• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

நாங்கலாம் அப்பவே அப்படி - 2

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Mahizhini bharathi

இணை அமைச்சர்
Joined
Mar 24, 2019
Messages
701
Reaction score
357
Location
Tamilnadu
"என்ன அப்புப்பா நின்னுட்ட? "என வீரா வினவ.. அதுவரை ஒரு மோனநிலையில் இருந்தவன்,
"இந்த மந்திரம்" என நிறுத்த...


"ஓஹோ..மந்திரமா வெள்ளிகிழமையானா நாச்சியார் இப்படித்தான் காலைல பூஜை பண்ணுவாங்க"


"ஓ...பம்ப்கின்னா?"

"என் பொண்ணுப்பா "அழகு நாச்சியார்" சின்ன வயசுல ஒன்னா விளையாடுவீங்க.. மறந்துட்டீங்களா?" என கேள்வியும் கேட்டு பதிலும் அவரே சொல்லிட...


அவன் தன் நினைவடுக்குகளில் சந்து பொந்தெல்லாம் தேட தொடங்கினான்

"கௌ......கௌ...கௌ.."


"ஏய் பம்ப்கின், என்னை அப்படி கூப்பிடாதே?"


"ஏன்? ஏன் அப்படி கூப்பிடகூடாது.. உன் பேர் கௌ ல தானே ஆரம்பிக்குது அப்ப நீ கௌதான்.


"வேனாம் பம்ப்கின்!!"

"போடா..நீ மட்டும் பம்ப்கின் சொல்ற" என சிலிர்த்துக்கொண்டு செல்லும் கொழுகொழுவென்ற சிறுமி அவன் நினைவுகளில் வந்தாள்.


ஆனால் அவள் முகம் ஞாபகம் இல்லை. இப்போது அதை நினைத்தவன் அந்த "பம்ப்கின்னா" ... "வாய்ஸ் சுவீட்டா இருக்கே ...ஆள் அப்படியேதான் புசுபுசுன்னு இருப்பாளா? என பல கேள்விகள் படையெடுக்க


"ச்சே என்ன நான் அவள் எப்படி இருந்தா என்ன? ஓவர் எக்சைட்மென்ட் ஆகாதுடா கௌதம் கன்ட்ரோல்...கன்ட்ரோல்" என அவனுக்கு அவனே சொல்லிக்கொண்டிருக்க கண்கள் மட்டும் பூஜை அறையை விட்டு விலகவில்லை.


பூஜை முடிந்து தீபாராதனை தட்டுடன் வெளிவந்த பெண்ணவளை கண்டவன் தன் மூச்சுக்காற்று வெளியேறுவதற்க்கும் சில வினாடிகள் தடை விதித்தான் போலும்..அவை காற்றுப்பைக்குள்ளேயே தஞ்சமடைந்து விட்டன.



குங்குமப்பூ நிறத்தில், பிறை நெற்றி, வில்லென வளைந்த புருவங்கள், அதன் நடுவில் சூரியனை போல செஞ்சாந்து திலகம், அதற்க்கும் கீழ் இரு காந்த விழிகள், கூரான நாசி, வடிவான இதழ்கள், நீண்ட அழகான கார்கூந்தலை தலைகுளித்து ஈரம் சொட்ட, தாவனிப் பாவாடையில் மெல்லிய புன்னகையுடன் என ஐந்தரையடி உயர அழகுப்பாவையாய் அப்பாவை தோன்றிட கௌதம் சுவாசிக்க மறந்தான்.


விருந்தாளிகளை வரவேற்றவளின் கண்கள் இவனிடம் சிறிது தேங்கியதோ! ஒவ்வொருவருக்காய் தீபாராதனை காட்டி ஆசிர்வாதம் வாங்க, தெய்வானை யிடம் வாங்கும் போது

" க்கும் இதுல ஒண்ணும் குறைச்சல் இல்ல" என நொடிக்க அவளது முகம் கனநேரம் சுருங்கி மீண்டும் புன்னகையை பூசிக்கொண்டது.


மற்றவர்கள் இது எப்போதும் நடப்பதுதானே என கடந்து விட கௌதமிற்க்குதான் தன் அத்தையின் மேல் கோபம் வந்தது.

"என்ன அத்தை இப்படி பேசிட்டீங்க" என தனது ஆதங்கத்தை வெளியிட, அவனை ஆச்சர்யமாய் பார்த்தாள் அப்பாவை.


"இதெல்லாம் எப்படி பேசினாலும் திருந்தாத கேசு தம்பி, நீங்க குளிச்சிட்டு வாங்க" எனக்கூற அவள் தன்னுணர்வுகளை மறைக்க போராடுவது தெரிந்தது.


அனைவரும் பாவமாய் ஒரு பார்வை பார்த்தனர். ஒரு பெருமூச்சுடன் அவன் மௌனமாய் தனக்கு ஒதுக்கப்பட்ட அறைக்குள் சென்று மறைந்தான்.


இதையெல்லாம் பார்த்த ராகேஷுக்கோ "ரொம்ப கொடுமை பன்ற அம்மாவா இருப்பாங்களோ? ஆனா யாரும் கண்டுகிட்ட மாதிரியும் தெரியலயே? என்னடா நடக்குது இங்க, பாட்டிமா கூட ஒண்ணும் சொல்லல" என யோசித்தவாறே தனது அறைக்கு சென்றான்.


சிறிது நேரத்தில் ஃப்ரெஷ்ஷாகி வந்தவர்களுக்கு சூடான இட்லி, இடியாப்பம், குழிப்பணியாரம், பூரி அதற்க்கு சைடிஷ்ஷாக பூரி கிழங்கு, தேங்காய் பால், விதவிதமான சட்னிகளும் சாப்பாட்டு மேசையை அலங்கரித்தது. இனிப்பிற்க்கு கேசரி செய்திருந்தனர்.


பதினொரு பேர் அமர்ந்து உண்ணக்கூடிய அந்த டேபிளில் ரத்ன பாண்டி நடுநாயகமாக அமர, ஒருபுறம் காமாட்சியும், மறுபுறம் அஞ்சுகம் பாட்டியும் அவர் அருகில் ராகேஷ் அமர, மறுபுறம் வீர பாண்டியுடன் அமரந்தான் கௌதம்.


ராகேஷிர்க்கு இது மிகவும் புதிதான சூழல், அதுவும் தெய்வானை இவனுக்கு பார்த்து பார்த்து பரிமாற என்றும் இல்லாத அளவிற்க்கு மனது நிறைவாய் உணர்ந்தது. ஆனால் கௌதமிற்க்கோ கையும், வாயும் அதன் வேலையை பார்த்தாலும் பார்வை முழுதும் அங்கு பரிமாறிக்கொண்டிருந்த "நாச்சியாரின்" மேலேயே இருக்க, அவளோ அமைதியாய் பரிமாறிக்கொண்டிருந்தாள்.



சிறு வயதில் அவ்வளவு சுட்டியாய் அவனிடம் வம்பிழுத்தவளா இவள்? என ஆராய்ச்சியாய் அவளை பார்க்க அப்போது அவளும் இவனை ஓரப் பார்வை பார்க்க, இவன் பார்ப்பது அறிந்ததும் டக்கென தலையை குனிந்து கொண்டாள்...


அதை பார்த்து இவனும் மெலியதாய் புன்னகைத்துக் கொண்டே உண்டான். இவர்கள் உணவு அருந்த அப்போதுதான் எழுந்து குளித்து முடித்து வந்தான் " கலையரசன்" பணிரெண்டாம் வகுப்பு முடித்து விடுமுறையை அனுபவிப்பவன்.


அஞ்சுகம் பாட்டியை கண்டதும் "பாட்டிமா எப்ப வந்தீங்க " என அவர் தோளில் சலுகையாய் நாடியை வைத்து வினவியவனிடம், "அரசு சாப்பிட விடு, அப்புறம் செல்லம் கொஞ்சலாம்" என


"ம்மா..என்ற சிணுங்கலுடன் அமர போனவன் அப்போதுதான் அங்கிருந்த கௌதமை கண்டதும் "ஹய், அத்தான் நீங்க வரீங்கன்னு பாட்டி சொல்லவே இல்ல" என புகார் படித்தவனை

"ஹேய் நான் வரது கடைசி நிமிஷம் வரை அவங்களுக்கே தெரியாது அரசு ... எக்சாம்ஸ் எப்படி பண்ணிருக்க"


"நால்லா பண்ணிருக்கேன் அத்தான்" என்றவன் ராகேஷை கண்டு" இவங்க" என யோசித்தவன்


" ஹான்.. ராகேஷ் அண்ணா... அத்தானோட PA. சாரிண்ணா உங்கள போட்டோலதான் பார்த்திருக்கேன் அதான் சட்டுன்னு அடையாளம் தெரியல" எனக் கூற


"ஹேய் அரசு அதனால என்ன மேன் இனி நாம ஃபிரன்ட்ஸ்" "ஓ.கே." என ரெண்டு பேரும் ஹை-பை அடித்துக்கொண்டனர்.


இதுதான் கலையரசு அனைவருடனும் எளிதாக பழகிவிடுவான். சாப்பிட்டு முடித்து அனைவரும் ஹாலில் அமர


"அத்தான் , அண்ணா ரெண்டு பேரும் இன்னைக்கு ரெஸ்ட் எடுத்துக்கோங்க நாளைக்கு நான் உங்கள வெளியில சுத்தி பார்க்க கூட்டிபோறேன், அன்ட் நோ மோர் எக்ஸ்கியூசஸ்" என மிரட்ட பெரியவர்கள் புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.


அந்தநாள் ராகேஷுக்கு அரசுவின் புண்ணியத்திலும், தெய்வானையுடன் அம்மா..அம்மா என நன்றாக ஒட்டிக்கொண்டு அவர் பின்னாலேயே சுற்றிக்கொண்டும் கழிந்தது.

கௌதமிற்கோ கண்கள் தானாக அவள் பக்கம் செல்வதை தடுக்க முடியவில்லை...ஆனால் அவளோ அதற்க்கு மேல் அவனை திரும்பியும் பார்க்கவில்லை... இப்படியே அன்றைய நாள் கண்ணாமூச்சி ஆட்டமாய் கழிய... மறுநாள் விடிந்தது ஆர்ப்பாட்டமாக, கலவரமாக....யாருக்கு ஆர்ப்பாட்டம்? யாருக்கு கலவரம்?
????????Veryyy nice sis
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top