• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

நனியுண்டு நனியுண்டு காதல்- 1

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

kalpanaekambaram

அமைச்சர்
Joined
May 6, 2018
Messages
1,024
Reaction score
3,257
Location
Tamilnadu
மக்களே!! பர்ட்ஸ் எபி. மறக்காமல் நாலு வார்த்தை சொல்லிட்டு போங்க!! கதையில் வருவது சுந்தரதெலுங்கில்லை. தமிழ் வாசம் வீசும்தெலுங்கு தான்.

1

பூம்பொழில்..வெகு ரம்மியமான கிராமம். வைகறை பொழுது. இடது பக்கம் நீண்டுகிடந்த தென்னந்தோப்பிலிருந்து நெடுநெடு உயரத்தில் ஒருவன், வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு வேகநடையில்,பாதையை நோக்கி எட்டுபோட்டான்.

‘நாங்க சிங்கள் பசங்க..பொண்ண பார்த்தா மண்ணை பாக்கும் சிங்கிள் பசங்க..நாங்க சிங்கிள் பசங்க..!!’

அவன் உதடுகள் குதூகலமாக,பாடலை விசில் வடிவில் ஊதிக்கொண்டிருந்தது.

“தலைவரே!! இன்னைக்கு, அஞ்சுமணிக்கு கட்சி மீட்டிங். மறக்காம வந்துடுங்க..”தோப்புக்குள்ளிருந்து ஒரு குரல் வந்தது.

“பார்க்கலாம்டா!!” மீசையை இருவிரலால் நீவிவிட்டுக்கொண்டு, இரு கைகளையும், பின்னே கட்டியபடி நடந்துகொண்டிருந்தான்.

அவனை தங்கள் கட்சிக்குள் இழுத்து விட்டுக்கொள்ள ஏகபோக போட்டி நடக்கிறது. சாக்கடையில் கல்லை விட்டெறிந்தால் சேதாரம் என்னவோ நமக்குதான் என்ற கொள்கையில், அவன் நழுவும் மீனாய் இருக்கிறான்.

அவனுக்கு சொந்தமாக தென்னந்தோப்புகளும், ஒரு மில்லும், பால்பண்ணையும் இருக்கிறது.

கிராமத்தில் வலுவான கையுடயவன், என்பதால் கஜினிமுகமது முகமது படையெடுப்பைப்போல விடாது, அவனை கரைத்து இழுக்க பார்க்கின்றனர். அவன் கரையாமல் அடம் பிடித்துக்கொண்டிருக்கிறான்.

நம் கதாநாயகன் ரொம்ப ஜாலி, பன், ஜோவியல் டைப்.. நல்லவர்களுக்கு மட்டும். அவனுக்கு மூர்க்கம் உண்டாகும்படி, நடந்துகொள்பவர்களிடம் நரசிம்மமாக கர்ஜித்து குடலை உருவிப்போடவும் தயங்காத கோபக்காரன்.காக்டேய்லைப்போல பல குணங்களின் கலவை. எது, எப்போது வெளிப்படும் என்று பழகியவர்களுக்கு மட்டுமே புரியும். பல இளம்பெண்கள் ஹீரோவொர்ஷிப் பண்ணுமளவிற்கு அந்த கிரமாத்தில் பிரபலமானவன். கனவு நாயகன். இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.

வலப்பக்கதால் ஒரு ஜைனாலயமும், பாசிபடிந்த குளமும், சில கொக்குகளும் தென்பட்டன. ஜைனர்கள் கிராமத்தில் இன்னமும் இருந்து கொண்டிருப்பது ஆச்சரியமே!

“கிழவி!!! என்ன சாஞ்சுட்ட? ஒரு நிமிஷம் போயிட்டியோன்னு பக்குன்னு ஆகிடுச்சு.”

மூடிகிடந்த ஜைன கோவிலின் வாயிலுக்கு வந்து, சாய்ந்து கிடந்த, கிழவியை உலுப்பினான்.

“வாடா பேராண்டி!! நல்லாயிருக்கியா அப்பு??”

“உன் விசாரிப்பை அப்புறம் வச்சிக்கோ. என்ன ஆச்சு உனக்கு?” என்றான் அக்கறையாக.

“நேத்திலிருந்து உடம்புஅனலா கொதிக்குதுப்பு.. தொண்டைக்குள்ள தண்ணி கூட இறங்கமாட்டேங்குது.பக்கத்தில் மெடிகல் கேம்ப் இருக்குன்னு சொன்னாங்க. அதான் வந்தேன்.” என்றாள் பாட்டி, இழுவையாக.

“வா, நான் கூட்டிட்டு போறேன்.” கொஞ்சமும் யோசியாமல், அவர் கையைப்பிடித்து எழுப்பினான். பிள்ளைகள், பேரன்கள் என எல்லா உறவுகளும் இருந்தும் இன்று வரை உழைத்தே ஜீவிக்கும், அந்த திடமான பெண்மணியின் மேல் அவனுக்கு பெருத்த மரியாதை. தள்ளாத வயதிலும் உழைக்க அஞ்சுகிராளில்லை.

“உன் ஜோட்டு பசங்க எல்லாம், கல்யாணம் கட்டிக்கிட்டு சுத்துதுங்க. நீ ஏன் அப்பு அப்படியே இருக்க?”

“எனக்கு தகுதியா இந்த கிராமித்தில் எவ கிடக்கா?? பேசாமல் வா!!” லேசாக அதட்டினான்.

காலை ஏழு முதல் இரவு பத்து வரை மெடிகல் கேம்ப் ஒரு வாரமாக நடந்தது. கிராமவாசிகள் இலவசமாக உடல் பரிசோதனை செய்துகொள்ள, நோய்களை குணப்படுத்த, இலவச மருந்துகளும் வழங்கப்பட்டு கொண்டிருந்தது.

பெரும்பாலானவர்களின் பிரச்சனையாக ரத்தகொதிப்பும், சர்க்கரை வியாதியும் இருந்தது.அரசுக்கு சொந்தமான ஒரு கட்டிடத்தை மருத்துவர்களுக்கு ஒதுக்கியிருந்தார்கள்.

மெல்ல மெல்ல பாட்டியை இழுத்துக்கொண்டு முன்னறைக்கு சென்றவனுக்கு, கன்னத்தில் கையை தாங்கியபடி, அவர்களை கிஞ்சித்தும் கண்டுகொள்ளாமல் இருந்த பெண், கிரேக்க அழகி கிளியோபாட்ராவுக்கு நிகராகதென்பட்டாள்.

“வேலையில் கவனம் இல்லாமல்..நினைவை மேய விட்டுக்கொண்டிருக்கிறாள்.” இரண்டு நிமிடங்களுக்கு மேலாகியும், அந்த கிளியோபாட்ரா நிமிரவில்லை.

டக்..டக்..டக்..பலமாக மேசையை தட்டினான். முகத்தில் ஒரு இறுக்கம் சட்டமாக வந்து அமர்ந்துகொண்டது இப்போது.

நிமிர்ந்தவளோ, பார்வையில் இவர்களை ஆராய்ந்துவிட்டு, சலிப்புடன் வெளியே செல்லும் பாதைக்கு கை காட்டினாள்.

“இவங்களுக்கு பீவ்ரிஷா இருக்கு. செக் பண்ணுங்க!!” என்றான் குரல் உயர்த்தி.

“ரிசெப்ஷன் போங்க சார்!!” ஏக சலிப்புடன், பதில் சொல்லிவிட்டு தன் வேலையை கவனிக்க திரும்பிகொண்டாள்.

‘அடிங்!!!’ மருத்துவசேவையில் இருக்கும் பெண்ணுக்கு இத்தனை சலிப்பும், அலட்சியமுமா?

“ஏன் நீங்க ட்ரீட்மென்ட் கொடுக்க மாட்டீங்களா??”

“முடியாது சார்!!” அவள் அலட்சியத்தில் அவனுக்கு புசுபுசுவென்று கோபத்தீ மூண்டது.

“அப்புறம் என்ன.....” அழுத்தி நிறுத்தியவன், “இதுக்கு இங்க இருக்கீங்க?”

“ஹேய்..ஹேய்..மிஸ்டர். மைன்ட் யுவர் வேர்ட்ஸ். நாக்கை அடக்கி பேசுங்க.” வேகமாக எழுந்து நின்றவள், ஒரு விரல் நீட்டி எச்சரித்தாள்.

“நீ வேலை பாக்குறது ஒரு சர்விஸ் செக்டாரில். எந்நேரமும் மக்களுக்கு சேவை செய்ய தயாரா இருக்கணும். அதைவிட்டு இப்படி அலட்சியமா பேசுறியே? அறிவில்லை உனக்கு?”

அதிர்ந்து விழித்தாள் கிளியோபாட்ரா.

“ஒருமை போதாதென்று..அவளுக்கு அறிவில்லையாமா??”

“ஏன்ட்றா, பிச்சு பிச்சுகா மாட்லாடுத்துன்னாவு..தொங்கன்பிலகா..எதவா?? தேவுடா!!!” கிடைத்த கேப்பில் அவள் புரியாத பாஷையில், திட்டி விட்டு, கடவுளை துணைக்கு அழைக்க,

“தமிழ் தெரியும் தானேடி..மரியாதையாய் தமிழ்ல மாட்லாடு..”

“நீ தெலுங்கை கொலை பண்ணாதே ராசா!! தமிழிலேயே சொல்கிறேன்.தயை கூர்ந்து இருவரும் வெளியேறுங்கள்.” என்றாள் பொறுமையை இழுத்து பிடித்து.

“நீ ட்ரீட்மென்ட் கொடுக்கும் வரை இங்கிருந்து நகரமாட்டோம்டி”

“உனக்கு மூளையிருக்காடா முதலில்..உனக்கெல்லாம் படிப்பறிவு இருக்கா? இல்லையா??”

“அடியேய்!! என்னடி வந்ததிலிருந்து ஓவரா பேசிட்டு இருக்க..வாயை உடைச்சிடுவேன்டி ராட்சசி!!” எகிறினான்.

“உன் மூஞ்சியை பேக்கும் முன், தப்பிச்சி வெளியே போடா!!”“பார்பேரியன்..காட்டுமிராண்டி!!!’நேற்று இரவிலிருந்து, அவளுக்கு இருந்த டென்ஷனில் இன்று யார் சிக்கி இருந்தாலும், கிழித்து போட்டிருப்பாள்.

அவ்வளவுதான்!! அவனுக்குள் உறங்கிக்கொண்டிருந்த நரசிம்ம மூர்த்தி விழித்துகொண்டான். அந்த அறையின் பொருட்களை உடைத்து களேபரம் பண்ணத் தயாரானான்.

சார்!!! சார்!!! சத்தம் கேட்டு பதறிக்கொண்டு ஒரு நர்ஸ் உள்ளே புக, கோபத்தில் மூச்சு வாங்கிக்கொண்டு, இருவரும் ஒருவரையொருவர் முறைத்துக்கொண்டு நின்றனர்.

“உங்க டாக்டர்ஸ் இப்படித்தான் இர்ரெஸ்பான்சிபிலா இருப்பாங்களா??. இதுதான் உங்க ஹாஸ்பிட்டலின் சர்வீசா? வெரிகுட். அவார்டே கொடுக்கலாம்.” என்றான் முழு கோபத்துடன், எள்ளலாக.

“சார்!! சார்!! காம் டவுன். அவங்க டென்டிஸ்ட் சார்!! ஜெனரல் பேஷண்ட்சுக்கு அடுத்த பில்டிங். வாங்க. நான் அழைச்சிட்டு போறேன்.” என்றாள் நர்ஸ் நைச்சியமாக.

அப்போது தான் அறையை சுற்றி பார்த்தான். அறையில் இருந்த உபகரணங்கள், தொங்கவிட்டப்படிருந்தவைகள் எல்லாம் பல்மருத்துவம்தொடர்பானவை.

காலை வேளை. டாக்டர்கள் இன்னும் வந்திருக்கவில்லை என்றால், அவளே முதலுதவி கொடுத்திருப்பாள். ஓரிரு டாக்டர்கள் வந்துவிட்டிருந்ததால் அவர்களிடமே அனுப்ப நினைத்தாள். அதற்குள் இவன் புகுந்து கடுப்பாக்கி விட்டான்.

ஹுஹும்.. கெத்தை விடாமல் தொண்டையை செருமி, “முதலிலே சொல்லிருக்கமில்லை??” என்றான் பிடரியை கோதியபடி.

“என்னை பேசவிட்டியாடா நீ?”கருமணி தெறித்து விழும் அளவிற்கு உருட்டி முறைத்தாள்.

“மரியாதையா பேசும்மா.” தன் மீது தவறென்பதால் பணிந்து போனான்.

“சண்டியரா நீ?? நீ கொடுத்திருந்ததா தானேடா மரியாதை வரும்.”

“வாயைதிறந்து சொல்லறதுக்கு, என்னடி உனக்கு? டைம் வேஸ்ட்.” முனகியபடி வாயில் வரை சென்றவன், ஏதோ நினைவு வந்தவனாக நின்று திரும்பி, நிதனமாக அவளை அளவெடுத்தான். காட்டன் குர்தி, லெக்கிங்க்ஸ்ஸில், கண்ணை கவரும் உயரம் அவள். திராவிட நிறம். காம்பசில் அளவெடுத்து வரைந்து விட்டதைப்போல வட்ட முகம். பேசும் விழிகள். மூக்கு சப்பையாக இருந்தாலும் ஹ்ம்ம்.. அவ்வளவு மோசமில்லை.

“ஹே!!செழியன் மக தானே நீ??” என்றான் மூளையை தூசு தட்டி.

“ஏ!! வெளியே போடா!!” அவன் கேள்விக்கு பதில் சொல்லாமல், முகம் சுளித்தாள். அதற்குள் பாட்டியை நர்சே அழைத்து சென்று பரிசோதிக்க தொடங்கியிருந்தார்.

“டாக்டரே!! உங்க பேரென்ன??”

புருவத்தை தூக்கி “எதுக்கு?” என்றாள்.

“அட!! சும்மா கூப்பிடத்தான்.” அவள் சொல்லாமல் நகர மாட்டான் போலவே. அவளுக்கே தலைக்கு மேல் இருக்கும் பிரச்சனைகள் ஆயிரம். இவன் ஆயிரத்தொன்று.

“மணிமேகலை!!” என்றாள் வேண்டாவெறுப்பாக, உதட்டை சுழித்தாள்.

“பார்த்து பல்லு சுளுக்கிக்க போகுது kk!!”

“kk??”

“கருப்பு கிளியோபாட்ராம்மா!!” அலட்டிக்கொள்ளாமல் பதில் சொன்னான்.

இந்த மாதிரி மூர்கர்களின், முகத்தில் மீண்டும் ஒருமுறை விழிக்ககூடாது என்று தான் யாராக இருந்தாலும் எண்ணுவார்கள். அவளும் அப்படியே!!

ஆனால் அவனுடனான பல சிறப்பான, தரமான சம்பவங்கள் அணிவகுத்து அவளுக்காக காத்திருந்தது.சம்பவங்களை திட்டமிட்டவன் சாட்சாத் நம் கதாநாயகனே!!

கண்டதும் காதல் என்று அவனைப்பற்றி வாசகர்கள் தவறாக எண்ணிவிடவேண்டாம்.

ஆனால் நண்பன் காதலுக்காக உதவி கேட்டு நிற்கும் போது, மறுப்பானா அவன்?

பாட்டியை அழைத்துக்கொண்டு மீளும் வேளையில், அவள் அறையின் வாயிலில் வந்து நின்றவன், விரலை சொடுக்கி அவளை அழைத்தான். “என் பெயர் ஆதி..ஆதித்த கரிகாலன்..”

“நான் கேட்டேனா?? நான் கேட்டேனாடா??” என்றாள் அலுப்பாக.

“நிச்சயம் தேவைப்படும் உனக்கு.”

பக்கவாட்டில் திரும்பி ஒரு சின்னசிரிப்பை உதிர்த்துவிட்டு போனான். உடலை சிலிர்க்க வைக்கும் தீட்சண்யமான பார்வை அவனுக்கு!! ஒரு நொடி அவள் இதயம் தள்ளாடி, மீண்டது.

அஹம்..அஹம்.. – அவள்மனசாட்சி.
 




Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
Me first...
Congrats for your new story kalpana sis...
பார்த்த முதல் நாளே சண்டையும் போட்டு, கறுப்பு கிளியோபாட்ரான்னு பேரும் வைச்சு, லவ்ஸ் பண்ண ஆரம்பிச்ச ஒரே ஆள் நம்ம ஹீரோதான் போலயே... ஓவர் ஸ்பீடா போறாப்லயே...
 




kalpanaekambaram

அமைச்சர்
Joined
May 6, 2018
Messages
1,024
Reaction score
3,257
Location
Tamilnadu
Me first...
Congrats for your new story kalpana sis...
பார்த்த முதல் நாளே சண்டையும் போட்டு, கறுப்பு கிளியோபாட்ரான்னு பேரும் வைச்சு, லவ்ஸ் பண்ண ஆரம்பிச்ச ஒரே ஆள் நம்ம ஹீரோதான் போலயே... ஓவர் ஸ்பீடா போறாப்லயே...
ஆஹா ஹீரோவை அதுக்குள்ளே தப்பா நினைச்சுட்டீங்களே?? கண்டதும் காதலா?? நோ வேன்னு சொல்ற ஷை பாய்ங்க ஆதி!!???
First cmnt..spcl one..tq sangeetha!!??
 




kalpanaekambaram

அமைச்சர்
Joined
May 6, 2018
Messages
1,024
Reaction score
3,257
Location
Tamilnadu
அந்த கே.கே. வை இந்த ஏ.கே எதற்கு அறிமுகம் செய்து கொள்கிறான்?
நண்பனின் காதலுக்ககாக..அடுத்த எபியில் விரிவாக சொல்றேன், சித்ரா சிஸ்!!??
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top