"அவள பத்தின விஷயம் தான்டா" என்று பிரேம் கூறியதும் "தோ வந்துட்டேன்" என்று போனை வைத்து வேகமாக சென்றான்.

பிரேம் போனை வைத்ததும் அவரிடம் வந்த ரூபா "என்ன அப்பாக்கும் பையனுக்கும் அப்படி முக்கியமான விஷயம்?" என்று வினவினார்.

"நேத்து நைட் ஹரீஷ் ஜிஷ்னாவ ஜேஷுக்கு கல்யாணம் பண்ணி வைக்க உங்களுக்கு சம்மதமான்னுக் கேட்டார்"

"இவ்வளவு முக்கியமான விஷயத்த சொல்லாம நேத்து தூங்கிட்டீங்களா? ஜேஷ் வந்ததும் உங்களுக்கு இருக்கு..." என்றார் ரூபா.

"ரொம்ப டயர்டா இருந்துது ரூபி. இவன் வேற ஜிஷ்னாக்கிட்ட ப்ரொபோஸ் பண்ணிட்டான்... அதுக்கு அவ என்ன பதில் சொன்னா… இவன் என்ன முடிவுல இருக்கான்னு தெரியாம... அவர் கேட்ட டைம்ல இவன் வேற பக்கத்துல இல்லையா... அதான் ஹரீஷ்கிட்ட..." என்று கூறிக் கொண்டே நிமிர்ந்து ரூபாவை பார்த்தவர் அவர் முறைப்பதைக் கண்டு வாயை மூடினார்.

"ஜேஷ் ஜிஷ்னாவ லவ் பண்ணுறானா? ப்ரபோஸ் வேற பண்ணிட்டானா? இவ்வளவு நடந்திருக்கு என்கிட்ட சொல்லணும்னு உங்க ரெண்டு பேருக்கும் தோணல இல்ல? அப்படி என்ன நான் செஞ்சேன்?"

சரியாக அந்த நேரம் உள்ளே நுழைந்த ஜேஷ் "ரூபி உன்கிட்ட சொல்லக் கூடாதுன்னு இல்ல..." என்றான். "ஏன்டா உனக்கு காரியம் ஆகணும்ணா மட்டும் என்கிட்ட வர இல்ல? இதெல்லாம் சொல்ல முடியாதா?" என்று அவன் மீது பாய்ந்தார் ரூபா.

"ஐயோ ரூபிம்மா... நான் லவ் பண்ணுறேன்னு சொல்லி அவ முடியாதுன்னு சொல்லிட்டா நான் பீல் பண்ணுறேனோ இல்லையோ... நீ உக்காந்து சோக கீதம் பாட ஆரம்பிச்சுடுவ... அதான் எல்லாம் ஓகே ஆனப்பறம் சொல்லிக்கலாம்னு விட்டுட்டேன்..." அவர் அருகில் அமர்ந்து அவர் தோளில் கை போட்டான்.

"அவ அப்படி எதுவும் சொன்னாளா டா?" என்றுக் கவலையாக கேட்டவரிடம் "இல்ல மா. அதெல்லாம் நான் பார்த்துக்குறேன்..." என்று கூறினான்.

அப்போது பிரேம் நேற்று ஹரீஷ் தன்னிடம் கேட்டதையும் தான் கூறிய பதிலையும் கூறினார். "அப்பா... ஏன்பா அப்படி சொன்னீங்க?" என்று அலறினான் ஜேஷ்.

"டேய் நீ இல்லாம நான் என்ன பதில் சொல்ல முடியும் சொல்லு..."

"போங்கப்பா... சரி விடுங்க... இனி நான் பார்த்துக்குறேன்..." என்றுக் கூறி எழுந்து சென்றான்.

அன்று இரவு ஜிஷ்னா தூங்காமல் மொபைலை கையில் வைத்து அதையேப் பார்த்தபடி விழித்திருந்தாள். சனிக்கிழமை அவளுடைய பிறந்த நாள்.

ஜேஷும் ஜிஷ்னாவும் ஒன்பதாம் வகுப்பிலிருந்து பழக ஆரம்பித்தது முதல் ஒவ்வொரு வருடமும் அவளுக்கு நள்ளிரவு அழைத்து வாழ்த்தி விடுவான். இன்று அவன் தன்னுடன் எதுவும் பேசாமல் கோபமாக இருப்பதால் அழைப்பானா என்ற சந்தேகம் இருந்தது ஜிஷ்னாவிற்கு.

நமக்கு பழகிய சில விஷயங்கள் திடீரென்று தடை பட்டு நின்று, இனி அது நடக்குமோ நடக்காதோ என்ற சந்தேகம் எழும்போது வரும் தவிப்பு தான் அவளுக்கும் இப்போது இருந்தது.

நேரம் நள்ளிரவை நெருங்க நெருங்க அவளுடைய கைபேசியையே பார்த்துக் கொண்டிருந்தாள் ஜிஷ்னா.

ஜேஷும் இதையே தான் செய்துக் கொண்டிருந்தான். அவனுக்கு அவள் அவ்வாறு கோபமாகப் பேசியது வருத்த்தமாக இருந்தது. ஆனால் அவள் தன்னிடம் அதிகப்படியான உரிமை எடுத்துக் கொள்கிறாளோ என்று யோசித்தபோது மகிழ்ச்சியாகவும் இருந்தது.

ஜிஷ்னாவிற்கு முதலில் தானே வாழ்த்த வேண்டும் என்று நள்ளிரவிற்கு முன்பே அவளை அழைத்து சிறிது நேரம் பேசி விட்டு வாழ்த்தி வைப்பான். ஆனால் இந்த வருடம் அவளை அழைத்தால் எங்கே அவள் பிறந்த நாளன்று கோபப்பட்டு விடுவாளோ என்று பயந்தான்.

“பேசவும் முடியாது... பேசாம இருக்கவும் முடியவே முடியாது... இவ ஏன் இப்படி இம்ச பண்ணுறா? அவளுக்கு முதல்ல நாந்தான் விஷ் பண்ணணும்... எப்பயுமே... அத நான் விட்டுக் குடுக்க மாட்டேன்...”

வேகமாக மெசேஜ் டைப் செய்து சரியாக 11.58 மணிக்கு அவளுக்கு அனுப்பினான். Happy Birthday Jishna என்று மூன்று முறை அவனிடம் இருந்து மெசேஜ் வந்ததும் இழுத்து வைத்திருந்த மூச்சை விட்ட ஜிஷ்னா ஜேஷை அழைத்தாள்.

"போன் பண்ணி விஷ் பண்ண மாட்டியா? அது என்ன 3 மெசேஜ்?"

"கரெக்டா 12 மணிக்கு விஷ் பண்ணணும்னு தான் 3 மெசேஜ் அனுப்பினேன்… அப்போ... நான் விஷ் பண்ணுவேன்னு முழிச்சிருந்தியா?"

"அதெல்லாம் இல்ல... தூக்கம் வரல அதான்... உன் மெசேஜ் வந்ததும் பார்த்துட்டு உனக்கு கால் பண்ணுறேன்..."

"சரி வேற யாரு விஷ் பண்ணாங்க? உங்க வீட்டுல விஷ் பண்ணாங்களா?"

"இல்ல... வேற யாரும் விஷ் பண்ணல..."

"நாளைக்கு உங்க வீட்டுக்கு வந்தா ஸ்வப்னா ஜூஸ்தான் தருவாங்களா?? இல்ல ஸ்வீட் ஏதாவது தருவாங்களா?" என்றுக் கேட்டு சிரித்தான் ஜேஷ்.

"அதெல்லாம் தருவாங்க தருவாங்க... எங்கம்மாவ வம்பிழுக்கலன்னா உனக்கு தூக்கம் வராதே" கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்கிக் கூறினாள் ஜிஷ்னா.

"சரி ஜிஷ்னா... காலையிலப் பாக்கலாம். ஹாப்பி பர்த்டே" என்றுக் கூறி வைத்தான் ஜேஷ்.

அவன் வாயால் இதைக் கெட்டப் பிறகே ஏதோ தன் பிறந்த நாள் முழுமை அடைந்ததாக உணர்ந்தாள் ஜிஷ்னா. மீண்டும் அவள் கைபேசி அலற அதை எடுத்துப் பார்த்தவள் அழைப்பது ரூபா என்றுத் தெரிந்ததும் உடனே எடுத்தாள்.

“ஹாப்பி பர்த்டே ஜிஷ்னா... இன்னைக்கு மாதிரியே என்னைக்கும் நீ ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கணும்மா”

“தேங்க்ஸ் ஆன்ட்டி... நீங்க கால் பண்ணுவீங்கன்னு எதிர்ப்பார்க்கவே இல்ல”

“இருடா அங்கிள்கிட்ட குடுக்குறேன்...” என்ற ரூபா பிரேமிடம் கொடுத்தார். அவரும் விஷ் செய்து ஜிஷ்னாவை தூங்க சொல்லி போனை வைத்தார்.

“பத்தியா... அவ புத்திசாலி... நீங்க கால் பண்ணுவீங்கன்னு எதிர்ப்பார்க்கவே இல்லன்னு சொன்னா கேட்டியா? இதுக்குதான்... எந்த வருஷமும் இல்லாம இப்போ எதுக்கு ராத்திரி பன்னிரண்டு மணிக்கு நீ விஷ் பண்ண போறேன்னு இதுக்குதான் கேட்டேன்...”

“சும்மா இருங்க... அதெல்லாம் இனிமே பழக்கத்த மாத்திக்க வேண்டியதுதான்... அவளுக்கு என் பையன் விஷ் பண்ணுவான்னா இனிமே நம்மளும் விஷ் பண்ணிதான் ஆகணும்...”

ஹரீஷும் ஸ்வப்னாவும் சிறிது தாமதமாகவே ஜிஷ்னாவின் அறைக்கு வந்தனர். வந்தவர்கள் முதலில் அவள் ஜெஷுடன் பேசியதையும் பின் அவன் பெற்றோரோடும் பேசியதையும் கேட்டனர்.

ஹரீஷ் சந்தோஷப்பட ஸ்வப்னா ஆச்சரியப்பட்டார். ஜேஷ் அழைப்பான் என்று அவருக்குத் தெரியும். ரூபாவும் பிரேமும் வாழ்த்தியது வியப்பாக இருந்தது. உள்ளே வந்து ஜிஷ்னாவை வாழ்த்திவிட்டு சென்றனர்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
18

ஜேஷ் ஜிஷ்னாவின் வீட்டிற்கு சென்றதும் அவனை உள்ளே அழைத்து அமர செய்தாள் ஜிஷ்னா. “வா ஜேஷ்... உக்காரு இப்போ வந்துடுறேன்...”

ஸ்வப்னா டைனிங் ஹாலிற்குள் சென்றதும் எட்டிப் பார்த்து "போச்சு போச்சு... இன்னைக்கும் பிரட்ஜ தொறந்து ஜூஸ் பாட்டில எடுத்துட்டாங்க... ஏன்டி... உங்க வீட்டுல யாராவது இந்த ஜூஸ் குடிப்பீங்களா?? இல்ல அது எனக்காகவே ஸ்பெஷலா தயாரிக்கப்பட்டதா?" என்று ரகசியமாகக் கேட்டான் ஜேஷ்.

"பேசாம இருக்க மாட்ட?" அவனுக்கு முதுகில் இரண்டு அடிகளை கொடுத்தாள் ஜிஷ்னா.

அதற்குள் அங்கு வந்த ஸ்வப்னா "இத குடி ஜேஷ். பாயசம் பண்ணிட்டு இருக்கேன். எடுத்துட்டு வரேன்" என்றுக் கூறி அவன் கையில் ஒரு கிளாஸை கொடுத்து சென்றார்.

அவர் சென்றதும் கிளாஸை முகத்திற்கு நேராக தூக்கிப் பார்த்துவிட்டு ஜிஷ்னாவை ஒரு முறைப் பார்த்து தலையை ஆட்டி ஒரே மடக்கில் அதைக் குடித்தான். இதைப் பார்த்த ஜிஷ்னாவிற்கு சிரிப்பை அடக்குவது பெரும்பாடாக இருந்தது.

ஸ்வப்னா பாயாசம் கொண்டு வந்துக் கொடுக்க அதை ருசித்தவன் “ரொம்ப நல்லா இருக்கு ஆன்ட்டி...” என்றான்.

“நீயாவது சொன்னியே ஜேஷ்... இவளும் இவங்க அப்பாவும் இருக்காங்கப் பாரு... வாயே தொறக்க மாட்டாங்க...”

“எங்கள ஏன் ஜேஷ் மாட்டிவிட்டுட்டுப் போற? அதான் எப்படி இருக்குன்னு நீ கேட்டதுக்கு தலையாட்டுனனே ஸ்வப்னா...”

“ம்ம்கும்... நல்லா ஆட்டுனீங்க... எதையும் வாயத் தொறந்து சொல்லிடவே சொல்லிடாதீங்க...”

சலித்துக் கொண்டே அவர் உள்ளே சென்றுவிட “வந்த வேல முடிஞ்சுதா? நீ கிளம்புப்பா...” என்றார் ஹரீஷ்.

ஜேஷும் ஜிஷ்னாவும் சிரித்தபடியே புறப்பட்டு சென்றனர். கல்லூரியில் அவள் இறங்கியதுமே அவளை சுற்றி ஒரு கூட்டமே சிறந்தது. அவர்களது வகுப்புத் தோழிகள் அனைவரும் ஜிஷ்னாவை வாழ்த்தினர். ஒரு சிலர் கிப்ட் கொடுத்தனர்.

முகம் கொள்ளாப் புன்னகையுடன் நடுவில் நின்றிருந்தவளை பார்க்க பார்க்க ஜேஷின் மனம் லேசானது. “உன்ன இப்படியே வாழ்க்க புல்லா பார்த்துக்க என்னால முடியும் ஜிஷ்னா... ஏன் என்னை புரிஞ்சுக்கவே மாட்டேங்குற?”

இப்போதெல்லாம் அடிக்கடி அவளிடம் கேட்கும் மானசீகக் கேள்வி... விடை சொல்ல வேண்டியவளோ அவனை திரும்பிப் பார்த்து அழகாகப் புன்னகைத்தாள். இப்போதைக்கு அதுவே போதுமானதாக தோன்ற அவளுடன் வகுப்பு நோக்கி நடந்தான் ஜேஷ்.

மாலை கல்லூரியிலிருந்து கிளம்பிய ஜேஷ் ஜிஷ்னாவை ஒரு பெரிய துணிக் கடைக்கு அழைத்து சென்றான். "இங்க எதுக்கு ஜேஷ்? வீட்டுல தேடுவாங்க..." என்றவளிடம் "அதெல்லாம் அங்கிள் கிட்ட காலைலயே சொல்லிட்டேன்… இன்னைக்கு லேட் ஆகும் வரதுக்குன்னு. நீ வா..." என்றுக் கூறி முன்னே சென்றான்.

"இவன் கூடவே தான காலையில உக்காந்திருந்தோம்... அப்பாவும் நம்ம முன்னாடிதான் உட்கார்ந்திருந்தாங்க... எப்போ அப்பாக்கிட்ட சொன்னான்?" என்று யோசித்துக் கொண்டே அவன் பின்னால் சென்றாள் ஜிஷ்னா.

உள்ளே சென்றதும் "உனக்கு என்ன பிடிச்சுருக்கோ எடுத்துக்கோ... எதுவா இருந்தாலும் சரி..." என்றான்.

"என்ன ஜேஷ் இது? கிப்ட் னா நீதான்டா வாங்கிக் கொடுக்கணும்... என்னையே செலக்ட் பண்ண சொல்லுற? இதுக்குப் பேரு கிப்டா"

உடனே சுற்றும் முற்றும் பார்த்தான் ஜேஷ். அந்தக் கடையில் துணிகள் மட்டுமல்லாது accessories, வாட்ச், செருப்பு, கிப்ட் ஆர்டிக்கல்ஸ் அனைத்தும் இருந்தன.

கிப்ட் ஆர்டிகல்ஸ் இருந்த பக்கம் சென்றவன் அங்கிருந்த சிலவற்றை ஆராய்ந்து ஒரு அடி நீளமும் அகலமும் கொண்ட கண்ணாடியில் பெரிய ஹார்டின் வடிவில் இருந்த ஒன்றை எடுத்தான்.

அங்கங்கே சிறிய சிவப்பு நிற ஹார்டின் வரையப்பட்டு "To someone special..." என்று இருந்த அந்த கிப்ட் ஆர்டிகளை ஜிஷ்னாவிடம் நீட்டி "நல்லா இருக்குல்ல... நம்ம மனசும் இந்த கண்ணாடி மாதிரிதான... ஒழுங்க ஹாண்டில் பண்ணலன்னா ஒடஞ்சுடும்... இல்ல ஜிஷ்னா" என்றான்.

"வெளயாடாத ஜேஷ்... அறிவுக்கெட்டத்தனமா இது என்ன பேச்சு?”

"என்கிட்ட கிப்ட் செலக்ட் பண்ண சொன்னா நான் இப்படிதான் செலக்ட் பண்ணுவேன்... நீ ஒழுங்கா போய் ஏதாவது டிரஸ் எடு போ" சிரித்துக் கொண்டே கூறி அதை எடுத்த இடத்தில் வைத்தான் ஜேஷ்.

"என்கிட்ட இல்லாத ஏதாவது ஒண்ண கிப்டா குடு ஜேஷ்..."

சட்டென்று அவளை திரும்பிப் பார்த்தவன், "குடுக்கலாம்... இல்ல வேணாம்... நீ அதுக்கும் கத்துவ... போய் டிரஸ் எடு நீ..." என்றுக் கூறி அவளை அனுப்பி வைத்தான்.

ஜிஷ்னா அங்கிருந்த சுடிதார்களை பார்ப்பதில் கவனம் வைத்தாலும் ஜேஷ் என்னக் கூற வந்தான் என்ற யோசனையோடே வலம் வந்தாள்.

பார்த்தவரையில் தனக்குப் பிடித்த மூன்றை எடுத்து வந்து “இதுல எத எடுக்கணும் சொல்லு...” என்றாள்.

“உனக்கு எதுப் பிடிச்சிருக்கோ எடு ஜிஷ்னா... எதுவா இருந்தாலும் ஓகே ன்னு சொன்னேன்ல...”

“ரொம்பப் பண்ணாத... எனக்கு மூணும் பிடிச்சிருக்கு... கண்ப்யூஷனா இருக்கு... அதான் உன்கிட்ட கேக்குறேன்”

“அப்போ மூணையும் எடுத்துக்கோ... வா பில் போடலாம்...”

அவன் வேகமாகத் திரும்பவும் பதறிய ஜிஷ்னா “ஹேய் இரு இரு... மூணு எல்லாம் வேண்டாம்... நான்... நான் இத எடுத்க்குறேன்...” அவசரமாகக் கையில் இருந்தவற்றில் ஒன்றைக் காட்டினாள்.

“இது உனக்குப் பிடிச்சிருக்குல்ல? அவசரப்பட்டு எடுக்காத” என்று அவன் கூறவும் அவனை முறைத்தாள் ஜிஷ்னா.

“சரி சரி... வா பில் போட்டுக் கிளம்பலாம்...” என்றவன் பணத்தை செலுத்தி கடையை விட்டு வெளியே வந்தான்.

வீட்டிற்கு செல்லும் வழியில் இத்தனை நேரம் அவள் மூளையை வண்டாகக் குடைந்துக் கொண்டிருந்தக் கேள்வியை அவனிடம் கேட்டாள். "நீ அப்போ என்ன சொல்ல வந்த?"

"எப்போ ஜிஷ்னா?"

"என்கிட்ட இல்லாத கிப்ட் குடுன்னு சொன்னப்போ..."

ஒரு முறை ஜிஷ்னாவை திரும்பி பார்த்தவன் மீண்டும் வண்டி ஓட்டுவதில் கவனம் வைத்தான். சிறிது தூரம் சென்றதும் "உன்கிட்ட இல்லாததுன்னா... கழுத்துல தாலியும்... கால்ல மெட்டியும் இல்ல. வாங்கித் தரவா?" என்று வேகமாகக் கேட்டான்.

அவன் கூறிய வேகத்தில் 'மாட்டார்' என்று அவன் தலையில் அடித்தாள் ஜிஷ்னா. அவள் அடித்ததும் வண்டியை சாலை ஓரம் நிறுத்தியவன் "எறங்கு டி" என்றான்.

அப்போதுதான் அவனை பலமாக அடித்துவிட்டது ஜிஷ்னாவிற்கு உரைத்தது. சுற்றி யாரும் கவனித்துவிட்டார்களோ என்றுப் பார்த்தாள். சாலை அதிக ஆள் நடமாட்டம் இல்லாமல் இருந்தது.

அடித்ததற்கு ஜேஷ் இப்படி தெருவில் நிற்க வைத்து கோபமாக கத்தி விடுவானோ என்று பயந்தவள் அவன் முகத்தைப் பார்த்தாள்.

"இப்படி அடிக்குறதா இருந்தா வீட்டுக்குள்ள வெச்சு அடி... ரோட்டுல பப்ளிக்ல அடிச்சு மானத்த வாங்காத..."

அவன் கூறிய விதத்தில் பயம் மறந்து சிரித்து விட்டாள் ஜிஷ்னா.

"உன்ன எல்லாம் திருத்தவே முடியாது... வண்டிய எடு" என்றுக் கூறி மீண்டும் பின்னால் அமர்ந்தாள்.

வீட்டில் ஜிஷ்னாவை இறக்கி விடும்போது வெளியே வந்த ஸ்வப்னா "உள்ள வா ஜேஷ்" என்று அழைத்தார்.

"ம்ம்கும் எதுக்கு... ஜூஸ் குடுக்கறதுக்கா?" என்று ஜிஷ்னாவிற்கு மட்டும் கேட்குமாறு கூறி யவன் "இல்ல ஆன்ட்டி டைம் ஆச்சு. நான் கிளம்புறேன்" என்றுக் கூறி சென்றான்.

திடீரென்று ஒரு நாள் இரவு 10 மணிக்கு ஜிஷ்னாவை போனில் அழைத்தவன் "நான் தண்ணி அடிக்கவா?" என்றுக் கேட்டான்.

"அத எதுக்கு என்கிட்ட கேக்குற?"

"நீ மட்டும் தான் என்ன திட்டுற... அதான்... அடிக்கவா?"

"அடிச்சுக்கோ. எ..."

"ஓகே தேங்க்ஸ். இப்படியே லைப் புல்லா நான் எப்போ கேட்டாலும் பெர்மிஷன் குடுத்துடு. குட் நைட்"

"ஹலோ ஹெல்... கடுபேத்தறதுக்கே போன் பண்ணுவான் போல... ச்ச..." மொபைலை வைத்து உறங்க சென்றாள் ஜிஷ்னா.

அப்போது அவளது மொபைலிற்கு மெசேஜ் வந்தது. "நான் இப்போ தண்ணி அடிக்கல. சும்மாதான் கேட்டேன். ஆனா இனி உன்கிட்ட கேட்டுட்டு தான் அடிப்பேன்" என்று ஜேஷ் அனுப்பி இருந்தான்.

"மனுஷன நிம்மதியா இருக்கவே விட மாட்டானா? இவன் இப்படியே விளையாடிட்டே இருக்கான்... இங்க இருக்க பிரச்சன எனக்கு தான தெரியும்... தல வலிக்குது இவனோட..."

மீண்டும் மெசேஜ் வந்தது. "லைப் புல்லா" என்று அனுப்பி இருந்தான் ஜேஷ். "இதெல்லாம் திருந்தவே திருந்தாது" என்று நினைத்தவள் "ஒளராம போய் தூங்கு" என்று அனுப்பி விட்டு உறங்கினாள்.

அன்று கணேஷும் அவரது மனைவியும் ஜேஷின் வீட்டிற்கு வந்திருந்தனர். “வாடா... எப்போக் கூப்பிட்டாலும் பிஸியா இருக்கவனே... வருஷத்துக்கு ஒரு தடவக் கூட வீட்டுப் பக்கம் வந்துடாத... வாம்மா...”

“எங்க அண்ணா? சொன்னா இவருக கேட்டாதான? எப்போக் கேட்டாலும் இப்போ வேல இருக்கு இப்போ வேல இருக்குன்னே சொல்லுறாரு... இன்னைக்கு போயே ஆகணும்னு கண்டிப்பா சொல்லி கூட்டிட்டு வர வேண்டியதாப் போச்சு...”

“ஏன்டா வந்ததும் போட்டுக் குடுக்குற? இப்போ சந்தோஷமா இருக்குமே... எப்படிம்மா இருக்க?”

“நல்லா இருக்கேன் அண்ணா... அவங்க சொல்லுறதும் தப்பில்லையே... நாங்க அடிக்கடி வரோம்... நீங்க எப்போக் கூப்பிட்டாலும் வேலை இருக்குன்னு சொல்லுறீங்க... எங்க உங்க பையன் சிவா? அவனையும் கூட்டிட்டு வந்திருக்கலாமே...”

“அவன் எங்கம்மா வரான்? அவனுக்கு எப்பயும் அவன் பிரெண்ட்ஸ் தான்... ஜேஷ் மாதிரியா? என்ன ஜேஷ்... படிப்பெல்லாம் எப்படிப் போகுது?”

“காலேஜ் ஏதோ போகுது அங்கிள்...”

“ம்ம்ஹும்... அப்போ மத்ததெல்லாம் நல்லாப் போகுதா?” என்று கணேஷ் கேட்கவும் பிரேமை பார்த்தான் ஜேஷ். அவர் தலையாட்டவும் கணேஷிற்கு அணைத்து விஷயமும் தெரியும் என்றுப் புரிந்தவனாய் “மத்த விஷயமெல்லாம் அத விட சுமாரா போகுது அங்கிள்...” என்றான்.

“அடப்பாவி... இப்படி அலுத்துக்குற? உன்ன ரொம்ப நல்லவன்னு நெனச்சனேடா... நீ எங்களுக்கு மேல இருப்பப் போல?”

“உங்களோட எல்லாம் கூட்டு சேர்ந்தா அப்பறம் என் பையன் இப்படிதான இருப்பான்? ஜேஷ மட்டும் குறை சொல்லுறீங்க?”

“இதுக்கு கேக்காமயே இருந்திருக்கலாம்... சரி அப்பறம் ஜேஷ்... படிப்பு முடிஞ்சதும் நேரா பாக்டரிக்கு வந்துடுவியா? எப்போப் பொறுப்பெல்லாம் உன்கிட்ட ஒப்படைக்கிறது?”

“எனக்கு பாக்டரி பார்த்துக்குறதுல இண்டரெஸ்ட் இல்ல அங்கிள்... அதான் அப்பாவும் நீங்களும் இருக்கீங்களே... நான் படிகுற படிப்புக்கு IT கம்பனில வேலைக்குப் போகதான் விரும்புறேன்...”

“அட என்னபா... நீயும் இப்படி சொல்லுற... சிவாவும் இதையேதான் சொல்லுறான்... எங்கக் காலத்துக்கு அப்பறம் யாரு பார்த்துக்கிறது?”

அவர் கேட்பதும் நியாயம்தானே என்று யோசித்த ஜேஷ் “சரி அங்கிள்... கொஞ்ச நாள் என் விருப்பப்படி வேலைக்குப் போறேன்... எப்படியும் சென்னை போகணும்... அது ஒத்து வராதுன்னு தெரிஞ்சா உடனே கிளம்பி வந்து உங்களோடவே பாக்டரிய பார்த்துக்குறேன்... இப்போ ஹாப்பியா?” என்றான்.

“உன் புள்ள பாரு... நம்ம மனசு நோகக் கூடாதுன்னு யோசிச்சு அவனுக்கும் கஷ்டம் வராம டக்குன்னு ஒரு முடிவு சொல்லிட்டான்... இதே என் பையன்கிட்ட கேட்டிருக்கணும் பிரேம்...

நான் புடிச்ச முயலுக்கு மூணு காலுன்னு நிப்பான்... நான் வேலைக்குதான் போவேன்... நீங்க என்ன சொல்லுறது... நான் என்ன கேக்குறதுன்னு... எப்போதான் அவனும் புரிஞ்சுக்குவானோ?”

“சரி சரி... விட்டா நீ பேசிட்டே இருப்ப... ரூபி... சாப்பாடு எடுத்து வை... எனக்கும் பசிக்குது... எல்லாரும் உக்காந்து சாப்பிடுவோம்....”

“நானும் வரேன்” என்றுக் கூறிய கணேஷின் மனைவியும் ரூபாவுடன் சென்று உதவினார். பிரேமும் கணேஷும் பேசிக் கொண்டிருக்க ஜேஷ் எழுந்து அவன் அறைக்குள் வந்தான்.

“இதுக்கூட நல்ல ஐடியாவா இருக்கே... ஜிஷ்னா பேரன்ட்ஸ் என் பேரன்ட்ஸ் எல்லாரும் இங்கதான் இருக்காங்க... இங்கயே இருந்தாலும் நல்லாதான் இருக்கும்...” அவனுக்கும் இந்த யோசனை பிடித்தே இருந்தது.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
19

ஒரு மாதத்திற்கு பின் பிரேமிற்கு ஆர்டர் கொடுத்த ஹரீஷின் நண்பர் ஒருவரின் வீட்டு க்ரஹப்ரவேசம் வந்தது. அதற்கு பிரேம், ரூபா, ஹரீஷ் மற்றும் ஸ்வப்னா ஒன்றாகப் போவது என்று முடிவானது.

“நானே வந்து உங்கள கூட்டிட்டுப் போறேன் ஹரீஷ். என் காரிலேயே போயிடலாம்... எதுக்கு தனித்தனியா?”

காலை நேரமே கிளம்பிய பிரேம் ஹரீஷிற்கு அழைத்தார். “நாங்க ரெடியா இருக்கோம் பிரேம்... வாங்க...”

ஜிஷ்னாவின் வீட்டிற்கு வந்தவர்களை உள்ளே அழைத்தார் ஹரீஷ். ஜிஷ்னாவின் வீட்டிற்கு அவர்கள் வருவது இதுவே முதல் முறை. “ஒரு காப்பியாவது குடிச்சுட்டுப் போகலாம்... முதல் தடவ வரீங்க...”

ஸ்வப்னா அவசரமாக அனைவருக்கும் காப்பி கலக்க ரூபாவும் அவருடன் நின்று உதவினார். “நீங்க இருங்க ஜேஷ் அம்மா... நான் போடுறேன்...” என்று ஸ்வப்னா கூற “அதெல்லாம் எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லங்க... நீங்களும் எடுத்துக்கோங்க...” என்று அவருக்கும் கொடுத்தார் ரூபா.

“பத்திரமா வீட்ட பூட்டிட்டுக் கிளம்புங்க ஜிஷ்னா... ஜேஷ் வந்துக் கூட்டிட்டுப் போவான்... இன்னும் எந்திரிக்கவே இல்ல... அர தூக்கத்துல நாங்கக் கிளம்புனதும் வீட்டப் பூட்டிட்டு திரும்ப போய் படுத்துட்டான்”

“விடுங்க பிரேம் தூங்கட்டும்... மணி 5 தான ஆகுது... ஸ்வப்னா ஆச்சா? சீக்கிரம்... டைம் ஆகுது பாரு...”

“வந்துட்டேன்...” என்றுக் கூறிய ஸ்வப்னா ஒரு ட்ரேயில் காப்பியை எடுத்து வந்து நீட்டினார். “ஜிஷ்னாவுக்கும் குடுங்க...” என்று ரூபா கூற “அவ இன்னும் பல்லே விலக்கல... நீங்க வேற...” என்றார் ஸ்வப்னா.

“அப்படியா... சரி விடுங்க... இவ்வளவு சீக்கிரம் எந்திரிச்சு என்ன செய்யப் போறா? அவளும் தூக்கக் கலக்கத்துல நிக்குறா... நம்ம சீக்கிரம் கிளம்புவோம்... அவ இன்னும் கொஞ்ச நேரம் தூங்கட்டும்...”

நன்றாக உறங்கிக் கொண்டிருந்தவளை அடித்து எழுப்பிய ஸ்வப்னாவை முறைத்து தனக்காக பரிந்துப் பேசிய ரூபாவின் தோளில் சாய்ந்து நின்ற நிலையிலேயே உறங்க ஆரம்பித்தாள் ஜிஷ்னா.

“ஏய் குளிக்காத பாண்ட... அவங்க விசேஷத்துக்குப் போகணும்... அவங்க மேல எதுக்குடி தூங்கி விழுற? தள்ளி நில்லு...”

“பாருங்க ஆன்ட்டி இந்த அம்மாவ... காலங்காத்தால எழுப்பி விட்டுட்டு திட்டிக்கிட்டே இருக்காங்க...”

“விடும்மா... சரி வாங்க நம்ம கிளம்புவோம்...” என்றுக் கூறி ரூபா அனைவரையும் வெளியே அழைத்து செல்ல ஜிஷ்னா வீட்டைப் பூட்டிவிட்டு வந்துப் படுத்தாள்.

விடிந்ததும் எழுந்து கல்லூரிக்குக் கிளம்பியவள் வெளியே ஜேஷ் வந்து ஹார்ன் அடிக்கவும் “எல்லா வா ஜேஷ்... எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு...” என்றுக் கூறி அவனை அழைத்தாள்.

“இந்த அம்மா போகும்போது ‘கப்பை எல்லாம் கழுவி வெச்சிட்டு தூங்கு’னு வேலை சொல்லிட்டுதான் போனாங்க... நமக்கு இருந்த தூக்கக் கலக்கத்துல இதையெல்லாம் எங்க பார்த்தோம்...”

காலையில் அவர்கள் காப்பி குடித்துவிட்டு வைத்து சென்ற கப்புகளை சேகரித்தாள் ஜிஷ்னா. வண்டியை ஸ்டான்ட் போட்டு சாவியை எடுத்து உள்ளே வந்த ஜேஷிடம் "சாப்பிட்டியா?" என்றுக் கேட்டாள்.

"பிரண்ட்ஸ் கூட போய் சாப்பிடுவேன். நீ சீக்கிரம் வா"

"நீ சாப்பிடுற லட்சணம் எனக்கும் தெரியும்... இரு தோச ஊத்துறேன். இப்பதான் நான் சாப்டேன்... கல்லு சூடா இருக்கு" என்று கூறியவளிடம் "ஊத்து ஊத்து..." என்றவன் அங்கிருந்த ஒரு தினசரியை கையில் எடுத்தான்.

"உனக்கு கையில எல்லாம் கொண்டு வந்து குடுத்து சேவகம் பண்ண முடியாது. எந்திரிச்சு வா" என்றுக் கூறி ஜிஷ்னா முன்னே செல்ல அவளை தொடர்ந்தான் ஜேஷ்.

கிச்செனுள் சென்றதும் மேடை மேல் இருந்த பாத்திரங்களை நகர்த்தி மேடையை சுத்தம் செய்து "உக்காரு... உங்க வீட்டுல இப்படிதான உகாருற?" என்றாள் ஜிஷ்னா.

"நீ பண்ணுறது எப்படி தெரியுமா இருக்கு... ரோடுல போறவன கூப்பிட்டு வெச்சு விருந்துப் போடுறது... பாயாசம் இல்லையான்னுக் கேட்டா மட்டும் கோவப்படுறது..."

"என்னது?" என்றுப் புருவத்தை சுருக்கியவளிடம் "ஒண்ணும் இல்ல..." என்றான் ஜேஷ்.

சிரித்துக் கொண்டே மேடையில் ஏறி அமர்ந்தவன் அதே வேகத்தில் இறங்கி "இரு... ஒரு முக்கியமான வேல இருக்கு..." என்றுக் கூறி அங்கிருந்த ஒரு டப்பாவை திறந்துப் பார்த்தான்.

"என்னடா பாக்குற?"

"உங்கம்மா இந்த ஜூஸ் பவுடர் தான எனக்கு கலக்கிக் குடுக்குறாங்க? இந்த மாதிரி எத்தன டப்பா இருக்கு ஜிஷ்னா? இது எனக்காகவே வாங்கி வெச்சதா?"

"டேய் அடங்க மாட்டியா நீ?" என்றுக் கூறி சிரித்துக் கொண்டே தோசை ஊற்ற ஆரம்பித்தாள் ஜிஷ்னா.

டைனிங் ஹாலிற்கு சென்று அங்கிருந்த பிரிட்ஜை திறந்து ஜூஸ் பாட்டிலை கையில் எடுத்து "இது தீர தீர கலக்கி வெச்சுடுவாங்களா?" என்றுக் கேட்டான்.

"ஐயோ நீ இப்போ வரப் போறியா இல்லையா? என்னை சீக்கிரம் கிளம்ப சொல்லிட்டு இப்போ நீதான் லேட் பண்ணுற... பிரிட்ஜ்குள்ள சட்னி இருக்கு ஜேஷ். இப்போதான் உள்ள வெச்சேன். எடுத்துட்டு வா. சாம்பார் சூடு பண்ணிட்டேன்"

அதன் பின் மேடையில் அமர்ந்து தோசைகளை விழுங்கினான் ஜேஷ். வீட்டை பூட்டும்போது அவளையேப் பார்த்துக் கொண்டிருந்தவன் பைக்கில் செல்லும்போது "ஜிஷ்னா" என்று அழைத்தான்.

"என்னடா?" என்றுக் கேட்டவளிடம் "இல்ல வேணாம்... ஒண்ணும் இல்ல" என்றான்.

"இப்போ நீ சொல்லப் போறியா இல்லையா? எப்போப் பாரு ஒண்ணும் இல்ல ஒண்ணும் இல்ல..."

"சொல்லுவேன்... ஆனா சொன்னா திட்டக் கூடாது..."

ஜிஷ்னா அமைதியாக இருக்க "எனக்கு இப்படியே லைப் புல்லா நீ சமச்சு தருவியா?" என்றுக் கேட்டான்.

"ஜேஷ் ப்ளீஸ் இப்படி பேசாதன்னு எத்தன..."

"சரி சரி நிறுத்து... ஆரம்பிக்காத காலங்காத்தால..." என்றான் எரிச்சலாக. "பேசுறதெல்லாம் நீ... என்ன திட்டுறியா?"

"சரிடி எதுவும் சொல்லல..." என்று அமைதியானான் ஜேஷ்.

வெகு நாட்கள் ஆகிவிட்டதால் இரவு வினோத்திற்கும் ராஜாவிற்கும் கான்பெரென்ஸ் கால் செய்தான் ஜேஷ். அன்று நடந்ததை அப்படியே அவர்களிடம் கூறினான்.

"டேய் பைக்ல கூட்டிட்டுப் போறேன்னு சொன்ன... அப்பறம் கிப்ட் வாங்கிக் குடுத்தன்னைக்கு ஓவரா பேசியிருக்க... இப்போ என்னடான்னா வீட்டுலப் போய் சாப்பிட்டுற அளவுக்கு வந்துட்ட..." என்றான் வினோத்.

"பாத்துடா... ஜிஷ்னா கோவப்பட்டா என்னடா பண்ணுவ?" என்றுக் கேட்டான் ராஜா.

"இல்லடா... அவளுக்கு என்ன புடிக்கும்னு தெரியும்... அவளால கோவப்பட்டு என்ன விட்டுப் போக முடியாது..." உறுதியாகக் கூறினான் ஜேஷ்.

"மச்சான் நம்ம எல்லா விதத்துலயும் யோசிக்கணும்டா...விட்டுட்டுப் போக முடியாது ஓகே... செருப்பால அடிச்சா என்னடா பண்ணுவ?" என்று ராஜா கேட்க வினோதும் ராஜாவும் பெரிதாக சிரிக்க ஆரம்பித்தனர்.

"உங்ககிட்ட போய் சொன்னேன் பாரு... வெச்சுத் தொலைங்கடா நாய்ங்களா..." என்றுக் கோபமாக கூறினான் ஜேஷ். அதற்கும் அவர்கள் சிரிக்கவும் கடுப்பான ஜேஷ் காலை கட் செய்தான்.

மூன்றாம் ஆண்டின் முதல் செமஸ்டர் பாதியில் கல்லூரியில் அவர்கள் டிபார்ட்மெண்டின் சிம்போசியம் நடப்பதாக இருந்தது. அதற்கு புடவை எடுக்க வேண்டும் என்று ஜிஷ்னா அவளது தோழிகளிடம் கேட்டாள்.

ஆனால் அவர்கள் புடவை எடுக்க போவதாகக் கூறிய அன்று ஜிஷ்னாவின் வீட்டில் சில உறவினர்கள் வருவதால் அவளால் அவர்களுடன் செல்ல முடியவில்லை.

அதன் பின் ஸ்வப்னாவுடன் வார இறுதியில் சென்று வாங்க வேண்டுமானால் அதற்கு ப்ளௌஸ் தைக்க நேரம் இருக்காதென்று மதிய உணவு இடைவேளையின் போது ஜேஷிடம் வந்து நின்றாள் ஜிஷ்னா.

"சிம்போசியம் வருது ஜேஷ். எனக்கு சாரீ வாங்கணும்... நம்ம கிளாஸ்ல எல்லாரும் வாங்கிட்டாங்க… முந்தாநேத்தே..."

"சரி எல்லாரும் வாங்கிட்டாங்கன்னா நீயும் வாங்கு... இத எதுக்கு என்கிட்ட சொல்லுற?"

அவனுக்கும் தெரிந்திருந்தது... அவள் எதற்காக அவனிடம் இதை கூறுகிறாள் என்று. இருப்பினும் அதை அவளேக் கேட்க வேண்டும் என்று ஒரு ஆசை... தன்னிடம் சரிவர பேசக் கூட மறுப்பவள் தன்னிடம் உதவி கேட்பாளா என்ற ஒரு எதிர்ப்பார்ப்பு...

"நீ கூட்டிட்டுப் போறியா? ப்ளீஸ். அப்பா ஊருல இல்ல... அம்மாகூட போகணும்னா வீக்கெண்ட் தான் போக முடியும்..."

கேட்டுவிட்டாள்... அவளின் தாய் தந்தைக்கு பின் தன்னிடம் தான் உதவிக் கேட்கிறாள் என்ற பூரிப்பு ஜேஷின் மனம் முழுதும் நிறைந்திருந்தது. இருப்பினும் அவளை சீண்டிப் பார்க்க எண்ணினான்.

"போடி... நான் என்ன உனக்கு வேலைக்காரனா? ஏதோ பத்தரமா காலேஜ் கூட்டிட்டு வந்துக் கூட்டிட்டு போனா என்னமோ உனக்கு புல் டைம் டிரைவர் ஆக்கிடுவ போல..."

"டேய் டேய் ப்ளீஸ்டா... நான் வேற யார்கூட போக முடியும்... பிரண்ட்ஸ் எல்லாம் போன அன்னைக்கு வீட்டுல கெஸ்ட் வந்துட்டாங்க ஜேஷ். இல்லன்னா அன்னைக்கே போய் வாங்கி இருப்பேன்... கூட்டிட்டுப் போயேன்..."

"முடியாது ஜிஷ்னா" என்றுக் கறாராய் கூறியவனை ஒரு நொடி அமைதியாகப் பார்த்தவள் "சரி நான் ரூபிம்மாவ கேக்குறேன். அவங்க என்ன கார்ல கூட்டிட்டு போவாங்க... எனக்கு ஐஸ்க்ரீம் வாங்கித் தருவாங்க... புடவை செலக்ட் பண்ணிக் குடுப்பாங்க..." என்றுப் பெருமையாகக் கூறி போனை கையில் எடுத்தாள்.

“அம்மாவா? இவ கூப்பிட்டா அவங்களும் என்ன பத்தி கொஞ்சம்கூட யோசிக்காம உடனே சரின்னு சொல்லி இவளோட கிளம்பிடுவாங்களே... ஓவரா பேசிட்டோம் போலயே...”

"சரி சரி... கூட்டிட்டுப் போறேன்... ஈவ்னிங் போகலாம்... இனி இப்படி என்ன அலையைவிடாத... எனக்கு இந்த டிரஸ் எடுக்கப் போறதெல்லாம் புடிக்காது..." சலித்துக் கொள்வது போல் கூறினான் ஜேஷ்.

"பர்த்டே அன்னைக்கு யாரோ டிரஸ் எடுக்க சொல்லி... கூட்டிட்டுப் போய்... டிரஸ் செலக்ட் பண்ணி..." என்று ராகம் பாடினாள் ஜிஷ்னா.

"உன்ன கூட்டிட்டு போகணுமா வேணாமா?" என்று ஜேஷ் கேட்க "சரி சரி சரி... போலாம் போலாம்..." என்றுக் கூறி சிரித்து விட்டு சென்றாள் ஜிஷ்னா.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top