• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

நகரும் நிழல்...

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,040
Reaction score
49,883
Location
madurai
வீட்டில் உள்ளவர்கள் அனைவரது பார்வையும் ஒரு சேர லதாவின் பதிலை எதிர்பார்த்துக் கொண்டிருந்தது.....அமைதியாகவும் மிரட்டலாகவும் எத்தனையோ முறை எடுத்துக்கூறியும் அவளது முடிவில் சற்றும் மாற்றம் இல்லாமல் மனம் தளராமல் இருந்தாள்....

“இப்ப உனக்கு நல்லதா படறது பின்னாடி உனக்கே கேள்விகுறியா நிக்கும்”... அப்பாவின் பேச்சு இது..

“காலாகாலத்துல உனக்கொரு நல்லது செய்ய ஆசைப்படறோம் கண்ணு.. அதுக்கு ஒரு தடையா இது இருக்கக் கூடாதில்லையா... கொஞ்சம் யோசனை பண்ணுமா.. படிச்ச பொண்ணு தானே”... என்று முடித்தது அம்மாவின் கெஞ்சல்....

“ இப்பவே பாக்க ஆரம்பிச்சா தான் எல்லோருக்கும் நல்லது.. இவளுக்கடுத்து தங்கச்சி இருக்கு, அதுக்கும் முடிச்ச பிறகு தான் எனக்குன்னு இருக்கேன்...வீட்டுல இப்படி ஒருத்திய இடையில வச்சுக்கிட்டு எப்படி அடுத்தடுத்த காரியத்தை பாக்க முடியும்.. கேக்கறவங்களுக்கு பதில் சொல்லி முடியாது.... ஒழுங்கா நாங்க சொல்லற பேச்ச கேட்டு அதுப்படி நடக்கிற வழிய பாரு...” என்றது அண்ணனின் பாசத்துடன் கூடிய எச்சரிக்கை.....

அனைவரது பார்வையையும் உள் வாங்கியவள் தீர்க்கமான பேச்சில் தன் நிலையை அனைவருக்கும் தெளிவு படுத்த ஆயுத்தமானாள் லதா.... “இல்லண்ணா...நான் யாருக்கும் இடைஞ்சலா இருக்க விரும்பல... எதிர்நீச்சல் போட்டு எதிர்காலத்த சந்திக்கிற நம்பிக்கையும் மனப்பக்குவமும் எனக்கிருக்கு... என்னோட படிப்பும் வேலையும் நான் போற வழிக்கு துணையா வரும்... உங்க ஆதரவு எனக்கு இணையா வந்தா நான் சந்தோசப் படுவேன்”...

“அப்பா...எனக்குன்னு ஒரு வேலை இருக்கு... அத வச்சு என் காலத்த ஒட்டிக்கிறேன்... என்னோட பிடிவாதம் உங்களுக்கு எரிச்சலா இருக்கலாம்.. திகட்ட திகட்ட காதலிச்சு பெத்தவங்க சம்மத்தோட கல்யாணம் பண்ணி ஆறு மாசம் மட்டுமே வாழ்ந்தாலும் அந்த காலகட்டம் எனக்கு ஆயிரம் வருஷம் வாழ்ந்த திருப்திய குடுத்திருக்கு... அதுக்கு அடையாளம் இப்போ என் வயித்துல இருக்குற குழந்தை தான்... என் வாழ்க்கை நதியோட ஒரு துளியா தான் இந்த குழந்தய பாக்குறேன்"...



“என் புருஷன் ஆச்சிட்டேன்ட் ஆகி அல்பாயுசுல போய்ட்டதாலே தானேம்மா இந்த குழந்தை ராசியில்ல... ஒரு உயிரை குடிச்சிருக்குனு சொல்லிட்டு இருக்கீங்க.... அதுவுமில்லாம குழந்தையோட இருந்தா அவ்ளோ சீக்கிரமா எனக்கொரு புது வாழ்க்கை அமைச்சுதர முடியாதுங்கிற எண்ணத்துல தானே இந்த கருவை அழிக்க சொல்லி எல்லோரும் என்கிட்டே கெஞ்சியும் மிஞ்சியும் பேசிகிட்டு இருக்கீங்க...


“இது என்னோட பாரம் ... எனக்கு மட்டுமே சொந்தம்... இத யார் தலையிலேயும் ஏத்தி வைக்க விரும்பல... நீங்க நினைக்கலாம் இப்போ வீராப்பா பேசிடமுடியும்... கொஞ்சம் நாள் கழிச்சு உனக்குன்னு துணை வேணும்னு நினைக்கும் போது இந்த குழந்தை இடைஞ்சலா இருக்கும்னு”...

“எந்த காலத்திலேயும் ஒரு அம்மாக்கு இடைஞ்சலா குழந்தை இருந்ததில்ல... அப்படி வந்தா அந்த வாழ்க்கை விட்டு விலக நினைப்பாளே தவிர குழந்தைய ஒதுக்கி வைக்க மாட்டா... அதோட என் மனசுல இப்போதைக்கு ரெண்டாவது வாழ்க்கைய பத்தின நினைப்பு சுத்தமா இல்ல...கொஞ்சம் புரிஞ்சுக்கோங்க”..

“ஐஞ்சு வருஷம் காதலிச்சு கல்யாணம் பண்ணி வாழ்ந்த வாழ்க்கைய அவ்ளோ சீக்கிரம் மறந்து போகுற மனசு எனக்கில்ல...என் நிஜத்தோட நிழலா இந்த குழந்தைய நினைக்குறேன் ... இந்த நிழல் கூட என்னை வாழ விடுங்க... சரியான பாதை தான் அது அமைச்சுக் கொடுக்கும்... அந்த நம்பிக்கை எனக்கிருக்கு.... இதுக்கும் மேல யாரும் என்னை தொந்தரவு பண்ண வேண்டாம்”...என்று ஆணித்தரமாய் சொல்லிவிட்டு நதியின் துளியாய் வந்த தன் நகரும் நிழலோடு எதிர்காலத்தை காண விரைந்தாள்......
 




Last edited:

Nachuannam

அமைச்சர்
Joined
Nov 27, 2018
Messages
4,031
Reaction score
8,390
Location
U.A.E
நைஸ் அக்கா????...ஆனா ரொம்ப குட்டியா இருக்கு...
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,040
Reaction score
49,883
Location
madurai
ஓகே கா ??... நெக்ஸ்ட் டைம் பெரிசா எழுதிடுங்க??..
Okay try panren author ji... ?? Unga ud enge madam...
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top