• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

நான் உன் பாடல் நீ என் தேடல் - கத்துக்குட்டியின் விமர்சனம்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Kavichithra

அமைச்சர்
Joined
Apr 11, 2019
Messages
1,331
Reaction score
4,129
Location
Chennai
நான் உன் பாடல் நீ என் தேடல்
-கத்துக்குட்டி கவிக்குட்டியின் அன்பு விமர்சனம்

வணக்கம் அக்காஸ்??????

@Monisha மோனிஷா அக்கா இப்படி ஒரு அழகான கதையைத் தந்தமைக்கு மிக்க நன்றி??????????

ஆரம்பத்தில் இருந்த ஜானவிக்கும் இறுதியில் இருந்த ஜானவிக்குமான மாற்றங்கள் எவ்வளவு.... சலசலக்கும் நதியாய் இருந்த அவள் செழியனின் வாழ்வில் இறுதியில் சர்க்கரைப்பாகாய் சங்கமித்ததைப் படிக்கையில் ஏற்படும் ஆனந்தம் அளப்பரியது.......

நம் சமூகத்தின் ஆணாதிக்கப் பார்வையைப் பற்றி மீண்டும் பொட்டிலறைந்த தருணம் ராஜன் வரும் இடங்கள்.....
பாலைவனமாய் இருந்த ஜானவியின் வாழ்வில் பனிப்பூவாய் செழியன் மலர்ந்த விதம்...அதை ஆசிரியர் வெளிப்படுத்திய வரிகள் அனைத்தும் அருமை...
செழியனின் வாழ்வில் ஜானவிக்கான தேடல் மூலம் அவனோடு அவளது வாழ்வையும் தேனாய் இனிக்கச் செய்து விட்டார்.......நிதானம் பொறுமை அழுத்தம் மென்மை???? என அத்தனை குணங்கள் செழியனிடத்தில்...

ஒரு கணவராய் அவர் மனதில் பதிவதை விட மிக அதிகமாய்த் தந்தையாய்ப் பதிகிறார்.....மீனாவிடமும் அன்புவிடமும் எத்தகைய அன்பு அவர் காட்டுவது.....தன் மகளுக்கு அவள் அன்னை நினைவு வந்து விடக் கூடாது என எத்தனை எத்தனை அக்கறைச் செய்கைகள்?மீனாவிடமும் அதே அன்பை வேறுபாடு இன்றி காட்டும் அப்பாவாய் அவர் என் மனதை வியப்பில் ஆழ்த்துகிறார்....‌‌‌‌‌‌‌தன் மனைவியை மரியாதைக்குரியவராக நடத்துவது எத்தனை உயர்வானது...????????

ஜானவியின் குடும்பத்தினர் நம் பக்கத்து வீட்டு எதிர் வீட்டு மனிதர்களாய் வலம் வருகின்றனர்....

பாண்டியன் சந்தானலட்சுமி இவர்கள் இருவரும் ஜானவி செழியனை விட என் பிடித்தத்துக்குரியவர்கள்....அப்பா அம்மாவாய் மட்டுமன்றி மாமனார் மாமியாராய் அவர்கள் நடவடிக்கைகள் மிக அழகு....

மீனா அன்புச்செல்வி அன்புகாட்டும் தோழிகளாக மட்டுமன்றி சண்டைக் கோழிகளாகவும் நம் மனதை வசப்படுத்துகின்றனர்....அமைதி அன்புக்கும் குறும்பு மீனாவுக்கும் இடையிலான பாசம் நம்மைப் பெருமகிழ்ச்சி அடையச் செய்கின்றன....

இறுதியாய் ஜானவி....பங்குச் சந்தை புலியின் வாழ்க்கை களத்தில் நடக்கும் நிகழ்வுகளே கதை...பங்குச் சந்தையின் அறிவுப் பெண் அன்புச்செழியனின் அன்பு அரியணையில் அரசாள அமரும் சுகமான கதை.....அன்புவின் அம்மாவென அடிக்கடி அவள் சொல்லும் போதெல்லாம் புன்னகைப் பூக்கும் இதழ்கள் நமக்கு.‌.....

அவசரமின்றி மகிழ்ச்சியுடன் ரசனையுடன் நிதானமாய் வாழ வேண்டுமெனச் செழியன் இக்கதையின் வாயிலாய் அறிவுறுத்த ஜானவி அறிவாய் அன்பினை மதித்து தீயதை ஒதுக்கி எதிர்த்து வாழ அறிவுறுத்துகிறார்....

மீண்டும் நன்றி அக்கா இக்கதைக்கு....இயல்பான குடும்ப வாழ்க்கைக் கதையையும் தங்களால் எழுத முடியுமெனக் காட்டிவிட்டீர்கள்..... வாழ்த்துகள் அக்கா ????????
நன்றி????
 




Last edited:

Raman

அமைச்சர்
Joined
May 29, 2019
Messages
3,164
Reaction score
8,052
Location
Trichy
கவி சூப்பர்.... நான் ரசிச்சது.. சலசலக்கும் நதி சர்க்கரைப்பாகாய் சங்கமித்து....
பாலைவனமாய் பனிப்பூவாய்...
அன்புத்தோழி சண்டைகோழி..... அட அட...
 




Kavichithra

அமைச்சர்
Joined
Apr 11, 2019
Messages
1,331
Reaction score
4,129
Location
Chennai
Thank you thank you Akka...pothuva enaku appadi ezhuda varathu....innaiku etho konjam vanthuduchu
கவி சூப்பர்.... நான் ரசிச்சது.. சலசலக்கும் நதி சர்க்கரைப்பாகாய் சங்கமித்து....
பாலைவனமாய் பனிப்பூவாய்...
அன்புத்தோழி சண்டைகோழி..... அட அட...
 




Suvitha

அமைச்சர்
Joined
Jan 28, 2018
Messages
4,090
Reaction score
19,824
Location
Tirunelveli
அம்மாடி! கவிச்செல்லம் எப்போதும் போல அசத்துற தங்கம்....???

இது 'கத்துக்குட்டியின்' விமர்சனம் இல்லை செல்லம். "கவிக்குட்டியின் விமர்சனம்... "
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top