• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

நாங்கலாம் அப்பவே அப்படி --8

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

karthika manoharan

அமைச்சர்
SM Exclusive
Joined
May 5, 2018
Messages
2,013
Reaction score
7,730
Location
namakkal
சென்ற அத்தியாயத்தை படித்தவர்களுக்கு நன்றி, விருப்பத்தை தெரிவு செய்தவர்களுக்கு மிக்க நன்றி, கருத்துக்களை பதிவு செய்த நல்ல உள்ளங்களுக்கு கோடான கோடி நன்றி....... இதோ அடுத்த அத்தியாயம்....

நாங்கலாம் அப்பவே அப்படி-- 8


திருமணம் நல்லபடியாக முடிந்து அனைவரும் வீட்டிற்க்கு வந்து விட்டிருந்தனர். தம்பதியர் இருவரும் ஒரு சோபாவில் அமர்ந்திருக்க, வீரபாண்டி , கனக வேலு இருவரும் இத்தனை வருடம் விட்டதையெல்லாம் பேசிக்கொண்டிருந்தனர்.


நாச்சியார் மாடிக்கு சென்றுவிட மற்ற இளவட்டங்கள் கீழேயே தங்கிவிட்டனர். அரசு, வேலன், ராகேஷ் மூவரும் ஒன்றாக அமர்ந்திருக்க, கௌதம் தனித்திருந்தான்.


அவனுக்கு வேலனோடு ஒன்ற மனமில்லை. ஏதோ அவனுக்கு போட்டியாய் வந்தது போலவே பாவித்தான். எல்லோரும் அவனையே தாங்கி பேச இவன் அந்நியமாய் உணர தொடங்கினான்.


ஏன் நாச்சியாரும் கூட இவனிடம் பேசவில்லை என்ற சுணக்கம் வேறு. இத்தனை எண்ணங்கள் மனதில் சுழன்றாலும் வெளியில் ஒன்றும் காண்பிக்காமல் போனில் ஏதோ பார்த்தவாறு அமர்ந்திருந்தான்.



நாச்சியார் மேலே வந்தவளுக்கோ கண்மண் தெரியாத கோபம். ஆசிட் ஊற்ற வந்தவன் மேல் , அவன் கூற வந்து பாதியில் விட்ட காரணத்தின் மேல், அதற்கு காரணமான கௌதம் மேல், அதற்கு துணை போன தன்மேல் என பல கோபங்கள். மாற்றுத்துணி எடுத்துக் கொண்டு குளிக்க சென்று விட்டாள்.



கொட்டும் நீரில் நின்றாலும் மனம் அமைதியடைய மறுத்தது. இளங்கோ என்னகூற வந்தான். "நீ மட்டும் காதலிக்கலாமா என்றா? அப்படியென்றால் கௌதமுடன் நான் நெருக்கமாக இருந்ததை பார்த்திருக்கிறான்.


இதை பொதுவில் கூறியிருந்தால்...நினைக்க, நினைக்க பதறியது. தன்னை பற்றி என்ன நினைத்திருப்பார்கள், பெற்றோருக்கு தலைகுனிவை ஏற்படுத்த இருந்தேனே! என்று வெகுநேரம் நீரில் நின்றவள் பின் உடைமாற்றி தலையை கூட உலர்த்தாமல் படுத்து உறங்கிவிட்டாள்.


சிறிது நேரத்தில் அவளது அறைக்கு வந்ந தெய்வானை அவளின் நிலையை கண்டு அவள் மிகுந்த கோபத்தில் இருப்பதை அறிந்து கொண்டார்.


ஏனெனில் அவளது கோபம் எல்லை மீறும் போது இப்படிதான் செய்து வைப்பாள். சிறிது நேரம் அவளை பார்த்தவர் ஒரு முடிவு எடுத்தவராய் சென்றார்.

அனைவரும் அங்கே ஹாலில் இருக்க, ரத்னபாண்டி, காமாட்சி அருகில் சென்றவர்

"மாமா, அத்தை உங்ககிட்ட கொஞ்சம் பேசனும்"


பொதுவாக இப்படியெல்லாம் பொதுவில் இருக்கும் போது ரத்னபாண்டியிடம் முக்கியமானதை தவிர வேறு பேச மாட்டார் என்பதால், ரத்னபாண்டி, காமாட்சி இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.


காமாட்சி "சொல்லுமா"


"அது வந்து ... நம்ம நாச்சியாருக்கு கல்யாணம் பண்ணலாங்க அத்தை" அனைவருமே அதிர்ந்தனர். ஆனால் வேறுவேறு காரணங்கள் அவரவர்க்கு.

"ஏன்மா திடீர்னு"


"அவளுக்கும் வயசு 24 ஆகுது, கல்யாணம் பண்ணா அப்பதான் இவளுக்கும் பொறுப்பு வரும் எந்த வம்புக்கும் போகமாட்டா.


இல்லைனா இன்னைக்கு ஆசிட் தூக்கிட்டு வந்த மாதிரி, நாளைக்கு ஒருத்தன் கத்திய தூக்கிட்டு வர மாட்டான்னு என்ன நிச்சயம்" இன்று நடந்த சம்பவத்தால் அவர் மிகவும் பயந்திருக்கிறார் என்பது தெரிந்தது.



ஒரு தாயாக அவரது பயம் நியாயமே. ரத்னபாண்டி "அதுக்கென்னமா மாப்பிள்ள பார்க்க ஆரம்பிக்கலாம்"


"இல்லைங்க மாமா சீக்கிரமா இது நடக்கனும்" தலை குனிந்தவாறு சொல்ல,


"புள்ளபூச்சிக்கு பயந்து வீட்ட கொளுத்த முடியாதுமா"



"அது பாம்பா இருந்தா அதுவும் அடிபட்டு பழிவாங்க வந்ததா இருந்தா அப்ப பயந்துதானே ஆகனும்."

வேலன் "அத்த நாங்கலாம் இருக்கோம் அப்படிலாம் ஒண்ணும் ஆகாது. தவிர நம்ம பொண்ணு மேல தப்பில்லையே, நீங்க பெருமைதான் படனும்."


அவனை நோக்கியவர், "இன்னைக்கும் எல்லாரும் அங்கதானே இருந்தோம், ஏதோ குலசாமி புண்ணியம் காப்பாத்திருச்சு, இல்லைனா எம்மவ நிலமைய நினைச்சு பாருங்க" என்று தழுதழுத்தவர்


"வேணாம்பா அவளுக்கு சீக்கிரம் கல்யாணத்த பண்ணி புகுந்த வீட்டுக்கு அனுப்பனும்" புரிந்தது ஒரு தாயாய் அவரது தவிப்பும் சரியே.



"சரிம்மா அதுக்குன்னு நல்ல இடமா தேட வேணாமா..அதுக்கு நாளாகுமே" ரத்னபாண்டி.


"நம்ம சொந்தத்துலயே பாக்கலாமே, ஏன் நம்ம வேலன் தம்பி கூட இருக்காப்லயே" இதைக் கேட்ட கௌதம் விருட்டென்று எழுந்து விட்டான்.


"ஏன் எங்களை பார்த்தா மாப்பிள்ளையா தெரியலயா?" கோபத்துடன் மேலே அவனது அறைக்கு சென்றன்.


அவனது நடவடிக்கையை இருவர் புன்னகையுடன் பார்த்தனர்.அஞ்சுகம் பாட்டி ஒருவர், அவருக்கு பேரனின் மனம் புரிந்தது அதில் மகிழ்ச்சியே இதைத்தான் அவரும் விரும்பினார். மற்றொருருவர் வேலன்.



நாச்சியாரின் அறையை தாண்டிதான் அவனது அறைக்கு செல்ல வேண்டும். செல்லும்போது அவளது அறை லேசாக திறந்திருப்பதை பார்த்தவன் உள்ளே செல்லலாமா என யோசித்தான்.


என்னோட ப்யூட்டி அறைக்கு போக யார்கிட்ட அனுமதி வாங்கனும் என்று நினைத்தவன் உள்ளே சென்று கதவை சாற்றிவிட்டு, அவள் அருகில் சென்றான்.


தாவணி பாவாடையில் ஈர கூந்தலை மெத்தையில் தோகை போல விரியவிட்டு ஒருபக்கமாய் படுத்தவாறு உறங்கிகொண்டிருந்தாள்.


அந்த ஆசிட் மட்டும் இவள் மேல் பட்டிருந்தால். அந்த கொடுமையான நொடிகளை நினைத்து பார்த்தான். அவள் அவனுக்கு எவ்வளவு முக்கியம் என உணர்த்திய அற்புத நொடிகள் அவை.


பார்த்து ஒரு வாரமே ஆன பெண்ணின் மேல் இவ்வளவு நேசம் தோன்றுமா?


"முட்டாள் அவளின் சிறுவயது ஞாபகங்களைகூட நீ மறக்கவில்லையே, உன்னுள்ளே இருந்தவளை கண்டுபிடிக்கவே இந்த ஒரு வாரம்" என மனம் எடுத்துரைக்க,


அவளை நோக்கி குனிந்தவன் அவள் தலையை மெதுவாக வருடி கொடுத்தான். சிறிது அசைந்தவள் மெல்லிய புன்னகையுடன் உறங்கி போனாள்.


இவனுக்கும் புன்னகை வந்தது, "எவ்வளவு ஆர்ப்பாட்டம் பண்றா, இப்ப தூங்கறத பாரு சின்ன புள்ளையாட்டம்,


அங்க உனக்கு கல்யாணம் பேசறாங்க ப்யூட்டி, அப்படியே உன்ன தூக்கிட்டு எங்கயாவது போயிடலாமான்னு தோணுது,


ஆமா நல்லாதான இருந்த அதுக்குள்ள என்னடி கோபம் முகத்த திருப்பிட்டு போற. ஆனா ஒண்ணு உன்ன சமாளிக்க ரொம்ப பாடுபடனும் போல..


நிம்மதியா தூங்குடா இனி எதுவும் உன்ன நெருங்காம பாத்துக்குவேன்" என்று நெற்றியில் மென்முத்தம் பதித்தவன் அவளுக்கு போர்வையை போர்த்தி விட்டு சென்று விட்டான்.


கீழே வேலன் ஒருவாறு பேசிசமாளித்துக்கொண்டிருந்தான். "அத்த இதுக்கு பயந்துலாம் கல்யாணத்த வைக்க வேணாம். "


"ஏன் தம்பி உங்களுக்கு என் பொண்ண புடிக்கலிங்களா?"

"அத்த என்ன பேசறீங்க, நம்ம பொண்ணு கட்டிக்க யாருக்காவது கசக்குமா! இது அப்படி இல்ல நாச்சியாரோட விருப்பம் முக்கியம்.


வீட்ட விட்டு துரத்தறாங்கன்னு நினைப்பு வந்துடும். நம்ம வீட்டு பொண்ணு கல்யாணம் முடிஞ்சு அடுத்த வீட்டுக்கு போகும் போது சந்தோசமா போகனும், அதான் சொல்றேன் கொஞ்சநாள் ஆறப்போடுங்க எல்லாம் சரியாகும்"


அவன் பேசியே தெய்வானையை சம்மதிக்க வைத்து விட்டான்.
 




Last edited:

karthika manoharan

அமைச்சர்
SM Exclusive
Joined
May 5, 2018
Messages
2,013
Reaction score
7,730
Location
namakkal
"தெய்வா, அப்படி உனக்கு மனசு ஆறலைன்னா , நான் அம்முவ பெங்களூருக்கு கூட்டிட்டு போறேன் "

அனைவருக்கு அது சரியென்றே பட்டது. வீரபாண்டியும் "தெய்வானை அத்தை சொல்றது சரி கொஞ்ச நாள் அவங்க அங்க இருக்கட்டும்"

தெய்வானை அரைமனதோடு சம்மதித்தார்.

"அச்சோ என்னால வர முடியாதே, நான் எப்ப பெங்களூரூ வரது" என அரசு புலம்ப,


"இந்த கலவரத்துலயும் உனக்கு குதூகலம் கேக்குதா!! வெசம்..வெசம்" என அவன் தலையை கொட்டியவாறு இழுத்து சென்றான்.


வேலன் நைசாக நழுவி, கௌதமின் அறைக்கு வந்தான். " உள்ள வரலாமா"

"யா கம் இன்"


உள்ளே வந்தவனை பார்த்தவன், இவன் எதுக்கு இங்கே வந்தான் என்று யோசித்தாலும் அவன் அமர இருக்கையை காட்ட, வேலன் அதில் அமர்ந்து கொண்டான்.


இவனும் கட்டிலில் அமர்ந்து கொண்டு "என்ன பேசனும்"


"ஸ்ஸப்பா என்ன காரம்"

"இன்னைக்கு ஆசிட் உத்த வந்தானே அவன் என்ன சொல்ல வந்தான்னு தெரிஞ்சுதா உங்களுக்கு"

கௌதமுக்கு இப்போதுதான் புரிந்தது, இத எப்படி மறந்தேன் அதான் நம்மமேல கோவமா இருக்காளோ! என தலையில் கைவைத்துக் கொண்டான்.


"நான் மட்டும் சுதாரிச்சு அடிக்கலைனா இந்நேரம் உளறி வச்சிருப்பான், அப்ப நாச்சியாரோட நிலமைய யோசிச்சு பாத்தீங்களா?



ஒரு பொண்ணா எவ்வளவு சங்கடம் ஊரு முன்னாடி, குடும்பத்து முன்னாடி. உங்க நகரத்துல இதெல்லாம் சாதாரணமா இருக்கலாம் ஆனா இங்க அப்படி இல்ல.


ஆம்பிளைங்க விசயத்துல நாலு பக்கம் யோசிச்சா பொண்ணுங்க விசயத்துல பத்து பக்கமும் யோசிக்கணும். அதுவும் விரும்பற பொண்ணுன்னா ரொம்ப கவனமா இருக்கனும்.


இதெல்லாம் நான் சொல்லி உங்களுக்கு தெரியனும்னு இல்ல பாத்துக்கோங்க. அப்பறம் நாச்சியார பெங்களூரு கூட்டி போக அத்த சொல்லிட்டாங்க" என்றுகூறியவன் வந்த வேலை முடிந்தது போல கிளம்ப,



"வேலா"


"என்ன என்பதை போல பார்க்க"


"நீ... அப்படி கூப்பிடலாம்ல"


"ம் தாராளமா, ஒரே வயசுதான் ரெண்டு பேருக்கும்"


நீ எப்படி கரெக்டா வந்த"

அவனை கூர்மையாக பார்த்தவன் "எங்க வீட்டு பொண்ணுங்க எங்க இருந்தாலும் என்னோட பாதுகாப்புலதான் இருப்பாங்க" என்று மீசையை முறுக்கியபடி கூற,


"நீ நாச்சியார காதலிச்சியா?" இப்போது நேரடியாக கௌதம் கேட்டான். அவனுக்கு தெரிய வேண்டியிருந்தது.


குறும்பு புன்னகையுடன் "மாமன் பொண்ணு தங்கச்சின்னெல்லாம் பொய் சொல்ல மாட்டேன்..ஆனா நீங்க சொல்ற மாதிரி இல்ல, எங்க கல்யாணம் நடந்தா குடும்பம் சேரும்னு கூட நினைச்சிருக்கேன். ஆனா இப்ப இல்ல"


"ஏன்னு தெரிஞ்சிக்கலாமா"



"நாச்சியார், அவங்களோட விருப்பம், புடிக்காத ஆம்பிளைகிட்ட எந்த பொண்ணும் அப்படி இருக்க மாட்டாங்க, அதுவும் நாச்சியார் நெருப்பு. "


சற்று திணறியபடி "நீ....நீ எங்க ..."


"திருமூர்த்திமலை"


"ஓ..."



கௌதமா அப்படியே அங்க இருக்க பாறைலயே தலைய முட்டிக்க. இப்படியா சுத்தி யார் இருக்கான்னு கூட பாக்காம இருப்ப" என தனக்குள்ளயே முனகிகொண்டிருக்க,


சத்தம் போட்டு சிரித்த வேலன்


"காதல் எதையும் கவனிக்காது. கீழ அவசரமா கல்யாணம் பேசாதீங்க சொன்னேன், அதையே உங்ககிட்ட சொல்ல மாட்டேன் , சீக்கிரமா சமாதானபடுத்தி கல்யாண சாப்பாடு போடுங்க. அப்ப நான் கெளம்பறேன்" என்றவனை

"வேலா"


அருகில் வந்த கௌதம் அணைத்து விடுவித்தவன் ,


"தேங்கஸ்" என உளமாற கூறினான்.



சிறு புன்னகையுடன் அதை ஏற்றுக்கொண்டவன் சென்றுவிட்டான்.


கௌதமிற்க்கு இப்படியும் ஒரு மனிதனா என பிரமிப்பாக இருந்தது.


"வாவ் ப்யூட்டி நீயும் வரியா வா..வா அங்க வச்சு உன்ன பாத்துக்கறேன்" என உல்லாச மனநிலையோடு கட்டிலில் விழ விதி அவனை பார்த்து கெக்கபிக்கேவென்று சிரித்தது அவனுக்கு தெரியலயே?????



இப்படியாக அவளை கேட்காமலேயே எல்லாம் நடந்து விட அவளுக்கு மறுக்க அவகாசமே இல்லை.


முகத்தை கடுகடுவென்று வைத்தவாறே பெங்களூரு வந்தடைந்தாள் நச்சியார்.


இவர்களை அழைத்து செல்ல கார் வந்திருந்தது. அவர்கள் வீட்டுக்கு சென்று உள்ளே நுழைந்த சில நிமிடங்களில்


"கௌதம் எங்க போனீங்க இத்தன நாளா?"என்றவாறு ஒரு நாவநாகரீக யுவதி அவனை கட்டிக்கொள்ள,


பாட்டிக்கோ தலையில் அடித்துக் கொள்ளலாம் போல இருந்தது.


"பாட்டி இந்த அல்டாப்பு எப்படி உடனே வந்துது எதாவது ஸ்பை வச்சிருக்குமோ" ராகேஷ் பாட்டியிடம் வினவினான்.



நாச்சியார் எள்ளும் கொல்லும் வெடிக்கும் அளவு வெப்பத்தை வெளியிட்டவாறு இடுப்பில் கைவைத்து முறைத்துக் கொண்டிருந்தாள்.


அப்போதுதான் பாவாடை தாவணியில் அவளை பார்த்த அந்த யுவதி " ஏய் வேலைக்காரி புதுசா வந்திருக்கியா?


போய் கௌதம்க்கு ஒரு ஆப்பிள் ஜீஸ் எடுத்து வா!" என நாச்சிரிடம் கேட்டாளே ஒரு கேள்வி.


பாட்டியின் தோள் மீது கைவைத்தவாறு நின்றிருந்த ராகேஷ் "ஆத்தி" என்றவாறு தடுமாறியவன்


" இந்த பொண்ணு வந்தவுடனே ஆப்பு மேல் ஏறுதே சொல்லுவோமா! ச்சே வேணாண்டா ராகேஷ் எத்தன தடவ உன்ன சர்வென்ட்ன்னு கூப்டிருப்பா அனுபவிக்கட்டும் நீ நடக்கறத வேடிக்கை மட்டும் பாரு"


பாட்டியை பார்க்க அவரும் அதே டோனிலேயே இவனை பார்த்தார் இருவருக்கும் புன்னகை வர


"அப்படிங்கறீங்க"



"ஆமாங்கறேன்"


"அப்ப வாங்க" என வேடிக்கை பார்க்க அங்கேயே சோபாவில் அமர்ந்து கொண்டனர்.



"ஏய் நான் சொல்லிகிட்டே இருக்கேன் நீ என்ன வேடிக்கை பாக்கற, ஏன் கௌதம் இங்க வேலைக்காரி கிடைக்கலன்னு கிராமத்துக்கு போய் கூட்டிட்டு வந்தீங்களா"



அதுவரை அவள் யாரை கூறுகிறாள் என்று அறியாத கௌதம்

"ஹேய் நிவி அது..."


"என்ன கௌதம் இப்படி மரியாதை தெரியாதவளெல்லாம் ஏன் வேலைக்கு வச்சிருக்கீங்க"



என தோளில் தொங்கிய நிலையிலேயே கிள்ளை மொழியில் மிளற்ற,


"நிவி ஸ்டாப் இட்"



"வெய்ட் கௌதம் இவல்லாம் இப்படி சொன்னா கேக்க மாட்டா, ஏய் நீ வா" என்று நாச்சியாரை சமையலறைக்கு இழுத்து போனாள்.


கௌதம் தலையில் கைவைத்தபடி அமர்ந்தவன், பாட்டியை பார்த்து

"நீங்களாவது சொல்லலாம்ல"


"என்ன சொல்றது பேராண்டி இதுவரைக்கும் நடந்தத நாங்க கம்முனு வேடிக்கை பார்த்தமில்ல இனி நடக்கறத நீ பாரு"


அவனுக்கும் அதை தவிர வேறு வழி இல்லை. வந்தவுடன் இப்படி ஒரு சீனை அவன் எதிர்பார்க்கவில்லை.


இவள் நிவிதா கௌதம் அம்மாவின் அண்ணன் மகள். எப்போதும் இப்படிதான் நடந்து கொள்வாள்.


அப்போதெல்லாம் சிறு பெண் என விட்டுவிட்டான். ஆனால் இப்போதுதான் அது அதிகபடியோ என தோன்றியது.


எல்லையை வகுத்திருக்க வேண்டுமோ? பாட்டி சொன்ன போதெல்லாம் அலட்சியமாய் விட்டதற்கு இது தேவைதான்.



அப்படியே எதாவது சொன்னாலும் உடனே தன் தந்தை கருணாகரனிடம் சொல்லி, அவர் வந்து


"என் தங்கை இருந்தால் இப்படி நடக்குமா?"


என்று காதை ஒட்டு போடும் அளவுக்கு ஓட்டையாக்கி விட்டுதான் போவார். அனைத்தையும் அன்னைக்காக பொறுத்துக்கொள்வான்.


இப்போதும் அதற்குதான் தலையில் கை வைத்தான். மற்றபடி அவன் அழகியை பற்றி கவலையில்லை அவள் எப்படியாயினும் சமாளித்து விடுவாள்.



ஆனால் மாமா வந்து நாச்சியாரை எதாவது கூறினால் பொறுத்துக் கொள்ள முடியாது.


இனி பாட்டிக்கு பிறகு இவள்தான் இங்கு எல்லாமே என்ற முடிவுக்கு வந்துவிட்டான்.


சமையலறையில் இருந்து நிவி முன்னே வர, நாச்சியார் பின்னால் ஜுஸ் கிளாஸ் அடங்கிய ட்ரே வை தூக்கியபடி வந்தாள்.


" ஏய் எல்லாருக்கும் கொடு"


என்று கூறியவள் பாட்டியை மிதப்பாய் ஒரு பார்வை பார்த்தவாறு கௌதமின் அருகில் சென்று அமர்ந்தாள்.


பாட்டியும் பாவமாய் ஒரு பார்வை பார்த்தார் அவளை அது அவளுக்கு இப்போது புரியவில்லை , புரிந்தபோதோ??????????
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top