நனியுண்டு நனியுண்டு காதல்! - 5

#49
hi friends!!!
Thanks for your likes and comments. here comes the next update. share your views.

5

பட்..பட்..பட்...

டப்..டப்..டப்...

ஆஆஆஆ..ஆஅவ்..அவுச்..ஆஆ..ஸ்ஸ்ஸ்..

செழியனின் இல்லத்தில் ஹாலில் அமர்ந்திருந்த கரிகாலன், கிட்சனுக்குள் இருந்து விதவிதமான சப்தங்கள் எழவும், ஒன்றும் புரியாமல் உள்ளே ஓடினான்.

முழு பதற்றத்துடன் காதுகளையும், கண்களையும் ஒருசேர, இறுக மூடிக்கொண்டு, கிட்சனுக்குள்ளிருந்து தாறுமாறாக ஓடிவந்தாள் மணிமேகலை.

“ஏன் பதறிப்போய் ஓடிவருகிறாள்??” கரிகாலன் தலையை நீட்டி உள்ளே எட்டிப்பார்க்க, பலமான சப்தத்துடன், எண்ணைக்குள் இருந்து வெடித்து கிளம்பிக்கொண்டிருந்த, எதுவோ ஒன்று, அறைக்குள் நான்கு புறங்களிலும் சிதறி, பின் ரூபையும் தொட்டுதொட்டு திரும்பியது. மணிமேகலையின் செய்த, எக்ஸ்பெரிமெண்டால் உண்டான விளைவு.

அவள் நின்றிருந்த தோரணையும், நெஞ்சு படபடக்க இமைகளை இறுகமூடிக்கொண்டு நின்றிருந்த விதமும் கண்டு லேசாக சிரித்துக்கொண்டவனுக்கு, தன் மனதில் எழுந்த உணர்வுகளை சத்தியமாக புரிந்துகொள்ள முடியவில்லை. அடுத்து அவள் செய்யப்போகும் காமெடிக்காக ஆர்வமாக காத்திருக்க தொடங்கினான் கரிகாலன்.

வெடிச்சத்தம் நின்றதும், மூச்சை இழுத்துவிட்டுக்கொண்டு, மெல்ல ஒற்றைக்கண்ணை மட்டும் திறந்து நிலவரத்தை காண, எதிரேயிருந்த கரிகாலனின் வரவால் நிலவரம் கலவரமாகிப்போனது புரிந்தது.

“கிட்சனுக்குள் தீபாவளி செலப்ரெட் பண்ண ஆரம்பிச்சிட்டியா kk??” அலட்டிக்கொள்ளாமல் அவன் கேலியில் இறங்க,

‘இவனிடமா சிக்க தொலைக்க வேண்டும்?’ என்றிருந்தது அவளுக்கு.

“கையில் காயம் பட்டிருக்கு பார்!!”

“ஜஸ்ட், இரண்டு ட்ராப் மேலே தெறிச்சிடுச்சு.” கூலாக சொன்னவள், பஞ்சினால் கையை சுத்தம் செய்தபடியே, “எல்லோரும் வந்துவிட்டார்களா?” என்றாள், ஆர்வமே உருவாய்.

இல்லையென்றான் கரிகாலன்.

நந்தினி – மாறன் காதல் விவகாரத்தை பேசித்தீர்க்க அனைவரும் செழியன் இல்லத்தில் கூடுவதாக முடிவுசெய்யப்பட்டது. கரிகாலன் முன்னரே வந்துவிட்டிருந்ததால், மணிமேகலையின் ரகளையை காணமுடிந்தது.

பதட்டமாக அவளின் சித்தியும் கிட்செனுக்குள் வர, கரிகாலன் அங்கிருந்து நகர்ந்துவிட்டான். “இனி உன்னை கிட்சனுக்குள் விடவே போவதில்லை.”

ஹிஹிஹி.. அவள் குரல் தான், அவனை பின் தொடர்ந்தது. ஹாலில் அமர்ந்திருந்தவன், அவளை நினைத்து நினைத்து சிரித்துக்கொண்டிருந்தான்.

“என்னடா தனியா சிரிச்சிட்டு இருக்க??” கரிகாலனின் தோளை தட்டியவண்ணம், வந்து அமர்ந்தான் மாறன், நந்தினியின் காதலன்.

“அந்த ******** சாதிபயலுங்க கிட்ட அடிவாங்கியும் அடங்கல நீ!!”

“ஆஆஆ..பின்னிட்டானுங்கடா நேத்து..” லேசாக வீங்கியிருந்த முகத்தை அழுத்திதுடைத்துக்கொண்டான் மாறன். ‘இது தேவையா’ என்பது போல ஒரு பிரதிபலிப்பு கரிகாலனிடம்.

சாதி.. இறந்த செல்கள் உதிர்ந்த இடத்தில், புது செல்கள் முளைவிடுவதைப்போல, அழிக்க அழிக்க விருட்சமாக வளரும், வேரோடு பிடுங்கி எறிந்தாலும், புத்துயிர் பெற்று மீண்டு வரும் சக்தி, என்னவோ சாதிகளுக்கு தான் உண்டு போலும்.

சாதிகளும், அதனால் உண்டாகப்பட்ட ஏற்றதாழ்வுகளும் குறைந்துவிட்டதாகவும், மனிதசமூகம் நாகரிகத்தில் முன்னேறி விட்டதாகவும், நாம் கனவு கண்டு கொண்டிருக்க, பலவழிகளில் அதை பொய்யென்று நிரூபிக்கிறது, தற்கால நிகழ்வுகள்.

மேடையேறி சாதி இல்லை என்று முழக்கமிடுபவர்களும் சரி, கூட்டத்தின் முன் தன்னை முற்போக்குவாதியாக காட்டிக்கொள்பவர்களும் சரி, வெளிஉலகத்திற்கு அவர்கள் காட்டும் முகம் வேறாகவும், உள்ளுக்குள் வேறாகவுமே இருக்கின்றனர். ஆண்களை விட பெண்கள், இதை தீவிரமாக உள்ளுக்குள் கடைபிடிக்கின்றனர். கடத்துகின்றனர்.

நந்தினியின் அம்மாவும் அப்படிப்பட்டவர்களில் ஒருவரே!!

.நந்தினியின் அம்மா, இந்த காதல் விவகாரத்தை முடிவுக்கு கொண்டு வரும் பொருட்டு, தன் சாதிமக்களை கூப்பிட்டு இருந்தார். பொதுவான ஒரு நபரின் இடத்தில் விவாதித்து, இந்த விவகாரத்தை முடிவுக்கு கொண்டுவர நினைத்தவர்கள், செழியன் வீட்டில் ஒன்றாக குழுமியிருந்தனர்.

“இரண்டு குடும்பமும் மட்டும் பேசி முடிச்சிருக்கலாமேடா.. என்னத்துக்கடா பெரிய கூட்டத்தை கூட்டி வச்சிருக்கானுவ??” – கலவரமானான் மாறன்.

“உங்களை பிரிக்கத்தான்.” – கரிகாலன்.

“பெருசு..என்னவோ சொல்லுதே..கேட்போம்”

“எங்களை வில்லனா மாத்தி, நீங்க ஹீரோவா ஆகப்பாக்குறீங்களாடா??” நிதானமாக தொடங்கினார் ஒரு பெரியவர்.

“நேத்து, உங்க சாதிக்காரங்க, என் நண்பனை அடிச்சிருக்காங்க. முதலில் அதுக்கொரு பதிலை சொல்லுங்க.” என்றான் கரிகாலன், ரௌத்திரமாகவே.

“தப்புதான் அப்பு!! நான் ஒத்துக்கிடுறேன்.. எங்க சனத்தை, மன்னிப்பு கேட்க சொல்லிடுறேன்.. இதுக்கு முன்னேயும், நம்ம கிராமத்தில் சாதிவிட்டு சாதி கல்யாணம் பண்ணிகிட்டாங்க.. அவங்க, நிலை என்னன்னு நான் சொல்லி தெரியவேண்டியதில்லை உங்களுக்கு.”

“ஏன் சாதியை பிடிச்சுகிட்டு தொங்குறீங்க. சாதி, கட்டுப்பாடுன்னு சொல்லி மைனர் பொண்ணுங்களுக்கும், கட்டாய கல்யாணம் பண்ணி வச்சிடறீங்க.”

“ஏய்!! தப்பா பேசாதப்பு.. ஸ்கூல் முடிச்ச, மேஜர் பிள்ளைங்களுக்கு தான் கல்யாணம் பண்றோம்.” சட்டத்தை கடைபிடிக்கிறோம் என்பதை கெத்தாக சொல்லிக்கொண்டார்கள்.

ஹுக்கும்.. அந்த லட்சணம் அவனுக்கு தெரியாதா என்ன? பெண் யாரையேனும் காதலித்து விடுவாளோ என்ற இன்செக்யுரிட்டியிலேயே அவசரஅவசரமாக திருமணம் செய்து வைக்கிறார்கள் சிலர். இதனால் அந்த பெண்களின் கல்வியும், கனவும் கூட சிதைந்துபோகிறது. இவையெல்லாம் இந்த மூடர்களுக்கு புரியுமோ? என்னவோ?

“முடிவா என்ன சொல்றீங்க??” என்றான் கரிகாலன், பொறுமையற்று.

“இது சரிப்படாது. உன் நண்பனை மரியாதையா விலகி இருக்க சொல்லு.”

“என்ன பேசுறீங்க?? அந்த பொண்ணுக்கும் பிடிச்சிருக்கு. மாறனுக்கும் பிடிச்சிருக்கு. நடுவில், நீங்க ஏன் பிரச்சனை பண்றீங்க??” இப்போது செழியன் இடைபுகுந்தார்.

“இதுக்கு முன்னாடியும் காதலிக்கிறோம்னு சொல்லி, கல்யாணம் கட்டிக்கிட்டு போனவங்க, ஆளுக்கொரு பக்கமா பிரிஞ்சி கிடக்கறாங்க இப்போ.. அவங்க பழக்கவழக்கம் எங்களோட ஒத்து போகாது.. வீணா பிரச்சனை தான் கிளம்பும்.” தங்கள் பிடியிலேயே நின்றனர் அவர்கள்.

நந்தினியின் அம்மாவும் அதை ஆமோதித்தார். நந்தினியின் அப்பாவோ கரிகாலனிடம் சொன்னது போல, எந்த பக்கமும் சாயாமல் மையமாக தலையசைத்தபடி நின்றிருந்தார்.

“நந்தினியை கூப்பிட்டு இவனைப்பிடிக்கலைன்னு சொல்ல சொல்லுங்க.. நாங்க அமைதியா விலகிக்கிடுறோம்.” அவர்களுக்கு எதிராகவே செக் வைத்தான் கரிகாலன்.

“என்னப்பு?? சும்மா எதிர்த்து பேசிகிட்டே இருக்க? சொன்னா புரிஞ்சிக்கமாட்டியா??”

“ஏன், நீங்க தான் புரிஞ்சிக்கிறது.” என்றான் கரிகாலனும், விடாமல்.

“பிரச்சனைக்கு காரணமானவன் அவன் வாயைத் திறக்க மாடேங்குறான். நீயே பேசிட்டு இருக்க..” கரிகாலனின் வாயை அடைக்கமுடியாது தவித்தனர்.

“நீங்க நந்தினியை கூப்பிடுங்க.. நான் வாயை திறக்கல.” சாதுர்யமாக வெட்டிப்பேசினான் கரிகாலன்.

“கரிகாலன் சரியா தானே கேட்குறார். அவர் வாயை அடைக்காமல் அவர் கேட்குறதுக்கு பதில் சொல்லுங்கள்.” – செழியன்.

“இளரத்தம் கொதிக்குது. நீயும் என்னப்பா அவனோட சேர்ந்துகிட்டு??”

“அவனை நேத்து அடிச்சி போட்டதுக்கு, இந்நேரம் வரை கையை கட்டிக்கிட்டு இருக்கேனே.. அது என் தப்புதான்.” கட்டுப்படுத்தமுடியாது கோபத்தில் சீறினான் கரிகாலன்.

“அடிக்கு அடின்னு கிளம்பினா என்னவே ஆகுறது? ரொம்ப சூடா இருக்கே. கொஞ்சம் அமைதியா இரு அப்பு நீ!!!”

“இது இரண்டு குடும்பம் சம்மந்தப்பட்ட விஷயம். நீங்களெல்லாம், தலையிடுறதே தப்பு.” - செழியன்

“இந்த கிராமத்துக்கு பிழைக்க வந்தவன் தானேப்பா நீ.. நீங்க, தெலுங்கு தானே.. உங்க பழக்க வழக்கத்தை விட்டுகொடுத்து வேற சாதிப்பயலுக்கு உன் பொண்ணைக்கொடுப்பியா??”

ஏனோ மணிமேகலையை இதற்குள் இழுக்கவும், கரிகாலனுக்கு சுறுசுறுவென்று கோபம் உச்சிக்கு ஏறியது.

“அவரை எதுக்கு இதுக்குள் இழுக்குறீங்க?? இவங்களை பத்தி மட்டும் பேசுங்க.” என்றான் கறாராக.

அதற்குள் செழியனே, “என் பெண்ணுக்கு விருப்பம்னா நான் எதையும் செய்வேன். உங்களுக்கு கவலை வேண்டாம்.” என்றார்.

“பேச்செல்லாம் நல்லா தான் பேசுவீங்க. ஆனா, செய்யத்தான் மாட்டீங்க. உங்களுக்குன்னு வரும்போது சட்டம் மாறிடும்.”

“அநாவசியமா பேசி நேரத்தை வீணடிக்காதீங்க!!!” என்றான் கடுப்பாக.

“செழியா!! நேராவே கேக்குறேன். நீ, உன் பொண்ணை கரிகாலனுக்கு கட்டிக்கொடுப்பியா சொல்லு??”

இந்த திடீர் தாக்குதலால், சம்மந்தப்பட்ட மூவருமே திடுக்கிட்டு போய் வாயடைத்து நின்றனர்.

“என்னடா?? உனக்கு கல்யாணத்தை பண்ணி விட்றுவானுங்க போலவே??” கேட்டபடியே கரிகாலனை திரும்பி பார்த்த மாறன் அதிர்ந்தான்.

“டேய்!!! என்னடா ஒரு மார்க்கமா சிரிக்குற நீயும்?? அப்போ உனக்கும் சம்மதமா??” என்றான் அதிர்ச்சியில், நெஞ்சை பிடித்துக்கொண்டு.

“ஹாஹா!! இல்லைடா..” முகம் முழுக்க சிரிப்புடனே, சொல்பவனை எப்படி நம்புவான் மாறன்.

“எனக்கே தெரியாமல் எதாச்சும் நடந்துச்சாடா?? துரோகி.” – பல்லைக்கடித்தான் மாறன்

“இல்லேங்குறேன். நம்பமாட்டியா நீ??” அந்த குறுநகை மட்டும் மறையவேயில்லை.

“எதுக்குடா சிரிக்குற??”

அத்தனை நேரமும் இருந்த கோபங்களும், ஆத்திரமும் தொலைந்து போக, “எனக்கே தெரியலை.. சிரிக்காமல் இருக்க முடியலைடா.” என்றான் இலகுவாகிவிட்ட மனநிலையோடு.

“இப்படி சிரிச்சிட்டே இரு.. அந்த பொண்ணும் உன்னை நம்புவா.” கிட்சன் வாயிலில் நின்றிருந்த மணிமேகலையை சுட்டினான் மாறன்.

“நான் முன்னமே சொன்னது தான்.. என் பொண்ணுக்கு சம்மதம்னா நான் என்னவும் செய்வேன்.” என்றார் செழியன். ‘இதற்குள் எதற்கு அவளை இழுக்கிறார்கள்? இவன் என்ன இப்படி சிரிக்கிறான். அவள் அப்பாவின் பதில் வேறு அவளுக்கு படபடப்பை கூட்டியது. தன்னருகில் இருந்த நந்தினியை கண்களாலேயே சாம்பலாக்கிகொண்டிருந்தாள் மணிமேகலை.

இந்த பெருசுகள், இன்னும் கொஞ்சம் பேசினாலும் உள்ளே புகுந்து துவம்சமாக்கிவிடும் முடிவில் இருந்தாள் மணிமேகலை.

“கரிகாலா நீ என்ன சொல்லுற??” அவன் புறம் கேள்வி திரும்பியதும்,

மாறா சிரிப்புடன், லேசாய் தலைதிருப்பி ரகசியமாக, தன்னை பார்த்த கரிகாலனுக்கு கண்களிலேயே கொலைமிரட்டல் விடுத்தாள் அவள். அவள் விழிகளில் தெறித்த மிரட்டல் கண்டு, அவனுக்குள் சுவாரஸ்யம் தொற்றிக்கொண்டது. அவளை மேலும் சீண்டிபார்க்கும் ஆர்வம் துளிர்விட்டது.

‘டேய்!! இவனுக்கு கல்யாணம் செய்து வைக்கத்தான் கூட்டத்தை கூட்டினிங்களாடா?? இவன் வேற ஒரு மாதிரியா சிரிக்குறானே?’ மாறனால் உள்ளுக்குள் மட்டுமே பொரும முடிந்தது.
Athi mudiyala da samy namaluku ipd ethum nadakalaiye 😂😂😂😂😂
 

Sponsored

Latest Episodes

Advertisements

Top