• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

நான் ரசித்த கல்பனா ஏகாம்பரம்...

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Manikodi

அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
3,747
Reaction score
17,102
Location
Vriddhachalam
இந்தக் கருத்தை நான் வன்மையாக ஆதரிக்கிறேன். இந்தக் கதைக்கு வந்திருக்கும் லைக்ஸைப் பார்த்தபோது மிகவும் கவலையாக இருந்தது. இத்தனை பெரிய வாசக வட்டம் இருக்கும் நம் தளத்தில், வரலாற்று நாவலுக்குக் கிடைத்திருக்கும் வரவேற்பு விந்தையிலும் விந்தை.
உண்மை தான் அழகி என்னை இந்த கதையை திரும்பி பார்க்க வைத்த பெருமை மோனிஷா வை சாரும் படித்ததும் நான் அடைந்த உணர்வு வார்த்தைகள் இல்லை அதனால்தான் யான் பெற்ற இன்பம் (இவ்வையகம்) ஒத்த ரசனை பெற்றவர்களிடம் பகிர்ந்தேன்
 
Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
சோழர்கள் என்றாலே நம் கண் முன் நிழலாடுவது முதலாம் ராஜ ராஜ சோழனும், முதலாம் ராஜேந்திர சோழனும் தான். இவர்களுக்கும் முன் வாழ்ந்த சோழ நாட்டின் இளவரசன் 'ஆதன் அறனாளன்' பற்றிய கதை, வரலாற்றுத் தடயம்.
நாட்டின் எல்லைகளை விஸ்தீரணப் படுத்துவதில், அத்தனை ஆர்வம் காட்டும் சோழ நாட்டு இளவல். தன் அடுத்த கட்ட முயற்சியாக, அவன் பார்வை குமரித்தீவில் படிகின்றது. வேட்டைக்குப் போன சோழப் புலி, மான் விழியில் மயங்கி நிற்கிறது. மானும், புலியும் சமரசம் செய்து கொண்டு, சேர நாட்டை எதிர்க்க ஆயத்தம் பண்ணுகின்றன.
தாய் வழி தாயம், வாளுடை விழா என அறிவுக்கு நல்ல விருந்து. கோட்டைகளையும், அரசவைகளையும் படிக்கும் போது, என்னை சாண்டில்யன் தொட்டுச் சென்றார்.
நெஞ்சுரம் கொண்ட ஒற்றர்களையும் நீங்கள் விட்டு விடவில்லை ஆசிரியரே! விருந்தினர் மாளிகையில், கன்யா தேவி ஓலையைப் பற்றிக் கூறும் போது, என்னையறியாமலேயே 'சபாஷ்' போட்டேன். ரசித்துக் கொண்டேன்.
ஆசிரியரின் முயற்சியை மனமாரப் பாராட்டுகிறேன். படிக்கத் தவறியவர்கள், நிச்சயம் படியுங்கள். நல்ல தமிழ், நல்ல நடை.. முத்துப் போன்ற வார்த்தைகள்.
ஆசிரியரின் வயது யானறியேன். இருந்தாலும், இது போன்ற இன்னும் பல படைப்புக்களைக் கொடுத்தால், சரித்திரக் கதை ஆசிரியர்கள் வரிசையில் இடம் பிடிப்பீர்கள் என்பது என் அவா.
உங்கள் சேவை தொடர அடியேனின் பிரார்த்தனைகள்.
@kalpanaekambaram
Her writing literally mesmerised me.... amazing... I have no words ...
 
Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
இல்லை சிஸ்!! உள்ளுக்குள் தேடல் இருப்பவர்களை யாரும் தடுத்து விடமுடியாது. மலாலாவை தடுக்க முடிந்ததா? ஆர்வம் இருந்தால் செய்து முடிப்பார்கள்..சிலருக்கு குறுகிய வட்டம் அமைந்து விடுகிறது..அதிலிருந்து மீண்டு வெளிவருவதும் அவர்கள் கையில் தான் இருக்கிறது என்பது என் கருத்து..
Malala சூழ்நிலையே வேறு... தாகம் இருக்கிறவன் தண்ணி குடிச்சே தீருவான்... மலாலாவும் அப்படி தான்...

எனக்கு இப்படி ஒரு சைட் இருக்கு என்றே கடந்த ஆண்டு தான் தெரியும்....

தமிழை எழுதவே மறந்த நிலையில் இருந்தேன்... இப்ப தான் என் தாய்மொழியையே மீட்டேன்... இன்னும் நிறைய படிக்கனும் என்கிற ஆவல் வரவே எனக்கு இத்தனை வருஷம் ஆகி இருக்கு..

It’s all depends upon the person to person...
 
kalpanaekambaram

அமைச்சர்
Joined
May 6, 2018
Messages
1,024
Reaction score
3,257
Location
Tamilnadu

I didn't deny it dr..but what I mean is different..
 
KPN

அமைச்சர்
Joined
Mar 31, 2018
Messages
2,741
Reaction score
12,639
Location
Chennai
இல்லை சிஸ்!! உள்ளுக்குள் தேடல் இருப்பவர்களை யாரும் தடுத்து விடமுடியாது. மலாலாவை தடுக்க முடிந்ததா? ஆர்வம் இருந்தால் செய்து முடிப்பார்கள்..சிலருக்கு குறுகிய வட்டம் அமைந்து விடுகிறது..அதிலிருந்து மீண்டு வெளிவருவதும் அவர்கள் கையில் தான் இருக்கிறது என்பது என் கருத்து..
அப்படி சொல்ல முடியாது...

உள்ளுக்குள்ளே தேடல் இருந்தாலும்... பலருக்கு அதை முயன்று பார்க்க சிறு தயக்கம் இருக்கும்...

பொன்னியின் செல்வனும்...
சிவகாமியின் சபதமும் இல்லையென்றால் மக்களால் ஓரவுக்கு கூட சரித்திர கதைகளின் ருசி தெரிந்திருக்காது...

நம் பாடத்திட்டத்தில் கூட பெரும் புகழ் ஈட்டிய நம் தமிழ் பேரரசர்களை பற்றி நூற்றில் கால் பாகம் கூட சொல்லப்படவில்லை..

அப்படி இருக்க அதில் ஆர்வம் எப்படி தோன்றும்.

இரண்டாம் தர sterio type காதல் கதைகளை விட்டு இன்னும் பலர் வெளியில் வந்ததாகவே தெரியவில்லை...

அதையெல்லாம் கடந்துவந்து... நல்ல தரமான கதைகளை ஊக்குவிப்பதில், என்னைப் பொறுத்தவரை நம் தளம் முதல் இடத்தில் இருக்கிறது...

ஒரு காதல் கதையை எழுதவேண்டுமானாலே அதற்கு அதிகப்படியான back work செய்ய வேண்டி இருக்கிறது...

இதில் சரித்திர கதைகள் எழுத வேண்டும் என்றால் அந்த கால கட்டத்திற்கே சென்று... காட்சிகளை கண் முன் நிறுத்த வேண்டும்... அப்பொழுதுதான் அது முழு
வெற்றியை கொடுக்கும்...

ஒருவர் அதை செய்து... பாதை வகுத்து விட்டால், அதை தொடர்ந்து பலர்... துணி வுடன் அதில் அடி எடுத்து வைப்பார்கள் என்பதுதான் உண்மை...
 
I like your point of view..
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top