நினைவில் தத்தளிக்கும் நேசமது 1

Thoshi

Author
Author
#1
என்னுடைய முதல் கதையின் முதல் அத்தியாயம் இதோ உங்கள் பார்வைக்கு ...படிச்சிட்டு உங்களுக்கு தோன்றத சொல்லுங்க சகோஸ் ...குறைகளையும் சொல்லுங்க அப்டியே எதாவது நல்லா இருந்தாலும் சொல்லுங்க அப்படி அப்படியேய் இந்த சின்ன பிள்ளைக்கு லைக்ஸ் யும் போட்ருங்க சகோஸ்....நினைவில் தத்தளிக்கும் நேசமது 1 :


சென்னை

பிப்.5. :


பார்ப்பவர்களை மதிமயங்க செய்யும் இளவரசனை போல் வானில் உதித்தான் ஆதவன் ......
அவனின் செங்கதிர்கள் பட்டதால் சொர்கலோகமாய் காட்சி அளிக்கிறது அம்மாளிகை ....
அதனால்தான் அம்மாளிகைக்கு யாஹ்வி(yahvi) என பெயரிட்டனரோ ???
(அட அட உள்ள வரும்போதே ஏதோ செம்மையான வாசனை வருதே ,வாங்க நம்ப போய் எதுனா சாப்பிலாம், அயய்யயோ யாரோ வரமாதிரி இருக்கு வாங்க ஒழிஞ்சிப்போம் )


சின்னா ....கண்ணப்பா கீழே வந்தாச்சா ??கேட்டுக்கொண்டு வருபவர் நாச்சியார் , அந்த மாளிகைக்கே மகாராணி ;குணம் , பணம் ரெண்டுலையும் ராணி் தான் . பெரிய தம்பி காலைலயே சீக்கீரமா போய்ட்டாருமா - சின்னா.

என்ன ஆச்சி நாச்சி ஏன் இப்படி நிக்கிற ?கேட்டது அவரின் கணவர் , தொழில் சாம்ராஜ்யத்தின் சாம்ராட் ரவி சக்கரவர்த்தி .

இன்னிக்கு நம்ப கண்ணப்பா பிறந்தளுக்காக அவனுக்கு பிடிச்சதுலாம் ஆசையா சமைச்சிருக்கேங்க ஆனா அவன் வீட்லயே இல்லங்க சொல்லும்போதே அவர் கண்கள் கலங்கியது..

நாச்சி ,என்னமா இது சின்ன புள்ளைமாதிரி.... இந்தர் என்ன குழந்தையா ,, எவ்வளவு பெரிய bussiness man -அ இருந்தாலும் நம்ப இந்தர் ஒரு project ￰எடுக்க நினைக்கிறான்னு தெரிஞ்சாலே அந்த பக்கம் போகமாட்டாங்க, இந்திய அளவுல இருந்த நம்ப RC GROUP OF COMPANIES -அ உலக அளவுக்கு கொண்டுபோனவன்டி , நீ் என்னனா இன்னும் அவனபத்தி கவலைப்பட்ற ....போ நாச்சி வரவர பசங்கள பத்தியே யோசிச்சி மாமன கண்டு்க்கமாட்ற ....(ஆ ஆ)

ஆமா ஆமா கண்டுக்றாங்க ..இதைத்தான் பிள்ளை இல்லாத வீட்ல கிழவன் துள்ளிவிளையாடறான்னு சொல்லுவாங்க போல ..போங்க போய் எதுனா வேலைய பாருங்க - நாச்சியார்

அதைத்தானே பன்னிட்டுஇருக்கேன் - ரவி சார்

ஹாஆ...காலைலேயே ரொமான்ஸ் சீன் போகுது போலையேனு சொல்லி கொண்டே அங்கு ஓடி வந்தது அவ்வீட்டின் இளவரசி , இரண்டு அண்ணன்களின் செல்ல தங்கை "சித்ராங்கதா"..(22 வயது அழகிய புயல் )

அடிங் வயசுக்கு தகுந்த மாதிரி பேசுடி கழுதை என திட்டிய அம்மாகிட்ட எஸ் ஆகி அப்பாகிட்ட வந்துட்டாங்க நம்ப மேடம் ....

ஹாஹா அப்டி சொல்லுங்க மா , சொல்லிகிட்டே அங்க ஆஜர் ஆகுறது நம்ப ரெண்டாவது ஹீரோ "விஷ்வேந்தர்" நம்ப ரவி சார்- நாச்சி உடைய ரெண்டாவது புள்ள ..


நம்ப ரவி சார் தன்னோட புள்ளைங்க பேர்ல கூட அரசர்களா இருக்கணும்னு ரொம்ப தேடி மூணு பேருக்கும் பேர் வைச்சாருங்க.

மூத்த மகன் : ஜித்தேந்தர்
பெயர் மட்டும் இல்ல ஆளும் ஜித்தன் தான் , பேரழகனும் கூட .


இரண்டாம் மகன் : விஷ்வேந்தர்
பார்க்கறதுக்கு ரொம்ம்ம்பவே அமைதியானவன் பாக்கறதுக்கு மட்டும் தாங்க.


மகள் : சித்ராங்கதா
பணத்திலே பிறந்து வளர்ந்தாலும் பணத்தின் மீது மோகமற்றவள் .

இவங்க குடும்பத்துல நடக்கிறதுதாங்க நம்ப கதை ..பார்க்கிறதுக்கு ரெடி ஆஹ் ????
 
Last edited:

Advertisements

Latest updates

Top