நான் ரசித்த கல்பனா ஏகாம்பரம்...

Zainab

Author
Author
#1
சோழர்கள் என்றாலே நம் கண் முன் நிழலாடுவது முதலாம் ராஜ ராஜ சோழனும், முதலாம் ராஜேந்திர சோழனும் தான். இவர்களுக்கும் முன் வாழ்ந்த சோழ நாட்டின் இளவரசன் 'ஆதன் அறனாளன்' பற்றிய கதை, வரலாற்றுத் தடயம்.
நாட்டின் எல்லைகளை விஸ்தீரணப் படுத்துவதில், அத்தனை ஆர்வம் காட்டும் சோழ நாட்டு இளவல். தன் அடுத்த கட்ட முயற்சியாக, அவன் பார்வை குமரித்தீவில் படிகின்றது. வேட்டைக்குப் போன சோழப் புலி, மான் விழியில் மயங்கி நிற்கிறது. மானும், புலியும் சமரசம் செய்து கொண்டு, சேர நாட்டை எதிர்க்க ஆயத்தம் பண்ணுகின்றன.
தாய் வழி தாயம், வாளுடை விழா என அறிவுக்கு நல்ல விருந்து. கோட்டைகளையும், அரசவைகளையும் படிக்கும் போது, என்னை சாண்டில்யன் தொட்டுச் சென்றார்.
நெஞ்சுரம் கொண்ட ஒற்றர்களையும் நீங்கள் விட்டு விடவில்லை ஆசிரியரே! விருந்தினர் மாளிகையில், கன்யா தேவி ஓலையைப் பற்றிக் கூறும் போது, என்னையறியாமலேயே 'சபாஷ்' போட்டேன். ரசித்துக் கொண்டேன்.
ஆசிரியரின் முயற்சியை மனமாரப் பாராட்டுகிறேன். படிக்கத் தவறியவர்கள், நிச்சயம் படியுங்கள். நல்ல தமிழ், நல்ல நடை.. முத்துப் போன்ற வார்த்தைகள்.
ஆசிரியரின் வயது யானறியேன். இருந்தாலும், இது போன்ற இன்னும் பல படைப்புக்களைக் கொடுத்தால், சரித்திரக் கதை ஆசிரியர்கள் வரிசையில் இடம் பிடிப்பீர்கள் என்பது என் அவா.
உங்கள் சேவை தொடர அடியேனின் பிரார்த்தனைகள்.
@kalpanaekambaram
 
#6
கல்பனா டியர் ரொம்ப அருமையாக எழுதுவாங்கப்பா
இந்த சரித்திரக் கதை மட்டுமில்லை
வெற்றியோ தோல்வியோ எதுவாக இருந்தாலும் ஒவ்வொரு மனிதனும்
அதை சந்தோஷமாக ஏற்றுக்
கொள்ள வேண்டுமுன்னும்
பெற்றவர்கள் எப்படி பிள்ளைகளை
தன்னம்பிக்கையுடன்
வளர்க்கணுமுன்னும் ரொம்பவே
அழகாக "காரிருளில் கதிரொளி
நீ"-ங்கிற அருமையான நாவலில் கல்பனாஏகாம்பரம் டியர் சொல்லியிருப்பாங்க
அதே போல "நீ எனதென்னுயிர் கண்ணம்மா" நாவலும் ரொம்ப
அழகான ஒரு காதல் கதை
முகிலன் and யாழினி அருமையான மனிதர்கள்ப்பா
 
Venigovind

Well-known member
#8
சரியா சொன்னீங்க zainab டியர்.
நம்ம சாண்டியல்யனோட
கதைக்குள்ள போய்ட்டம்னா அதுஒரு தனி உலகம்.

நம்ம கல்பனா சிஸ்ஸோட இந்தக்கதையும் நம்மள அப்படியே
ஈர்க்கிறது.
 
#10
சோழர்கள் என்றாலே நம் கண் முன் நிழலாடுவது முதலாம் ராஜ ராஜ சோழனும், முதலாம் ராஜேந்திர சோழனும் தான். இவர்களுக்கும் முன் வாழ்ந்த சோழ நாட்டின் இளவரசன் 'ஆதன் அறனாளன்' பற்றிய கதை, வரலாற்றுத் தடயம்.
நாட்டின் எல்லைகளை விஸ்தீரணப் படுத்துவதில், அத்தனை ஆர்வம் காட்டும் சோழ நாட்டு இளவல். தன் அடுத்த கட்ட முயற்சியாக, அவன் பார்வை குமரித்தீவில் படிகின்றது. வேட்டைக்குப் போன சோழப் புலி, மான் விழியில் மயங்கி நிற்கிறது. மானும், புலியும் சமரசம் செய்து கொண்டு, சேர நாட்டை எதிர்க்க ஆயத்தம் பண்ணுகின்றன.
தாய் வழி தாயம், வாளுடை விழா என அறிவுக்கு நல்ல விருந்து. கோட்டைகளையும், அரசவைகளையும் படிக்கும் போது, என்னை சாண்டில்யன் தொட்டுச் சென்றார்.
நெஞ்சுரம் கொண்ட ஒற்றர்களையும் நீங்கள் விட்டு விடவில்லை ஆசிரியரே! விருந்தினர் மாளிகையில், கன்யா தேவி ஓலையைப் பற்றிக் கூறும் போது, என்னையறியாமலேயே 'சபாஷ்' போட்டேன். ரசித்துக் கொண்டேன்.
ஆசிரியரின் முயற்சியை மனமாரப் பாராட்டுகிறேன். படிக்கத் தவறியவர்கள், நிச்சயம் படியுங்கள். நல்ல தமிழ், நல்ல நடை.. முத்துப் போன்ற வார்த்தைகள்.
ஆசிரியரின் வயது யானறியேன். இருந்தாலும், இது போன்ற இன்னும் பல படைப்புக்களைக் கொடுத்தால், சரித்திரக் கதை ஆசிரியர்கள் வரிசையில் இடம் பிடிப்பீர்கள் என்பது என் அவா.
உங்கள் சேவை தொடர அடியேனின் பிரார்த்தனைகள்.
@kalpanaekambaram
Hi sis!!
Unexpected..தமிழ் நாட்டை ஆட்சி செய்தது சேர, சோழ, பாண்டிய மூவேந்தர்கள் என்றாலும், நமக்கெல்லாம் சோழப் பற்று அதிகம்..ராஜ ராஜனும், ராஜேந்திரனும் என சோழர்கள் செய்த சாதனைகள் ஒரு காரணம் என்றாலும், நம் மனதில் அவற்றையெல்லாம் ஆழமாக பதிய வைத்த, வரலாற்று நாவலாசிரியர்களும் இன்னொரு முக்கிய காரணம் என்று தான் சொல்வேன்..
இந்த கதை உங்களை கவர்ந்ததில் மகிழ்ச்சி..நிச்சயம் நிறைய எழுதலாம்..
உங்களின் மனமார்ந்த வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி!!
@Zainab
 
Last edited:

Find SM Tamil Novels on mobile

Latest updates

Latest Episodes

Mobile app for XenForo 2 by Appify
Top