• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

நவராத்திரியும் மானுட வாழ்வும்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
Thanks stanley rajan brother
loved what i read
1633526558603.png

இந்துமதம் மானிடரின் வாழ்வியலை மனவோட்டத்தை மிக நுணுக்கமாக அணுகிய மதம், கொண்டாட்டம் வாழ்வுக்கும் மனது உற்சாகத்துக்கும் அவசியம் என சொன்ன மதம்.
அனுதினமும் உழைத்து ஒரே வேலை ஒரே உணவு ஒரே வீடு என்றிருக்கும் மனம் அலுத்து போகாமல் அதை உற்சாகபடுத்த சிந்தித்த மதம், இதனால் அது ஏகபட்ட திருவிழாக்களை உருவாக்கியது.

மானிட மனநலனை சிந்தித்த ஒரே மதம் இந்துமதம் மட்டுமே.
அதிலும் பெண்களின் மனநிலையினை சரியாக புரிந்த மதம் அதுதான், பெண்களுக்கு வேலைகள் அதிகம், சிந்தனையும் ஆற்றலும் படைக்கும் திறமும் அதிகம்
இது போக‌ மனரீதியாக அவர்களுக்கு ஏக பட்ட அழுத்தமும் உண்டு, அவர்கள் மனம் இலகுவாக சில வழிகள் அவசியம், அவர்கள் மன அழுத்தம் நீங்கி உறவாடி மகிழ சில கொண்டாட்டம் அவசியம்

குழந்தைகளை வளர்ப்பவர்கள் எனும் முறையிலும், குடும்ப அஸ்திவாரம், இணைப்பு சங்கிலி எனும் வகையில் அவர்கள் ஞானமும் அறிவும் சமூக நோக்கமும் எல்லோருடனும் நல்லுறவும் கொண்டவர்களாக இருத்தல் இன்னும் மகா அவசியம்
அதை எல்லாம் சிந்தித்து சிந்தித்துதான் இந்துமதம் ஞானமாக அதன் விழாக்களை வடிவமைத்தது, அதன் ஒவ்வொரு விழாவும் அவ்வளவு பலனுள்ளது.

நவராத்திரியில் பெண்கள் கொலு, கோலம், சமையல், பாடல், ஆடல் என எல்லாவற்றுக்கும் வழி செய்த அந்த மதம் அவர்களை உடலாலும் மனதாலும் உற்சாகபடுத்தியது.
இன்று மனிதர்களுக்கு கட்டாயம் "ஸ்ட்ரெஸ் ரிலீஸ்" வேண்டும் என மனோதத்துவ அறிஞர்கள் சொல்வதை, அது இல்லாவிட்டால் மனம் இறுகி விபரீதம் ஏற்படும் என சொல்வதை என்றோ உணர்ந்த மதம் இந்துமதம்

இதனால் அது ஆழ சிந்தித்து மனிதன் மனம்விட்டு கொண்டாடவும், அதே நேரம் சனாதான தர்மம் காலம் காலமாக தொடரவும், சமூக பிணைப்பு ஏற்படவும், எல்லா
சமூக மக்களும் பயன்பெறவும் மிக நுணுக்கமாக திருவிழாக்களை உருவாக்கிற்று
அந்த விழா கொண்டாட்டத்தையும் தெய்வத்தை நோக்கி மனிதனை திருப்பி அவன் தெய்வ சிந்தனையுடன் தன் மன அழுத்தம் குறைய வழி செய்து, இறை சிந்தனையிலே உற்சாகம் கொள்ள செய்து அந்த உற்சாகத்துடனே அவனை மறுபடி உழைப்புக்கு அனுப்பியது இந்துமதம்

உழைப்பும் உழைத்து களைத்தால் திருவிழாக்களும் அதனோடு கூட உடல் நலம் பேண விரதங்களும், மன நலம் பேண பல ஏற்பாடுகளும் செய்து மனிதனை மனிதனாக வைத்திருந்தது அந்த ஞான மதம்

இந்த கொண்டாட்டங்களே அன்று அவனை நல்வழியில் வைத்தன, அன்று அவன் ஒழுங்காக உழைத்ததற்கும் இன்றும் உருவாக்கமுடியா ஏரிகள் குளங்கள் போன்ற பிரமாண்டங்களை படைத்தற்கும் தஞ்சை கோவில் போன்ற அதிசயங்களுக்கும், காவேரி டெல்டா போன்ற பிரமாண்ட பாசனங்களுக்கும் இதுதான் அடிப்படை
இது இந்துக்கள் வாழ்ந்த இடமெங்கும் இருந்ததால் பாரதம் உழைப்பில் மின்னியது, வளம் கொழித்தது

வேலை செய், தெய்வத்தை நினை, கொண்டாடு, ஓய்வெடு, களைப்பு நீங்கு, மறுபடி வேலை செய் எனும் அந்த சுழற்சியில் ஆயிரம் மனநல நுணுக்கம் நிறைந்திருந்தது.
காலம் காலமாக இந்துமதம் நிலைத்திருக்க இந்த பண்டிகைகளும் அந்த கொண்டாட்டங்களும் ஒரு காரணம் என்பதை மறுக்க முடியாது
பாரதம் முழுக்க ஒரே கலாச்சாரம், ஒரே மதம் , ஒரே சங்கிலி இணைப்பு என அடித்து சொல்வதும் பண்டிகைகளே

அதில் நவராத்திரி விழா மகா முக்கியமானது, தேசமே கொண்டாடும் பண்டிகை இது
பாரத கண்டத்தின் தனிபெரும் திருவிழா நவராத்திரி, தீபாவளி போல் ஒரு நாளில் அல்லாமல் மிகபெரும் திருவிழாவாக 10 நாள் கொண்டாடும் கொண்டாட்டம் அது
அந்த நவராத்திரி பண்டிகை சொல்லும் தத்துவமும் சிறப்பும் வாழ்வியல் நோக்கமும் ஆன்மீகமும் மகா உன்னதமானவை, அன்று வாழ்ந்த மிகபெரிய ஞான சமூகத்தின் தத்துவ தேடலை, மாபெரும் இறை சக்தியின் தத்துவத்தை, மானிட வாழ்வின் அதி உன்னத தேடலின் மகத்துவத்தை வலுயுறுத்துமாறு ஏற்படுத்தபட்டவை

இந்த நவராத்த்திரி எனும் 9 இரவுகளும் அன்று மிக உற்சாகமாக இருந்தன, பகலெல்லாம் விரதமும் இரவு விருந்தும் , ஆன்மீக சொற்பொழிவும் நடனமுமாக கொண்டாடபட்டது.
இந்த 9 நாட்களும் ஆலயங்கள் மட்டுமல்ல வீடுகளிலும் ஆன்மீக சிந்தனையிலே மக்கள் இருக்க கொலு வைக்கும் தத்துவத்தையும் முன்னோர்கள் சொல்லியிருந்தார்கள், அதற்கான வழிகளையும் சொல்லியிருந்தார்கள்

சும்மா வைத்துவிடுவதல்ல கொலு, அதில் முறையான ஏற்பாடும் உன்னதமான தத்துவங்களும் உண்டு

கொலு என்றால் அழகோடு வீற்றிருத்தல் என பொருள்,
கொலு மேடை அமைப்பதற்கென்றே முன்னோர் அழகான விதிகளை வகுத்தனர், 7 அல்லது 9 அடுக்கில் அமைக்கலாம்
முதல் அடுக்கில் ஒர் உயிர் அதாவது புல்,தாவர வடிவம்,
2ம் அடுக்கில் சங்கு போன்ற ஈருயிர்களின் வடிவம்,
3ம் படியில் கரையான் போன்ற மூவுயிர் உருவம்.
4ம் படியில் வண்டு நாலுயிர் உருவம்,
5ம் அடுக்கில் விலங்கு,பறவை போன்ற ஐந்து அறிவு உயிர் வடிவங்களும்,
6ம் அடுக்கில் மனிதன் அதாவது நல்ல மனிதர்கள் அல்லது தலைவர்கள் சிலை என வைத்து
7ம் அடுக்கில் மனிதனிலிருந்து தெய்வ நிலைக்கு சென்ற மகான்கள்,ரிஷிகள் உருவமும்
, 8ம் அடுக்கில் தேவர்கள்,தேவதைகளும்,
9ம் அடுக்கில் மூல கடவுளும் கொண்டு அமைக்கவேண்டும்,
( 7ம் அடுக்கின் சிலைகள் பஞ்சபூதங்களில் ஒன்றான மணலால் மட்டும் அமைக்கபடவேண்டும் என்பது சாஸ்திர விதி, காரணம் மண்ணில் இருந்து வந்தவன் மனிதன்.)

9 நாளும் விரத காலங்களில் இதனை பார்க்கும் பொழுதெல்லாம் மனிதனுக்கு இறைவனின் தத்துவத்தில் தனது நிலை புரியும், தானும் மனித நிலையிலிருந்து தெய்வ நிலைக்கு செல்லவேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும், மனித நிலையிலிருந்து இறங்கவே கூடாது என்ற வைராக்கியம் உருவாகும்

அதை பின்பற்றினால் மனிதன் மனிதனாக இருப்பான், அல்லது தெய்வமாவான்.
மனிதன் அப்படி ஆவானோ இல்லையோ, ஒவ்வொரு வீட்டிலும் வைக்கும் கொலுவிற்கும், கூட்டு பிரார்த்தனை மற்றும் பாடல்களின் மூலம் ஒரு சமூக பிணைப்பும் அதிகமாகும்.
உணவும் அதை பகிர்தலும் உறவினை வளர்க்கும், தாம்பூலம் உட்பட பொருட்கள் கொடுப்பது இன்னும் உறவினை வளர்க்கும்

உன்னத சிந்தனை காலங்களும் அந்த உறவுகளும் நிலைத்திருக்கவே இரவு உணவும் இதர பொருட்கள் கொடுக்கும் உன்னத கலாச்சாரமும் ஏற்பாடாயின, அதை இந்த ஞான சமூகம் இதுகாலமும் காப்பாற்றியும் வருகின்றது

இந்த 9 நாளும் இன்னும் சில தத்துவங்களையும் சொன்னார்கள், அதில் மகா கீதையின் போதனை அப்படியே இறங்கியது
ஆம், வீரம் என்பது ரஜோ குணத்தின் சாயல். பலத்தால் எல்லாமும் அடையும் அந்த ரஜோ குணத்தின் ஆளபிறந்த சாயல் அதை தெய்வத்தின் உதவியுடன் வெல்லுதல் வேண்டும் என்பதே துர்கா பூஜைக்கான வழிபாடு

செல்வம் என்பது தமஸ் எனப்படும் சோம்பல் குணத்து சாயல் , செல்வம் ஒருவித செருக்கு சோம்பலை கொடுக்கும், எல்லாமே விலை கொடுத்து வாங்கமுடியும் எனும் அகம்பாவத்தை கொடுக்கும்

நம்மிடம் ஏகபட்ட செல்வம் இருகின்றதே, எல்லோருக்கும் பிச்சை இடுகின்றோமே, கோவிலே நம்மை நம்பித்தானே இயங்குகின்றது எனும் செருக்கு மனிதனை ஞானம் பெற விடாது மாறாக வேறு வீழ்ச்சிக்கு இழுத்து செல்லும்

வீடெங்கும் வேலைக்காரர், நாடெங்கும் சேவகர் எனும் பொழுது மனம் தாம்ஸ குணம் எனும் சோம்பேறித்தனத்தில் சிக்கி கடவுளை தேடாமல் அகங்காரத்தில் விழும்
அதை ஒழித்து ஞானம் பெற சொன்னதே லட்சுமி வழிபாடு

மனதாலும் அறிவாலும் உலகை உணர்ந்து, தெய்வத்தின் பாதமே சரணும் நித்தியமாகும் என்பதை தானும் உணர்ந்து ஊரையும் உணரும்படி கலை வடிவிலோ போதனை வடிவிலோ மக்களை சிந்திக்க வைத்து அவர்களை ஞானத்தில் நிலைபெற செய்ய வழிவைப்பது சரஸ்வதி பூஜை

எதையுமே அறிவாலும் மனதாலும் நோக்காமல் பயனில்லை என்பதுபடியும், சத்வம் எனும் சாத்வீக குணத்தால் ரஜோ குணத்தையும் , தமஸ் குணத்தையும் எரித்து அதாவது ஒரு தீக்குச்சியால் அந்த ஒரு குணங்களையும் எரித்து கடைசியில் தீக்குச்சியினையும் எரித்து ஒன்றுமில்லா சூனியமாகி ஞானம் பெறுதல் என்பதே சரஸ்வதி வழிபாடு

கங்கா யமுனா சரஸ்வதி எனும் மூன்று நதிகளும் கடலில் சங்கமாவது போல இந்த மூவகை குணம் கொண்ட மனிதனும் ஞானத்தின் மூலம் இறைவனை அடைதல் வேண்டும் என்பதே பத்தாம் நாள் அதி உச்ச கொண்டாட்டம்

ஆயுத பூஜை என்பது வேறொன்றும் அல்ல இந்த வாழ்வில் உன் கையில் இருக்கும் இந்த ஆயுதமே உன் கர்மா, இதுவழியாக தொழில் செய்யவே நீ படைக்கபட்டிருக்கின்றாய். இதுவே உன் கர்மா இதில் விருப்பு வெறுப்பற்று மூழ்கி இறைவனை அடைவாய் என்பதாகும்

அது வாளேந்திய வீரன் முதல் தராசு ஏந்தும் வணிகனோ இல்லை ஏட்டில் எழுதும் எழுத்தாணி கொண்ட புலவனோ யாராயினும் சரி, அதுதான் அவனுக்கு தெய்வம்
ஆயுத பூஜையன்று கருவிகளுக்கு செய்யபடும் வழிபாடெல்லாம் சாட்சாத் இறைவனுக்கு அன்றி அவைகளுக்கு அல்ல‌
இந்த தத்துவங்களெல்லாம் ஒரு புறம் இருக்க சில புராண கதைகளும் அன்று சொல்லபடும் அது ராவணனை ராமன் வதைத்த நாள், மகிஷாசூரனை தேவி கொன்ற நாள் என்பார்கள்

அக்காட்சிகளெல்லாம் கொண்டாடபடும், மிக விமரிசையாக கொண்டாடபடும்
பெண்ணாசை , மண்ணாசை , பொருளாசை, அதிகார ஆசை என்பவையெல்லாம் அதாவது கல்வியோ செல்வவோ வீரமோ தவத்தின் சக்தியோ மிக மிக பேராசையாக மாறினால் ஒரு காலமும் நிலைக்காது என்பதே பொருள்
கல்வி செல்வம் வீரம் இவற்றில் ஆணவம் கலக்க கூடாது என்பதும் அப்படி ஆணவம் கலந்தால் அதை அழிக்க வரம் அருளிய அன்னையே இறங்கி வருவாள் என்பதுமே பொருள்

சீதை ராவணனுக்கு எமனாக வந்தாள், சூரனுக்கு அன்னையே சூலம் ஏந்தி வந்தாள், வதைத்தாள்

இதில் இன்னொரு சூட்சுமமான அடையாளமும் உண்டு
அந்த மகிஷாசூரனுக்கு ஏன் எருமை (மகிஷம்) தலை வைத்தார்கள்?, எத்தனையோ விலங்குகள் இருக்க மிக சரியாக ஏன் எருமையினை தேர்ந்தெடுத்து வைத்தார்கள்?
எருமை சுகங்களில் ஊறும் தன்மை கொண்டது, அசமந்தம் பிடித்தது, சுறுசுறுப்பே இல்லாத ஒருவகை மந்தமான மிருகம்

அந்த மந்தமான மிருகத்தின் மேலேதான் எமன் வருவான் என்றார்கள், வாழ்வில் எமன் மெதுவாக உன்னை நோக்கி வந்து கொண்டே இருக்கின்றான், கவனமாய் இரு என ஒவ்வொரு மனிதனுக்கும் தத்துவமாக சொல்ல அப்படி சொன்னார்கள்
மகிஷாசூரன் எனும் எருமை தலை அரக்கனை அன்னை வதம் செய்தாள் என்பது புராணத்தில் என்றோ நடந்து முடிந்த விஷயம் அல்ல‌

ஒவ்வொரு மனிதனின் மனதிலும் ஒரு எருமை குணம் உண்டு, அது மனிதனை இறைவழியில் செல்ல விடாது, பலவகை சோம்பலை அது கொடுத்து பாதை மாற்றும்
சோம்பல் கொடுப்பது ஒருவகை கெடுதி என்றால் எருமை சகதியில் ஊறிகிடப்பது போல மானிட மனம் சுகங்களில் சொக்கிகிடக்கும், அதைவிடுத்து வராது

மானிட மனதுக்கு சேறுகளான குடி, கொண்டாட்டம், உல்லாசம், போதை, புகழ் இவற்றில் எளிதில் சிக்கும் தன்மை உண்டு, சிக்கினாலும் வெளிவரமாட்டேன் என அடம்பிடிக்கும் தன்மை உண்டு

எவ்வளவோ பராக்கிரமசாலிகளின் வாழ்வு அப்படித்தான் வீணாயிற்று
சோம்பல் என்பது கோவிலுக்கு செல் என அறிவு சொன்னால் மனம் எருமை போல் நிற்க வைக்கும், காலையில் எழுந்து வணங்க சொன்னால் நீண்ட நேரம் தூங்க வைக்கும்
இறை வழிபாட்டில் மனதினை செலுத்த சோம்பல் எக்காலமும் தடை, லவுகீக உலகில் உழலும் மன‌தை இறைவழிபாட்டில் திருப்ப அந்த எருமை குணம் எக்காலமும் பெரும் தடை

அந்த தடையினை அந்த அரக்க எருமையினை அடக்க மனித குணத்தால் முடியாது, மனிதனின் மனம் பலகீனமானது, சேறு கண்ட இடத்தில் கிடக்கும் எருமை போல் அது உலக இன்பங்களில் எளிதாக சிக்கிவிடும்

சுகங்களில் அது சொர்கமே இருப்பதாக நினைத்து கலந்துவிடும். அந்த சுகமே சொர்க்கம் எனவும் இன்பம் எனவும் கருதி தெய்வத்தையோ உண்மையான ஞானத்தையோ ஏறேடுத்தும் பார்க்காமல் மாபெரும் வீழ்ச்சிக்கு மனிதனை இழுத்து சென்று அவன் பிறவியினை கடக்க முடியாமல் செய்துவிட்டும்

எல்லா மனதிலும் தேவர் குணமான நற்குணமும் அசுர குணமான எருமை குணமும் உண்டு. அந்த எருமை குணத்தை வெல்ல எல்லாம் வல்ல அன்னையினை அழைப்பதே இந்த நவராத்திரி காலம்

செல்வத்தால் ஏற்படும் எருமை குணத்தில் நான் வீழாதபடி, வீரத்தால் வரும் அகங்கார எருமையால் நான் வீழாதபடி, ஞானி எனும் இறுமாப்பில் எருமையாய் நான் உழலாதபடி என்னை காப்பாய் அன்னையே என அவளை சரணடைவதே இந்த விரதகாலத்தின் நோக்கம்

வைராக்கியமாய் விரதம் இருங்கள், செல்வத்தை தானம் செய்யுங்கள், அவளிடம் மனதை கொடுத்து ஞானமாய் சிந்தியுங்கள்
விரதங்கள் உடலுக்கு நல்லது என்பது மருத்துவமே ஒப்பு கொண்ட ஒன்று, விரதங்கள் மனிதனை ஓரிடத்தில் ஒடுக்கி அடக்கி வைக்கும்

அப்படி அடங்கி இருத்தலில் சுகங்களில் இருந்து அவன் விலகி இருத்தலின்போது அவனுக்கு பல நல்ல ஞானங்கள் உருவாகும், அதில் தெய்வீக சிந்தனை மேலோங்கும்
இதனால் இம்மாதிரி காலங்களில் விரதம் இருத்தல் என்பது மகா அவசியமாகின்றது
அதைவிட முக்கியமாக எனக்கு வீரமோ, கல்வியோ, செல்வமோ இல்லையென்றால் இப்படி பசியோடு இருந்திருப்பேன் அதில் இருந்து தெய்வம் என்னை காத்திருகின்றது எனும் நன்றி உருவாகின்றது

அந்த நன்றி தெய்வத்தை வணங்க சொல்லி பசியோடு இருப்பவரின் தேவையினை உணர் வழி செய்து தானம் செய்ய வாசலை திறக்கின்றது, அதில் பாவ கர்மாக்கள் தீர்க்கபடுகின்றன‌

இந்த நவராத்திரி காலம், பாரத ஞானத்தின் தனி அடையாளம். கிடைக்கும் ஆசிகளில் கடவுளை தேடுதல் அல்லது வாழ்வியல் நெருக்கடி தீர அதுவரை இல்லா ஆசிகளை பெற்று அதில் கடவுளை தேடுதல் என கடவுளை நினைத்து நெருங்கும் காலம்
தேவைகள் தீர்ந்து நிம்மதி பிறக்கும் மனிதனே நிறைவடைவான் அவன் சிந்தனை மேலோங்கும்.

அப்படி மனிதன் தன்னிறைவு அடைய இந்த மூவகை ஆசிகளும் அவசியம் அதில் தெய்வத்தை காணுதல் அதைவிட‌ அவசியம் என்பதை உணர்த்தும் காலம்
இந்த தெய்வீக காலத்தை தொடங்க போகும்

அனைவருக்கும் நல்வாழ்ந்த்துக்கள் இந்த நவநாட்களும் நல்ல சிந்தனைகளை கொடுக்கட்டும், வீடுதோறும் கொலுவும் நல்ல சிந்தனைகளும் உற்சாகமாய் பெருகட்டும்
ஆலயமெல்லாம் தெய்வங்களுக்கு சிறப்பு விழாக்களும் கொண்டாட்டமும் நடக்கட்டும், ஞானிகளும் ஆன்றோர்களும் சொற்பொழிவும் உபதேசங்களும் ஞானமாய் அருளட்டும்
ஒவ்வொரு வீடும் தன்னிறைவு அடையட்டும், பாரத கண்டம் மூவகை அருளையும் நிரம்ப பெற்று பாரினில் ஜொலிக்க அந்த முப்பெரும் தேவியர் தனி அருள் பொழியட்டும்
எந்த இனத்திலும் இல்லாதவாறு 3 வகை ஆசிகளையும் அதற்கான காரணங்களையும் அதனால் மானிட இனம் பெறும் நலன்களையும் அந்த நலனால் ஒரு ஆத்மா ஞானம் பெறுவதை இந்துக்கள் இந்நாளில் சிந்திக்க சொன்னார்கள்

கலை, பொருள், வீரம் என அதை பிரித்தார்கள். மூன்றும் மூன்று தேவியரின் அருள் என்றார்கள், அவைகளின் முக்கியத்துவத்தை சொல்லி தேவியின் ஆசியோடு அதை இணைத்து சிந்திக்க சொன்னார்கள்

அதை இந்த நவராத்திரி காலங்களில் அவ்வப்போது பார்க்கலாம்.
 




  • Like
Reactions: Dsk

SarojaGopalakrishnan

முதலமைச்சர்
Joined
Jul 20, 2018
Messages
5,556
Reaction score
7,772
Location
Coimbatore
நவராத்திரியின் சிறப்பை
ரொம்ப அருமையா புரிய
வைத்த பதிவு 🙏
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top