• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

நரசிம்மர் தெரியாத தகவல்கள்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,884
Location
madurai
ஸிம்ஹன் நரஸிம்ஹன் ஸிம்ஹன்
தெரிந்த நரசிம்மர் தெரியாத தகவல்கள்

* புராண ரத்னம் என்று போற்றப்படும் ஸ்ரீ விஷ்ணுபுராணத்தில் பிரகலாத சரித்திரத்தை விளக்கிய பராசர மகரிஷி, தன் தந்தை இரணியன் திருந்த வேண்டும் என்று பிரகலாதன் திருமாலிடம் பிரார்த்தனை செய்ததாகவும், அவனைத் திருப்தி செய்ய விழைந்த திருமால், தானே இரணியனைப் போல அவதாரம் செய்து, பிரகலாதனுடன் இணைந்து நாம சங்கீர்த்தனம், விஷ்ணு பூஜை உள்ளிட்டவற்றைச் செய்ததாகவும் கூறியுள்ளார்.



அதே சமயம், உண்மையான இரணியன் தனது கொடுஞ்செயல்களைத் தொடர்ந்து செய்து வந்ததாகவும், அவனது கொடுஞ்செயல்கள் அதிகரித்தவாறே, தூணைப் பிளந்து நரசிம்மர் தோன்றிக் கொடியவனான இரணியனை வதம் செய்ததாகவும் பராசர மகரிஷி கூறியுள்ளார்.

🦐🦐🦐🦐🦐🦐🦐🦐🦐🦐🦐🦐🦐🦐🦐🦐🦐

* இரணியனின் தம்பியான இரணியாட்சனைத் திருமால் வராக அவதாரம் எடுத்து வதம் செய்த செய்தியை அறிந்த இரணியன், திருமாலைப் பழிவாங்க எண்ணி அனைத்துலகங்களிலும் தேடினான்.



எங்கு தேடியும் திருமாலை அவனால் கண்டுபிடிக்க இயலவில்லை. ஏனெனில், இரணியனால் தேட முடியாத ஓர் இடத்தில் திருமால் ஒளிந்து கொண்டு விட்டாராம். அந்த இடம் எது? இரணியனின் இதயம் தான் அங்கு தான் திருமால் ஒளிந்திருந்து மாயம் செய்தார்.



* இன்னொரு சமயம் வியாசரும் மற்ற முனிவர்களும் நைமிசாரண்யத்தில் அமர்ந்து விவாதம் செய்து கொண்டிருந்தார்கள்.

அப்போது சில முனிவர்கள், “நரசிம்மர் தனது கூரிய நகங்களால் இரணியன் போன்ற அசுரர்களின் உடல்களைக் கிழித்து அவர்களை இம்சிப்பதால், ‘ஹிம்ஸன்’ (இம்சை செய்பவர்) என்று அவரை அழைக்க வேண்டும்!” என்று கூறினார்கள்.

அதற்கு வியாசர், “முனிவர்களே! நம் பார்வைக்கு நரசிம்மர் தன் நகத்தால் அசுரர் உடலைக் கிழிப்பது இம்சை போலத் தோன்றும். ஆனால் அது இம்சை அல்ல.

ஏனெனில், அந்த அசுரர்கள் தமது பாபங்களுக்கான தண்டனையை அனுபவிக்க வேண்டுமென்றால், அவர்கள் பல ஊழிக் காலங்கள் நரகத்தில் வாட வேண்டியிருக்கும்.

அவ்வளவு நீண்ட காலம் நரகத்தில் அவர்கள் துன்பப்படுவதற்குப் பதிலாக, நரசிம்மர் தனது கூரிய நகங்களால் அவர்கள் உடலைக் கிழித்து, ஒரு நொடியில் ஆழ்ந்த துயரத்தைக் கொடுத்து, அவர்களது பாபங்களைப் போக்கி அவர்களைத் தூய்மையாக்குகிறார்.



மேலோட்டமாகப் பார்க்கையில் இது ஹிம்ஸை போலத் தெரிந்தாலும், உண்மையில் தீயவர்களான அசுரர்கள் மீதும் கூட கருணை கொண்டு, அவர்களைத் தூய்மைப் படுத்தும் நோக்கில் அவர்களைத் துயரத்துக்கு உள்ளாக்கும் நரசிம்மர், ஹிம்ஸைக்கு நேர்மாறான அனுக்கிரகத்தைத் தான்செய்கிறார்.

⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐

எனவே ஹிம்ஸன் என்று நீங்கள் சொன்ன பெயரை நேர்மாறாக மாற்றிவிடுங்கள்!” என்றார் வியாசர்.

ஹிம்ஸன் என்ற சொல்லை நேர்மாறாக மாற்றி எழுதுகையில் ‘ஸிம்ஹன்’ என்று வருமல்லவா? எனவே அன்று முதல் நரசிம்மர் ‘ஸிம்ஹன்’ என்றழைக்கப்பட்டார்.

அந்த ஸிம்ஹனைப் போன்ற முகத்தோடு இருப்பதால் தான் சிங்கமும் ‘ஸிம்ஹம்’ என்றழைக்கப்படுகிறது.



* நரசிம்மரிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் ராமாநுஜர். ஈசாண்டான் என்னும் குருவிடம் நரசிம்ம மந்திர உபதேசம் பெற்றார் ராமாநுஜர்.

தமக்குப் பின் எழுபத்து நான்கு சீடர்களை வைணவ குருமார்களாக அமர்த்திய ராமாநுஜர், அந்த எழுபத்து நால்வருக்கும் நரசிம்மருடைய விக்ரஹத்தைப் பூஜைக்காக வழங்கி, அவர்கள் அனைவருக்கும் நரசிம்ம மந்திரத்தை உபதேசம் செய்தார்.

🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝

* நரசிம்மரின் பெருமையை விளக்க ஒரு சுவையான கதையைப் பராசர பட்டர் கூறுவார்.

ஒரு தந்தை தன் மகனுக்குச் சர்க்கரை போடாத வெறும் பாலை மட்டும் கொடுத்தார்.

“இதன் சுவை எப்படி இருக்கிறது?” என்று கேட்டார். “இனிப்பு குறைவாக உள்ளது!” என்றான் மகன்.

அடுத்து, சர்க்கரையை மட்டும் தன் மகனுக்குக் கொடுத்து, “இது எப்படி இருக்கிறது?” என்று கேட்டார்.

“இது பாலை விட இனிப்பாக உள்ளது!” என்றான் மகன்.

அடுத்து, பாலில் சர்க்கரையைக் கலந்து கொடுத்து, “இது எப்படி இருக்கிறது!” என்று கேட்டார் தந்தை.

“தந்தையே! வெறும் பாலை விடவும், வெறும் சர்க்கைரையை விடவும், சர்க்கரை கலந்த பால் தான் இனிப்பாக உள்ளது. இனி எனக்கு சர்க்கரை கலந்த பாலை மட்டும் தாருங்கள்!” என்றான் மகன்.

🦐🦐🦐🦐🦐🦐🦐🦐🦐🦐🦐🦐🦐🦐🦐🦐🦐

திருமால் மிருக வடிவத்துடன் எடுத்த மத்ஸ்யம், கூர்மம் போன்ற அவதாரங்கள் வெறும் பால் போன்றவை.

மனித வடிவத்துடன் எடுத்த ராமன், கண்ணன் போன்ற அவதாரங்கள் வெறும் சர்க்கரை போன்றவை.

ஆனால், மனிதன்-மிருகம் இரண்டும் கலந்த கலவையாக எடுத்த நரசிம்ம அவதாரம் சர்க்கரை கலந்த பால் போன்றதாகும்.



எப்படிச் சர்க்கரை கலந்த பாலைக் குடித்த சிறுவன், வெறும் பாலையும் வெறும் சர்க்கரையையும் விரும்புவதில்லையோ, அவ்வாறே நரசிம்ம அவதாரத்தில் ஈடுபட்ட ஒரு பக்தனின் மனது, திருமாலின் மற்ற அவதாரங்களில் ஈடுபடுவதில்லை என்கிறார் பராசர பட்டர்.

* “தூணிலிருந்து நரசிம்மர் தோன்றிய
படியால், அந்தத் தூண் திருமாலுக்குத் தாயாகவும், திருமாலின் மகனான பிரம்மாவுக்குப் பாட்டியாகவும் ஆனது” என்று வேதாந்த தேசிகனும் ஒரு ஸ்லோகம் இயற்றியுள்ளார்:

🦈🦈🦈🦈🦈🦈🦈🦈🦈🦈🦈🦈🦈🦈🦈🦈🦈

“ப்ரத்யாதிஷ்ட புராதன ப்ரஹரண க்ராம: க்ஷணம் பாணிஜை:
அவ்யாத் த்ரீணி ஜகந்த்யகுண்ட மஹிமா வைகுண்ட கண்டீரவ: |

யத் ப்ராது: பவநாத வந்த்ய ஜடரா யாத்ருச்சிகாத் வேதஸாம்
யா காசித் ஸஹஸா மஹாஸுர க்ருஹ ஸ்தூணா பிதாமஹீ அபூத் ||”

* நரசிம்மருக்கு எதிராக தேவர்கள் உருவாக்கிய பறவையை வீழ்த்துவதற்காக நரசிம்மர் இரண்டு தலைகள், இரண்டு இறக்கைகள், எட்டு கால்கள் உடைய ஒரு பறவையாகத் தோன்றினார்.

அதைக் கண்டபேரண்ட பட்சி என்பார்கள். இன்றும் தேரழுந்தூரில் தேவாதிராஜப் பெருமாள் கழுத்தில் சாற்றியிருக்கும் பதக்கத்தில் கண்டபேரண்ட பட்சியின் வடிவம் இருப்பதைக் காணலாம்.

🦅🦅🦅🦅🦅🦅🦅🦅🦅🦅🦅🦅🦅🦅🦅🦅🦅

ஹைதராபாத்தில் இருந்து 62 கி.மீ. தொலைவிலுள்ள யாதகிரிகுட்டா என்ற மலையில், ஜ்வாலா நரசிம்மர், யோகானந்த நரசிம்மர், கண்டபேரண்ட நரசிம்மர் ஆகிய மூன்று வடிவங்களில் நரசிம்மரைத் தரிசிக்கலாம்.



* திருமாலைத் தரிசிக்க சனத்குமாரர்கள் நால்வரும் வைகுண்டம் சென்ற போது, அதைத் தடுத்த ஜய-விஜயர்கள் அவர்களின் சாபத்தால் பூமியில், இரணியன்-இரணியாட்சன், ராவணன்-கும்பகர்ணன், சிசுபாலன்-தந்தவக்ரன் என்று பிறந்தார்கள் என்பதை நாம் அறிவோம்.



பின்னொரு சமயம், வைகுண்டத்துக்கு பிரம்மா சென்றபோது, சுமுகன் என்ற வாயில் காப்பாளன் பிரம்மாவைத் தடுத்து விட்டான்.

அவன் பூமியில் பிறக்க வேண்டுமென பிரம்மா சபித்தார்.

ஆனால் வெளியே வந்த திருமால், “பிரம்மனே! இந்த சுமுகன் எனது தலைசிறந்த பக்தன். ஜய-விஜயர்களைப் போல் ஆணவத்தால் உங்களைத் தடுக்கவில்லை.

தங்களின் வருகை எனது உறக்கத்துக்கு இடையூறாக இருக்குமோ என்ற எண்ணத்தில் தான் தடுத்தான்.

எனினும் தாங்கள் தந்த சாபத்தை இனி திரும்பப் பெற வேண்டாம். இவன் பூமியில் பிறக்கட்டும். ஆனால் தலை சிறந்த பக்தனாக இவன் விளங்கி, எனது பக்தர்கள் அனைவருக்கும் முன்மாதிரியாய்த் திகழட்டும்!” என்றார்.

அந்த சுமுகன்தான் பக்தப் பிரகலாதன்.



🦐* ஆதிசங்கரர் ஒரு தீ விபத்தில் சிக்கி, அவரது கரம் தீயால் பாதிக்கப்பட்ட போது, லட்சுமி நரசிம்ம கராவலம்ப ஸ்தோத்ரம் என்னும் துதியை இயற்றினார்.



“ஸ்ரீமத்பயோநிதி-நிகேதன! சக்ரபாணே!
போகீந்த்ர-போக! மணிரஞ்ஜித-புண்யமூர்த்தே!
யோகீச-சாச்வத-சரண்ய! பவாப்திபோத!
லக்ஷ்மீந்ருஸிம்ஹ! மம தேஹி கராவலம்பம்”

- என்று தொடங்கி, தமது கரத்தைக் காத்தருளும்படி நரசிம்மரிடம் வேண்டினார்.

அடுத்த நொடியே, பதினாறு கைகளோடு நரசிம்மர் அங்கே தோன்றினார். இரண்டு கைகளில் சங்குசக்கரம் ஏந்தி இருந்தார்.

இரண்டு கைகளால் சங்கரரின் உடலைப் பிடித்துக் கொண்டார்.

இரண்டு கைகளால் அதிலுள்ள தீயை அணைத்தார்.

இரண்டு கைகளால் அபய முத்திரையைக் காட்டினார்.

இரண்டு கைகளால் ஆறுதல் கூறித் தேற்றினார்.

இரண்டு கைகளால் சங்கரரைத் தூக்கினார்.

இரண்டு கைகளால் சங்கரரின் உடலில் தேனை ஊற்றினார்.

இரண்டு கைகளால் சங்கரருக்கு விசிறி வீசினார்.

சங்கரர் புத்துயிர் பெற்று எழுந்து, நரசிம்மருக்குத் தமது நன்றியைத் தெரிவித்தார்.



“ஆபத்தில் யார் நமக்கு உதவி செய்கிறார்களோ, அவர்கள் தான் மிகவும் அழகாக நம் கண்களுக்குத் தெரிவார்கள்.

பிரகலாதன் போன்ற பக்தர்கள் ஆபத்தில் தவிக்கும் போது, உடனே ஓடோடி வந்து காக்கக்கூடிய பெருமாள் நரசிம்மர். எனவே அவர் தான் அழகு!” என்று பெரியோர்கள் சொல்வார்கள்.

அதனால்தான் “அழகிய சிங்கர்” என்று அழைக்கப்படுகிறார்.



* மற்ற அனைத்துப் பெருமாள்களுக்கும் மகாலட்சுமி திருமார்பில் அமர்ந்திருக்க, நரசிம்மருக்கு மட்டும் ஏன் மடியில் அமர்ந்திருக்கிறாள்?

அழகிய சிங்கரான நரசிம்மரின் அழகிய முகத்தைக் கண்டுகளிக்க வேண்டுமெனில் திருமார்பில் இருந்தபடி காண முடியாது.

மடியில் அமர்ந்தால்தானே காண முடியும்? அதனால் தான் மனாளனான நரசிம்மரின் மடியில் ஸ்ரீ தேவி அமர்ந்திருக்கிறாள்.

* இரணியனின் தங்கையான ஹோலிகா என்பவள் தீயால் சுடப்படாமல் இருக்கும் ஆற்றல் பெற்றிருந்தாள்.

அவள் பிரகலாதனைத் தீயில் தள்ள முற்பட்ட போது, நரசிம்மர் பிரகலாதனைக் காத்து, ஹோலிகாவைத் தீயில் தள்ளினார்.

அதன் நினைவாகத் தான் ஹோலிப் பண்டிகைக்கு முந்தைய நாள் ஹோலிகா தஹன் என்ற பெயரில் சொக்கப்பானை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.



* பிரம்மாவிடமிருந்து பல வரங்களைப் பெற்ற இரணியன், உயிருள்ள பொருளாலோ உயிரற்ற பொருளாலோ தனக்கு மரணம் ஏற்படக் கூடாது என்று வேண்டியிருந்தான்.

அதனால் தான் நகத்தால் கீறி அவனை வதைத்தார் நரசிம்மர்.

நகத்தை வெட்டினால் முளைப்பதால் உயிர் உள்ளதாகவும் கொள்ளலாம், வெட்டினாலும் வலி தெரியாதபடியால், உயிர் அற்றதாகவும் கொள்ளலாம்.



* சங்கத் தமிழ் இலக்கியங்களுள் ஒன்றான பரிபாடலின் நான்காம் பாடல் நரசிம்மரின் பெருமையைச் சொல்கிறது.

⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐

செயிர்தீர் செங்கட் செல்வ! நிற்புகழ
புகைந்த நெஞ்சின், புலர்ந்த சாந்தின்
பிருங்கலாதன் பலபல பிணிபட
வலந்துழி, மலர்ந்த நோய்கூர் கூம்பிய நடுக்கத்து
அலர்ந்த புகழோன், தாதை ஆகலின்
இகழ்வோன், இகழா நெஞ்சினனாக, நீ இகழா
நன்றா நட்ட அவன் நன் மார்பு முயங்கி,
ஒன்றா நட்டவன் உறு வரை மார்பின்-
படிமதம் சாம்ப ஒதுங்கி,
இன்னல் இன்னரொடு இடி முரசு இயம்ப,
வெடி படா ஒடி தூண் தடியடு,
தடி தடி பல பட வகிர் வாய்த்த உகிரினை



* நரசிம்மருக்கு மூன்று திருக்கண்கள் உண்டு.

அவரது வலக்கண்ணில் சூரியனும், இடக்கண்ணில் சந்திரனும், நெற்றிக்கண்ணில் அக்னியும் உள்ளனர்.

எங்கும் நிறைந்தவன் இறைவன் என்று காட்டுவதே நரசிம்மாவதாரத்தின் நோக்கமாகும்.

கண் என்பது தமிழில் இடத்தைக் குறிக்கும். எல்லா இடங்களிலும் நிறைந்திருப்பதால், நரசிம்மருக்கும் கண்ணன் என்று பெயருண்டு.



அதனால் தான் நம்மாழ்வாரும், எங்கும் உளன் கண்ணன் என்ற மகனைக் காய்ந்து இங்கு இல்லையால் என இரணியன் தூண்புடைப்பஅங்கு அப்பொழுதே அவன் வீயத் தோன்றிய என் சிங்கப் பிரான் பெருமை ஆராயும் சீர்மைத்தே - என்ற பாடலில் கண்ணன் என்றே நரசிம்மரைக் குறிப்பிட்டார்.

ஶ்ரீலக்ஷ்மீ ந்ருஸிம்ஹ பரப்ரஹ்மணே நமஹ



#எதிலும்_வெற்றியடைய
#இந்த_ஸ்லோகத்தை_சொல்லவும்

ஓம் நமோ பகவதே ப்ரஹலாத வரதாய ஸ்தம்பே வதார :

தம் அனன்ய லப்தயம்
ஸ்ரீ லக்ஷ்மி ந்ருஸிம்ஹம் சரணம் ப்ரபத்யே
 




g3mani

அமைச்சர்
SM Exclusive
Joined
Aug 30, 2019
Messages
3,197
Reaction score
6,400
Location
Sharjah UAE
🙏🙏Thank you so much ka. Arumayaana thagavalgal about Lord Narasimha 🙏🙏
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top