• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

நகராத தூரங்கள்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
20

புடவை கடைக்குள் நுழைந்து டிசைனர் சாரீஸ் இருக்கும் தளத்தை ஜிஷ்னா கேட்கவும் "பட்டு புடவை எந்த ப்ளோர்?" என்று வேகமாக கேட்டான் ஜேஷ்.

"இரண்டாவது ப்ளோர்" என்று கடை சிப்பந்தி கூறியதும் லிப்டின் அருகில் சென்றான். அவன் பின்னே சென்ற ஜிஷ்னா "இப்போ யாருக்கு பட்டு புடவை எடுக்கப் போறோம்?" என்றுக் கேட்டாள்.

"முதல் தடவ புடவை எடுக்குற... பட்டு புடவை எடு ஜிஷ்னா... பட்டு புடவைலயே எவ்வளவோ சிம்பிள் சாரீஸ் இருக்கு... சிம்போசியம்கும் கட்ட நல்லா இருக்கும்... எதுக்கு நெறைய செலவு பண்ணி டிசைனர் சாரீ எடுக்கப் போற?" என்று கேட்டு லிப்டினுள் நுழைந்தான் ஜேஷ்.

"ம்ம் அதுவும் சரிதான்..."

ஜிஷ்னா புடவை பார்க்க ஆரம்பித்ததும் ஜேஷ் அங்குள்ள அனைத்து புடவைகளையும் நடந்து சென்று வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான். பல வண்ணங்களில் பல டிசைன்களில் அழகழகாய் நிறையப் புடவைகள் இருந்தன.

அவற்றுள் ஒன்று அவனுக்கு மிகவும் பிடித்துவிட டிஸ்ப்ளேயில் இருந்த புடவையை காண்பித்து "அந்த புடவை எவ்வளவு வரும்?" என்று கேட்டான். "அது கல்யாண பட்டு தம்பி... 22 ஆயிரம் ஆகும்..." என்றார் கடை சிப்பந்தி.

ஜிஷ்னா 3 புடவைகளை தேர்வு செய்து ஜேஷை அழைத்தாள். அவன் அருகில் வந்ததும் "இது மூணும் எனக்குப் பிடிச்சுருக்கு... ஆனா இதுல எது எடுக்கன்னு தெரியல. நீ சொல்லு எது எடுக்கட்டும்..." என்றுக் கேட்டாள்.

“எப்போ பாரு இதையே சொல்லு...” என்றவன் வேறு ஒரு புடவையை காட்டி "இது நல்லா இருக்கு. இது பில் போடுங்க..." என்று எடுத்து கொடுத்தான்.

"என்கிட்ட அவ்வளவு பணம் இல்ல ஜேஷ்... அந்தப் புடவை கொஞ்சம் விலை கூட... நீ இந்த மூணுல எதாவது ஒண்ணு எடு..."

"உன்கிட்ட யாரும் காசு கேக்கல. பேசாம இருக்கியா?" என்று கூறி திரும்பினான் ஜேஷ். ஜிஷ்னா ஏதோ கூற வாயை திறக்கும் முன் அவளுக்கு புடவைகள் எடுத்து காண்பித்தவர் "நீங்க அங்கப் பார்த்த புடவையும் எடுத்து காமிக்க சொல்லவா? கல்யாண பட்டு... கட்டிக்க போறவங்க பாக்கட்டுமே...” என்றுக் கேட்டார்.

அவர் கேட்டதில் அதிர்ச்சியாகி அவரை திரும்பிப் பார்த்தாள் ஜிஷ்னா. "ம்ம் எடுத்துட்டு வந்துக் காமிங்க..." என்றான் ஜேஷ்.

"என்ன பண்ணுற ஜேஷ்? அவங்கக்கிட்ட என்ன சொல்லி வெச்சிருக்க?"

அதற்குள் அந்த புடவையை அவர் பிரித்து காண்பிக்கவும் ஜிஷ்ணாவிற்கு பதில் சொல்லுவதை விடுத்து அதை பார்ப்பதில் மும்முரமானான் ஜேஷ்.

அந்த புடவையை பார்த்த ஜிஷ்னாவிற்கும் அது பிடித்து தான் இருந்தது. "இது உனக்கு ஓகே தான? இந்த சாரீ பார்த்து வெச்சுக்கோ" என்று அவளிடம் கூறியவன் “இது எல்லாம் வீட்டுல தான் வந்து பார்த்து டிசைட் பண்ணணும். நீங்க அந்த புடவைக்கு மட்டும் பில் போடுங்க" என்றுக் கூறி எழுந்தான் ஜேஷ்.

பில் போட போகும்போதும் "என்கிட்ட இவ்வளவு காசு இல்ல ஜேஷ்..." என்று ஜிஷ்னா கூறியதை காதில் வாங்கிக் கொள்ளாமல் அவள் கையிலிருந்த பணத்தை வாங்கி மீதி பணத்தை அவன் எடுத்துக் கட்டினான்.

பைக்கில் செல்லும்போது அவனிடம் பொரியத் துவங்கினாள் ஜிஷ்னா. "உன் மனசுல என்ன தான் நெனச்சுட்டு இருக்க? கடைல என்ன சொல்லி அந்த புடவை பார்த்த?"

"நான் ஏதோ சும்மா அந்த சைட் போய் பார்த்தேன்... புடவை நல்லா இருந்துது… எவ்வளவுன்னுக் கேட்டேன்... அது கல்யாணத்துக்கு கட்டுறதுன்னு கூட எனக்கு தெரியாது... அவரா உன்ன என் வுட்பீ நு நெனச்சா அதுக்கு நான் என்ன பண்ண முடியும்...

நான் ‘இல்ல அவ என் பிரண்ட்’ னு சொன்னா ஒரு மாதிரி பார்க்க மாட்டாங்க? அதான் நான் எதுவும் சொல்லல... இதுக்கு தான் நான் உன் கூட வரலன்னு சொன்னேன். எதுக்கெடுத்தாலும் கோவப்பட வேண்டியது" என்று பதிலுக்கு பொரிந்து தள்ளினான் ஜேஷ்.

அவன் இவ்வாறு கோபம் கொள்வான் என்று எதிர்ப்பார்க்காத ஜிஷ்னா அமைதியானாள். அவள் வீடு வந்ததும் "சாரி" என்றுக் கூறி இறங்கி சென்றாள் ஜிஷ்னா. அவள் சென்று கேட்டை மூடும் வரைப் பொறுமையாகக் காத்திருந்தான் ஜேஷ்.

"ஓகே நான் கெளம்பறேன்" என்றான். அவள் சரி என்று தலையை ஆட்டி உள்ளே செல்ல திரும்பவும் "ஜிஷ்னா" என்று அழைத்தான் ஜேஷ்.

அவள் திரும்பியதும் "அந்த சாரீ புடிச்சுருந்தா சொல்லு... வாங்கி தரேன்..." என்றுக் கூறியவன் வேகமாக சென்று விட்டான்.

அவன் கூறியதைக் கேட்டவளுக்கு கோபம் வந்தாலும் சிரிப்பும் வந்தது. அங்கேயே சிறிது நேரம் நின்றவள் பின் வீட்டினுள் சென்றாள். ஸ்வப்னாவிடம் புடவையை காண்பித்தாள் ஜிஷ்னா.

"உன்ன 4000கு புடவை எடுன்னு அனுப்பினா 5700கு எடுத்துட்டு வந்திருக்க? காசு யாரு அவன் குடுத்தானா?"

"ஆமா... சும்மா கத்தாதம்மா... அங்க இது தான் நல்லா இருந்துது... மீதி காச குடு அவன்கிட்ட குடுத்துடறேன்... அவன் ஒண்ணும் எனக்கு புடவை வாங்கித் தரல..." என்று கூறி விட்டு வேகமாக புடவையை அவர் கையிலிருந்து பிடுங்கி தன் அறைக்குள் சென்றாள் ஜிஷ்னா.

"இவ்வளவு நாள் நல்லா இருந்தாங்க... இப்போ திரும்ப ஆரம்பிச்சுட்டாங்க..." என்று நினைத்து நொந்துப் போனாள்.

அன்று இரவு வீட்டிற்கு வந்த பிரேம் "ஜேஷ் வா எங்கயாவது ஹோட்டல் போய் சாப்பிட்டு வரலாம்... அம்மாவ கிளம்ப சொல்லுறேன்... ரொம்ப நாள் ஆச்சு...” என்று அவனை அழைத்தார். “வேணாம் பா...” என்றவனின் முகம் சோர்ந்துக் காணப்பட்டது.

"ஏன்டா என்னாச்சு?"

"இல்ல பா... ஒரே டென்ஷனா இருக்கு... ஜாலியா இருக்கப்போ ஒரு நாள் போவோம்... இப்போ வேணாம்" என்றுக் கூறி அமைதியாக அமர்ந்திருந்தான். அதற்கு மேல் பிரேமும் எதுவும் கேட்கவில்லை.

சிம்போசியம் அன்று காலை எப்போதும் போல் ஜிஷ்னாவின் வீட்டு முன் ஜேஷ் வந்து நிற்க வீட்டினுள் இருந்து புடவையில் வந்தவளைப் பார்த்தவன் விழி விரித்து அவளையே பார்த்தான்.

"சிரிச்சே கொல்லுறாளே... ஏற்கனவே கன்னத்துல குழி... இதுல சாரீ வேற... ஷப்பா..."

அருகில் வந்த ஜிஷ்னா "ஜேஷ் என்ன இப்படிப் பார்க்குற? நல்லா இருக்கா? நல்லா இல்லையா?" ஒரு முறை குனிந்து புடவையை பார்த்தாள் ஜிஷ்னா.

"நல்லா தான் இருக்கு. உக்காரு. இன்னைக்கு எத்தன பேர நான் சமாளிக்கணுமோ?" பைக்கை ஸ்டார்ட் செய்தான் ஜேஷ்.

கல்லூரி வரை அமைதியாக வந்தவன் ஜிஷ்னா இறங்கியதும் "சொல்லக் கூடாதுன்னு தான் நெனச்சேன். ஆனா உன்ன இப்படி பார்த்ததுக்கு அப்பறம் என்னால சொல்லாம இருக்க முடியல...

நீ அடிச்சாலும், திட்டுனாலும், கத்துனாலும், கோவப்பட்டாலும் பரவாயில்ல... ஐ லவ் யூ..." என்றுக் கூறி வண்டியை வேகமாக ரெயிஸ் செய்து பார்க் செய்ய சென்றான் ஜேஷ்.

சிறிது தூரம் சென்றதும் கண்ணாடியில் அவளின் அதிர்ந்த முகத்தை பார்த்து சிரித்துக் கொண்டான். “இத தான்டி எதிர்ப்பார்த்தேன்...”

ஜேஷ் இவ்வாறு கூறியதும் அன்று அவன் கூறிய "அந்தப் புடவை பிடிச்சுருந்தா சொல்லு வாங்கி தரேன்" என்ற வார்த்தைகள் ஞாபகம் வந்து அவளின் கோபம் இரட்டிப்பானது.

அங்கு வந்த பெண்ணொருத்தி "ஹே சாரீ சூப்பரா இருக்கு டி... யாரு செலெக்ஷன்?" என்றுக் கேட்டாள்.

"சொல்லுறேன் சொல்லுறேன் வா..." என்று அவளை இழுத்து சென்றாள் ஜிஷ்னா. அன்று முழுவதும் பல காரணங்களை சொல்லி ஜிஷ்னாவையே சுத்தி வந்தான் ஜேஷ்.

அவள் ரிஜிஸ்ட்ரேஷன் கமிட்டியில் அமர்ந்திருக்க “ஜிஷ்னா பென் இருக்கா?” “ஜிஷ்னா பேப்பர் தீந்துடுச்சுன்னு சொன்னியே... இந்தா பேப்பர்” “ஜிஷ்னா என் எரேசர் அழிக்கவே மாட்டேங்குது... உன்னோடது குடேன்...”

“ஜிஷ்னா இவங்க பேப்பர் ப்ரெசண்ட் பண்ணணுமாம்... பேரு ரிஜிஸ்டர் பண்ணிக்கோ...” “ஜிஷ்னா நீ இன்னும் சாப்பிடலல்ல... வா சாப்பிடலாம்...” என்று ஆயிரம் ஜிஷ்னா போட்டான்.

அருகில் பலர் இருக்க, அனைவர் முன்னிலையிலும் கோபத்தை காட்ட முடியாமல் முறைத்துக் கொண்டே இருந்தாள் ஜிஷ்னா. அவள் படும் அவஸ்தையை ரசித்து சிரித்துக் கொண்டிருந்தான் ஜேஷ்.

மாலை பைக் ஸ்டாண்ட் அருகில் வந்த ஜிஷ்னா ஜேஷிடம் "நான் என் பிரண்ட்ஸ்கூட கெளம்பறேன். நீ போ" என்றுக் கோபமாக கூறினான்.

அவள் கூறுவதை சிரிப்புடன் பைக் பெட்ரோல் டாங்கில் தாளம் போட்டுக் கொண்டே கேட்ட ஜேஷ் சிறிது நேரம் முன்பு அவன் செய்து வைத்த ஏற்பாட்டை எண்ணிப் பார்த்தான்.

தங்கள் கிளாஸ் பெண்கள் அமர்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருந்த இடத்திற்கு சென்றான் ஜேஷ். "ஹாய் நான் கொஞ்சம் வெளியில போகணும். எனக்கு சில திங்க்ஸ் வாங்கணும்.

அதனால ஊர் சுத்துற பிளான் இருந்தா அத நாளைக்கு வெச்சுக்கோங்க ப்ளீஸ். அப்பறம் நீங்களும் கூப்பிட்டா ஜிஷ்னா யாருக்கூட போறதுன்னு கன்ப்யூஸ் ஆவா..." இப்படி சொன்னால் ஜிஷ்னாவை எப்படியும் பேசி அவர்களே தன்னுடன் அனுப்பி வைத்து விடுவார்கள் என்று நன்கு அறிவான் ஜேஷ்.

ஜேஷிடம் பேசிய ஜிஷ்னா திரும்பி தன் தோழிகளிடம் சென்றாள். அவர்களோ "நீ ஜேஷ் கூடவே போடி... நம்ம நாளைக்கு வெளியிலப் போகலாம்" என்றனர். அவர்கள் அவ்வாறு கூறியதும் திரும்பி ஜேஷை பார்த்தாள்.

அவன் முகத்தில் எந்த உணர்ச்சியையும் காட்டாமல் வண்டியை ஸ்டார்ட் செய்தான். அவனை முறைத்துவிட்டு தன் தோழிகளிடம் திரும்பியவள் "சரி நான் கெளம்பறேன்" என்றாள்.

"ஜேஷ் சொன்னது சரி தான்டி. இப்போ நம்ம இவள கூப்பிட்டிருந்தா பாவம் ரொம்ப யோசிச்சுருப்பா... நல்லா தான் புரிஞ்சு வெச்சிருக்கான் இவள..." என்று ஆளுக்கு ஒன்றை கூறி தங்களுக்குள் சிரித்தனர். அதை கண்ட ஜிஷ்னா இன்னும் கடுப்பாகி வேகமாக சென்று பைக்கில் அமர்ந்தாள்.

"டேய் அவங்க எதுக்கு இப்போ சிரிச்சாங்க? அவங்கக்கிட்ட என்ன சொன்ன? நீ ஏன் இப்படி பண்ணுற? பேச மாட்டேன்னு சொல்லிட்டு எதுக்கு அத பத்தியேப் பேசுற? உனகெல்லாம் ஒரு தடவ சொன்னாப் புரியாதா?”

"அப்படி எதாவது சொல்லணும்ணா உன்கிட்ட நேரடியா சொல்லிடுவேன் ஜிஷ்னா. காலையில சொன்ன மாதிரி... அடுத்தவங்கள்ட சொல்லணும்னு எந்த அவசியமும் எனக்கில்ல"

ஜிஷ்னாவின் வீடு வந்ததும் ஜேஷும் இறங்கி அவள் பின்னால் வீட்டினுள் வந்தான். "இனி நான் உன்கிட்ட பேச மாட்டேன்... எதுவா இருந்தாலும் நான் ஸ்வப்னாகிட்ட டீல் பண்ணிக்குறேன்"

"டேய் டேய் என்ன விளையாடுறியா?" அவன் பின்னால் சென்றாள் ஜிஷ்னா. ஹால் சோபாவில் அமர்ந்து "ஆன்ட்டி" என்றுக் கத்தி கூப்பிட்டான்.

கையில் ஜூஸுடன் வந்தவரை பார்த்ததும் "அடியேய்... உங்கம்மா என்ன... என் வண்டி சத்தம் கேட்டதும் ஜூஸ் கலக்க ஆரம்பிச்சுடுவாங்களா? கூப்பிட்ட வேகத்துல ஜூஸோட வராங்க?" என்று அருகில் பதட்டத்துடன் அமர்ந்திருந்த ஜிஷ்னாவின் காதை கடித்தான்.

ஜூஸை நீட்டிய ஸ்வப்னாவின் கையிலிருந்து அதை வாங்கி எதிரில் இருந்த டேபிளில் வைத்த ஜேஷ் "என்ன ஆன்ட்டி பேசவே மாட்டேங்குறீங்க... அங்கிள் தான் எப்பவும் எனக்கிட்ட பேசுறாங்க. நீங்க ஜூஸ் மட்டும் குடுத்துட்டு உள்ள போயிடுறீங்க... உக்காருங்க ஆன்ட்டி பேசுவோம்" என்றான் உற்சாகமாக.

"நான் என்னப்பா பேச? நீ ஜூஸ் குடி" என்றுக் கூறி கிச்செனுள் சென்றார் ஸ்வப்னா. "இவனுக்கு என்ன வந்துது இப்போ? வந்தோமா ஜூஸ் குடிச்சோமான்னு இல்லாம... இப்போ எதுக்கு என்ன வேற உக்கார வெச்சு பேச சொல்லுறான்... எல்லாம் ஜிஷ்னா அப்பா குடுக்குற இடம்... ச்சை..."

ஸ்வப்னா உள்ளே சென்றதும் "இந்த வாட்டி தப்பிச்சுட்ட... அடுத்த தடவ ஸ்வப்னாவ உக்கார வெச்சுப் பேசுறேனா இல்லையாப் பாரு..." என்று ஜிஷ்னாவிடம் மிரட்டி விட்டு எழுந்து சென்றான் ஜேஷ்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
21

ஜேஷ் புறப்பட்டு சிறிது நேரம் கழித்து வந்த ஹரீஷிடம் குற்றப் பத்திரிகை வாசித்து வாக்குவாதத்தை துவங்கினார் ஸ்வப்னா.

"அவன் எதுக்கு என்னைய கூப்பிட்டு பேச சொல்லுறான்? எல்லாம் நீங்க குடுக்கற இடம் தான்"

"ம்ம்கும்... ஆரம்பிச்சுட்டாளா உங்க அம்மா? அவன் வந்தாலே இவ பிரச்சன பண்ண ஆரம்பிச்சுடுவாளே... அப்படி என்ன தான் இவளுக்கு அவன் மேல கடுப்போ?"

ஜிஷ்னா என்ன சொல்வதென்றுத் தெரியாமல் இருவரையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தாள். பின் மொபைலை எடுத்துக் கொண்டு மாடிக்கு சென்றாள்.

உள்ள பிரச்சனை எல்லாம் போதாதென்று அவன் இப்படி புதிது புதியதாய் பிரச்சனைகளை இழுத்ஹு வைக்கிறானே என்றக் கோபம் அவளுக்கு. ஜேஷை அழைத்தவள் அவன் எடுத்ததும் காத்த ஆரம்பித்தாள்.

"நீ சும்மாவே இருக்க மாட்டியா? வீட்டுல அம்மா கத்திக்கிட்டு இருக்காங்க..."

"அப்போ நீ என்கிட்ட ஒழுங்காப் பேசு... இன்னைக்கு நான் உங்க அம்மாக்கிட்ட வேற எதுவும் பேசாம வந்ததே பெரிய விஷயம்"

ஜேஷும் ஜிஷ்னாவும் போனில் பேசிக் கொண்டிருந்த நேரம் கீழே ஸ்வப்னா ஹரீஷிடம் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தார்.

"அவன் கூட்டிட்டு போய் புடவை வாங்கி குடுத்துருக்கான் தெரியுமா?"

"லூசு மாதிரி பேசாத... ஜிஷ்னா சாரீ எடுக்க அவன் துணைக்கு கடைக்கு கூட்டிட்டுப் போனான்... அவ்வளவுதான்"

"சாரீக்கு ஆன மீதி காசு அவன் குடுத்துருக்கான்"

"நல்ல புடவையா செலக்ட் பண்ணி அதுக்கு காசு இல்லாததால அவள திருப்பி கூட்டிட்டு வராம அந்த காசையும் குடுத்திருக்கானே... யாரா இருந்தாலும் இத தான பண்ணி இருப்பாங்க...

அந்த காச தான் அடுத்த நாளே ஜிஷ்னா திருப்பி குடுத்துட்டால்ல... எனக்கு ஜேஷ பிடிச்சுருக்கு ஸ்வப்னா... ரொம்பவே பிடிச்சிருக்கு... ப்ரேம்கிட்ட என்னைக்கோ ஜிஷ்னாவ ஜேஷுக்கு கட்டிக் குடுக்க சம்மதமான்னு கேட்டுட்டேன்..."

"என்னது? கட்டிக் குடுக்கவா? என்கிட்ட எதுவும் கேக்காம அது எப்படி நீங்க சொல்லலாம்? பொண்ண பெத்தவ நான்..."

"சும்மா சினிமா டயலாக் பேசிட்டு திரிஞ்சன்னா கடுப்பாகிடுவேன்… அந்த பையனுக்கு என்னடி? அவன ஏன் உனக்குப் பிடிக்கல?"

"எனக்கு பிடிக்கல... அவ்வளவுதான்" முடிவாகக் கூறி எழுந்து சென்றார் ஸ்வப்னா.

அதன் பின் வந்த நாட்களில் ஜிஷ்னா ஜேஷுடன் பேசுவது வெகுவாகக் குறைந்தது. அவனை முறைப்பதையே முழு நேர வேலையாக வைத்திருந்தாள். அவள் முறைப்பதை பார்த்து சிரித்து ஜிஷ்னாவை மேலும் கடுப்பேத்தினான் ஜேஷ்.

ஒரு நாள் மாலை கல்லூரியில் இருந்துக் கிளம்பிய ஜேஷ் ஜிஷ்னாவின் வீட்டிற்கு செல்லாமல் தன் வீடு இருக்கும் திசையில் சென்றான். அதை உணர்ந்த ஜிஷ்னா "எங்க போற?" என்று கேட்டாள்.

"ரூபிம்மா உன்ன பாக்கணும்னு சொன்னாங்க" என்று மட்டும் கூறி அமைதியானான்.

"வீட்டுல அம்மா தேடுவாங்க..."

"நம்ம காலேஜூலேருந்து கெளம்பும்போதே அங்கிள்கிட்ட போன் பண்ணி சொல்லிட்டேன்"

"அதான... அது எப்படி தான் எல்லாத்தையும் அப்பாக்கிட்ட சொல்லிடுறானோ?" என்று யோசித்துக் கொண்டிருந்தவளை "எறங்கு" என்ற ஜெஷின் குரல் கலைத்தது. ஜேஷ் வீட்டின் முன் பைக் நிற்பதை கண்டவள் இறங்கி வேகமாக உள்ளே சென்றாள்.

ஹாலில் அமர்ந்திருந்த பிரேமிடம் வந்தவள் "அங்கிள் எப்படி இருக்கீங்க?" என்று கேட்டாள்.

"நல்லா இருக்கேன் மா. காலேஜ் எப்படி போகுது?"

"ஐயோ காலேஜ் பத்தி எதுக்கு அங்கிள் ஞாபகப்படுத்துறீங்க? ஆன்ட்டி எங்க?"

அதை கேட்டு சிரித்த பிரேம் "நீயும் ஜேஷ் மாதிரி பேச ஆரம்பிச்சுட்ட... உள்ள இருக்கா... போடா..." என்றார்.

கிச்செனுள் சென்று "ஹாய் ஆன்ட்டி" என்றுக் கூறி மேடை மேல் ஏறி அமர்ந்தாள் ஜிஷ்னா.

"வாடா... எங்க உன்ன வீட்டுப் பக்கம் ஆளையே காணும்? போன்ல பேசுறதோட சரி... டீ குடிக்குறியா? காபியா?"

"டீ போடுங்க ஆன்ட்டி" அங்கிருந்த அப்பிளை எடுத்து சாப்பிட ஆரம்பித்தாள் ஜிஷ்னா. ஜேஷ் கிட்செனுள் வந்ததும் அமைதியாக தலையைக் குனிந்து அமர்ந்திருந்தாள்.

"அடிக்கடி வீட்டுக்கு கூட்டிட்டு வாடா... நீ மட்டும் டெய்லி பார்த்தா போதுமா? எங்க கண்ணுலயும் அப்பப்ப காட்டு..."

"நானா கூட்டிட்டு வர மாட்டேன்னு சொல்லுறேன்?" என்றுக் கூறி ஜிஷ்னாவை பார்த்தான் ஜேஷ். உடனே இறங்கி வேகமாக ஹாலிற்கு சென்றாள் ஜிஷ்னா. அவள் பின்னால் ரூபாவும் ஜேஷும் ஹாலிற்கு வந்தனர்.

ஜிஷ்னா சென்று பிரேமின் அருகில் அமைதியாக அமர்ந்தாள். ரூபா எல்லோருக்கும் டீ கொடுத்து விட்டு அமர "என்னடா ரெண்டு பேருக்கும் ஏதாவது சண்டையா?" என்றுக் கேட்டார் பிரேம்.

"அதெல்லாம் இல்ல அங்கிள்" என்றுக் கூறி டீ குடிக்க ஆரம்பித்தாள் ஜிஷ்னா.

அவள் தலை குனிந்து அமர்ந்திருப்பதை பார்த்த ரூபா "என்னடா நாங்க எதுவும் சமாதானம் பண்ணணுமா? என்ன சண்ட?" என்று அருகில் அமர்ந்திருந்த ஜேஷிற்கு மட்டும் கேட்கும் படி குரலை தாழ்த்தி கேட்டார்.

"என்னடா?" என்றுக் கண்களால் கேட்டார் பிரேம். "சும்மா" என்று இருவருக்கும் கண்ணை காட்டியவன் "நான் பார்த்துக்குறேன்" என்று கண்ணை மூடி திறந்து கூறினான்.

அவன் அங்கு அமர்ந்திருந்தால் ஜிஷ்னா எதுவும் பேச மாட்டாள் என்றுணர்ந்து எழுந்து உள்ளே சென்றான் ஜேஷ். அவன் சென்றதும் பிரேமுடனும் ரூபாவுடனும் அரட்டை அடித்தாள் ஜிஷ்னா.

முதல் நாள் ரூபாவிடம் அவள் கூறிக் கொண்டிருந்த கல்லூரி கதையை அவள் பாதியில் இருந்துத் தொடர பிரேமும் அதைக் கேட்டுக் கொண்டிருந்தார்.

தன் அறைக்குள் வந்த ஜேஷ் வெளியே ஜிஷ்னா பேசுவதைக் கேட்டு சிரித்துக் கொண்டிருந்தான். “அவங்கக்கிட்ட மட்டும் இந்த வாய் அடி... என்கிட்டே பேசிடாத...”

நேரம் சென்றபோதிலும் ஜிஷ்னா நிறுத்துவதாய் தெரியவில்லை. “வாய மூடாம பேசு... ரூபிம்மா மட்டும் அப்படி என்ன ஸ்பெஷல்? போன்லயும் அவங்கக்கூட மட்டும் நல்லா அரட்ட அடிக்குற... இரு இதுக்கெல்லாம் சேத்து ஒரு நாள் உன்ன கவனிச்சுக்குறேன்...”

தான் சென்று அழைக்காவிட்டால் அவள் கிளம்ப மாட்டாள் என்றுத் தோன்ற சிறிது நேரம் கழித்து வெளியே வந்து "டைம் ஆயிடுச்சு ஜிஷ்னா... கெளம்பலாமா?" என்றுக் கேட்டான்.

மனமே இல்லாமல் பேச்சை பாதியில் நிறுத்தி “சரி நான் கிளம்புறேன்... “ என்று ரூபாவிடமும் ப்ரேமிடமும் விடைப்பெற்றாள் ஜிஷ்னா.

வண்டியில் செல்லும்போது "எதுக்கு என்ன சண்டைன்னு கேட்டாங்க? என்ன சொல்லி வெச்சிருக்க அவங்ககிட்ட?" என்று ஜேஷிடம் கேட்டாள்.

"நானெல்லாம் எதுவும் சொல்லலையே... நீ உம்முன்னு உக்காந்திருக்கறத பார்த்துட்டு அவங்களா கேக்குறாங்க... இதுக்கு தான் வீட்டுக்கு வந்தா ஒழுங்கா இருக்கணும்" என்று லேசாக திரும்பி அவளை பார்த்துக் கூறினான்.

"செய்யுறதெல்லாம் நீ செஞ்சுட்டு என்ன சொல்லுற? ஒழுங்கா வீட்டுல எறக்கி விட்டுட்டு போ. எனக்கு எல்லாம் தெரியும்..."

மூன்றாம் ஆண்டின் இறுதியில் கேம்பஸ் இண்டர்வ்யூ இருந்தது. செமெஸ்டர் எக்ஸாம், இண்டர்வ்யூ ப்ரிபரேஷன் என்று நாட்கள் வேகமாக நகர்ந்தன.

அவர்கள் கல்லூரிக்கு முதல் கம்பெனியும் வந்தது. முதலில் நடந்த aptitude test கொஞ்சம் கடினமானதாகவே இருந்தது. அதற்கான ரிசல்ட்டை அவர்கள் வாசித்தபோது பதட்டமாய் அமர்ந்திருந்தனர்.

ஜேஷ் ஜிஷ்னா இருவரின் பெயர்களும் அவர்கள் வாசித்த பெயர் பட்டியலில் இடம் பெற ஜிஷ்னா திரும்பி ஜெஷை பார்த்தாள். அவன் அருகில் இருந்த மாணவனின் வாழ்த்தைப் பெற்றுக் கொண்டிருந்தான்.

நேர்முகத் தேர்வுக்கு உள்ளே செல்லும் முன் ஜேஷ் ஜிஷ்னாவிடம் வந்து "ஆல் தி பெஸ்ட். தேவ இல்லாம டென்ஷன் ஆகாத" என்றுக் கூறி சென்றான்.

அவன் கூறியதும் கண்களை மூடித் திறந்தவள் நேர்முகக் காணலுக்காக உள்ளே சென்றாள். அவர்கள் கேட்ட கேள்விகள் எல்லாவற்றிற்கும் அவளுக்கு பதில் தெரிந்திருந்தது. தன்னம்பிக்கையுடன் விடைக் கூறினாள்.

ஜேஷிற்கு கேட்கப்பட்ட கேள்விகள் அனைத்தும் அவன் படிப்பு சார்ந்தவை. அவன் விரும்பிப் படித்தத் துறை என்பதால் எல்லாவற்றிற்கும் தெளிவாகவே பதில் கூறினான்.

முதல் கம்பெனியிலேயே இருவரும் செலக்ட் ஆகினர். இதில் மிகுந்த சந்தோஷம் அடைந்தது ஜேஷ் தான்.

ஜிஷ்னாவிடம் வந்தவன் "கன்க்ராட்ஸ்" என்றுக் கூறியதும் "கன்க்ராட்ஸ்" என்று பதிலுக்கு கூறினாள் ஜிஷ்னா.

"இனி ஆயுசு பூரா என் மூஞ்சியதான் பார்க்கப் போற"

"என்னது? என்ன சொன்ன?" என்று ஜிஷ்னா கோபமாகக் கேட்கவும் "இல்ல... பசங்க எல்லாம் செலக்ட் ஆகாம அங்க பீல் பண்ணிக்கிட்டு இருக்காங்க... நான் போய் அவங்கக் கூடப் பேசி அவங்கள தேத்துறேன்... போ பா... நீ போ போ..." என்றுக் கூறி நகர்ந்தான் ஜேஷ்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
22

பைனல் இயர் ஆரம்பிக்கும் முன்பு நண்பர்கள் சேர்ந்து ஒரு கெட் டுகெதர் ஏற்பாடு செய்தனர். நீண்ட நாட்களுக்குப் பிறகு உற்ற நண்பர்களை சந்திக்கப் போகும் சந்தோஷத்தில் இருந்த ஜேஷ் அணைத்து ஏற்பாடுகளையும் செய்தான்.

இருந்தாலும் ஏதோ ஒரு நெருடல் இருந்துக் கொண்டே இருக்க அவர்கள் சந்திக்க முடிவு செய்திருந்த தேதிக்கு இரண்டு நாள் முன்பு ஜிஷ்னாவிடம் ஸ்ருதியின் நம்பர் கேட்டான் ஜேஷ்.

"அவ நம்பர் எதுக்குடா கேக்குற? அதுவும் இத்தன நாள் கழிச்சு… இதுவரைக்கும் அவள பத்திப் பேசுனதுக் கூட கிடையாது..."

"அவளையும் கூப்பிட தான் ஜிஷ்னா. நானும் அவள அன்னைக்கு ரொம்ப கத்திட்டேன். நீ அவ கூட பேசிட்டு தான் இருக்கன்னுத் தெரியும். அதான் நானே அவள இன்வைட் பண்ணலாம்னு கேக்குறேன்"

"இங்க பாரு... நாளைக்கு ஏதாவது பிரச்சனைன்னா என் தலைய உருட்டக் கூடாது சொல்லிட்டேன்"

"நம்பர குடுடி. நான் பாத்துக்கறேன்... ரொம்ப பேசாத..."

ஜிஷ்னாவிடம் நம்பர் வாங்கியவன் உடனே ஸ்ருதிக்கு கால் செய்தான். "ஹலோ ஸ்ருதி... நான் ஜேஷ் பேசுறேன். எப்படி இருக்க?"

"ஜேஷ்... நல்லா இருக்கேன் ஜேஷ். நீ எப்படி இருக்க?"

"நான் நல்லா இருக்கேன். சாரி அன்னைக்கு ரொம்ப கத்திட்டேன். பசங்க எப்பயும் அப்படி தான்... காத்திடுவோம்... ஆனா அதுக்கப்பறம் எல்லாத்தையும் மறந்துடுவோம்... உனக்கு தோணுனத நீ டீசெண்டா சொன்ன... ஆனா நான் தான் எல்லார் முன்னாடியும் கத்திட்டேன்..."

"ச்ச இல்ல ஜேஷ்... நான் தான் தேவ இல்லாமக் கொழப்பிக்கிட்டு... லவ் பண்ணுறேன்னு சொல்லி... உன்னையும் கஷ்டப்படுத்தி... சாரி ஜேஷ்... அப்போ நீ என்ன அவாயிட் பண்ணிட்டே இருந்தியா... அதான்...

ஜிஷ்னாகிட்ட சொல்லி உன்கிட்ட பேசணும்னு சொன்னேனேத் தவிர அப்போக்கூட லவ்வுனெல்லாம் எனக்கு தோணினதில்ல... அவளும் நான் உன்கிட்ட அப்படி சொன்னதும் கோச்சுக்கிட்டா... இப்போ வர உன்ன பத்தி என்கிட்ட பேச மாட்டா தெரியுமா..."

அவனுக்கா தெரியாது ஜிஷ்னாவை பற்றி... அவனுக்கு ஒரு விஷயம் பிடிக்கவில்லை என்றாள் அதை அப்படியே விட்டு விடுபவள் ஆயிற்றே...

“அத விடு ஸ்ருதி... ஒரு கெட் டுகெதர் அரேஞ் பண்ணுறேன்... வினோத், ராஜா, ஜிஷ்னா எல்லாரையும் கூப்பிடுறேன். நம்ம எல்லாம் மீட் பண்ணியே ரொம்ப நாள் ஆச்சே... நீயும் வா...”

“கண்டிப்பா ஜேஷ். எங்க எப்போன்னு மெசேஜ் பண்ணிடு... நானும் வரேன்... நீ சொன்ன மாஹிட்றி எத்தன வருஷம் ஆச்சு நம்ம எல்லாம் பார்த்து?”

ஸ்ருதி வருகிறேன் என்றுக் கூறியது சந்தோஷத்தை அளிக்க மெசேஜ் செய்வதாகக் வாக்களித்தான். போனை வைத்தபோது மனதில் உறுத்திக் கொண்டிருந்த பாரம் இறங்கியதாகத் தோன்றியது.

அவர்கள் பிளான் செய்த அந்த நாளும் வர அன்றிரவு ஒரு ரெஸ்டாரெண்டின் முன் பைக்கை நிறுத்தி "நீ உள்ள போ ஜிஷ்னா. வினோத் ஏற்கனவே வந்துட்டானாம். நான் பார்க் பண்ணிட்டு வந்துடறேன்" என்றான் ஜேஷ்.

உள்ளே சென்று வினோத்தை பார்த்து அவனுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தாள் ஜிஷ்னா. ஜேஷ் ஸ்ருதியுடன் பேசி சிரித்துக் கொண்டே வந்தான். சிறிது நேரத்தில் ராஜாவும் வந்து சேர்ந்தான்.

"அப்பறம் ஸ்ருதி... அடுத்து என்ன? வேலைக்கா?"

"எங்க வீட்டுல எங்க ஜேஷ் வேலைக்கெல்லாம்... அதெல்லாம் விட மாட்டாங்க... அது வரைக்கும் எதாவது கோர்ஸ் பண்ண வேண்டியதுதான்..."

"ராஜா நீ?" என்றுக் கேட்டாள் ஜிஷ்னா.

"எனக்கும் விநோதுக்கும் அடுத்த வாரம் கேம்பஸ் இண்டர்வ்யூ இருக்கு... எப்படியும் ஏதாவது ஒரு கம்பனில பிளேஸ் ஆகிடணும்..."

"எப்போ ஸ்ருதி கல்யாணம்?" அப்போதும் ஸ்ருதியிடமே பேசுவதில் கவனமாக இருந்தான் ஜேஷ்.

"அதெல்லாம் எப்போ வேணா நடக்கும். சொல்ல முடியாது. உனக்கு எப்போ?"

"எனக்கு... இப்போதைக்கு இல்ல... ஜிஷ்னாக்கு தான் அடுத்து நடக்கும். இல்ல ஜிஷ்னா?" என்றுக் கூறி அவளைப் பார்த்தான் ஜேஷ்.

"ஆமா எங்க அப்பா தான் உன்கிட்ட வந்து சொன்னாங்கப் பாரு... போடா" என்று எரிச்சலாகக் கூறினாள் ஜிஷ்னா.

"இல்ல ஜிஷ்னா எப்படியும் பிளேஸ் ஆகிட்ட... அடுத்து கல்யாணத்த பத்தி தான் பேசுவாங்க..."

"அப்படின்னா உனக்கும் தான பாப்பாங்க?"

"எனக்கெல்லாம் இப்போதைக்கு கிடையாது... பிரேம் ரூபா என்ன மாதிரி எதிர்ப்பார்க்குறாங்கன்னு தெரியல... அதும் எங்க பேமிலிக்கு ஒரு பொண்ணு வரணும்ணா அவ எப்படி இருக்கணும்னு உனக்கே தெரியாதா? அப்படி ஒரு பொண்ணு நான் இது வர பாக்கல..." என்று சீரியசாகப் பேசினான் ஜேஷ்.

"அப்பறம் என்ன டாஷ்கு ப்ரொபோஸ் பண்ணானாம்?" என்று மனதிற்குள் அவனை திட்டியவள் "ஒஹ்ஹ்ஹ்" என்று ராகம் பாடினாள்.

இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த வினோத் அருகில் அமர்ந்திருந்த ராஜாவிடம் மெதுவாகப் பேச்சுக் கொடுத்தான். "டேய் பிடிச்சிருக்குன்னு சொன்னான்... லவ் பண்ணுறேன்னு சொன்னான்...

அத அவகிட்டயும் சொல்லிட்டேன்னான்... இப்போ என்னமோ அந்த மாதிரி ஒரு பொண்ண பாக்கவே இல்லன்னு சொல்லுறான்... என்னடா நடக்குது இவங்க ரெண்டு பேருக்குள்ள?"

இதை கேட்ட ராஜா வினோதின் தொடையை சொரிந்தான். அவன் திரும்பி பார்த்ததும் "இதெல்லாம் நீ கண்டுக்கக்கூடாது... வந்தோமா... நல்லதா நாலு ஐடெம் ஆர்டர் பண்ணி சாப்பிட்டோமான்னு கிளம்பிடணும்..." என்றான்.

சாப்பிட்டு முடித்ததும் அன்ற்ரவு சென்னை திரும்ப வேண்டும் என்றுக் கூறி வினோத்தும் ராஜாவும் முதலில் கிளம்பி சென்றனர்... ஸ்ருதியும் ஜேஷும் வண்டி எடுக்க சென்றனர்.

"என்ன ஜேஷ் நீ ஜிஷ்னாவ லவ் பண்ணுறியா?" என்று நேரடியாக கேட்டாள் ஸ்ருதி. ஜேஷ் அதிர்ந்து அவளை திரும்பி பார்த்தான்.

"நீங்க ரெண்டு பேரும் மாறி மாறி சண்ட போடுறதுலையே தெரியுது... அவ என்ன சொன்னா? சரின்னு சொல்லிட்டாளா?"

"இல்ல ஸ்ருதி... அவ எப்படி உடனே சரின்னு சொல்லுவா? கோவத்துல இருக்கா... ஆனா என் கூடவே தான் வரா... எந்த ஹெல்ப்னாலும் என்கிட்டதான் கேக்குறா... சரின்னு மட்டும் சொல்ல மாட்டேங்குறா..." என்று அலுத்துக் கொண்டான் ஜேஷ்.

"கவலையேப் படாத... அதெல்லாம் சீக்கிரம் சொல்லிடுவா... ஆல் தி பெஸ்ட்..." என்று சிரித்துக் கொண்டே கூறி சென்றாள் ஸ்ருதி.

வீடு திரும்பும் வழியில் "ஸ்ருதி நான் உன்ன லவ் பண்ணுறனான்னு கேட்டா… அமான்னு சொல்லிட்டேன்" என்று ஜிஷ்னாவிடம் கூறினான் ஜேஷ்.

"என்ன தான் நெனச்சுக்கிட்டு இருக்க நீ? எதுக்கு இப்படி ஊர் பூரா போய் சொல்லி வெக்குற?"

"நான் லவ் பண்ணுறேன்னு தான் சொன்னேன்... நீ ஓகே சொல்லலன்னு சொல்லிட்டேன்..." என்று அழுத்தமாகக் கூறினான் ஜேஷ். அதற்கு மேல் ஜிஷ்னா எதுவும் பேசாமல் அமைதியாக வந்தாள்.

அவளை வீட்டில் விட்டபோது "ஆல் தி பெஸ்ட் கூட சொன்னா..." என்றுக் கூறி சென்றான் ஜேஷ். ஒரு முறை அவனை முறைத்து விட்டு உள்ளே சென்றாள் ஜிஷ்னா.

அடுத்த நாள் காலை ஜிஷ்னாவின் வீட்டிற்கு வந்தவன் ஜிஷ்னாவின் முன் தன் வலது கையை ஆட்டிக் கொண்டே திரிந்தான். ஸ்ருதி வாங்கி கொடுத்திருந்த ப்ரேஸ்லெட்டை அணிந்திருந்தான்.

அதை கவனித்த ஜிஷ்னா "நடத்துடா... எத்தன நாளைக்குன்னு நானும் பாக்குறேன்..." என்று நினைத்து அதை கண்டுக் கொள்ளாதவள் போல் இருந்தாள்.

அன்று லேபில் அவளருகில் அமர்ந்து டைப் செய்கிறேன் பேர்வழி என்று அப்போதும் கையை ஆட்டிக் கொண்டிருந்தான் ஜேஷ். ஜிஷ்னா அதை கவனிக்கவே இல்லை.

“ஜிஷ்னா இந்த லூப்ல...” என்று ஆரம்பித்து பலமுறை சட்டைக் கையை ஏற்றி இறக்கி... ப்ரேஸ்லெட்டை சரி செய்து பார்த்தும் ஜிஷ்னா ஸ்க்ரீனில் இருந்துக் கண்களை அகற்றவில்லை.

சரி அவள் ஸ்க்ரீனை தான் பார்க்கிறாள் என்று அவன் அதில் கை வைத்து விளக்க... அவளோ குனிந்து அவன் கூறுபவற்றை மும்முரமாக அப்சர்வேஷன் நோட்டில் எழுத ஆரம்பித்தாள்.

“பாக்குறாளா பாரு... காலையில இருந்து எத்தன தடவ முகத்துக்கு நேரா கைய ஆட்டுறேன்... இவ கவனிச்சாளா இல்லையான்னு கூட கண்டுப் பிடிக்க முடியல... அழுத்தக்காரி...”

பிரேமிடம் அன்று அவன் கூறிய “பின்னாடி யூஸ் ஆகும்” இதுதான். ஸ்ருதியுடன் ஜிஷ்னா பேசுகிறாள் என்றுத் தெரியும். ஆனாலும் அவள் தன்னைப் பற்றி பேசுவதில்லை என்பதை ஸ்ருதியின் மூலம் அறிந்துக் கொண்டான்.

ஹோட்டலில் அவளுடன் பேசியதையே முறைத்துப் பார்த்த ஜிஷ்னா இப்போது அவள் வாங்கிக் கொடுத்திருந்த ப்ரேஸ்லெட்டை அணிந்தாள் கண்டிப்பாக கோபம் கொள்வாள்... ஒரு கேள்வியாவதுக் கேட்பாள் என்று எதிர்ப்பார்த்தான் ஜேஷ்.

ஆனால் ஜிஷ்னா அதைக் கண்டுக் கொள்ளாதது ஏமாற்றமாக இருந்தது. அன்று மாலை வண்டி எடுக்க சென்றவன் "இது எல்லாம் வேலைக்காகாது...." என்று அலுத்துக் கொண்டு அந்த ப்ரேஸ்லெட்டை கழட்டி சட்டை பாக்கெட்டில் வைத்தான்.

வண்டி எடுத்து வந்தவனின் கையில் ப்ரேஸ்லெட் இல்லாததை கண்ட ஜிஷ்னா, அவனை பின் புறமாக சுற்றி வந்து வண்டியில் ஏறி அமர்வதற்குள் சிரித்து முடித்திருந்தாள்.

வீட்டிற்கு வந்ததும் “இனிமே இது இருந்தா என்ன? இல்லாட்டி என்ன?” என்று நினைத்து சட்டை பையில் இருந்த ப்ரேஸ்லெட்டை மெத்தையில் விட்டெறிந்தான் ஜேஷ்.

பைனல் இயர் முதல் செமெஸ்டர் முழுவதும் இருவரும் பேசிக் கொள்வது குறைந்தது. மற்றவர்கள் முன் தங்கள் கோபத்தை இருவரும் காண்பிக்காவிட்டாலும் தனித்து இருக்கும்போது, வண்டியில் செல்லும்போது பேசுவதை தவிர்த்தனர்.

பார்ப்போருக்கு இவர்கள் எப்போதும் போல் ஒன்றாக போவதும் வருவதும் மட்டுமே தெரிந்ததேத் தவிர அவர்கள் முறைத்துக் கொள்வது தெரியவில்லை.

வீட்டிலும் எந்தக் கேள்வியும் கேட்க முடியாதபடி பார்த்துக் கொண்டனர். அவர்கள் முன் அமைதியாகவும் இல்லாமல் அதே நேரம் அதிகம் சிரித்தும் பேசாமல் அளவோடு பேசிக் கொண்டனர். இவர்களின் இந்த நாடகத்தைக் கண்டறிவோர் எவரும் இல்லை.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
23

கடைசி செமெஸ்டர் ப்ராஜெக்ட் செய்ய வேண்டும். மாணவர்கள் தங்களுக்குள் குழுப் பிரித்துக் கொள்ளலாம் என்றதும் ஜேஷ் ஜிஷ்னா இன்னும் 2 மாணவர்களுடன் சேர்ந்து ப்ராஜெக்ட் செய்ய முடிவு செய்தனர்.

காலேஜில் இரண்டோ மூன்றோ தியரி கிளாஸ் காலையில் நடக்கும். எப்போதடா அது முடியும் என்றுக் காத்திருக்கும் ஜேஷ் "வா ஜிஷ்னா" என்று அவளை இழுத்து சென்று விடுவான்.

மற்ற இரு மாணவர்களும், இவர்கள் இருவரும் ப்ராஜெக்ட் வேலைகளை பாதியாக பிரித்துக் கொண்டனர். ஜிஷ்னாவுடன் தனியாக நேரம் செலவிட எண்ணி ஜேஷ் கொடுத்த ஐடியா இது.

ஆகையால் ஜேஷ் ஜிஷ்னா தனியாக கோட் அடிக்க... மற்ற இரு மாணவர்களும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிக்கான கோடை முடித்தனர்.

மதியத்தோடு வீட்டிற்கு செல்லவும் அனுமதி உண்டு என்று கல்லூரியில் சொல்லியதை அப்படியே கடைப்பிடித்தான் ஜேஷ். கல்லூரியில் பலர் மத்தியில் அமர்ந்திருப்பதுப் பிடிக்காமல் உடனே ஜிஷ்னாவை அழைத்துக் கொண்டுக் கிளம்பி விடுவான்.

பொதுத் தேர்வின் பொது ஜிஷ்னாவின் வீட்டில் அமர்ந்து படித்தது போல் இப்போதும் அவள் வீட்டிலேயே அமர்ந்து ப்ராஜெக்ட் வேலைகளை செய்தனர் இருவரும்.

முன்பு போல் இப்போது ஜிஷ்னாவால் பேசாமல் இருக்க முடியவில்லை. இருவர் மட்டுமே சேர்ந்து வேலை பார்க்கும்போது பேசாமல் அவனிடம் எதுவும் கேட்காமல் இருப்பது சாத்தியம் இல்லாமல் போனது.

இத்தனை நாட்கள் அவளிடம் பேசாமல் இருந்ததற்கு எல்லாம் சேர்த்து வைத்து எதாவது பேசி அவளை சிரிக்க வைத்து அவளின் கன்னக்குழியை ரசித்துக் கொண்டிருந்தான் ஜேஷ்.

ஆனால் அவனுக்கு ஸ்வப்னா அவ்வபோது வந்து ஜிஷ்னாவிடம் வேண்டும் என்றே எதாவது பேசி செல்வது தொந்தரவாக இருந்தது. எப்படியாவது இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று நினைத்தான்.

அன்று மதியம் ஜிஷ்னாவின் வீட்டில் எதையோ மும்முரமாக டைப் செய்துக் கொண்டிருந்தவன் நீண்ட நேரமாக ஸ்வப்னாவை காணாததால் மெதுவாக அதை அவளிடம் கேட்டான்.

"இன்னைக்கு யாரு சமையல்? உங்கம்மா காலையில வெளில போயிருந்தாங்க..." என்று மெதுவாகப் பேச்சை ஆரம்பித்தான் ஜேஷ்.

"நாந்தான் சமைச்சேன்... ஏன் பசிக்குதா?" அவனை சந்தேகமாகப் பார்த்தாள் ஜிஷ்னா.

"ஆமா பசிக்குது..." என்று பாவமாகக் கூறினான் ஜேஷ்.

"சரி வா... சாப்பிட்டு வந்து டைப் பண்ணலாம்... சிஸ்டம் லாக் பண்ணிட்டு வா..."

"அன்னைக்கு மாதிரி கிச்சென்ல உக்காந்துக்கவா? தோசைக்கு செஞ்ச சட்னியும் சாம்பாருமே அவ்வளோ சூப்பரா இருந்துது... இப்போ புல் சாப்பாடுன்னா எப்படி இருக்கும்?" என்று கனவில் மிதப்பவன் போல் கூறியவன் "எனக்குதான் குடுத்து வெச்சுருக்கா இல்லையான்னு தெரியல... ஹ்ம்ம்..." என்றுப் பெருமூச்சு விட்டான்.

ஜேஷ் வேண்டும் என்றே கொஞ்சம் சத்தமாகவேப் பேசினான். ஜிஷ்னா எங்கே ஸ்வப்னா வந்து விடுவரோ என்று பயந்து அறை வாசலை பார்ப்பதும் ஜேஷை பார்ப்பதுமாக இருந்தாள்.

ஸ்வப்னா காலையே கோவிலுக்கு சென்று வந்ததால் அசதியில் உறங்கிக் கொண்டிருந்தார். அவர் காதில் ஜேஷ் கூறும் விஷயம் விழுந்தால் என்னாகும் என்று அவளுக்கும் தெரியும்.

"நீ வா... சாப்பிட்டு கெளம்பு... இப்படி எல்லாம் அம்மா முன்னாடி சொல்லி பாரு... அப்போ தெரியும். நாளையிலேருந்து உன் வீட்டுக்கு நான் வரேன். நீ இங்க வர வேணாம்..." என்றுக் கூறி அவனை முறைத்து விட்டு கிட்செனுள் சென்றாள் ஜிஷ்னா.

"இவ தெரிஞ்சே தான் நம்ம நெனைக்கறதுக்கு ஏத்த மாதிரி நடந்துக்கறாளா? இல்ல அதுவா அமையுதா?" என்று யோசித்துக் குழம்பினான் ஜேஷ்.

டைனிங் ஹாலில் அமர்ந்திருந்தவனுக்கு உணவை பரிமாறினாள் ஜிஷ்னா. "ஆன்டி சாப்பிட்டாங்களா?" என்று கேட்டவன் "வேணாம் வேணாம் எழுப்பிடாத... அப்பறம் ஜூஸ் கலக்க ஆரம்பிச்சுடுவாங்க..." என்றுப் பதட்டமாகக் கூறி தலையை ஒரு முறை ஆட்டி விட்டு சாப்பிட ஆரம்பித்தான்.

சிறிது நேரம் ப்ரோக்ராம் டைப் செய்து விட்டு அமைதியாகக் கிளம்பினான் ஜேஷ். அடுத்த நாள் அவன் வீட்டிற்கு சென்றாள் ஜிஷ்னா.

“ஜிஷ்னா வராளா? என்னடா ஆச்சு? அவ வீட்டுக்கு நீ போகலையா? அதிசயமா இங்க வர ஒத்துக்கிட்டாளா?”

காலையில் இனி ஜிஷ்னா இங்கே வருவாள்... சேர்ந்து பிராஜெக்ட் செய்வோம் என்றுக் கூறியதும் பிரெம் ஆச்சரியமாகக் கேட்டார்.

“அதெல்லாம் அப்படிதான்பா... என்னால அங்க ப்ரீயா இருக்க முடியல... நம்ம வீடுன்னா எனக்கும் கம்போர்டபிளா இருக்கும் அதான்...”

“ஸ்கூல் படிக்குறப்போலேருந்து நீ தான அங்க போற? இப்போ என்ன புதுசா?”

“ரூபிம்மா... தேவையில்லாம கேள்விக் கேக்காத...மதியானம் லஞ்ச் இனி அவ இங்கதான் சாப்பிடுவா... சேர்த்து சமச்சிடுங்க...”

“அதெல்லாம் உன் அம்மா நீ சொல்லாமயே செய்வா ஜேஷ்... பார்த்து இருந்துக்கோ... ஜிஷ்னாவ கவனிச்சுக்குறேன்னு உனக்கு சாப்பாடு போடாம விட்டுட போறா...”

“போற போக்க பார்த்தா அப்படிதான் பா தோணுது... ரெண்டு பெரும் என்னை கண்டுக்குரதே இல்ல... ஹ்ம்ம்... என் நிலைமை இப்படி ஆயிடுச்சே...”

ஜிஷ்னா வந்ததும் ரூபாவிடம் சிறிது நேரம் பேசி விட்டு தன் அறைக்குள் அழைத்து சென்றான் ஜேஷ்.

"உங்க வீட்டுல வெச்சு ரொம்ப பேசுனல்ல... இப்போ பேசு..." என்றான் ஜேஷ் அவளை சீண்டும் வகையில்.

"இங்க பாரு… சும்மா இரு... அப்பறம் நான் ரூபிம்மாவை கூப்பிட்டு பேசுவேன்"

தலைக் குனிந்து தன் மெத்தையில் அமைதியாக அமர்ந்தான் ஜேஷ். அதை கண்ட ஜிஷ்னாவிற்கு பாவமாக இருந்தது. “ரொம்ப பீல் பண்ணுறானோ? தேவ இல்லாம கஷ்டப்படுத்திட்டோம் போல...”

சிறிது நேரம் அமைதியாக அசையாமல் அமர்ந்திருந்தவன் "கூப்பிட்டு பேசேன்... என்ன தான் சொல்லுறாங்கன்னு பாப்போம்... எனக்கும் ஒரு வேலை மிச்சம் ஆகும்...

இந்த எடத்துல நீ தான் டென்ஷன் ஆவ... நான் இதுக்கெல்லாம் டென்ஷனே ஆக மாட்டேன்" என்று இரு கைகளையும் தனக்கு பின்னால் பெட்டில் ஊண்றி சாய்ந்து அமர்ந்துக் கூறினான் ஜேஷ்.

"இவ்வளோ தூரம் நான் வேணாம்னு சொல்றேன்னா அதுக்கு ரீசன் இருக்கும்னு புரிஞ்சுக்க மாட்டியா? சும்மா ஏன் அதையே பேசுற?" என்று ஆதங்கத்தோடுக் கேட்டாள் ஜிஷ்னா.

"என்ன பெரிய ரீசன்? இத்தன நாள் சொல்லல... இப்பயாவது சொல்லு" என்றுப் பொறுமையை இழுத்து பிடித்துக் கேட்டான் ஜேஷ்.

அவனுக்கு பதில் சொல்லாமல் எழுந்து நேராக கிட்செனுள் சென்று “என்ன ஆன்ட்டி சமையல்? எனக்காக ஸ்பெஷலா ஏதாவது செய்யுறீங்களா?” என்றுக் கேட்டு ரூபாவுடன் பேச ஆரம்பித்தாள் ஜிஷ்னா.

“நீ வந்தாலே ஸ்பெஷல் சமையல் தான் ஜிஷ்னா...” என்ற ரூபா மசாலாவை அரைத்தார்.

“ஆரம்பிச்சுட்டா... ஆ ஊன்னா எங்கம்மாகிட்ட ஓடிடுறா... ஏன் எங்கக்கிட்ட எல்லாம் பேசுனா நாங்க கேக்க மாட்டோம்னா சொல்லுறோம்... த்ப்பிக்குரதுக்கு இவளுக்கு வேற வழியேத் தெரியாதா?”

மனதிற்குள் புலம்பியபடியே சமையலறை வாயிலுக்கு வந்த ஜேஷ் ஜிஷ்னா கேட்டதையும் அதற்கு ரூபா கூறிய பதிலையும் கேட்டான். “கொழுப்பு தான? ஏன்டி நீ வந்தா எங்கம்மா உனக்கு ஸ்பெஷலா சமைக்கணுமா? இருடி வரேன்...”

அவளை ஏதாவது சொல்லி அமைதியாக்க வேண்டும் என்ற ஆசை மனதில் எழ என்ன சொல்லுவது... என்ன செய்தால் இவள் அமைதியாவாள் என்ற யோசனையுடன் உள்ளே நுழைந்தான்.

“ஆமாமா... எல்லாமே ஸ்பெஷல் தான்...” சிரித்தபடியே கூறிய ஜேஷ் மேடையில் அவளருகில் அவள் தோளில் கை போட்டு அமர்ந்தான். இத்தனை வருடங்களில் அவன் அவளிடம் இப்படி நடந்துக் கொண்டதுக் கிடையாது.

எப்போதாவது கை குலுக்கி இருக்கிறான்... சில நேரங்களில் தெருவில் வாகன நெரிசல் அதிகம் இருக்கும் சமயங்களில் அவள் கை பிடித்து நடத்தி சென்றிருக்கிறான்.

ஆனால் இப்போது ஏனோ அவளிடம் தனக்கு அதையெல்லாம் தாண்டி அதிக உரிமை இருப்பதாகத் தோன்ற தன்னையும் அறியாமல் செய்த செயல்... ஆனால் அபப்டி செய்தப் பிறகே அதை உணர்ந்தான்.

அவள் அருகில் பலமுறை அமர்ந்ததுண்டு... இப்படி நெருக்கமாக அமர்ந்ததில்லை. பைக்கில் செல்லும்போதுக் கூட ஜிஷ்னா கொஞ்சம் தள்ளியே அமர்வாள். இன்று இப்படி அமர்ந்திருப்பதுப் பிடித்திருந்தது.

இன்னும் கொஞ்ச நேரம் அப்படியே இருக்க வேண்டும் என்று மனம் ஏங்கியது. அவள் கையை எடுக்க சொன்னாலும் ஏதாவது ஒரு காரணம் சொல்லி எடுக்கக் கூடாது என்று முடிவு செய்தான்.

ஜேஷ் தோள் மீது கை போட்டதும் அதிர்ந்த ஜிஷ்னா வேகமாக ரூபாவை திரும்பி பார்த்தாள். அவர் சமையலில் மும்முரமாக இருந்தார். ஜேஷின் கையை எடுத்து விடுவதற்காக அவனது மணிக்கட்டை பிடித்தவள் ரூபா திரும்பவும் அப்படியே பிடித்துக் கொண்டு அமர்ந்தாள்.

"ப்ரோக்ராம் டைப் பண்ணி பண்ணி கையெல்லாம் வலிக்குது... கொஞ்ச நேரம் அப்படியே கையப் பிடிச்சு விடு ஜிஷ்னா..." என்று மிகவும் கலைத்து போய் கூறுவது போல் பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு கூறினான் ஜேஷ்.

ரூபா திரும்பிப் பார்க்கவும் ஒன்றும் சொல்ல முடியாமல் அவன் கையை பிடித்து விட்டவள் அவனை முறைத்தாள். "எப்படி?" என்று ஒற்றை புருவத்தை தூக்கிக் கேட்டான் ஜேஷ்.

"பசிக்குது ஆன்ட்டி. சாப்பிடலாமா?" என்று ரூபாவிடம் திரும்பி கேட்டாள் ஜிஷ்னா.

"நான் உங்க வீட்டுல சொன்னத நீ இங்க சொல்லி எஸ்கேப் ஆகுறியா?" என்று அவளுக்கு மட்டும் கேட்கும்படி குனிந்து கூறினான் ஜேஷ்.

"வாடா. ரெடி ஆகிடுச்சு" என்று ரூபா கூறியதும் ஜிஷ்னா வேகமாக இறங்கி டைனிங் ஹாலிற்கு ஓடினாள்.

சாப்பிட்டு முடித்து கிளம்பும் வரை ஜேஷை முறைத்துக் கொண்டே இருந்தாள் ஜிஷ்னா. அவளை வீட்டில் விட செல்லும்போது "அப்போ ஏதோ ரீசன் இருக்குன்னு சொன்ன... என்ன ரீசன் சொல்லு" என்றுக் கேட்டான் ஜேஷ்.

"அதெல்லாம் ஒண்ணும் இல்ல" என்று வேகமாக கூறினாள் ஜிஷ்னா.

"சரி நீ நல்ல மூட்ல இருக்கப்போ கேக்குறேன். இப்போ போ…" என்றுக் கூறி அவள் வீட்டில் இறக்கி விட்டான் ஜேஷ்
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
24

ப்ராஜெக்ட் வேலைகளை முழுவதுமாக முடித்து அதை பிரிண்ட் அவுட் எடுக்க சென்றனர் ஜேஷும் ஜிஷ்னாவும். இந்த வேலையை ஜேஷ் மற்ற இரு மாணவர்களுக்கு தராமல் தானே செய்வதாகக் கூறினான்.

“எங்ககூட சேர்ந்து ப்ராஜெக்ட் பண்ணுறவங்களுக்கு கொண்டாட்டமா இருக்கும்... இவன் எல்லா வேலையையும் இழுத்துப் போட்டு நானே செய்யுறேன்னு சொல்லி முடிச்சுடுறான்... அவங்களுக்கு எதையும் விட்டு வெக்குறதில்ல...”

ஜிஷ்ணாவிற்கு தெரியவில்லை... அவளுடன் அதிக நேரம் செலவிட எண்ணியே ஜேஷ் இவ்வளவு மெனக்கெடுகிறான் என்று... தன்னை அதிகம் வருத்திக் கொள்கிறான் என்று...

அனைத்தையும் பிரிண்ட் அவுட் எடுத்து வீடு திரும்பும் வழியில் "அன்னைக்கு என்ன ரீசன் இருக்குன்னு சொன்ன ஜிஷ்னா?" என்று மீண்டும் அந்த பேச்சை ஆரம்பித்தான் ஜேஷ்.

"ஐயோ இத இன்னும் இவன் மறக்கலையா? என்ன சொல்ல?" என்று யோசித்து முழித்தாள் ஜிஷ்னா.

"சொல்லு ஜிஷ்னா... என்ன ரீசன்?"

"எதுவும் இல்லன்னு சொன்னேன்ல..."

"இப்போ நீ சொல்லப் போறியா இல்லையா?"

'மாட்டார்' என்றுத் தன் கையில் இருந்த புத்தகத்தால் ஜேஷின் மண்டையில் அடித்தாள் ஜிஷ்னா. ஜேஷ் சட்டென்று வண்டியை ஓரமாக நிறுத்தவும் உடனே இறங்கினாள் ஜிஷ்னா.

அவள் இறங்கியதும் கையில் ஹெல்மெட்டை எடுத்தவன் "ஓங்கி ஒண்ணு விட்டேன்னா..." என்று அடிப்பது போல் அதை ஓங்கினான் ஜேஷ்.

"எப்போ பாத்தாலும் எதுக்குடி அடிக்குற? ரீசன் இருக்குன்னு பெரிய இவ மாதிரி பேசுற... அது என்னன்னுக் கேட்டா சொல்லவும் மாட்ட... உன் பின்னாடியே இப்படி கெஞ்சிட்டு திரிய சொல்லுறியா?"

"அப்பா என்னடான்னா பொண்ண கட்டிக்க கேப்பாரு... பொண்ணு என்னடான்னா எப்போப் பாரு மண்டைல அடிக்குது... இதுக்கு ஜூஸ் எவ்வளவோ தேவலாம்…" என்று மனதிற்குள் நினைத்து நொந்தான்.

"இவ்வளவு கோவம் வருதுல்ல? அப்பறம் எதுக்கு பிரண்ட்னு சொல்லிட்டு லவ் பண்ணுறேன்னு சொல்லுற?"

"ஆமாடி உங்களுக்கு அப்போ எப்படி தான் லவ் பண்ணணும்? நல்ல பிரண்டா இருக்கவனால நல்ல லவ்வரா நல்ல ஹஸ்பண்டா இருக்க முடியும்...

ஒரு நல்ல ரிலேஷன்ஷிப்னா அதுக்கு பிரண்ட்ஷிப் தான் பேஸ். அப்போ தான் அந்த ரிலேஷன்ஷிப் லைப் லாங் மெயிண்டைன் பண்ண முடியும். அப்பறம் எதுக்கு என்னை லவ் பண்ண யோசிக்கற?

இப்போ என்ன உன் ப்ராப்லம்? நான் பிரண்டா இருந்து உன்கிட்ட ப்ரொபோஸ் பண்ணதா? அப்போ உன்ன லவ் பண்ணுறத மறச்சுட்டு உன்கூட சுத்துறது உனக்கு ஓகே... அப்படி தான?

அத விட இது ரொம்பக் கேவலம்... என்னால அப்படியெல்லாம் நடந்துக்க முடியாது... பொய் சொல்லி அமிர்தம் குடிக்குறத விட உண்மைய சொல்லி விஷத்த குடிச்சுடலாம்... எதா இருந்தாலும் பதில் சொல்லு...”

..................

“பட் கண்டிப்பா அப்பறம் லைப்ல பீல் பண்ணுவ...” என்று அவளை முறைத்துப் பார்த்த படியே சொன்னான் ஜேஷ்.

......................

“உனக்கு என்ன புடிக்கலன்னு பொய் சொல்லாத... அத என்கிட்ட இல்ல... நீ எவன்ட சொன்னாலும் நம்ப மாட்டங்க... உக்காரு... உன்ன வீட்டுல விட்டுடுறேன். இனியும் உன்கிட்ட பேசுறது பிரயோஜனமே இல்ல..." என்றுக் கூறி பைக்கை ஸ்டார்ட் செய்தான்.

அமைதியாக ஜிஷ்னாவை வீட்டில் விட்ட ஜேஷ் அவள் முகத்தையும் நிமிர்ந்து பார்க்காமல் சென்றான்.

அவன் வீட்டிற்குள் நுழைந்ததும் “ஜேஷ் அப்பா உன்ன பாக்டரி வர முடியுமான்னுக் கேட்டாங்க... அவங்க கார் ஏதோ ரிப்பேர் ஆகிடுச்சாம்...” என்றார் ரூபா.

“இப்போவாம்மா... ஹ்ம்ம்... சரி போறேன்...”

அவன் முகமே சரி இல்லை என்பதை கவனித்தவர் “என்ன ஜேஷ்? ஒரு மாதிரி இருக்க?” என்றுக் கேட்டார்.

“அதெல்லாம் ஒண்ணும் இல்லம்மா... முகம் மட்டும் கழுவீடுப் போறேன்... அப்பாக்கிட்ட சொல்லிடுங்க...”

“இல்ல வேணாம்... நீ ரெஸ்ட் எடு... கணேஷ் அண்ணாவோட அப்பாவ வர சொல்லிடுறேன்... தூங்கி எந்திரிச்சா எல்லாம் சரி ஆய்டும் ஜேஷ்...”

தாயின் வார்த்தைகளை கேட்டவனுக்கு ஆறுதலாக இருந்தது. “ரெண்டு மணி நேரம் கழிச்சு எழுப்புங்கம்மா...” என்றவன் உறங்க முயன்றான்.

சிறிது நேரத்தில் அவன் போன் அடிக்க எடுத்துப் பாத்தான். ஜிஷ்னா அழைத்திருந்தாள்.

ஜேஷ் போனை எடுத்ததும் "அதுக்காக பிரண்ட்ஸா பழகுன எல்லாருமே லவ் பண்ணணுமா?" என்றுக் கோபமாகவே கேட்டாள்.

"நான் அப்படி சொல்லல. பிரண்ட்ஸ்குள்ள இப்படி ஒரு bond ரேரா தான் வரும். அந்த பாண்ட கரெக்டா தெரிஞ்சு ரெண்டு பேரும் சேர்ந்து இருந்தா நல்லாதான் இருப்பாங்க.

ஆனா அத அப்படி இல்லன்னு நெனச்சு பெருசா உன்ன மாதிரி பேசி அப்பறம் பிரண்ட்ஷிப்பும் மெயிண்டைன் பண்ண முடியாம மேரேஜ் லைபும் நல்லா இல்லாம நெறைய பேரு கஷ்டப்படுறாங்க.

உனக்கு நான் மட்டும் இல்ல... இப்படி ஒரு நல்ல பாரென்ட்ஸ் எனக்கு இருக்கப்போ இன்னும் என்ன ப்ராப்லம் வரும்னு சொல்லுற? சும்மா பேசுனா எல்லாமே நல்லா தான் இருக்கும். ஆனா லைப்னு வரப்போ, வாழுறப்போ தான் பேசுறத எல்லாம் செய்யுறது கஷ்டம்னு தெரியும்.

நான் எல்லாம் யோசிச்சுதான் பேசுறேன். எனக்கு என்னமோ உன்கிட்ட அந்த பீல் வருது. என்னால அது தப்புன்னு நெனைக்க முடியல. அவ்வளவு தான்" என்றுக் கூறி போனை வைத்தான் ஜேஷ்.

அவன் கட் செய்த பின்னும் சில நொடிகள் போனை காதில் வைத்திருந்தவள் அவன் கூறிய அனைத்தையும் மீண்டும் நினைத்துப் பார்த்தாள்.

"நான் உன்கூட இருந்தா எவ்வளவு சந்தோஷமா இருப்பேன்னு எனக்கு தெரியும் ஜேஷ்... நீ இல்லாம என்னால இருக்க முடியுமான்னு தெரியல... லைப் புல்லா உன் கூடவே இருக்கணும்னு எனக்கு ரொம்ப ஆசையா இருக்கு..." என்று யோசித்தவள் மொபைலை வைத்து விட்டு படுத்தாள்.

"ஆனா இது எதுவும் ஒத்து வராதுன்னு தெரியும்.... தேவ இல்லாம உன்னையும் நான் கஷ்டப்படுத்த மாட்டேன்..." என்று மனதிற்குள் நினைத்து அழுதாள்.

அதன் பின் இருவரும் பேசுவது சுத்தமாக நின்றது. பைனல் செமெஸ்டர் எக்ஸாம் எழுத செல்லும்போது இருவரும் பரஸ்பரம் "ஆல் தி பெஸ்ட்" சொன்னதோடு சரி.

கடைசி எக்ஸாம் முடிந்து ஜிஷ்னாவை வீட்டில் விட்டபொழுதும் அவள் முகத்தையும் நிமிர்ந்து பாராமல் ஜேஷ் சென்று விட்டான்.

ஜிஷ்னா இது எதையும் பெரிதாக கண்டுக் கொள்ளவில்லை. ஜேஷ் பேசாதது அவளுக்கு வருத்தத்தைக் கொடுத்தாலும் அவன் அவளை ஒன்றும் கேட்காமல் இப்படி அமைதியாக இருப்பது அவளுக்கு நிம்மதியையே அளித்தது.

“மாமாவும் அத்தையும் வந்திருக்காங்க ஜிஷ்னா...” ஸ்வப்னா கூறிய தகவலில் மற்ற கவலைகளை மறந்து துள்ளலுடன் வீட்டின் உள்ளே சென்றாள் ஜிஷ்னா.

நாளை அவளுடைய சித்தப்பா குடும்பமும் வருகிறார்கள் என்றதும் ஜிஷ்ணாவிற்கு கொண்டாட்டமாக இருந்தது. உறவினர்கள் எல்லோரும் ஒன்றுக் கூடுவது எப்போதாவது நடக்கும் ஒன்று அல்லவா...

ஒரு வாரம் வீட்டில் விருந்தினர் இருந்ததால் அவர்களுடன் பேசி பொழுதை போக்கிய ஜிஷ்னாவிற்கு ஜேஷை பார்க்காததோ அவன் பேசாததோ பெரிதாக தெரியவில்லை.

ஜேஷின் வகுப்புத் தோழர்கள் சிலர் அவனை தங்களுடன் ஹைதேராபாத் வருமாறு அழைத்தனர். “இண்டர்வ்யூ இருக்கு ஜேஷ்... அப்படியே கொஞ்சம் ஊற சுத்தி பார்த்துட்டு வரலாம்... நீயும் வாடா...”

அவனுக்குமே ஒரு மாற்றம் தேவைப்பட்டது. “வீட்டுலக் கேட்டுட்டு சொல்லுறேன்...” என்றுக் கூறி வைத்தவன் பிரேமிடம் வந்து நின்றான்.

“எத்தன நாள் ஜேஷ் ஆகும்? இப்போ என்ன திடீர்னு போகணும்னு சொல்லுற?”

“போறதுக்கு ஒரு நாள் வரதுக்கு ஒரு நாள் ஆகிடும் பா... அங்க இண்டர்வ்யூ முடிஞ்சா உடனே வந்துடுவோம்... எனக்கும் ஒரு சேஞ்ச் வேணும்பா... இப்படி வீட்டுக்குள்ளயே இருக்கிறது பிடிக்கவே இல்ல...

நாங்க பிளேஸ் ஆனா கம்பனியில இன்னும் ஆறு மாசத்துக்கப்பரம் தான் கால் லெட்டர் அனுப்புவேன்னு சொல்லிட்டாங்க... அது வரைக்கும் சும்மா இருக்கணுமே...

பிரெண்ட்ஸ் கூப்பிட்டாங்க... நானும் வினோத் ராஜாகூட சேர்ந்து சுத்துன அளவுக்கு என் காலேஜ் பிரெண்ட்ஸ்கூட நான் எங்கயும் போனதில்ல... இப்போ போகணும்னு தோணுது...”

“அவன் போகட்டும் பிரேம்... அதான் இவ்வளவு சொல்லுறானேங்க... நீ போ ஜேஷ்... ஜாலியா சுத்திட்டு வா...”

ரூபா கூறியதும் சரி என்றுத் தலையாட்டினான் ஜேஷ். அவன் முகம் தெளிவில்லாமல் இருப்பதை ஒரு வாரமாக கவனித்த பிரேமும் ரூபாவும் தங்களுக்குள் பேசிக் கவலைப் பட்டனர்.

இப்போது அவனே வந்துக் கேட்கவும் சரியென்று ஒப்புக் கொண்டனர். எப்படியாவது அவன் பழையபடி கலகலப்பாக மாற வேண்டும் என்பதே அவர்கள் ஆசையாக இருந்தது.

ஜிஷ்னாவிற்கு கால் செய்த ஜேஷ் "பசங்க இண்டர்வ்யூக்கு ஹைதராபாத் போறாங்க. நானும் கூட போறேன். வரதுக்கு ஒரு வாரம் ஆகும்" என்று உணர்ச்சி இல்லாத குரலில் கூறினான்.

"சரி. வரப்போ எனக்கு pearl செட் வாங்கிட்டு வா"

"ம்ம்" என்று மட்டும் கூறி வைத்தான் ஜேஷ்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
25

நேற்று இரவே ஜிஷ்னா வீட்டிலிருந்த உறவினர்கள் புறப்பட்டு சென்றிருந்தனர். வீடு வெறிச்சோடிப் போனதும் ஜிஷ்னா முதலில் தேடியது அவளுடைய மொபைலை தான்.

அவளுக்கு தெரியும் ஜேஷ் இன்று காலை புறப்படுகிறான் என்று. அதை அவன் மெசேஜ் அனுப்பிக் கூறி இருந்தான்.கையில் மொபைலுடன் வீட்டைப் பல முறை சுற்றி வந்தாள்.

"வந்து சாப்பிடு டி... எதுக்கு இப்படி சுத்திக்கிட்டு இருக்க? மணி என்ன ஆச்சு தெரியுமா?" என்று ஸ்வப்னா திட்டவும் தான் மணியைப் பார்த்தாள் ஜிஷ்னா.

மணி 11. புறப்படும் முன் அவன் அழைப்பான் என்று நினைத்தாள். அதன் பிறகாவது அவன் அழைப்பான் என்று எதிர்ப்பார்த்தாள். எதுவும் நடக்கவில்லை என்றதும் அதற்கு மேல் பொறுக்க முடியாது என்றுத் தோன்றவே ஜேஷின் எண்ணிற்கு அழைத்தாள்.

அது தொடர்பு எல்லைக்கு வெளியே இருந்தது. இந்த ஒரு வருடத்தில் அவர்கள் அதிகம் பேசிக் கொள்ளவில்லை தான். ஆனால் தினம் அவனுடனே சென்று... கல்லூரியில் ஒரே வகுப்பில் அமர்ந்து... மீண்டும் மாலை ஒன்றாக வீடுத் திரும்புவதால் அவளுக்கு பெரிதாக வருத்தம் தோன்றியதில்லை.

கல்லூரி முடிந்து வீட்டில் இருந்த இந்த ஒரு வாரத்தில் வீடு முழுவதும் விருந்தினர்கள் இருந்தனர். வேறு எதைக் குறித்தும் யோசிக்க நேரம் இல்லாமல் போனதால் ஜேஷ் அவளிடம் பேசாதது அவளிடம் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை.

ஆனால் இன்று... யாரும் இல்லாமல் தனித்து விடப்பட்டது போல் இருந்தது அவளுக்கு. ஜேஷ் வீட்டில் இருந்தாலும் பெரிதாக ஒன்றும் பேசி விடப் போவதில்லை.

இரவு அவன் அனுப்பும் குட் நைட் மெசேஜ் பார்த்தப் பின்பே அவளுக்கு உறக்கம் வரும். அது நேற்று வராததே அவளின் உறக்கத்தை விரட்டி அடித்திருந்தது.

"இந்நேரம் சென்னைக்கு போயிட்டு இருப்பான்ல... ட்ரைன்ல இருப்பான். விடியற்காலைலயே கிளம்புறேன்னு சொன்னான்... கிளம்புறப்போ ஒரு மெசேஜ் அனுப்பி இருக்கலாம்ல...

ச்ச... நானாவது போன் பண்ணி கேட்டிருக்கலாம். அவனே கூப்பிடுவான்னு விட்டது தப்பா போச்சு. இப்போ லைன் கெடைக்க மாட்டேங்குது..." என்றுத் தன் போக்கில் யோசித்துக் கொண்டிருந்தாள் ஜிஷ்னா.

மாலை ஆனதும் ஒரு மாறுதலுக்காக வெளியே சென்று வருவதாகக் கூறி விட்டு அருகிலிருந்த தோழியின் வீட்டிற்குச் சென்றாள். அங்கு அவள் தோழி ஜேஷையும் ஜிஷ்னாவையும் குறித்தே பேசினாள்.

யாரை மறப்பதற்காக அங்கு வந்தாளோ அவனையே நினைவுப் படுத்துகிறாள் என்று ஆத்திரம் வந்தது. உடனே ஏதோ காரணம் கூறி சமாளித்து அங்கிருந்துப் புறப்பட்டாள் ஜிஷ்னா.

வீடு வந்ததும் "இப்போ எப்படியும் சென்னைலேருந்துக் கிளம்பி இருப்பான். ஒரு மெசேஜ் அனுப்பி சொல்ல வேண்டியது தான... எங்க இருக்கேன் என்ன பண்ணுறேன்னு...

இங்க இருக்கப்போ மட்டும் என்ன பேசவே விடாம பேச வேண்டியது... இப்போ..." என்று யோசித்தவள் சென்று படுக்கையில் விழுந்தாள். முந்தைய நாள் இரவு சரியாக உறங்காததால் உடனே உறங்கியும் போனாள்.

காலை கண் விழித்ததுமே தன் மொபைலை எடுத்துப் பார்த்தாள். என்ன தான் ஜிஷ்னா தன்னுடன் பேசவில்லை என்றாலும் ஜேஷால் அப்படி இருக்க முடியாமல் காலை கண் விழித்ததுமே முதல் வேலையாக ஜிஷ்னாவிற்கு குட் மோர்னிங் மெசேஜ் அனுப்பி விடுவான்.

இன்று அதுவும் அவனிடம் இருந்து வரவில்லை என்றதும் ஏமாற்றமாக இருந்தது.

திருச்சியிலிருந்து சென்னை சென்று அங்கிருந்து ஹைதராபாத் போக ஒரு நாள் முழுவதும் ரயிலில் பயணம் செய்ய வேண்டி இருந்தது. ஜேஷ் இன்னும் மூன்று கல்லூரி நண்பர்களுடன் சென்றான்.

ஹைதிராபாத் சென்றதும் ஜிஷ்னாவை அழைத்து காலை இண்டர்வ்யூ இருப்பதால் இன்னும் சிறிது நேரத்தில் கிளம்பி விடுவேன் என்றுத் தகவல் கூறி வைத்தான்.

மாலை மீண்டும் ஜிஷ்னாவை அழைத்தான் ஜேஷ். "இண்டர்வ்யூ முடிஞ்சு ரிசல்ட் சொல்லிட்டாங்க. மூணு பேருமே செலக்ட் ஆகிட்டாங்க. ஊர் சுத்தி பார்க்க போறோம். வெச்சுடறேன்" அப்போதும் ஜிஷ்னாவை பேச விடாமல் வைத்தான் ஜேஷ்.

அவன் இரண்டு முறைப் பேசியதே ஜிஷ்னாவிற்கு அப்போது போதுமானதாக இருந்தது. அவன் குரல் கேட்டதே பெரிய விஷயமாக தோன்றியது. அவளுடைய மொபைலை கீழே வைக்கவே இல்லை.

எந்நேரமும் அதையேப் பார்த்துக் கொண்டிருந்தாள். எங்கே போன் அடித்தாள் தனக்குக் கேட்காமல் போய் விடுமோ என்று அதன் சத்தத்தைக் கூட்டிக் கொண்டே இருந்தாள்.

அது தான் ஏற்கனவே உச்சப் பட்ச ஒலியில் இருக்கின்றதே... அதற்கு மேல் கூட மறுத்தது. "ச்ச இவ்வளவு தான் மேக்சிமம் வால்யூமா?" என்று நொந்துக் கொண்டாள்.

அடுத்த நாள் மதியம் போன் செய்து "உனக்கு, ரூபிம்மாக்கு, ஆன்ட்டிக்கு பர்ல் செட் வாங்கி இருக்கேன். இதுக்கப்பறம் இன்னும் ரெண்டு நாள் இங்க கொஞ்சம் சுத்தி பார்த்துட்டு கெளம்பிடுவோம்.

எனக்கு இங்க ரோமிங்... சோ பாலன்ஸ் இல்ல... அப்பறம் கூப்பிடுறேன்" என்று அவசரமாகக் கூறி வைத்தான்.

"அது என்ன நான் கூப்பிடுறேன்? திமுரு... ஏன் பாலன்ஸ் இல்லன்னா ரீசார்ஜ் பண்ண மாட்டானா? ஊர் சுத்த மட்டும் தெரியுது... இவனா கூப்பிடுற வரைக்கும் நான் கூப்பிட மாட்டேன்...

என்னமோ ஒரு ஒரு வார்த்தப் பேசிட்டு என்ன பேசவே விடாம வெக்குறான்?" என்று புலம்பியவள் அதன் பின் எல்லோரிடமும் எரிந்து விழுந்தாள். ஸ்வப்னாவே அவளிடம் பேசுவதற்குத் தயங்கினார்.

அந்த இரண்டு நாட்கள் ஜிஷ்னாவிற்கு பைத்தியம் பிடிக்காதக் குறையாக இருந்தது. ஏதோ தோன்ற மொபைலை எடுத்துப் பார்த்தாள். கல்லூரி முடிந்த அந்த ஒரு வாரத்தில் ஜேஷ் ஒரு முறைக் கூட அழைக்கவே இல்லை என்பது உரைத்தது.

"அய்யோ... அப்போ எல்லாம் எதுவுமே தோணல... இப்போ மட்டும் ஏன் இப்படி கஷ்டமா இருக்கு... ஒரு வேல அவன் பேசலனாலும் ஒரே ஊருல இருக்கான்... நெனச்சப்போ பேசிக்கலாம் பாத்துக்கலாம்னு தெனாவட்டுல இருந்தேனோ...

இப்போ அவன் ஒரே ஒரு மெசேஜ் அனுப்ப மாட்டானான்னு ஏங்குறேன்... அவன் கண்டுக்கவே மாட்டேங்குறானே..." என்று யோசித்தவளுக்குத் தொண்டை அடைத்து அழுகை முட்டிக் கொண்டு வந்தது.

இரண்டு நாட்களுக்குப் பிறகு "ம்மா... நான் வெளிலப் போறேன்..." என்று சமையலறையுள் எட்டிப் பார்த்துக் கூறினாள் ஜிஷ்னா. மறுநாள் ஜேஷ் ஹைதராபாத்திலிருந்து கிளம்பி விடுவான் என்ற எண்ணமே அவளுக்கு சிறிது ஆறுதலாக இருந்தது. ஆனாலும் வீட்டில் இருப்பது மூச்சு முட்டுவது போல் இருந்தது.

"எங்க போற?" என்றார் ஸ்வப்னா.

"எங்கயோ போறேன்... உனக்கென்ன? ஏன் எப்போ பாரு கேள்விக் கேட்டுக்கிட்டே இருக்க?" என்றுக் கத்தி விட்டு வெளியேறினாள் ஜிஷ்னா.

"இப்போ நான் என்ன கேட்டுட்டேன்னு இந்த கத்து கத்துறா? நாலு நாளா இவக்கிட்ட பேசவே பயமா இருக்கு.... எப்போ பாரு எரிஞ்சு விழுந்துக்கிட்டு... எங்க போயிட போறா... கழுத கெட்டா குட்டிச் சுவரு..." என்று புலம்பிக் கொண்டே வேலையைத் தொடர்ந்தார் ஸ்வப்னா.

அவர் நினைத்தது போல் ஜேஷ் வீட்டிற்கு தான் சென்றாள் ஜிஷ்னா. ரூபி கதவைத் திறந்து அவளை உள்ளே அழைப்பதற்குள் "ஆன்ட்டி எனக்கு செம பசி... சாப்பாடு எடுங்க..." என்றுக் கட்டளை இட்டு விட்டு வேகமாக ஜேஷின் அறைக்குள் சென்றாள்.

ரூபா அவளை விநோதமாக ஒரு முறைப் பார்த்து விட்டு சாப்பாடு எடுக்க சமையலறைக்குள் சென்றார்.

ஜேஷின் அறை வாயில் வரை வேகமாக வந்தவளுக்கு உள்ளேச் செல்ல முடியவில்லை. அறை முழுவதும் அவனே தெரிந்தான். அந்த அறையில் அவனுடன் சேர்ந்து அமர்ந்து பேசியது, சிரித்தது, விளையாடியது, படித்தது என்று ஏதேதோ நினைவுகள் வந்தன.

"சாப்பிடு… வாம்மா" என்று ரூபா அழைத்ததும் அறை வாயிலில் நின்றவள் அப்படியேத் திரும்பி நடந்து ஹாலிற்கு வந்தாள்.

உண்மையிலேயே நல்ல பசியில் இருந்தாள் ஜிஷ்னா. ஜேஷ் புறப்பட்டுச் சென்றதிலிருந்து சரியாக சாப்பிடாததால் வேக வேகமாக சாப்பிட்டாள். ரூபா எதுவுமே பேசாமல் அமைதியாக அருகில் அமர்ந்திருந்தார்.

சாப்பிட்டு முடித்ததும் கை கழுவி விட்டு "நான் கிளம்புறேன் ஆன்ட்டி..." என்றுக் கூறி விட்டு வெளியேறினாள்.

வீட்டை வந்தடைந்த ஜிஷ்னா வேகமாக ஓடிச் சென்று தன் அறைக் கதவை மூடித் தாழிட்டாள். எதற்காக அழுகிறோம் என்றே தெரியாமல் மெத்தையில் படுத்து கதறி அழ ஆரம்பித்தாள்.

கிளம்புவதற்கு முன் ஜேஷ் அழைப்பான் என்று எதிர்ப்பார்த்தாள் ஜிஷ்னா. ஆனால் ஜேஷ் அழைக்காததால் இவளே அவனின் மொபைலிற்கு அழைத்தாள். அதுவோ நாட் ரீச்சபிள் என்று வந்தது.

வேறு வழி இல்லாமல் பிரேமிற்கு அழைத்தாள். "அவன் என்கிட்ட பேசலையே மா. ரூபிகிட்ட பேசுனான். கெளம்புறேன்னுதான் சொல்லி இருக்கான்" என்றுக் கூறினார்.

அதன் பின் அன்று முழுவதும் ரூபாவை படுத்தி எடுத்தாள் ஜிஷ்னா. ஜேஷ் புறப்பட்டு விட்டானா? இப்போது எங்கே இருக்கிறான்? போன் செய்தானா? எப்போது வருவான்? என்றுக் கேட்டதையே மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டிருந்தாள்.

“அய்யய்யோ... என்னங்க இந்த பொண்ணு? விட்ட ‘வாங்க ஆன்ட்டி ஹைதிராபாத் போய் ஜேஷ கூட்டிட்டு வந்துடலாம்னு சொல்லுவா போல? காலையில இருந்து எத்த போன்?” ரூபா புலம்புவதைக் கேட்டு சிரித்தார் பிரேம்.

ஜேஷ் ஹைதராபாத்தில் இருந்து இரவு புறப்பட்டு சென்னை வந்த அன்று காலையே திருச்சிக்கு கிளம்பாமல் அன்று இரவு தான் சென்னையிலிருந்து கிளம்பினான். அடுத்த நாள் காலை வீட்டிற்கு வந்து சேர்ந்தான்.

காலை ஜிஷ்னா ஜேஷிற்கு "குட் மோர்னிங். ரீச்ட் ஹோம்?" என்று மெசேஜ் அனுப்பினாள்.

"ரீச்ட்" என்று மட்டும் பதில் அனுப்பினான் ஜேஷ்.

உடனே அவன் மொபைலிற்கு கால் செய்தவள் "எனக்கு வெளில போகணும். நீ வரியா? இல்ல தனியா போகவா?" என்று கேட்டாள்.

அவன் தனக்கு போன் செய்து சொல்லாததன் கோபம் இருந்தது அவள் இன்னுமே இருந்தது. அதனால் வேறு எதுவும் அவள் கேட்கவில்லை.

"எனக்கு இப்போ ரொம்ப டயர்டா இருக்கு ஜிஷ்னா. ஈவ்னிங் போகலாம். தூங்கி எந்திரிச்சு நானே போன் பண்றேன்" என்று கூறி வைத்தான் ஜேஷ். அவன் குரலிலேயே அவனின் சோர்வு தெரிந்தது.

ஜேஷ் மாலை ஜிஷ்னாவை அழைத்து போகலாமா என்று கேட்டான். அவள் தயாராகி விட்டு சொல்வதாக கூறி வைத்தாள். சிறிது நேரம் கழித்து கால் செய்து வந்து அழைத்து செல்லுமாறு கூறினாள்.

அவள் வீட்டிலிருந்து கிளம்பும்போது "எங்க போகணும்? என்ன வாங்கணும்?" என்றுக் கேட்டான் ஜேஷ்.

"மெயின் கார்ட் கேட் போகணும். நெறைய வாங்கணும்" என்று மட்டும் கூறி முகத்தை திருப்பிக் கொண்டாள் ஜிஷ்னா.

கடை வீதியில் சுற்றித் திரிந்து ஏதேதோ வாங்கினாள். "ஏய் பாக்குற கடையில எல்லாம் எதுக்கு டி நிக்குற? என்ன வாங்க வந்த? இப்படி எல்லாத்தையும் வாங்குற?" என்று சலித்துக் கொண்டான் ஜேஷ்.

"எனக்கு தேவையானத வாங்குறேன்" என்றுக் கூறி நடந்தாள் ஜிஷ்னா.

எல்லாவற்றையும் வாங்கி முடித்து மீண்டும் பைக் எடுக்கும்போது அவளுக்கென்று வாங்கிய பர்ல் செட்டை நீட்டினான் ஜேஷ்.

வேகமாக திறந்துப் பார்த்தவள் "ரொம்ப அழகா இருக்கு ஜேஷ். எனக்கு ரொம்ப புடிச்சுருக்கு" என்று கூறினாள் ஜிஷ்னா. ஸ்வப்னாவிற்கு வாங்கியதையும் கொடுத்தான். அதுவும் அழகாக இருப்பதாக கூறி வாங்கி உள்ளே வைத்தாள் ஜிஷ்னா.

பைக்கில் செல்லும்போது "பர்ல் செட் நான் கேட்டேன் சரி... அத தவிர வேற எதுவும் உனக்கு வாங்கிட்டு வரணும்னு தோணலையா?" என்று கேட்டாள் ஜிஷ்னா.

"தோணல... வாங்கல..."

"ஏன் இப்படி சலிச்சுக்கற?"

"டயர்டா இருக்கு ஜிஷ்னா. ஒரு நாள் புல்லா ட்ராவல்... நீ கூப்பிட்டன்னு தான் வந்தேன்..."

"நான் கூப்பிட்டா எப்பனாலும் வருவியா?"

"வந்துட்டு தான இருக்கேன்…"

"1 வீக் என்ன பண்ண?"

"அங்க போன அன்னைக்கு இன்டர்வ்யூல டைம் போயிடுச்சு. அதுக்கப்பறம் ஊர் சுத்துனோம்"

"அங்க போய் இருந்த வரைக்கும் ரோமிங்... பாலன்ஸ் இல்ல... கால் பண்ணல சரி... கிளம்பிட்டேன்னு சொல்ல மாட்டியா? அட்லீஸ்ட் சென்னை வந்து மெசேஜாவது பண்ணி இருக்கலாம்ல?

உன் நம்பர் நாட் ரீச்சபிளாவே இருந்துது. உங்க வீட்டுக்கெல்லாம் போன் பண்ணி கேக்க வேண்டியதாப் போச்சு. நான் இத்தன தடவ போன் பண்ணா அவங்க என்ன நெனைப்பாங்க?"

"என்ன நெனைப்பாங்க?"

"சம்மந்தமே இல்லாம இவ எதுக்கு இத்தன தடவ கால் பண்ணுறான்னு நெனைக்க மாட்டாங்க? ஒரு தடவ ரெண்டு தடவன்னா பரவாயில்ல... நாள் பூரா அடிச்சா... இந்த பொண்ணு நம்ம பையன லவ் பண்ணுறான்னு நெனைக்க மாட்டாங்க?"

"எதுக்கு அப்படி நெனைக்கப் போறாங்க? அப்படியே நெனச்சாலும் நீதான் லவ் பண்ணலல்ல?" ஜிஷ்னாவின் வீடும் வந்தது.

"கரெக்டா பதில் சொல்லாம எஸ்கேப் ஆகுற மாதிரி டைம்ல தான் இவ இந்த கேள்வியெல்லாம் கேப்பா... இப்போ உள்ள ஓடிடுவா..." என்று முணுமுணுத்தான் ஜேஷ்.

இறங்கி வண்டியின் முன்னே வைத்திருந்த பைகளை ஜேஷின் முகத்தை பார்த்துக் கொண்டே எடுத்த ஜிஷ்னா "எனக்கு அந்த சாரீ புடிச்சுருக்கு. வாங்கி தா" என்று கூறி திரும்பி நடந்தாள்.

"ம்ம்" என்று கூறி வண்டியை ஸ்டார்ட் செய்ய போனவன் "என்னது?" என்று அதிர்ந்து அவள் சென்ற திசையைத் திரும்பிப் பார்த்தான்.

அதற்குள் ஜிஷ்னா வீட்டினுள் சென்றிருந்தாள். வேகமாக மொபைலை எடுத்தவன் "வெளில வா. இல்லனா இப்போ உள்ள வந்து உங்கம்மா ஜூஸ் இல்ல வெஷத்த குடுத்தாலும் குடிப்பேன்" என்று அவளுக்கு மெசேஜ் அனுப்பினான்.

"ப்ளீஸ் நீ கெளம்பு. நான் போன் பண்ணுறேன்" என்று பதில் அனுப்பினாள் ஜிஷ்னா.

"அட்லீஸ்ட் ஜன்னல் வழியாவாது ஒரு தடவ எட்டி பாரேன்" என்று அனுப்பினான் ஜேஷ்.

ஜிஷ்னாவிற்கு அவனின் ஏக்கம் புரிந்தது. ஹாலில் இருக்கும் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்து சிரித்து "போ" என்பது போல் கை காட்டி விட்டு உள்ளேச் சென்றாள்.

எப்பொழுதும் போல் இப்பொழுதும் அவளின் கன்னக்குழியில் மயங்கி ஒரு நொடி நின்றவன் கிளம்பி வீடு வந்து சேர்ந்தான்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
26

ஜேஷ் வீட்டின் உள்ளே நுழையவும் ஜிஷ்னாவின் கால் வரவும் சரியாக இருந்தது. மொபைலை பார்த்ததும் வேகமாக ஓடி பெட்டில் டைவ் அடித்து கவுந்து படுத்து காலை அட்டெண்ட் செய்தான் ஜேஷ்.

இதைக் கண்ட ரூபா "இன்னைக்கு நைட் கண்டிப்பா அப்பாவும் பையனும் ஆரம்பிச்சுடுவாங்க" என்று நினைத்து சிரித்து விட்டு சென்றார்.

ஜேஷ் போனை எடுத்து ஹலோ என்று மூன்று முறை சொல்லியும் அந்த பக்கம் இருந்து எந்த சத்தமும் இல்லை. வாய் விட்டு சிரித்தவன் "வெக்கப்படுறன்னு காமெடி பண்ணாத... எப்படியும் பத்து நிமிஷத்துல திட்ட போற..." என்றான்.

"திமிரெடுத்தவனே"

"பத்தியா திட்டுற... நான் சொல்லல?" என்று அதற்கும் சிரித்தான். பின் "சரி சரி... என்ன சொல்ல போன் பண்ண? அத சொல்லு முதல்ல" என்று ஆர்வமாகக் கேட்டான் ஜேஷ்.

ஜிஷ்னா அமைதியாக இருந்தாள். சில நொடிகளுக்கு பிறகு அவள் விசும்பும் சத்தம் கேட்டது. "ஹே என்னாச்சு? எதுக்கு இப்போ அழுகுற? ஏதோ விஷயம் உனக்கு உறுத்திட்டே இருக்குன்னு தெரியும். தயவு செஞ்சு இப்போவே அத சொல்லிடு ஜிஷ்னா"

"ம்ம்" என்றுக் கூறி அப்போதும் விசும்பிக் கொண்டிருந்தாள்.

"உன்ன ம்ம் கொட்ட சொல்லல... விஷயத்த சொல்லு"

"சாரி... நான் இவ்வளோ நாள் உன்ன கஷ்டப்படுத்திட்டேன். எனக்கும் புடிச்சிருந்துது. உன்கிட்ட சொல்லாம கஷ்டப்படுத்துனதுக்கு சாரி"

"ஷ்ஷ்ஷ்… உன்னோட… இந்த அழுகைய கேக்குறதுக்கு உங்கம்மா குடுக்கற ஜூஸ குடிச்சுடலாம்" என்று அவளை சகஜமாக்க கூறினான் ஜேஷ்.

"வெளையாடத ஜேஷ். பிரச்சனையே அவங்களாலதான். 'இவன் பிரண்ட் பிரண்ட்னு வீட்டுக்கு வரான். கடைசில லவ் பண்ணுறேன்னு சொல்ல போறான்' னு சொல்லிகிட்டே இருப்பாங்க. அதெல்லாம் இல்லன்னு எத்தன நாள் அவங்களோட ஆர்க்யூ பண்ணி இருக்கேன் தெரியுமா?

அப்படி இருக்கப்போ நீ வந்து லவ் பண்ணுறேன்னு சொன்னா நான் எப்படி அக்செப்ட் பண்ணுவேன் சொல்லு... இதுல எங்கம்மாவோட அப்பா வேற... அது என்ன ஜிஷ்னாவ ஏதோ ஒரு பையனோட பழக விடறீங்கன்னு கேட்டு பெரிய பிரச்சன பண்ணாங்க..."

"ஒஹ்ஹ்... இவ்வளவு நடந்திருக்கா உங்க வீட்டுல? அப்பறம் எப்படி உங்கப்பா வந்து ஜிஷ்னாவ ஜேஷுகு கல்யாணம் பண்ணி குடுக்க உங்களுக்கு சம்மதமான்னு பிரேம் அப்பாகிட்ட கேட்டாங்க?" என்றுப் புரியாமல் கேட்டான் ஜேஷ்.

“என்னது? அப்பா கேட்டாங்களா? இது எப்போ நடந்துது?"

"தண்ணி அடிச்சதுக்கு முதல் தடவ திட்டுனியே அன்னைக்கு அங்கிள் அப்பகிட்ட கேட்டிருக்காங்க. எனக்கே அது அடுத்த நாள் ஈவ்னிங் அப்பா சொல்லி தான் தெரியும்"

"அட்லீஸ்ட் அப்பா ஒருத்தருக்காவது இந்த எண்ணம் இருக்கே..." என்று பெருமூச்சு விட்டாள் ஜிஷ்னா.

"சரி இப்போ இத எப்படி சரி பண்ணுறது?"

"தெரில ஜேஷ். இதுக்கெல்லாம் முழு காரணம் தாத்தா தான். அவங்க தான் கேஸ்ட் அது இதுன்னு சொல்லி பிரச்சன பண்ணுறது... இன்னும் அம்மாக்கிட்ட என்னென்ன சொல்லி வெச்சுருக்காங்கன்னுத் தெரியல…" என்று கவலையாகக் கூறினாள் ஜிஷ்னா.

"அத விடு... லவ் பண்ணுறேன்னு சொல்லி ரெண்டு நிமிஷம் கூட பக்கத்துல நிக்காம ஓடி போயிட்ட... போன் பண்ணாலும் எடுத்ததுலேருந்து பிரச்சன பிரச்சன... விடு பாத்துக்கலாம்" என்று வேகமாக கூறியவன் "அப்பறம்..." என்றுக் குழைந்தான்.

ஜிஷ்னா அமைதியாக இருக்கவும் "என்ன சிரிக்கறியா? ஏற்கனவே அதுல தான் எல்லாம் ஆரம்பிச்சுது... நீ சிரிக்கறப்போ கன்னத்துல விழுற குழி இருக்கே... ஷப்பா... அழகா இருக்கும் தெரியுமா...

எத்தன நாள் அத பார்த்து ரசிச்சிருக்கேன் தெரியுமா... அதனால தான் கிளாஸ்ல எல்லா ஸ்டாப்பும் இது தியேட்டர் இல்ல ஒழுங்கா உக்காருன்னு சொல்வாங்க..."

"தெரியும் தெரியும்... எப்போ நான் சிரிச்சாலும் அவசரமா பைக் கண்ணாடிய பாக்குறத நானும் பார்த்துருக்கேன்..."

"எத பத்தி பேசுனாலும் ‘சரி... எனக்கும் புடிச்சுருக்கு’ங்குற மாதிரியே பேசுறது... கடைசில எனக்கு புடிக்கவே இல்லன்னு சாதிக்கறது... படுத்தி எடுத்துட்டடி மனுஷன...

எனக்கு என்ன எதுவும் தெரியாதுன்னு நெனைக்குறியா? கொஞ்ச நாள் விட்டா தானா வழிக்கு வந்துடுவன்னு தெரிஞ்சேதான் விட்டுட்டு கெளம்பி போனேன்..."

"அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லையே..." என்றுக் கூறியவள் "ஐயோ எதையெல்லாம் நோட் பண்ணானோ தெரியலையே..." என்று யோசித்து தலையணை உரையை விரலால் சுற்றினாள்.

"இப்பயும் ஒத்துக்க மாட்டியே... அப்பறம் எதுக்கு கிச்சென் மேடைல உக்காந்து சாப்பிட சொன்ன?"

"எனக்கு தோச ஊத்தி குடுக்க வசதியா இருக்குமேன்னு தான்..."

"ஆமா ஏற்கனவே 3 தோச பக்கத்துல ஊத்தி வெச்சுட்டு மீதி தோசைய ஊத்தி குடுக்குறதுக்கு வசதியா இருக்கும்னா?

"இல்ல..."

"எது உன்கிட்ட இல்லையோ அத வாங்கி தரேன்னு சொன்னப்போ நான் சொன்னதக் கேட்டு கோவம் இருந்தா பேசாம போயிருக்கணும்... மண்டையிலயே அடிக்குறது... மொறைக்கறது... ஆனா கூடவே வரது..."

"இப்படியெல்லாம் கேட்டா சரி வாங்கி குடுன்னா சொல்லுவாங்க... லூசு மாதிரி கேக்குறான் பாரு..." என்று யோசித்து அமைதியாக இருந்தாள் ஜிஷ்னா.

"சாரீ கட்டுன அன்னைக்கு காலேஜூல எறக்கி விட்டு ஐ லவ் யூ னு சொன்னா… பே னு முழிக்குறது… ஆனா அதுக்கப்பறம் திட்டுறது… பேசாம போறது… ஏன்டி இப்படி?"

"இவ்வளவு பிரச்சனைக்கு நடுவுல நீ என்ன சொன்னாலும் நான் அதுக்கு பதில் சொல்லணும்னு நினைக்குறியா? இந்த ஒன் வீக் எனக்கு பைத்தியமே புடிச்சுடுச்சு...

நீ ஒழுங்காப் பேசிட்டு போயிருந்தாலும் பரவாயில்ல... பேசாம மூஞ்சிய தூக்கி வெச்சுக்கிட்டு போன... அங்கேருந்து கெளம்பறேங்கறதையும் சொல்லல... எனக்கு எப்படி இருந்துது தெரியுமா? உன்ன ரொம்ப மிஸ் பண்ணேன்…."

“உனக்கு வேணா அப்படி இருக்கலாம்... ஆனா நான் எங்க போனாலும்... எவ்வளவு நாள் ஆனாலும்... எனக்கென்னமோ நமக்குள்ள இருக்க தூரம் அதிகம் ஆகலன்னு தான் தோணும்... இது எப்பயுமே நகராத தூரமா தான் இருக்கும்...”

………………………….

“சரி நாளைக்கு எங்க போகலாம் சொல்லு..."

"ஐயோ நான் எங்கயும் வரலப்பா... சும்மாவே உன்னயெல்லாம் சமாளிக்க முடியாது... இதுல நான் லவ் பண்ணுறேன்னு வேற சொல்லிட்டேன்... என்னால முடியாது பா..."

"ச்ச ச்ச… லவ் பண்ணுறேன்னு சொல்லுற வரைக்கும்தான் நாங்கலாம் படுத்துவோம்... லவ் பண்ணுறேன்னு சொல்லிட்டா நாங்கலாம் நல்ல பையன் மா..."

"நீதான… நம்பிட்டேன்... இனி இத போய் ஊர் பூரா சொல்லணும் என்ன..."

"பிரேம் ரூபிகிட்ட மட்டும் தான் சொல்லுவேன்"

"வேற யார்கிட்டயும் சொல்ல மாட்டியா?"

"நானா சொல்ல மாட்டேன்... மத்தவங்களுக்கா தெரிஞ்சா தான் உண்டு..."

"நீ போடுற ஆட்டத்துல எல்லாருக்கும் தெரிஞ்சுடும்..."

"விடு விடு... சரி நாளைக்கு எங்க வீட்டுக்கு வா"

"சரி... காலையில வந்து பிக் அப் பண்ணிக்கோ..."

"அவ்ளோதானா?" என்று மீண்டும் குழைந்தான் ஜேஷ்.

"அதான் வரேன்னு சொல்லிட்டேனே..."

"அப்போ நேர்லையா???"

"ஐயோ ப்ளீஸ் விட்டுடுடா... என்னால முடியல..."

"இவ்வளவு நாள் உன் டார்ச்சர் அனுபவிச்சதுக்கு ஞாயமா பாத்தா நீ எனக்கு கேக்காமயே குடுத்திருக்கணும்... நீ என்னமோ கேட்டதுக்கு அப்பறமும் சலிச்சுக்குற?"

"குட் நைட்" என்றுக் கூறி ஒரு நொடி அமைதியாக இருந்தவள் "ஐ லவ் யூ" என்று வேகமாக கூறி ஒரு முத்தத்தை கொடுத்து கட் செய்தாள். அப்படியே அமர்ந்து வெட்கத்தோடு சிரித்து கொண்டிருந்தாள்.

"ஏய் ஏய் போன்ல இல்ல... ச்ச வெச்சுட்டா... இந்த பழக்கத்த மட்டும் விட மாட்டாளே..."

மொபைலை பெட்டில் வைத்தவன் வேகமாக எழுந்து கிச்செனுள் சென்று ரூபாவின் கன்னத்தை கிள்ளி “அம்மா உன் மருமக ஓகே சொல்லிட்டா…” என்றான் குதூகலமாக.

“நாளைக்கு வேற வீட்டுக்கு வரேன்னு சொல்லி இருக்கா…” என்று சிரித்துக் கொண்டே சொன்னான்.

அப்போது உள்ளே வந்த பிரேம் “டேய் ஏன்டா என் பொண்டாட்டிய கொஞ்சுற?” என்றுக் கூறி அவன் கையை எடுத்து விட்டு அவர் ரூபாவின் கன்னத்தை கிள்ளினார்.

“அம்மாவோட சேந்து சேந்து நீங்க கெட்டுப் போயிட்டீங்கபா… உங்களுக்கு ஒண்ணு தெரியுமா? ஜிஷ்னா ஓகே சொல்லிட்டா…” என்று மகிழ்ச்சியாகக் கூறினான் ஜேஷ்.

“ஓகே சொல்லிட்டாளா? அப்போ ட்ரீட் தான்... வா வா... என்ன நடந்துது சொல்லு” என்றுக் கூறி அவனை அழைத்துச் சென்றார் பிரேம். ஹாலில் அமர்ந்து ரூபா, பிரேம் இருவரிடமும் அனைத்தும் கூறினான் ஜேஷ்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
27

காலை ஜிஷ்னாவின் வீட்டிற்கு சென்ற ஜேஷ் உள்ளே செல்லாமல் வெளியே இருந்து ஹார்ன் அடித்தான். வெளியே வந்த ஜிஷ்னாவை பார்த்து சிரித்துக் கொண்டே இருந்தான்.

"ஏன் உள்ள வரல?" என்று கேட்டாள் ஜிஷ்னா. “நான் இருக்க மூட்ல என் முகத்தைப் பாத்தா உங்கம்மா கண்டு புடிச்சுடுவாங்க… அதான் வரல"

பைக்கில் போகும்போது “நைட் போன்ல குடுத்தியே…. அந்த பக்கம் என்ன சொல்லுறாங்க? என்ன குடுக்குறாங்கன்னு எல்லாம் கவனிக்குறது இல்லையா? இப்போ மாட்னல்ல… வீட்டுக்கு வா பாத்துக்கறேன்” என்று மண்டையை ஆட்டி ஆட்டிக் கூறினான்.

அவன் வண்டியை நிறுத்தியதும் வேகமாக உள்ளே ஓடி சென்றாள் ஜிஷ்னா. அவள் இன்று வீட்டிற்கு வருவதால் பிரேம் பாக்டரிக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார்.

“என்ன அங்கிள் பாக்டரிக்கு போகலையா? இந்த நேரத்துல வீட்டுல இருக்கீங்க?”

“நீ வரேன்னு சொன்னான்... அதான்டா உன்ன பாக்குறதுக்காக வெயிட் பண்ணுறேன்”

அப்போது அங்கே வந்த ரூபா “வா ஜிஷ்னா” என்றார்.

இருவரும் அருகருகில் நிற்கவும் அவர்கள் காலில் விழுந்தாள் ஜிஷ்னா. இது அனைத்தையும் ஒரு சிரிப்புடன் கையைக் கட்டி தள்ளி நின்று பார்த்துக் கொண்டிருந்தான் ஜேஷ்.

“நல்லா இரும்மா... அப்போ அப்பாக்கிட்ட பேசவா?” என்றுக் கேட்டார் பிரேம். ஜேஷை திரும்பி பார்த்தாள் ஜிஷ்னா.

“அவங்க அம்மாவும் தாத்தாவும் பிரச்சன பண்ணுறாங்களாம் பா. நீங்க அங்கிள் கிட்ட பேசுங்க”

“அப்படியா?” என்று யோசனையாக கூறியவர் “சரி நான் ஹரீஷ்கிட்ட பேசுறேன். நீ சாப்பிடுடா” என்றுக் கூறி கிளம்பிச் சென்றார்.

அவர் கிளம்பியதும் கிச்செனுள் ரூபாவுடனே சென்றாள் ஜிஷ்னா. கிச்சேன் வாசலில் நின்று ஒரு முறை திரும்பி பார்த்த போது ஜேஷ் அவனுடைய சுட்டு விரலால் கன்னத்தை தட்டி காண்பித்தான். அதை பார்த்தவள் உடனே வேகமாக உள்ளே ஓடி மறைந்தாள்.

சிறிது நேரம் கழித்து “நீ வெளில இரு ஜிஷ்னா. எதுக்கு இந்த சூடுல நிக்குற…” என்றுக் கூறி அவளை வெளியே அனுப்பினார் ரூபா. ஹாலில் ஜேஷ் இல்லாததை கண்டு அவன் அறைக்குச் சென்று வாயிலில் தயங்கி நின்றாள்.

“உள்ள வா ஜிஷ்னா” என்றுக் கூறி லாப் டாப்பில் மூழ்கினான் ஜேஷ். “என்ன பண்ணுற?” என்று கேட்டு பெட்டில் அவன் அருகில் அமர்ந்தாள் ஜிஷ்னா.

“பிரண்ட் pen drive குடுத்தான். படம் காப்பி பண்ணிட்டு ஈவ்னிங் குடுக்கணும்... அதான் காப்பி…” அவன் சுதாரிப்பதற்குள் அவன் கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்து விட்டு சிட்டாகப் பறந்துச் சென்றாள் ஜிஷ்னா.

ஹாலிற்கு வந்தவளை ரூபா சாப்பிட அழைத்தார். ஜேஷ், ஜிஷ்னா, ரூபா மூவரும் அமர்ந்து சாப்பிட்டனர். ஜிஷ்னா வழக்கத்தை விட இன்று மிகவும் அமைதியாக இருந்தாள்.

சிறிது நேரம் கழித்து அவளை வீட்டில் விட பைக்கில் செல்லும்போது “இதுக்கு நீ குடுக்காமையே இருந்திருக்கலாம்…” என்று வெறுப்புடன் கூறினான் ஜேஷ்.

“நீ எதுக்கு அடிய போடுறன்னு தெரியும். ஒழுங்கா ஓட்டு”

சிரித்து விட்டு சாலையில் கவனம் வைத்தான் ஜேஷ்.

அன்று மாலை ஹரீஷை போனில் அழைத்து பேசினார் பிரேம். “ஹரீஷ் நீங்க அன்னைக்கு கேட்டீங்களே... ஜேஷ் ஜிஷ்னா பத்தி... இந்த கல்யாணத்தில எங்களுக்கு விருப்பம் தான் ஹரீஷ்...”

“அப்படியா? ரொம்ப சந்தோஷம் பிரேம்... அன்னைக்கு நான் கேட்டத நீங்க எப்படி எடுத்துக்கிட்டீங்களோன்னு ஒரு பயம் இருந்திட்டே இருந்துது. அப்பறம் நீங்க சகஜமா பழகுறத பார்த்துதான் நிம்மதி ஆச்சு. இப்போ இத கேக்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு பிரேம்...”

“தப்பா நினைக்குற அளவுக்கு நீங்க எதுவும் கேக்கல ஹரீஷ்... சொல்லப் போனா எங்களுக்கு ஜிஷ்னாவ ரொம்பவே பிடிக்கும்... ஆனா அன்னைக்கு நான் சொன்ன மாதிரி இது அவங்க எடுக்க வேண்டிய முடிவு... அதான் கொஞ்சம் தயங்கினேன்...”

“புரியுது பிரேம்... ஆனா எனக்கு என்னமோ ஜேஷ் ஜிஷ்னா ரெண்டு பேருக்கும் இதுல விருப்பம் இருக்கோன்னு தோணுது...”

“ஆமா ஹரீஷ்... ரெண்டு பேருக்கும் பிடிச்சிருக்கு... அது உறுதியா தெரிஞ்சதுக்கு அப்பறம் தான் நான் உங்ககிட்ட பேசுறேன்... இத உங்க வீட்டுல எப்படி எடுத்துப்பாங்கன்னு தெரியல... நீங்கதான்...”

“நான் பார்த்துக்குறேன் பிரேம்... இனிமே எங்க வீட்டுல எல்லாரயும் சரி கட்டுறது என் பொறுப்பு...”

“ரொம்ப சந்தோஷம் ஹரீஷ். அப்போ நீங்க பேசிட்டு எனக்கு முடிவு சொல்லுங்க.... உங்க போன்காக நான் வெயிட் பண்ணுறேன்...”

ஹரீஷிற்கு மிகவும் மகிழ்ச்சி.... தான் ஆசைப்பட்ட... ஜிஷ்னா ஆசைப்பட்ட இடத்திலேயே அவள் வாழப் போகிறாள் என்றதும் மனம் துள்ளி குதித்தது. வீட்டில் இருப்பவர்களை எப்படியாவது சரிக்கட்டி விடவேண்டும் என்று உறுதிப் பூண்டார்.

வீடு திரும்பிய ஹரீஷ் ஸ்வப்னாவை அழைத்து நேரடியாக விஷயத்தைக் கூறினார். “ஜிஷ்னாவ ஜேஷுகு கல்யாணம் பண்ணி குடுக்கலாம்னு யோசிக்கறேன்”

“யார கேட்டு இதெல்லாம் முடிவு பண்ணுறீங்க? எனக்கு தான் இதுல இஷ்டம் இல்லன்னு சொன்னேனே… எங்க அப்பாவுக்கு இதுல இஷ்டம் இல்ல. கேஸ்ட் மாத்தி எல்லாம் கல்யாணம் பண்ண ஒத்துக்க மாட்டாங்க...”

“என்ன உனக்கு புடிக்கல? அவங்க பேமிலியவே பாத்து பேசி பழகியிருக்க… அவங்க அப்பா பையன் எப்படி இருக்காங்க தெரியுமா? பிரேம் தண்ணி அடிக்குறது முதற்கொண்டு எல்லாத்தையும் அவரு வைப்கிட்ட சொல்றாரு….

இந்த மாதிரி விஷயம் சொல்றதுக்கும் ஒரு தைரியம் வேணும்... அப்ப தான் நாளைக்கு லைப்ல எந்த பிரச்சன வந்தாலும் சொல்ல தோணும்...

பிரேம் லவ் மேரேஜ் பண்ணி எப்படி இருக்காங்க... நமக்குள்ள எத்தன சண்ட வந்திருக்கு... இன்னுமே எனக்கு உன்கிட்ட சில விஷயம் பேச தயக்கமா இருக்கும்.

சும்மா உன் சொந்தக்காரங்க சொல்லுறாங்கன்னு சொல்லாத... அவங்க வாழ்ந்து முடிச்சவங்க... அவங்களுக்காக இனி வாழப் போற என் பொண்ணு லைப் கெடுக்க முடியாது.

நம்ம பொண்ணுக்கே கல்யாணம் பண்ணுற வயசு வந்துடுச்சு... ஆனா இன்னும் நீயும் எங்கம்மாவும் ஒழுங்கா பேசிக்குறீங்களா? ஜேஷ் அம்மாக்கிட்ட உன் பொண்ணு எப்படி செல்லம் கொஞ்சுறான்னு உனக்கு தெரியாது?

ஜேஷ கல்யாணம் பண்ணா ஜிஷ்னா நல்லா இருக்கமாட்டா... அவங்க வீட்டுல அவங்க பேமிலியோட அவ சந்தோஷமா இருக்க மாட்டான்னு சொல்லு… நான் ஒத்துக்கறேன்”

“அப்படியெல்லாம் இல்லங்க... அவன் நல்ல பையன். அவங்க குடும்பம் ஜிஷ்னாவ நல்லா பாத்துப்பாங்க…”

“இது போதும் எனக்கு. உங்க அப்பா அவரு பொண்ணு லைப் வேணா டிசைட் பண்ணலாம்... என் பொண்ணு விஷயத்துல தலையிட அவருக்கு எந்த உரிமையும் இல்ல” என்றுக் கூறி தன் மாமனாருக்கு அழைத்தார் ஹரீஷ். அவரை உடனேக் கிளம்பி வருமாறு கூறினார்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
28

அடுத்த நாள் காலை வீட்டில் வந்து நின்ற ஸ்வப்னாவின் அப்பா “என்ன தான் மாப்பிள்ள நெனச்சுட்டு இருக்கீங்க? அந்த பையன பத்தி முழுசா தெரிஞ்சும் எப்படி ஜிஷ்னாவ கல்யாணம் பண்ணி குடுக்கணும்னு சொல்லுறீங்க? அந்த பையன் தண்ணி அடிப்பானாம்... தம் அடிப்பானாம் இது…”

“மாமா நான் உங்க பொண்ண கல்யாணம் பண்ணிக்குறப்போ தண்ணி அடிப்பேன்னு சொன்னேனா? அதுக்காக இப்போ நான் உங்க பொண்ண நல்லா பாத்துக்கலன்னு சொல்லிடுவீங்களா?” என்று ஹரீஷ் கேட்டுக் கொண்டிருக்கும் போது அங்கே ஜேஷ் வந்தான்.

“எதுக்கு அங்கிள் காலைலயே வர சொல்லி போன் பண்ணீங்க?” என்றுக் கேட்டுக் கொண்டே உள்ளே வந்தவனிடம் “இவர் ஸ்வப்னாவோட அப்பா” என்று தன் மாமனாரை அறிமுகம் செய்து வைத்தார் ஹரீஷ்.

“ஒஹ்ஹ் ஜிஷ்னாவோட தாத்தாவா?” என்றுக் கேட்டு அவர் காலில் விழுந்தான் ஜேஷ்.

“எந்திரி பா... என்ன பா இது? நல்லா இரு பா...” என்றுக் கூறியவர் அவன் முகம் வருடினார்.

“இந்த பையன் தான் ஜேஷா?” என்று திரும்பி ஹரீஷிடம் கேட்டார். ஆம் என்று அவர் தலையாட்டினார்.

சிறிது நேரம் அவனை குறித்தும் அவன் குடும்பம் குறித்தும் உரையாடினார் ஜிஷ்னாவின் தாத்தா. எல்லாவற்றிற்கும் பொறுப்பாக பதில் கூறினான் ஜேஷ். அங்கு நடப்பவை அனைத்தையும் எதுவும் பேசாமல் வேடிக்கை பார்த்தனர் ஸ்வப்னாவும் ஜிஷ்னாவும்.

எல்லாவற்றையும் கேட்டு முடித்தவர் “என்ன ஸ்வப்னா வீட்டுக்கு யாராவது வந்தா இப்படி தான் நிண்ணு வேடிக்க பாப்பியா? போய் ஒரு ஜூஸாவது போட்டுக் கொண்டு வா போ” என்று ஸ்வப்னாவை விரட்டினார் அவரின் தந்தை.

“இவ்வளவு நாளும் உங்க பொண்ணு அத தவிர வேற எதையுமே தந்ததில்ல… இப்போ நீங்களுமா?” என்று மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டான் ஜேஷ்.

ஜூஸ் குடித்து விட்டு ஜேஷ் “அப்போ சரி தாத்தா… நான் கெளம்பறேன்” என்று கூறி எழுந்தான்.

அது வரை கல்யாணத்தை குறித்து ஒன்றும் பேசாமல் ஜேஷை விசாரித்து கொண்டிருந்தவர் “நாளைக்கு நாள் நல்லா இருக்கு ஜேஷ். அப்பா அம்மாவை பொண்ணு பார்க்க வர சொல்லு. மாபிள்ளைய விட்டு அப்பாகிட்ட சொல்ல சொல்றேன்” என்றுக் கூறி அவன் தோளில் தட்டி கொடுத்தார் தாத்தா.

அவர் தன் சம்மதத்தை கூறியவுடன் அங்கு இருந்த அனைவருக்குமே மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது.

அவர் இதை கூறி விட்டு உள்ளே சென்றதும் ஸ்வப்னா வேகமாக ஜேஷிடம் வந்து “சாரி பா. இத்தன நாள் எங்க அப்பாவுக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்லன்னு தான் நான் உன்கிட்ட சரியா பேசாம இருந்தேன். எனக்கும் உன்ன புடிக்கும் ஜேஷ்” என்றுக் கூறி அவன் கன்னம் வருடினார்.

“பரவாயில்லை ஆன்ட்டி. இப்போ எனக்கு சந்தோஷமா இருக்கு. யாரையும் வருத்தப்பட வெச்சுட்டு இந்த கல்யாணத்த என்னால பண்ணி இருக்க முடியாது. நான் கெளம்பறேன்”

“சரி” என்று சிரித்துக் கொண்டே தலை ஆட்டியவர் உள்ளே சென்றார். “அப்பாகிட்ட சொல்லிடுறேன் ஜேஷ்” என்றுக் கூறிய ஹரீஷ் ஸ்வப்னாவின் பின்னால் சென்றார்.

“பையன பாக்காமலே இத்தனை நாள் சவுண்ட் விட்டாரா உங்க அப்பா? இப்போ பையன பாத்ததும் ஆளு பிளாட் ஆயிட்டாரு. இதுக்கு பேசாம பையன் போட்டோ பாக்கணும்... பையனோட பேசணும்னு சொல்லியிருந்தா ஏற்பாடு பண்ணியிருப்பேன்ல?

அவரு தான் அப்படின்னா அவரு சொல்லுறத கேட்டு நீயும் லூசு மாதிரி இத்தன நாள் கத்தியிருக்க… இனி ஒரு வாட்டி இப்படி ஏதாவது செஞ்சுப் பாரு…அப்பறம் நான் யாருன்னுக் காட்டுறேன்...” என்று ஸ்வப்னாவை மிரட்டி விட்டு சென்றார் ஹரீஷ்.

கேட் வரை உடன் வந்த ஜிஷ்னாவிடம் “தாத்தா கூட ஓகே சொல்லிட்டாரு… நீதான் எதுவும் குடுக்க மாட்டேங்கற…” என்றுக் கூறி அவளை திரும்பி பார்த்தான் ஜேஷ்.

“ஒத வாங்குவ… கெளம்புடா...” என்றுக் கூறி அவனை விரட்டினாள் ஜிஷ்னா.

ஹரீஷ் போன் செய்து அங்கு நடந்த அனைத்தையும் பிரேமிடம் கூறினார். அடுத்த நாள் காலை பெண் பார்க்க வீட்டிற்கு அழைத்தார்.

“அது எதுக்கு ஹரீஷ்? தேவையில்லாம... அதான் எல்லாம் பேசி முடிவு பண்ணியாச்சே?”

“அது சும்மா என் மாமனாருக்காக பிரேம். நீங்க வாங்க... மத்தத இங்க வந்து பேசிக்கலாம்” என்றுக் கூறினார் ஹரீஷ். சரி என்று கூறி வைத்தார் பிரேம்.

ஜேஷ் வீட்டிற்குள் நுழையும்போதே “என்னடா தாத்தாவ எப்படி சமாளிச்ச?” என்று ஆச்சர்யமாக கேட்டார் ரூபா.

“மா... அத விடு மா... ஆன்ட்டி இன்னைக்கு என்கிட்ட பேசுனாங்க தெரியுமா? இத்தன நாள்ல அவங்க இப்போ தான் என்கிட்ட நல்லா பேசுறாங்க…” என்று மிகுந்த சந்தோஷத்துடன் கூறினான் ஜேஷ்.

“எப்படியோ சாதிச்சுட்ட… சரி நாளைக்கு அவங்க வீட்டுக்கு வரேன்னு சொல்லிருக்கேன். காலைல போகணும்... நான் கணேஷ வர சொல்லுறேன்... நம்ம போய் பேசிட்டு வந்துடலாம்...”

தன் அறைக்கு சென்ற ஜேஷ் உடனே ஜிஷ்னாவிற்கு கால் செய்தான். அவள் எடுத்ததும் “ஜேஷ் இப்போ தான் தாத்தா கூப்பிட்டாங்க. கொஞ்ச நேரம் கழிச்சு வந்து கூப்பிடுறேன்” என்று கூறி வைத்தாள்.

சிறிது நேரம் கழித்து அழைத்தவள் அதிகம் பேசாமல் தன் மகிழ்ச்சியை மட்டும் கூறி வைத்தாள்.

அடுத்த நாள் காலை பெண் பார்க்க ஜேஷ் குடும்பத்தினர் ஜிஷ்னாவின் வீட்டிற்கு சென்றனர். அங்கு இன்னும் சில சொந்தங்கள் இருந்தனர். ஜிஷ்னாவை புடவையில் பார்த்த ஜேஷ் அனைவர் முன்பிலும் அவளை பார்க்கவும் முடியாமல் பார்க்காமல் இருக்கவும் முடியாமல் தவித்தான்.

“எப்போ கல்யாணத்த வெச்சுக்கலாம்?” என்று அங்கிருந்த ஒருவர் கேட்கவும் “அடுத்த முகூர்த்தத்துலையே வெச்சுக்கலாம்” என்று அவசரமாக கூறினார் ஹரீஷ்.

அவர் அருகில் அமர்ந்திருந்த பிரேம் “ஏன் ஹரீஷ் இவ்வளோ அவசரம்?” என்று அவர் கதை கடித்தார்.

“ஐயோ பிரேம்... உங்களுக்கு தெரியாது... இப்போதான் என் மாமனார சமாளிச்சிருக்கேன். இப்போ வேற இன்னும் கொஞ்சம் சொந்தக்காரங்க வந்துருக்காங்க.

அதுங்க ஏதாவது புதுசா கெளப்பி விட்டா நம்மளால சமாளிக்க முடியாது பா. அதான் ரெண்டு பேரும் கேம்பஸ்ல பிளேஸ் ஆகிட்டாங்களே… சமாளிச்சுக்குவாங்க....”

“அதுவும் சரி தான். இதுக்கு மேல ஏதாவது பிரச்சனைனா நம்மளால என் பையன சமாளிக்க முடியாது”

முகூர்த்த நாள் குறிக்கப்பட்டு கிளம்பி சென்றனர் ஜேஷ் குடும்பத்தினர். கல்யாண வேலைகள் மிக வேகமாக நடந்தன.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
29

கல்யாணத்தன்று காலை ஜிஷ்னாவை அலங்கரித்துக் கொண்டிருந்தனர். காயத்ரி அவளுக்கு நகைகள் அணிவித்துக் கொண்டிருந்தாள். திடீரென்று அங்கிருந்த பெண்களுக்குள் சலசலப்பு உண்டாகியது.

ஆளாளுக்கு ஒவ்வொன்று சொல்லி வெளியே சென்றனர். காயத்ரி காதில் ஒரு பெண் வந்து ஏதோ கூற அவளும் வெளியே செல்ல எத்தனித்தாள்.

“எங்க காயூ போற? என்னாச்சு?”

“மாப்பிள்ளைக்கு பொண்ணு கிட்ட தனியா பேசணுமாம். அப்போ தான் கல்யாணம் நடக்குமாம்”

“யார் சொன்னது?”

“மாப்பிள்ளை தான்”

“ஜேஷா? ஏன்?”

“எனக்கு என்னமா தெரியும்? அவன் வருவான்… அவனையே கேளு…”

அவள் சென்றதும் உள்ளே வந்த ஜேஷிடம் “என்ன ஜேஷ் இதெல்லாம்? ஏன் அப்படி சொன்ன?” என்று கேட்டாள் ஜிஷ்னா.

வேகமாக கதவை தாழிட்டு அவள் அருகில் வந்து அவள் கைபிடித்து ஒரு மோதிரத்தை அணிவித்த ஜேஷ் அவள் கண்களை நேராய்ப் பார்த்து “ஐ லவ் யூ” என்று கூறினான்.

அதை கேட்டு சிரித்த ஜிஷ்னா “இதுக்கு தான் எல்லாரையும் போக சொன்னியா?” என்றுக் கேட்டாள்.

இல்லை என்று தலை ஆட்டிய ஜேஷ் இரண்டு நொடிகள் அவளை அமைதியாகப் பார்த்து விட்டு அவள் கன்னக்குழியில் தன் முதல் முத்தத்தை கொடுத்தான்.

“இந்த குழி எத்தன நாள் என்ன இம்ச பண்ணி இருக்கு தெரியுமா?” என்று அவள் காதில் கூறினான்.

“ஜேஷ் வெளில எல்லாரும் இருக்காங்க. நீ முதல்ல இங்கேருந்து போ…” என்று வெளி வராதக் குரலில் கூறினாள் ஜிஷ்னா.

“இன்னும் கொஞ்ச நேரத்துல தாலி கட்டிட்டா அப்பறம் நீ எனக்கு வைப் ஆகிடுவ…”

“ஆமா… அதுக்கு என்ன?”

“அதுக்கு என்னவா? லவ்வரா ஒரு கிஸ்ஸாவது குடுத்தியாடி நீ? இல்ல என்ன தான் குடுக்க விட்டியா?” என்று ஏற்ற இறக்கத்துடன் கேட்டான் ஜேஷ்.

“அதான் அன்னைக்கு உங்க வீட்டுல குடுத்தேனே… இப்போ நீயும் குடுத்தல்ல…” தலை குனிந்தபடி கூறினாள் ஜிஷ்னா.

“அய்யய்ய… கன்னத்துல குடுக்குறதெல்லாம் கிஸ்ஸா?” என்று கூறியவன் அவள் முகத்தை நிமிர்த்தி அவள் உதட்டருகில் குனிந்தான்.

அவள் அவனது சட்டையை பிடித்ததும் வேகமாக விலகி “சட்டைய கசக்கிடாதடி… அப்பறம் வெளில போய் பதில் சொல்ல முடியாது… நானே கஷ்ட்டப்பட்டு உன்ன பாக்க டைம் செட் அப் பண்ணி உள்ள வந்திருக்கேன்… யாருக்கும் எந்த டவுட்டும் வரக் கூடாது” என்று கூறி மீண்டும் குனிந்து அவள் இதழோட இதழ் பதித்தான்.

ஜிஷ்னாவை விட்டு விலகி அங்கிருந்த கண்ணாடியை பார்த்து அருகில் இருந்த திஷ்யூ கொண்டு அவன் உதட்டில் ஒட்டியிருந்த லிப்ஸ்டிக்கை வேக வேகமாக துடைத்தான்.

"யாராவதும் எதாவதும் கேட்டா எப்படியாவதும் சமாளிச்சுடு” என்றுக் கூறி அவள் கன்னத்தை கிள்ளி விட்டு சென்றான் ஜேஷ். ஜிஷ்னா “நான் சமாளிக்கவா?” என்று அந்த அதிர்ச்சியிலிருந்து வெளியில் வராமல் அப்படியே சிலையென நின்றாள்.

உள்ளே வந்த காயத்ரி “அவன் என்ன சொல்லியிருந்தாலும் சும்மா தான் சொன்னேன்னு சொல்ல சொன்னான். உன்ன சரி பண்ண சொல்லிட்டு தான் போனான். சீக்கிரம் ரெடி ஆகு வா…” என்றுக் கூறி அழைத்து சென்றாள்.

முகூர்த்த நேரம் நெருங்குகையில் மணமேடைக்கு வந்து ஜேஷின் அருகில் அமர்ந்தாள் ஜிஷ்னா. மந்திரங்கள் சொல்லிக் கொண்டே அய்யர் சொன்னதை செய்தவன் குனிந்து “ரொம்ப நேரமா அத செய் இத செய்னு உயிரை வாங்கிட்டு இருக்காரு… எப்ப தான் முடிப்பாரோ…” என்று அலுத்துக் கொண்டான்.

அவனை மேலும் சோதிக்காமல் கையில் தாலியை எடுத்து கொடுத்தார். தாலி கட்டி முடித்து அக்கினியை சுற்றி வந்து பெரியவர்களிடம் ஆசீர்வாதம் வாங்கினர் இருவரும். பின் ஒவ்வொருவராக கிப்ட் கொடுக்க மேடை ஏறினர்.

“இத உன் கழுத்துல கட்டறதுக்காக எத்தன பேர சமாளிச்சு... எவ்வளோ கஷ்ட்டப்பட்டு… ஷ்ஷ்ஷ்...” என்று குனிந்து அவள் கழுத்தில் அவன் அப்போது தான் கட்டிய தாலியைப் பார்த்துக் கூறினான் ஜேஷ்.

“பொண்ண ஒத்துக்க வெக்குறதுக்குள்ளயே நாக்கு தள்ளிடுச்சு பா...” என்று தலையை உலுக்கியவன் வந்தவர்களிடம் பேச ஆரம்பித்தான்.

ஜிஷ்னா “என்ன சமாளிக்க கஷ்டபட்டிருப்ப… ஒத்துக்குறேன்... அது என்ன எல்லாத்தையும் சமாளிக்க கஷ்டப்பட்டேன்னு பில்ட் அப் குடுக்குற?” சிரிப்பை அடக்கி கொண்டு அவளும் வந்தவர்களை வரவேற்றாள்.

வினோத், ராஜா வந்து போட்டோவிற்கு போஸ் கொடுக்க நின்றனர். “மச்சான் சரக்கு தீந்துடுச்சு” என்று வினோத் ஜேஷ் அருகில் நின்று கூறினான். அந்த பக்கம் ஜிஷ்னா அருகில் நின்ற ராஜா “பசங்கல்லாம் அங்க ரூம்ல வெயிட் பண்ணுறாங்கடா” என்றான்.

வீடியோ எடுப்பதால் அவர்கள் நேராக ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்காமல் பேசினார்.

"என்கிட்டே இப்போ எதுவும் காசு இல்லையே... இருடா அப்பா எங்க இருக்காங்கன்னு பாக்குறேன்" என்று சுற்றி பார்வையை சுழல விட்டான் ஜேஷ்.

"நீ எப்போ அப்பாவ தேடி... அவர் எப்போ பணம் குடுக்குறது..." என்று வினோத் கேட்க "நாங்க உன்கிட்ட நிண்ணு வர மொய் பணத்துலேருந்து எடுத்துக்குறோம்..." என்றான் ராஜா.

ஜேஷ் அருகில் நின்று ராஜா வந்தவர்கள் கொடுத்த மொய் பண கவரை வாங்கி அதிலிருந்த பணத்தை எடுத்து பாக்கெட்டில் வைத்து விட்டு அதனுள் இருந்த பணத்தின் மதிப்பை சொல்லி காலி கவரை வினோத்திடம் கொடுத்தான்.

வினோத் அந்த கவரின் மேல் பணத்தின் மதிப்பை எழுதி அதை ஒரு பையில் இட்டான். 4000 மொய் பணம் சேர்ந்ததும் “மச்சான் காசு போதும். நாங்க கெளம்புறோம்” என்றுக் கூறினான் வினோத்.

ஜிஷ்னா “என்னடா நடக்குது இங்க?” என்று ராஜாவிடம் கேட்டாள். “கல்யாண பொண்ணா லட்சணமா போஸ் குடுக்குற வேலைய மட்டும் பாரு… இதையெல்லாம் கண்டுக்காத” என்று அறிவுரை வழங்கி ராஜா.

ஸ்ருதி மேடை ஏறியவுடன் அவளிடம் கண்ணை காட்டினாள் ஜிஷ்னா. அருகே வந்த ஸ்ருதி “ஜேஷ் பட்டு வேஷ்டி சட்டை கூட உனக்கு சூப்பரா இருக்கு…” என்று ஒரு மாதிரி கூறினாள்.

அவள் அவ்வாறு கூறியதும் அதிர்ந்த ஜேஷ் “ஏய் என்னதிது...” என்றுப் பதறி ஜிஷ்னாவை ஒரு முறை பார்த்து விட்டு திரும்பினான்.

ஸ்ருதி சிரித்து விட்டு “சும்மா பயப்படாத… நீங்க ரெண்டு பேரும் தான் made for each other. நாந்தான் தேவ இல்லாம நடுல வந்து கொழப்பம் பண்ணிட்டேன். Happy married life” என்றுக் கூறி கிப்ட் கொடுத்து சென்றாள்.

ஜிஷ்னா சிரிப்பை அடக்க பெரும் பாடு பட்டாள். “இதுக்கு மேல எது பண்ணாலும் உனக்கு தான் ஆபத்து எனக்கு இல்ல” என்றான் ஜேஷ்.

யாரும் அறியா வண்ணம் “ப்பே” என்பது போல் கண்ணை சுருக்கி கூறினாள் ஜிஷ்னா.

அவள் அருகில் இன்னும் நெருங்கி நின்றவன் “நடத்து நடத்து…” என்று கிண்டலாக சிரித்துக் கொண்டேக் கூறினான்.

கடைசியாக பிரேம், ரூபா, ஹரீஷ், ஸ்வப்னா போட்டோ எடுப்பதற்காக மேடை ஏறினர். “டேய் இந்தா புடி கார் சாவி. இது எங்க ரெண்டு பேரோட கிபிட்” என்று ஹரீஷை பார்த்து சிரித்து பிரேம் ஜேஷ் கையில் ஒரு சாவியை கொடுத்தார்.

அதை வாங்கியவன் “எதுக்கு பா இதெல்லாம்...“ என்றுக் கேட்டான்.

“எத்தன நாள் தான் ஜேஷ் பைக்லயே சுத்துவீங்க? கார்ல போங்க... கொழந்தை எல்லாம் பொறந்தா பைக்லையா போக முடியும்?” என்று பதில் கூறினார் ஹரீஷ்.

“அப்பா நீங்களுமா?” என்று ஆச்சர்யமாகப் பார்த்தாள் ஜிஷ்னா.

“அங்கிள் இது 2 சீட்டர் காரா?” என்றுக் கேட்டான் ஜேஷ்.

“அடங்க மாட்டீங்களா மாப்பிள்ளை...” என்று அந்த மாபிள்ளையில் அழுத்தம் கொடுத்து கூறினார் ஸ்வப்னா.

“அம்மா நீயுமா?” என்று விழி விரித்துக் கேட்டாள் ஜிஷ்னா.

“டேய் அதெல்லாம் இல்ல…” என்றுக் கூறி ஜேஷின் தலையில் செல்லமாக தட்டினார் ரூபா.

“உங்களுக்கு தனியா கார் வாங்கி குடுத்தாச்சு...” என்று ஹரீஷ் ஆரம்பிக்க “இனி எங்க கார் எல்லாம் கேட்டு எங்கள டிஸ்டர்ப் பண்ண கூடாது...” என்று முடித்தார் பிரேம்.

அதை கேட்டு ஜிஷ்னா வெட்கப்பட ஜேஷ் அசடு வழிந்தான். அந்த அழகான தருணம் புகைப்படமாக பதிவாகியது.



முற்றும்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top