• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

நனியுண்டு நனியுண்டு காதல்! 10

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
Ellarum sernthu antha pillaya romba thaanpa miraturaanga...
 




Mahizhini bharathi

இணை அமைச்சர்
Joined
Mar 24, 2019
Messages
701
Reaction score
357
Location
Tamilnadu
Dedicating to all siblings those who 'ரத்தத்தை பார்க்காமல், அமைதியாக மாட்டார்கள்.' brothers and sisters are always rivals. முந்தைய எபிக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் தந்தவர்களுக்கு நன்றி!!


10

நினைவு தெரிந்த வயதிலிருந்தே சகலத்திலும் போட்டிதான் இருவருக்கும். அன்னை, தந்தை, தாத்தா, பாட்டி இவர்களின் அபிமானத்தை பெறுவதில் தொடங்கி, மற்ற எதுவென்றாலும் சரிக்கு சரி, நேருக்கு நேர் என்று மோதியே பழக்கப்பட்டவர்கள்.

சண்டை என்று துவங்கி விடுமேயானால், ஒருவர் உடலிலாவது ரத்தம் பெருக்கெடுக்காமல் அமைதியாகமாட்டார்கள். கரிகாலன் குடும்பத்தின் பூர்வீகம் என்னவோ பூம்பொழில். கரிகாலனும் பதின்பருவத்தை எட்டும் போதெல்லாம் போட்டியின் தீவிரம் உச்சத்தை எட்டியது. சின்ன பார்வை உரசலும் கூட மோதலிலேயே முடிந்தது. தினம் ஒருமுறையாவது மருத்துவமனைக்கு செல்லும் ரேஞ்சுக்கு அடித்துக்கொண்டனர். இளமை, துடிப்பு, வேகம், மூர்க்கம் எல்லாமும் சேர்ந்து சதா ஒருவரையொருவர் முறைத்துக்கொண்டே திரிந்தனர். வீரதழும்புகள் பல, இன்றளவும் இருவர் உடலிலும் நினைவுப்பரிசாக இருக்கிறது.

கரிகாலனை தாத்தா, பாட்டியின் பொறுப்பில் விட்டு, அருள்மொழியை தங்களுடன் அழைத்து சென்றனர் பெற்றவர்கள்.

கரிகாலனுக்கும் தாத்தா, பாட்டியுடன் கிராமத்தில் இருக்கவே விருப்பம். ‘ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலை இல்லை, நான்தாண்டா என் மனசுக்கு ராஜா..’

‘ராஜா நான் ராஜா எங்கேயும் நான் ராஜா..ஹே மாமா..யு வன்னா ஹேட் மீ..’

தல மற்றும் விஜய்சேதுபதி போல கரிகாலனுக்கு BGM இசைக்காதது மட்டுமே மிஸ்ஸிங். அவன் தாத்தாவிற்கு கிடைத்த மரியாதை, தோரணை அவனுக்கும் இயல்பாகவே கிடைத்துவிட்டது, கிராமத்தில்.

அவனுக்கும் அதுதான் வேண்டும். அதுதான் பிடித்திருந்தது..ரொம்பவும்..

அவனுக்கு சகலத்திலுமே ஒரு பிடிவாதம் இருக்கும். அவனுடைய ‘ஸ்பேஸ்’ என்று மணிமேகலையிடம் குறிப்பிட்டதும் அதைதான். குடும்பத்தில் யாராக இருந்தாலும் அந்த ஸ்பேஸுக்குள் வரக்கூடாது. தான் செய்வது அனைத்தும் சரி. அந்த நினைப்பை மொத்தமாக கர்வம் என்றும் ஒதுக்கி விட முடியாது. பெரும்பாலும், அவன் முடிவுகள் சரியானதாகவே இருக்கும்.

இன்றோ, சிறு வயதில் செய்ததெல்லாம் அபத்தம் என்று புரிந்து விட்டது. ஆனாலும் ஜெல் ஆகமுடியவில்லை இருவருக்கும். கட்டிபிடித்து உருண்டு பாசத்தை பொழிந்துகொள்ள முடியவில்லை. சிறு வயதிலிருந்தே, எந்த வம்பையாவது AK க்காக சேகரித்து கொடுப்பான் அருள்மொழி.

இதோ..இன்று..மணிமேகலை இல்லத்தில்..அட்டகாசம் பண்ணிக்கொண்டிருந்தான் AV.

“ஸீ அங்கிள்!! என் அண்ணன், அவனைப் பற்றி யோசிக்கவே மாட்டான். அவனுக்காக இதெல்லாம் நான் தான் செய்யணும். ஹி இஸ் ஸ்டில் லைக் எ சைல்ட்.” மணிமேகலையை விஷமமாக பார்த்து, புன்னகைத்தபடி சொல்லிக்கொண்டிருந்தான் AV.

தன்னிடம் பேசியதற்கும், அப்பா, சித்தியிடம் பேசிக்கொண்டிருப்பதற்கும் நூறு வித்தியங்களை கண்டுபிடிக்க முடிந்தது மணிமேகலைக்கு. ஏறக்குறைய அவளை மிரட்டியிருந்தான் AV. கரிகாலனை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று!

AV யின் ரசிக்க வைக்கும் பேச்சில் மணிமேகலையின் அப்பாவும், சித்தியும் மயங்கி கிடந்தனர் என்றால் மிகையாகாது.

மணிமேகலை அழைத்ததும், கரிகாலனும் அங்கே வந்துவிட்டான். வீட்டுக்குள்ளிருந்து மணிமேகலையும், AV யும் இணையாக வெளியே வந்துகொண்டிருந்தனர்.

“யார் சொன்னது உனக்கு?” இரண்டே நாட்களில் அவன் காதலை கண்டுகொண்டானே? ஆச்சிரியம் இருந்தாலும், மணிமேகலை வீட்டின் வாயிலேயே, AV யிடம் சீறினான் கரிகாலன்.

“Little bird told me” கரிகாலனின் அவஸ்தையை ரசித்து சிரித்தான் AV.

மணிமேகலை கடுகடுவென்று நின்றிருந்தாள்.

மணிமேகலை புறம் மெல்ல குனிந்த AV “மிஸ். மணிமேகலை பெட்டெர் நீங்க ஓகே சொல்லிடுங்க. இல்லை, என் அண்ணனுக்காக கடத்தலும் செய்ய தயங்கமாட்டேன்.”

‘கடத்தலா? டேய்!!! எத்தனை வருட பகையை, பழி தீர்க்கிறான் இவன்.’ அதிர்ந்து போய் பார்த்துக்கொண்டிருந்தான் கரிகாலன்.

“எக்ஸ்க்யூஸ்மி!!” மணிமேகலை வெடுக்கென்று நகர்ந்து சென்றிருந்தாள். தன் ஆத்திரத்தை எல்லாம் ஸ்கூட்டியின் மீது காட்டி நகர்த்திக்கொண்டிருக்க,

“kk!!”

“உங்களுக்கு தம்பி இருக்கார்னு சொல்லவே இல்லையே..” அந்த குரலில் விலகல் தெரிந்தது.

“நீ கேட்கவே இல்லை.” விலுக்கென நிமர்ந்து, அவன் விழிகளுக்கும் பார்த்தாள் மணிமேகலை.

கேட்கவில்லை தான் அவளும். அவளைப் பற்றி மட்டுமே, முழு நேரமும் பேசிக்கொண்டு இருந்தாளே தவிர, அவனைப்பற்றி முழுதாக தெரிந்து கொள்ளவில்லையே இன்னும்.

“நான் உங்களை வெய்ட் செய்ய சொல்லலை கரிகாலன். நீங்க உங்க இஷ்டத்திற்கு இருக்கலாம். உங்க ஸ்பேசுக்குள் மூக்கை நுழைக்க மாட்டேன்.” அவனைப் பேசவே விடாமல் புறப்பட்டு போயிருந்தாள் மணிமேகலை.

அவள் கோபத்தில் நியாயம் இருந்தது. ரசிக்கவே செய்தான் கரிகாலன். பனிக்கட்டி போல அவள் கோபம் உருகிவிடும் என்றே நினைத்தான். அடுத்த நான்கைந்து நாட்களும் அவள் தரிசனமே கிடைக்க்கவில்லை. அவள் வரும் பாதையில், விழி பதித்து அவளுக்காக காத்திருக்க தொடங்கினான்.

இந்த அனுபவம் முற்றிலும் புதிது. அவனுக்கே வித்தியாசமாக இருந்தது.

இரவு, டைனிங் ஹாலில், உட்கார்ந்து சாவதானமாக சாப்பிட்டுக்கொண்டிருந்தான் AV. தாத்தாவும், பாட்டியும் திருவிழாவுக்கு சென்றுவிட்டிருந்தனர்.

‘இவனால் விளைந்தது தானே இது?’ கரிகாலன், ஆத்திரம் மொத்தமாக AV யிடம் திரும்பியது. அவன் சாப்பிட்டுக்கொண்டிருந்த, உணவில் நீரை கொட்டிவிட்டான். வேகவேகமாக தன் அன்னைக்கும் வீடியோ கால் செய்து AV யின் அட்டூழியங்களை கோபமாக அடுக்க,

“இன்னும் திருந்தலையா நீங்க? உங்க பிரச்சனையை என்னிடம் கொண்டு வராதீங்க.” என்றார் கறாராக.

“பொறுப்பிலாமல் பேசறீங்க வைஷு..இவனைப் போல..” கரிகாலனை சுட்டிக்காட்டியவன், “இவன் இப்படியே இருந்தால், நான் வானதியைக் கரம் பிடிப்பது எப்போது? உலகத்தை ஒரு குடையின் கீழ் கொண்டுவருவது எப்போது?” அமர்ந்த நிலையிலேயே, அவன் நாடகபாணியில் குரலை மட்டும் அனுப்ப,

“இவன் வானதியிடம் வம்பு செய்தால், நானே எலும்பை நொறுக்கி பேக் பண்ணிடுவேன். இங்கே எதுக்கு வந்தான்னு கேளுங்க.” என்று அருகில் நிற்பவனிடம் நேராக கேட்க முடியாது, தூரத்தில் இருக்கும் அன்னையை தூது விடுத்தான் கரிகாலன்.

“மீ..விவசாயம் செய்யப் போறேன்னு, உங்களிடம் சொல்லிட்டு தானே வந்தேன்.” கத்தினான் AV.

அடுத்த அதிர்ச்சி..கரிகாலனே அயர்ந்து போனான்.

“என்னை விடுங்கடா..நான் தூங்கப் போகிறேன்.” இருவருக்கும் நடுவில் தூது போக முடியாது, அவர் கழன்று ஓடிவிட, இங்கே AV நிதானமாக கரிகாலனின் உணவையும் சேர்த்து விழுங்கி விட்டிருந்தான்.

கரிகாலனுக்கு பயங்கர பசி. அவன் உணவில் தான் தண்ணீரை கொட்டிவிட்டானே! அவன் கண்களிலேயே தெரிந்திருக்க வேண்டும் அது.

“வரலாறு முக்கியம் அமைச்சரே!! zomato வில் ஆர்டர் பண்ணிக்கொள்.” படுநக்கலாக வந்தது பதில், AV யிடமிருந்து.

“இன்னும் இரண்டு நாள் பொறுத்திருந்தால், அவளே சம்மதம் சொல்லியிருப்பாள். உள்ளே புகுந்து சொதப்பிவிட்டான். அவனைப் பார்க்க கூட மறுக்கிறாள்.” கரிகாலனுக்கு, நிஜத்தில் வேதனையாக இருந்தது.

இதழ்கள் துடிக்க, முகம் சுருங்க, ஒற்றை பார்வையைக்கூட அவனுக்கு கொடுக்காது கோபமாக சென்றவளின் முகமே, அவன் விழிகளுக்குள் மாறி மாறி வந்து இம்சித்தது.

‘மச்..எப்படியெல்லாம் தவிக்க விடுகிறாள் அவனை.’

இவன் விளையாட்டுத்தனமாக செய்யப்போனது வினையாகிவிட்டது. அதற்கு விளக்கமும் கொடுக்கவிடவில்லை அவள். என்ன நினைக்கிறாள் என்றே புரியவில்லை அவனுக்கு.

இவன் மனிதக்குரங்கு மணிமேகலையிடம் என்ன பேசினானோ? அவனால் யூகிக்க முடியவில்லை. இருவரில் ஒருவரிடமாவது கேட்டால் தான் குழப்பம் தீரும்.

‘காத்திருக்க முடியாதவன் எதற்கு காதலிக்க வேண்டும்?’ அவனையல்லவா தவறாக எண்ணிவிட்டாள். எளிதில் உறக்கம் தழுவாமல் இரவெல்லாம் புரண்டு கொண்டிருந்தான் கரிகாலன்.

வாட்சபில் மணிமேகலைக்கு வீடியோ கால் செய்ய, இம்முறை அவனை வெறுபேற்றாது அழைப்பை ஏற்றவள், அவனுக்கு முகம் காட்ட மறுத்தாள்.

“என்னைப்பாருடி..”

“தேவையில்லை சொல்லு.” மொபைலை கீழே வைத்து விட்டு, குரலை மட்டும் அனுப்பினாள்.

“எனக்கு உன்னை பாக்கணும்.” அவன் பிடிவாதத்தில், மேகத்திரையை விலக்கி, மெல்லத்தெரிந்தது முழு நிலவு.

“என்னடி கோபமா?”

“இல்லை..” அவனை நேராக சந்திக்காமல், தலை குனிந்தவண்ணம் கூறினாள்.

“என் கண் பார்த்து சொல்லுடி..”

“என்ன? என்னைப்பாரு.. கண்ணைப்பாரு.. நீ சொல்வதெல்லாம் கேட்க முடியாது.” மெதுவாக முனகினாள் மணிமேகலை.

“டாக்டரை பாக்கணுமே?”

“பிஸி..”

அவள் மொபைலை வெடுக்கென்று பிடுங்கி வைத்தார் அவள் சித்தி.

“சித்தி!!” கூந்தல் துள்ளி விழ, கோபமாக திரும்பினாள். கால் கட்டாகிவிட்டது.

“உன் அம்மா சொல்லியிருந்தால், அவர் பேச்சைக் கேட்டிருப்பாய் தானே?”

“இந்த டையலாக்கை, ரெகார்ட் செய்து, லூப்பில் ப்ளே பண்ணிடுங்க சித்தி!!” அவள் திருமணத்திற்கு சம்மதம் சொல்லியே ஆக வேண்டும். AV பேசி விட்டு சென்றதிலிருந்து, கொக்கை போல ஒற்றைக்காலில் தவம் கிடக்கிறார் அவள் சித்தி.

“எமோஷனல் ப்ளேக் மெயில் பண்றீங்க நீங்க!!” சித்தியின் நோக்கத்தை தெளிவாக புரிந்து கொண்டிருந்தாள்.

“எமோஷனல் ப்ளேக் மெயில் தான். உன்னால் ஓகே சொல்ல முடியுமா? முடியாதா?” ஏறக்குறைய மிரட்டினார் அவர்.

கரிகாலனின் மினிமைஸ்ட்வெர்ஷன் போலவே, எல்லோரும் தெரிகிறார்கள் அவள் கண்களுக்கு. அவனைப்போலவே, மிரட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

தாடை இறுக, “சரி!!” என்றாள். ஒற்றை வார்த்தையில் சம்மதம் சொன்னாள். மகிழ்ச்சி வெள்ளத்தில் திக்குமுக்காடிப்போனவர், மணிமேகலையை அணைத்துக்கொண்டு கொஞ்சித் தள்ளினார்.

உதட்டை சுழித்து தன் கோபத்தை காட்டினாலும், அவர் மகிழ்ச்சி அவளையும் தொற்றிக்கொண்டது. இந்த முடிவு, சரிதானா என்கிற குழப்பம் மட்டும் தீரவில்லை.
Nice sis ???
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top