நாங்கலாம் அப்பவே அப்படி -- 7

karthika manoharan

Author
Author
SM Exclusive Author
#1
சென்ற அத்தியாயத்தை படித்தவர்களுக்கு நன்றி, விருப்பத்தை தெரிவு செய்தவர்களுக்கு மிக்க நன்றி, கருத்துக்களை பதிவு செய்த நல்ல உள்ளங்களுக்கு கோடான கோடி நன்றி....... இதோ அடுத்த அத்தியாயம்....


நாங்கலாம் அப்பவே அப்படி-- 7"யாரோ இவன் யாரோ இவன் என் பூக்களின் வேரோ இவன் என் பெண்மையை வென்றான் இவன் அன்பானவன்" மனதுக்குள் மெல்லிய சாரலாய் கீதம் இசைக்க முகம் முழுவதும் விகசித்த புண்ணகையோடு மண்டபத்திற்க்குள் நுழைந்தாள் காரிகை.சிறுவாண்டுகள் கூட இவளை அழைத்து பார்க்க, இவள் கலையவில்லை. மனம் மொத்தமும் கௌதம் மட்டுமே.


அன்று அருவிக்கரையில் முதலில் முத்தமிட்ட போது அதிர்ச்சிதான், விலக்கவும் முயன்றாள். ஆனால் காதல் கொண்ட மனம் ஒரு கட்டத்திற்க்கு மேல் ரசிக்க தொடங்கியது.


ஆனால் அதை அடுத்த நிலைக்கு கௌதம் எடுத்து செல்ல முயன்ற போது, இவள் சுதாரித்து அவனை தள்ளிவிட்டிருந்தாள். அவன் முகம் பார்ப்பதை தவிர்த்தாள். அவனுக்கு காட்டவும் தவிர்த்தாள்.
அப்போது அவள் மனதில் கோபம், தவிப்பு போன்ற எந்த உணர்ச்சிகளும் இல்லை. மனம் வெற்றுத்தாளாய்; அதில் கௌதமனின் எண்ணங்கள் மட்டும் தூரிகையாய் வானவில்லை தீட்ட தொடங்கின.அது சரியோ? தவறோ? மனம் ஒருவித போதையில் மூழ்க தொடங்கியது.அதிலிருந்து தெளிவு பெறாமல் அவனை பார்க்க முடியாது, எனவேதான் இந்த கண்ணாமூச்சி ஆட்டம். அது இன்று நிறைவுபெற்று விட்டது.மண்டபம் முழுவதும் ஆட்கள் நிரம்பியிருக்க புடவைக்கு போட்டியாய் மின்னும் இவள் முகத்தை கவனிப்பார் யாருமில்லை. மற்றவர் கவனித்தாலும் அதை கருத்தில் கொள்ளும் நிலையில் இவளும் இல்லை. அதனால் தன்னை ஒருவன் பின்தொடர்வதையும் கவனிக்க தவறினாள்.


இத்தனை நாள் கேள்விக்கு இன்று கிடைத்த பதிலில் மனம் இறகை போல லேசாக, மயிலிறகால் வருடுவது போல உடலில் சிலிர்ப்பு ஓடி மறைய, மயக்கும் புன்னகையை சிந்தியவாறே தலையை கோதியபடி கௌதமும் மண்டபத்திற்க்குள் நுழைந்தான்.


கண்களால் அவளை தேடி , அவள் மேடைக்கு கீழே இருந்த உறவினர் கூட்டத்தில் இருப்பதை கண்டவன்


"மேடைக்கு செல்லாமல் இங்கு என்ன செய்கிறாள்" என எண்ணியவாறு கூட்டத்தில் கலந்து அவளை,நோக்கி முன்னேறினான்.


அப்போதுதான் அந்த முகத்தை கண்டான் அவ்வளவு குரோதம் அதனில் , யாரைக் கண்டு? அவனவளை கண்டா! கூர்ந்து கவனித்தான். அவளை நோக்கிதான்.


கையில் எதையோ மறைத்தபடி. கௌதமுக்கும் அவனவளுக்கும் இருக்கும் தூரம் பதினைந்து அடி; நாச்சியாருக்கும் அந்த கோர முகத்துக்காரனுக்கும் இருக்கும் தூரம் ஐந்தே அடிகள். எதுவோ சரியில்லை மனம் அடித்து கூறியது. அவன் கனிப்புகள் இதுவரை பொய்த்ததில்லை.


அவளிடம் செல்ல உறவினர்களை விலக்கியபடி எட்டிநடைபோட அதற்குள் அவன் அருகில் சென்றுவிட்டிருந்தான்.


மற்ற நாளாய் இருந்தால் சுற்றுபுரத்தை தன் கவனத்தில் வைத்திருப்பாள். இது அவளது வழக்கம். பெண்களுக்கு இந்த கவனம் அவசியம் என நினைப்பவள். ஆனால் இன்று அதைகூட அவள் கவனிக்க வில்லை காரணம் கௌதம்.


கௌதமுக்கு புரிந்தது அது ஆசிட் என்னும் திராவகம். மனம் பதறியது. "ஏய் "என்ற கூவலுடன் கௌதம் செல்வதற்க்கும் அவன் பாட்டிலை திறந்து ஊற்ற வரவும் சரியாக இருந்தது.


கூட்டத்தில் சலசலப்பு. யாருக்கும் என்ன நடந்தது தெரியவில்லை. நாச்சியாருக்கோ அதிர்ச்சி. கௌதம் விரைந்து வந்தவன் நாச்சியாரை இழுத்து தன் பின்னால் இருத்திக் கொண்டான்.


அவளை முழுதும் ஆராய்ந்தான் ஒன்றும் ஆகவில்லை. மனம் இப்போதுதான் அமைதியடைந்தது. எங்கே அவன்? என்று கோபத்தோடு திரும்ப அங்கு ஒரு கரம் அவனை வளைத்து திராவகம் இருந்த கரத்தை பற்றியிருந்தது.


"யார் இவன்? "கௌதம் ஒரு முகச்சுருக்கத்துடன் புதியவனை நோட்டம்விட்டான்.


"கௌதம் வந்து கொஞ்சம் உதவி பண்ணுங்க" அந்த புதியவன் அழைக்க, அதுவரை நாச்சியாரை கைவளைவில் வைத்திருந்தவன் அவளை மெதுவாக விலக்கி அவன் அருகில் வந்தான்.


திராவகம் இருந்த கையை பிடித்த கௌதம் , லாவகமாக அதை அவனிடம் இருந்து பறித்தவன் ஓங்கி ஒரு அறை விட்டிருந்தான்.


கௌதம் "யார்றா நீ? எதுக்கு இப்படி பண்ண?


இருவரின் கைப்பிடியில் இருந்தும் அவன் அடங்கவில்லை. "ஏய் நாச்சியா தப்பிச்சிட்டன்னு நினைக்காத அழிப்பேன்டி உன்ன!!! என்னோட காதல அழிச்ச நீ மட்டும்......." அதற்கு மேல் அவன் பேசவில்லை. வாயிலேயே ஒரு குத்து விட ரத்தம் பொலபொலவென்று கொட்டியது.அந்த அடிக்கு சொந்தகாரன் கௌதம் அல்ல, அந்த இன்னொருவன். அவன் "வெற்றி வேலன்" வீரபாண்டியின் தங்கை சகுந்தலாவின் மைந்தன். ரத்ன பாண்டி, காமாட்சியின் மகள் வயிற்று பேரன். நெடுநெடுவென்ற உயரத்தில், விவசாயம் செய்து உரமேறிய உடற்கட்டுடன், மாநிறத்தில் இருக்கும் கிராமத்து அழகன்.அதற்குள் அனைவரும் இவர்கள் அருகில், மணமக்கள் கோலத்தில் இருந்த தம்பதிகளும் வந்துவிட தெய்வானை ஓடி மகள் அருகில் நின்று கொண்டார்.


வீரபாண்டி தங்கையின் மகனை கண்டவர் "வேலா, என்னப்பா இது? " அவருக்கு அதிர்ச்சி அவரது செல்ல மகளின் மேல் ஒருவன் வஞ்சம் கொண்டு இத்தனை தூரம் செல்வான் என்று நினைக்கமுடியவில்லை.


"மாமா அன்னைக்கு பஞ்சாயத்துல இவன அவமானபடுத்தினதால நம்ம பொண்ண பழிவாங்கனும்னு சுத்தியிருக்கான். எனக்கு தெரிஞ்சு நானும் எச்சரிச்சு விட்டேன். ஆனா அப்பவும் திருந்தாம இந்த வேல பாத்திருக்கான்" என்றவாறு மீண்டும் ஒரு அறை விட்டான்.


"ஏலேய் முத்தா! " "ஐயா!" நம்ம ஆளுங்களை கூப்பிட்டு இந்த பயல நம்ம குடோனுக்கு கொண்டு போங்க, நம்ம பொண்ணு மேல கை வைக்க நினைச்சா என்னாகும்னு தெரியனும்.ம் .. இழுத்துட்டு போங்க" என்று கர்ஜிக்க, தன் முதலாளியிடம் இவ்வளவு கோபத்தை முதன் முறையாக கண்ட தொழிலாளர்களும் அவனை இழுத்துகொண்டு சென்றனர்.கௌதம் "மாமா ஒரு நிமிஷம்" வேலையாட்களின் பிடியில் இருந்தவனை காட்டி "ஆசிட் அடிக்கற அளவுக்கு என்ன வெறி இவனுக்கு? அப்பறம்" இது யாரு எனக்கு பதில் சொல்லுங்க மாமா?" என வேலனை சுட்டிகாட்டி கூறினான்.


வேலனை காட்டி "இவன் என்ற மருமவன் கௌதம்"


"அப்ப நான் யாரு?" என்ற பாவனையுடன் வேலனை பார்க்க அவன் பார்வையின் அர்த்தம் உணர்ந்தவன் அழகாய் புன்னகைத்தான்.


"தங்கச்சி மவன கூட மருமவன்னு கூப்பிடலாம் கௌதம்"

"ஓ." ஒரு சிறு ஆறுதல்.


"சரி சொல்லுங்க இவனுக்கும் அழகிக்கும் என்ன பிரச்சனை?"


அதற்கு கூட்டத்தில் இருந்த பெரியவர் ஒருவர் "இந்த பய ஒரு பொண்ண விரும்பினான் தம்பி, அந்த புள்ளையும் இவன விரும்பிச்சு...அந்த புள்ளைக்கு அம்மா மட்டுந்தான், அப்பா அந்த புள்ள கருவுல இருக்கையிலயே தவறிட்டாரு.இவன் பொண்ணு கேட்க, அந்தம்மா ஊருக்குள்ள பொறுக்கிதனம் பண்ணிட்டு சுத்திட்டு இருக்கான் இவனுக்கு பொண்ணு தரமாட்டேன்னு சொல்லிடுச்சு.


இவன் அந்த பொண்ண ஏவிவிட்டு அம்மா மேல பஞ்சாயத்துல பிராது கொடுக்க வச்சுட்டான் படுபாவி. பஞ்சாயத்தில் ஊர் மக்கள் கூடியிருக்க (ஆலமரம், சொம்பு இதெல்லாம் மிஸ்ஸிங். ஹா.ஹா..ஏனா இது நவீன பஞ்சாயத்து கிராமசபை மண்டபத்தில் நடைபெற்றது. )பஞ்சாயத்து தலைவராக வீரபாண்டி , உடன் கனக வேலுவும்
சில பெரியவர்களும். ஊர் மக்கள் முக்கால்வாசி பேர் அங்கிருக்க தெய்வானை, நாச்சியார் கூட அங்கிருந்தனர்.


"சொல்லுங்கப்பா என்ன பிராது"


"ஐயா இந்த பொண்ணு வான்மதி நாலாவது தெரு கண்ணம்மா பொண்ணுங்க, அது இந்த பையனதான் கண்ணாலம் கட்டிக்குவேன்னு சொல்லுதுங்க, ஆனா இந்த பொண்ணோட அம்மா இதுக்கு சம்மதிக்கலன்னு பஞ்சாயத்த கூட்டி நிக்குதுங்க" என்று ஒரு பெருசு வழக்கை சுருக்கமாக உரைக்க விசாரணை ஆரம்பித்தது.


கண்ணம்மா அழுதபடி நிற்க, அவருக்கு சில பெண்கள் ஆறுதல் அளித்தபடி உடன் நின்றிருந்தனர். வீரபாண்டி,


"உங்க தரப்ப சொல்லுங்க கண்ணம்மா."


அந்த ஊரில்இது ஒருவழக்கம் தன் வீட்டு பெண்களை தவிர மற்ற பெண்களை மரியாதையோடு வாங்க , போங்க என்றே அழைப்பர் . சிறிய பெண்ணாக இருந்தாலும் ."ஐயா! எனக்கிருக்கறது ஒரே மவங்க, அது நல்லபடி கட்டிக் கொடுக்கனும்னு நினைச்சேன், பாவிமக இப்படி பண்ணிட்டாங்க" என்றவாறு அழுதவாறு தன் வாதத்தை முன் வைத்தார்.


வயிற்றில் ஆறுமாத கருவுடன் கணவனை இழந்தவர். அதன்பின் எவ்வளவு பாடுபட்டு மகளை வளர்த்தார் என்பது இந்த ஊருக்கே தெரியும். இப்போது வான்மதியிடம்


"நீங்க சொல்லுங்காத்தா" என்று கூற,"ஐயா! எனக்கு இவர புடிச்சிருக்குங்க, அதனால இவரதான் கட்டிக்குவேங்க""ம்" சிறிது நேரம் யோசித்தவர்


"ஏன்பா நீ மாரி மவன் இளங்கோதான""ஆமாங்க""வேலைக்கு போறியா" "இல்லைங்கய்யா"
"பொறவு எப்படி நீ உன்ன நம்பி வர பொண்ண காப்பாத்துவ"


"சூப்பர்!! அப்பா பாய்ண்ட புடிச்சிட்டாரு" ஒருவித குதூகலத்துடன் ஆழ்ந்து கவனிக்க ஆரம்பித்தாள் நாச்சியார். அவளுக்கு இதெல்லாம் கவனிப்பதில் ஒரு சுவாரசியம்."அதெல்லாம் பாத்துக்குவேங்க""நீ உலகம் புரியாம பேசறப்பா.. காதல் மட்டும் வாழ்க்கை இல்ல, அதையும் தாண்டி நிறைய இருக்கு, நிதர்சனத்த புரிஞ்சிக்கனும்" வீரபாண்டியும் பொறுமையாக எடுத்து சொன்னார்."ஏன் அப்படி கஸ்டப்பட்டா அவங்க நிலத்த கொடுக்க சொல்லுங்க அத வச்சு வாழறேன்" இப்போது அங்கிருந்த எல்லோரும் முகத்தை சுழித்தனர்.நாச்சியார் "என்ன திண்ணக்கம் இவனுக்கு" என்று பல்லை கடித்தாள். வீரபாண்டி ஒரு முடிவுடன்


"நீங்க என்ன சொல்றீங்க கண்ணம்மா"
 
Last edited:

karthika manoharan

Author
Author
SM Exclusive Author
#2
அவரும் ஒரு முடிவுக்கு வந்தவராய் முந்தானையால் கண்களை துடைத்து இடுப்பில் சொருகிக் கொண்டு "இப்ப சொல்றேங்கய்யா அந்த நிலம் என்னோட சம்பாத்யம், எனக்கு பொறவு என்ற மகளுக்குதேன். இப்பவே எழுதிக்கொடுக்க மாட்டேன்.அவ வேணா அந்த பையனையே கட்டிக்கட்டும். பின்னால அவ கசக்கிட்டு வரக்கூடாதுன்னு குலசாமிய வேண்டிக்கறேன். ஒரு வேளை அப்படி வந்தா அவள வச்சி காப்பாத்த எனக்கு அந்த நிலந்தான் ஆதாரமா இருக்கு.. அவ்வளவுதானுங்க நான் சொல்லிட்டேன் இனி பஞ்சாயத்து முடிவுக்கு கட்டுபடறேங்க"


அங்கிருந்த தாய்மார்கள் அனைவருக்கும் கண்களில் கண்ணீர் தேங்கி நின்றது தெய்வானை உட்பட.


"நீங்க என்ன சொல்றீங்க" என்று வான்மதியிடம் கேட்க,"ஐயா அந்த நிலத்த கொடுத்தாதான் என்னங்க, அவங்களுக்கு அவங்க சந்தோசம்தான் முக்கியமா படுது. நான் காலம் பூரா அவங்கள அண்டிதான் பொழைக்கனும்னு நினைக்கறாங்களா? எனக்கு அந்த நிலம் வேணும் இல்லைனா கேஸ் போட்டு வாங்கி....." முடிக்ககூட இல்லை சப்பென்று அறைந்திருந்தாள் நாச்சியார்.


(இவளுக்கு இதே வேலையா போச்சுன்னு நீங்க திங்கிங்... ஐ நோ யுவர் மைண்ட் வாய்ஸ்..ஆனா பாருங்க உண்மையா இருக்கறவங்களுக்கு கை கொஞ்சம் நீளமாதான் இருக்கும்... )அங்கிருந்த எல்லோருக்கும் நாம செய்ய நினைச்சத இந்த பொண்ணு செஞ்சிடுச்சுபா என்ற எண்ணம் தான்.


"கொன்றுவேன் கொன்னு !!! யார பாத்து என்ன கேள்வி கேக்கற? அவங்க சந்தோசம் எதுல இருக்குன்னு உனக்கு தெரியுமா? அவங்க சந்தோசம் முக்கியம்னு நினைச்சிருந்தா கருவுலயே உன்ன கொன்னுட்டு இன்னொரு கல்யாணம் பண்ணிருப்பாங்க, இல்லையா பொறந்ததும் அனாத ஆசிரமத்துலயோ, இல்ல தத்து கொடுத்துட்டோ சந்தோசமா இருந்திருந்தா இன்னைக்கு இப்படி கண்ணுல தண்ணி விட்டுட்டு நின்றுக்க மாட்டாங்க.அதுக்கு பதிலா உன்ன பாராட்டி சீராட்டி வளர்ந்தாங்களே எதுக்கு இத கேக்கவோ? எட்டி நின்னு பாத்த எங்களுக்கே பதறுது, உனக்கு உயிர் போவவேணாம் இந்த கேள்விய கேக்க. நீ என்ன செஞ்சிகிட்டு இருக்கேன்னு தெரியுதா! உங்கம்மாவ எங்க நிறுத்தி வச்சிருக்க... இதப்பார் இத புரிஞ்சிக்க அவங்க பொண்ணா இருக்கனும்னு அவசியமில்ல, நல்ல மனசிருந்தாலே போதும்."


என்று அவளை போட்டு தாக்கியவள் இவள் பேசபேச இன்னும் அதிகமாக அழுது கொண்டிருந்த கண்ணம்மாவை தோளோடு அணைத்து கண்ணீரை துடைத்தவள்


"அத்த என்னது இது! இவ போய்ட்டா உனக்கு யாரும் இல்லையா.. ஏன் நான் உங்க மவ இல்லையா? ம்.. அந்த கழுதை எக்கேடோ கெட்டு போவுது, நான் இருக்கேன் உன்ன பாத்துக்க...சும்மா சொல்லல இந்த நாச்சியா சொன்ன சொல்ல காப்பாத்துவா!""ஐயோ ஆத்தா உன் வாயால அப்படி சொல்லாத கண்ணு அவ எங்க இருந்தாலும் நல்லா இருக்கட்டும்..இந்த நிலந்தான வேணும் எடுத்துக்கட்டும். அவளே போறேன்றப்ப இத வச்சி நான் என்ன பண்ண போறேன்..நல்லாயிருக்கட்டும் தாயி"


என இவளிடம் இறைஞ்ச...ஒரு துச்சமான பார்வையை வான்மதியை நோக்கி வீசினாள். அது ஆயிரம் சமமாய் இருந்தது.


"மதி நாம ஜெயிச்சுட்டோம் உங்கம்மா நிலத்த தர ஒத்துக்கிட்டாங்க" என இளங்கோ சந்தோசமாய் துள்ள,


நாச்சியார் அடித்த போது கூட அவள் தன் தவறை உணரவில்லை, அதற்கு பின்னான அவள் பேச்சில் முழுதும் மாறியிருந்தாள். இப்போது இளங்கோ பேச்சை கேட்டதும் இருந்த கொஞ்ச தயக்கமும் ஓட,"அம்மா என்னை மன்னிச்சிடுமா" என்றவாறு காலில் விழுந்திருந்தாள்.


ஒருவாறு இருவரும் சமாதானமாக "அத்த பாத்தியா உன்பொண்ணு வந்ததும் என்ன மறந்துட்ட" என செல்லமாய் கோபித்துக் கொண்டவளை கன்னம் வழித்து திருஷ்டி கழித்தவர்

"நீ என் சாமி ஆத்தா! நூறு வருஷம் சகல சௌகரியத்தோட நீ நல்லா இருப்ப" இதை கேட்ட வீரபாண்டிக்கும் தெய்வானைக்கும்பிறவி பலனை அடைந்ததுபோல இருந்தது.ஆனால் வான்மதியும் சென்றுவிட, ஊர் மக்கள் இளங்கோவை கேவலமாக பேச, இதற்கெல்லாம் நாச்சியார்தான் காரணம் என்று வன்மத்தை நெஞ்சில் விதைத்தான். அதை அறுவடை செய்ய இன்றுவரை காத்திருந்தான் .

(அப்படி வந்தவன் நாச்சியாரும் கௌதமும் நெருக்கமாக இருந்ததை கண்டு, என் காதல பிரிச்சிட்டு நீ மட்டும் சந்தோசமா இருக்கியா உன்ன விடமாட்டேன்டி" என்று கூட்டத்தோடு கலந்தான்.)இதை கூறி முடித்ததும் நாச்சியார் கௌதமின் மனதில் இன்னும் ஆழியை போல ஆழப் பதிந்தாள். ராகேஷுக்கோ ஒரு வித மரியாதையே தோன்றியிருந்தது.இப்போது வீரபாண்டி " வேலா நம்ம குடும்பம் பிரிஞ்சிருந்தாலும் எதையும் யோசிக்காம எம்மவள காப்பாத்திட்டப்பா.. ரொம்ப நன்றி" என்று கையெடுத்து கும்பிட போனவரை தடுத்தவன்." மாமா என்ன பண்றீங்க! பேசலைனா சொந்தம் இல்லைனு ஆயிடுமா இல்ல பாசந்தான் விட்டு போயிடுமா. நம்ம வீட்டு பொண்ணு மாமா அப்படியெல்லாம் விட்டுட மாட்டேன்" என்று நாச்சியாரை பார்த்தவாறே சொல்லி முடித்தான்.


கௌதமிற்கு உள்ளே திபுதிபுவென்று எரிந்தது "விட்டுட மாட்டானாமா"."மருமவனே இந்த வீணாப்போன ரோசத்தால விசேசத்துக்கு கூட உங்கள கூப்படலயேப்பா..ஆனா நீ எதையும் கண்டுக்காம எவ்வளவு பெரிய உதவி செஞ்சிருக்க..என்ன நினைச்சா எனக்கே வெக்கமா இருக்கு"


"தெய்வான கெளம்புமா நாம போய் மாப்பிள்ளையையும், தங்கச்சியையும் அழைச்சிட்டு வரலாம்" என வாயிலை நோக்கி நடக்க, கனக வேலுவும், சகுந்தலாவும் வேகமாக வந்துக் கொண்டிருந்தனர்.


"அண்ணா என்ன ஆச்சு நம்ம பொண்ணுக்கு ஒண்ணுமில்லையே!" "மச்சான் எங்க அந்த எடுபட்ட பய..." என்று மீசையை முறுக்கி கொண்டு கேட்க, வீரபாண்டி இருவரையும் பார்த்து கையெடுத்து கும்பிட்டவர்"என்ன மன்னிச்சிடுங்க மாப்பிள்ள .. வீம்பால இத்தன நாளா பிரிஞ்சிருந்தோம் இனி அப்படி இருக்க வேணாமே..நானே உங்கள கூப்பிடலாம்னுதான் வந்தேன் அதுக்குள்ள நீங்களே வந்துட்டீங்க. பெரிய மனசு பண்ணிவந்து கல்யாணத்துல கலந்துக்குங்க மாப்பிள்ள, சகுந்தலா நீயும் வாம்மா""அடஎன்ன மச்சான் இதுக்கு போய் கும்பிட்டுகிட்டு, சொந்த பந்தம்னா சண்டை சச்சரவு இருக்கத்தான் செய்யும் அதுக்குன்னு சொந்தம் இல்லைனு ஆயிடுமா..இந்த கல்யாணத்துல கலந்துக்கறது கொடுப்பினை மச்சான் எங்களுக்கு அது கிடைச்சிருக்கு வாங்க போவோம்".


அதன்பின் திருமணம் நல்லபடியாக முடிந்தது. அறுபது ஆண்டுகளுக்கு பிறகு இன்று மீண்டும்தன் மனைவியின் கழுத்தில் மாங்கல்ய நாணை அணிவித்தார் ரத்னபாண்டி. தன் மகள் இல்லையே என்ற சிறு கவலையும் தீர்ந்ததில் இருவருக்கும் அளவில்லா ஆனந்தம்.

வீரபாண்டி- தெய்வானை, கனகவேலு - சகுந்தலா தம்பதிகளாய் ஆசீர்வாதம் வாங்க, பேரன் பேத்திகள் அனைவரும் ஒன்றாக நின்றனர்.


சகுந்தலாவின் மகளை தவிர. அவள் வெளியூரில்,படித்துக் கொண்டிருப்பதால் அவள் மட்டும் இல்லை.

ராகேஷ், அரசு, வெற்றி வேலன், நாச்சியார், கௌதம் வரிசையாய் நின்று காலில் விழ, கௌதம் மட்டும் நாச்சியாரின் கையை யாரும் அறியாதவாறு பிடித்து சற்று காலம் தாழ்த்தி ஜோடியாய் விழுந்தனர்.இதை கண்டு கொண்ட வேலன் கௌதமை நினைத்து பொங்கி வந்த சிரிப்பை அடக்கியபடி நின்றிருந்தான். நாச்சியார் முறைத்தபடி நின்றிருந்தாள்.


திருமணம் முடிந்த அடுத்த நாள் கௌதம், அஞ்சுகம், ராகேஷ் இவர்களுடன் நாச்சியாரும் விமானத்தில் பறந்து கொண்டிருந்தனர் பெங்களுரை நோக்கி ஏன்? எதற்காக?
 
Last edited:

Sponsored

Advertisements

Top