• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

நனியுண்டு நனியுண்டு காதல்! -2

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

laksh

இணை அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
568
Reaction score
624
Location
chennai
“பிரச்சனை வேண்டாம் kk. நந்தினியை மட்டும் எங்களோடு அனுப்பி விடு. மூன்று நாளில், பாதுகாப்பாக திருப்பி அனுப்பிவிடுவோம். எலெக்ஷன் டைம் என்பதால், மேரேஜ் பண்ணி வைக்குற ரிஸ்க் எல்லாம் எடுக்கமாட்டோம்.” என்று நிதானமாகவே kk வுக்கு விளக்கம் தந்தவன், நந்தினியிடம் திரும்பி,

“இந்த கிராமத்தில், என்னைத் தெரியாதவங்க இருக்கமாட்டாங்கமா.. உன் பாதுகாப்புக்கு நான் பொறுப்பு. உன் அப்பாவிடம் நான் பேசுகிறேன். அதுவரை நீங்க பொறுத்திருக்கணும். என்னோடு வர சம்மதமா??” என்றான் கரிகாலன்.

“உங்களை பத்தி நல்லாவே தெரியும்ணா. நான் உங்களோடு வரேன்.” என்றவள், ‘என்னைத்தாண்டி போய்விடுவாயா நீ? என்பது போல மணிமேகலை முறைத்து பார்த்ததும், கையை பிசைந்து கொண்டு தேங்கிவிட்டாள்.

“உத்தமன் மாதிரி பேசுறல்லடா.. இப்போதே அவள் அப்பாவிடம் தூது போக வேண்டியதுதானே?” கரிகாலனைப்பார்த்து எகிறினாள்.

“ஷ்ஷ்ஷ்..” ‘எப்படி புரியவைப்பது இவளுக்கு?’ என்பது போல பிடரியை கோதியவன், ‘இங்கே வா!!’ என அவளை கைநீட்டி அழைத்தான்.

மூக்கு விடைக்க முன்னே வந்து நின்றாள் மணிமேகலை.

“கிராமத்தில் சுத்திட்டு இருக்க, சாதி வெறியனுங்களுக்கு இவங்க காதல் விஷயம் தெரிஞ்சா, அசால்ட்டா வெட்டி போட்டுட்டு அதை வச்சி அரசியல் பண்ணுவானுங்க. நந்தினியோட அப்பாவை பத்தி எனக்கு நல்லாவே தெரியும். இவள் மறுத்து பேசினால், நாளைக்கே கட்டாய கல்யாணம் செஞ்சி வைக்கவும் தயங்கமாட்டார் அந்த மனுஷன்.”

“இப்போ என்ன தான் சொல்ல வர்ற??” என்றாள் பொறுமையிழந்து.

“நீங்க எல்லாரும் வீட்டுக்கு போய் நந்தினி மிஸ் ஆகிட்டான்னு சொல்லுங்க. அவங்க தேட ஆரம்பிச்சிடுவாங்க. பிரச்சனை எல்லாம் அடங்கினதும், இவளை பாதுகாப்பா, அவங்க வீட்டுக்கு அனுப்பி வச்சிடறேன் நான்.” அவன் தெளிவான திட்டமிடலில் அதிசயித்துபோனாள் இவள்.

“மு..முடியாது..அவளை என் பொறுப்பில் விட்டிருக்காங்க. அப்பாக்கும், அம்மாவுக்கும் துரோகம், பண்ண என்னால் முடியாது.” அடம்பிடித்தாள் கிளியோபாட்ரா.

“தங்கச்சிங்களா!!! நீங்க என்ன சொல்றீங்க??” இவளைதாண்டி அவர்களை கேட்டான்.

“எங்களுக்கு ஓகேண்ணா..” கட்டைவிரலை உயர்த்தி காட்டினர், மற்றவர்களும்.

“ப்ராடுங்களா!!! கட்சி மாறாதீங்கடி!!”

“இது அவங்க லைப் மேட்டர். புரிஞ்சிக்கோ கிளியோபாட்ரா!!” என்றான் குறும்பாக.

“டேய்!! டேய்!! என்னடா பேசியே மயக்குறியா?? நான் அசரமாட்டேன். அவளை விட முடியாது. இவங்க லவ் சக்ஸஸ் ஆகலைன்னா உலகம் சுத்துறதை நிறுத்திடுமா என்ன?” அவனைப்போலவே, அவள் பேசவும், குவிந்திருந்த இதழ் பெரிதாக விரிய, உதட்டை மடித்து சிரித்தான் அவன்.

“நேண்டி!! அவனை நம்பி போகாதே!!”

“என் லவ்வுக்கு வில்லியே நீதாண்டி!!” சலித்துக்கொண்டாள் நந்தினி.

“யு நோ?? நான் அவங்க சம்மதம் இல்லாமல் மேரேஜ் பண்ணிக்கிட்டாலும் இரண்டு வருஷத்தில் மன்னிச்சுடுவாங்க.” ப்ரேக்டிக்லாக நந்தினி பேச,

“ஹோ!! மன்னிப்பு கிடைச்சிடும்னா, என்ன தப்பு வேண்டுமானாலும் செய்யலாம். அப்படி தானே??” என்றாள் கோபமாக.

அந்த ஒரு கணம், தன் அன்னையின் சாயலை, அவளுக்குள் காண முடிந்தது கரிகாலனால்!!

“புரிஞ்சிக்கோடி..ஐ கான்ட் லிவ்........”

“ஷ்ஷ்ஷ்..செத்துடுங்க..ஜனத்தொகையில் இரண்டாவது குறையும்.” மணிமேகலை வெடிக்க, இப்போது அடக்க முடியாமல் வாய்விட்டே சிரித்தான் அவன்.

“சிஸ்டர்ஸ்!! வீட்டுக்கு திரும்ப நினைக்குறவங்க, என் காரில் போய் உட்காருங்க.”

“மச்..வா மேண்டி!!” அவளை பிடித்திழுக்க, அசைய மறுத்தாள் மணிமேகலை.

“மணிமேகலைன்னு அழகா பேர் வச்சிருக்காங்க. மேண்டி..ஆண்ட்டின்னு கூப்பிட்டு கொல்லுறாங்க..” உள்ளுக்குள் சலித்துகொண்டவன்,

“ரொம்ப நேரம் இங்கே நிற்க முடியாதும்மா. யாராவது பார்த்தா பிரச்சனையாகிடும். சீக்கிரம் புறப்படுங்க.” என துரிதப்படுத்தினான்.

எல்லாவற்றிற்கும் காரணமான கரிகாலன் மீது கோபம் பொத்துக்கொண்டு பீறிட்டது.

நந்தினியின் அப்பா கேட்டால் என்ன பதில் சொல்வாள்? பெண் போல தன்னை பாவிக்கும் அவள் அன்னையிடமும், தந்தையிடமும் முகத்துக்கு நேரே அப்பட்டமாக எப்படி பொய் சொல்வது? நாளையே அவர்களுக்கு இவையெல்லாம் தெரிய வந்தால், தன் மீது கொண்ட நம்பிக்கை உதிர்ந்து போகாதா?

அவளுக்கு பைத்தியமே பிடித்து விடும் போலானது.

“எனக்கு போகத்தெரியும். நீங்க போங்க.” கிறீச்சிட்டு அவர்களை விரட்டிவிட்டாள் மணிமேகலை.

சிறுவயதில் சுற்றிதிரிந்தது இங்கே. கையில் உதவாத மொபைலைத்தவிர வேறொன்றுமில்லை. சிட்டியைப்போல மேப்பும், கேபும் உதவாது இங்கே. ரோஷம் பாராமல், அவர்களுடனே சென்றுவிட்டிருக்கலாமோ?

இதயம் படபடவென அடித்துக்கொண்டது.

காரை தன் வேறொரு நண்பன், கையில் கொடுத்துவிட்டு மணிமேகலையை சத்தமின்றி பின் தொடர்ந்தான் கரிகாலன்.

eating the blame என்று சொல்வார்களே, இதற்கெல்லாம் அவனும் ஒரு காரணமாகி விட்டிருந்தபடியால், kk க்கு, இதனால் எந்த தொந்தரவு வராமல் பார்த்துக்கொள்வதும் கரிகாலனின் பொறுப்பாகிவிட்டிருந்தது.

கும்மிருட்டில் ஒரு விளக்கின், கீழே அயர்ந்து போய் அமர்ந்தாள் கிளியோபாட்ரா.

என்ன தைரியம் எனக்கெல்லாம்? இப்படியே நடந்து கிராமத்திற்குள் திரும்புவதெல்லாம் சாத்தியமா என்ன? அழுகை முட்டிக்கொண்டு வந்தது.

அவனை நினைத்து ஒரு சேர ஆத்திரமும் எழுந்தது.

“kk!! என்ன சாஞ்சிட்ட??” நிமிராமல், பற்களை நறநறத்தாள்.

“ரொம்ப லாஜிக்கா இருக்கியேம்மா..அவங்க பேரண்ட்சை பத்தி யோசிக்குற. உன் ப்ரெண்டை பத்தி யோசிச்சியா??”

“எல்லாம் உன்னால் தாண்டா!! உன்னை..உன்னை..” எழுந்தவள், கல் ஏதும் அகப்படுகிறதா என்று சுற்றும் முற்றும் தேடினாள்.

“நோ..நோ..நோ வையலன்ஸ்.. கிளியோபாட்ரா!!”

ரொம்பவும் உணர்ச்சி வசப்பட்டிருந்தவள், எக்கி அவன் கழுத்தையே இரு கைகளாலும் பிடித்து விட்டிருந்தாள்.

அவன் கழுத்தை நெறிக்கும் தைரியம் அவனோடு நெருங்கி பழகும் நண்பர்களுக்கு கூட வந்ததில்லை இதுவரை.. அசந்துவிட்டான்.

“ஹே!! ஹே!! ஹே!!” வலுவாக அவள் கையை பிடித்து விலக்கிவிட்டவன், சுதாரித்து வேகமாக முன்னே நடக்க, அவன் கூடவே வருவதால் பாதுகாப்பாக உணர்தவள், அவனுக்கு இணையாக வேகமெடுத்தாள், மெளனமாக.

வேகத்தில், எக்குத்தப்பாக காலை வைத்து சரிந்து அவன் தோளோடு உரசி நிமிர்ந்தவள் ‘சாரி!!’ என்க, அவள் உரசிய இடத்தில் தூசு போல தட்டிவிட்டவன்,

“நான் ரொம்ப ஷை டைப்மா. டச் பண்ணாதே!!” காலரை தூக்கி விட்டு சொன்னவனைப்பார்த்து அவள் நொந்தே போனாள்.

“ச்ச..எப்படியெல்லாம், அசிங்கப்படுத்துறான். உனக்கு இது தேவையா?”

“ஏன் டக் வாக் பண்ற kk?? செம்ம காமெடியா இருக்கு.” சாரி உடுத்தினாலே, அவள் நடை மாறிவிடும்.

இப்போது தன் வாய்க்குள்ளே தெலுங்கில், அவனை வறுத்தெடுக்க துவங்கினாள் மணிமேகலை.

“என்கிட்ட பேசும்போது தமிழ்ல தான் பேசணும். சொல்லிட்டேன்.” கறாராக சொல்லிவிட்டு நடந்தான் கரிகாலன்.

“தொல்காப்பியர் வாரிசு இவன். போ....டா..”

‘ஆனாலும் இவளுக்கு ரொம்பதான் இடம் கொடுக்கிறாய் நீ!! என்னை இவளிடம் சிக்கவச்சவனை சொல்லணும். வரேண்டா நண்பா!!’
:):)
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top