நனியுண்டு நனியுண்டு காதல்! - 3

#1
3

CollageMaker_20190413_224148782.jpg

‘ஹ்ம்ம்..தும்..ஹும்..ஹம்..’ மணிமேகலை பாடல் ஒன்றை ஹம் பண்ணிக்கொண்டே வர,

“உன்னால் கால்கடுக்க நானும் நடக்கிறேன். உல்லாசமாக பாடிக்கொண்டிருக்கிறாய்?” சலித்துக்கொண்டான், கரிகாலன் உள்ளுக்குள் தான்!!

“காது வலிக்குது..” முனகிய அவன் குரல், அவனுக்கே கேட்டிருக்காது.

“இன்னும் எவ்வளவு தூரம் நடக்கணும்??” என்றாள் களைப்பாக.

“எவ்வளவு தூரம் நடக்கணுமோ அவ்வளவு தூரம்.”

“ஹுப்..இங்கிருந்து கிராமம் எத்தனை கிலோமீட்டர்??”

“எத்தனை கிலோமீட்டர் இருக்கணுமோ, அத்தனை கிலோமீட்டர்..” என்றான் மேதாவியாக.

‘கொல்றானே!!’ நெஞ்சை நீவிவிட்டுக்கொண்டவள்,

“எ..எனக்கு பசிக்கிறது!!” என்றாள் அறிவிப்பாக.

பழக்கமில்லாத, புதிதாக அறிமுகமான ஒருவனுடன் இப்படி நீண்ட தூரம் நடப்போம் என்றோ, தன் இயலாமையை அவனிடமே வெளியிட வெளியிடநேரும் என்றோ அவள் நினைத்திருக்கமாட்டாள் இல்லையா? கோபம்கோபமாக வந்தது அவன் மேல்.

இரவே திரும்பி விடபோகிறோம், என்ற மெத்தனத்தில் அவள் எதுவுமே சாப்பிட்டிருக்கவில்லை. நடக்க நடக்க பாதை நீள்கிறது. இப்படியே போனால் ஒரு கட்டத்தில் மயங்கி விழுந்துவிடுவாள்.

அவனுக்கு பசிக்கவும் இல்லை. அதைப்பற்றி சிந்திக்கவும் இல்லை.

இருவரும் நிற்கும் நிலையில், இவளால் இப்படியெல்லாம் கேட்கமுடிகிறதே? அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. இதழ்கடையில் புன்னகை பரவ,

“இன்னும் கொஞ்சம் போனால், ஹோட்டல் வரும் kk!!”

“நான் வெஜ்..” என்றாள்.

இயக்கத்தில் இருந்த கால்கள் நிற்க, ‘இது வேறா??’ என்பது போல திரும்பி, ஒரு பார்வையை செலுத்தியவன், “ஏன் வீகென்னு சொல்லேன்.” தலையை உலுக்கிக்கொண்டான்.

சில மீட்டர் இடைவெளிகளில், அந்த பகுதியில் இருந்த தரமான நடுத்தர உணவகம் கண்ணில் தென்பட, பெருத்த சந்தோஷத்தோடு உள்ளே போனார்கள்.

பாரம்பரிய உணவு வகைகளை வழங்கும் உணவகம் அது. அவள் அதையெல்லாம் விரும்பி சாப்பிட்டதில்லை என்பதால், மில்லெட்டில் செய்த அடையை அவளுக்கும் சேர்த்து அவனே தெரிவு செய்து கொடுத்தான். ருசி பிரமாதமாகவே இருந்தது.

உணவுக்கு நடுவே, ஹேக்க்ஹெக்.. கரிகாலன் சம்மந்தமில்லாமல் அடக்கமாக சிரித்து வைக்க, புருவத்தை உயர்த்தி இறக்கினாள் kk.

‘இல்லம்மா..அதோ..அவன் கொஞ்ச நேரமா உன்னையே, திரும்பி திரும்பி பார்த்துட்டு இருந்தான். உன் முகம் தெளிவா தெரியல போல.’

“உன் முகத்தை பார்க்க வேண்டி, ஆர்வமா எழுந்து வந்தவன், நெத்தியில் அறைஞ்சிகிட்டு, நொந்து போய் திரும்பி போறான்.ஹாஹஹா!!” அவனால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை.

டேய்!! டேய்!! என்னை காண்டாக்கதே!!” கண்ணை விரித்து உருட்டினாள் காரிகை.

“ஹே!! அவன் செஞ்சதை சொன்னேன்.” என்றான் அப்பாவியாக.

“சிரிக்கிறான் பார்.” அந்த முட்டாளுக்கும் சேர்த்து, இவனை பிழிய வேண்டும் போல இருந்தது.

“pearls before swine!!”

“எது? எது?” கண்களில் சிரிப்புடன் சுவாரஸ்யமாகி, அவன் பார்வையை உருட்ட, அவள் உதட்டை சுழித்துவிட்டு வேறுபக்கம் திரும்பிக்கொண்டாள்.

உணவு முடித்து வெளியே வந்ததும், அங்கிருந்த ஸ்டாலில் ஐஸ்கிரீம் வாங்கி சுவைத்துவிட்டு அதிகாரமாக, ‘பே பண்ணு’ என்பது போல, கரிகாலனைத் திரும்பி பார்க்க, அவளை வித்தியாசமாக பார்த்து வைக்க மட்டுமே முடிந்தது அவனால்!!

லெவல் கிராசிங்கை கடக்கும்போது மொபைலை எடுத்து சூழலை படம்பிடிக்க ஆரம்பித்தாள். ஒரு எலெக்ட்ரிக் ட்ரைன் வேகமாக கடந்து கொண்டிருந்தது பதிவாக, அந்த ஏகாந்த சூழலில், தன் அருகே நின்றிருந்தவனையும் சேர்த்து படம்பிடித்துக்கொண்டாள் காரிகை. அவனும் புன்சிரிப்புடன் பிரேமுக்குள் வந்து, கையசைத்து வைத்தான்.

“இந்த ரணகளத்திலும் ஹாப்பியா இருக்க.. ஜாலியா பாட்டு பாடுற? ஹம் பண்ற?”

“அறிமுகமே இல்லாத ஒருத்தனோடு இருக்கோம்னு, பயமே இல்ல.. செம்ம கட்ஸ்மா உனக்கு.” உதட்டை பிதுக்கி, கையை விரித்து, சிலாகித்தான் கரிகாலன்.

“என் மொபைலை வச்சிக்கோங்க. நான் 'பே' பண்ணிட்டு வாங்கிக்குறேன்.” முகம் திருப்பி, மூக்கை சுருக்கி, அவள் நீட்ட,

ச்சி..ச்சி..பதறிப்போய் மறுத்தவன், “வித்தியாசமா தெரியுற என் கண்ணுக்கு.” என்றான், கண்களில் பரவிய ரசனையோடு.

“என் அப்பா லேசில் யாரையும் புகழ மாட்டார்..அவரே புகழும்போது நீங்க எப்படிப்பட்ட ஆள்னு சொல்லாமலே தெரிஞ்சிடுச்சு.” பெருமையாகவே ஒரு ‘ஹோ’ வுடன் உள்வாங்கிகொண்டான் கரிகாலன்.

“இந்த நிமிஷம் மறுபடி கிடைக்காதில்லையா? அதுதான்.” என்றாள்.

“இந்த நொடியை அனுபவிக்குறேன்னு சொல்லு.”

“எக்சாட்லி!!” அவன் அன்னையின் சாயலை அப்பட்டமாகவே பிரதிபலித்தாள் இப்போது.

“ஒவ்வொரு நாளும், ஏதோ ஒரு புதுமை நம்மை சுற்றி நடந்துட்டுதான் இருக்கு. நாம் தான் கவனிப்பதில்லை. ரசிப்பதில்லை. என்னோட இந்த நிமிஷங்களும் அப்படிதான். i am just cherishing this moment!! பிடிச்சிருக்கு. தட்ஸ் இட்.” என்றாள் கண்களை கொட்டி.

அவள் சொன்னவிதம் அவனுக்கு பிடித்திருந்தது. அவள் மீது ஒரு நட்பு பயிரை வளர்க்க ஆரம்பித்தான்.

“உனக்கு தமிழே வராதா? தெலுங்கு, இங்கிலீஷ்ன்னு கலவையா பேசி தமிழை டேமேஜ் பண்ற?” என்றான் அலுப்பாக.

“கன்னடமும் மாத்தாடுவேன்.” இல்லாத காலரை தூக்கிவிட்டு கொண்டாள்.

“உலகத்தை சுத்தணும்னா, உன்னையும் இழுத்துட்டு சுத்தலாம் போலிருக்கே!! அறிவாளி போ!!”

“இப்படியே நடக்க வேண்டியதுதானா?” என்றாள், சோகமாக உதட்டை பிதுக்கி.

“கிராமத்துக்குள் போறவங்க, இந்தப்பக்கம் தான் போவாங்க. லிப்ட் கேட்டு பாக்கலாம். அதுவரை, உன்னை பத்தி சொல்லு.” கைகட்டிக்கொண்டு கேட்க தயாராகிவிட்டான் கரிகாலன்.

அவளும் சேட்டர் பாக்ஸ் என்று ப்ரூவ் பண்ணும்விதமாக, ஆதியோடு அந்தமாய் அனைத்தையும் சொல்லி முடித்து, “உங்களை பத்தி சொல்லுங்க!!” கண்களில் மின்னலுடன், ஆர்வமே உருவாய் கேட்டவளிடம் “என்னை பத்தி சொல்ல ஒண்ணுமில்லை. ஒரு சாதாரண மனுஷன்.” தோளை ஏற்றி இறக்கியவனைக்கண்டு திகைத்து போனாள்.

அவள் பே..பே..வென்று நிறுத்தாமல் பேசிக்கொண்டிருக்க, நச்சென்று ஒரே வரியில் முடித்துவிட்டான்.

‘இனி அவன் கேட்டாலும் பேசக்கூடாது.’ உடனடிதீர்மானம் கொண்டுவந்த பின் தான் மனம் அமைதியானது.

உன்னால்..உன்னால்..உன்னாலே...கொஞ்சம் கொஞ்சமாய் நான் தொலைந்தேனே!!

நிசப்தத்தில் அவளின் மெல்லிய குரல் செவிப்பறையில் இதமாக, இனிமையாக அதிர்ந்தை ஒப்புக்கொள்ள வேண்டும்.

“அவங்களுக்கு மேரேஜ் பண்ணி வைக்க மாட்டீங்க தானே?” சந்தேகமாக கேட்டாள். மறுப்பாக தலையசைத்தான்.

“காதலுக்கு உதவி பண்றவங்களை பார்த்திருக்கேன். நீயானால்??”

“மச்..நம்பிக்கையை உடைப்பதில் உள்ள கஷ்டம் அனுபவிச்சா தான் புரியும்.” கைகளை உயர்த்தி சரணடைந்தான் கரிகாலன்.

அவள் தரப்பில் அவள் சரிதான்!!

ஒரு லாரியை மடக்கிபிடித்து லிப்ட் கேட்க, “பைக், கார் அரேஞ் பண்ண முயடியாதா?” என்றவளிடம், “வெகேஷனுக்கு வந்திருக்கிறோம் பார்.. உன்னால் நானும் கால் கடுக்க நடக்கிறேன். மரியாதையாக வா!!”

சாரி வேறு, அவளை வேறுபுறம் இழுத்துக்கொண்டிருந்தது. சங்கடமாக நெளிந்தாள்.

“மச். என்னால் ஏற முடியலை.”

சரிந்தாலும் அவளுக்கு எதை எங்கே இழுத்து செருக வேண்டும் என்றே தெரியாது. சில சமயங்களில் தான் உடுத்தியிருக்கிறாள், அதுவும் கட்டாயத்தில்!! அவள் கவனமெல்லாம் அந்த சாரியின் மேலே இருந்தது.

“சித்தி!! என்னை ஒழுங்கா வளத்திருக்கியா பார்!! உன்னால் தான், இந்த சோதனையெல்லாம். ரொம்ப செல்லம் கொடுத்திட்ட, எனக்கு.” மானசீகமாக சித்தியுடன் சண்டைபோட்டாள்.

“காலை அங்கே வை..இப்படி பிடிச்சுக்கோ..”

“லிப்ட் கொடுக்கறேன்னு ஒத்துக்கிட்டதே, பெரிய விஷயம்மா. நீ வேற லேட் பண்ணாதே!!” கடித்த பற்களுக்கிடையே வார்த்தையை துப்பினான்.

“இது சரிவராது. பாட்டி போல நினைச்சு, நானே உன்னை தூக்கி விடுறேன்.”

‘நானும் பாட்டியும் ஒன்றா?’ நினைத்தாலும், அவள் வெளிக்காட்டிகொள்ளவில்லை.

“என்ன முழிக்குற??”

‘சரி’ என்றவளின் பார்வை தாழ்ந்துவிட்டிருந்தது. அவள் கைநீட்ட, அவன் ஒரு அவசரத்துடன், வேகமாக இடையோடு அணைத்து, குழந்தையை போல தூக்கி விட்டான்.

“காஸ்ட்யூம் சதி பண்ணிடுச்சு!! ஹையோ!!” பெரிதாக கண்ணை விரித்தவளின், முகமெல்லாம் சிவந்து விட்டது.

கன்னமெல்லாம் சிவப்பேறிக்கிடக்க, உதட்டை கடித்தபடி, ஒரு கணம் அமைதியாகிவிட்டவளை, வம்பிழுக்கும் பரபரப்பு உள்ளே ஊறினாலும், அதன் தலையில் தட்டி அடக்கிய கரிகாலன், அதற்கு மேல் சீண்டவில்லை.

“மூளை இருக்காடா உனக்கு??கை கொடுத்திருந்தா, நானே ட்ரை பண்ணி வந்திருப்பேன்”

“கீழே நின்னு கதகளி பண்ணிட்டு இருப்ப. எனக்கு அதுக்கெல்லாம் நேரமில்லை.” சூடாகவே வந்தது பதில்.

துளிர்விட்ட நட்பு பயிர் மீண்டும் மண்ணுக்குள் புதைந்துவிட்டது.

அவள் கண்களின் வெம்மையை என்ன சொல்வது? ஹுப். முன்னுச்சி முடிகளை அழுத்தி பின்னுக்கு தள்ளினான்.

வீட்டிற்கு திரும்பும் போது, ஹாலில் எரிந்துகொண்டிருந்த விளக்கு வெளிச்சம், அவள் பாதம் வைக்கும் இடங்களில் வழிந்துகொண்டிருந்தது.

“எங்கே போன கண்ணம்மா?? பயந்தே விட்டேன் நான்!” கன்னம் வழித்து கொஞ்சியபடி அவளை வரவேற்றார் சித்தி.

அவரை ஆசுவாசப்படுத்தி, அமர்த்திவிட்டு, கோவிலுக்கு புறப்பட்டதிலிருந்து நடந்தவைகளை ஒரே மூச்சில் சொல்லி முடித்தவள், “சித்தி!!” வில்லங்கமாக எதையோ கேட்க, ஆயத்தமானாள் மணிமேகலை.

“இப்போ நான் என்ன செய்ய?”

அவளுக்கு ஒரு பழக்கம் உண்டு. முடிவெடுக்க முடியாமல் திணறும் வேளைகளில், சித்தியிடம் கேட்டு, அவர் சொல்வதற்கு நேரெதிராக எதையேனும் செய்து முடிப்பாள்.

அவரோ கணவரை பார்க்க, “அப்பா!!” திரும்பாமலே குரலை அனுப்பினாள் மகள்.

“சொல்லுங்க சித்தி!!” இவர்கள் இருவருக்கும் இடையிலான உறவு ரொம்பவும் விசித்திரமானது.

“அது கண்ணம்மா!!!”

ம்ம்,..

“கரிகாலன் சொன்னதே ஓகே.” என்றார் இழுவையாக.

“அவன் செய்யுற தப்புக்கு நான் ஏன் பொய் சொல்லணும்? நாளை காலையே அப்பாவிடம் போய் உண்மையை சொல்லி விட்டு வருகிறேன்” மின்னாமல் முழங்காமல் அவர் தலையில் இடி,மின்னலை இறக்கிவிட்டாள்.

“அவன் தானே உனக்கு உதவி பண்ணிருக்கான்?”

“தப்பு செஞ்சதும் அவன் தானே?” என்றாள் இடக்காக. உள்ளே பதறினாலும், சோகையாக சிரித்து வைத்தனர் மற்ற இருவரும்.

மறுநாள் காலை...

அதிகாலையிலேயே ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு, தோப்பிற்குள் புகுந்தவளை கண்டு புருவத்தை சுருக்கினான் கரிகாலன். வேட்டியின் நுனியை ஒரு கையால் மடித்து பிடித்தபடியே அவர்களை நெருங்கினான்.

உடன் நந்தினியின் அப்பாவையும் அழைத்து வந்திருந்தாள் அவள்.

‘ராட்சசி!! எத்தனை முறை சொன்னனடி!! சிக்க வைத்து ரசிக்கிறாயா நீ?’ கரிகாலன் கடுப்பின் உச்சத்தில் முறைக்க, அவள் ஈஈஈஈ என்று சிரித்து வைத்தாள்.

“இவரை, எதுக்குடி இங்கே அழைச்சிட்டு வந்த??” அவள் காதருகே குனிந்து, சிரித்த முகமாகவே கறுவினான் அந்த ஆண்மகன்.

“உன் தப்புக்கு நான் பொறுபேற்க முடியாது.”

“உன் பல்லை உடைக்கறேண்டி.” நந்தினியின் அப்பா இருப்பதையும் மறந்து, அடிக்குரலில் சீறினான்.

இந்த பிரச்சனையில், அவளுக்கு சின்ன தொந்தரவு கூட தரக்கூடாது என்று தான் நினைத்தான். இன்று, அவளையும் பிரச்சனைக்குள் சேர்த்து, நந்தினியின் அப்பாவிடம் சிக்க வைப்பதற்கான வழிகளை, மளமளவென்று, அவன் மூளை கணக்கு பண்ணிக்கொண்டிருந்ததை, கொஞ்சமும் அறியவில்லை அவள்.AK-KK யார் யாரை சிக்க வைக்கப் போகிறார்கள்?? அடுத்த பதிவில் சந்திப்போம் மக்களே!! மறக்காமல், கமெண்ட்டுங்க!! முந்தைய பதிவிற்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் தந்தவர்களுக்கு நன்றி!!
 

Advertisements

Top