• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

நனியுண்டு நனியுண்டு காதல்! 7

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sridevi

அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
4,750
Reaction score
7,120
Location
madurai
Kkkitta antha moonu varthaigal sollita vendiathu thane ak nice epi sis this is for kkஎன் இதயம் இதுவரை துடித்ததில்லை
இப்போ துடிக்கிறதே
என் மனசு இதுவரை பறந்ததில்லை
இப்போ பறக்கிறதே
இது எதனால் எதனால் தெரியவில்லை
அதனால் பிடிக்கிறதே ஹே
இது சுகமா வலியா புரியவில்லை
கொஞ்சம் சுகமும் கொஞ்சம் வலியும்
சேர்ந்து துரத்துறதே
உன்னிடம் எப்போதும் உரிமையாய் பழகிட வேண்டும் (பழகிட வேண்டும் )
வைரமே ஆனாலும் தினம்
தினம் தொலைத்திட தூண்டும்
இதுவரை என் நெஞ்சில் இல்லவே
இல்லை பயங்கள் ஹா
இரண்டு நாள் பார்த்தேனே விரட்டுதே
உந்தன் குணங்கள் ஹே
 




kalpanaekambaram

அமைச்சர்
Joined
May 6, 2018
Messages
1,024
Reaction score
3,257
Location
Tamilnadu
Kkkitta antha moonu varthaigal sollita vendiathu thane ak nice epi sis this is for kkஎன் இதயம் இதுவரை துடித்ததில்லை
இப்போ துடிக்கிறதே
என் மனசு இதுவரை பறந்ததில்லை
இப்போ பறக்கிறதே
இது எதனால் எதனால் தெரியவில்லை
அதனால் பிடிக்கிறதே ஹே
இது சுகமா வலியா புரியவில்லை
கொஞ்சம் சுகமும் கொஞ்சம் வலியும்
சேர்ந்து துரத்துறதே
உன்னிடம் எப்போதும் உரிமையாய் பழகிட வேண்டும் (பழகிட வேண்டும் )
வைரமே ஆனாலும் தினம்
தினம் தொலைத்திட தூண்டும்
இதுவரை என் நெஞ்சில் இல்லவே
இல்லை பயங்கள் ஹா
இரண்டு நாள் பார்த்தேனே விரட்டுதே
உந்தன் குணங்கள் ஹே
Thank you ????
Very nice song..
 




Mahizhini bharathi

இணை அமைச்சர்
Joined
Mar 24, 2019
Messages
701
Reaction score
357
Location
Tamilnadu
மக்களே!!
அடுத்த பதிவு..முந்தைய பதிவிற்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் தந்தவர்களுக்கு நன்றி!! வாசித்து விட்டு கருத்துக்களை பதிவிடுங்கள்.
~கல்பனா

7

ஆதித்த கரிகாலனின் வேகம் மணிமேகலையை திணறடித்துக்கொண்டிருந்தது. அன்று திரும்பியும் பாராமல் ஏறக்குறைய ஓடிவிட்டவளை, கரிகாலனே தான் மீண்டும் வலிய தொடர்பு கொண்டான், வாட்சப் வழியே.

கத்தரித்துப்பேசினாலும் மணிமேகலையால் முழுதாக, அவனை தவிர்க்க முடியவில்லை. சாதாரணமாக ‘வேவ்’ செய்வதில் தொடங்கும் சாட்..எங்கே தடம் திரும்பும், எப்படி பயணிக்கும் என்றே புரியாது இரவு பதினொன்று வரை பேச்சுக்கள் நீண்டு விடும்.

இத்தனைக்கும் அவள், ம்ம்..ஹுஹும்.. என்பதை தவிர பெரிதாக எதையும் சொல்லிவிடமாட்டாள். பெரும்பாலும் எமோஜிகளை தட்டிவிட்டே சமாளிப்பாள். கரிகாலன் சாமர்த்தியமாக, தன் வார்த்தையாடலில் அவளை பேச்சுக்குள் இழுத்து நிறுத்திக்கொள்வான்.

அவள் பணிபுரிந்து கொண்டிருந்த மருத்துவமனைக்கு கரிகாலனின் தென்னந்தோப்பை கடந்து தான் செல்ல வேண்டும். தோப்பிற்கு அருகில் இருந்த சிறிய கோவிலில் இரண்டு நிமிஷங்கள் செலவிடுவாள். அனிச்சையாக, அவன் தரிசனம் கிடைக்குமா என்று கண்கள் அலைபாய துவங்கிவிடும்.

அவள் வீட்டிலிருந்து புறப்பட்ட நேரம், “kk!! கிளம்பிட்டியா??” வாட்சப்பில் கேட்டிருந்தான் கரிகாலன்.

“ம்ம்..ஆன் தி வே.” பதிலுக்கு டைப்பினாள் மணிமேகலை.

தோப்பை நெருங்கியிருந்தாள். அதோ..தூரத்தில் தெரிந்த அவன் உருவம், மணிமேகலைக்குள்இனம் காண முடியாத,படபடப்பை உற்பத்தி செய்தது.

எவனோ ஒருவனை மண்ணில் சரித்து, அவன் குறுக்கில் பலமாக உதைவிட்டுக்கொண்டிருந்தான் கரிகாலன். மணிமேகலை இந்த வழியாகத்தானே செல்வாள். ஏற்கனவே அவனுக்கு காட்டுமிராண்டி டேகை கட்டிவிட்டாள்.

‘இப்படியொரு நிலையில் அவனைக்கண்டால்??’ என்று முதலில் அவனை அடிக்கத்தயங்கினான் கரிகாலன்.

‘இல்லை..இது..இதுதான் நான்..இந்த மொத்தமும் சேர்ந்து தான் கரிகாலன். இந்த கரிகாலனைத்தான் அவளுக்கு பிடிக்க வேண்டும். பிடித்தே ஆக வேண்டும்.’

தன் இயல்பை அவளிடம் மறைக்க நினைத்ததில், அவன் மீதே அவனுக்கு கோபம்.

ரௌத்திரத்தின் மொத்த உருவமாக நின்றிருந்தான் அவன்.

அவள் விழிகள், அவனை நேராக சந்தித்தும் அவன் வேகமும், பலமும் கூடியது இவளுக்கு வெளிப்படையாக தெரிந்தது. கோவிலுக்கு கூட செல்லாமல், நேரே வாகனத்தை விட்டுக்கொண்டு சென்றாள்.

‘அரண்டுவிட்டாளோ?’

மிதிபட்டு கீழே கிடந்தவனை, தன் கூட்டாளிகளிடம் பார்த்துக்கொள்ளும்படி சமிக்ஞை கொடுத்துவிட்டு, மணிமேகலையை அழைத்து நிறுத்தினான் கரிகாலன்.

“kk!!”

அவள் மனதின் ஆழத்தை அறிய முயலும் அதே கூரிய பார்வை.

விரல்களால் கேசத்தை முன்னுச்சியை கோதிக்கொண்டே, “என்னை லேபில் ட்ராப் பண்ணிடு kk..அதுக்கு தான், டெக்ஸ்ட் செய்தேன் உனக்கு.” என்றான் கரிகாலன். மண்பரிசோதனை செய்ய சில மாதிரிகளை சேகரித்து வைத்திருந்தான். அவைகளை லேபில் கொடுத்து பரிசோதிக்க வேண்டும்.

அவள் பின்னே ஏறி அமர்ந்து கொண்டு “போகலாம்.”என்றான் உரிமையாக.

‘திமிர்..திமிர்..உருவம் மொத்தமும் திமிர்..முடியுமா என்று கேட்டானா பார்??’

‘நீ தான்..நீயே தான் காரணம்..இரவிரவாக நேரம் கடப்பதே தெரியாமல் மொபைல் வழியே வளர்ந்த உரிமை இது..’ அவள் மனமே கொட்டி வைத்தது.

அவன் பார்வை முதுகையே துளைப்பது போல இருந்தது. புயலில் சிக்கியது போல, கைகளில் அவள் வாகனம் பலமாக ஆட்டம் கண்டது.

கிடைத்த இடைவெளிக்குள் கை நுழைத்து, வாகனத்தை பற்றி ஆட்டத்தை நிறுத்தியவன், “லைசென்ஸ் இருக்கா? இல்லையாடி?” என்றான் எரிச்சலாக.

அவன் மூச்சுக்காற்று காதில் உரச, உடலில் செல்கள் எல்லாம் அட்டென்ஷன் மோடுக்கு தாவ, அவஸ்தையாக கீழே இறங்கினாள்.வண்டியில் அவனை முன்னே விட்டு, தான் பின்னே அமர்ந்து கொண்டாள்.

அவள் தவிப்பேதும் புரியாமல் வண்டியை கிளப்பியவன், “சாட்டில் நல்லா பேசுற?? நேரில் முகத்தை கூட பார்க்க மாட்டேங்குற??” என்றான் கரிகாலன்.

‘ஏண்டா கேட்கமாட்ட??’ மனதிற்குள் சொன்னவள், ஏதும் பேசாமல் அமைதியாகவே இருக்கவும்,

“என்னடி? ஒண்ணும் பிரச்சனையில்லையே??”கனிவாக ஒலித்த அவன் குரல், சில்லென்று இறங்கியதை, அவள் ஒத்துக்கொள்ளவே வேண்டும்.

“என்ன, மரியாதை காணாமல் போச்சு?”என்றாள் மிரட்டலாக.

“எல்லாரிடமும் இப்படி பேசமாட்டேன். உரிமை இருக்குற இடத்தில் மட்டும் தான்.” என்றான் அழுத்தமாக.

‘இது எங்கே கொண்டு போய் விடுமோ?’ என்றிருந்தது அவளுக்கு.

“இதை ஏன் கொண்டு போறீங்க??”மண் மாதிரிகளை சுட்டிகாட்டி கேட்டாள்.

“மண்ணோட தன்மைக்கு ஏற்ப, என்ன பயிர் பண்ணா, பிராபிட் கிடைக்கும்னு லேபில் டெஸ்ட் பண்ணி தான்தெரிஞ்சிக்கணும்.” என்றான் கரிகாலன்.

“இயற்கை விவசாயம் தானே செய்யுறீங்க??”

“ம்ம்..”என்றான் சுரத்தையே இல்லாமல்.

“கிரேட்டா..”உற்சாகமாக பாராட்டினாள் மணிமேகலை.

“என்ன கிரேட்??இதில் ஈல்ட் எடுக்கிறது ஈஸி இல்லை.இயற்கை விவசாயம்பண்றவனை,முட்டாளா தான் பார்ப்பாங்க இங்கே..”என்றான் வெறுமையாக

அதற்குள் அவர்கள் சேர வேண்டிய இடம் வந்துவிட்டிருக்க, அவன் லேபில் இறங்கிக்கொள்ள, அவள் மருத்துவமனைக்கு விரைந்தாள்.

லேபில் இருந்து வந்த, சில டெஸ்ட் ரிபோர்டுகள் அவள் டேபிளில் அடுக்கப்பட்டிருந்தது. பைலை எடுத்து புரட்டினாள். ஒன்றுமே தலைக்குள் ஏறவில்லை.அவள் சிந்தனை எல்லாம் கரிகாலனை எப்படி தவிர்ப்பது என்பதிலேயே இருக்க, ஒரு மோன நிலையிலேயே மதியம் வரை கழிந்தது.

இவர்கள் உறவு இப்படியே இன்னும் கொஞ்ச நாள் நீளுமானால், அடுத்த கட்டம் அவன் ப்ரோபோசலாக தான் இருக்கும்.

இனிமையாக பழகுகிறான். லுக்கில் அவன் டெரிப்பிக்காக இருந்ததால், கரிகாலன் இவ்வளவு பேசுவான் என்று அவள் நினைத்துகூட பார்க்கவில்லை. ஆர்ப்பாடமில்லாது அவன் பழகும் விதம், உதட்டிலும், கண்களிலும் தேக்கி வைத்திருக்கும் குறுஞ்சிரிப்பு, சாதரணமாக அவன் பார்த்தாலே, சீண்டுவது போல இருக்கும் அந்த பெரியவிழிகள்.. ரொம்பவும், இம்சிக்கிறான் அவளை!!

மதியம் வரையும் அவளால் பிரயோஜனமாக எதுவுமே செய்யமுடியவில்லை. அந்நேரம் நந்தினியிடமிருந்து கால் வந்தது.

திருமணதிற்கு ஷாப்பிங் செய்ய வேண்டும் என்று நந்தினி இவளை உதவிக்கு அழைக்கவும், அவளுக்கு உதவி செய்ய, மதியமே அங்கிருந்து புறப்பட்டுவிட்டாள் மணிமேகலை.

*******************************************************************

பரிசோதனைக்காக சேகரித்திருந்த, மண்மாதிரிகளை லேபில் கொடுத்துவிட்டு மீட்டிங் ஒன்றில் கலந்துகொள்ள சென்றிருந்தான் கரிகாலன். மாறனும், இன்னும் இரண்டு கூட்டாளிகளும்.

வணிகர், விவசாயிகள் சங்கம், கிராமத்தின் விஐபிக்கள் எல்லோரும் வந்திருந்தனர். அவர்களை காக்க வைத்து விட்டு மதியம் வரையுமே அந்த எம்.எல்.ஏ வாகப்பட்டவன் வந்து சேரவில்லை.

எவ்வளவு நேரம் தான் காத்திருப்பது. கிராமத்தில் பெரிய திருவிழா ஒன்று நடைபெற இருந்தது. அதற்கான திட்டங்களை வகுக்கவே இந்த மீட்டிங்.

கரிகாலனும் அவன் கூட்டாளிகளும் பொறுமையற்று வெளியேறிவிட்டனர்.

“கரிகாலா!! நீ மட்டும் சம்மதம் சொன்னால், உன்னை எம்.எல்.ஏ வாக்க தயாரா இருக்காங்கடா.” என்றான் மாறன்.

“என்ன திமிர் கட்டுறானுங்க. நீ உள்ளே வந்தால், அவனுங்க எதிர்த்து நிக்க முடியுமாடா?” என்றான் ஆதங்கமாக.

“கண்டுக்காதீங்கடா!! பாலிடிக்ஸ் நமக்கு வேண்டாம்.” திடமான குரலில் மறுத்து விட்டான் கரிகாலன்.

“ச்சு..” சலித்துக்கொண்டு சென்றனர் அவன் நண்பர்கள்.

“மாறா!! இன்னைக்கு ஈவ்னிங் ப்ரீயாடா??” என்றான் கரிகாலன்.

“என்னடா??”

“மணிமேகலை வீட்டுக்கு போகணும்.”

“முடிவே பண்ணிட்டியாடா??” என்றான் அதிர்ச்சியாக.

லேசான வெட்கத்துடன், அவன் பின்கழுத்தை தேய்த்தபடி ஆமோதித்தான் கரிகாலன்.

“பேசிகலி...நான் அவளை....”

“ம்ம்..பேசிக்கலி, மேட்லி, பேட்லி, ட்ரூலி, சீரியஸ்லி, நீ அவளை ப்ரொபோஸ் செய்யணும்னு நினைக்கவே இல்லை. அதானே??” என்றான் மாறன், எள்ளலாக.

“நீ ஒரு அந்நியன்னு,இந்த கிராமத்துக்கே தெரியும். நீ அம்பியா மாறி செழியன் கிட்ட போய், உங்க பொண்ணை லவ் பண்றேன்னு சொல்லப்போற..அப்படித்தானே??”

அவன் கழுத்தை கிடுக்கி பிடித்து “நீயும் என்னோடு வர்ற..வா..” கட்டாயமாக இழுத்துக்கொண்டு போனான் கரிகாலன்.

“கேப் விடுடா...டேய்..எனக்கே தாங்கல..உன் ஸ்பீடை பார்த்து அவ அரண்டுட போறா..”எச்சரித்தான் மாறன்.

வானம் மழையை கொட்டிக்கொண்டு இருந்தது. மாலை வேளையில் மணிமேகலையை தேடிக்கொண்டு சென்றான் கரிகாலன்.

மழை நின்ற பின்னும், லேசான தூறலை சிந்திக்கொண்டே இருந்தது மேகம். மேல் தளத்தில் கைகளை வீசி, மணிமேகலை நடந்து கொண்டிருப்பது தெரிந்தது. பைக்கில் இவன் தலை தெரிய தொடங்கியதும், அவள் விளிம்புக்கு வராமல் நடுவிலேயே நின்றுவிட்டாள்.

அவள் வீட்டுக்கு நேரே பைக்கை பார்க் செய்து விட்டு, மேலே பார்த்து அவள் பெயரை உரக்க அழைத்தான். மீண்டும் உற்பத்தியானது படபடப்பு. விளிம்புக்கு வந்தவள், என்னவென்று காற்றில் கையசைத்து கேட்க, “பேசணும்” என்றான், பதிலுக்கு உதட்டசைத்து.

‘என்ன சிரிப்புடா அது? அவள் எடைபோட்டதை விட வேகமாக இருக்கிறானே?’

மேலே வரும்படி அபிநயம் பிடித்து காட்டினாள் மணிமேகலை. அவன் வீட்டுக்குள் நுழைய, கைத்தட்டி நிறுத்தியவள், இன்னொரு வழியை சுட்டிக்காட்டினாள்.

நந்தினியோடு, ஷாப்பிங் சென்ற மணிமேகலைக்கு அங்கேயும் நிம்மதியாக இருக்க முடியவில்லை. கரிகாலனை பேச்சுக்குள் இழுத்து விட்டு கொண்டே இருந்தாள் அவள். அவளிடமிருந்து தப்பித்து, இங்கே வந்த பிறகும் அவன் நினைவே ஆட்டி படைத்தது.

‘திங்க் ஆப் த டெவில் தேர் இட் இஸ்..’

இதோ நினைக்கும் போதே முன்னே வந்து குதிக்கிறான். சாதாரணமான டிஷர்ட், ட்ராக் பாட்டம், கூந்தலை பந்தாக சுருட்டி மேலே ஏற்றி விட்டிருந்தாள்.

அந்த கிராமத்து சூழலில் அவள் வித்தியசமாக தெரிந்தாள்.

கூந்தல் பந்திலிருந்து, பிரிந்த இழைகள் சில, அவள் கன்னத்திலும், கழுத்திலும் படர்ந்து உறவாடிக்கொண்டிருந்தது.

மழை நின்ற பிறகும் நீர் சொட்டிக்கொண்டிருந்தது. நிலத்தில் அரைகுறையாக ஈரம் மிச்சமிருந்தது.

“ஷாப்பிங் முடிஞ்சதா??” விளிம்பில் ஏறி அமர்ந்து கொண்டு இலகுவாக பேச்சை துவங்கினான்.

“எல்லாமே உங்களிடம் சொல்லிட்டுதான் செய்யணுமா?” என்றாள் வெடுக்கென்று.

அவள் ஏதோ ஒரு நினைவில் இருந்து விட்டு, அவன் மேல் எரிந்து விழுந்தாள்.

அவன் கைகட்டிக்கொண்டு தீர்க்கமாக பார்க்கவும், “இல்லை..வேற டென்ஷன்....” சின்ன இடைவெளி விட்டு, வலிய முறுவலித்தாள்.

“ஹோ!!”

“கொழுப்புடி உனக்கு. டென்ஷனா இருந்தால் இப்படி தான் பேசுவியா என்னிடம்??” என்றான் அதட்டலாக.

“எனக்கு கொழுப்பா? தோப்பில் காட்டுமிராண்டி போல ஒருத்தனை அடிச்சிட்டு நீ என்னை சொல்லுற. பார்பேரியன்.. திமிர் உனக்கு தான்..அதுவும் முழு உயரத்துக்கும் நிரப்பி வச்சிருக்க..” என்றாள் கோபாவேசமாக.

“அரண்டுட்டியா என்ன??” சலனமே இல்லாமல் கேட்டான்.

“நானா? எதுக்கு?” அலட்சியமாக முகத்தை திருப்பினாலும், அந்த சம்பவம் அவளை பாதித்து விட்டிருந்தது.

“இங்கே உட்கார்..” தன்னருகில் இடத்தை சுட்டிக்காட்டினான்.

“ம்ம்..சீக்கிரம்..சொல்லு..” துரிதப்படுத்தினாலும்,அவள் இதயம் ஒரு பக்கம் தாறுமாறாக அடித்துகொண்டிருந்தது.

ஆழ்கடலின் ஆழத்தை கண்டுபிடிப்பது, செல்வது போல இருந்தது அவள் மனதிற்குள் புகுந்து பார்க்க முயல்வது.

எதிர்காலத்தை பற்றி கவலை கொள்ளாமல், அந்த நிமிடம், அந்த நொடி எது சரியென்று நினைக்கிறாளோ அதை செய்து முடிப்பவள் மணிமேகலை.. முதல் முதலாக இதோ…இவன் மட்டும் தான் அவளை திணற வைக்கிறான். இது போல ஒரு தருணம் வந்துவிட்டால், என்று எதிர்காலத்தை பற்றி கவலைப்பட வைத்துவிட்டான். அவள் எந்த தருணத்தை தவிர்க்க முயன்றாளோ, அதன் மீதே நிற்க வைத்து விட்டான்.

“என்ன பேசணும்??”

“என்ன பேசுவேன்னு உனக்கு தெரியாது???” ரசனையாக, தலை சரித்து முகத்தில் சிறு சலனத்தையும் காட்டாது அவன் வினவ,

“தெ.. தெரியாது..”இதய துடிப்பு எத்தனை வேகம் செல்ல முடியுமோ தன் முழு வேகத்தையும் தொட்டிருந்தது அவளுக்கு.




Superr sis ana English words rmbaa use panrngalo bt nala than iruku
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top